Home  /  Quran  /  Surah
Loading...
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

Surah At-Tur

Surah At-Tur (The Mount) is Surah 52 of the Holy Quran, a Meccan Surah with 49 verses, available here in Tamil.

Surah 52 Meccan 49 verses Tamil

Verse 52:1

وَالطُّوْرِ ۟ۙ

Wat-Ṭoor;

தூர் (என்னும்) மலையின் மீது சத்தியமாக!

Verse 52:2

وَكِتٰبٍ مَّسْطُوْرٍ ۟ۙ

Wa-Kitaabim masṭoor

, 3. விரித்த ஏட்டில் வரி வரியாக எழுதப்பட்ட வேத நூலின் மீது சத்தியமாக!

Verse 52:3

فِیْ رَقٍّ مَّنْشُوْرٍ ۟ۙ

Fee Raq̣q̣im mañshoor;

, 3. விரித்த ஏட்டில் வரி வரியாக எழுதப்பட்ட வேத நூலின் மீது சத்தியமாக!

Verse 52:4

وَّالْبَیْتِ الْمَعْمُوْرِ ۟ۙ

Wal-Baytil maʻmoor;

பைத்துல் மஃமூர் (என்னும் ஆலயத்தின்) மீது சத்தியமாக!

Verse 52:5

وَالسَّقْفِ الْمَرْفُوْعِ ۟ۙ

Was-Saq̣fil marfooʻ;

உயர்ந்த முகட்டின் மீது சத்தியமாக!

Verse 52:6

وَالْبَحْرِ الْمَسْجُوْرِ ۟ۙ

Wal-Baḥril masjoor;

(தொடர்ந்து) அலைகள் மோதிக் கொண்டிருக்கும் சமுத்திரத்தின் மீது சத்தியமாக!

Verse 52:7

اِنَّ عَذَابَ رَبِّكَ لَوَاقِعٌ ۟ۙ

ʹInna ʻAẓaaba Rabbika lawaaq̣iʻ;―

(நபியே!) நிச்சயமாக உமது இறைவனின் வேதனை (அவர்களுக்கு) வந்தே தீரும்.

Verse 52:8

مَّا لَهٗ مِنْ دَافِعٍ ۟ۙ

Maa- lahoo miñ daafiʻ;―

எவராலும் அதைத் தடுக்க முடியாது.

Verse 52:9

یَّوْمَ تَمُوْرُ السَّمَآءُ مَوْرًا ۟ۙ

Yawma tamoorus samaaaʹu mawraa,

வானமும் துடிதுடித்துக் குமுறும் நாளில்,

Verse 52:10

وَّتَسِیْرُ الْجِبَالُ سَیْرًا ۟ؕ

Wa-taseerul jibaalu sayraa.

மலைகள் (பெயர்ந்து) பறந்தோடும் (நாளில்)

Verse 52:11

فَوَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟ۙ

Fawayluñy Yawmaʹiẓil lil-mukaẓẓibeen;―

(நபியே! உம்மைப்) பொய்யாக்கும் இவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

Verse 52:12

الَّذِیْنَ هُمْ فِیْ خَوْضٍ یَّلْعَبُوْنَ ۟ۘ

ʹAllaẓeena hum fee khawḍiñy yalʻaboon.

அவர்கள் (வீண் விதண்டாவாதத்தில்) மூழ்கி விளையாடிக்கொண்டு இருக்கின்றனர்.

Verse 52:13

یَوْمَ یُدَعُّوْنَ اِلٰی نَارِ جَهَنَّمَ دَعًّا ۟ؕ

Yawma yudaʻʻoona ʹilaa Naari Jahannama daʻ-ʻaa.

அவர்கள் நரகத்தின் பக்கம் (அடித்து) வெருட்டி ஓட்டப்படும் நாளில்,

Verse 52:14

هٰذِهِ النَّارُ الَّتِیْ كُنْتُمْ بِهَا تُكَذِّبُوْنَ ۟

Haaẓihin Naarul latee kuñtum̃ bihaa tukaẓẓiboon!

(அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த நரக நெருப்பு இதுதான்'' என்று கூறப்படும்.

Verse 52:15

اَفَسِحْرٌ هٰذَاۤ اَمْ اَنْتُمْ لَا تُبْصِرُوْنَ ۟ۚ

ʹAfasiḥrun haaẓaaa ʹam ʹañtum laa- tubṣiroon?

