Back to Quran

ஜுஸ்

Juz 12

11:6 ... 12:52 · 170 ayahs

மொழிபெயர்ப்பாளர் Tamil Abdul Hameed Baqavi

  1. Surah HudBegins here at 11:6

  2. 11:6

    ۞ وَمَا مِن دَآبَّةٍ فِى ٱلْأَرْضِ إِلَّا عَلَى ٱللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا ۚ كُلٌّ فِى كِتَـٰبٍ مُّبِينٍ

    Wa-maa miñ daaabbatiñ fil ʹarḍi ʹillaa ʻalal laahi rizq̣uhaa wa-yaʻlamu mustaq̣arrahaa wa-mustawdaʻahaa: Kulluñ fee Kitaabim Mubeen.

    உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத உயிரினம் ஒன்றுமே பூமியில் இல்லை. அவை (உயிருடன்) வாழுகின்ற இடத்தையும், அவை (இறந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிந்தே இருக்கிறான். இவை அனைத்தும் (லவ்ஹுல் மஹ்பூள் என்னும்) தெளிவான (அவனுடைய) பதிவுப் புத்தகத்தில் பதிவாகி இருக்கின்றன.

  3. 11:7

    وَهُوَ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ فِى سِتَّةِ أَيَّامٍ وَكَانَ عَرْشُهُۥ عَلَى ٱلْمَآءِ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا ۗ وَلَئِن قُلْتَ إِنَّكُم مَّبْعُوثُونَ مِنۢ بَعْدِ ٱلْمَوْتِ لَيَقُولَنَّ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِنْ هَـٰذَآ إِلَّا سِحْرٌ مُّبِينٌ

    Wa-Huwal laẓee khalaq̣as samaawaati wal-ʹarḍa fee Sittati ʹayyaamiñw Wakaana ʻArshuhoo ʻalal Maaaʹi liyabluwakum ʹayyukum ʹaḥsanu ʻamalaa. Wa-laʹiñ q̣ulta ʹinnakum mabʻoos̤oona mim baʻdil mawti layaq̣oolannal laẓeena kafarooo ʹin haaẓaaa ʹillaa siḥrum mubeen!

    அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாள்களில் படைத்தான். (அச்சமயம்) அவனுடைய ‘அர்ஷு' நீரின் மீதிருந்தது. உங்களில் நற்செயல்களைச் செய்பவர்கள் யார் என்று உங்களைப் பரிசோதிப்பதற்காக (உங்களையும், இவற்றையும் அவன் படைத்தான். நபியே! நீர் மனிதர்களை நோக்கி) ‘‘நீங்கள் இறந்த பின்னர் நிச்சயமாக (உயிர்கொடுத்து) எழுப்பப்படுவீர்கள்'' என்று கூறினால், அதற்கு அவர்களிலுள்ள நிராகரிப்பவர்கள் ‘‘இது பகிரங்கமான சூனியமே தவிர வேறில்லை'' என்று கூறுகின்றனர்.

  4. 11:8

    وَلَئِنْ أَخَّرْنَا عَنْهُمُ ٱلْعَذَابَ إِلَىٰٓ أُمَّةٍ مَّعْدُودَةٍ لَّيَقُولُنَّ مَا يَحْبِسُهُۥٓ ۗ أَلَا يَوْمَ يَأْتِيهِمْ لَيْسَ مَصْرُوفًا عَنْهُمْ وَحَاقَ بِهِم مَّا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ

    Wa-laʹin ʹakhkharnaa ʻanhumul ʻaẓaaba ʹilaaa ʹummatim maʻdoodatil layaq̣oolunna maa- yaḥbisuh? ʹAlaa yawma yaʹteehim laysa maṣroofan ʻanhum waḥaaq̣a bihim maa kaanoo bihee yastahziʹoon!

    (நிராகரிப்பின் காரணமாக) அவர்களுக்கு (வரவேண்டிய) வேதனையை ஒரு சொற்ப காலம் நாம் பிற்படுத்தியபோதிலும் ‘‘அதைத் தடுத்துக்கொண்டது எது?'' எனப் பரிகாசமாகக் கேட்கிறார்கள். அவர்களிடம் அது வரும் நாளில், அவர்களை விட்டு அதைத் தடுத்துவிட முடியாது என்பதையும், அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த வேதனை அவர்கள் அனைவரையும் சூழ்ந்து கொள்ளும் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?

  5. 11:9

    وَلَئِنْ أَذَقْنَا ٱلْإِنسَـٰنَ مِنَّا رَحْمَةً ثُمَّ نَزَعْنَـٰهَا مِنْهُ إِنَّهُۥ لَيَـُٔوسٌ كَفُورٌ

    Wa-laʹin ʹaẓaq̣nal ʹiñsaana minnaa Raḥmatañ s̤umma nazaʻnaahaa minhu, ʹinnahoo layaʹoosuñ kafoor.

    நம் அருளை மனிதன் அனுபவிக்கும்படி நாம் செய்து, பின்னர் அதை அவனிடமிருந்து நாம் நீக்கிவிட்டால், நிச்சயமாக அவன் நம்பிக்கை இழந்து பெரும் நன்றி கெட்டவனாகிவிடுகிறான்.

  6. 11:10

    وَلَئِنْ أَذَقْنَـٰهُ نَعْمَآءَ بَعْدَ ضَرَّآءَ مَسَّتْهُ لَيَقُولَنَّ ذَهَبَ ٱلسَّيِّـَٔاتُ عَنِّىٓ ۚ إِنَّهُۥ لَفَرِحٌ فَخُورٌ

    Wa-laʹin ʹaẓaq̣naahu naʻmaaaʹa baʻda ḍarraaaʹa massathu layaq̣oolanna ẓahabas sayyiʹaatu ʻannee: ʹinnahoo lafariḥuñ fakhoor.

    அவனுக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கி அவன் இன்பம் அனுபவிக்கும்படி நாம் செய்தால், அதற்கவன் ‘‘நிச்சயமாக என் துன்பங்கள் அனைத்தும் தொலைந்து விட்டன. (இனி திரும்ப வராது)'' என்று கூறுகிறான். ஏனென்றால், நிச்சயமாக மனிதன் (அதிவிரைவில்) மகிழ்ச்சியடையக் கூடியவனாக, பெருமையடிப்பவனாக ஆகிவிடுகிறான்.

  7. 11:11

    إِلَّا ٱلَّذِينَ صَبَرُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ أُو۟لَـٰٓئِكَ لَهُم مَّغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ

    Illal laẓeena ṣabaroo wa-ʻamiluṣ ṣaaliḥaat: ʹulaaaʹika lahum mag̣firatuñw waʹajruñ Kabeer.

    ஆயினும், எவர்கள் (துன்பங்களைப்) பொறுத்து சகித்துக் கொண்டு நன்மையான காரியங்களைச் செய்து வருகிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; பெரும் கூலியும் உண்டு.

  8. 11:12

    فَلَعَلَّكَ تَارِكٌۢ بَعْضَ مَا يُوحَىٰٓ إِلَيْكَ وَضَآئِقٌۢ بِهِۦ صَدْرُكَ أَن يَقُولُوا۟ لَوْلَآ أُنزِلَ عَلَيْهِ كَنزٌ أَوْ جَآءَ مَعَهُۥ مَلَكٌ ۚ إِنَّمَآ أَنتَ نَذِيرٌ ۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍ وَكِيلٌ

    Falaʻallaka taarikum baʻḍa maa- yooḥaaa ʹilayka wa-ḍaaaʹiq̣um bihee ṣadruka ʹañy yaq̣ooloo laaa-law ʹuñzila ʻalayhi kañzun ʹaw jaaaʹa maʻahoo malak? ʹInnamaaa ʹañta naẓeer! Wallaahu ʻalaa kulli shayʹiñw Wakeel!

    (நபியே! இவ்வேதத்தை அவர்கள் சரிவரக் கேட்பதில்லை என நீர் சடைந்து) உமக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டவற்றில் சிலவற்றை விட்டு விடுவீரோ? ‘‘உமக்கு ஒரு பொக்கிஷம் அருளப்பட வேண்டாமா? அல்லது உம்முடன் ஒரு வானவர் வரவேண்டாமா?'' என்று அவர்கள் கூறுவது உமது உள்ளத்தில் வருத்தத்தை உண்டு பண்ணலாம். (அது பற்றி நீர் கவலைப்பட வேண்டாம்.) நிச்சயமாக நீர் (அவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கின்ற ஒரு தூதர்தான். அல்லாஹ்தான் அனைத்தையும் நிர்வகிப்பவன்.

  9. 11:13

    أَمْ يَقُولُونَ ٱفْتَرَىٰهُ ۖ قُلْ فَأْتُوا۟ بِعَشْرِ سُوَرٍ مِّثْلِهِۦ مُفْتَرَيَـٰتٍ وَٱدْعُوا۟ مَنِ ٱسْتَطَعْتُم مِّن دُونِ ٱللَّهِ إِن كُنتُمْ صَـٰدِقِينَ

    ʹAm yaq̣ooloonaf taraah. Q̣ul faʹtoo biʻashri Suwarim mis̤lihee muftarayaatiñw wadʻoo manis taṭaʻtum miñ doonil laahi ʹiñ kuñtum ṣaadiq̣een.

    (நம் தூதர்) இதைப் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றனரா? அவ்வாறாயின், (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: இதைப் போன்ற பத்து அத்தியாயங்களையேனும் நீங்கள் கற்பனை செய்து கொண்டு வாருங்கள், அல்லாஹ்வைத் தவிர உங்களுக்குச் சாத்தியமான அனைவரையும் இதற்காக அழைத்து (உங்களுக்குத் துணையாக)க் கொள்ளுங்கள் - மெய்யாகவே (இது கற்பனை என்று) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (இவ்வாறு செய்யவும்).

  10. 11:14

    فَإِلَّمْ يَسْتَجِيبُوا۟ لَكُمْ فَٱعْلَمُوٓا۟ أَنَّمَآ أُنزِلَ بِعِلْمِ ٱللَّهِ وَأَن لَّآ إِلَـٰهَ إِلَّا هُوَ ۖ فَهَلْ أَنتُم مُّسْلِمُونَ

    Faʹillam yastajeeboo lakum faʻlamooo annamaaa ʹuñzila biʻilmil laahi wa-ʹal laaa ʹilaaha ʹillaa Hoo! Fahal ʹañtum Muslimoon?

    ‘‘நீங்கள் (உதவிக்கு) அழைத்த அவர்களாலும் அவ்வாறு செய்ய முடியாவிட்டால், (இது மனித அறிவால் சொல்லப்பட்டதல்ல;) நிச்சயமாக அல்லாஹ்வின் அறிவைக் கொண்டே (அமைக்கப்பட்டு) இறக்கப்பட்டது தான்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை என்பதையும் நிச்சயமாக அறிந்து கொள்ளுங்கள். (இனியேனும்) நீங்கள் (இறைவனுக்கு) முற்றிலும் பணிந்து வழிபடுவீர்களா?

  11. 11:15

    مَن كَانَ يُرِيدُ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا وَزِينَتَهَا نُوَفِّ إِلَيْهِمْ أَعْمَـٰلَهُمْ فِيهَا وَهُمْ فِيهَا لَا يُبْخَسُونَ

    Mañ kaana yureedul Ḥayaatad Dunyaa wa-zeenatahaa nuwaffi ʹilayhim ʹaʻmaalahum feehaa wa-hum feehaa laa- yubkhasoon.

    எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டும்) விரும்பினால், அவர்கள் செயலுக்குரிய பலனை இவ்வுலகத்திலேயே நாம் முழுமையாகக் கொடுத்து விடுவோம். அதில் அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள்.

  12. 11:16

    أُو۟لَـٰٓئِكَ ٱلَّذِينَ لَيْسَ لَهُمْ فِى ٱلْـَٔاخِرَةِ إِلَّا ٱلنَّارُ ۖ وَحَبِطَ مَا صَنَعُوا۟ فِيهَا وَبَـٰطِلٌ مَّا كَانُوا۟ يَعْمَلُونَ

    ʹUlaaaʹikal laẓeena laysa lahum fil ʹAakhirati ʹillan Naar: Waḥabiṭa maa- ṣanaʻoo feehaa wa-baaṭilum maa kaanoo yaʻmaloon!

    எனினும், மறுமையிலோ இவர்களுக்கு (நரக) நெருப்பைத் தவிர வேறொன்று மில்லை; அவர்கள் செய்தவை அனைத்தும் இங்கு அழிந்து விட்டன. அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே.

  13. 11:17

    أَفَمَن كَانَ عَلَىٰ بَيِّنَةٍ مِّن رَّبِّهِۦ وَيَتْلُوهُ شَاهِدٌ مِّنْهُ وَمِن قَبْلِهِۦ كِتَـٰبُ مُوسَىٰٓ إِمَامًا وَرَحْمَةً ۚ أُو۟لَـٰٓئِكَ يُؤْمِنُونَ بِهِۦ ۚ وَمَن يَكْفُرْ بِهِۦ مِنَ ٱلْأَحْزَابِ فَٱلنَّارُ مَوْعِدُهُۥ ۚ فَلَا تَكُ فِى مِرْيَةٍ مِّنْهُ ۚ إِنَّهُ ٱلْحَقُّ مِن رَّبِّكَ وَلَـٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يُؤْمِنُونَ

    ʹAfamañ kaa-na ʻalaa Bayyinatim mir Rabbihee wa-yatloohu Shaahidum minhu wa-miñ q̣ablihee Kitaabu Moosaaa ʹimaamañw Waraḥmah? ʹUlaaaʹika yuʹminoona bih. Wa-mañy yakfur bihee minal ʹAḥzaabi fan-naaru mawʻiduh. Falaa taku fee miryatim minh: ʹinnahul Ḥaq̣q̣u mir Rabbika wa-laakinna ʹaks̤aran naasi laa- yuʹminoon!

    எவர்கள் தங்கள் இறைவனின் (திருக் குர்ஆனுடைய) தெளிவான அறிவைப் பெற்றிருக்கிறார்களோ அவர்களும், எவர்களுக்கு இறைவனால் (‘ஈஸா'வுக்கு) அருளப்பட்டது (-இன்ஜீல்) ஒரு சாட்சியாக இருக்கிறதோ அவர்களும், இன்னும் எவர்களுக்கு இதற்கு முன்னர் அருளப்பட்ட மூஸாவுடைய வேதம் ஒரு வழி காட்டியாகவும் அருளாகவும் இருக்கிறதோ அவர்களும், அவசியம் இவ்வேதத்தையும் நம்பிக்கைக்கொள்வார்கள். (அவர்களுக்குரிய கூலி சொர்க்கத்தில்தான்.) இந்த (மூன்று) வகுப்பாரில் எவர்கள் இதை நிராகரித்தபோதிலும் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட இடம் நரகம்தான். ஆதலால், (நபியே!) நீர் இதில் சிறிதும் சந்தேகிக்க வேண்டாம். நிச்சயமாக இது உமது இறைவனால் அருளப்பட்ட சத்திய (வேத)மே! எனினும், மனிதர்களில் பலர் (இதை) நம்புவதில்லை.

  14. 11:18

    وَمَنْ أَظْلَمُ مِمَّنِ ٱفْتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا ۚ أُو۟لَـٰٓئِكَ يُعْرَضُونَ عَلَىٰ رَبِّهِمْ وَيَقُولُ ٱلْأَشْهَـٰدُ هَـٰٓؤُلَآءِ ٱلَّذِينَ كَذَبُوا۟ عَلَىٰ رَبِّهِمْ ۚ أَلَا لَعْنَةُ ٱللَّهِ عَلَى ٱلظَّـٰلِمِينَ

    Wa-man ʹaz̤̣lamu mimmanif taraa ʻalal laahi kaẓibaa? ʹUlaaaʹika yuʻraḍoona ʻalaa Rabbihim wa-yaq̣oolul ʹashhaa Duhaaaʹulaaaʹil laẓeena kaẓaboo ʻalaa Rabbihim! ʹAlaa laʻnatul laahi ʻalaz̤̣ z̤̣aalimeen:

    அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறுபவர்களை விட அநியாயக்காரர் யார்? அவர்கள் (மறுமையில்) தங்கள் இறைவன் முன் நிறுத்தப்பட்டு ‘‘இவர்கள்தான் தங்கள் இறைவன் மீது பொய் கூறியவர்கள்'' என்று சாட்சிகள் (சாட்சியம்) கூறுவார்கள். இந்த அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டு என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

  15. 11:19

    ٱلَّذِينَ يَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ وَيَبْغُونَهَا عِوَجًا وَهُم بِٱلْـَٔاخِرَةِ هُمْ كَـٰفِرُونَ

    ʹAllaẓeena yaṣuddoona ʻañ Sabeelil laahi wa-yabg̣oonahaa ʻiwajaa: wa-hum̃ bil ʹAakhiratihum kaafiroon!

    அவர்கள் அல்லாஹ்வின் வழியைத் தடுத்து, அதில் கோணலை(யும் சந்தேகத்தையும்) உண்டு பண்ண விரும்புகிறார்கள். இன்னும் அவர்கள் மறுமையையும் நிராகரிப்பவர்கள்தான்.

  16. 11:20

    أُو۟لَـٰٓئِكَ لَمْ يَكُونُوا۟ مُعْجِزِينَ فِى ٱلْأَرْضِ وَمَا كَانَ لَهُم مِّن دُونِ ٱللَّهِ مِنْ أَوْلِيَآءَ ۘ يُضَـٰعَفُ لَهُمُ ٱلْعَذَابُ ۚ مَا كَانُوا۟ يَسْتَطِيعُونَ ٱلسَّمْعَ وَمَا كَانُوا۟ يُبْصِرُونَ

    ʹUlaaaʹika lam yakoonoo muʻjizeena fil ʹarḍi wa-maa kaana lahum miñ doonil laahi min ʹawliyaaaʹ! Yuḍaaʻafu lahumul ʻaẓaab! Maa- kaanoo yastaṭeeʻoonas samʻa wa-maa kaanoo yubṣiroon.

    இவர்கள் பூமியில் (ஓடி தப்பித்து அல்லாஹ்வை) தோற்கடிக்க முடியாது. அல்லாஹ்வை தவிர்த்து, இவர்களுக்கு உதவி செய்பவர்களும் இல்லை. (மறுமையிலோ) இவர்களுக்கு வேதனை இரட்டிப்பாக்கப்படும். இவர்கள் (தங்கள் பொறாமையின் காரணமாக நல்ல வார்த்தைகளைச்) செவியுற சக்தியற்றவர்கள்; (நேரான வழியைக்) காணவும் மாட்டார்கள்.

  17. 11:21

    أُو۟لَـٰٓئِكَ ٱلَّذِينَ خَسِرُوٓا۟ أَنفُسَهُمْ وَضَلَّ عَنْهُم مَّا كَانُوا۟ يَفْتَرُونَ

    ʹUlaaaʹikal laẓeena khasirooo ʹañfusahum wa-ḍalla ʻanhum maa kaanoo yaftaroon!

    இவர்கள்தான் தமக்குத் தாமே நஷ்டத்தை உண்டு பண்ணிக்கொண்டவர்கள். இவர்கள் கற்பனை செய்து கொண்டிருந்த (தெய்வங்கள்) அனைத்தும் (அந்நாளில்) இவர்களை விட்டு மறைந்துவிடும்.

  18. 11:22

    لَا جَرَمَ أَنَّهُمْ فِى ٱلْـَٔاخِرَةِ هُمُ ٱلْأَخْسَرُونَ

    Laa- jarama ʹannahum fil ʹAakhirati humul ʹakhsaroon!

    மறுமையில் நிச்சயமாக இவர்கள் முற்றிலும் நஷ்டமடைந்தவர்கள் என்பதில் ஐயம் ஒன்றுமில்லை.

  19. 11:23

    إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ وَأَخْبَتُوٓا۟ إِلَىٰ رَبِّهِمْ أُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلْجَنَّةِ ۖ هُمْ فِيهَا خَـٰلِدُونَ

    ʹInnal laẓeena ʹaamanoo wa-ʻamiluṣ ṣaaliḥaati wa-ʹakhbatooo ʹilaa Rabbihim ʹulaaaʹika ʹAṣḥaabul Jannah, hum feehaa khaalidoon!

    நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து தங்கள் இறைவனுக்கு மிக்க பணிவுடன் அடிபணிகின்றனரோ, அவர்கள் சொர்க்கவாசிகளே! அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள்.

  20. 11:24

    ۞ مَثَلُ ٱلْفَرِيقَيْنِ كَٱلْأَعْمَىٰ وَٱلْأَصَمِّ وَٱلْبَصِيرِ وَٱلسَّمِيعِ ۚ هَلْ يَسْتَوِيَانِ مَثَلًا ۚ أَفَلَا تَذَكَّرُونَ

    Mas̤alul fareeq̣ayni kal-ʹaʻmaa wal-ʹaṣammi walbaṣeeri wassameeʻ. Hal yastawiyaani mas̤alaa? ʹAfalaa taẓakkaroon?

    இவ்விரு (பிரிவினரில் ஒரு) பிரிவினர் குருடனையும், செவிடனையும் (போலிருக் கின்றனர். மற்றொரு பிரிவினர்) பார்வையுடையவனையும் கேட்கும் சக்தியுடையவனையும் ஒத்திருக்கின்றனர். இவ்விரு பிரிவினரும் சமமாவார்களா? (இந்த உதாரணத்தைக் கொண்டு) நீங்கள் நல்லுணர்ச்சி பெற வேண்டாமா?

  21. 11:25

    وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِۦٓ إِنِّى لَكُمْ نَذِيرٌ مُّبِينٌ

    Wa-laq̣ad ʹarsalnaa Nooḥan ʹilaa Q̣awmih: ʹinnee lakum naẓeerum mubeen:

    மெய்யாகவே நாம் ‘நூஹை' அவருடைய மக்களிடம் (நம் தூதராக) அனுப்பி வைத்தோம். (அவர், அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நான் உங்களுக்குப் பகிரங்கமாகவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன்.

  22. 11:26

    أَن لَّا تَعْبُدُوٓا۟ إِلَّا ٱللَّهَ ۖ إِنِّىٓ أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ أَلِيمٍ

    ʹAl laa taʻbudooo ʹillal laah: ʹinneee ʹakhaafu ʻalaykum ʻAẓaaba Yawmin ʹAleem.

    அல்லாஹ்வைத் தவிர (மற்றெதையும்) நீங்கள் வணங்கக் கூடாது. (வணங்கினால்) துன்புறுத்தும் நாளின் வேதனையை நிச்சயமாக நான் உங்களுக்கு அஞ்சுகிறேன்'' (என்று கூறினார்.)

  23. 11:27

    فَقَالَ ٱلْمَلَأُ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِن قَوْمِهِۦ مَا نَرَىٰكَ إِلَّا بَشَرًا مِّثْلَنَا وَمَا نَرَىٰكَ ٱتَّبَعَكَ إِلَّا ٱلَّذِينَ هُمْ أَرَاذِلُنَا بَادِىَ ٱلرَّأْىِ وَمَا نَرَىٰ لَكُمْ عَلَيْنَا مِن فَضْلٍۭ بَلْ نَظُنُّكُمْ كَـٰذِبِينَ

    Faq̣aalal Malaʹul laẓeena kafaroo miñ q̣awmihee maa- naraaka ʹillaa basharam mis̤lanaa wa-maa naraakat tabaʻaka ʹillal laẓeena hum ʹaraaẓilunaa baadiyar raʹy: wa-maa naraa lakum ʻalaynaa miñ faḍlim bal naz̤̣unnukum kaaẓibeen!

    அதற்கு, அவரை நிராகரித்த அவருடைய மக்களின் தலைவர்கள் (அவரை நோக்கி) ‘‘நாம் உம்மை நம்மைப் போன்ற ஒரு மனிதனாகவே காண்கிறோம். வெளித்தோற்றத்தில் நம்மில் மிக்க இழிவானவர்களே தவிர (கண்ணியமானவர்கள்) உம்மைப் பின்பற்றவில்லை என்பதையும் நாங்கள் அறிவோம். எங்களைவிட உங்களிடம் ஒரு மேன்மை இருப்பதாகவும் நாங்கள் காணவில்லை. நீங்கள் (அனைவரும்) பொய்யர்கள் என்றே நாங்கள் எண்ணுகிறோம்'' என்று கூறினார்கள்.

