Home  /  Quran  /  Surah
Loading...
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

Surah Al-Waqiah

Surah Al-Waqiah (The Inevitable) is Surah 56 of the Holy Quran, a Meccan Surah with 96 verses, available here in Tamil.

Surah 56 Meccan 96 verses Tamil

Verse 56:1

اِذَا وَقَعَتِ الْوَاقِعَةُ ۟ۙ

ʹIẓaa wa-q̣aʻatil WAAQ̣IʻAH,

(யுகமுடிவு என்னும்) மாபெரும் சம்பவம் நிகழ்ந்தால்,

Verse 56:2

لَیْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ ۟ۘ

Laysa liwaq̣ʻatihaa kaaẓibah.

அதை(த் தடை செய்து) பொய்யாக்குவதற்கு ஒன்றுமில்லை.

Verse 56:3

خَافِضَةٌ رَّافِعَةٌ ۟ۙ

Khaafiḍatur Raafiʻah;

அது (பலரின் பதவிகளைத்) தாழ்த்திவிடும். (பலரின் பதவிகளை) உயர்த்திவிடும்.

Verse 56:4

اِذَا رُجَّتِ الْاَرْضُ رَجًّا ۟ۙ

ʹIẓaa rujjatil ʹarḍu rajjaa,

(அச்சமயம்) மிக்க பலமான பூகம்பம் ஏற்பட்டு,

Verse 56:5

وَّبُسَّتِ الْجِبَالُ بَسًّا ۟ۙ

Wa-bussatil jibaalu bassaa,

மலைகள் (பெயர்ந்து ஒன்றோடொன்று மோதி) தூள் தூளாகப் பறந்து விடும்.

Verse 56:6

فَكَانَتْ هَبَآءً مُّنْۢبَثًّا ۟ۙ

Fakaanat habaaaʹam mumbas̤s̤aa,

அவை (ஆகாயத்தில்) தூசிகளாகப் பறந்துவிடும்.

Verse 56:7

وَّكُنْتُمْ اَزْوَاجًا ثَلٰثَةً ۟ؕ

Wa-kuñtum ʹazwaajañ s̤alaas̤ah.

(அந்நாளில்) நீங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிந்து விடுவீர்கள்.

Verse 56:8

فَاَصْحٰبُ الْمَیْمَنَةِ ۙ۬ مَاۤ اَصْحٰبُ الْمَیْمَنَةِ ۟ؕ

FaʹAṣḥaabul Maymanah; Maaa ʹAṣḥaabul Maymanah?

(முதலாவது:) வலப்பக்கத்திலுள்ளவர்கள். வலப்பக்கத்திலுள்ள (இ)வர்கள் யார்? (என்பதை அறிவீர்களா? அவர்கள் மிக பாக்கியவான்கள்.)

Verse 56:9

وَاَصْحٰبُ الْمَشْـَٔمَةِ ۙ۬ مَاۤ اَصْحٰبُ الْمَشْـَٔمَةِ ۟ؕ

Wa-ʹAṣḥaabul mashʹamah,― Maaa ʹAṣḥaabul Mashʹamah?

(இரண்டாவது:) இடப்பக்கத்திலுள்ளவர்கள். இடப்பக்கத்திலுள்ள (இ)வர்கள் யார்? (என்பதை அறிவீர்களா? இவர்கள் மிக்க துரதிர்ஷ்டசாலிகள்.)

Verse 56:10

وَالسّٰبِقُوْنَ السّٰبِقُوْنَ ۟ۚۙ

Was-Saabiq̣oonas Saabiq̣oon.

(மூன்றாவது:) முன்சென்று விட்டவர்கள். (இவர்கள் நன்மையான காரியங்களில் மற்ற அனைவரையும்விட) முன்சென்று விட்டவர்கள்.

Verse 56:11

اُولٰٓىِٕكَ الْمُقَرَّبُوْنَ ۟ۚ

ʹUlaaaʹikal Muq̣arraboon:

இவர்கள் தங்கள் (இறைவனுக்கு) மிக்க நெருங்கியவர்கள்.

