Home  /  Quran  /  Surah
Loading...
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

Surah Ar-Rahman

Surah Ar-Rahman (The Beneficent) is Surah 55 of the Holy Quran, a Medinan Surah with 78 verses, available here in Tamil.

Surah 55 Medinan 78 verses Tamil

Verse 55:1

اَلرَّحْمٰنُ ۟ۙ

ʹAR-RAḤ-MAAN.

(நபியே! அல்லாஹ்தான்) அளவற்ற அருளாளன்,

Verse 55:2

عَلَّمَ الْقُرْاٰنَ ۟ؕ

ʻAllamal Q̣urʹaan.

(அவன்தான்) இந்த குர்ஆனை (உங்களுக்குக்) கற்றுக் கொடுத்தான்.

Verse 55:3

خَلَقَ الْاِنْسَانَ ۟ۙ

Khalaq̣al ʹiñsaan.

அவனே மனிதனைப் படைத்தான்.

Verse 55:4

عَلَّمَهُ الْبَیَانَ ۟

ʻAllamahul bayaan.

அவனே மனிதனுக்குப் பேசவும் கற்பித்தான்.

Verse 55:5

اَلشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ ۟ۙ

ʹAshshamsu walq̣amaru biḥusbaan;

சூரியனும் சந்திரனும் (அவற்றுக்கு இறைவன் ஏற்படுத்திய) கணக்கின்படியே (செல்கின்றன).

Verse 55:6

وَّالنَّجْمُ وَالشَّجَرُ یَسْجُدٰنِ ۟

Wannajmu washshajaru yasjudaan.

செடிகள், (கொடிகள்,) மரங்கள் (ஆகிய அனைத்தும் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டுச்) சிரம் பணிகின்றன.

Verse 55:7

وَالسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِیْزَانَ ۟ۙ

Was-Samaaaʹa rafaʻahaa wa-waḍaʻal Meezaan

,8. அவனே வானத்தை உயர்த்தினான். மேலும் (உங்கள் வியாபாரத்திற்காக) தராசை அமைத்தான். ஆகவே, நீங்கள் நிறுவையில் அநியாயம் செய்யாதீர்கள்.

Verse 55:8

اَلَّا تَطْغَوْا فِی الْمِیْزَانِ ۟

ʹAllaa taṭg̣aw fil meezaan.

,8. அவனே வானத்தை உயர்த்தினான். மேலும் (உங்கள் வியாபாரத்திற்காக) தராசை அமைத்தான். ஆகவே, நீங்கள் நிறுவையில் அநியாயம் செய்யாதீர்கள்.

Verse 55:9

وَاَقِیْمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِیْزَانَ ۟

Wa-ʹaq̣eemul wazna bilq̣isṭi wa-laa tukhsirul meezaan.

ஆகவே, நீங்கள் நீதமாக நிறுங்கள். எடையைக் குறைத்து விடாதீர்கள்.

Verse 55:10

وَالْاَرْضَ وَضَعَهَا لِلْاَنَامِ ۟ۙ

Wal-ʹarḍa waḍaʻahaa lilʹanaam:

படைப்புகள் வசித்திருக்க வசதியாகப் பூமியை அமைத்தான்.

Verse 55:11

فِیْهَا فَاكِهَةٌ وَّالنَّخْلُ ذَاتُ الْاَكْمَامِ ۟ۖ

Feehaa faakihatuñw wan-nakhlu ẓaatul ʹakmaam;

அதில் (பலவகை) கனிவர்க்கங்களும் (குலைகள் நிறைந்த) பாளைகளை உடைய பேரீச்சை மரங்களும் உற்பத்தியாகின்றன.

Verse 55:12

وَالْحَبُّ ذُو الْعَصْفِ وَالرَّیْحَانُ ۟ۚ

Walḥabbu ẓul ʻaṣfi war-rayḥaan.

உமியால் மூடப்பட்ட தானியங்களும், வாசனைப் புற்பூண்டுகளும் உண்டாகின்றன.