  24. 11:28

    قَالَ يَـٰقَوْمِ أَرَءَيْتُمْ إِن كُنتُ عَلَىٰ بَيِّنَةٍ مِّن رَّبِّى وَءَاتَىٰنِى رَحْمَةً مِّنْ عِندِهِۦ فَعُمِّيَتْ عَلَيْكُمْ أَنُلْزِمُكُمُوهَا وَأَنتُمْ لَهَا كَـٰرِهُونَ

    Q̣aala yaa-q̣awmi ʹaraʹaytum ʹiñ kuñtu ʻalaa Bayyinatim mir Rabbee wa-ʹaataanee Raḥmatam min ʻIñdihee faʻummiyat ʻalaykum? ʹAnulzimukumoohaa wa-ʹañtum lahaa kaarihoon?

    (அதற்கு) அவர் (அவர்களை நோக்கிக்) கூறினார்: ‘‘என் மக்களே! நீங்கள் கவனித்தீர்களா? என் இறைவனுடைய அத்தாட்சியின் மீது நான் நிலையாக இருந்தும் அவன் தன் அருளையும் (நபித்துவத்தையும்) எனக்கு அளித்திருந்தும், அது உங்கள் கண்களுக்குப் புலப்படாமல் அதை நீங்கள் வெறுத்து விட்டால், அதைப் பின்பற்றும்படி நான் உங்களை நிர்ப்பந்திக்க முடியுமா?

  25. 11:29

    وَيَـٰقَوْمِ لَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مَالًا ۖ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَى ٱللَّهِ ۚ وَمَآ أَنَا۠ بِطَارِدِ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ ۚ إِنَّهُم مُّلَـٰقُوا۟ رَبِّهِمْ وَلَـٰكِنِّىٓ أَرَىٰكُمْ قَوْمًا تَجْهَلُونَ

    Wa-yaaq̣awmi laaa ʹasʹalukum ʻalayhi maalaa: ʹin ʹajriya ʹillaa ʻalal laahi wa-maaa ʹana biṭaaridil laẓeena ʹaamanoo: ʹinnahum mulaaq̣oo Rabbihim wa-laakinneee ʹaraakum q̣awmañ tajhaloon!

    ‘‘என் மக்களே! இதற்காக நான் உங்களிடம் ஒரு பொருளையும் (கூலியாகக்) கேட்கவில்லை. என் கூலி அல்லாஹ்விடமே தவிர (உங்களிடம்) இல்லை. (உங்களில் மிகத் தாழ்ந்தவர்களாயினும் சரி) நம்பிக்கை கொண்டவர்களை நான் விரட்டிவிட முடியாது. நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனை (கண்ணியத்துடன்) சந்திப்பவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால், நிச்சயமாக நான் உங்களை(த்தான் மிகத் தாழ்ந்த) மூடர்களாகக் காண்கிறேன்.

  26. 11:30

    وَيَـٰقَوْمِ مَن يَنصُرُنِى مِنَ ٱللَّهِ إِن طَرَدتُّهُمْ ۚ أَفَلَا تَذَكَّرُونَ

    Wa-yaaq̣awmi mañy yañṣurunee minal laahi ʹiñ ṭarattuhum? ʹAfalaa taẓakkaroon!

    என் மக்களே! நான் அவர்களை விரட்டிவிட்டால் (அல்லாஹ் என்னைத் தண்டிக்க மாட்டானா? அச்சமயம்) அல்லாஹ்விடத்தில் எனக்கு உதவி செய்பவர் யார்? இவ்வளவு கூட நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டாமா?

  27. 11:31

    وَلَآ أَقُولُ لَكُمْ عِندِى خَزَآئِنُ ٱللَّهِ وَلَآ أَعْلَمُ ٱلْغَيْبَ وَلَآ أَقُولُ إِنِّى مَلَكٌ وَلَآ أَقُولُ لِلَّذِينَ تَزْدَرِىٓ أَعْيُنُكُمْ لَن يُؤْتِيَهُمُ ٱللَّهُ خَيْرًا ۖ ٱللَّهُ أَعْلَمُ بِمَا فِىٓ أَنفُسِهِمْ ۖ إِنِّىٓ إِذًا لَّمِنَ ٱلظَّـٰلِمِينَ

    Wa-laaa ʹaq̣oolu lakum ʻiñdee khazaaaʹinul laahi wa-laaa ʹaʻlamul g̣ayba wa-laaa ʹaq̣oolu ʹinnee malakuñw walaaa ʹaq̣oolu lillaẓeena tazdareee ʹaʻyunukum lañy yuʹtiyahumul laahu khayraa: ʹAllaahu ʹaʻlamu bimaa feee ʹañfusihim: ʹinneee ʹiẓal laminaz̤̣ z̤̣aalimeen.

    அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் (அனைத்தும்) என்னிடம் இருக்கின்றன என்றும் நான் உங்களிடம் கூறவில்லை; நான் மறைவானவற்றை அறிந்தவனும் அல்லன்; நான் ஒரு வானவர் என்றும் கூறவில்லை. எவர்களை உங்கள் கண்கள் இழிவாகக் காண்கின்றனவோ அவர்களுக்கு அல்லாஹ் ஒரு நன்மையும் அளிக்க மாட்டான் என்றும் நான் கூறமாட்டேன். அவர்கள் உள்ளத்தில் உள்ள (நம்பிக்கை, நல்லெண்ணம் ஆகியவற்றை உங்களைவிட) அல்லாஹ்தான் மிகவும் அறிந்தவன். (இதற்கு மாறாக நான் கூறினால்) நிச்சயமாக நானும் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விடுவேன்'' (என்றும் கூறினார்.)

  28. 11:32

    قَالُوا۟ يَـٰنُوحُ قَدْ جَـٰدَلْتَنَا فَأَكْثَرْتَ جِدَٰلَنَا فَأْتِنَا بِمَا تَعِدُنَآ إِن كُنتَ مِنَ ٱلصَّـٰدِقِينَ

    Q̣aaloo yaa-Nooḥu q̣ad jaadaltanaa faʹaks̤arta jidaalanaa faʹtinaa bimaa taʻidunaaa ʹiñ kuñta minaṣ ṣaadiq̣een?

    அதற்கவர்கள் ‘‘நூஹே! நிச்சயமாக நீர் எங்களுடன் தர்க்கித்தீர்; (அதுவும்) அதிகமாகவே தர்க்கித்து விட்டீர். (ஆகவே, இனி தர்க்கத்தை விட்டொழித்து, வேதனை வரும் என்று கூறுவதில்) நீர் மெய்யாகவே உண்மை சொல்பவராக இருந்தால், நீர் அச்சுறுத்தும் அதை நம்மிடம் கொண்டு வருவீராக'' என்று கூறினார்கள்.

  29. 11:33

    قَالَ إِنَّمَا يَأْتِيكُم بِهِ ٱللَّهُ إِن شَآءَ وَمَآ أَنتُم بِمُعْجِزِينَ

    Q̣aala ʹinnamaa yaʹteekum̃ bihil laahu ʹiñ shaaʹa wa-maaa ʹañtum̃ bimuʻjizeen!

    அதற்கு அவர் ‘‘(வேதனையை கொண்டு வருபவன் நான் அல்லன்;) அல்லாஹ்தான். அவன் நாடினால் (அதிசீக்கிரத்தில்) அதை உங்களுக்கு நிச்சயமாகக் கொண்டு வருவான். அதைத் தடுத்துவிட உங்களால் முடியாது'' என்று கூறினார்.

  30. 11:34

    وَلَا يَنفَعُكُمْ نُصْحِىٓ إِنْ أَرَدتُّ أَنْ أَنصَحَ لَكُمْ إِن كَانَ ٱللَّهُ يُرِيدُ أَن يُغْوِيَكُمْ ۚ هُوَ رَبُّكُمْ وَإِلَيْهِ تُرْجَعُونَ

    Wa-laa yañfaʻukum nuṣḥeee ʹin ʹarattu ʹan ʹañṣaḥa lakum ʹiñ kaanal laahu yureedu ʹañy yug̣wiyakum: Huwa Rabbukum! wa-ʹilayhi turjaʻoon!

    ‘‘நான் உங்களுக்கு நல்லுபதேசம் செய்யக் கருதினாலும், உங்களை வழிகேட்டிலேயே விட்டுவிட வேண்டும் என்று அல்லாஹ் விரும்பியிருந்தால் என் நல்லுபதேசம் உங்களுக்கு ஒரு பயனுமளிக்காது. அவன்தான் உங்கள் இறைவன்; (மறுமையில்) அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்'' (என்றும் கூறினார்).

  31. 11:35

    أَمْ يَقُولُونَ ٱفْتَرَىٰهُ ۖ قُلْ إِنِ ٱفْتَرَيْتُهُۥ فَعَلَىَّ إِجْرَامِى وَأَنَا۠ بَرِىٓءٌ مِّمَّا تُجْرِمُونَ

    ʹAm yaq̣ooloonaf taraah? Q̣ul ʹinif taraytuhoo faʻalayya ʹijraamee wa-ʹana bareeeʹum mimmaa tujrimoon!

    (நபியே! இவ்வரலாற்றைப் பற்றி) ‘‘நீர் இதைப் பொய்யாகக் கற்பனை செய்து கூறுகிறீர்'' என்று அவர்கள் கூறுகின்றனரா? (அவ்வாறாயின்) நீர் கூறுவீராக: ‘‘நான் அதைக் கற்பனை செய்து கூறினால் அக்குற்றம் என் மீதே சாரும். (நீங்கள் பொறுப்பாளிகளல்லர்; அவ்வாறே) நீங்கள் (கற்பனை) செய்யும் குற்றங்களுக்கு நான் பொறுப்பாளியல்ல.

  32. 11:36

    وَأُوحِىَ إِلَىٰ نُوحٍ أَنَّهُۥ لَن يُؤْمِنَ مِن قَوْمِكَ إِلَّا مَن قَدْ ءَامَنَ فَلَا تَبْتَئِسْ بِمَا كَانُوا۟ يَفْعَلُونَ

    Wa-ʹooḥiya ʹilaa Nooḥin ʹannahu lañy yuʹmina miñ q̣awmika ʹillaa mañ q̣ad ʹaamana falaa tabtaʹis bimaa kaanoo yafʻaloon.

    (நபி) நூஹ்வுக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டது: ‘‘முன்னர் நம்பிக்கை கொண்டவர்களைத் தவிர, இனி உமது மக்களில் ஒருவரும் நிச்சயமாக நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். ஆதலால், அவர்கள் செய்வதைப் பற்றி நீர் கவலைப்படாதீர்.

  33. 11:37

    وَٱصْنَعِ ٱلْفُلْكَ بِأَعْيُنِنَا وَوَحْيِنَا وَلَا تُخَـٰطِبْنِى فِى ٱلَّذِينَ ظَلَمُوٓا۟ ۚ إِنَّهُم مُّغْرَقُونَ

    Waṣnaʻil Fulka biʹaʻyuninaa wa-Waḥyinaa wa-laa tukhaaṭibnee fil laẓeena z̤̣alamoo: ʹinnahum mug̣raq̣oon.

    நாம் அறிவிக்குமாறு நம் கண் முன்பாகவே ஒரு கப்பலை நீர் செய்வீராக. அநியாயம் செய்தவர்களைப் பற்றி (இனி) நீர் என்னுடன் (சிபாரிசு) பேசாதீர். நிச்சயமாக அவர்கள் (வெள்ள பிரளயத்தில்) மூழ்கடிக்கப்படுவார்கள்'' (என்றும் அறிவிக்கப்பட்டது.)

  34. 11:38

    وَيَصْنَعُ ٱلْفُلْكَ وَكُلَّمَا مَرَّ عَلَيْهِ مَلَأٌ مِّن قَوْمِهِۦ سَخِرُوا۟ مِنْهُ ۚ قَالَ إِن تَسْخَرُوا۟ مِنَّا فَإِنَّا نَسْخَرُ مِنكُمْ كَمَا تَسْخَرُونَ

    Wa-yaṣnaʻul Fulk: wa-kullamaa marra ʻalayhi malaʹum miñ q̣awmihee sakhiroo minh. Q̣aala ʹiñ taskharoo minnaa faʹinnaa naskharu miñkum kamaa taskharoon!

    அவர் கப்பலைச் செய்து கொண்டிருந்த சமயத்தில், அதன் சமீபமாகச் சென்ற அவருடைய மக்களின் தலைவர்கள் அவரைப் பரிகசித்தனர். அதற்கு அவர் ‘‘நீங்கள் (இப்போது) எங்களைப் பரிகசிக்கும் இவ்வாறே (அதிசீக்கிரத்தில்) நிச்சயமாக நாங்கள் உங்களைப் பரிகசிப்போம்'' என்று கூறினார்.

  35. 11:39

    فَسَوْفَ تَعْلَمُونَ مَن يَأْتِيهِ عَذَابٌ يُخْزِيهِ وَيَحِلُّ عَلَيْهِ عَذَابٌ مُّقِيمٌ

    Fasawfa taʻlamoona mañy yaʹteehi ʻAẓaabuñy yukhzeehi wa-yaḥillu ʻalayhi ʻaẓaabum muq̣eem:

    ‘‘இழிவுபடுத்தும் வேதனை யாரை வந்தடைகிறது, நிலையான வேதனை எவர் மீது இறங்குகிறது என்பதையும் அதி சீக்கிரத்தில் நீங்கள் (சந்தேகமற) தெரிந்து கொள்வீர்கள்'' (என்று கூறினார்.)

  36. 11:40

    حَتَّىٰٓ إِذَا جَآءَ أَمْرُنَا وَفَارَ ٱلتَّنُّورُ قُلْنَا ٱحْمِلْ فِيهَا مِن كُلٍّ زَوْجَيْنِ ٱثْنَيْنِ وَأَهْلَكَ إِلَّا مَن سَبَقَ عَلَيْهِ ٱلْقَوْلُ وَمَنْ ءَامَنَ ۚ وَمَآ ءَامَنَ مَعَهُۥٓ إِلَّا قَلِيلٌ

    Ḥattaaa ʹiẓaa jaaaʹa ʹAmrunaa wa-faarat tannooru q̣ulnaḥ mil feehaa miñ kulliñ zawjaynis̤ nayni wa-ʹahlaka ʹillaa mañ sabaq̣a ʻalayhil Q̣awlu wa-man ʹaaman. Wa-maaa ʹaamana maʻahooo ʹillaa q̣aleel.

    ஆகவே, (நாம் விதித்திருந்த) வேதனை நெருங்கி அடுப்புப் பொங்கவே (நூஹை நோக்கி ‘‘ஒவ்வொரு உயிருள்ள பிராணியில் இருந்தும்) ஆண், பெண் இரண்டு கொண்ட ஒவ்வொரு ஜோடியை அதில் ஏற்றிக் கொள்வீராக. (அழிந்துவிடுவார்கள் என) நம் வாக்கு ஏற்பட்டுவிட்ட (உங்கள் மகன் ஆகிய)வர்களைத் தவிர, உமது குடும்பத்தவரையும் (மற்ற) நம்பிக்கையாளர்களையும் அதில் ஏற்றிக்கொள்வீராக'' என்று நாம் கூறினோம். வெகு சொற்ப மக்களைத் தவிர (மற்றவர்கள்) அவருடன் நம்பிக்கை கொள்ளவில்லை.

  37. 11:41

    ۞ وَقَالَ ٱرْكَبُوا۟ فِيهَا بِسْمِ ٱللَّهِ مَجْر۪ىٰهَا وَمُرْسَىٰهَآ ۚ إِنَّ رَبِّى لَغَفُورٌ رَّحِيمٌ

    Wa-q̣aalar kaboo feeha bismil laahi majraihaa wa-mursaahaa! ʹInna Rabbee la-G̣afoorur Raḥeem!

    அதற்கவர் (தன்னைச் சார்ந்தவர்களை நோக்கி,) ‘‘இதைச் செலுத்தவும் நிறுத்தவும் ஆற்றலுடையவனாகிய அல்லாஹ்வின் திருநாமத்தைக் கூறி இதில் நீங்கள் ஏறிக் கொள்ளுங்கள். நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன் ஆவான்'' என்று கூறினார்.

  38. 11:42

    وَهِىَ تَجْرِى بِهِمْ فِى مَوْجٍ كَٱلْجِبَالِ وَنَادَىٰ نُوحٌ ٱبْنَهُۥ وَكَانَ فِى مَعْزِلٍ يَـٰبُنَىَّ ٱرْكَب مَّعَنَا وَلَا تَكُن مَّعَ ٱلْكَـٰفِرِينَ

    Wa-hiya tajree bihim fee mawjiñ kaljibaal. Wa-naadaa Nooḥunib nahoo wa-kaana fee maʻziliñy yaa-bunay yarkam maʻanaa wa-laa takum maʻal Kaafireen!

    பின்னர் அக்கப்பல், மலைகளைப் போன்ற அலைகளுக்கிடையில் அவர்களைச் சுமந்து செல்ல ஆரம்பித்தது. (அச்சமயம்) நூஹ் தன்னை விட்டு விலகியிருந்த தன் மகனை நோக்கி ‘‘என் மகனே! எங்களுடன் (நம்பிக்கை கொண்டு) நீயும் இதில் ஏறிக்கொள். (எங்களை விட்டு விலகி) நிராகரிப்பவர்களுடன் நீ இருக்க வேண்டாம். (அவ்வாறாயின், நீயும் நீரில் மூழ்கி விடுவாய்)'' என்று (சப்தமிட்டு) அழைத்தார்.

  39. 11:43

    قَالَ سَـَٔاوِىٓ إِلَىٰ جَبَلٍ يَعْصِمُنِى مِنَ ٱلْمَآءِ ۚ قَالَ لَا عَاصِمَ ٱلْيَوْمَ مِنْ أَمْرِ ٱللَّهِ إِلَّا مَن رَّحِمَ ۚ وَحَالَ بَيْنَهُمَا ٱلْمَوْجُ فَكَانَ مِنَ ٱلْمُغْرَقِينَ

    Q̣aala saʹaaweee ʹilaa jabaliñy yaʻṣimunee minal maaaʹ. Q̣aala laa- ʻaaṣimal yawma min ʹAmril laahi ʹillaa mar raḥim! Waḥaala baynahumal mawju fakaana minal mug̣raq̣een.

    அதற்கவன் ‘‘இந்த வெள்ள(ப் பிரளய)த்திலிருந்து என்னைக் காப்பாற்றக்கூடிய ஒரு மலையின் மேல் நான் சென்று விடுவேன்'' என்று கூறினான். அதற்கவர் ‘‘அல்லாஹ் அருள் புரிந்தாலன்றி அவனுடைய கட்டளையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இன்று ஒருவராலும் முடியாது'' என்று கூறினார். (அச்சமயம்) அவர்களுக்கு இடையில் ஓர் அலை எழும்பி குறுக்கிட்டது; அவனும் மூழ்கியவர்களுடன் மூழ்கிவிட்டான்.

  40. 11:44

    وَقِيلَ يَـٰٓأَرْضُ ٱبْلَعِى مَآءَكِ وَيَـٰسَمَآءُ أَقْلِعِى وَغِيضَ ٱلْمَآءُ وَقُضِىَ ٱلْأَمْرُ وَٱسْتَوَتْ عَلَى ٱلْجُودِىِّ ۖ وَقِيلَ بُعْدًا لِّلْقَوْمِ ٱلظَّـٰلِمِينَ

    Wa-q̣eela yaaaʹarḍub laʻee maaaʹaki wa-yaasamaaaʹu ʹaq̣liʻee wa-g̣eeḍal maaaʹu wa-q̣uḍiyal ʹamru wastawat ʻalal joodiyyi wa-q̣eela buʻdal lilq̣awmiz̤̣ z̤̣aalimeen!

    பின்னர் ‘‘பூமியே! நீ உன் தண்ணீரை விழுங்கி விடு; வானமே! (மழை பொழிவதை) நிறுத்திக்கொள்'' என்று கட்டளைப் பிறப்பிக்கப்படவே தண்ணீர் வற்றி (விட்டது. இதற்குள் அவர்கள் அழிந்து அவர்களுடைய) காரியம் முடிந்துவிட்டது. (அக்கப்பலும்) ‘ஜூதி' (என்னும்) மலையில் தங்கியது; அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான்'' என்று (உலகெங்கும்) பறை சாற்றப்பட்டது.

  41. 11:45

    وَنَادَىٰ نُوحٌ رَّبَّهُۥ فَقَالَ رَبِّ إِنَّ ٱبْنِى مِنْ أَهْلِى وَإِنَّ وَعْدَكَ ٱلْحَقُّ وَأَنتَ أَحْكَمُ ٱلْحَـٰكِمِينَ

    Wa-naadaa Nooḥur Rabbahoo faq̣aala Rabbi ʹinnab Nee min ʹahlee wa-ʹinna waʻdakal ḥaq̣q̣u wa-ʹAñta ʹaḥkamul Ḥaakimeen!

    (நூஹ் நபியினுடைய மகன் அவரை விட்டு விலகி நிராகரிப்பவர்களுடன் சென்றுவிடவே, அவனும் அழிந்து விடுவானென அஞ்சி) நூஹ் (தன் இறைவனை நோக்கி) ‘‘என் இறைவனே! என் மகன் என் குடும்பத்திலுள்ளவனே! (நீயோ என் குடும்பத்தவரை பாதுகாத்துக் கொள்வதாக வாக்களித்திருக்கிறாய்.) நிச்சயமாக உன் வாக்குறுதி உண்மையானது. தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம் நீ மிகவும் மேலான நீதிபதி'' என்று சப்தமிட்டுக் கூறினார்.

  42. 11:46

    قَالَ يَـٰنُوحُ إِنَّهُۥ لَيْسَ مِنْ أَهْلِكَ ۖ إِنَّهُۥ عَمَلٌ غَيْرُ صَـٰلِحٍ ۖ فَلَا تَسْـَٔلْنِ مَا لَيْسَ لَكَ بِهِۦ عِلْمٌ ۖ إِنِّىٓ أَعِظُكَ أَن تَكُونَ مِنَ ٱلْجَـٰهِلِينَ

    Q̣aala yaa-Nooḥu ʹinnahoo laysa min ʹahlik: ʹinnahoo ʻamalun g̣ayru ṣaaliḥ. Falaa tasʹalni maa- laysa laka bihee ʻilm! ʹInneee ʹaʻiz̤̣uka ʹañ takoona minal jaahileen!

    அதற்கவன், ‘‘நூஹே! நிச்சயமாக அவன் உமது குடும்பத்தில் உள்ளவனல்லன். நிச்சயமாக அவன் ஒழுங்கீனமான காரியங்களையே செய்து கொண்டிருந்தான். (ஒழுங்கீனமாக நடப்பவன் உமது குடும்பத்தைச் சார்ந்தவனல்ல.) ஆதலால், நீர் உமக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி என்னிடம் (தர்க்கித்துக்) கேட்க வேண்டாம்; அறியாதவர்களில் நீரும் ஒருவராகிவிட வேண்டாம் என்று நிச்சயமாக நான் உமக்கு நல்லுபதேசம் செய்கிறேன்'' என்று கூறினான்.

  43. 11:47

    قَالَ رَبِّ إِنِّىٓ أَعُوذُ بِكَ أَنْ أَسْـَٔلَكَ مَا لَيْسَ لِى بِهِۦ عِلْمٌ ۖ وَإِلَّا تَغْفِرْ لِى وَتَرْحَمْنِىٓ أَكُن مِّنَ ٱلْخَـٰسِرِينَ

    Q̣aala Rabbi ʹinneee ʹaʻooẓu bika ʹan ʹasʹalaka maa- laysa lee bihee ʻilm. Wa-ʹillaa tag̣fir lee wa-tarḥamnee ʹakum minal khaasireen!