Verse 56:12

فِیْ جَنّٰتِ النَّعِیْمِ ۟

Fee Jannaatin Naʻeem:

இவர்கள் இன்பம் தரும் சொர்க்கங்களில் இருப்பார்கள்.

Verse 56:13

ثُلَّةٌ مِّنَ الْاَوَّلِیْنَ ۟ۙ

S̤ullatum minal ʹawwaleen,

(இவர்களுடன்) முதலாவது வகுப்பாரில் ஒரு பெருங்கூட்டத்தினரும்,

Verse 56:14

وَقَلِیْلٌ مِّنَ الْاٰخِرِیْنَ ۟ؕ

Wa-q̣aleelum minal ʹaakhireen.

பின்னுள்ளோரில் ஒரு சொற்ப தொகையினரும் இருப்பார்கள்.

Verse 56:15

عَلٰی سُرُرٍ مَّوْضُوْنَةٍ ۟ۙ

ʻAlaa sururim mawḍoonah,

பொன் வேலைப்பாடுள்ள உன்னத கட்டில்கள் மீது,

Verse 56:16

مُّتَّكِـِٕیْنَ عَلَیْهَا مُتَقٰبِلِیْنَ ۟

Muttakiʹeena ʻalayhaa mutaq̣aabileen.

ஒருவரை ஒருவர் முகம் நோக்கி(ப் பஞ்சணையின் மீது) சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.

Verse 56:17

یَطُوْفُ عَلَیْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُوْنَ ۟ۙ

Yaṭoofu ʻalayhim wildaanum mukhalladoon,

என்றென்றுமே குழந்தைகளாக இருக்கக்கூடிய சிறுவர்கள் (பணி செய்ய எந்நேரமும்) இவர்களைச் சுற்றிக் கொண்டே இருப்பார்கள்;

Verse 56:18

بِاَكْوَابٍ وَّاَبَارِیْقَ ۙ۬ وَكَاْسٍ مِّنْ مَّعِیْنٍ ۟ۙ

Biʹakwaabiñw Waʹabaareeq̣a, wa-kaʹsim mim maʻeen:

இன்பமான குடிபானம் நிறைந்த குவளைகளையும், கெண்டிகளையும், கிண்ணங்களையும் தூக்கிக்கொண்டு (அவர்களைச் சுற்றிக்கொண்டே இருப்பார்கள்).

Verse 56:19

لَّا یُصَدَّعُوْنَ عَنْهَا وَلَا یُنْزِفُوْنَ ۟ۙ

Laa- yuṣaddaʻoona ʻanhaa wa-laa yuñzifoon:

(அக்குடிபானங்களால்) இவர்களுக்குத் தலைவலியும் ஏற்படாது; அவர்களுடைய புத்தியும் மாறாது.

Verse 56:20

وَفَاكِهَةٍ مِّمَّا یَتَخَیَّرُوْنَ ۟ۙ

Wa-faakihatim mimmaa yatakhayyaroon;

இவர்கள் பிரியப்பட்ட கனிவர்க்கங்களையும்,

Verse 56:21

وَلَحْمِ طَیْرٍ مِّمَّا یَشْتَهُوْنَ ۟ؕ

Wa-laḥmi ṭayrim mimmaa yashtahoon.

விரும்பிய பட்சிகளின் மாமிசத்தையும் (கைகளில் ஏந்தி சுற்றி வருவார்கள்).

Verse 56:22

وَحُوْرٌ عِیْنٌ ۟ۙ

Wa-ḥoorun ʻeen,―

(அங்கு இவர்களுக்கு) ‘ஹூருல் ஈன்' (என்னும் கண்ணழகிகளான மனைவி)களும் இருப்பார்கள்.

Verse 56:23

كَاَمْثَالِ اللُّؤْلُوءِ الْمَكْنُوْنِ ۟ۚ

Kaʹams̤aalil luʹluʹil maknoon.

அவர்கள் பேணிப் பாதுகாக்கப்படும் முத்துக்களைப் போல் இருப்பார்கள்.

Verse 56:24

جَزَآءً بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟

Jazaaaʹam bimaa kaanoo yaʻmaloon.