Verse 55:13

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

Fabiʹayyi ʹaalaaaʹi Rabbikumaa tukaẓẓibaan?

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

Verse 55:14

خَلَقَ الْاِنْسَانَ مِنْ صَلْصَالٍ كَالْفَخَّارِ ۟ۙ

Khalaq̣al ʹiñsaana miñ ṣalṣaaliñ kalfakhkhaar,

சுட்ட பாத்திரத்தைப் போல் (அதை தட்டும்போது ‘கன் கன்' என்று) சப்தமிடும் களிமண்ணால் அவன் (முதல்) மனிதரைப் படைத்தான்.

Verse 55:15

وَخَلَقَ الْجَآنَّ مِنْ مَّارِجٍ مِّنْ نَّارٍ ۟ۚ

Wa-khalaq̣al Jaaanna mim maarijim min Naar:

நெருப்பின் கொழுந்தினால் அவன் ஜின்னைப் படைத்தான்.

Verse 55:16

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

Fabiʹayyi ʹaalaaaʹi Rabbikumaa tukaẓẓibaan?

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

Verse 55:17

رَبُّ الْمَشْرِقَیْنِ وَرَبُّ الْمَغْرِبَیْنِ ۟ۚ

Rabbul Mashriq̣ayni wa-rabbul Mag̣ribayn:

(சூரியன், சந்திரன் இரண்டும்) உதிக்கும் இரு திசைகளுக்கும் அவனே சொந்தக்காரன். மேலும், (அவை) மறைகின்ற இரு திசைகளுக்கும் அவனே சொந்தக்காரன்.

Verse 55:18

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

Fabiʹayyi ʹaalaaʹi Rabbikumaa tukaẓẓibaan?

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

Verse 55:19

مَرَجَ الْبَحْرَیْنِ یَلْتَقِیٰنِ ۟ۙ

Marajal baḥrayni yaltaq̣iyaan:

இரு கடல்களையும் அவை சந்தித்துக் கொள்ளுமாறு அவனே இணைத்தான்.

Verse 55:20

بَیْنَهُمَا بَرْزَخٌ لَّا یَبْغِیٰنِ ۟ۚ

Baynahumaa Barzakhul laa yabg̣iyaan:

ஆயினும், அவை இரண்டுக்கிடையில் ஒரு தடுப்புண்டு. (அத்தடுப்பை) அவ்விரண்டும் மீறாது.

Verse 55:21

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

Fabiʹayyi ʹaalaaaʹi Rabbikumaa tukaẓẓibaan?

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

Verse 55:22

یَخْرُجُ مِنْهُمَا اللُّؤْلُؤُ وَالْمَرْجَانُ ۟ۚ

Yakhruju minhumal Luʹluʹu wal-Marjaan:

அவ்விரு கடல்களிலிருந்தே முத்து, பவளம் (போன்றவை) உற்பத்தியாகின்றன.

Verse 55:23

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

Fabiʹayyi ʹaalaaaʹi Rabbikumaa tukaẓẓibaan?

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

Verse 55:24

وَلَهُ الْجَوَارِ الْمُنْشَـٰٔتُ فِی الْبَحْرِ كَالْاَعْلَامِ ۟ۚ

Wa-lahul Jawaaril muñ-shaʹaaatu fil baḥri kal-ʹaʻlaam:

கடலில் மலைகளைப் போல செல்லும் உயர்ந்த கப்பல்களும் அவனுக்குரியனவே.

Verse 55:25

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟۠

Fabiʹayyi ʹaalaaaʹi Rabbikumaa tukaẓẓibaan?

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

Verse 55:26

كُلُّ مَنْ عَلَیْهَا فَانٍ ۟ۚۖ

Kullu man ʻalayhaa faan:

பூமியிலுள்ள அனைத்தும் அழிந்தேபோகும்.