    அதற்கு (நூஹ் நபி) ‘‘என் இறைவனே! நான் அறியாத விஷயங்களைப் பற்றி (இனி) உன்னிடம் கேட்காது என்னை பாதுகாக்குமாறு உன்னிடம் நிச்சயமாக நான் பிரார்த்திக்கிறேன். நீ என்னை மன்னித்து எனக்கு நீ கிருபை செய்யாவிடில் நிச்சயமாக நானும் நஷ்டமடைந்தவர்களில் ஆகி விடுவேன்'' என்று கூறினார்.

  44. 11:48

    قِيلَ يَـٰنُوحُ ٱهْبِطْ بِسَلَـٰمٍ مِّنَّا وَبَرَكَـٰتٍ عَلَيْكَ وَعَلَىٰٓ أُمَمٍ مِّمَّن مَّعَكَ ۚ وَأُمَمٌ سَنُمَتِّعُهُمْ ثُمَّ يَمَسُّهُم مِّنَّا عَذَابٌ أَلِيمٌ

    Q̣eela yaa-Nooḥuh biṭ bi-Salaamim minnaa wa-Barakaatin ʻalayka wa-ʻalaaa ʹUmamim mimmam maʻak: wa-ʹumamuñ sanumattiʻuhum s̤umma yamassuhum minnaa ʻaẓaabun ʹaleem.

    (வெள்ளப் பிரளயத்தால் ஏற்பட்ட தண்ணீர் வற்றி, நூஹ் நபியின் கப்பல் ‘ஜூதி' என்னும் மலைமீது தங்கிவிடவே, நாம் நூஹை நோக்கி) ‘‘நூஹே! நம் சாந்தியுடனும் நற் பாக்கியங்களுடனும் (கப்பலில் இருந்து) நீர் இறங்கிவிடுவீராக. உங்களுக்கும் உம்முடனுள்ள மற்ற மக்களுக்கும் பெரும் பாக்கியங்கள் உண்டாவதாகுக! (பிற்காலத்தில் உங்கள்) சந்ததிகள் (பெருகுவர். இவ்வுலகில்) நாம் அவர்களை நிச்சயமாக சுகம் அனுபவிக்க விடுவோம். பின்னர் (அவர்களில் பலர் பாவமான காரியங்களில் ஈடுபடுவார்கள். அதனால்) அவர்களை நம் துன்புறுத்தும் வேதனை வந்தடையும்'' என்று கூறப்பட்டது.

  45. 11:49

    تِلْكَ مِنْ أَنۢبَآءِ ٱلْغَيْبِ نُوحِيهَآ إِلَيْكَ ۖ مَا كُنتَ تَعْلَمُهَآ أَنتَ وَلَا قَوْمُكَ مِن قَبْلِ هَـٰذَا ۖ فَٱصْبِرْ ۖ إِنَّ ٱلْعَـٰقِبَةَ لِلْمُتَّقِينَ

    Tilka min ʹambaaaʹil g̣aybi nooḥeehaaa ʹilayk: maa- kuñta taʻlamuhaaa ʹañta wa-laa q̣awmuka miñ q̣abli haaẓaa. Faṣbir ʹinnal ʻAaq̣ibata lil-Muttaq̣een.

    (நபியே!) இது (உமக்கு) மறைவான சரித்திரங்களில் உள்ளதாகும். வஹ்யி மூலமாகவே நாம் இதை உமக்கு அறிவிக்கிறோம். இதற்கு முன்னர் நீரோ அல்லது உமது மக்களோ இதை அறிந்திருக்கவில்லை. ஆகவே, (நபியே! நூஹைப்போல் நீரும் சிரமங்களைச்) சகித்துப் பொறுத்திருப்பீராக. நிச்சயமாக முடிவான வெற்றி இறையச்சம் உடையவர்களுக்குத்தான்.

  46. 11:50

    وَإِلَىٰ عَادٍ أَخَاهُمْ هُودًا ۚ قَالَ يَـٰقَوْمِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ مَا لَكُم مِّنْ إِلَـٰهٍ غَيْرُهُۥٓ ۖ إِنْ أَنتُمْ إِلَّا مُفْتَرُونَ

    Wa-ʹilaa ʻAadin ʹakhaahum Hoodaa. Q̣aala yaa-q̣awmiʻ budul laaha maa- lakum min ʹilaahin g̣ayruh. ʹIn ʹañtum ʹillaa muftaroon!

    ‘ஆது' (என்னும்) மக்களிடம் அவர்களுடைய சகோதரர் ‘ஹூதை' (நம் தூதராக அனுப்பி வைத்தோம். அவர்களை நோக்கி) அவர் கூறினார்: ‘‘என் மக்களே! அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள்.அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கு இல்லை. (வேறு இறைவன் உண்டென்று கூறும்) நீங்கள் கற்பனையாகப் பொய் கூறுபவர்களே.

  47. 11:51

    يَـٰقَوْمِ لَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ أَجْرًا ۖ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَى ٱلَّذِى فَطَرَنِىٓ ۚ أَفَلَا تَعْقِلُونَ

    Yaa-q̣awmi laaa ʹasʹalukum ʻalayhi ʹajraa. ʹIn ʹajriya ʹillaa ʻalal laẓee faṭaranee: ʹafalaa taʻq̣iloon?

    என் மக்களே! இதற்காக நான் உங்களிடத்தில் ஒரு கூலியும் கேட்கவில்லை. என் கூலி என்னை படைத்தவனிடமே தவிர (வேறு யாரிடமும்) இல்லை. (இவ்வளவு கூட) நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?

  48. 11:52

    وَيَـٰقَوْمِ ٱسْتَغْفِرُوا۟ رَبَّكُمْ ثُمَّ تُوبُوٓا۟ إِلَيْهِ يُرْسِلِ ٱلسَّمَآءَ عَلَيْكُم مِّدْرَارًا وَيَزِدْكُمْ قُوَّةً إِلَىٰ قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا۟ مُجْرِمِينَ

    Wa-yaaq̣awmis tag̣firoo Rabbakum s̤umma toobooo ʹilayhi yursilis samaaaʹa ʻalaykum midraarañw wayazidkum q̣uwwatan ʹilaa q̣uwwatikum wa-laa tatawallaw mujrimeen!

    என் மக்களே! நீங்கள் உங்கள் இறைவனிடம் பாவ மன்னிப்பைக் கோரி (மனம்வருந்தி) அவன் பக்கமே திரும்புங்கள். (அவன் தடுத்திருக்கும்) மழையை உங்கள் மீது ஏராளமாகப் பொழியச் செய்வான். உங்கள் பலத்தை மேலும், (மேலும்,) அதிகரிக்கச் செய்வான். ஆகவே, நீங்கள் அவனைப் புறக்கணித்துக் குற்றமிழைத்து விடாதீர்கள்'' (என்று கூறினார்.)

  49. 11:53

    قَالُوا۟ يَـٰهُودُ مَا جِئْتَنَا بِبَيِّنَةٍ وَمَا نَحْنُ بِتَارِكِىٓ ءَالِهَتِنَا عَن قَوْلِكَ وَمَا نَحْنُ لَكَ بِمُؤْمِنِينَ

    Q̣aaloo yaa-Hoodu maa- jiʹtanaa bi-Bayyinatiñw wamaa naḥnu bitaarikeee ʹaalihatinaa ʻañ q̣awlika wa-maa naḥnu laka bi-Muʹmineen!

    அதற்கவர்கள், ‘ஹூதே! நீர் (நாம் விரும்பியவாறு) அத்தாட்சி எதையும் நம்மிடம் கொண்டு வரவில்லை. உமது சொல்லுக்காக நாங்கள் எங்கள் தெய்வங்களை விட்டு விட மாட்டோம். உம்மை நாங்கள் நம்பவும் மாட்டோம்'' என்று கூறினார்கள்.

  50. 11:54

    إِن نَّقُولُ إِلَّا ٱعْتَرَىٰكَ بَعْضُ ءَالِهَتِنَا بِسُوٓءٍ ۗ قَالَ إِنِّىٓ أُشْهِدُ ٱللَّهَ وَٱشْهَدُوٓا۟ أَنِّى بَرِىٓءٌ مِّمَّا تُشْرِكُونَ

    ʹIn naq̣oolu ʹillaʻ taraaka baʻḍu ʹaalihatinaa bisoooʹ. Q̣aala ʹinneee ʹushhidul laaha washhadooo ʹannee bareeeʹum mimmaa tushrikoon.

    ‘‘எங்களது சில தெய்வங்கள் உமக்குக் கேடு உண்டுபண்ணிவிட்டன. (ஆதலால், நீர் மதியிழந்து விட்டீர்! என்றும் கூறினார்கள்). அதற்கவர், ‘‘நிச்சயமாக நான் அல்லாஹ்வை சாட்சியாக்குகிறேன்; நிச்சயமாக நான் அவனையன்றி நீங்கள் இணைவைத்து வணங்குபவற்றிலிருந்து விலகிக்கொண்டேன். (இதற்கு) நீங்களும் சாட்சியாக இருங்கள்'' என்று கூறினார்.

  51. 11:55

    مِن دُونِهِۦ ۖ فَكِيدُونِى جَمِيعًا ثُمَّ لَا تُنظِرُونِ

    Miñ doonihee fakeedoonee jameeʻañ s̤umma laa- tuñz̤̣iroon.

    ‘‘ஆகவே, நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எனக்கு(ச் செய்யக் கூடிய) சூழ்ச்சியைச் செய்து பாருங்கள். (இதில்) நீங்கள் எனக்குச் சிறிதும் அவகாசம் அளிக்க வேண்டாம்'' (என்றும்,)

  52. 11:56

    إِنِّى تَوَكَّلْتُ عَلَى ٱللَّهِ رَبِّى وَرَبِّكُم ۚ مَّا مِن دَآبَّةٍ إِلَّا هُوَ ءَاخِذٌۢ بِنَاصِيَتِهَآ ۚ إِنَّ رَبِّى عَلَىٰ صِرَٰطٍ مُّسْتَقِيمٍ

    ʹInnee tawakkaltu ʻalal laahi Rabbee Wa-Rabbikum! Maa- miñ daaabbatin ʹillaa Huwa ʹaakhiẓum binaasiyatihaa. ʹInna Rabbee ʻalaa Ṣiraaṭim Mustaq̣eem.

    “நிச்சயமாக நான் என் காரியங்கள் அனைத்தையும் என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்விடமே ஒப்படைத்து விட்டேன். ஒவ்வொரு உயிருள்ளவற்றின் உச்சிக் குடுமியையும் அவனே பிடித்துக் கொண்டிருக்கிறான். நிச்சயமாக என் இறைவன் (நீதியின்) நேரான வழியில் இருக்கிறான் (என்றும்,)

  53. 11:57

    فَإِن تَوَلَّوْا۟ فَقَدْ أَبْلَغْتُكُم مَّآ أُرْسِلْتُ بِهِۦٓ إِلَيْكُمْ ۚ وَيَسْتَخْلِفُ رَبِّى قَوْمًا غَيْرَكُمْ وَلَا تَضُرُّونَهُۥ شَيْـًٔا ۚ إِنَّ رَبِّى عَلَىٰ كُلِّ شَىْءٍ حَفِيظٌ

    Faʹiñ tawallaw faq̣ad ʹablag̣tukum maaa ʹursiltu biheee ʹilaykum. Wa-yastakhlifu Rabbee q̣awman g̣ayrakum, wa-laa taḍurroonahoo shayʹaa. ʹInna Rabbee ʻalaa kulli shayʹin Ḥafeez̤̣.

    நீங்கள் (என்னைப்) புறக்கணிப்பீர்களாயின் (அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனென்றால்,) நான் உங்களிடம் எதற்காக அனுப்பப்பட்டேனோ அதை நிச்சயமாக நான் உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். (உங்களை அழித்து) நீங்கள் அல்லாத வேறு மக்களை என் இறைவன் உங்கள் இடத்தில் வைத்து விடுவான்; (இதற்காக) நீங்கள் அவனுக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது. நிச்சயமாக என் இறைவன் அனைத்தையும் பாதுகாப்பவன். (ஆகவே, அவன் என்னையும் பாதுகாத்துக் கொள்வான்'' என்றும் கூறினார்.)

  54. 11:58

    وَلَمَّا جَآءَ أَمْرُنَا نَجَّيْنَا هُودًا وَٱلَّذِينَ ءَامَنُوا۟ مَعَهُۥ بِرَحْمَةٍ مِّنَّا وَنَجَّيْنَـٰهُم مِّنْ عَذَابٍ غَلِيظٍ

    Wa-lammaa jaaaʹa ʹamrunaa naj-jaynaa Hoodañw wallaẓeena ʹaamanoo maʻahoo bi-Raḥmatim minnaa: wa-najjaynaahum min ʻaẓaabin g̣aleez̤̣.

    (இதன் பின்னும் அவர்கள் அவரை நிராகரித்து விட்டனர். ஆகவே,) நம் (வேதனையின்) உத்தரவு வந்தபொழுது ஹூதையும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நம் அருளால்பாதுகாத்துக் கொண்டு, கடுமையான வேதனையில் இருந்து நாம் அவர்களைத் தப்பவைத்தோம்.

  55. 11:59

    وَتِلْكَ عَادٌ ۖ جَحَدُوا۟ بِـَٔايَـٰتِ رَبِّهِمْ وَعَصَوْا۟ رُسُلَهُۥ وَٱتَّبَعُوٓا۟ أَمْرَ كُلِّ جَبَّارٍ عَنِيدٍ

    Wa-tilka ʻAaduñ jaḥadoo biʹAayaati Rabbihim wa-ʻaṣaw Rusulahoo wattabaʻooo ʹamra kulli jabbaarin ʻaneed.

    (நபியே!) இது ‘ஆது' மக்களின் (சரித்திரமாகும்). அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளைகளை நிராகரித்து அவனின் தூதர்களுக்கு மாறு செய்தார்கள். மேலும், பிடிவாதக்கார முரடர்கள் அனைவருடைய தீய வழிகாட்டல்களையும் அவர்கள் பின் பற்றினார்கள்.

  56. 11:60

    وَأُتْبِعُوا۟ فِى هَـٰذِهِ ٱلدُّنْيَا لَعْنَةً وَيَوْمَ ٱلْقِيَـٰمَةِ ۗ أَلَآ إِنَّ عَادًا كَفَرُوا۟ رَبَّهُمْ ۗ أَلَا بُعْدًا لِّعَادٍ قَوْمِ هُودٍ

    Wa-ʹutbiʻoo fee haaẓihid dunyaa laʻnatañw wa-Yawmal Q̣iyaamah. ʹAlaaa ʹinna ʻAadañ kafaroo Rabbahum! ʹAlaa buʻdal liʻAadiñ Q̣awmi Hood!

    இவ்வுலகில் (அல்லாஹ்வுடைய) சாபம் அவர்களைத் தொடர்ந்தது, மறுமை நாளிலும் (அவ்வாறே!) தொடரும். நிச்சயமாக ‘ஆது' மக்கள் தங்கள் இறைவனுக்கு மாறு செய்தார்கள் என்பதையும் (நபி) ஹூதுடைய ‘ஆது' சமுதாயத்தவர்களுக்குக் கேடுதான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

  57. 11:61

    ۞ وَإِلَىٰ ثَمُودَ أَخَاهُمْ صَـٰلِحًا ۚ قَالَ يَـٰقَوْمِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ مَا لَكُم مِّنْ إِلَـٰهٍ غَيْرُهُۥ ۖ هُوَ أَنشَأَكُم مِّنَ ٱلْأَرْضِ وَٱسْتَعْمَرَكُمْ فِيهَا فَٱسْتَغْفِرُوهُ ثُمَّ تُوبُوٓا۟ إِلَيْهِ ۚ إِنَّ رَبِّى قَرِيبٌ مُّجِيبٌ

    Wa-ʹilaa S̤amooda ʹakhaahum Ṣaaliḥaa. Q̣aala yaa-q̣awmiʻ budul laaha maa- min lakum ʹilahin g̣ayruh. Huwa ʹañshaʹakum minal ʹarḍi wastaʻmarakum feehaa fastag̣firoohu s̤umma toobooo ʹilayh: ʹinna Rabbee Q̣areebum Mujeeb.

    ‘ஸமூது' (என்னும் மக்)களிடம் அவர்களுடைய சகோதரர் ‘ஸாலிஹை' (நம் தூதராக அனுப்பி வைத்தோம். அவர் அவர்களை நோக்கி) ‘‘என் மக்களே! அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள்; உங்களுக்கு அவனைத் தவிர, வேறு இறைவன் இல்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து படைத்தான். அதிலேயே அவன் உங்களை வசிக்கவும் செய்தான். ஆதலால், நீங்கள் அவனிடமே மன்னிப்பைக் கோரி பிறகு, அவன் பக்கமே திரும்புங்கள். நிச்சயமாக என் இறைவன் (உங்களுக்கு) மிகச் சமீபமானவன், (பிரார்த்தனைகளை) அங்கீகரிப்பவன் என்று கூறினார்.

  58. 11:62

    قَالُوا۟ يَـٰصَـٰلِحُ قَدْ كُنتَ فِينَا مَرْجُوًّا قَبْلَ هَـٰذَآ ۖ أَتَنْهَىٰنَآ أَن نَّعْبُدَ مَا يَعْبُدُ ءَابَآؤُنَا وَإِنَّنَا لَفِى شَكٍّ مِّمَّا تَدْعُونَآ إِلَيْهِ مُرِيبٍ

    Q̣aaloo yaa-Ṣaaliḥu q̣ad kuñta feenaa marjuwwañ q̣abla haaẓaaa ʹatanhaanaaa ʹan naʻbuda maa- yaʻbudu ʹaabaaaʹunaa wa-ʹinnanaa lafee shakkim mimmaa tadʻoonaaa ʹilayhi mureeb.

    அதற்கவர்கள் (ஸாலிஹ் நபியை நோக்கி) ‘‘ஸாலிஹே! இதற்கு முன்னரெல்லாம், நீர் எங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமுடையவராக இருந்தீர். எங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களை நாங்கள் வணங்கக் கூடாதென்று நீர் எங்களைத் தடை செய்கிறீரா? நீர் எங்களை எதனளவில் அழைக்கிறீரோ அதைப் பற்றி நிச்சயமாக நாங்கள் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்'' என்று கூறினர்.

  59. 11:63

    قَالَ يَـٰقَوْمِ أَرَءَيْتُمْ إِن كُنتُ عَلَىٰ بَيِّنَةٍ مِّن رَّبِّى وَءَاتَىٰنِى مِنْهُ رَحْمَةً فَمَن يَنصُرُنِى مِنَ ٱللَّهِ إِنْ عَصَيْتُهُۥ ۖ فَمَا تَزِيدُونَنِى غَيْرَ تَخْسِيرٍ

    Q̣aala yaa-q̣awmi ʹaraʹaytum ʹiñ kuñtu ʻalaa Bayyinatim mir Rabbee wa-ʹaataanee minhu Raḥmatañ famañy yañṣurunee minal laahi ʹin ʻaṣaytuh? Famaa tazeedunanee g̣ayra takhseeer?

    அதற்கவர் ‘‘என் மக்களே! நான் என் இறைவனின் நேரான வழியில் இருக்க, அவன் என் மீது (மகத்தான) அருள் புரிந்திருக்க, நான் அவனுக்கு மாறு செய்தால் (அவன் என்னைத் தண்டிக்க மாட்டானா? அந்நேரத்தில்) அல்லாஹ்விடத்தில் எனக்கு உதவி செய்பவர் யார்? என்பதை நீங்கள் கவனித்தீர்களா? நீங்களோ எனக்கு நஷ்டத்தைத் தவிர (எதையும்) அதிகமாக்கி விட மாட்டீர்கள்'' என்று கூறினார்.

  60. 11:64

    وَيَـٰقَوْمِ هَـٰذِهِۦ نَاقَةُ ٱللَّهِ لَكُمْ ءَايَةً فَذَرُوهَا تَأْكُلْ فِىٓ أَرْضِ ٱللَّهِ وَلَا تَمَسُّوهَا بِسُوٓءٍ فَيَأْخُذَكُمْ عَذَابٌ قَرِيبٌ

    Wa-yaaq̣awmi haaẓihee naaq̣atul laahi lakum ʹaayatañ faẓaroohaa taʹkul feee ʹarḍil laahi wa-laa tamassoohaa bisoooʹiñ fayaʹkhuẓakum ʻAẓaabuñ q̣areeb!

    ‘‘என் மக்களே! இது அல்லாஹ்வுடைய ஒரு பெண் ஒட்டகமாகும். உங்களுக்கு இது ஓர் அத்தாட்சியாகவே அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அல்லாஹ்வினுடைய பூமியில் (அது விரும்பிய இடத்தில்) மேய அதை விட்டுவிடுங்கள்; அதற்கு ஒரு கெடுதலும் செய்ய(க் கருதி) அதைத் தொடாதீர்கள். அவ்வாறு செய்தால் அதிசீக்கிரத்தில் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்'' (என்று சொன்னார்.)

  61. 11:65

    فَعَقَرُوهَا فَقَالَ تَمَتَّعُوا۟ فِى دَارِكُمْ ثَلَـٰثَةَ أَيَّامٍ ۖ ذَٰلِكَ وَعْدٌ غَيْرُ مَكْذُوبٍ

    Faʻaq̣aroohaa faq̣aala tamattaʻoo fee daarikum s̤alaas̤ata ʹay-yaam: ẓaalika waʻdun g̣ayru makẓoob!

    எனினும், அவர்கள் (அவருடைய கட்டளைக்கு மாறு செய்து) அதை வெட்டி விட்டார்கள். ஆகவே, அவர் (அவர்களை நோக்கி, ‘‘இனி) மூன்று நாள்கள்வரை உங்கள் வீடுகளில் (இருந்து கொண்டு) நீங்கள் சுகமடையலாம். (அதற்குப் பின்னர் அல்லாஹ்வுடைய வேதனை உங்களை வந்தடையும்) இது தவறாத வாக்காகும்'' என்று கூறினார்.

  62. 11:66

    فَلَمَّا جَآءَ أَمْرُنَا نَجَّيْنَا صَـٰلِحًا وَٱلَّذِينَ ءَامَنُوا۟ مَعَهُۥ بِرَحْمَةٍ مِّنَّا وَمِنْ خِزْىِ يَوْمِئِذٍ ۗ إِنَّ رَبَّكَ هُوَ ٱلْقَوِىُّ ٱلْعَزِيزُ

    Falammaa jaaaʹa ʹAmrunaa najjaynaa Ṣaaliḥañw wal-laẓeena ʹaamanoo maʻahoo bi-Raḥmatim minnaa wa-min khizyi Yawmiʹiẓ. ʹInna Rabbaka Huwal Q̣awiyyul ʻAzeez.

    (வேதனையைப் பற்றிய) நம் கட்டளை(யின்படி வேதனை) வந்தபொழுது ஸாலிஹையும், அவருடன் நம்பிக்கைக் கொண்டவர்களையும் (வேதனையிலிருந்தும்) அந்நாளின் இழிவில் இருந்தும் நம் அருளைக் கொண்டு நாம் பாதுகாத்துக் கொண்டோம். (நபியே!) நிச்சயமாக உமது இறைவன் தான் பலமிக்கவனும் (அனைத்தையும்) மிகைத்தவனும் ஆவான்.

  63. 11:67

    وَأَخَذَ ٱلَّذِينَ ظَلَمُوا۟ ٱلصَّيْحَةُ فَأَصْبَحُوا۟ فِى دِيَـٰرِهِمْ جَـٰثِمِينَ

    Wa-ʹakhaẓal laẓeena z̤̣alamuṣ Ṣayḥatu faʹaṣbaḥoo fee diyaarihim jaas̤imeen.

    ஆகவே, வரம்பு மீறியவர்களை இடி முழக்கம் பிடித்துக் கொண்டது. அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே இறந்து விட்டனர்.

  64. 11:68

    كَأَن لَّمْ يَغْنَوْا۟ فِيهَآ ۗ أَلَآ إِنَّ ثَمُودَا۟ كَفَرُوا۟ رَبَّهُمْ ۗ أَلَا بُعْدًا لِّثَمُودَ

    Kaʹal lam yag̣naw feehaa. ʹAlaaa ʹinna S̤amooda kafaroo Rabbahum! ʹAlaa buʻdal li-S̤amood.