இவை அனைத்தும் இவர்கள் செய்த நன்மைகளுக்குக் கூலியாகக் கிடைக்கும்.

Verse 56:25

لَا یَسْمَعُوْنَ فِیْهَا لَغْوًا وَّلَا تَاْثِیْمًا ۟ۙ

Laa- yasmaʻoona feehaa lag̣wañw walaa taʹs̤eemaa,―

அங்கு இவர்கள் ஒழுங்கீனமான வார்த்தைகளையும், வீணான பேச்சுக்களையும் செவியுற மாட்டார்கள்.

Verse 56:26

اِلَّا قِیْلًا سَلٰمًا سَلٰمًا ۟

ʹIllaa q̣eelañ Salaamañ Salaamaa.

ஆயினும், ஸலாம்! ஸலாம்! (சாந்தியும், சமாதானமும்) என்ற சப்தத்தையே செவியுறுவார்கள்.

Verse 56:27

وَاَصْحٰبُ الْیَمِیْنِ ۙ۬ مَاۤ اَصْحٰبُ الْیَمِیْنِ ۟ؕ

Wa-ʹAṣḥaabul Yameen,― maaa ʹAṣḥaabul Yameen

வலப்பக்கத்தில் உள்ளவர்களின் பாக்கியம்தான் என்ன! வலப்பக்கத்தில் இருக்கும் அவர்கள்,

Verse 56:28

فِیْ سِدْرٍ مَّخْضُوْدٍ ۟ۙ

Fee sidrim makhḍood,

முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும்,

Verse 56:29

وَّطَلْحٍ مَّنْضُوْدٍ ۟ۙ

Wa-ṭalḥim mañḍood,―

(நுனி முதல்) அடி வரை குலை குலைகளாகத் தொங்கும் (பூவில்லா) வாழை மரத்தின் கீழும்,

Verse 56:30

وَّظِلٍّ مَّمْدُوْدٍ ۟ۙ

Wa-z̤̣illim mamdood,

அடி சாயாத நிழலிலும் இருப்பார்கள்.

Verse 56:31

وَّمَآءٍ مَّسْكُوْبٍ ۟ۙ

Wa-maaaʹim maskoob,

அங்கு(தொடர்ந்து) நீரைக் கொட்டிக் கொண்டிருக்கும் ஊற்றுக்களும்,

Verse 56:32

وَّفَاكِهَةٍ كَثِیْرَةٍ ۟ۙ

Wa-faakihatiñ kas̤eerah,

ஏராளமான கனிவர்க்கங்களும் உண்டு.

Verse 56:33

لَّا مَقْطُوْعَةٍ وَّلَا مَمْنُوْعَةٍ ۟ۙ

Laa maq̣ṭooʻatiñw walaa mamnooʻah,

அதன் கனிகள் (புசிக்க) தடுக்கப்படாது, (பறிப்பதால்) குறைவுறாது.

Verse 56:34

وَّفُرُشٍ مَّرْفُوْعَةٍ ۟ؕ

Wa-furushim marfooʻah.

(ஒன்றைப் பறித்தால், மற்றொன்று அதே இடத்தில் காணப்படும்.) உயர்ந்த மேலான விரிப்புகளில் (அமர்ந்திருப்பார்கள்).

Verse 56:35

اِنَّاۤ اَنْشَاْنٰهُنَّ اِنْشَآءً ۟ۙ

ʹInnaaa ʹañshaʹnaahunna ʹiñshaaaʹaa,

(அவர்களுடன், கண்ணழகிகளாகிய ஹூருல் ஈன் என்னும் கன்னியர்களும் இருப்பார்கள். அவர்கள் ஒருவராலும் பெற்றெடுக்கப்பட்டவர்கள் அல்லர்.) நிச்சயமாக நாம் அவர்களைச் (சொந்தமாக இவர்களுக்கெனப் புதிதாகவே) படைத்திருக்கிறோம்.

Verse 56:36

فَجَعَلْنٰهُنَّ اَبْكَارًا ۟ۙ

Fajaʻalnaahunna ʹabkaaraa―

கன்னியர்களாக அவர்களைப் படைத்திருக்கிறோம்.

