Home  /  Quran  /  Surah
Loading...
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

Surah At-Takwir

Surah At-Takwir (The Overthrowing) is Surah 81 of the Holy Quran, a Meccan Surah with 29 verses, available here in Tamil.

Surah 81 Meccan 29 verses Tamil

Verse 81:1

اِذَا الشَّمْسُ كُوِّرَتْ ۟

ʹIẓash shamsu kuwwirat;

(உலக முடிவுக்காகச்) சூரியனின் பிரகாசம் மங்க வைக்கப்படும்போது,

Verse 81:2

وَاِذَا النُّجُوْمُ انْكَدَرَتْ ۟

Wa-ʹiẓan nujoomuñ kadarat;

நட்சத்திரங்கள் உதிர்ந்துவிடும்போது,

Verse 81:3

وَاِذَا الْجِبَالُ سُیِّرَتْ ۟

Wa-ʹiẓal jibaalu suyyirat;

மலைகள் அதனிடங்களில் இருந்து அகற்றப்படும் போது,

Verse 81:4

وَاِذَا الْعِشَارُ عُطِّلَتْ ۟

Wa-ʹiẓal ʻishaaru ʻuṭṭilat;

(இந்த அமளிகளால் பத்துமாத) கர்ப்பமடைந்த ஒட்டகங்கள் (கவனிப்பின்றி) விடப்படும்போது.

Verse 81:5

وَاِذَا الْوُحُوْشُ حُشِرَتْ ۟

Wa-ʹiẓal wuḥooshu ḥushirat;

காட்டு மிருகங்கள் (பயந்து ஊர்களில் வந்து) ஒன்றுகூடும்போது.

Verse 81:6

وَاِذَا الْبِحَارُ سُجِّرَتْ ۟

Wa-ʹiẓal biḥaaru sujjirat;

கடல் நீர் நெருப்பாக மாற்றப்படும்போது. (இவ்வாறு உலகம் முடிவுபெற்று, விசாரணைக் காலம் ஏற்படும்.)

Verse 81:7

وَاِذَا النُّفُوْسُ زُوِّجَتْ ۟

Wa-ʹiẓan nufoosu zuwwijat:

அப்போது உயிர்கள் உடலுடன் (மீண்டும்) சேர்க்கப்படும்.

Verse 81:8

وَاِذَا الْمَوْءٗدَةُ سُىِٕلَتْ ۟

Wa-ʹiẓal mawʹoodatu suʹilat―

அப்போது (உயிருடன்) புதைக்கப்பட்ட பெண் குழந்தைகளை நோக்கி கேட்கப்படும்,

Verse 81:9

بِاَیِّ ذَنْۢبٍ قُتِلَتْ ۟ۚ

Biʹayyi ẓambiñ q̣utilat;

‘‘எந்த குற்றத்திற்காக நீங்கள் (உயிருடன் புதைக்கப்பட்டுக்) கொலை செய்யப்பட்டீர்கள்?'' என்று.

Verse 81:10

وَاِذَا الصُّحُفُ نُشِرَتْ ۟

Wa-ʹiẓaṣ ṣuḥufu nushirat:

அப்போது (விசாரணைக்காக மனிதர்களுடைய) ஏடுகள் விரிக்கப்படும்.

Verse 81:11

وَاِذَا السَّمَآءُ كُشِطَتْ ۟

Wa-ʹiẓas samaaaʹu kushiṭat;

அப்போது வானம் (பிளந்து) அகற்றப்பட்டுவிடும்.

Verse 81:12

وَاِذَا الْجَحِیْمُ سُعِّرَتْ ۟

Wa-ʹiẓal Jaḥeemu suʻ-ʻirat;

அப்போது நரகம் எரிக்கப்படும்.

Verse 81:13

وَاِذَا الْجَنَّةُ اُزْلِفَتْ ۟

Wa-ʹiẓal Jannatu ʹuzlifat;

அப்போது சொர்க்கம் சமீபமாகக் கொண்டு வரப்படும்.

Verse 81:14

عَلِمَتْ نَفْسٌ مَّاۤ اَحْضَرَتْ ۟ؕ

ʻAlimat nafsum maaa ʹaḥḍarat.

(அந்நாளில்) ஒவ்வோர் ஆத்மாவும் (நன்மையோ தீமையோ) தான் செய்து கொண்டு வந்திருப்பதை நன்கறிந்து கொள்ளும்.

Verse 81:15

فَلَاۤ اُقْسِمُ بِالْخُنَّسِ ۟ۙ

Falaaa ʹuq̣simu bil-khunnas,

(மனிதர்களே!) சென்றவழியே மேலும் செல்லும் நட்சத்திரங்கள் மீது சத்தியமாக!