Verse 55:27

وَّیَبْقٰی وَجْهُ رَبِّكَ ذُو الْجَلٰلِ وَالْاِكْرَامِ ۟ۚ

Wa-yabq̣aa Wajhu Rabbika Ẓul Jalaali wal-ʹIkraam.

மிக கண்ணியமும் பெருமையும் உடைய உமது இறைவனின் திருமுகம் மட்டும் (அழியாது) நிலைத்திருக்கும்.

Verse 55:28

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

Fabiʹayyi ʹaalaaaʹi Rabbikumaa tukaẓẓibaan?

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

Verse 55:29

یَسْـَٔلُهٗ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ كُلَّ یَوْمٍ هُوَ فِیْ شَاْنٍ ۟ۚ

Yasʹaluhoo mañ fis samaawaati walarḍ: kulla Yawmin Huwa fee shaʹn!

வானங்களிலும் பூமியிலுமுள்ள அனைத்தும் (தங்களுக்கு வேண்டியவற்றை) அவனிடமே கேட்கின்றன. (அவன் செயலற்றிருக்கவில்லை.) ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு வேலையில் இருக்கிறான்.

Verse 55:30

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

Fabiʹayyi ʹaalaaʹi Rabbikumaa tukaẓẓibaan?

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

Verse 55:31

سَنَفْرُغُ لَكُمْ اَیُّهَ الثَّقَلٰنِ ۟ۚ

Sanafrug̣u lakum ʹayyuhas̤ s̤aq̣alaan!

(மனித, ஜின் ஆகிய) இரு வகுப்பார்களே! நிச்சயமாக அதிசீக்கிரத்தில் நாம் உங்களை கவனிக்க முன்வருவோம்.

Verse 55:32

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

Fabiʹayyi ʹaalaaaʹi Rabbikumaa tukaẓẓibaan?

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

Verse 55:33

یٰمَعْشَرَ الْجِنِّ وَالْاِنْسِ اِنِ اسْتَطَعْتُمْ اَنْ تَنْفُذُوْا مِنْ اَقْطَارِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ فَانْفُذُوْا ؕ لَا تَنْفُذُوْنَ اِلَّا بِسُلْطٰنٍ ۟ۚ

Yaa-Maʻsharal jinni wal-ʹiñsi ʹinis tataʻtum ʹañ tañfuẓoo min ʹaq̣ṭaaris samaawaati wal-ʹarḍi fañfuẓoo! laa- tañfuẓoona ʹillaa bisulṭaan!

மனித, ஜின் கூட்டத்தார்களே! நீங்கள் வானங்கள் இன்னும் பூமியின் எல்லையைக் கடந்து சென்றுவிட உங்களால் கூடுமாயின் அவ்வாறு சென்று விடுங்கள். ஆயினும், (அவற்றை ஆட்சி புரியக்கூடிய) மிகப் பெரும் பலத்தைக் கொண்டே தவிர நீங்கள் செல்ல முடியாது.

Verse 55:34

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

Fabiʹayyi ʹaalaaaʹi Rabbikumaa tukaẓẓibaan?

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

Verse 55:35

یُرْسَلُ عَلَیْكُمَا شُوَاظٌ مِّنْ نَّارٍ ۙ۬ وَّنُحَاسٌ فَلَا تَنْتَصِرٰنِ ۟ۚ

Yursalu ʻalaykumaa shuwaaz̤̣um min naariñwwa nuḥaasuñ falaa tañtaṣiraan;

(நீங்கள் அவற்றை விட்டும் வெளிப்பட விரும்பிச் சென்றால்) உங்கள் மீது அக்னி ஜூவாலையும், உருக்கப்பட்ட செம்பும் எறியப்படும். அதை நீங்கள் தடுத்துக்கொள்ள முடியாது.

Verse 55:36

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

Fabiʹayyi ʹaalaaaʹi Rabbikumaa tukaẓẓibaan?