Verse 56:37

عُرُبًا اَتْرَابًا ۟ۙ

ʻUruban ʹatraabaa,

அவர்கள் தன் கணவனையே காதலிக்கும் சம வயதுடையவர்கள்.

Verse 56:38

لِّاَصْحٰبِ الْیَمِیْنِ ۟ؕ۠

LiʹAṣḥaabil Yameen.

(முன்னர் வர்ணிக்கப்பட்ட இவை) வலது பக்கத்திலுள்ளவர்களுக்குக் கிடைக்கும்.

Verse 56:39

ثُلَّةٌ مِّنَ الْاَوَّلِیْنَ ۟ۙ

S̤ullatum minal ʹawwaleen.

(இவர்களுடன்) முன்னுள்ளோரில் ஒரு பெரும் கூட்டத்தினரும்,

Verse 56:40

وَثُلَّةٌ مِّنَ الْاٰخِرِیْنَ ۟ؕ

Wa-s̤ullatum minal ʹaakhireen.

பின்னுள்ளோரில் ஒரு பெரும் கூட்டத்தினரும் இருப்பார்கள்.

Verse 56:41

وَاَصْحٰبُ الشِّمَالِ ۙ۬ مَاۤ اَصْحٰبُ الشِّمَالِ ۟ؕ

Wa-ʹAṣḥaabush Shimaal,― maaa ʹAṣḥaabush shimaal?

இடப்பக்கத்தில் உள்ளவர்களோ, இவர்களின் துர்ப்பாக்கியம்தான் என்னே!

Verse 56:42

فِیْ سَمُوْمٍ وَّحَمِیْمٍ ۟ۙ

Fee samoomiñw waḥameem,―

(அவர்கள்) கொடிய வெப்பத்திலும், முற்றிலும் கொதிக்கும் நீரிலும்,

Verse 56:43

وَّظِلٍّ مِّنْ یَّحْمُوْمٍ ۟ۙ

Wa-z̤̣illim miñy yaḥmoom:

அடர்ந்த இருண்ட புகையின் மத்தியிலும் இருப்பார்கள்.

Verse 56:44

لَّا بَارِدٍ وَّلَا كَرِیْمٍ ۟

Laa baaridiñw walaa kareem,

(அங்கு) குளிர்ச்சியான குடிபானமும் இருக்காது; கண்ணியமான (உணவு) எதுவும் இருக்காது.

Verse 56:45

اِنَّهُمْ كَانُوْا قَبْلَ ذٰلِكَ مُتْرَفِیْنَ ۟ۚۖ

ʹInnahum kaanoo q̣abla ẓaalika mutrafeen,

இதற்கு முன்னர் இவர்கள், நிச்சயமாக பெரும் சுகபோகங்களில் இருந்தனர்.

Verse 56:46

وَكَانُوْا یُصِرُّوْنَ عَلَی الْحِنْثِ الْعَظِیْمِ ۟ۚ

Wa-kaanoo yuṣirroona ʻalal ḥins̤il ʻaz̤̣eem!

எனினும், பெரும்பாவங்களைச் செய்வதில் உறுதியாக இருந்தனர்.

Verse 56:47

وَكَانُوْا یَقُوْلُوْنَ ۙ۬ اَىِٕذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَ ۟ۙ

Wa-kaanu yaq̣ooloona, ʹaʹiẓaa mitnaa wa-kunnaa turaabañw waʻiz̤̣aaman ʹaʹinnaa lamabʻoos̤oon,

மேலும், என்னே! நாம் இறந்து (உக்கி) மண்ணாகவும், எலும்பாகவும் போனதன் பின்னர், மெய்யாகவே நாம் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவோமா?

Verse 56:48

اَوَاٰبَآؤُنَا الْاَوَّلُوْنَ ۟

ʹA-waʹaabaaaʹunal ʹawwaloon?

(அவ்வாறே) முன் சென்றுபோன நம் மூதாதையர்களுமா (எழுப்பப்படுவார்கள்)? என்று (பரிகாசமாகக்) கூறிக்கொண்டிருந்தனர்.