    (அதற்கு முன்னர்) அங்கு அவர்கள் ஒரு காலத்திலும் வசித்திருக்காததைப் போல் (அடையாளம் எதுவுமின்றி அழிந்து விட்டனர்). அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக ‘ஸமூது' மக்கள் தங்கள் இறைவனை நிராகரித்து விட்டார்கள். அறிந்து கொள்ளுங்கள்: ‘ஸமூது' மக்கள் மீது சாபம் ஏற்பட்டு விட்டது.

  65. 11:69

    وَلَقَدْ جَآءَتْ رُسُلُنَآ إِبْرَٰهِيمَ بِٱلْبُشْرَىٰ قَالُوا۟ سَلَـٰمًا ۖ قَالَ سَلَـٰمٌ ۖ فَمَا لَبِثَ أَن جَآءَ بِعِجْلٍ حَنِيذٍ

    Wa-laq̣ad jaaaʹat Rusulunaaa ʹIbraaheema bilbushraa q̣aaloo Salaamaa! Q̣aala Salaamuñ famaa labis̤a ʹañ jaaaʻa ḥaneeẓ. biʻijlin

    நிச்சயமாக (வானவர்களிலுள்ள) நம் தூதர்கள் இப்றாஹீமுக்கு நற்செய்தி கொண்டு வந்து “ஸலாம்'' கூறினர். (இப்றாஹீம் அதற்குப் பிரதியாக “உங்களுக்கும்) ஸலாம்'' கூறி சிறிதும் தாமதிக்காது (அறுத்துச்) சுட்டதொரு கன்றுக்குட்டியைக் கொண்டு வந்(து அவர்கள் முன் வைத்)தார்கள்.

  66. 11:70

    فَلَمَّا رَءَآ أَيْدِيَهُمْ لَا تَصِلُ إِلَيْهِ نَكِرَهُمْ وَأَوْجَسَ مِنْهُمْ خِيفَةً ۚ قَالُوا۟ لَا تَخَفْ إِنَّآ أُرْسِلْنَآ إِلَىٰ قَوْمِ لُوطٍ

    Falammaa raʹaaa ʹaydiyahum laa- taṣilu ʹilayhi nakirahum wa-ʹawjasa minhum kheefah. Q̣aaloo laa- takhaf ʹinnaaa ʹursilnaaa ʹilaa Q̣awmi Looṭ.

    அவர்களுடைய கைகள் அதனிடம் செல்லாததைக் கண்டதும் அவர்களைப் பற்றி சந்தேகித்தார்; அவர்களைப் பற்றிய பயமும் அவர் மனதில் ஊசலாடியது. (அப்பொழுது) அவர்கள் (இப்றாஹீமை நோக்கி) ‘‘நீர் பயப்படாதீர். நிச்சயமாக நாங்கள் ‘லூத்'துடைய மக்களிடம் (அவர்களை அழித்துவிட) அனுப்பப்பட்டுள்ளோம்'' என்று கூறினார்கள்.

  67. 11:71

    وَٱمْرَأَتُهُۥ قَآئِمَةٌ فَضَحِكَتْ فَبَشَّرْنَـٰهَا بِإِسْحَـٰقَ وَمِن وَرَآءِ إِسْحَـٰقَ يَعْقُوبَ

    Wamraʹatuhoo q̣aaaʹimatuñ faḍaḥikat fabashsharnaahaa biʹIsḥaaq̣a wa-miñw waraaaʹi ʹIs-ḥaaq̣a Yaʻq̣oob.

    (அச்சமயம் அங்கு) நின்று கொண்டிருந்த அவருடைய (கிழ) மனைவி (லூத் நபியின் மக்கள் செய்யும் தீய காரியங்களைச் செவியுற்று) சிரித்தாள்; ஆனால், அதே சமயத்தில் அவளுக்கு ‘இஸ்ஹாக்' (என்னும் மகனைப்) பற்றியும், இஸ்ஹாக்குக்குப் பின்னர் ‘யஅகூப்' (என்னும் பேரன் பிறக்கப் போவதைப்) பற்றியும் நற்செய்தி கூறினோம்.

  68. 11:72

    قَالَتْ يَـٰوَيْلَتَىٰٓ ءَأَلِدُ وَأَنَا۠ عَجُوزٌ وَهَـٰذَا بَعْلِى شَيْخًا ۖ إِنَّ هَـٰذَا لَشَىْءٌ عَجِيبٌ

    Q̣aalat yaa-waylataaa ʹaʹalidu wa-ʹana ʻajoozuñw Wahaaẓaa baʻlee shaykhaa? ʹInna haaẓaa lashayʹun ʻajeeb!

    அதற்கவள், ‘‘என் துக்கமே! (மாதவிடாய் நின்று) நான் கிழவியாகவும், என் இக்கணவர் ஒரு வயோதிகராகவும் ஆனதன் பின்னர் நான் (கர்ப்பமாகி) பிள்ளை பெறுவேனா! நிச்சயமாக இது ஆச்சரியமான விஷயம்!'' என்றாள்.

  69. 11:73

    قَالُوٓا۟ أَتَعْجَبِينَ مِنْ أَمْرِ ٱللَّهِ ۖ رَحْمَتُ ٱللَّهِ وَبَرَكَـٰتُهُۥ عَلَيْكُمْ أَهْلَ ٱلْبَيْتِ ۚ إِنَّهُۥ حَمِيدٌ مَّجِيدٌ

    Q̣aalooo ʹataʻjabeena min ʹAmril laahi Raḥmatul laahi wa-Barakaatuhoo ʻalaykum ʹAhlal Bayt! ʹInnahoo Ḥameedum Majeed!

    அதற்கவர்கள், ‘‘அல்லாஹ்வுடைய சக்தியைப் பற்றி நீ ஆச்சரியம் அடைகிறாயா? அல்லாஹ்வுடைய அருளும், அவனுடைய நற்பாக்கியங்களும் (இப்றாஹீமுடைய) வீட்டிலுள்ள உங்கள் மீது நிலவுக. நிச்சயமாக அவன் மிக்க புகழுடையவன், மகிமை உடையவன்'' என்று கூறினார்கள்.

  70. 11:74

    فَلَمَّا ذَهَبَ عَنْ إِبْرَٰهِيمَ ٱلرَّوْعُ وَجَآءَتْهُ ٱلْبُشْرَىٰ يُجَـٰدِلُنَا فِى قَوْمِ لُوطٍ

    Falammaa ẓahaba ʻan ʹIbraaheemar rawʻu wa-jaaaʹat hul-bushraa yujaadilunaa fee Q̣awmi Looṭ.

    இப்றாஹீமுடைய திடுக்கம் நீங்கி அவருக்கு நற்செய்தி கிடைத்த பின்னர் ‘லூத்' தின் மக்களை (அழித்து விடுவதை)ப் பற்றி அவர் நம்மு(டைய வானவர்களு)டன் தர்க்கம் செய்ய ஆரம்பித்து விட்டார்.

  71. 11:75

    إِنَّ إِبْرَٰهِيمَ لَحَلِيمٌ أَوَّٰهٌ مُّنِيبٌ

    ʹInna ʹIbraaheema laḥaleemun ʹawwaahum muneeb.

    நிச்சயமாக இப்றாஹீம் மிக்க சகிப்புடையவர், அதிகம் பிரார்த்திப்பவர் (எதற்கும்) நம்மையே முன்நோக்குபவர் ஆவார்.

  72. 11:76

    يَـٰٓإِبْرَٰهِيمُ أَعْرِضْ عَنْ هَـٰذَآ ۖ إِنَّهُۥ قَدْ جَآءَ أَمْرُ رَبِّكَ ۖ وَإِنَّهُمْ ءَاتِيهِمْ عَذَابٌ غَيْرُ مَرْدُودٍ

    YaaaʹIbraaheemu ʹaʻriḍ ʻan haaẓaa. ʹInnahoo q̣ad jaaaʹa ʹamru Rabbik: wa-ʹinnahum ʹaateehim ʻaẓaabun g̣ayru mardood!

    (ஆகவே, அத்தூதர்கள் இப்றாஹீமை நோக்கி) இப்றாஹீமே! நீர் இதைப் (பற்றி தர்க்கம் செய்யாது) புறக்கணித்து விடுவீராக. நிச்சயமாக (அவர்களை அழிப்பதற்காக) உமது இறைவனுடைய கட்டளை பிறந்து விட்டது. மேலும், நிச்சயமாக அவர்களால் தவிர்க்க முடியாத வேதனை அவர்களை வந்தடையும் (என்று கூறினார்கள்).

  73. 11:77

    وَلَمَّا جَآءَتْ رُسُلُنَا لُوطًا سِىٓءَ بِهِمْ وَضَاقَ بِهِمْ ذَرْعًا وَقَالَ هَـٰذَا يَوْمٌ عَصِيبٌ

    Wa-lammaa jaaaʹat Rusulunaa Looṭañ seeeʹa bihim wa-ḍaaq̣a bihim ẓarʻañw waq̣aala haaẓaa yawmun ʻaṣeeb.

    (இப்றாஹீமிடமிருந்து) நம் தூதர்கள் லூத்திடம் வந்தபொழுது, அவர் (அந்த வானவர்களைத் தம் மக்களிடமிருந்து எப்படி பாதுகாப்பது என்று) கவலைக்குள்ளாகி அவரது மனம் சுருங்கி ‘‘இது மிக நெருக்கடியான நாள்'' என்று கூறினார்.

  74. 11:78

    وَجَآءَهُۥ قَوْمُهُۥ يُهْرَعُونَ إِلَيْهِ وَمِن قَبْلُ كَانُوا۟ يَعْمَلُونَ ٱلسَّيِّـَٔاتِ ۚ قَالَ يَـٰقَوْمِ هَـٰٓؤُلَآءِ بَنَاتِى هُنَّ أَطْهَرُ لَكُمْ ۖ فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَلَا تُخْزُونِ فِى ضَيْفِىٓ ۖ أَلَيْسَ مِنكُمْ رَجُلٌ رَّشِيدٌ

    Wa-jaaaʹahoo q̣awmuhoo yuhraʻoona ʹilayh. Wa-miñ q̣ablu kaanoo yaʻmaloonas sayyiʹaat. Q̣aala yaa-q̣awmi haaaʹulaaaʹi banaatee hunna ʹaṭharu lakum fattaq̣ul laaha wa-laa tukhzooni fee ḍayfee! ʹAlaysa miñkum rajulur rasheed?

    (இதற்குள்) அவருடைய மக்கள் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள். இதற்கு முன்னரும் அவர்கள் தீய காரியங்களையே செய்து கொண்டிருந்தனர். (இதை நாடியே அவரிடம் அவர்கள் வந்தனர்.) அதற்கு (‘லூத்' நபி அவர்களை நோக்கி) ‘‘என் மக்களே! இதோ! என் பெண்மக்கள் இருக்கின்றனர். (அவர்களைத் திருமணம் செய்து கொள்வது) உங்களுக்கு மிக்க பரிசுத்தமானதாகும். அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள். என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப் படுத்தாதீர்கள். (உங்களுக்கு நல்லுபதேசம் செய்யும்) நல்ல மனிதன் ஒருவன் கூட உங்களில் இல்லையா?'' என்று கேட்டார்.

  75. 11:79

    قَالُوا۟ لَقَدْ عَلِمْتَ مَا لَنَا فِى بَنَاتِكَ مِنْ حَقٍّ وَإِنَّكَ لَتَعْلَمُ مَا نُرِيدُ

    Q̣aaloo laq̣ad ʻalimta maa- lanaa fee banaatika min ḥaq̣q̣: wa-ʹinnaka lataʻlamu maa- nureed!

    அதற்கவர்கள் ‘‘உமது பெண்மக்களிடம் எங்களுக்கு ஒரு தேவையும் இல்லை என்பதை நீர் நன்கறிவீர்; நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நிச்சயமாக நீங்கள் நன்கறிவீர்'' என்றும் கூறினார்கள்.

  76. 11:80

    قَالَ لَوْ أَنَّ لِى بِكُمْ قُوَّةً أَوْ ءَاوِىٓ إِلَىٰ رُكْنٍ شَدِيدٍ

    Q̣aala law ʹanna lee bikum q̣uwwatan ʹaw aaweee ʹilaa rukniñ shadeed.

    அதற்கவர் ‘‘உங்களைத் தடுக்க போதுமான பலம் எனக்கு இருக்க வேண்டாமா? அல்லது (உங்களைத் தடுத்து விடக்கூடிய) பலமான ஆதரவை நான் அடைய வேண்டாமா?'' என்று (மிக துக்கத்துடன்) கூறினார்.

  77. 11:81

    قَالُوا۟ يَـٰلُوطُ إِنَّا رُسُلُ رَبِّكَ لَن يَصِلُوٓا۟ إِلَيْكَ ۖ فَأَسْرِ بِأَهْلِكَ بِقِطْعٍ مِّنَ ٱلَّيْلِ وَلَا يَلْتَفِتْ مِنكُمْ أَحَدٌ إِلَّا ٱمْرَأَتَكَ ۖ إِنَّهُۥ مُصِيبُهَا مَآ أَصَابَهُمْ ۚ إِنَّ مَوْعِدَهُمُ ٱلصُّبْحُ ۚ أَلَيْسَ ٱلصُّبْحُ بِقَرِيبٍ

    Q̣aaloo Yaa-Looṭu ʹinnaa Rusulu Rabbika lañy yaṣilooo ʹilayk: faʹasri biʹahlika biq̣iṭʻim minal layli wa-laa yaltafit miñkum ʹaḥadun ʹillam raʹatak: ʹinnahoo muṣeebuhaa maaa ʹaṣaabahum. ʹInna mawʻidahumuṣ ṣubḥ. ʹAlaysaṣ ṣubḥu biq̣areeb?

    (அதற்கு லூத்துடைய விருந்தாளிகள் அவரை நோக்கி) ‘‘லூத்தே! நிச்சயமாக நாங்கள் உங்கள் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்(களாகிய வானவர்)களாவோம். இவர்கள் நிச்சயமாக உம்மை வந்தடைய முடியாது. (இன்று) இரவில் ஒரு சிறு பகுதி இருக்கும்பொழுது நீர் உம் குடும்பத்துடன் (இங்கிருந்து) வெளியேறி விடுவீராக; (உமது சொல் கேளாத) உமது மனைவியைத் தவிர, உங்களில் ஒருவரும் அவர்களைத் திரும்பியும் பார்க்க வேண்டாம். அவர்களை அடைகின்ற வேதனை நிச்சயமாக அவளையும் அடையும். (வேதனை வர) நிச்சயமாக இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற்காலையாகும். விடியற்காலை சமீபமாக இல்லையா?'' என்று கூறினார்கள்.

  78. 11:82

    فَلَمَّا جَآءَ أَمْرُنَا جَعَلْنَا عَـٰلِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهَا حِجَارَةً مِّن سِجِّيلٍ مَّنضُودٍ

    Falammaa jaaaʹa ʹamrunaa jaʻalnaa ʻaaliyahaa saafilahaa wa-ʹamṭarnaa ʻalayhaa ḥijaaratam miñ sijjeelim mañḍood,―

    நம் கட்டளை(யின் நேரம்) வந்ததும் அவர்களுடைய ஊரை தலைக்கீழாக கவிழ்த்து விட்டோம். (அதற்கு முன்னர்) அவர்கள் மீது சுடப்பட்ட செங்கற்களை (மழையைப் போல்) பொழியச் செய்தோம்.

  79. 11:83

    مُّسَوَّمَةً عِندَ رَبِّكَ ۖ وَمَا هِىَ مِنَ ٱلظَّـٰلِمِينَ بِبَعِيدٍ

    Musawwamatan ʻiñda Rabbik: wa-maa hiya minaz̤̣ z̤̣aalimeena bibaʻeed!

    (எறியப்பட்ட செங்கல் ஒவ்வொன்றிலும்) உங்கள் இறைவனால் அடையாளமிடப் பட்டிருந்தது. (புரட்டப்பட்ட) அவ்வூர் இவ்வக்கிரமக்காரர்களுக்கு வெகு தூரமுமல்ல; (விரும்பினால் அதை இவர்கள் நேரில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.)

  80. 11:84

    ۞ وَإِلَىٰ مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا ۚ قَالَ يَـٰقَوْمِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ مَا لَكُم مِّنْ إِلَـٰهٍ غَيْرُهُۥ ۖ وَلَا تَنقُصُوا۟ ٱلْمِكْيَالَ وَٱلْمِيزَانَ ۚ إِنِّىٓ أَرَىٰكُم بِخَيْرٍ وَإِنِّىٓ أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ مُّحِيطٍ

    Wa-ʹilaa Madyana ʹakhaahum Shuʻaybaa: q̣aala yaa-q̣awmiʻ budul laaha maa- lakum min ʹilaahin g̣ayruh. Wa-laa tañq̣uṣul mikyaala walmeezaana ʹinneee ʹaraakum̃ bikhayriñw waʹinneee ʹakhaafu ʻalaykum ʻaẓaaba Yawmim Muḥeeṭ.

    ‘‘மத்யன்' (என்னும் ஊர்) வாசிகளுக்கு அவர்களுடைய சகோதரர் ஷுஐபை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்.) அவர் (அவர்களை நோக்கி) ‘‘என் மக்களே! அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள்; அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கு இல்லை. அளவையையும் நிறுவையையும் குறைக்காதீர்கள். நீங்கள் நல்ல நிலைமையில் இருப்பதையே நான் காண்கிறேன். (அவ்வாறிருக்க அளவையையும் நிறுவையையும் குறைத்து ஏன் மோசம் செய்கிறீர்கள்? அவ்வாறு செய்தால்) நிச்சயமாக உங்களைச் சூழ்ந்து அழித்துவிடக்கூடிய வேதனை ஒரு நாளில் உங்களை வந்தடையும் என்று நான் பயப்படுகிறேன்.

  81. 11:85

    وَيَـٰقَوْمِ أَوْفُوا۟ ٱلْمِكْيَالَ وَٱلْمِيزَانَ بِٱلْقِسْطِ ۖ وَلَا تَبْخَسُوا۟ ٱلنَّاسَ أَشْيَآءَهُمْ وَلَا تَعْثَوْا۟ فِى ٱلْأَرْضِ مُفْسِدِينَ

    Wayaaq̣awmi ʹawful mikyaala walmeezaana bilq̣isṭi wa-laa tabkhasun naasa ʹashyaaaʹahum wa-laa taʻs̤aw fil ʹarḍi mufsideen.

    என் மக்களே! அளவையையும் நிறுவையையும் நீதமாகவே முழுமைப்படுத்துங்கள். மனிதர்களுக்கு(க் கொடுக்க வேண்டிய) அவர்களுடைய பொருள்களைக் குறைத்து விடாதீர்கள். பூமியில் கடுமையாக விஷமம் செய்து கொண்டு அலையாதீர்கள்.

  82. 11:86

    بَقِيَّتُ ٱللَّهِ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ ۚ وَمَآ أَنَا۠ عَلَيْكُم بِحَفِيظٍ

    Baq̣eeyatul laahi khayrul lakum ʹiñ kuñtum Muʹmineen! Wa-maaa ʹana ʻalaykum̃ bi-Ḥafeez̤̣!

    நீங்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் (உங்கள் தொழிலில் இலாபகரமாக) அல்லாஹ் மீதப்படுத்துவதே உங்களுக்கு மிக்க மேலானதாகும். நான் உங்களைக் கண்காணிப்பவனல்ல; (அல்லாஹ்தான் உங்களைக் கண்காணிப்பவன். ஆகவே, அவனுக்கு நீங்கள் பயந்து நடந்து கொள்ளுங்கள்)'' என்றும் கூறினார்.

  83. 11:87

    قَالُوا۟ يَـٰشُعَيْبُ أَصَلَوٰتُكَ تَأْمُرُكَ أَن نَّتْرُكَ مَا يَعْبُدُ ءَابَآؤُنَآ أَوْ أَن نَّفْعَلَ فِىٓ أَمْوَٰلِنَا مَا نَشَـٰٓؤُا۟ ۖ إِنَّكَ لَأَنتَ ٱلْحَلِيمُ ٱلرَّشِيدُ

    Q̣aaloo yaa-Shuʻaybu ʹaṣalaatuka taʹmuruka ʹan natruka maa- yaʻbudu ʹaabaaaʹunaaa ʹaw ʹan nafʻala feee ʹamwaalinaa maa- nashaaaʹ? ʹInnaka laʹañtal ḥaleemur Rasheed!

    அதற்கவர்கள் ‘‘ஷுஐபே! நாங்கள் எங்கள் மூதாதைகள் வணங்கிய தெய்வங்களையும், நாங்கள் எங்கள் பொருள்களில் எங்கள் விருப்பப்படி நடந்து கொள்வதையும் விட்டுவிடும்படியாக (நீர் எங்களுக்குக் கட்டளை இடும்படி) உமது தொழுகையா உம்மைத் தூண்டுகிறது? நிச்சயமாக நீர்தான் மிக்க கண்ணியமுள்ள நேர்மையாளர்'' என்று (பரிகாசமாகக்) கூறினார்கள்.

  84. 11:88

    قَالَ يَـٰقَوْمِ أَرَءَيْتُمْ إِن كُنتُ عَلَىٰ بَيِّنَةٍ مِّن رَّبِّى وَرَزَقَنِى مِنْهُ رِزْقًا حَسَنًا ۚ وَمَآ أُرِيدُ أَنْ أُخَالِفَكُمْ إِلَىٰ مَآ أَنْهَىٰكُمْ عَنْهُ ۚ إِنْ أُرِيدُ إِلَّا ٱلْإِصْلَـٰحَ مَا ٱسْتَطَعْتُ ۚ وَمَا تَوْفِيقِىٓ إِلَّا بِٱللَّهِ ۚ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ

    Q̣aala yaaq̣awmi ʹaraʹaytum ʹiñ kuñtu ʻalaa Bayyinatim mir Rabbee wa-razaq̣anee minhu rizq̣an ḥasanaa? Wa-maaa ʹureedu ʹan ʹukhaalifakum ʹilaa maaa ʹanhaakum ʻanh. ʹIn ʹureedu ʹillal ʹiṣlaaḥa mas taṭaʻt; wa-maa tawfeeq̣eee ʹillaa billaah. ʻAlayhi tawakkaltu wa-ʹilayhi ʹuneeb.

    அதற்கவர் ‘‘என் மக்களே! என் இறைவன் தெளிவான அத்தாட்சிகளை எனக்களித்திருப்பதையும், அவன் எனக்கு வேண்டிய உணவை நல்லவிதமாக அளித்து வருவதையும் நீங்கள் அறிவீர்களா? (இந்நிலைமையில் மக்களை நான் மோசம் செய்யவேண்டிய அவசியமில்லை; ஆகவே,) நான் (தீமையிலிருந்து) உங்களைத் தடுக்கும் விஷயத்தில் உங்களுக்கு மாறுசெய்ய விரும்பவில்லை. (நீங்கள் செய்யக்கூடாது என்று கூறும் காரியத்தை நானும் செய்யமாட்டேன்.) என்னால் இயன்றவரை (உங்களைச்) சீர்திருத்துவதைத் தவிர (வேறொன்றையும்) நான் விரும்பவில்லை. அல்லாஹ்வின் உதவியின்றி நான் (உங்களைச் சீர்திருத்தும் விஷயத்தில்) வெற்றியடைய முடியாது. அவனையே நான் நம்பியிருக்கிறேன்; அவனையே நான் நோக்கியும் நிற்கிறேன்.

  85. 11:89

    وَيَـٰقَوْمِ لَا يَجْرِمَنَّكُمْ شِقَاقِىٓ أَن يُصِيبَكُم مِّثْلُ مَآ أَصَابَ قَوْمَ نُوحٍ أَوْ قَوْمَ هُودٍ أَوْ قَوْمَ صَـٰلِحٍ ۚ وَمَا قَوْمُ لُوطٍ مِّنكُم بِبَعِيدٍ

    Wa-yaaq̣awmi laa- yajrimannakum shiq̣aaq̣eee ʹañy yuṣeebakum mis̤lu maaa ʹaṣaaba q̣awma Nooḥin ʹaw q̣awma Hoodin ʹaw q̣awma Ṣaaliḥ: wa-maa q̣awmu Looṭim miñkum̃ bibaʻeed!