இது வெறும் சூனியம்தானா? அல்லது, இதை நீங்கள் (உங்கள் கண்ணால்) பார்க்கவில்லையா?

Verse 52:16

اِصْلَوْهَا فَاصْبِرُوْۤا اَوْ لَا تَصْبِرُوْا ۚ سَوَآءٌ عَلَیْكُمْ ؕ اِنَّمَا تُجْزَوْنَ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟

ʹIṣlawhaa faṣbirooo ʹaw laa- taṣbiroo: sawaaaʹun ʻalaykum: ʹinnamaa tujzawna maa- kuñtum taʻmaloon.

அதில் நுழைந்து விடுங்கள். (அதன் வேதனையைப் பொறுத்துச்) சகித்துக் கொண்டிருங்கள்; அல்லது சகிக்காதிருங்கள். (இரண்டும்) உங்களுக்குச் சமமே! (வேதனையில் ஓர் அணுவளவும் குறையாது.) நீங்கள் செய்தவற்றுக்குரிய கூலிதான் உங்களுக்குக் கொடுக்கப்படும்.

Verse 52:17

اِنَّ الْمُتَّقِیْنَ فِیْ جَنّٰتٍ وَّنَعِیْمٍ ۟ۙ

ʹInnal Muttaq̣eena Fee Jannaatiñw Wa-Naʻeem,―

அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்தவர்கள் நிச்சயமாக சொர்க்கங்களிலும் இன்பத்திலும் இருப்பார்கள்.

Verse 52:18

فٰكِهِیْنَ بِمَاۤ اٰتٰىهُمْ رَبُّهُمْ ۚ وَوَقٰىهُمْ رَبُّهُمْ عَذَابَ الْجَحِیْمِ ۟

Faakiheena bimaaa ʹaataahum rabbuhum wa-waq̣aahum Rabbuhum ʻAẓaabal Jaḥeem.

தங்கள் இறைவன் தங்களுக்கு அளித்திருப்பவற்றைப் பற்றியும், நரக வேதனையிலிருந்து தங்களைத் தங்கள் இறைவன் பாதுகாத்துக் கொண்டதைப் பற்றியும் மகிழ்ச்சி அடைந்தவர்களாக இருப்பார்கள்.

Verse 52:19

كُلُوْا وَاشْرَبُوْا هَنِیْٓـًٔا بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟ۙ

Kuloo washraboo haneeeʹam bimaa kuñtum taʻmaloon.

(அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் செய்த நன்மைகளின் காரணமாக (இதில் உள்ளவற்றை) மிக்க தாராளமாகப் புசித்துக் கொண்டும், பருகிக் கொண்டும் இருங்கள்'' (என்றும் கூறப்படும்).

Verse 52:20

مُتَّكِـِٕیْنَ عَلٰی سُرُرٍ مَّصْفُوْفَةٍ ۚ وَزَوَّجْنٰهُمْ بِحُوْرٍ عِیْنٍ ۟

Muttakiʹeena ʻalaa sururim maṣfoofah: wa-zawwaj-naahum̃ biḥoorin ʻeen.

வரிசையாகப் போடப்பட்ட கட்டில்களின் மீது சாய்ந்(து படுத்)தவர்களாக இருப்பர். நாம் அவர்களுக்கு (‘ஹூருல்ஈன்' என்னும்) கண்ணழகிக(ளாகிய கன்னி)களை திருமணம் செய்து வைப்போம்.

Verse 52:21

وَالَّذِیْنَ اٰمَنُوْا وَاتَّبَعَتْهُمْ ذُرِّیَّتُهُمْ بِاِیْمَانٍ اَلْحَقْنَا بِهِمْ ذُرِّیَّتَهُمْ وَمَاۤ اَلَتْنٰهُمْ مِّنْ عَمَلِهِمْ مِّنْ شَیْءٍ ؕ كُلُّ امْرِىۢ بِمَا كَسَبَ رَهِیْنٌ ۟

Wallaẓeena ʹaamanoo wattabaʻathum ẓurriyyatuhum̃ biʹeemaanin ʹalḥaq̣naa bihim ẓurriyyatahum wa-maaa ʹalatnaahum min ʻamalihim miñ shayʹ: kullum riʹim bimaa kasaba raheen.