Verse 56:49

قُلْ اِنَّ الْاَوَّلِیْنَ وَالْاٰخِرِیْنَ ۟ۙ

Q̣ul ʹinnal ʹawwaleena wal-ʹaakhireen,

(நபியே!) கூறுவீராக: நிச்சயமாக (உங்களில்) முன்னுள்ளோரும், பின்னுள்ளோரும்...

Verse 56:50

لَمَجْمُوْعُوْنَ ۙ۬ اِلٰی مِیْقَاتِ یَوْمٍ مَّعْلُوْمٍ ۟

Lamajmooʻoona ʹilaa meeq̣aati Yawmim maʻloom.

(நீங்கள் யாவருமே) அறியப்பட்ட ஒரு நாளின் குறித்த நேரத்தில் (தவறாமல் உயிர் கொடுத்து எழுப்பப்பட்டு) ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.

Verse 56:51

ثُمَّ اِنَّكُمْ اَیُّهَا الضَّآلُّوْنَ الْمُكَذِّبُوْنَ ۟ۙ

S̤umma ʹinnakum ʹayyuhaḍ ḍaaalloonal mukaẓẓiboon!

பிறகு, (கூறப்படும். இந்நாளைப்) பொய்யாக்கி வழி கெட்டவர்களே! நிச்சயமாக நீங்கள்,

Verse 56:52

لَاٰكِلُوْنَ مِنْ شَجَرٍ مِّنْ زَقُّوْمٍ ۟ۙ

Laʹaakiloona miñ Shajarim miñ Zaq̣q̣oom.

கண்டிப்பாக கள்ளி மரத்தையே புசிப்பீர்கள்.

Verse 56:53

فَمَالِـُٔوْنَ مِنْهَا الْبُطُوْنَ ۟ۚ

Famaaliʹoona minhal buṭoon,―

இன்னும் அதைக் கொண்டே உங்கள் வயிற்றை நிரப்புவீர்கள்.

Verse 56:54

فَشٰرِبُوْنَ عَلَیْهِ مِنَ الْحَمِیْمِ ۟ۚ

Fashaariboona ʻalayhi minal Ḥameem:

அத்துடன் முற்றிலும் கொதித்த சுடு நீரைக் குடிப்பீர்கள்.

Verse 56:55

فَشٰرِبُوْنَ شُرْبَ الْهِیْمِ ۟ؕ

Fashaariboona shurbal heem.

(அதுவும் அவசர அவசரமாக) தாகித்த ஒட்டகம் குடிப்பதைப்போல் (நீங்கள்) குடிப்பீர்கள்.

Verse 56:56

هٰذَا نُزُلُهُمْ یَوْمَ الدِّیْنِ ۟ؕ

Haaẓaa nuzuluhum Yawmad Deen!

கூலி கொடுக்கும் நாளில் அவர்களுக்கு அளிக்கப்படும் விருந்து இதுதான்.

Verse 56:57

نَحْنُ خَلَقْنٰكُمْ فَلَوْلَا تُصَدِّقُوْنَ ۟

Naḥnu khalaq̣naakum falawlaa tuṣaddiq̣oon?

(வழிகெட்டவர்களே!) நாமே உங்களை (முதன் முறையாக) படைத்திருக்கிறோம். (ஆகவே, மறுமுறை நாம் உங்களை உயிர்ப்பிப்பதை) நீங்கள் உண்மையென நம்ப வேண்டாமா?

Verse 56:58

اَفَرَءَیْتُمْ مَّا تُمْنُوْنَ ۟ؕ

ʹAfaraʹaytum maa tumnoon?

நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?

Verse 56:59

ءَاَنْتُمْ تَخْلُقُوْنَهٗۤ اَمْ نَحْنُ الْخٰلِقُوْنَ ۟

ʹAʹañtum takhluq̣oonahooo ʹam Naḥnul Khaaliq̣oon?

அதை (சிசுவாக) நீங்கள் படைக்கிறீர்களா அல்லது நாம் படைக்கின்றோமா?