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

Verse 55:37

فَاِذَا انْشَقَّتِ السَّمَآءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ ۟ۚ

Faʹiẓañ shaq̣q̣atis samaaaʹu fakaanat wardatañ kaddihaan:

(யுக முடிவுக்காக) வானம் பிளக்கும் சமயத்தில் அது (ஜைத்தூன்) எண்ணெய்யைப் போல் ரோஜா வர்ணமாகிவிடும்.

Verse 55:38

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

Fabiʹayyi ʹaalaaaʹi Rabbikumaa tukaẓẓibaan?

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

Verse 55:39

فَیَوْمَىِٕذٍ لَّا یُسْـَٔلُ عَنْ ذَنْۢبِهٖۤ اِنْسٌ وَّلَا جَآنٌّ ۟ۚ

Fayawmaʹiẓil laa yusʹalu ʻañ ẓambiheee ʹiñsuñw Walaa jaaann,―

அந்நாளில், மனிதனிடமும், ஜின்னிடமும் அவர்களின் பாவத்தைப் பற்றிக் கேட்கப்பட மாட்டாது. (அவர்களின் குறிப்பைக் கொண்டே அறிந்து கொள்ளப்படும்.).

Verse 55:40

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

Fabiʹayyi ʹaalaaaʹi Rabbikumaa tukaẓẓibaan?

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

Verse 55:41

یُعْرَفُ الْمُجْرِمُوْنَ بِسِیْمٰهُمْ فَیُؤْخَذُ بِالنَّوَاصِیْ وَالْاَقْدَامِ ۟ۚ

Yuʻraful mujrimoona biseemaahum fayuʹkhaẓu binnawaaṣee wal-ʹaq̣daam.

குற்றவாளிகள், அவர்களின் முகக் குறியைக் கொண்டே அறிந்து கொள்ளப்படுவார்கள். அவர்களுடைய உச்சி மயிரையும், பாதங்களையும் பிடிக்கப்(பட்டு பின்னர், நரகத்தில் தூக்கி எறியப்)படும்.

Verse 55:42

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

Fabiʹayyi ʹaalaaaʹi Rabbikumaa tukaẓẓibaan?

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

Verse 55:43

هٰذِهٖ جَهَنَّمُ الَّتِیْ یُكَذِّبُ بِهَا الْمُجْرِمُوْنَ ۟ۘ

Haaẓihee Jahannamul latee yukaẓẓibu bihal mujrimoon;

இதுதான் குற்றவாளிகள் பொய்யாக்கிக் கொண்டிருந்த நரகம்.

Verse 55:44

یَطُوْفُوْنَ بَیْنَهَا وَبَیْنَ حَمِیْمٍ اٰنٍ ۟ۚ

Yaṭoofoona baynahaa wa-bayna ḥameemin ʹaan!

இதற்கும், கொதித்த தண்ணீருக்கும் இடையில் (இரு தலைக்கொள்ளியில் சிக்கிய எறும்பைப் போல் அவர்கள்) சுற்றித் திரிவார்கள்.

Verse 55:45

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟۠

Fabiʹayyi ʹaalaaaʹi Rabbikumaa tukaẓẓibaan?

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

Verse 55:46

وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهٖ جَنَّتٰنِ ۟ۚ

Wa-liman khaafa maq̣aama Rabbihee Jannataan,―

எவன் தன் இறைவனின் சந்திப்பைப் பற்றிப் பயப்படுகின்றானோ, அவனுக்குச் (சொர்க்கத்தில்) இரு சோலைகள் உண்டு.

Verse 55:47

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟ۙ

Fabiʹayyi ʹaalaaaʹi Rabbikumaa tukaẓẓibaan?

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

Verse 55:48

ذَوَاتَاۤ اَفْنَانٍ ۟ۚ

Ẓawaataaa ʹafnaan:―

அவ்விரண்டும், கிளைகள் அடர்ந்து நிறைந்த மரங்களை உடைய சோலைகள்.