Verse 81:16

الْجَوَارِ الْكُنَّسِ ۟ۙ

ʹAl-jawaaril kunnas;

தோன்றி மறையும் (வால்) நட்சத்திரங்கள் மீது சத்தியமாக!

Verse 81:17

وَالَّیْلِ اِذَا عَسْعَسَ ۟ۙ

Wal-Layli ʹiẓaa ʻasʻas;

செல்கின்ற இரவின் மீதும் சத்தியமாக!

Verse 81:18

وَالصُّبْحِ اِذَا تَنَفَّسَ ۟ۙ

Waṣṣubḥi ʹiẓaa tanaffas;―

உதயமாகும் காலையின் மீதும் சத்தியமாக!

Verse 81:19

اِنَّهٗ لَقَوْلُ رَسُوْلٍ كَرِیْمٍ ۟ۙ

ʹInnahoo laq̣awlu Rasooliñ Kareem,

நிச்சயமாக (திரு குர்ஆன் என்னும்) இது மிக்க கண்ணியமுள்ள (ஜிப்ரயீல் என்னும்) ஒரு (வானவத்) தூதர் மூலம் கூறப்பட்டதாகும்.

Verse 81:20

ذِیْ قُوَّةٍ عِنْدَ ذِی الْعَرْشِ مَكِیْنٍ ۟ۙ

Ẓee q̣uwwatin ʻiñda Ẓil ʻArshi makeen,

அவர் மிக்க பலவான். அவருக்கு அர்ஷுடையவனிடத்தில் பெரும் பதவியுண்டு.

Verse 81:21

مُّطَاعٍ ثَمَّ اَمِیْنٍ ۟ؕ

Muṭaaʻiñ s̤amma ʹAmeen.

(அவர் அவ்விடத்திலுள்ள வானவர்களின்) தலைவர்; மிக்க நம்பிக்கையுடையவர்.

Verse 81:22

وَمَا صَاحِبُكُمْ بِمَجْنُوْنٍ ۟ۚ

Wa-maa Ṣaaḥibukum̃ bimajnoon;

(மக்காவாசிகளே! நம் தூதராகிய) உங்கள் தோழர் பைத்தியக்காரரல்ல.

Verse 81:23

وَلَقَدْ رَاٰهُ بِالْاُفُقِ الْمُبِیْنِ ۟ۚ

Wa-laq̣ad raʹaahu bilʹufuq̣il mubeen.

நிச்சயமாக அவர் (ஜிப்ரயீலை) தெளிவான வானத்தின் கோடியில் மெய்யாகவே கண்டார்.

Verse 81:24

وَمَا هُوَ عَلَی الْغَیْبِ بِضَنِیْنٍ ۟ۚ

Wa-maa huwa ʻalal g̣aybi biḍaneen.

(அச்சமயம் அவர் கண்ட) மறைவானவற்றை (அறிவிப்பதில்) கஞ்சத்தனம் செய்பவரல்ல.

Verse 81:25

وَمَا هُوَ بِقَوْلِ شَیْطٰنٍ رَّجِیْمٍ ۟ۙ

Wa-maa huwa biq̣awli Shayṭaanir rajeem.

இன்னும், இது வெருட்டப்பட்ட ஷைத்தானின் சொல்லுமல்ல.

Verse 81:26

فَاَیْنَ تَذْهَبُوْنَ ۟ؕ

Faʹayna taẓhaboon?

ஆகவே, (இதைவிட்டு) நீங்கள் எங்கு செல்லுகிறீர்கள்?

Verse 81:27

اِنْ هُوَ اِلَّا ذِكْرٌ لِّلْعٰلَمِیْنَ ۟ۙ

ʹIn huwa ʹilla Ẓikrul lilʻaalameen:

இது உலகத்தார் அனைவருக்கும் ஒரு நல்லுபதேசமே தவிர வேறில்லை.

Verse 81:28

لِمَنْ شَآءَ مِنْكُمْ اَنْ یَّسْتَقِیْمَ ۟ؕ

Limañ shaaaʹa miñkum ʹañy yastaq̣eem:

உங்களில் எவர் நேரான பாதையில் செல்ல விரும்புகிறாரோ அவருக்கு (இது பயனளிக்கும்).

Verse 81:29

وَمَا تَشَآءُوْنَ اِلَّاۤ اَنْ یَّشَآءَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِیْنَ ۟۠

Wa-maa tashaaaʹoona ʹillaaa ʹañy yashaaaʹal laahu Rabbul ʻAalameen.

எனினும், உலகத்தாரின் இறைவனாகிய அல்லாஹ் நாடினால் தவிர, நீங்கள் (நல்லுணர்ச்சி பெற) விரும்பமாட்டீர்கள்.