Home  /  Quran  /  Surah
Loading...
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

Surah At-Tin

Surah At-Tin (The Fig) is Surah 95 of the Holy Quran, a Meccan Surah with 8 verses, available here in Tamil.

Surah 95 Meccan 8 verses Tamil

Verse 95:1

وَالتِّیْنِ وَالزَّیْتُوْنِ ۟ۙ

Wat-Teeni waz-Zaytooni,

அத்தியின் மீதும்,ஜெய்தூனின் மீதும் சத்தியமாக!

Verse 95:2

وَطُوْرِ سِیْنِیْنَ ۟ۙ

Wa-Ṭoori Seeneena,

ஸினாய் மலையின் மீதும் சத்தியமாக!

Verse 95:3

وَهٰذَا الْبَلَدِ الْاَمِیْنِ ۟ۙ

Wa-haaẓal Baladil ʹameen,―

அபயமளிக்கும் இந்நகரத்தின் மீதும் சத்தியமாக,

Verse 95:4

لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِیْۤ اَحْسَنِ تَقْوِیْمٍ ۟ؗ

Laq̣ad khalaq̣nal ʹiñsaana feee ʹaḥsani taq̣weem,

நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான அமைப்பில் படைத்திருக்கிறோம்.

Verse 95:5

ثُمَّ رَدَدْنٰهُ اَسْفَلَ سٰفِلِیْنَ ۟ۙ

S̤umma radadnaahu ʹasfala saafileen,―

(அவனுடைய தீய நடத்தையின் காரணமாகப்) பின்னர், அவனைத் தாழ்ந்தவர்களிலும் தாழ்ந்தவனாக நாம் ஆக்கி விடுகிறோம்.

Verse 95:6

اِلَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَلَهُمْ اَجْرٌ غَیْرُ مَمْنُوْنٍ ۟ؕ

ʹIl-lal laẓeena ʹaamanoo wa-ʻamiluṣ ṣaaliḥaati falahum ʹajrun g̣ayru mamnoon.

ஆயினும், எவர்கள் நம்பிக்கைகொண்டு நற்செயல்களைச் செய்து வருகிறார்களோ அவர்களைத் தவிர. (அவர்கள் மேலான தன்மையில் இருப்பதுடன்) அவர்களுக்கு (என்றென்றுமே) தடைபடாத (நற்)கூலியுண்டு.

Verse 95:7

فَمَا یُكَذِّبُكَ بَعْدُ بِالدِّیْنِ ۟ؕ

Famaa yukaẓẓibuka baʻdu bid-Deen?

கூலி கொடுக்கும் நாளைப் பற்றி (நபியே!) இதற்குப் பின்னர், உம்மை எவர்தான் பொய்யாக்க முடியும்?

Verse 95:8

اَلَیْسَ اللّٰهُ بِاَحْكَمِ الْحٰكِمِیْنَ ۟۠

ʹAlaysal laahu biʹAḥkamil ḥaakimeen?

தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம், அல்லாஹ் மிக மேலான நீதிபதியல்லவா?