Verse 55:49

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

Fabiʹayyi ʹaalaaaʹi Rabbikumaa tukaẓẓibaaan?

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

Verse 55:50

فِیْهِمَا عَیْنٰنِ تَجْرِیٰنِ ۟ۚ

Feehimaa ʻaynaani tajriyaan:―

அவ்விரண்டிலும் இரு ஊற்றுக்கள் ஓடிக் கொண்டே இருக்கும்.

Verse 55:51

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

Fabiʹayyi ʹaalaaaʹi Rabbikumaa tukaẓẓibaan?

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

Verse 55:52

فِیْهِمَا مِنْ كُلِّ فَاكِهَةٍ زَوْجٰنِ ۟ۚ

Feehimaa miñ kulli faakihatiñ zawjaan.

அவ்விரண்டிலும் ஒவ்வொரு கனிவர்க்கத்திலும் (உலர்ந்தும், பச்சையுமாக) இரு வகை உண்டு.

Verse 55:53

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

Fabiʹayyi ʹaalaaaʹi Rabbikumaa tukaẓẓibaan?

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

Verse 55:54

مُتَّكِـِٕیْنَ عَلٰی فُرُشٍ بَطَآىِٕنُهَا مِنْ اِسْتَبْرَقٍ ؕ وَجَنَا الْجَنَّتَیْنِ دَانٍ ۟ۚ

Muttakiʹeena ʻalaa furushim baṭaaaʹinuhaa min ʹistabraq̣: wa-janal jannatayni daan.

'இஸ்தப்ரக்' என்னும் பட்டு விரிப்பின் மீது (உள்ள பஞ்சணைகளில்) சாய்ந்தவர்களாய் இருப்பார்கள். அவ்விரு சோலைகளில் கனிவர்க்கங்கள் அடர்ந்திருக்கும்.

Verse 55:55

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

Fabiʹayyi ʹaalaaaʹi Rabbikumaa tukaẓẓibaan?

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

Verse 55:56

فِیْهِنَّ قٰصِرٰتُ الطَّرْفِ ۙ لَمْ یَطْمِثْهُنَّ اِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَآنٌّ ۟ۚ

Feehinna q̣aaṣiraatuṭ ṭarfi lam yaṭmis̤hunna ʹiñsuñ q̣ablahum wa-laa jaaann;―

அவற்றில், கீழ் நோக்கிய பார்வையையுடைய (அழகிய) கன்னிகைகளும் இருப்பார்கள். இவர்களுக்கு முன்னர், அவர்களை மனிதர்களோ ஜின்களோ தீண்டியதில்லை.

Verse 55:57

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟ۚ

Fabiʹayyi ʹaalaaaʹi Rabbikumaa tukaẓẓibaan?

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

Verse 55:58

كَاَنَّهُنَّ الْیَاقُوْتُ وَالْمَرْجَانُ ۟ۚ

Kaʹannahunnal yaaq̣ootu wal-marjaan.

அவர்கள், சிகப்பு மாணிக்கத்தைப்போலும் பவளங்களைப்போலும் இருப்பார்கள்.

Verse 55:59

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

Fabiʹayyi ʹaalaaaʹi Rabbikumaa tukaẓẓibaan?

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

Verse 55:60

هَلْ جَزَآءُ الْاِحْسَانِ اِلَّا الْاِحْسَانُ ۟ۚ

Hal Jazaaaʹul ʹIḥsaani ʹillal ʹIḥsaan?

(உங்களின்) நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா?

Verse 55:61

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

Fabiʹayyi ʹaalaaaʹi Rabbikumaa tukaẓẓibaan?

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

Verse 55:62

وَمِنْ دُوْنِهِمَا جَنَّتٰنِ ۟ۚ

Wa-miñ doonihimaa Jannataan,―

இவ்விரண்டைத் தவிர, (சொர்க்கத்தில் அவர்களுக்கு) மேலும் இரு சோலைகளுண்டு.