    ‘‘என் மக்களே! உங்களுக்கு என் மீதுள்ள விரோதம் ‘நூஹ்'வுடைய மக்களையும் ‘ஹூத்' உடைய மக்களையும், ‘ஸாலிஹ்' உடைய மக்களையும் பிடித்தது போன்ற வேதனை உங்களையும் பிடித்துக் கொள்ளும்படி செய்துவிட வேண்டாம். ‘லூத்து'டைய மக்கள் (இருந்த இடமும் காலமும்) உங்களுக்குத் தூரமாக இல்லை.

  86. 11:90

    وَٱسْتَغْفِرُوا۟ رَبَّكُمْ ثُمَّ تُوبُوٓا۟ إِلَيْهِ ۚ إِنَّ رَبِّى رَحِيمٌ وَدُودٌ

    Wastag̣firoo Rabbakum s̤ummaa toobooo ʹilayh: ʹinna Rabbee Raḥeemuñw wadood.

    ஆகவே, உங்கள் இறைவனிடம் நீங்கள் மன்னிப்பைக் கோருங்கள். (உங்கள் பாவங்களை விட்டு மனம் வருந்தி) அவனிடமே நீங்கள் திரும்புங்கள். நிச்சயமாக என் இறைவன் மகா கருணையுடையவன், மிக்க நேசிப்பவன் ஆவான் என்று கூறினார்.

  87. 11:91

    قَالُوا۟ يَـٰشُعَيْبُ مَا نَفْقَهُ كَثِيرًا مِّمَّا تَقُولُ وَإِنَّا لَنَرَىٰكَ فِينَا ضَعِيفًا ۖ وَلَوْلَا رَهْطُكَ لَرَجَمْنَـٰكَ ۖ وَمَآ أَنتَ عَلَيْنَا بِعَزِيزٍ

    Q̣aaloo yaa-Shuʻaybu maa- nafq̣ahu kas̤eeram mimmaa taq̣oolu wa-ʹinnaa lanaraaka feenaa ḍaʻeefaa! Wa-lawlaa rahṭuka larajamnaak! Wa-maaa ʹañta ʻalaynaa biʻazeez!

    அதற்கவர்கள் ‘‘ஷுஐபே! நீர் கூறுபவற்றில் பெரும்பாலானதை நாம் விளங்க (முடிய)வில்லை. நிச்சயமாக நாம் உம்மை எங்களில் பலவீனமானவராகவே காண்கிறோம். உமது இனத்தார் இல்லாவிடில் உம்மைக் கல் எறிந்தே கொன்றிருப்போம். நீர் நம்மிடம் மதிப்புடையவரல்ல'' என்றார்கள்.

  88. 11:92

    قَالَ يَـٰقَوْمِ أَرَهْطِىٓ أَعَزُّ عَلَيْكُم مِّنَ ٱللَّهِ وَٱتَّخَذْتُمُوهُ وَرَآءَكُمْ ظِهْرِيًّا ۖ إِنَّ رَبِّى بِمَا تَعْمَلُونَ مُحِيطٌ

    Q̣aala yaa-q̣awmi ʹarahṭeee ʹaʻazzu ʻalaykum minal laah? Wattakhaẓtumoohu waraaaʹakum z̤̣ihriyyaa. ʹInna Rabbee bimaa taʻmaloona Muḥeeṭ!

    அதற்கவர் ‘‘என் மக்களே! அல்லாஹ்வைவிட என் இனத்தாரா உங்களுக்கு மிக்க மதிப்புடையவர்களாகி விட்டனர்? நீங்கள் அவனை உங்கள் முதுகுப்புறம் தள்ளி விட்டீர்கள். நிச்சயமாக என் இறைவன் நீங்கள் செய்வதைச் சூழ்ந்துள்ளான்'' என்று கூறினார்.

  89. 11:93

    وَيَـٰقَوْمِ ٱعْمَلُوا۟ عَلَىٰ مَكَانَتِكُمْ إِنِّى عَـٰمِلٌ ۖ سَوْفَ تَعْلَمُونَ مَن يَأْتِيهِ عَذَابٌ يُخْزِيهِ وَمَنْ هُوَ كَـٰذِبٌ ۖ وَٱرْتَقِبُوٓا۟ إِنِّى مَعَكُمْ رَقِيبٌ

    Wa-yaaq̣awmiʻ maloo ʻalaa makaanatikum ʹinnee ʻaamil: sawfa taʻlamoona mañy yaʹteehi ʻaẓaabuñy yukhzeehi wa-man huwa kaaẓib! Wartaq̣ibooo ʹinnee maʻakum raq̣eeb.

    ‘‘என் மக்களே! நீங்கள் உங்கள் போக்கில் (உங்கள் காரியத்தைச்) செய்து கொண்டிருங்கள், நானும் (என் போக்கில் என் காரியத்தைச்) செய்து கொண்டிருக்கிறேன். இழிவுபடுத்தும் வேதனை யாரை வந்தடையும்? பொய் சொல்பவர் யார்? என்பதை நீங்கள் அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வீர்கள். (அந்நேரத்தை) நீங்கள் எதிர்பார்த்திருங்கள்; நிச்சயமாக நானும் உங்களுடன் (அதை) எதிர்பார்த்திருக்கிறேன்'' (என்றும் கூறினார்).

  90. 11:94

    وَلَمَّا جَآءَ أَمْرُنَا نَجَّيْنَا شُعَيْبًا وَٱلَّذِينَ ءَامَنُوا۟ مَعَهُۥ بِرَحْمَةٍ مِّنَّا وَأَخَذَتِ ٱلَّذِينَ ظَلَمُوا۟ ٱلصَّيْحَةُ فَأَصْبَحُوا۟ فِى دِيَـٰرِهِمْ جَـٰثِمِينَ

    Wa-lammaa jaaaʹa ʹamrunaa najjaynaa Shuʻaybañw wal-laẓeena ʹaamanoo maʻahoo bi-Raḥmatim minnaa wa-ʹakhaẓatil laẓeena z̤̣alamuṣ Ṣayhatu faʹaṣbaḥoo fee diyaarihim jaas̤imeen,―

    (பின்னர் அவர்களிடம்) நம் வேதனை வந்தபொழுது ஷுஐபையும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நம் அருளைக் கொண்டு பாதுகாத்துக் கொண்டோம். அநியாயம் செய்தவர்களை விடியற்காலை நேரத்தில் இடிமுழக்கம் பிடித்துக் கொண்டது. அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே (இறந்து) சடலமாக கிடந்தனர்.

  91. 11:95

    كَأَن لَّمْ يَغْنَوْا۟ فِيهَآ ۗ أَلَا بُعْدًا لِّمَدْيَنَ كَمَا بَعِدَتْ ثَمُودُ

    Kaʹal lam yag̣naw feehaa! ʹAlaa buʻdal li-Madyana kamaa baʻidat S̤amood!

    அதில் அவர்கள் ஒரு காலத்திலும் வசித்திருக்காதவர்களைப் போல் (ஓர் அடையாளமுமின்றி) அழிந்து விட்டனர். ‘ஸமூத்' (சமுதாயத்தின்) மீது சாபம் ஏற்பட்டபடியே இந்த ‘மத்யன்' (நகர சமுதாயத்தின்) மீதும் சாபம் ஏற்பட்டுவிட்டது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

  92. 11:96

    وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَىٰ بِـَٔايَـٰتِنَا وَسُلْطَـٰنٍ مُّبِينٍ

    Wa-laq̣ad ʹarsalnaa Moosaa biʹAayaatinaa wa-sulṭaanim mubeen.

    நம் வசனங்களுடனும் தெளிவான அத்தாட்சியுடனும் மூஸாவை (நம் தூதராக) நிச்சயமாக நாம் அனுப்பிவைத்தோம்.

  93. 11:97

    إِلَىٰ فِرْعَوْنَ وَمَلَإِي۟هِۦ فَٱتَّبَعُوٓا۟ أَمْرَ فِرْعَوْنَ ۖ وَمَآ أَمْرُ فِرْعَوْنَ بِرَشِيدٍ

    ʹIlaa firʻawna wa-malaʹihee fattabaʻooo ʹamra Firʻawna, wa-maaa ʹamru Firʻawna bi-Rasheed.

    ஃபிர்அவ்னிடமும் அவனுடைய கூட்டத்தாரிடமும் (அனுப்பினோம்). ஃபிர்அவ்னுடைய கட்டளையை (அவனுடைய கூட்டத்தினர்) பின்பற்றிக் கொண்டிருந்தனர். ஃபிர்அவ்னுடைய கட்டளையோ நேரான வழியில் இருக்கவில்லை.

  94. 11:98

    يَقْدُمُ قَوْمَهُۥ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ فَأَوْرَدَهُمُ ٱلنَّارَ ۖ وَبِئْسَ ٱلْوِرْدُ ٱلْمَوْرُودُ

    Yaq̣dumu q̣awmahoo Yawmal Q̣iyaamati faʹawradahumun Naar: wa-biʹsal wirdul mawrood!

    மறுமை நாளில் அவன் தன் மக்களுக்கு முன் (வழிகாட்டியாகச்) சென்று அவர்களை நரகத்தில் சேர்ப்பான். அவர்கள் செல்லுமிடம் மிகக் கெட்டது.

  95. 11:99

    وَأُتْبِعُوا۟ فِى هَـٰذِهِۦ لَعْنَةً وَيَوْمَ ٱلْقِيَـٰمَةِ ۚ بِئْسَ ٱلرِّفْدُ ٱلْمَرْفُودُ

    Wa-ʹutbiʻoo fee haaẓihee laʻnatañw wa-Yawmal Q̣iyaamah: biʹsar rifdul marfood!

    இம்மையிலும் மறுமையிலும் சாபம் அவர்களைப் பின்தொடர்கிறது. அவர்களுக்குக் கிடைக்கும் சன்மானம் மிகக் கெட்டது.

  96. 11:100

    ذَٰلِكَ مِنْ أَنۢبَآءِ ٱلْقُرَىٰ نَقُصُّهُۥ عَلَيْكَ ۖ مِنْهَا قَآئِمٌ وَحَصِيدٌ

    Ẓaalika min ʹambaaaʹil q̣uraa naq̣uṣṣuhoo ʻalayka minhaa q̣aaaʹimuñw waḥaṣeed.

    (மேலே கூறிய) இவை சில ஊர்(வாசி)களின் சரித்திரங்களாகும். இவற்றை நாம் உங்களுக்குக் கூறினோம். இவற்றில் சில (இப்போதும்) இருக்கின்றன; சில அழிந்து விட்டன.

  97. 11:101

    وَمَا ظَلَمْنَـٰهُمْ وَلَـٰكِن ظَلَمُوٓا۟ أَنفُسَهُمْ ۖ فَمَآ أَغْنَتْ عَنْهُمْ ءَالِهَتُهُمُ ٱلَّتِى يَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ مِن شَىْءٍ لَّمَّا جَآءَ أَمْرُ رَبِّكَ ۖ وَمَا زَادُوهُمْ غَيْرَ تَتْبِيبٍ

    Wa-maa z̤̣alamnaahum wa-laakiñ z̤̣alamooo ʹañfusahum famaaa ʹag̣nat ʻanhum ʹaalihatuhumul latee yadʻoona miñ doonil laahi miñ shayʹil lammaa jaaaʹa ʹamru Rabbik: wa-maa zaadoohum g̣ayra tatbeeb!

    இவர்களில் எவருக்குமே நாம் தீங்கிழைக்கவில்லை. எனினும், அவர்களே தங்களுக்கு தீங்கிழைத்துக் கொண்டனர். உங்கள் இறைவனின் வேதனை வந்த சமயத்தில் அல்லாஹ்வை தவிர்த்து அவர்கள் அழைத்துக் கொண்டிருந்த தெய்வங்களில் ஒன்றுமே அவர்களுக்கு ஒரு பயனும் அளிக்கவில்லை; மேலும், நஷ்டத்தையே அவை அவர்களுக்கு அதிகப்படுத்தின!

  98. 11:102

    وَكَذَٰلِكَ أَخْذُ رَبِّكَ إِذَآ أَخَذَ ٱلْقُرَىٰ وَهِىَ ظَـٰلِمَةٌ ۚ إِنَّ أَخْذَهُۥٓ أَلِيمٌ شَدِيدٌ

    Wa-Kaẓaalika ʹakhẓu Rabbika ʹiẓaaa ʹakhaẓal q̣uraa wa-hiya z̤̣aalimah: ʹinna ʹakhẓahooo ʹaleemuñ shadeed.

    அநியாயம் செய்கின்ற ஊராரை அவர்களின் அநியாயத்தின் காரணமாக உம் இறைவன் பிடிக்கக் கருதினால் இவ்வாறே அவன் பிடித்துக் கொள்கிறான். ஏனென்றால், நிச்சயமாக அவனுடைய பிடி மிக்க கடினமானதும் துன்புறுத்தக் கூடியதும் ஆகும்.

  99. 11:103

    إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً لِّمَنْ خَافَ عَذَابَ ٱلْـَٔاخِرَةِ ۚ ذَٰلِكَ يَوْمٌ مَّجْمُوعٌ لَّهُ ٱلنَّاسُ وَذَٰلِكَ يَوْمٌ مَّشْهُودٌ

    ʹInna fee ẓaalika laʹAayatal liman khaafa ʻaẓaabal ʹAakhirah: ẓaalika Yawmum majmooʻul lahun naasu waẓaalika Yawmum Mashhood.

    மறுமையின் வேதனையைப் பயப்படக்கூடியவருக்கு நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்க்கப்படும் நாளாகும் அது. அவர்கள் அனைவரும் (இறைவனின் முன்னால்) கொண்டு வரப்படக்கூடிய நாளுமாகும் அது.

  100. 11:104

    وَمَا نُؤَخِّرُهُۥٓ إِلَّا لِأَجَلٍ مَّعْدُودٍ

    Wa-maa nuʹakhkhiruhooo ʹillaa liʹajalim maʻdood.

    ஒரு சொற்ப தவணைக்கே தவிர அதை நாம் பிற்படுத்தி வைக்கவில்லை.

  101. 11:105

    يَوْمَ يَأْتِ لَا تَكَلَّمُ نَفْسٌ إِلَّا بِإِذْنِهِۦ ۚ فَمِنْهُمْ شَقِىٌّ وَسَعِيدٌ

    Yawma yaʹti laa- takallamu nafsun ʹillaa biʹiẓnih: faminhum shaq̣iyyuñw wasaʻeed.

    அது வரும் நாளில் அவனுடைய அனுமதியின்றி எந்த ஒரு மனிதனும் (அவனுடன்) பேசமுடியாது. அவர்களில் துர்ப்பாக்கியவான்களும் உள்ளனர்; நற்பாக்கியவான்களும் உள்ளனர்.

  102. 11:106

    فَأَمَّا ٱلَّذِينَ شَقُوا۟ فَفِى ٱلنَّارِ لَهُمْ فِيهَا زَفِيرٌ وَشَهِيقٌ

    Faʹammal laẓeena shaq̣oo fafin naari lahum feehaa zafeeruñw washaheeq̣.

    துர்ப்பாக்கியவான்கள் நரகத்தில் வீழ்த்தப்படுவார்கள். (வேதனையைத் தாங்க முடியாமல்) அதில் அவர்கள் பெரும் கூச்சலிட்டுக் கதறுவார்கள்.

  103. 11:107

    خَـٰلِدِينَ فِيهَا مَا دَامَتِ ٱلسَّمَـٰوَٰتُ وَٱلْأَرْضُ إِلَّا مَا شَآءَ رَبُّكَ ۚ إِنَّ رَبَّكَ فَعَّالٌ لِّمَا يُرِيدُ

    Khaalideena feehaa maa- daamatis samaawaatu wal-ʹarḍu ʹillaa maa- shaaaʹa Rabbuk: ʹinna Rabbaka faʻ-ʻaalul limaa yureed.

    உமது இறைவன் நாடினாலன்றி வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் காலம் வரை அதில் அவர்கள் தங்கியும் விடுவார்கள். நிச்சயமாக உமது இறைவன், தான் விரும்பியவற்றை (தடையின்றி) செய்து முடிப்பவன்.

  104. 11:108

    ۞ وَأَمَّا ٱلَّذِينَ سُعِدُوا۟ فَفِى ٱلْجَنَّةِ خَـٰلِدِينَ فِيهَا مَا دَامَتِ ٱلسَّمَـٰوَٰتُ وَٱلْأَرْضُ إِلَّا مَا شَآءَ رَبُّكَ ۖ عَطَآءً غَيْرَ مَجْذُوذٍ

    Wa-ʹammal laẓeena suʻidoo fafil Jannati khaalideena feehaa maa- daamatis samaawaatu wal-ʹarḍu ʹillaa maa- shaaaʹa Rabbuk: ʻaṭaaaʹan g̣ayra majẓooẓ.

    நற்பாக்கியவான்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். உமது இறைவன் நாடினாலன்றி வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் காலம் வரை அதில்தான் அவர்கள் தங்கி விடுவார்கள். (அது) முடிவுறாத (என்றும் நிலையான) ஓர் அருட்கொடையாகும்.

  105. 11:109

    فَلَا تَكُ فِى مِرْيَةٍ مِّمَّا يَعْبُدُ هَـٰٓؤُلَآءِ ۚ مَا يَعْبُدُونَ إِلَّا كَمَا يَعْبُدُ ءَابَآؤُهُم مِّن قَبْلُ ۚ وَإِنَّا لَمُوَفُّوهُمْ نَصِيبَهُمْ غَيْرَ مَنقُوصٍ

    Falaa taku fee miryatim mimmaa yaʻbudu haaaʹulaaaʹ. Maa- yaʻbudoona ʹillaa kamaa yaʻbudu ʹaabaaaʹuhum miñ q̣abl: wa-ʹinnaa lamuwaffoohum naṣeebahum g̣ayra mañq̣ooṣ.

    (நபியே! இணைவைத்து வணங்கும்) இவர்கள் வணங்குபவற்றைப் பற்றி (இவர்களிடம் ஏதும் ஆதாரம் இருக்குமோ என்று) நீர் சந்தேகப்பட வேண்டாம். (ஓர் ஆதாரமுமில்லை. எனினும்,) இதற்கு முன்னர் இவர்களுடைய மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்தது போன்றே இவர்களும் (ஆதாரம் எதுவுமின்றியே) வணங்குகின்றனர். இவர்களுடைய (வேதனையின்) பாகத்தை (இவர்களுடைய மூதாதைகளுக்குக் கொடுத்து இருந்தவாறே) இவர்களுக்கும் முழுமையாக ஒரு குறைவுமின்றி நிச்சயமாக நாம் கொடுப்போம்.

  106. 11:110

    وَلَقَدْ ءَاتَيْنَا مُوسَى ٱلْكِتَـٰبَ فَٱخْتُلِفَ فِيهِ ۚ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِن رَّبِّكَ لَقُضِىَ بَيْنَهُمْ ۚ وَإِنَّهُمْ لَفِى شَكٍّ مِّنْهُ مُرِيبٍ

    Wa-laq̣ad ʹaataynaa Moosal Kitaaba fakhtulifa feeh: wa-lawlaa kalimatuñ sabaq̣at mir Rabbika laq̣uḍiya baynahum: wa-ʹinnahum lafee shakkim minhu mureeb.

    நிச்சயமாக நாம் மூஸாவுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்திருந்தோம். (இந்தக் குர்ஆனில் இவர்கள் மாறுபடுகின்றவாறே) அதிலும் அவர்கள் மாறுபட்டார்கள். (அவர்கள் தண்டனை பெறுகின்ற காலம் மறுமைதான் என்று) உங்கள் இறைவனின் வாக்கு முன்னரே ஏற்பட்டிராவிடில் (இம்மையிலேயே) இவர்களுடைய காரியம் முடிவு பெற்றிருக்கும். நிச்சயமாக (மக்காவாசிகளாகிய) இவர்களும் (இந்தக் குர்ஆனைப் பற்றிக் குழப்பமான) சந்தேகத்தில் இருக்கின்றனர்.

  107. 11:111

    وَإِنَّ كُلًّا لَّمَّا لَيُوَفِّيَنَّهُمْ رَبُّكَ أَعْمَـٰلَهُمْ ۚ إِنَّهُۥ بِمَا يَعْمَلُونَ خَبِيرٌ

    Wa-ʹinna kullal lammaa layuwaffiyannahum Rabbuka ʹaʻmaalahum: ʹinnahoo bimaa yaʻmaloona Khabeer.

    நிச்சயமாக உமது இறைவன் (அவர்கள் ஒவ்வொருவருக்கும்) அவர்களுடைய செய்கைக்குரிய கூலியை முழுமையாகவே கொடுப்பான். நிச்சயமாக அவன் அவர்கள் செய்வதை நன்கறிந்தவன் ஆவான்.

  108. 11:112

    فَٱسْتَقِمْ كَمَآ أُمِرْتَ وَمَن تَابَ مَعَكَ وَلَا تَطْغَوْا۟ ۚ إِنَّهُۥ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ

    Fastaq̣im kamaaa ʹumirta wa-mañ taaba maʻaka wa-laa taṭg̣aw: ʹinnahoo bimaa taʻmaloona Baṣeer.

    ஆகவே, (நபியே!) உமக்கு ஏவப்பட்டது போன்றே, நீரும் இணை வைத்து வணங்குவதிலிருந்து விலகி உம்முடன் இருப்பவரும் (நேரான வழியில்) உறுதியாக இருங்கள். (இதில்) சிறிதும் தவறி விடாதீர்கள். நிச்சயமாக அவன் உங்கள் செயலை உற்று நோக்குபவன் ஆவான்.

  109. 11:113

    وَلَا تَرْكَنُوٓا۟ إِلَى ٱلَّذِينَ ظَلَمُوا۟ فَتَمَسَّكُمُ ٱلنَّارُ وَمَا لَكُم مِّن دُونِ ٱللَّهِ مِنْ أَوْلِيَآءَ ثُمَّ لَا تُنصَرُونَ

    Wa-laa tarkanooo ʹilal laẓeena z̤̣alamoo fatamassakumun Naaru,― wa-maa lakum miñ doonil laahi min ʹawliyaaaʹa s̤umma laa- tuñṣaroon.

    (நம்பிக்கையாளர்களே!) வரம்பு மீறுபவர்கள் பக்கம் நீங்கள் (சிறிதும்) சாய்ந்து விடாதீர்கள். (அவ்வாறாயின்) நரக நெருப்பு உங்களையும் பிடித்துக் கொள்ளும். அதிலிருந்து உங்களைப் பாதுகாப்பவர் அல்லாஹ்வைத் தவிர (வேறு) யாருமில்லை; பின்னர், எவருடைய உதவியும் உங்களுக்குக் கிடைக்காது.

  110. 11:114

    وَأَقِمِ ٱلصَّلَوٰةَ طَرَفَىِ ٱلنَّهَارِ وَزُلَفًا مِّنَ ٱلَّيْلِ ۚ إِنَّ ٱلْحَسَنَـٰتِ يُذْهِبْنَ ٱلسَّيِّـَٔاتِ ۚ ذَٰلِكَ ذِكْرَىٰ لِلذَّٰكِرِينَ

    Wa-ʹaq̣imiṣ Ṣalaata ṭarafayin nahaari wa-zulafam minal layl: ʹinnal ḥasanaati yuẓhibnas sayyiʹaat: ẓaalika ẓikraa liẓ-ẓaakireen:

    பகலில் இரு முனை(களாகிய காலை, மாலை)களிலும், இரவில் ஒரு பாகத்திலும், நீர் (தவறாது) தொழுது வருவீராக. நிச்சயமாக நன்மைகள் பாவங்களைப் போக்கிவிடும். இறைவனைத் துதி செய்து புகழ்பவர்களுக்கு இது ஒரு நினைவூட்டுதலாகும்.