எந்த நம்பிக்கையாளர்களின் சந்ததிகள், தங்கள் பெற்றோர்களைப் பின்பற்றி நம்பிக்கை கொள்கிறார்களோ (அந்தச் சந்ததிகளின் நன்மைகள் குறைவாக இருந்தும் அவர்களின் பெற்றோர்கள் திருப்தியடையும் பொருட்டு) அவர்களுடைய சந்ததிகளையும் அவர்களுடன் (சொர்க்கத்தில்) சேர்த்துவிடுவோம். இதனால் அவர்களுடைய பெற்றோர்களின் நன்மைகளில் எதையும் நாம் குறைத்துவிட மாட்டோம். ஒவ்வொரு மனிதனும், தான் செய்த செயலுக்குப் பிணையாக இருக்கிறான்.

Verse 52:22

وَاَمْدَدْنٰهُمْ بِفَاكِهَةٍ وَّلَحْمٍ مِّمَّا یَشْتَهُوْنَ ۟

Wa-ʹamdadnaahum̃ bifaakihatiñw walaḥmim mimmaa- yashtahoon.

அவர்கள் விரும்பிய (பற்பல வகை) கனிவர்க்கங்களையும், மாமிசங்களையும் அவர்களுக்கு (நாள்தோறும்) நாம் (ஏராளமாகக்) கொடுத்து வருவோம்.

Verse 52:23

یَتَنَازَعُوْنَ فِیْهَا كَاْسًا لَّا لَغْوٌ فِیْهَا وَلَا تَاْثِیْمٌ ۟

Yatanaazaʻoona feehaa kaʹsal laa lag̣wuñ feehaa wa-laa taʹs̤eem.

ஒருவருடைய கிண்ணத்தை மற்றொருவர் (களிப்பால்) பிடுங்கிக் கொள்வார். (அதனால்) மனத்தாங்கலோ அல்லது மரியாதைக்குறைவோ ஏற்படாது.

Verse 52:24

وَیَطُوْفُ عَلَیْهِمْ غِلْمَانٌ لَّهُمْ كَاَنَّهُمْ لُؤْلُؤٌ مَّكْنُوْنٌ ۟

Wa-yaṭoofu ʻalayhim g̣ilmaanul lahum kaʹannahum Luʹluʹum maknoon.

அவர்களைச் சுற்றி (அவர்களுக்குப் பணி செய்ய எந்நேரமும்) சிறுவர்கள் பலர் சுற்றி வருவார்கள். அவர்கள் பதிந்த முத்துக்களைப் போல் (பிரகாசமாக) இருப்பார்கள்.

Verse 52:25

وَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰی بَعْضٍ یَّتَسَآءَلُوْنَ ۟

Wa-ʹaq̣bala baʻḍuhum ʻalaa baʻḍiñy yatasaaaʹaloon.

அவர்களில் ஒருவர் மற்றொருவரை நோக்கி (அமர்ந்து கொண்டு மகிழ்ச்சியாக) உரையாடுவார்கள்.

Verse 52:26

قَالُوْۤا اِنَّا كُنَّا قَبْلُ فِیْۤ اَهْلِنَا مُشْفِقِیْنَ ۟

Q̣aalooo ʹinnaa kunnaa q̣ablu feee ʹahlinaa mushfiq̣een.

‘‘இதற்கு முன்னர், நாம் நம் குடும்பத்தைப் பற்றி (அவர்களுடைய கதி என்னவாகுமோ என்று) மெய்யாகவே பயந்துகொண்டே இருந்தோம்.

Verse 52:27

فَمَنَّ اللّٰهُ عَلَیْنَا وَوَقٰىنَا عَذَابَ السَّمُوْمِ ۟

Famannal laahu ʻalaynaa wa-waq̣aanaa ʻAẓaabas Samoom.

ஆயினும், அல்லாஹ் நம்மீது அருள் புரிந்து கொடிய வேதனையிலிருந்து நம்மை(யும் நம் குடும்பத்தினரையும்) காப்பாற்றினான்.

Verse 52:28

اِنَّا كُنَّا مِنْ قَبْلُ نَدْعُوْهُ ؕ اِنَّهٗ هُوَ الْبَرُّ الرَّحِیْمُ ۟۠

ʹInnaa kunnaa miñ q̣ablu nadʻooh: ʹinnahoo Huwal Barrur Raḥeem!