Verse 55:63

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟ۙ

Fabiʹayyi ʹaalaaaʹi Rabbikumaa tukaẓẓibaan?

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

Verse 55:64

مُدْهَآمَّتٰنِ ۟ۚ

Mudhaaammataan.

அவ்விரண்டும், கரும் பச்சை நிறமுடையன.

Verse 55:65

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟ۚ

Fabiʹayyi ʹaalaaaʹi Rabbikumaa tukaẓẓibaan?

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

Verse 55:66

فِیْهِمَا عَیْنٰنِ نَضَّاخَتٰنِ ۟ۚ

Feehimaa ʻaynaani naḍ-ḍaakhataan:

அவ்விரண்டிலும், தொடர்ந்து பொங்கிக்கொண்டே இருக்கின்ற இரு ஊற்றுக்கண்கள் உண்டு.

Verse 55:67

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

Fabiʹayyi ʹaalaaaʹi Rabbikumaa tukaẓẓibaan?

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

Verse 55:68

فِیْهِمَا فَاكِهَةٌ وَّنَخْلٌ وَّرُمَّانٌ ۟ۚ

Feehimaa faakihatuñw wanakhluñw warummaan:

அவ்விரண்டிலும், (பலவகை) கனிகளும், பேரீச்சையும், மாதுளையும் உண்டு.

Verse 55:69

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟ۚ

Fabiʹayyi ʹaalaaaʹi Rabbikumaa tukaẓẓibaan?

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

Verse 55:70

فِیْهِنَّ خَیْرٰتٌ حِسَانٌ ۟ۚ

Feehinna khayraatun ḥisaan;

அவற்றில், சிறந்த குணமுடைய அழகிகள் உள்ளனர்.

Verse 55:71

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟ۚ

Fabiʹayyi ʹaalaaaʹi Rabbikumaa tukaẓẓibaan?

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

Verse 55:72

حُوْرٌ مَّقْصُوْرٰتٌ فِی الْخِیَامِ ۟ۚ

Ḥoorum maq̣ṣooraatuñ fil khiyaam;―

(அவர்கள்தான்) ‘ஹூர்' (என்னும் வெந்நிற) கண்ணழகிகள் (முத்து மற்றும் பவளங்களால் ஆன) கூடாரங்களில் வசித்திருப்பார்கள்.

Verse 55:73

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟ۚ

Fabiʹayyi ʹaalaaaʹi Rabbikumaa tukaẓẓibaan?

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

Verse 55:74

لَمْ یَطْمِثْهُنَّ اِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَآنٌّ ۟ۚ

Lam yaṭmis̤hunna ʹiñsuñ q̣ablahum wa-laa jaaan;

இவர்களுக்கு முன்னர் அப்பெண்களை, மனிதர்களோ ஜின்களோ தீண்டியதில்லை.

Verse 55:75

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

Fabiʹayyi ʹaalaaaʹi Rabbikumaa tukaẓẓibaan?

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

Verse 55:76

مُتَّكِـِٕیْنَ عَلٰی رَفْرَفٍ خُضْرٍ وَّعَبْقَرِیٍّ حِسَانٍ ۟ۚ

Muttakiʹeena ʻalaa rafrafin khuḍriñw waʻabq̣ariyyin ḥisaan.

(அவர்களின் கணவர்கள்) சிறந்த பசுமையான, இரத்தினக் கம்பளங்களில் திண்டு தலையணைகளின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.

Verse 55:77

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

Fabiʹayyi ʹaalaaaʹi Rabbikumaa tukaẓẓibaan?

ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

Verse 55:78

تَبٰرَكَ اسْمُ رَبِّكَ ذِی الْجَلٰلِ وَالْاِكْرَامِ ۟۠

Tabaarak asmu Rabbika Ẓil Jalaali wal-ʹIkraam.

(நபியே!) மிக்க சிறப்பும், கண்ணியமும் உள்ள உமது இறைவனின் திருப்பெயர் மிக பாக்கியமுடையது.