  111. 11:115

    وَٱصْبِرْ فَإِنَّ ٱللَّهَ لَا يُضِيعُ أَجْرَ ٱلْمُحْسِنِينَ

    Waṣbir faʹinnal laaha laa- yuḍeeʻu ʹajral Muḥsineen.

    (நபியே! துன்பங்களைப்) பொறுமையுடன் சகித்திருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்தவர்களின் கூலியை வீணாக்கிவிட மாட்டான்.

  112. 11:116

    فَلَوْلَا كَانَ مِنَ ٱلْقُرُونِ مِن قَبْلِكُمْ أُو۟لُوا۟ بَقِيَّةٍ يَنْهَوْنَ عَنِ ٱلْفَسَادِ فِى ٱلْأَرْضِ إِلَّا قَلِيلًا مِّمَّنْ أَنجَيْنَا مِنْهُمْ ۗ وَٱتَّبَعَ ٱلَّذِينَ ظَلَمُوا۟ مَآ أُتْرِفُوا۟ فِيهِ وَكَانُوا۟ مُجْرِمِينَ

    Falawlaa kaana minal q̣urooni miñ q̣ablikum ʹUloo baq̣iyyatiñy yanhawna ʻanil fasaadi fil ʹarḍi ʹillaa q̣aleelam mimman ʹañjaynaa minhum? Wattabaʻal laẓeena z̤̣alamoo maaa ʹutrifoo feehi wa-kaanoo mujrimeen.

    உங்களுக்கு முன்னிருந்த சந்ததிகளில் (தாங்களும் நல்லொழுக்கத்தைக் கடைபிடித்து மற்ற மனிதர்களும்) பூமியில் விஷமம் செய்யாது தடுத்து வரக்கூடிய அறிவாளிகள் (அதிகமாக) இருந்திருக்க வேண்டாமா? அவர்கள் ஒரு சொற்ப எண்ணிக்கையில்தான் இருந்தனர். நாம் அவர்களை பாதுகாத்துக் கொண்டோம். ஆனால், (பெரும்பாலான) அநியாயக்காரர்களோ தங்கள் ஆசாபாசங்களைப் பின்பற்றிக் குற்றம் செய்பவர்களாகவே இருந்தனர்.

  113. 11:117

    وَمَا كَانَ رَبُّكَ لِيُهْلِكَ ٱلْقُرَىٰ بِظُلْمٍ وَأَهْلُهَا مُصْلِحُونَ

    Wa-maa kaana Rabbuka liyuhlikal q̣uraa biz̤̣ulmiñw waʹahluhaa muṣliḥoon.

    (நபியே!) ஓர் ஊராரில் சிலர் (மற்றவர்களைப் பாவம் செய்யாது) சீர்திருத்திக் கொண்டிருக்கும் வரை (மற்ற) சிலரின் அநியாயத்திற்காக அவ்வூரார் அனைவரையும் உமது இறைவன் அழித்துவிட மாட்டான்.

  114. 11:118

    وَلَوْ شَآءَ رَبُّكَ لَجَعَلَ ٱلنَّاسَ أُمَّةً وَٰحِدَةً ۖ وَلَا يَزَالُونَ مُخْتَلِفِينَ

    Wa-law shaaaʹa Rabbuka lajaʻal annaasa ʹUmmatañw waa-ḥidatañw walaa yazaaloona mukhtalifeen.

    உமது இறைவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் ஒரே வகுப்பினராக ஆக்கியிருப்பான். (அவ்வாறு நாடவில்லை.) அவர்கள் தங்களுக்குள் மாறுபட்டுக் கொண்டேயிருப்பார்கள்.

  115. 11:119

    إِلَّا مَن رَّحِمَ رَبُّكَ ۚ وَلِذَٰلِكَ خَلَقَهُمْ ۗ وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ لَأَمْلَأَنَّ جَهَنَّمَ مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ أَجْمَعِينَ

    ʹIllaa mar raḥima Rabbuk: wa-liẓaalika khalaq̣ahum: wa-tammat Kalimatu Rabbika laʹamlaʹanna Jahannama minal jinnati wannaasi ʹajmaʻeen.

    அவர்களில் உமது இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர. (அவர்கள் மார்க்கத்தில் முரண்பட மாட்டார்கள்) இதற்காகவே அவர்களைப் படைத்தும் இருக்கிறான். (பாவம் செய்த) ‘‘ஜின்களைக் கொண்டும் மனிதர்களைக் கொண்டும் நிச்சயமாக நான் நரகத்தை நிரப்புவேன்'' என்ற உமது இறைவனின் வாக்கு நிறைவேறியே தீரும்.

  116. 11:120

    وَكُلًّا نَّقُصُّ عَلَيْكَ مِنْ أَنۢبَآءِ ٱلرُّسُلِ مَا نُثَبِّتُ بِهِۦ فُؤَادَكَ ۚ وَجَآءَكَ فِى هَـٰذِهِ ٱلْحَقُّ وَمَوْعِظَةٌ وَذِكْرَىٰ لِلْمُؤْمِنِينَ

    Wa-kullan naq̣uṣṣu ʻalayka min ʹambaaaʹir rusuli maa- nus̤abbitu bihee fuʹaadak: wa-jaaaʹaka fee haaẓihil Ḥaq̣q̣u wa-mawʻiz̤̣atuñw waẓikraa lil-Muʹmineen.

    உமது உள்ளத்தைத் திடப்படுத்துவதற்காகவே, நம் தூதர்களின் சரித்திரங்களிலிருந்து இவை அனைத்தையும் நாம் உமக்குக் கூறினோம். இவற்றில் உங்களுக்கு உண்மையும், நல்லுபதேசமும் நம்பிக்கையாளர்களுக்கு அறிவுரையும் இருக்கின்றன.

  117. 11:121

    وَقُل لِّلَّذِينَ لَا يُؤْمِنُونَ ٱعْمَلُوا۟ عَلَىٰ مَكَانَتِكُمْ إِنَّا عَـٰمِلُونَ

    Waq̣ul lillaẓeena laa- yuʹminoo naʻmaloo ʻalaa makaanatikum: ʹinnaa ʻaamiloon;

    நம்பிக்கை கொள்ளாதவர்களை நோக்கி (நபியே!) கூறுவீராக: ‘‘நீங்கள் உங்கள் போக்கில் (உங்கள் காரியங்களைச்) செய்து கொண்டிருங்கள்; நிச்சயமாக நாங்களும் (எங்கள் போக்கில்) செய்து கொண்டிருக்கிறோம்.

  118. 11:122

    وَٱنتَظِرُوٓا۟ إِنَّا مُنتَظِرُونَ

    Wañtaz̤̣iroo! ʹinnaa muñ-taz̤̣iroon.

    நீங்களும் (இதன் முடிவை) எதிர்பார்த்திருங்கள்; நிச்சயமாக நாங்களும் (அதை) எதிர் பார்த்திருக்கிறோம்.

  119. 11:123

    وَلِلَّهِ غَيْبُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَإِلَيْهِ يُرْجَعُ ٱلْأَمْرُ كُلُّهُۥ فَٱعْبُدْهُ وَتَوَكَّلْ عَلَيْهِ ۚ وَمَا رَبُّكَ بِغَـٰفِلٍ عَمَّا تَعْمَلُونَ

    Wa-lillaahi g̣aybus samaawaati wal-ʹarḍi wa-ʹilayhi yurjaʻul ʹamru kulluhoo faʻbudhu wa-tawakkal ʻalayh: wa-maa Rabbuka big̣aafilin ʻammaa taʻmaloon.

    வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவை அனைத்தும் (அவற்றின் ஞானமும்) அல்லாஹ்வுக்குரியனவே! எல்லா காரியங்களும் அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படும். ஆதலால், அவன் ஒருவனையே நீர் வணங்குவீராக; அவனையே நம்புவீராக. உமது இறைவன் நீங்கள் செய்பவற்றைப் பற்றி பராமுகமாயில்லை.''

  120. Surah YusufBegins here at 12:1

  121. 12:1

    الٓر ۚ تِلْكَ ءَايَـٰتُ ٱلْكِتَـٰبِ ٱلْمُبِينِ

    Alif-Laaam-Raa. Tilka ʹAayaatul kitaabil Mubeen.

    அலிஃப் லாம் றா. இவை (-இந்த அத்தியாயம்) தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும்.

  122. 12:2

    إِنَّآ أَنزَلْنَـٰهُ قُرْءَٰنًا عَرَبِيًّا لَّعَلَّكُمْ تَعْقِلُونَ

    ʹInnaaa ʹañzalnaahu Q̣urʹaanan ʻArabiyyal laʻallakum taʻq̣iloon.

    (அரபிகளே!) நீங்கள் நன்கறிந்து கொள்வதற்காக குர்ஆன் என்னும் இவ்வேதத்தை நிச்சயமாக நாமே அரபி மொழியில் இறக்கி வைத்தோம்.

  123. 12:3

    نَحْنُ نَقُصُّ عَلَيْكَ أَحْسَنَ ٱلْقَصَصِ بِمَآ أَوْحَيْنَآ إِلَيْكَ هَـٰذَا ٱلْقُرْءَانَ وَإِن كُنتَ مِن قَبْلِهِۦ لَمِنَ ٱلْغَـٰفِلِينَ

    Naḥnu naq̣uṣṣu ʻalayka ʹaḥsanal q̣aṣaṣi bimaaa ʹawḥaynaaa ʹilayka haaẓal Q̣urʹaan: wa-ʹiñ kuñta miñ q̣ablihee laminal g̣aafileen.

    (நபியே!) வஹ்யி மூலம் நாம் உமக்கு அறிவிக்கும் இந்தக் குர்ஆனின் மூலம் சரித்திரங்களில் மிக்க அழகானதொன்றை உமக்கு நாம் விவரிக்கிறோம். இதற்கு முன்னர் நிச்சயமாக நீர் இதை அறியாதவராகவே இருந்தீர்.

  124. 12:4

    إِذْ قَالَ يُوسُفُ لِأَبِيهِ يَـٰٓأَبَتِ إِنِّى رَأَيْتُ أَحَدَ عَشَرَ كَوْكَبًا وَٱلشَّمْسَ وَٱلْقَمَرَ رَأَيْتُهُمْ لِى سَـٰجِدِينَ

    ʹIẓ q̣aala Yoosufu liʹabeehi yaaaʹabati ʹinnee raʹaytu ʹaḥada ʻashara kawkabañw washshamsa walq̣amara raʹaytuhum lee saajideen.

    யூஸுஃப் (நபி, யஅகூப் நபியாகிய) தன் தந்தையை நோக்கி ‘‘என் தந்தையே! பதினொரு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் எனக்குச் சிரம் பணிய மெய்யாகவே நான் (கனவு) கண்டேன்'' என்று கூறிய சமயத்தில்,

  125. 12:5

    قَالَ يَـٰبُنَىَّ لَا تَقْصُصْ رُءْيَاكَ عَلَىٰٓ إِخْوَتِكَ فَيَكِيدُوا۟ لَكَ كَيْدًا ۖ إِنَّ ٱلشَّيْطَـٰنَ لِلْإِنسَـٰنِ عَدُوٌّ مُّبِينٌ

    Q̣aala yaa-bunayya laa- taq̣ṣuṣ ruʹyaaka ʻalaaa ʹikhwatika fayakeedoo laka kaydaa! ʹInnash shayṭaana lil-ʹiñsaani ʻaduwwum mubeen!

    (யஅகூப் நபி யூஸுஃபை நோக்கி) ‘‘என் அருமைக் குழந்தையே! நீ கண்ட கனவை உன் சகோதரர்களிடம் கூறாதே. (அவ்வாறு கூறினால்,) அவர்கள் உனக்கு யாதேனும் தீங்கிழைக்கச் சதி செய்வார்கள். ஏனெனில், நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான எதிரி ஆவான். (சதி செய்யுமாறு அவர்களை அவன் தூண்டக் கூடும்)'' என்று கூறினார்.

  126. 12:6

    وَكَذَٰلِكَ يَجْتَبِيكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِن تَأْوِيلِ ٱلْأَحَادِيثِ وَيُتِمُّ نِعْمَتَهُۥ عَلَيْكَ وَعَلَىٰٓ ءَالِ يَعْقُوبَ كَمَآ أَتَمَّهَا عَلَىٰٓ أَبَوَيْكَ مِن قَبْلُ إِبْرَٰهِيمَ وَإِسْحَـٰقَ ۚ إِنَّ رَبَّكَ عَلِيمٌ حَكِيمٌ

    Wa-kaẓaalika yajtabeeka Rabbuka wa-yuʻallimuka miñ taʹweelil ʹaḥaadees̤i wa-yutimmu niʻmatahoo ʻalayka wa-ʻalaaa ʹaali Yaʻq̣ooba kamaaa ʹatammahaa ʻalaaa ʹabawayka miñ q̣ablu ʹIbraaheema wa-ʹisḥaaq̣! ʹInna Rabbaka ʻAleemun Ḥakeem.

    மேலும், ‘‘(நீ கனவில் கண்ட) இவ்வாறே உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் வியாக்கியானங்களையும் உனக்குக் கற்றுக் கொடுத்து, உன் மீதும், யஅகூபின் (மற்ற) சந்ததிகள் மீதும் அவன் தன் அருளை முழுமையாக்கி வைப்பான். இவ்வாறே இப்றாஹீம், இஸ்ஹாக் ஆகிய உன் இரு மூதாதைகள் மீதும் தன் அருளை முழுமைப்படுத்தி வைத்தான். நிச்சயமாக உன் இறைவன் (அனைத்தையும்) நன்கறிந்தவன், ஞானமுடையவன் ஆவான்'' (என்றும் கூறினார்).

  127. 12:7

    ۞ لَّقَدْ كَانَ فِى يُوسُفَ وَإِخْوَتِهِۦٓ ءَايَـٰتٌ لِّلسَّآئِلِينَ

    Laq̣ad kaana fee yoosufa wa-ʹikhwatihee ʹAayaatul lissaaaʹileen.

    (நபியே!) நிச்சயமாக யூஸுஃப் மற்றும் அவரது சகோதரர்களுடைய சரித்திரத்தைப் பற்றி வினவுகின்ற (யூதர்களாகிய இ)வர்களுக்கு இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன.

  128. 12:8

    إِذْ قَالُوا۟ لَيُوسُفُ وَأَخُوهُ أَحَبُّ إِلَىٰٓ أَبِينَا مِنَّا وَنَحْنُ عُصْبَةٌ إِنَّ أَبَانَا لَفِى ضَلَـٰلٍ مُّبِينٍ

    ʹIẓ q̣aaloo la-Yoosufu wa-ʹakhoohu ʹaḥabbu ʹilaaa ʹabeenaa minnaa wa-naḥnu ʻuṣbah! ʹInna ʹabaanaa lafee ḍalaalim mubeen!

    (யஅகூப் நபி தன் பன்னிரண்டு மகன்களில் யூஸுஃபையும், புன்யாமீனையும் அதிகமாக நேசிப்பதைக் கண்ணுற்ற மற்ற மகன்கள் பொறாமை கொண்டு) நாம் பலசாலிகளாக இருந்தும் யூஸுஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கின்றனர். (இதில்) நம் தந்தை நிச்சயமாக பகிரங்கமான தவறில் இருக்கிறார்'' என்றும்,

  129. 12:9

    ٱقْتُلُوا۟ يُوسُفَ أَوِ ٱطْرَحُوهُ أَرْضًا يَخْلُ لَكُمْ وَجْهُ أَبِيكُمْ وَتَكُونُوا۟ مِنۢ بَعْدِهِۦ قَوْمًا صَـٰلِحِينَ

    ʹUq̣tuloo Yoosufa ʹawiṭra ḥoohu ʹarḍañy yakhlu lakum wajhu ʹabeekum wa-takoonoo mim baʻdihee q̣awmañ ṣaaliḥeen!

    ஆகவே, ‘‘யூஸுஃபைக் கொலை செய்து விடுங்கள். அல்லது பூமியில் எங்கேனும் அப்புறப்படுத்தி விடுங்கள். (அதன் பின்) உங்கள் தந்தையின் பார்வை முற்றிலும் உங்கள் பக்கமே இருக்கும். இதன் பின்னர், நீங்கள் (இறைவனிடம் மன்னிப்புத் தேடிக்கொண்டு) நல்ல மக்களாகி விடுங்கள்'' என்றும் கூறினார்கள்.

  130. 12:10

    قَالَ قَآئِلٌ مِّنْهُمْ لَا تَقْتُلُوا۟ يُوسُفَ وَأَلْقُوهُ فِى غَيَـٰبَتِ ٱلْجُبِّ يَلْتَقِطْهُ بَعْضُ ٱلسَّيَّارَةِ إِن كُنتُمْ فَـٰعِلِينَ

    Q̣aala q̣aaaʹilum minhum laa- taq̣tuloo Yoosufa wa-ʹalq̣oohu fee g̣ayaabatil jubbi yaltaq̣iṭhu baʻḍus say-yaarati ʹiñ kuñtum faa-ʻileen.

    (அதற்கு) அவர்களில் ஒருவர், ‘‘யூஸுஃபை நீங்கள் கொலை செய்யாதீர்கள். நீங்கள் அவருக்கு ஏதும் (கெடுதல்) செய்தே தீர வேண்டுமென்று கருதினால், ஆழமான ஒரு பாழ்கிணற்றில் அவரை எறிந்து விடுங்கள். வழிப்போக்கரில் எவரேனும் அவரை (கிணற்றில் இருந்து) எடுத்துக் கொள்ளக்கூடும்'' என்று கூறினார்.

  131. 12:11

    قَالُوا۟ يَـٰٓأَبَانَا مَا لَكَ لَا تَأْمَ۫نَّا عَلَىٰ يُوسُفَ وَإِنَّا لَهُۥ لَنَـٰصِحُونَ

    Q̣aaloo yaaaʹabaanaa maa- laka laa- taʹmannaa ʻalaa Yoosufa wa-ʹinnaa lahoo lanaaṣiḥoon?

    (பின்னர் அவர்கள் தங்கள் தந்தையிடம் வந்து,) ‘‘எங்கள் தந்தையே! என்ன காரணத்தால் யூஸுஃபைப் பற்றி நீங்கள் எங்களை நம்புவதில்லை? நாங்களோ, மெய்யாகவே அவருக்கு நன்மையை நாடுபவர்கள் ஆவோம்'' என்றும்,

  132. 12:12

    أَرْسِلْهُ مَعَنَا غَدًا يَرْتَعْ وَيَلْعَبْ وَإِنَّا لَهُۥ لَحَـٰفِظُونَ

    ʹArsilhu maʻanaa g̣adañy yartaʻwa- yalʻab wa-ʹinnaa lahoo laḥaafiz̤̣oon.

    ‘‘நாளைய தினம் அவரை எங்களுடன் அனுப்பிவையுங்கள். அவர் (காட்டிலுள்ள கனிகளைப்) புசித்துக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருப்பார். நிச்சயமாக நாங்கள் அவரைப் பாதுகாத்துக் கொள்வோம்'' என்றும் கூறினார்கள்.

  133. 12:13

    قَالَ إِنِّى لَيَحْزُنُنِىٓ أَن تَذْهَبُوا۟ بِهِۦ وَأَخَافُ أَن يَأْكُلَهُ ٱلذِّئْبُ وَأَنتُمْ عَنْهُ غَـٰفِلُونَ

    Q̣aala ʹinnee layaḥzununeee ʹañ taẓhaboo bihee wa-ʹakhaafu ʹañy yaʹkulahuẓ ẓiʹbu wa-ʹañtum ʻanhu g̣aafiloon.

    (அதற்கவர்) ‘‘நீங்கள் அவரை அழைத்துச் செல்வது எனக்குத் துக்கத்தை உண்டு பண்ணிவிடும். நீங்கள் (விளையாடிக் கொண்டு) அவரை மறந்து பராமுகமாய் இருக்கும் சமயத்தில் ஓநாய் அவரை (அடித்துத்) தின்றுவிடும் என்றும் நான் பயப்படுகிறேன்'' என்று கூறினார்.

  134. 12:14

    قَالُوا۟ لَئِنْ أَكَلَهُ ٱلذِّئْبُ وَنَحْنُ عُصْبَةٌ إِنَّآ إِذًا لَّخَـٰسِرُونَ

    Q̣aaloo laʹin ʹakalahuẓ ẓiʹbu wa-naḥnu ʻuṣbatun ʹinnaaa ʹiẓal lakhaasiroon!

    அதற்கவர்கள், ‘‘பலசாலிகளான நாங்கள் இருந்தும் அவரை ஒரு ஓநாய் தின்பதென்றால் அப்போது நிச்சயமாக நாங்கள் நஷ்டவாளிகள் ஆகிவிடுவோம்'' என்று கூறி (தங்கள் தந்தையை சம்மதிக்கச் செய்த)னர்.

  135. 12:15

    فَلَمَّا ذَهَبُوا۟ بِهِۦ وَأَجْمَعُوٓا۟ أَن يَجْعَلُوهُ فِى غَيَـٰبَتِ ٱلْجُبِّ ۚ وَأَوْحَيْنَآ إِلَيْهِ لَتُنَبِّئَنَّهُم بِأَمْرِهِمْ هَـٰذَا وَهُمْ لَا يَشْعُرُونَ

    Falammaa ẓahaboo bihee wa-ʹajmaʻooo ʹañy yajʻaloohu fee g̣ayaabatil jubb: wa-ʹawḥaynaaa ʹilayhi latunabbiʹannahum̃ biʹamrihim haaẓaa wahum laa- yashʻuroon.

    (யூஸுஃபை) அழைத்துச் சென்று, அவரை ஆழமான ஒரு பாழ்கிணற்றில் எறிந்துவிட வேண்டுமென்றே அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முடிவு கட்டி (எறிந்தும் விட்ட)னர். ‘‘அவர்களுடைய இச்செயலைப் பற்றி (ஒரு காலத்தில்) நீர் அவர்களுக்கு அறிவுறுத்துவீர். அப்பொழுது அவர்கள் (உங்களை) அறிந்து கொள்ளவும் மாட்டார்கள்'' என்று நாம் யூஸுஃபுக்கு வஹ்யி அறிவித்தோம்.

  136. 12:16

    وَجَآءُوٓ أَبَاهُمْ عِشَآءً يَبْكُونَ

    Wa-jaaaʹooo ʹabaahum ʻishaaaʹañy yabkoon.

    அன்று பொழுதடைந்தபின், அவர்கள் தங்கள் தந்தையிடம் அழுது கொண்டே வந்தனர்,

  137. 12:17

    قَالُوا۟ يَـٰٓأَبَانَآ إِنَّا ذَهَبْنَا نَسْتَبِقُ وَتَرَكْنَا يُوسُفَ عِندَ مَتَـٰعِنَا فَأَكَلَهُ ٱلذِّئْبُ ۖ وَمَآ أَنتَ بِمُؤْمِنٍ لَّنَا وَلَوْ كُنَّا صَـٰدِقِينَ

    Q̣aaloo yaaaʹabaanaaa ʹinnaa ẓahabnaa nastabiq̣u wa-taraknaa Yoosufa ʻiñda mataaʻinaa faʹakalahuẓ ẓiʹb. Wa-maaa ʹañta bimuʹminil lanaa wa-law kunnaa ṣaadiq̣een.

    ‘‘எங்கள் தந்தையே! நிச்சயமாக யூஸுஃபை எங்கள் சாமான்களிடம் விட்டுவிட்டு ஓடி (விளையாடிக் கொண்டே வெகுதூரம் சென்று) விட்டோம். அச்சமயம் அவரை ஓநாய் (அடித்துத்) தின்றுவிட்டது. நாங்கள் (எவ்வளவு) உண்மை சொன்ன போதிலும் (அதை) நீங்கள் நம்பவே மாட்டீர்கள்'' என்று கூறினார்கள்.