இதற்கு முன்னர் (வேதனையிலிருந்து நம்மை காக்கும்படி) மெய்யாகவே நாம் அவனிடம் பிரார்த்தனை செய்துகொண்டு இருந்தோம். மெய்யாகவே அவன்தான் நன்மை செய்பவன், பேரன்புடையவன் ஆவான்'' என்று கூறுவார்கள்.

Verse 52:29

فَذَكِّرْ فَمَاۤ اَنْتَ بِنِعْمَتِ رَبِّكَ بِكَاهِنٍ وَّلَا مَجْنُوْنٍ ۟ؕ

Faẓakkir famaaa ʹañta bi-Niʻmati Rabbika bikaahiniñw walaa majnoon.

(நபியே!) (நிராகரிப்பவர்களுக்கு வேதனையை) ஞாபகமூட்டிக் கொண்டே இருப்பீராக. உமது இறைவனின் அருளால் நீர் குறி சொல்பவருமல்ல; பைத்தியக்காரருமல்ல.

Verse 52:30

اَمْ یَقُوْلُوْنَ شَاعِرٌ نَّتَرَبَّصُ بِهٖ رَیْبَ الْمَنُوْنِ ۟

ʹAm yaq̣ooloona Shaaʻirun natarabbaṣu bihee raybal manoon!

(உம்மைப் பற்றி) அவர்கள் (நீர்) ஒரு கவிஞர்தான் என்று கூறுகின்றனரா? (இக்கூற்றுக்குத் தண்டனையாக அவர்கள் மீது சம்பவிக்கக்கூடிய சோதனையின்) காலச்சக்கரத்தை எதிர்பார்த்திருப்போம்.

Verse 52:31

قُلْ تَرَبَّصُوْا فَاِنِّیْ مَعَكُمْ مِّنَ الْمُتَرَبِّصِیْنَ ۟ؕ

Q̣ul tarabbaṣoo faʹinnee maʻakum minal mutarabbiṣeen!

ஆகவே (அவர்களை நோக்கி, அதை) ‘‘நீங்களும் எதிர்பார்த்திருங்கள். (என்ன நடக்கிறது என்பதை) நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர்பார்த்திருக்கிறேன்'' என்று கூறுவீராக.

Verse 52:32

اَمْ تَاْمُرُهُمْ اَحْلَامُهُمْ بِهٰذَاۤ اَمْ هُمْ قَوْمٌ طَاغُوْنَ ۟ۚ

ʹAm taʹmuruhum ʹaḥlaamuhum̃ bihaaẓaaa ʹam hum q̣awmuñ ṭaag̣oon?

(நபியே! உம்மை குறிகாரர் என்றும், பைத்தியக்காரர் என்றும் கூறும்படி) அவர்களுடைய அறிவுதான் அவர்களைத் தூண்டுகிறதா? அல்லது (இயற்கையாகவே) அவர்கள் விஷமிகள்தானா?

Verse 52:33

اَمْ یَقُوْلُوْنَ تَقَوَّلَهٗ ۚ بَلْ لَّا یُؤْمِنُوْنَ ۟ۚ

ʹAm yaq̣ooloona taq̣awwalah? Bal laa yuʹminoon!

அல்லது (நம் நபியாகிய) இவர் பொய்யாகவே அதைக் கற்பனை செய்து கொண்டாரென்று அவர்கள் கூறுகின்றனரா? மாறாக (மனமுரண்டாகவே) இதை அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை.

Verse 52:34

فَلْیَاْتُوْا بِحَدِیْثٍ مِّثْلِهٖۤ اِنْ كَانُوْا صٰدِقِیْنَ ۟ؕ

Falyaʹtoo biḥadees̤im mis̤liheee ʹiñ kaanoo Ṣaadiq̣een!

(நபியே! இதை நீர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டீரென்று கூறுவதில்) அவர்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால் (அவர்களும் கற்பனை செய்து கொண்டு) இதைப்போன்ற ஒரு வாக்கியத்தைக்கொண்டு வரவும்.

Verse 52:35

اَمْ خُلِقُوْا مِنْ غَیْرِ شَیْءٍ اَمْ هُمُ الْخٰلِقُوْنَ ۟ؕ

ʹAm khuliq̣oo min g̣ayri shayʹin ʹam humul khaaliq̣oon?