Verse 56:60

نَحْنُ قَدَّرْنَا بَیْنَكُمُ الْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوْقِیْنَ ۟ۙ

Naḥnu q̣addarnaa baynakumul Mawta wa-maa Naḥnu bimasbooq̣een

, 61. நாம்தான் உங்களுக்கு மரணத்தை நிர்ணயித்தோம். (உங்களுக்குப் பதிலாக) உங்களைப் போன்றவர்களை மாற்றிக் கொண்டுவருவதற்கும், இன்னும் உங்களை நீங்கள் அறியாத ஒரு ரூபத்தில் அமைத்து விடுவதற்கும் நாம் இயலாதவர்கள் அல்ல.

Verse 56:61

عَلٰۤی اَنْ نُّبَدِّلَ اَمْثَالَكُمْ وَنُنْشِئَكُمْ فِیْ مَا لَا تَعْلَمُوْنَ ۟

ʻAlaaa ʹan nubaddila ʹAms̤aalakum wa-nuñshiʹakum fee maa laa- taʻlamoon.

, 61. நாம்தான் உங்களுக்கு மரணத்தை நிர்ணயித்தோம். (உங்களுக்குப் பதிலாக) உங்களைப் போன்றவர்களை மாற்றிக் கொண்டுவருவதற்கும், இன்னும் உங்களை நீங்கள் அறியாத ஒரு ரூபத்தில் அமைத்து விடுவதற்கும் நாம் இயலாதவர்கள் அல்ல.

Verse 56:62

وَلَقَدْ عَلِمْتُمُ النَّشْاَةَ الْاُوْلٰی فَلَوْلَا تَذَكَّرُوْنَ ۟

Wa-laq̣ad ʻalimtumun nashʹatal ʹoolaa falawlaa taẓakkaroon?

முதல்முறை (உங்களைப்) படைத்ததை நிச்சயமாக நீங்கள் நன்கறிந்து இருக்கிறீர்கள். (இதைக் கொண்டு) நீங்கள் நல்லறிவு பெறவேண்டாமா? (இவ்வாறுதான் மறுமையிலும் நாம் உங்களை உயிர் கொடுத்து எழுப்புவோம்.)

Verse 56:63

اَفَرَءَیْتُمْ مَّا تَحْرُثُوْنَ ۟ؕ

ʹAfaraʹaytum maa taḥrus̤oon?

(நீங்கள் பூமியில்) பயிரிடுபவற்றைக் கவனித்தீர்களா?

Verse 56:64

ءَاَنْتُمْ تَزْرَعُوْنَهٗۤ اَمْ نَحْنُ الزّٰرِعُوْنَ ۟

ʹAʹañtum tazraʻoonahooo ʹam Naḥnuz zaariʻoon?

அதை, நீங்கள் (முளைக்க வைத்துப்) பயிராக்குகிறீர்களா அல்லது நாம் பயிராக்குகின்றோமா?

Verse 56:65

لَوْ نَشَآءُ لَجَعَلْنٰهُ حُطَامًا فَظَلْتُمْ تَفَكَّهُوْنَ ۟

Law nashaaaʹu lajaʻal-naahu ḥuṭaamañ faz̤̣altum tafakkahoon:

நாம் விரும்பினால், அதை (விளையாத) சாவிகளாக்கி விடுவோம். அந்நேரத்தில் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

Verse 56:66

اِنَّا لَمُغْرَمُوْنَ ۟ۙ

ʹInnaa lamug̣ramoon:

‘‘நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்து விட்டோம்,

Verse 56:67

بَلْ نَحْنُ مَحْرُوْمُوْنَ ۟

Bal naḥnu maḥroomoon.

மாறாக, எங்களுக்கு ஒன்றுமே கிடைக்காது போயிற்று'' (என்று கூறிக்கொண்டிருப்பீர்கள்).

Verse 56:68

اَفَرَءَیْتُمُ الْمَآءَ الَّذِیْ تَشْرَبُوْنَ ۟ؕ

ʹAfaraʹaytumul maaa ʹallaẓee tashraboon?

நீங்கள் குடிக்கின்ற தண்ணீரைக் கவனித்தீர்களா?

Verse 56:69

ءَاَنْتُمْ اَنْزَلْتُمُوْهُ مِنَ الْمُزْنِ اَمْ نَحْنُ الْمُنْزِلُوْنَ ۟

ʹAʹañtum ʹañzaltumoohu minal muzni ʹam Naḥnul muñziloon?