  138. 12:18

    وَجَآءُو عَلَىٰ قَمِيصِهِۦ بِدَمٍ كَذِبٍ ۚ قَالَ بَلْ سَوَّلَتْ لَكُمْ أَنفُسُكُمْ أَمْرًا ۖ فَصَبْرٌ جَمِيلٌ ۖ وَٱللَّهُ ٱلْمُسْتَعَانُ عَلَىٰ مَا تَصِفُونَ

    Wa-jaaaʹoo ʻalaa q̣ameeṣihee bidamiñ kaẓib. Q̣aala bal sawwalat lakum ʹañfusukum ʹamraa. Faṣabruñ jameel: wallaahul Mustaʻaanu ʻalaa maa- taṣifoon.

    (தங்கள் தந்தைக்குக் காண்பிப்பதற்காக) அவருடைய சட்டையில் (ஆட்டின்) பொய்யான இரத்தத்தைத் தோய்த்துக் கொண்டு வந்(து காண்பித்)தார்கள். (இரத்தம் தோய்ந்த அச்சட்டைக் கிழியாதிருப்பதைக் கண்டு ‘‘அவரை ஓநாய் அடித்துத் தின்னவே) இல்லை'' உங்கள் மனம் ஒரு (தீய) காரியத்தை உங்களுக்கு அழகாகக் காண்பித்து விட்டது. (அவ்வாறு செய்து விட்டீர்கள்.) ஆகவே, (அத்துக்கத்தைச்) சகித்துக் கொள்வதுதான் நன்று. நீங்கள் கூறியவற்றில் (இருந்து யூஸுஃபை பாதுகாக்குமாறு) அல்லாஹ்விடம் உதவி தேடுகிறேன்'' என்று கூறினார்கள்.

  139. 12:19

    وَجَآءَتْ سَيَّارَةٌ فَأَرْسَلُوا۟ وَارِدَهُمْ فَأَدْلَىٰ دَلْوَهُۥ ۖ قَالَ يَـٰبُشْرَىٰ هَـٰذَا غُلَـٰمٌ ۚ وَأَسَرُّوهُ بِضَـٰعَةً ۚ وَٱللَّهُ عَلِيمٌۢ بِمَا يَعْمَلُونَ

    Wa-jaaaʹat sayyaaratuñ faʹarsaloo waaridahum faʹadlaa dalwah. Q̣aala yaa-bushraa haaẓaa g̣ulaam! Wa-ʹasarroohu biḍaaʻah! Wallaahu ʻaleemum bimaa yaʻmaloon!

    பின்னர் (கிணற்றின் சமீபமாக) ஒரு பயணக் கூட்டம் வந்தது. அவர்கள் தங்கள் பணியாளை (தண்ணீர் கொண்டு வர) அனுப்பினார்கள். அவன் தன் வாளியைக் (கிணற்றில்) விட்டான். (அதில் யூஸுஃப் உட்கார்ந்து கொண்டார். அதில் யூஸுஃப் இருப்பதைக் கண்டு ‘‘உங்களுக்கு) நற்செய்தி! இதோ (அழகிய) சிறுவர் ஒருவர்! என்று (யூஸுஃபைச் சுட்டிக் காட்டிக்) கூறினான். (அவரைக் கண்ணுற்ற அவர்கள்) தங்கள் வர்த்தகப்பொருளாக (ஆக்கிக் கொள்ளக் கருதி) அவரை மறைத்துக் கொண்டார்கள். அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிந்தவன் ஆவான்.

  140. 12:20

    وَشَرَوْهُ بِثَمَنٍۭ بَخْسٍ دَرَٰهِمَ مَعْدُودَةٍ وَكَانُوا۟ فِيهِ مِنَ ٱلزَّٰهِدِينَ

    Wa-sharawhu bis̤amanim bakhsiñ daraahima maʻdoodah: wa-kaanoo feehi minaz zaahideen!

    (இதற்குள் அவருடைய சகோதரர்கள் அங்கு வந்து ‘‘இவன் தப்பி ஓடி வந்து விட்ட எங்கள் அடிமை'' எனக் கூறி அவர்களிடமே) ஒரு சொற்ப தொகையான பணத்திற்கு விற்றுவிட்டார்கள். (ஏனென்றால், அவருடைய சகோதரர்கள்) அவரை மிக்க வெறுத்தவர்களாகவே இருந்தனர்.

  141. 12:21

    وَقَالَ ٱلَّذِى ٱشْتَرَىٰهُ مِن مِّصْرَ لِٱمْرَأَتِهِۦٓ أَكْرِمِى مَثْوَىٰهُ عَسَىٰٓ أَن يَنفَعَنَآ أَوْ نَتَّخِذَهُۥ وَلَدًا ۚ وَكَذَٰلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِى ٱلْأَرْضِ وَلِنُعَلِّمَهُۥ مِن تَأْوِيلِ ٱلْأَحَادِيثِ ۚ وَٱللَّهُ غَالِبٌ عَلَىٰٓ أَمْرِهِۦ وَلَـٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ

    Wa-q̣aalal laẓish taraahu mim Miṣra limraʹatiheee ʹakrimee mas̤waahu ʻasaaa ʹañy yañfaʻanaaa ʹaw nattakhiẓahoo waladaa. Wa-kaẓaalika mak-kannaa li-Yoosufa fil ʹarḍi, wa-linuʻallimahoo miñ taʹweelil ʹaḥaadees̤. Wallaahu g̣aalibun ʻalaaa ʹamrihee wa-laakinna ʹaks̤aran naasi laa yaʻlamoon.

    (அவரை வாங்கியவர்கள், அவரை எகிப்துக்குக் கொண்டு வந்து அந்நாட்டு அதிபதியிடம் விற்று விட்டனர்.) எகிப்தில் அவரை வாங்கியவர், தன் மனைவியை நோக்கி ‘‘நீ இவரை கண்ணியமாக வைத்துக்கொள்; அவரால் நாம் நன்மை அடையலாம்; அல்லது அவரை நாம் நம் (வளர்ப்பு) மகனாக்கிக் கொள்ளலாம்'' என்று கூறினார். யூஸுஃப் அவ்வூரில் ஆதிக்கம் செலுத்துவதற்காகவும் (முன்னர் அவர் கண்டது போன்ற) கனவுகளின் வியாக்கியானங்களை அவருக்குக் கற்பிப்பதற்காகவும் இவ்வாறு நாம் அவருக்கு வசதி செய்தோம். அல்லாஹ், தன் காரியத்தை நிறைவேற்றுவதில் (அனைவரையும்) மிகைத்தவன் ஆவான். ஆனால், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிய மாட்டார்கள்.

  142. 12:22

    وَلَمَّا بَلَغَ أَشُدَّهُۥٓ ءَاتَيْنَـٰهُ حُكْمًا وَعِلْمًا ۚ وَكَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ

    Wa-lammaa balag̣a ʹashuddahooo ʹaataynaahu ḥukmañw waʻilmaa: wa-kaẓaalika najzil Muḥsineen.

    அவர் தன் வாலிபத்தை அடைந்ததும், நாம் அவருக்கு ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம். நல்லொழுக்கமுடையவர்களுக்கு இவ்வாறு தான் நாம் கூலி தருகிறோம்.

  143. 12:23

    وَرَٰوَدَتْهُ ٱلَّتِى هُوَ فِى بَيْتِهَا عَن نَّفْسِهِۦ وَغَلَّقَتِ ٱلْأَبْوَٰبَ وَقَالَتْ هَيْتَ لَكَ ۚ قَالَ مَعَاذَ ٱللَّهِ ۖ إِنَّهُۥ رَبِّىٓ أَحْسَنَ مَثْوَاىَ ۖ إِنَّهُۥ لَا يُفْلِحُ ٱلظَّـٰلِمُونَ

    Wa-raawadat-hul latee huwa fee baytihaa ʻan nafsihee wa-g̣allaq̣atil ʹabwaaba wa-q̣aalat hayta lak! Q̣aala maʻaaẓal laahi ʹinnahoo rabbeee ʹaḥsana mas̤waay! Innahoo laa- yufliḥuz̤̣ z̤̣aalimoon!

    அவர் இருந்த வீட்டின் எஜமானி (அவரைக் காதலித்துத் தன்னை அலங்கரித்துக் கொண்டு) எல்லாக் கதவுகளையும் மூடிவிட்டு தன் விருப்பத்திற்கு இணங்குமாறு அவரை ‘வாரும்' என்றழைத்தாள். அதற்கவர், ‘‘(என்னை)அல்லாஹ் பாதுகாத்துக் கொள்வானாக! நிச்சயமாக என் எஜமானாகிய (உன் கண)வர் என்னை மிக்க (அன்பாகவும்) கண்ணியமாகவும் வைத்திருக்கிறார். (இத்தகைய நன்மை செய்பவர்களுக்குத் துரோகம் செய்யும்) அநியாயக்காரர்கள் நலம்பெற மாட்டார்கள்'' என்று கூறினார்.

  144. 12:24

    وَلَقَدْ هَمَّتْ بِهِۦ ۖ وَهَمَّ بِهَا لَوْلَآ أَن رَّءَا بُرْهَـٰنَ رَبِّهِۦ ۚ كَذَٰلِكَ لِنَصْرِفَ عَنْهُ ٱلسُّوٓءَ وَٱلْفَحْشَآءَ ۚ إِنَّهُۥ مِنْ عِبَادِنَا ٱلْمُخْلَصِينَ

    Wa-laq̣ad hammat bihee wa-hamma bihaa laaa-law ʹar raʹaa burhaana Rabbih: Kaẓaalika linaṣrifa ʻanhus soooʹa wal-faḥshaaaʹ: ʹinnahoo min ʻibaadinal Mukhlaṣeen.

    அவள் அவரை நடினாள்; அவரும் அவளை நாடினார். தன் இறைவனுடைய எச்சரிப்பைக் கண்டிராவிடில் (அவர் தவறு செய்திருப்பார்). எனினும், கெட்ட செயல்களிலிருந்தும் மானக் கேடான செயல்களிலிருந்தும் அவரைத் திருப்பி விடுவதற்காக நாம் அவருக்கு இவ்வாறு எச்சரிக்கை செய்தோம். நிச்சயமாக, அவர் நம் (உண்மையான) பரிசுத்தமான அடியார்களில் ஒருவராக இருந்தார்.

  145. 12:25

    وَٱسْتَبَقَا ٱلْبَابَ وَقَدَّتْ قَمِيصَهُۥ مِن دُبُرٍ وَأَلْفَيَا سَيِّدَهَا لَدَا ٱلْبَابِ ۚ قَالَتْ مَا جَزَآءُ مَنْ أَرَادَ بِأَهْلِكَ سُوٓءًا إِلَّآ أَن يُسْجَنَ أَوْ عَذَابٌ أَلِيمٌ

    Wastabaq̣al baaba wa-q̣addat q̣ameeṣahoo miñ duburiñw waʹalfayaa sayyidahaa ladal baab. Q̣aalat maa- jazaaaʹu man ʹaraada biʹahlika soooʹan ʹillaaa ʹañy yusjana ʹaw ʻaẓaabun ʹaleem?

    (யூஸுஃப் அவளை விட்டுத் தப்பித்துக்கொள்ளக் கருதி வெளியில் செல்ல ஓடினார். அவள் அவரைப் பிடித்துக்கொள்ளக் கருதி அவர் பின் ஓடினாள்.) இருவரும், ஒருவர் ஒருவரை முந்திக் கொள்ள கதவின் பக்கம் விரைந்து ஓடினார்கள். (யூஸுஃப் முந்திக் கொள்ளவே அவருடைய சட்டையைப் பிடித்திழுத்தாள்.) ஆகவே, அவருடைய சட்டையின் பின்புறத்தை கிழித்துவிட்டாள். அச்சமயம், வாசற்படியில் அவளுடைய கணவர் இருப்பதை இருவரும் கண்டனர். (ஆகவே, அவள் பயந்து, தான் தப்பித்துக் கொள்ளக் கருதி) அவரை நோக்கி ‘‘உமது மனைவிக்குத் தீங்கிழைக்கக் கருதியவனுக்குச் சிறையில் இடுவதோ அல்லது துன்புறுத்துகின்ற வேதனையைத் தருவதோ தவிர வேறு தண்டனை உண்டா?'' என்று கேட்டாள்.

  146. 12:26

    قَالَ هِىَ رَٰوَدَتْنِى عَن نَّفْسِى ۚ وَشَهِدَ شَاهِدٌ مِّنْ أَهْلِهَآ إِن كَانَ قَمِيصُهُۥ قُدَّ مِن قُبُلٍ فَصَدَقَتْ وَهُوَ مِنَ ٱلْكَـٰذِبِينَ

    Q̣aala hiya raawadatnee ʻan nafsee wa-shahida shaahidum min ʹahlihaa: ʹiñ kaana q̣ameeṣuhoo q̣udda miñ q̣ubuliñ faṣadaq̣at wa-huwa minal kaaẓibeen!

    (யூஸுஃப் அதை மறுத்து) ‘‘அவள்தான் என்னை வற்புறுத்தித் தன்னிடம் அழைத்தாள்'' என்று கூறினார். (இதற்கிடையில் அங்கிருந்த) அவளுடைய குடும்பத்திலுள்ள ஒருவர் (இதற்கு) சாட்சியமாகக் கூறியதாவது: ‘‘அவருடைய சட்டை முன்புறம் கிழிக்கப்பட்டிருந்தால் இவள் உண்மையே சொல்லுகிறாள்; அவர் பொய்யரே! (ஆனால்,)

  147. 12:27

    وَإِن كَانَ قَمِيصُهُۥ قُدَّ مِن دُبُرٍ فَكَذَبَتْ وَهُوَ مِنَ ٱلصَّـٰدِقِينَ

    Wa-ʹiñ kaana q̣ameeṣuhoo q̣udda miñ duburiñ fakaẓabat wa-huwa minaṣ ṣaadiq̣een!

    அவருடைய சட்டைப் பின்புறம் கிழிக்கப்பட்டிருந்தால், இவள் பொய் கூறுகிறாள்; அவர் உண்மை கூறுபவர்தான்'' (என்றார்).

  148. 12:28

    فَلَمَّا رَءَا قَمِيصَهُۥ قُدَّ مِن دُبُرٍ قَالَ إِنَّهُۥ مِن كَيْدِكُنَّ ۖ إِنَّ كَيْدَكُنَّ عَظِيمٌ

    Falammaa raʹaa q̣ameeṣahoo q̣udda miñ duburiñ q̣aala ʹinnahoo miñ kaydikunna! ʹInna kaydakunna ʻaz̤̣eem!

    (ஆகவே, அவளது கணவர்) யூஸுஃபுடைய சட்டையைக் கவனித்ததில், அது பின்புறமாகக் கிழிக்கப்பட்டிருப்பதைக் கண்டு (தன் மனைவியை நோக்கி) ‘‘நிச்சயமாக இது (பெண்களாகிய) உங்கள் சதியே; நிச்சயமாக உங்கள் சதி மகத்தானது'' என்று கூறி,

  149. 12:29

    يُوسُفُ أَعْرِضْ عَنْ هَـٰذَا ۚ وَٱسْتَغْفِرِى لِذَنۢبِكِ ۖ إِنَّكِ كُنتِ مِنَ ٱلْخَاطِـِٔينَ

    Yoosufu ʹaʻriḍ ʻan haaẓaa wastag̣firee liẓambiki ʹinnaki kuñti minal khaaṭiʹeen!

    (யூஸுஃபை நோக்கி) ‘‘யூஸுஃபே! நீர் இதை இத்துடன் விட்டுவிடுவீராக. (இதைப்பற்றி எவரிடமும் கூற வேண்டாம்'' என்று கூறி மீண்டும் அவளை நோக்கி) ‘‘நீ உன் பாவத்திற்கு மன்னிப்பைத் தேடிக்கொள். நிச்சயமாக நீதான் குற்றம் செய்திருக்கிறாய்'' (என்று கூறினார்.)

  150. 12:30

    ۞ وَقَالَ نِسْوَةٌ فِى ٱلْمَدِينَةِ ٱمْرَأَتُ ٱلْعَزِيزِ تُرَٰوِدُ فَتَىٰهَا عَن نَّفْسِهِۦ ۖ قَدْ شَغَفَهَا حُبًّا ۖ إِنَّا لَنَرَىٰهَا فِى ضَلَـٰلٍ مُّبِينٍ

    Wa-q̣aala niswatuñ fil Madeenatim raʹatul ʻAzeezi turaawidu fataahaa ʻan nafsih: q̣ad shag̣afahaa ḥubbaa: ʹinnaa lanaraahaa fee ḍalaalim mubeen.

    (இவ்விஷயம் வெளியில் பரவவே) அப்பட்டிணத்திலுள்ள பெண்கள் பலரும் (இதை இழிவாகக் கருதி) ‘‘அதிபதியின் மனைவி தன்னிடமுள்ள ஒரு (அடிமையான) ஒரு வாலிபனைத் தனக்கு இணங்கும்படி வற்புறுத்துகிறாள். காதல் அவளை மயக்கி விட்டது! நிச்சயமாக அவள் மிகத் தவறான வழியில் இருப்பதையே நாங்கள் காண்கிறோம்'' என்று (இழிவாகப்) பேசலானார்கள்.

  151. 12:31

    فَلَمَّا سَمِعَتْ بِمَكْرِهِنَّ أَرْسَلَتْ إِلَيْهِنَّ وَأَعْتَدَتْ لَهُنَّ مُتَّكَـًٔا وَءَاتَتْ كُلَّ وَٰحِدَةٍ مِّنْهُنَّ سِكِّينًا وَقَالَتِ ٱخْرُجْ عَلَيْهِنَّ ۖ فَلَمَّا رَأَيْنَهُۥٓ أَكْبَرْنَهُۥ وَقَطَّعْنَ أَيْدِيَهُنَّ وَقُلْنَ حَـٰشَ لِلَّهِ مَا هَـٰذَا بَشَرًا إِنْ هَـٰذَآ إِلَّا مَلَكٌ كَرِيمٌ

    Falammaa samiʻat bimakrihinna ʹarsalat ʹilayhinna wa-ʹaʻtadat lahunna muttakaʹañw waʹaatat kulla waaḥidatim min-hunna sikkeenañw waq̣aalatikh ruj ʻalayhinn. Falammaa raʹaynahooo ʹakbarnahoo wa-q̣aṭṭaʻna ʹaydiyahunna wa-q̣ulna ḥaasha lillaahi maa- haaẓaa basharaa! ʹIn haaẓaaa ʹillaa malakuñ kareem!

    (அந்தப்) பெண்களின் (இந்த) இழிமொழிகளை அவள் செவியுறவே, அப்பெண்களுக்காக ஒரு விருந்து சபையைக் கூட்டி, அதற்கு அவர்களை அழைத்து வந்து ஒவ்வொருத்திக்கும் ஒரு கனியையும் (அதை அறுத்துப் புசிக்க) ஒரு கத்தியையும் கொடுத்து அவரை (அலங்கரித்து) அவர்கள் முன் வரும்படிக் கூறினாள். அவரை அப்பெண்கள் காணவே (அவருடைய அழகைக் கண்டு) அவரை மிக்க உயர்வானவராக எண்ணி (மெய் மறந்து, கனியை அறுப்பதற்குப் பதிலாக) தங்கள் கை (விரல்)களையே அறுத்துக் கொண்டு ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவர் மனிதரல்ல! இவர் (அனைவரின் மனதையும் கவரக்கூடிய) அழகு வாய்ந்த ஒரு வானவரே தவிர வேறில்லை'' என்று கூறினார்கள்.

  152. 12:32

    قَالَتْ فَذَٰلِكُنَّ ٱلَّذِى لُمْتُنَّنِى فِيهِ ۖ وَلَقَدْ رَٰوَدتُّهُۥ عَن نَّفْسِهِۦ فَٱسْتَعْصَمَ ۖ وَلَئِن لَّمْ يَفْعَلْ مَآ ءَامُرُهُۥ لَيُسْجَنَنَّ وَلَيَكُونًا مِّنَ ٱلصَّـٰغِرِينَ

    Q̣aalat faẓaalikunnal laẓee lumtunnanee feeh! Wa-laq̣ad raawattuhoo ʻan nafsihee fastaʻṣam! Wa-laʹil lam yafʻal maaa ʹaamuruhoo layusjananna wa-layakoonam minaṣ ṣaag̣ireen!

    அதற்கவள் ‘‘நீங்கள் எவரைப் பற்றி என்னை நிந்தித்தீர்களோ அவர்தான் இவர். நிச்சயமாக நான் இவரை எனக்கு இசையும்படி வற்புறுத்தினேன்; எனினும், இவர் தப்பித்துக்கொண்டார். இனியும் இவர் நான் கூறுவதைச் செய்யாவிடில் நிச்சயமாக இவர் சிறையிலிடப்பட்டு சிறுமைப்படுத்தப் படுவார்''என்று கூறினாள்.

  153. 12:33

    قَالَ رَبِّ ٱلسِّجْنُ أَحَبُّ إِلَىَّ مِمَّا يَدْعُونَنِىٓ إِلَيْهِ ۖ وَإِلَّا تَصْرِفْ عَنِّى كَيْدَهُنَّ أَصْبُ إِلَيْهِنَّ وَأَكُن مِّنَ ٱلْجَـٰهِلِينَ

    Q̣aala Rabbis sijnu ʹaḥabbu ʹilayya mimmaa yadʻoonaneee ʹilayh: wa-ʹillaa taṣrif ʻannee kaydahunna ʹaṣbu ʹilayhinna wa-ʹakum minal jaahileen.

    அதற்கவர், ‘‘என் இறைவனே! அவர்கள் என்னை அழைக்கும் (இத்தீய) காரியத்தை விட சிறைக்கூடமே எனக்கு விருப்பமானது. ஆகவே, இப்பெண்களின் சூழ்ச்சியிலிருந்து நீ என்னைத் தடுத்துக் கொள்ளா விட்டால் இப்பெண்களிடம் சிக்கி (பாவம் செய்யும்) அறிவீனர்களில் நானும் ஒருவனாக ஆகிவிடுவேன்'' என்று பிரார்த்தித்தார்.

  154. 12:34

    فَٱسْتَجَابَ لَهُۥ رَبُّهُۥ فَصَرَفَ عَنْهُ كَيْدَهُنَّ ۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ

    Fastajaaba lahoo Rabbuhoo faṣarafa ʻanhu kaydahunn: ʹinnahoo Huwas Sameeʻul ʻAleem.

    (அவரது பிரார்த்தனையை) அவருடைய இறைவன் அங்கீகரித்துக் கொண்டு, பெண்களின் சூழ்ச்சியை அவரைவிட்டுத் திருப்பிவிட்டான். நிச்சயமாக அவன்தான் (அனைத்தையும்) செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.

  155. 12:35

    ثُمَّ بَدَا لَهُم مِّنۢ بَعْدِ مَا رَأَوُا۟ ٱلْـَٔايَـٰتِ لَيَسْجُنُنَّهُۥ حَتَّىٰ حِينٍ

    S̤umma badaa lahum mim baʻdi maa- raʹawul ʹAayaati layasjununnahoo ḥattaa ḥeen.

    (யூஸுஃப் நிரபராதி என்பதற்குரிய) ஆதாரங்களை அவர்கள் கண்டதன் பின்னரும் (இச்சம்பவத்தைப் பற்றி என்ன செய்யலாமென அவர்கள் ஆலோசனை செய்தனர். அவளுடைய பார்வையிலிருந்து யூஸுஃபை மறைத்து விடுவதே நலமெனக் கருதி அதற்காகச்) சிறிது காலம் அவரை சிறையிலிடுவதே தகுமென அவர்களுக்குத் தோன்றியது. (ஆகவே, அவரை சிறைக்கூடத்திற்கு அனுப்பி விட்டனர்.)

  156. 12:36

    وَدَخَلَ مَعَهُ ٱلسِّجْنَ فَتَيَانِ ۖ قَالَ أَحَدُهُمَآ إِنِّىٓ أَرَىٰنِىٓ أَعْصِرُ خَمْرًا ۖ وَقَالَ ٱلْـَٔاخَرُ إِنِّىٓ أَرَىٰنِىٓ أَحْمِلُ فَوْقَ رَأْسِى خُبْزًا تَأْكُلُ ٱلطَّيْرُ مِنْهُ ۖ نَبِّئْنَا بِتَأْوِيلِهِۦٓ ۖ إِنَّا نَرَىٰكَ مِنَ ٱلْمُحْسِنِينَ

    Wa-dakhala maʻa hussijna fatayaan. Q̣aala ʹaḥaduhumaaa ʹinneee ʹaraaneee ʹaʻṣiru khamraa. Wa-q̣aalal ʹaakharu ʹinneee ʹaraaneee ʹaḥmilu fawq̣a raʹsee khubzañ taʹkuluṭ ṭayru minh. Nabbiʹnaa bitaʹweelih: ʹinnaa naraaka minal Muḥsineen.