அல்லது இவர்கள் எவருடைய படைப்பும் இல்லாமல் தாமாகவே உண்டாகி விட்டனரா? அல்லது இவர்கள் தம்மைத்தாமே படைத்துக் கொண்டனரா?

Verse 52:36

اَمْ خَلَقُوا السَّمٰوٰتِ وَالْاَرْضَ ۚ بَلْ لَّا یُوْقِنُوْنَ ۟ؕ

ʹAm khalaq̣us samaawaati wal-ʹarḍ? Bal laa yooq̣inoon.

அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்தார்களா? மாறாக, (இவற்றை எல்லாம் படைத்தவன் அல்லாஹ்தான். அவனை) இவர்கள் நம்புவதில்லை.

Verse 52:37

اَمْ عِنْدَهُمْ خَزَآىِٕنُ رَبِّكَ اَمْ هُمُ الْمُصَۜیْطِرُوْنَ ۟ؕ

ʹAm ʻiñdahum khazaaaʹinu Rabbika ʹam humul musayṭiroon?

அல்லது இவர்களிடம்தான் உமது இறைவனின் பொக்கிஷங்கள் அனைத்தும் இருக்கின்றனவா? அல்லது இவர்கள் அதைப் பங்கிடக்கூடிய அதிகாரிகளா?

Verse 52:38

اَمْ لَهُمْ سُلَّمٌ یَّسْتَمِعُوْنَ فِیْهِ ۚ فَلْیَاْتِ مُسْتَمِعُهُمْ بِسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟ؕ

ʹAm lahum sullamuñy yastamiʻoona feeh? falyaʹti mustamiʻuhum̃ bisulṭaanim mubeen.

அல்லது இவர்களுக்கு (வானத்தில் ஏறக்கூடிய) ஏணி இருந்து, அதில் (ஏறிச் சென்று, அங்கு நடைபெறும் பேச்சுகளைக்) கேட்டு வருகின்றனரா? அவ்வாறாயின், (அவற்றை) கேட்டு வந்தவர் (அதற்குத்) தெளிவான ஓர் ஆதாரத்தைக் கொண்டுவரவும்.

Verse 52:39

اَمْ لَهُ الْبَنٰتُ وَلَكُمُ الْبَنُوْنَ ۟ؕ

ʹAm lahul banaatu wa-lakumul banoon?

அல்லது (நீங்கள் கூறுகின்றபடி) அல்லாஹ்வுக்குப் பெண் சந்ததிகள்; உங்களுக்கு மட்டும் ஆண் சந்ததிகளா?

Verse 52:40

اَمْ تَسْـَٔلُهُمْ اَجْرًا فَهُمْ مِّنْ مَّغْرَمٍ مُّثْقَلُوْنَ ۟ؕ

ʹAm tasʹaluhum ʹajrañ fahum mim mag̣ramim mus̤q̣aloon?

அல்லது நீர் அவர்களிடம் கூலி ஏதும் கேட்டு அந்தப் பளுவை அவர்கள் சுமக்க முடியாமல் இருக்கின்றனரா?

Verse 52:41

اَمْ عِنْدَهُمُ الْغَیْبُ فَهُمْ یَكْتُبُوْنَ ۟ؕ

ʹAm ʻiñdahumul G̣aybu fahum yaktuboon?

அல்லது இவர்களிடம் மறைவான விஷய(த்தின் ஞான)ம் இருக்கிறதா? இவர்கள் (அதை அல்லாஹ்வைப் போல்) எழுதி வருகின்றனரா?

Verse 52:42

اَمْ یُرِیْدُوْنَ كَیْدًا ؕ فَالَّذِیْنَ كَفَرُوْا هُمُ الْمَكِیْدُوْنَ ۟ؕ

ʹAm yureedoona kaydaa? Fallaẓeena kafaroo humul makeedoon!

அல்லது ஒரு சூழ்ச்சி செய்ய இவர்கள் கருதுகின்றனரா? அவ்வாறாயின், இந்நிராகரிப்பவர்கள்தான் சூழ்ச்சிக்குள்ளாவார்கள்.