    (அவர் சிறைச்சென்ற சமயத்தில் வெவ்வேறு குற்றங்களுக்காக இன்னும்) இரு வாலிபர்களும் அவருடன் சிறைச் சென்றார்கள். அவ்விருவரில் ஒருவன் (ஒரு நாளன்று யூஸுஃபை நோக்கி) ‘‘நான் திராட்சை ரஸம் பிழிந்து கொண்டிருப்பதாக மெய்யாகவே கனவு கண்டேன்'' என்று கூறினான். மற்றவன் ‘‘நான் என் தலையில் ரொட்டிகளைச் சுமந்து செல்வதாகவும், அதை பட்சிகள் (கொத்திக் கொத்திப்) புசிப்பதாகவும் மெய்யாகவே கனவு கண்டேன்'' என்று கூறி (யூஸுஃபை நோக்கி,) ‘‘நிச்சயமாக நாங்கள் உம்மை மிக்க (ஞானமுடைய) நல்லவர்களில் ஒருவராகவே காண்கிறோம்; ஆதலால், இக்கனவுகளின் வியாக்கியானங்களை நீர் எங்களுக்கு அறிவிப்பீராக!'' (என்று கூறினான்).

  157. 12:37

    قَالَ لَا يَأْتِيكُمَا طَعَامٌ تُرْزَقَانِهِۦٓ إِلَّا نَبَّأْتُكُمَا بِتَأْوِيلِهِۦ قَبْلَ أَن يَأْتِيَكُمَا ۚ ذَٰلِكُمَا مِمَّا عَلَّمَنِى رَبِّىٓ ۚ إِنِّى تَرَكْتُ مِلَّةَ قَوْمٍ لَّا يُؤْمِنُونَ بِٱللَّهِ وَهُم بِٱلْـَٔاخِرَةِ هُمْ كَـٰفِرُونَ

    Q̣aala laa- yaʹteekumaa ṭaʻaamuñ turzaq̣aaniheee ʹillaa nabbaʹtukumaa bitaʹweelihee q̣abla ʹañy yaʹtiyakumaa: ẓaalikumaa mimmaa ʻallamanee Rabbee. ʹInnee taraktu millata q̣awmil laa yuʹminoona billaahi wa-hum̃ bil-ʹAakhirati hum kaafiroon.

    (அதற்கு யூஸுஃப் அவர்களை நோக்கி,) ‘‘நீங்கள் புசிக்கக்கூடிய உணவு (வெளியிலிருந்து) உங்களிடம் வந்து சேருவதற்கு முன்னதாகவே அதன் விளக்கத்தை நான் உங்களுக்கு அறிவித்து விடுவேன்; (கனவுகளுக்கு வியாக்கியானம் கூறும்) இதை என் இறைவனே எனக்கு அறிவித்து இருக்கிறான். ஏனென்றால், அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்ளாது மறுமையை நிராகரிக்கின்ற மக்களுடைய மார்க்கத்தை நிச்சயமாக நான் விட்டுவிட்டேன்.

  158. 12:38

    وَٱتَّبَعْتُ مِلَّةَ ءَابَآءِىٓ إِبْرَٰهِيمَ وَإِسْحَـٰقَ وَيَعْقُوبَ ۚ مَا كَانَ لَنَآ أَن نُّشْرِكَ بِٱللَّهِ مِن شَىْءٍ ۚ ذَٰلِكَ مِن فَضْلِ ٱللَّهِ عَلَيْنَا وَعَلَى ٱلنَّاسِ وَلَـٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَشْكُرُونَ

    Wattabaʻtu Millata ʹaabaaaʹeee ʹIbraaheema wa-ʹIsḥaaq̣a wa-Yaʻq̣oob; maa- kaana lanaaa ʹan nushrika billaahi miñ shayʹ: ẓaalika miñ faḍlil laahi ʻalaynaa wa-ʻalan naasi wa-laakinna ʹaks̤aran naasi laa- yashkuroon.

    என் மூதாதைகளாகிய இப்றாஹீம், இஸ்ஹாக், யஅகூப் ஆகிய இவர்களின் மார்க்கத்தையே நான் பின்பற்றியிருக்கிறேன். ஆதலால், அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணையாக்குவது எங்களுக்குத் தகுமானதல்ல. இக்கொள்கை மீது இருப்பது எங்கள் மீதும் மற்ற மனிதர்கள் மீதும் அல்லாஹ் புரிந்த ஓர் அருளாகும். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள், (அல்லாஹ்வின் அருளுக்கு) நன்றி செலுத்துவதில்லை.

  159. 12:39

    يَـٰصَـٰحِبَىِ ٱلسِّجْنِ ءَأَرْبَابٌ مُّتَفَرِّقُونَ خَيْرٌ أَمِ ٱللَّهُ ٱلْوَٰحِدُ ٱلْقَهَّارُ

    Yaa-ṣaaḥibayis sijni ʹaʹarbaabum mutafarriq̣oona khayrun ʹamil laahul Waaḥidul Q̣ahhaar?

    சிறைக்கூடத்தில் இருக்கும் என்னிரு தோழர்களே! (ஒரு சக்தியுமற்ற) மாறுபட்ட பல்வேறு தெய்வங்கள் நன்றா? அல்லது அனைவரையும் அடக்கி ஆளுகின்ற ஒரே இறைவனாகிய அல்லாஹ் ஒருவனே நன்றா?

  160. 12:40

    مَا تَعْبُدُونَ مِن دُونِهِۦٓ إِلَّآ أَسْمَآءً سَمَّيْتُمُوهَآ أَنتُمْ وَءَابَآؤُكُم مَّآ أَنزَلَ ٱللَّهُ بِهَا مِن سُلْطَـٰنٍ ۚ إِنِ ٱلْحُكْمُ إِلَّا لِلَّهِ ۚ أَمَرَ أَلَّا تَعْبُدُوٓا۟ إِلَّآ إِيَّاهُ ۚ ذَٰلِكَ ٱلدِّينُ ٱلْقَيِّمُ وَلَـٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ

    Maa- taʻbudoona miñ dooniheee ʹillaaa ʹasmaaaʹañ sammaytumoohaaa ʹañtum wa-ʹaabaaaʹukum maaa ʹañzalal laahu bihaa miñ sulṭaan: ʹinil Ḥukmu ʹillaa lillaah: ʹamara ʹallaa taʻbudooo ʹillaaa ʹiyyaah: ẓaalikad Deenul Q̣ayyimu wa-laakinna ʹaks̤aran naasi laa- yaʻlamoon.

    அல்லாஹ்வைத் தவிர்த்து நீங்கள் வணங்குபவை அனைத்தும், நீங்களும் உங்கள் மூதாதைகளும் வைத்துக் கொண்ட வெறும் (கற்பனைப்) பெயர்களைத்தவிர (உண்மையில் அவை ஒன்றுமே) இல்லை. அல்லாஹ் இதற்கு ஓர் ஆதாரத்தையும் இறக்கிவைக்கவுமில்லை; எல்லா அதிகாரங்களும் அல்லாஹ் ஒருவனுக்கே தவிர (மற்றெவருக்கும்) இல்லை. அவனைத் தவிர (மற்ற எவற்றையும்) நீங்கள் வணங்கக் கூடாதென்று அவனே கட்டளை இட்டிருக்கிறான். இதுதான் நேரான மார்க்கம். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறியவில்லை'' (என்று யூஸுஃப் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்து,)

  161. 12:41

    يَـٰصَـٰحِبَىِ ٱلسِّجْنِ أَمَّآ أَحَدُكُمَا فَيَسْقِى رَبَّهُۥ خَمْرًا ۖ وَأَمَّا ٱلْـَٔاخَرُ فَيُصْلَبُ فَتَأْكُلُ ٱلطَّيْرُ مِن رَّأْسِهِۦ ۚ قُضِىَ ٱلْأَمْرُ ٱلَّذِى فِيهِ تَسْتَفْتِيَانِ

    Yaa-ṣaaḥibayis sijni ʹammaaa ʹaḥadukumaa fayasq̣ee rabbahoo khamraa: wa-ʹammal ʹaakharu fayuṣlabu fataʹkuluṭ ṭayru mir raʹsih. Q̣uḍiyal ʹamrul laẓee feehi tastaftiyaan.

    (மேலும், அவர்களை நோக்கி) ‘‘சிறைக்கூடத்தில் இருக்கும் என்னிரு தோழர்களே! (உங்கள் கனவுகளின் பலன்களாவன:) ‘‘உங்களில் ஒருவன் (விடுதலையடைந்து அவன், முன்செய்து கொண்டிருந்த வேலையையும் ஒப்புக்கொண்டு, முன்பு போலவே) தன் எஜமானனுக்குத் திராட்சை ரஸம் புகட்டிக் கொண்டிருப்பான். மற்றவனோ தூக்கிலிடப்பட்டு அவன் தலையை (காகம், கழுகு போன்ற) பறவைகள் (கொத்திக் கொத்தித்) தின்னும். நீங்கள் வியாக்கியானம் கோரிய (கனவுகளின்) பலன் விதிக்கப்பட்டு விட்டது. (அவ்வாறு நடந்தே தீரும்'' என்று கூறினார்.)

  162. 12:42

    وَقَالَ لِلَّذِى ظَنَّ أَنَّهُۥ نَاجٍ مِّنْهُمَا ٱذْكُرْنِى عِندَ رَبِّكَ فَأَنسَىٰهُ ٱلشَّيْطَـٰنُ ذِكْرَ رَبِّهِۦ فَلَبِثَ فِى ٱلسِّجْنِ بِضْعَ سِنِينَ

    Wa-q̣aala lillaẓee z̤̣anna ʹannahoo naajim minhumaẓ kurnee ʻiñda rabbik. Faʹañsaahush Shayṭaanu ẓikra rabbihee falabis̤a fis sijni biḍʻa sineen.

    மேலும், அவ்விருவரில் எவன் விடுதலை அடைவானென அவர் எண்ணினாரோ (அவனை நோக்கி) நீ உன் எஜமானனிடம் என்னைப் பற்றி (அநியாயமாக சிறையிடப்பட்டிருக்கிறேன் என்று) கூறுவாயாக! என்றும் சொன்னோர். எனினும் (சிறைக் கூடத்திலிருந்து விடுதலையாகி வெளியேறிய) அவன் தன் எஜமானனிடம் கூற இருந்த (எண்ணத்)தை ஷைத்தான், அவனுக்கு மறக்கடித்துவிட்டான். ஆதலால், அவர் சிறைக்கூடத்தில் (இன்னும்) பல ஆண்டுகள் தங்கிவிட்டார்.

  163. 12:43

    وَقَالَ ٱلْمَلِكُ إِنِّىٓ أَرَىٰ سَبْعَ بَقَرَٰتٍ سِمَانٍ يَأْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَسَبْعَ سُنۢبُلَـٰتٍ خُضْرٍ وَأُخَرَ يَابِسَـٰتٍ ۖ يَـٰٓأَيُّهَا ٱلْمَلَأُ أَفْتُونِى فِى رُءْيَـٰىَ إِن كُنتُمْ لِلرُّءْيَا تَعْبُرُونَ

    Wa-q̣aalal maliku ʹinneee ʹaraa sabʻa baq̣araatiñ simaaniñy yaʹkuluhunna sabʻun ʻijaafuñw Wasabʻa sumbulaatin khuḍriñw waʹukhara yaabisaat. Yaaaʹayyuhal malaʹu ʹaftoonee fee ruʹyaaya ʹiñ kuñtum lirruʹyaa taʻburoon.

    (ஒரு நாளன்று) எகிப்தின் அரசர் (தன் பிரதானிகளை நோக்கி) ‘‘என் பிரதானிகளே! கொழுத்துப் பருத்த ஏழு பசுக்களை, இளைத்து வற்றிய ஏழு பசுக்கள் புசிப்பதாகவும், நன்கு விளைந்த பசுமையான ஏழு கதிர்களையும் காய்ந்து உலர்ந்த (சாவியான வேறு ஏழு) கதிர்களையும் என் கனவில் கண்டேன். என் பிரதானிகளே! நீங்கள் கனவுகளுக்கு வியாக்கியானம் கூறக்கூடியவர்களாக இருந்தால் என் இக்கனவின் பலனை அறிவியுங்கள்'' என்று கூறினார்.

  164. 12:44

    قَالُوٓا۟ أَضْغَـٰثُ أَحْلَـٰمٍ ۖ وَمَا نَحْنُ بِتَأْوِيلِ ٱلْأَحْلَـٰمِ بِعَـٰلِمِينَ

    Q̣aalooo ʹaḍg̣aas̤u ʹaḥlaam: Wa-maa naḥnu bitaʹweelil ʹaḥlaami biʻaalimeen.

    அதற்கவர்கள், ‘‘இது (அஜீரணத்தாலும்) சிதறிய சிந்தனையாலும் ஏற்பட்ட (வீணான) கனவுதான். (இத்தகைய வீண்) கனவுகளுக்குரிய விளக்கங்களை நாங்கள் அறிந்தவர்களல்ல'' என்று கூறினார்கள்.

  165. 12:45

    وَقَالَ ٱلَّذِى نَجَا مِنْهُمَا وَٱدَّكَرَ بَعْدَ أُمَّةٍ أَنَا۠ أُنَبِّئُكُم بِتَأْوِيلِهِۦ فَأَرْسِلُونِ

    Wa-q̣aalal laẓee najaa minhumaa waddakara baʻda ʹummatin ʹana ʹunabbiʹukum̃ bitaʹweelihee faʹarsiloon.

    (யூஸுஃபின் சிறைத்) தோழர்கள் இருவரில் விடுதலை அடைந்தவன் பல ஆண்டுகளுக்குப் பின்னர் (அச்சமயம் அவரை) நினைத்து (அவர் தன் கனவுக்குக் கூறிய வியாக்கியானம் முற்றிலும் சரிவர நடைபெற்றதையும் எண்ணி, அரசரை நோக்கி) ‘‘அரசரது கனவின் வியாக்கியானத்தை நான் உங்களுக்கு அறிவிக்க முடியும். என்னை (சிறைக் கூடத்திலுள்ள யூஸுஃபிடம்) அனுப்பிவையுங்கள்'' என்று கூறினான். (அவ்வாறே அரசரும் யூஸுஃபிடம் அவனை அனுப்பிவைத்தார்.)

  166. 12:46

    يُوسُفُ أَيُّهَا ٱلصِّدِّيقُ أَفْتِنَا فِى سَبْعِ بَقَرَٰتٍ سِمَانٍ يَأْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَسَبْعِ سُنۢبُلَـٰتٍ خُضْرٍ وَأُخَرَ يَابِسَـٰتٍ لَّعَلِّىٓ أَرْجِعُ إِلَى ٱلنَّاسِ لَعَلَّهُمْ يَعْلَمُونَ

    Yoosufu ʹayyuhaṣ Ṣiddeeq̣u ʹaftinaa fee sabʻi baq̣araatiñ simaaniñy yaʹkuluhunna sabʻun ʻijaafuñw Wasabʻi sumbulaatin khuḍriñw waʹukhara yaabisaatil laʻalleee ʹarjiʻu ʹilan naasi laʻallahum yaʻlamoon.

    (அவன் சிறைக்கூடம் சென்று யூஸுஃபை நோக்கி “கனவுகளுக்கு) உண்மை(யான வியாக்கியானம்) கூறுபவரே! யூஸுஃபே! கொழுத்துப் பருத்த ஏழு பசுக்களை, இளைத்து வற்றிய ஏழு பசுக்கள் புசிப்பதைப் போலும், முதிர்ந்து விளைந்த பசுமையான ஏழு கதிர்களையும் (சாவியாகிய) காய்ந்த மற்ற ஏழு கதிர்களையும் (கனவில் கண்டால் அதன் பலன் என்ன? அதை) நீர் எங்களுக்கு அறிவிப்பீராக! (என்னை அனுப்பிய) மக்கள் (இதைத்) தெரிந்து கொள்வதற்காக அவர்களிடம் நான் செல்ல வேண்டியது இருக்கிறது'' என்று கூறினான்.

  167. 12:47

    قَالَ تَزْرَعُونَ سَبْعَ سِنِينَ دَأَبًا فَمَا حَصَدتُّمْ فَذَرُوهُ فِى سُنۢبُلِهِۦٓ إِلَّا قَلِيلًا مِّمَّا تَأْكُلُونَ

    Q̣aala tazraʻoona sabʻa sineena daʹabaa: famaa ḥaṣattum faẓaroohu fee sumbuliheee ʹillaa q̣aleelam mimmaa taʹkuloon.

    அதற்கவர் கூறியதாவது: ‘‘தொடர்ந்து (வழக்கம் போல் நல்லவிதமாக) ஏழு ஆண்டுகள் நீங்கள் விவசாயம் செய்வீர்கள். அதில் நீங்கள் அறுவடை செய்யும் விளைச்சல்களில் நீங்கள் புசிப்பதற்கு வேண்டிய ஒரு சொற்ப அளவைத்தவிர மற்ற அனைத்தையும் அதன் கதிர்களிலேயே விட்டு வையுங்கள்.

  168. 12:48

    ثُمَّ يَأْتِى مِنۢ بَعْدِ ذَٰلِكَ سَبْعٌ شِدَادٌ يَأْكُلْنَ مَا قَدَّمْتُمْ لَهُنَّ إِلَّا قَلِيلًا مِّمَّا تُحْصِنُونَ

    S̤umma yaʹtee mim baʻdi ẓaalika sabʻuñ shidaaduñy yaʹkulna maa- q̣addamtum lahunna ʹillaa q̣aleelam mimmaa tuḥṣinoon.

    அதற்குப் பின்னர், கடினமான (பஞ்சத்தையுடைய) ஏழு ஆண்டுகள் வரும். நீங்கள் கதிர்களில் பத்திரப்படுத்தி வைத்திருந்தவற்றில் (விதைப்பதற்கு வேண்டிய) சொற்ப அளவைத் தவிர, (நீங்கள் சேகரித்திருந்த) அனைத்தையும் (அப்பஞ்சம்) தின்றுவிடும்.

  169. 12:49

    ثُمَّ يَأْتِى مِنۢ بَعْدِ ذَٰلِكَ عَامٌ فِيهِ يُغَاثُ ٱلنَّاسُ وَفِيهِ يَعْصِرُونَ

    S̤umma yaʹtee mim baʻdi ẓaalika ʻaamuñ feehi yug̣aas̤un naasu wa-feehi yaʻṣiroon.

    அதற்குப் பின்னர் ஓர் ஆண்டு வரும்; அதில் ஏராளமாக மழை பெய்து (ஒலிவம், திராட்சை ஆகியவை நன்கு வளர்ந்து, திராட்சை ஆகியவற்றின்) ரஸத்தை மனிதர்கள் பிழிவார்கள்'' (என்றும் கூறினார்).

  170. 12:50

    وَقَالَ ٱلْمَلِكُ ٱئْتُونِى بِهِۦ ۖ فَلَمَّا جَآءَهُ ٱلرَّسُولُ قَالَ ٱرْجِعْ إِلَىٰ رَبِّكَ فَسْـَٔلْهُ مَا بَالُ ٱلنِّسْوَةِ ٱلَّـٰتِى قَطَّعْنَ أَيْدِيَهُنَّ ۚ إِنَّ رَبِّى بِكَيْدِهِنَّ عَلِيمٌ

    Wa-q̣aalal malikuʹ toonee bih. Falammaa jaaaʹahur rasoolu q̣aalar jiʻ ʹilaa rabbika fasʹalhu maa- baalun niswatil laatee q̣aṭṭaʻna ʹaydiyahunn? ʹInna Rabbee bikaydihinna ʻAleem.

    (யூஸுஃப் நபி கூறியவற்றை அரசரிடம் வந்து அவன் விபரமாக அறிவித்தான்.) அதற்கு அரசர் ‘‘(இவ்வியாக்கியானம் கூறிய) அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்'' எனக் கட்டளையிட்டார். அவருடைய தூதர் யூஸுஃபிடம் (அவரை அழைத்துச்) செல்ல (வர)வே (அவர் தூதருடன் செல்ல மறுத்து அவரை நோக்கி) ‘‘நீர் உமது எஜமானனிடம் திரும்பிச் சென்று, தங்கள் கை (விரல்)களை வெட்டிக்கொண்ட பெண்களின் (உண்மை) விஷயமென்ன? (எதற்காக அப்பெண்கள் தங்கள் கைகளை வெட்டிக் கொண்டனர்?) என்று அவரைக் கேட்பீராக. நிச்சயமாக அந்தப் பெண்களின் சூழ்ச்சியை என் இறைவன் நன்கறிந்தவன்'' என்று கூறினார்.

  171. 12:51

    قَالَ مَا خَطْبُكُنَّ إِذْ رَٰوَدتُّنَّ يُوسُفَ عَن نَّفْسِهِۦ ۚ قُلْنَ حَـٰشَ لِلَّهِ مَا عَلِمْنَا عَلَيْهِ مِن سُوٓءٍ ۚ قَالَتِ ٱمْرَأَتُ ٱلْعَزِيزِ ٱلْـَٔـٰنَ حَصْحَصَ ٱلْحَقُّ أَنَا۠ رَٰوَدتُّهُۥ عَن نَّفْسِهِۦ وَإِنَّهُۥ لَمِنَ ٱلصَّـٰدِقِينَ

    Q̣aala maa- khaṭbukunna ʹiẓ raawattunna Yoosufa ʻan nafsih? Q̣ulna Ḥaasha lillaahi maa- ʻalimnaa ʻalayhi miñ soooʹ! Q̣aalatim raʹatul ʻAzeezil ʹaana ḥaṣḥaṣal ḥaq̣q̣: ʹana raawattuhoo ʻan nafsihee wa-ʹinnahoo laminaṣ Ṣaadiq̣een.

    (இதைக் கேள்வியுற்ற அரசர் அப்பெண்களை அழைத்து) ‘‘நீங்கள் யூஸுஃபை உங்கள் விருப்பத்திற்கிணங்குமாறு அழைத்த போது உங்களுக்கு ஏற்பட்டதென்ன?'' என்று கேட்டார். அதற்கு அப்பெண்கள் ‘‘அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்; நாங்கள் அவரிடத்தில் ஒரு தீங்கையும் அறியவில்லை'' என்று கூறிவிட்டார்கள். அதிபதியின் மனைவியோ இச்சமயம் உண்மை வெளிப்பட்டு விட்டது; நான்தான் அவரை விரும்பி அழைத்தேன். (அவர் கூறியதில்) நிச்சயமாக அவர் உண்மையே சொன்னார்'' என்று கூறினாள்.

  172. 12:52

    ذَٰلِكَ لِيَعْلَمَ أَنِّى لَمْ أَخُنْهُ بِٱلْغَيْبِ وَأَنَّ ٱللَّهَ لَا يَهْدِى كَيْدَ ٱلْخَآئِنِينَ

    Ẓaalika liyaʻlama ʹannee lam ʹakhunhu bilg̣aybi wa-ʹannal laaha laa- yahdee kaydal khaaaʹineen.

    (இதைக் கேள்வியுற்ற யூஸுஃப் ‘‘முன்னர் சென்றுபோன விஷயங்களை இவ்வாறு விசாரணை செய்யும்படி நான் கூறிய) இதன் காரணம்; நிச்சயமாக நான் (என் எஜமானாகிய) அவர் மறைவாயிருந்த சமயத்தில் அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதை அவர் அறிந்து கொள்வதுடன், நிச்சயமாக அல்லாஹ் துரோகிகளின் சூழ்ச்சியை நடைபெற விடுவதில்லை என்(பதை அறிவிப்)பதற்காகவுமே'' (என்று கூறினார்).