Verse 52:43

اَمْ لَهُمْ اِلٰهٌ غَیْرُ اللّٰهِ ؕ سُبْحٰنَ اللّٰهِ عَمَّا یُشْرِكُوْنَ ۟

ʹAm lahum ʹilaahun g̣ayrul laah? Subḥaanal laahi ʻammaa yushrikoon!

அல்லது அல்லாஹ்வையன்றி இவர்களுக்கு வணக்கத்திற்குரிய வேறு ஓர் இறைவன் இருக்கிறானா? இவர்கள் இணை வைப்பவற்றை விட்டும் அல்லாஹ் மிக்க பரிசுத்தமானவன்.

Verse 52:44

وَاِنْ یَّرَوْا كِسْفًا مِّنَ السَّمَآءِ سَاقِطًا یَّقُوْلُوْا سَحَابٌ مَّرْكُوْمٌ ۟

Wa-ʹiñy yaraw kisfam minas samaaaʹi saaq̣iṭañy yaq̣ooloo saḥaabum markoom!

வானம் இடிந்து அதிலிருந்த ஒரு துண்டு விழுவதை இவர்கள் கண்ணால் கண்டபோதிலும் (அது வானமல்ல;) மேகம்தான் என்றும், ஆனால் அது உறைந்து இறுகிவிட்டதென்றும் கூறுவார்கள்.

Verse 52:45

فَذَرْهُمْ حَتّٰی یُلٰقُوْا یَوْمَهُمُ الَّذِیْ فِیْهِ یُصْعَقُوْنَ ۟ۙ

Faẓarhum ḥattaa yulaaq̣oo Yawmahumul laẓee feehi yuṣʻaq̣oon,―

(நபியே!) இவர்களுடைய அறிவு பறந்துவிடக்கூடிய நாளை இவர்கள் சந்திக்கும் வரை நீர் இவர்களை விட்டு விடுவீராக.

Verse 52:46

یَوْمَ لَا یُغْنِیْ عَنْهُمْ كَیْدُهُمْ شَیْـًٔا وَّلَا هُمْ یُنْصَرُوْنَ ۟ؕ

Yawma laa- yug̣nee ʻanhum kayduhum shayʹañw walaa hum yuñṣaroon.

அந்நாளில் இவர்களுடைய சூழ்ச்சிகள் ஒன்றுமே இவர்களுக்குப் பயனளிக்காது. எவர்களுடைய உதவியும் இவர்களுக்குக் கிடைக்காது.

Verse 52:47

وَاِنَّ لِلَّذِیْنَ ظَلَمُوْا عَذَابًا دُوْنَ ذٰلِكَ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟

Wa-ʹinna lillaẓeena z̤̣alamoo ʻaẓaabañ doona ẓaalika wa-laakinna ʹaks̤arahum laa- yaʻlamoon.

நிச்சயமாக இவ்வக்கிரமக்காரர்களுக்கு (மறுமையின்) வேதனைக்கு முன்னால் (இம்மையிலும்) வேதனை இருக்கிறது. எனினும் அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்துகொள்ள மாட்டார்கள்.

Verse 52:48

وَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ فَاِنَّكَ بِاَعْیُنِنَا وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ حِیْنَ تَقُوْمُ ۟ۙ

Waṣbir liḥukmi Rabbika faʹinnaka biʹaʻyuninaa wa-sabbiḥ bi-Ḥamdi Rabbika ḥeena taq̣oom,

(நபியே!) உமது இறைவனின் தீர்ப்பைப் பொறுமையாக எதிர்பார்த்திருப்பீராக. நிச்சயமாக நீர் நம் கண்களுக்கு முன்பாகவே இருக்கிறீர். (ஆகவே, அவர்கள் உம்மைத் தங்கள் விருப்பப்படி துன்புறுத்த முடியாது.) ஆயினும், நீர் (நித்திரையிலிருந்து) எழுந்த நேரத்தில் உமது இறைவனின் புகழைக்கூறித் துதி செய்வீராக!

Verse 52:49

وَمِنَ الَّیْلِ فَسَبِّحْهُ وَاِدْبَارَ النُّجُوْمِ ۟۠

Wa-minal layli fasabbiḥhu wa-ʹidbaaran nujoom!

இரவின் ஒரு பாகத்திலும், நட்சத்திரங்கள் மறையும் (காலை) நேரத்திலும் அவனை துதி செய்வீராக!