மேகத்திலிருந்து அதை நீங்கள் பொழிய வைக்கிறீர்களா? அல்லது நாம் பொழிய வைக்கின்றோமா?

Verse 56:70

لَوْ نَشَآءُ جَعَلْنٰهُ اُجَاجًا فَلَوْلَا تَشْكُرُوْنَ ۟

Law nashaaaʹu jaʻalnaahu ʹujaajañ falawlaa tashkuroon?

நாம் விரும்பினால் அதை (நீங்கள் குடிக்க முடியாத) உப்பு நீராக ஆக்கியிருப்போம். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?

Verse 56:71

اَفَرَءَیْتُمُ النَّارَ الَّتِیْ تُوْرُوْنَ ۟ؕ

ʹAfaraʹaytumun naaral latee tooroon?

நீங்கள் (அடுப்பில்) மூட்டுகின்ற நெருப்பையும் கவனித்தீர்களா?

Verse 56:72

ءَاَنْتُمْ اَنْشَاْتُمْ شَجَرَتَهَاۤ اَمْ نَحْنُ الْمُنْشِـُٔوْنَ ۟

ʹAʹañtum ʹañshaʹtum shajaratahaaa ʹam Naḥnul muñshiʹoon?

அதன் விறகை நீங்கள் உற்பத்தி செய்கிறீர்களா? அல்லது நாம் உற்பத்தி செய்கின்றோமா?

Verse 56:73

نَحْنُ جَعَلْنٰهَا تَذْكِرَةً وَّمَتَاعًا لِّلْمُقْوِیْنَ ۟ۚ

Naḥnu jaʻalnaahaa taẓkiratañw wamataaʻal lilmuq̣ween.

(நரகத்தின் நெருப்பை உங்களுக்கு) ஞாபகமூட்டும் பொருட்டும், வழிப்போக்கருக்குப் பயனளிக்கும் பொருட்டும் அதை நாம்தான் படைத்திருக்கிறோம்.

Verse 56:74

فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِیْمِ ۟۠

Fasabbiḥ bismi Rabbikal ʻAz̤̣eem!

ஆகவே, (நபியே!) மகத்தான உமது இறைவனின் பெயரைக்கொண்டு நீர் (அவனை) புகழ்வீராக!

Verse 56:75

فَلَاۤ اُقْسِمُ بِمَوٰقِعِ النُّجُوْمِ ۟ۙ

Falaaa ʹuq̣simu bimawaaq̣iʻin Nujoom,―

நட்சத்திரங்கள் மறையும் இடங்களின் மீது நாம் சத்தியம் செய்கிறோம்.

Verse 56:76

وَاِنَّهٗ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُوْنَ عَظِیْمٌ ۟ۙ

Wa-ʹinnahoo laq̣asamul law taʻlamoona ʻaz̤̣eem,―

மனிதர்களே! (உங்களுக்கு) அறிவிருந்தால் நிச்சயமாக இது ஒரு மகத்தான சத்தியம் என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்.

Verse 56:77

اِنَّهٗ لَقُرْاٰنٌ كَرِیْمٌ ۟ۙ

ʹInnahoo la-Q̣urʹaanuñ Kareem,

நிச்சயமாக இது மிக்க கண்ணியமுள்ள குர்ஆனாகும்.

Verse 56:78

فِیْ كِتٰبٍ مَّكْنُوْنٍ ۟ۙ

Fee Kitaabim maknoon,―

(இது ‘லவ்ஹுல் மஹ்ஃபூள்' என்னும்) பாதுகாக்கப்பட்ட புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.

Verse 56:79

لَّا یَمَسُّهٗۤ اِلَّا الْمُطَهَّرُوْنَ ۟ؕ

Laa- yamassuhooo ʹillal muṭahharoon:

பரிசுத்தவான்களைத் தவிர, (மற்றெவரும்) இதைத் தொட மாட்டார்கள்.

Verse 56:80

تَنْزِیْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِیْنَ ۟

Tañzeelum mir Rabbil ʻAalameen.

உலகத்தார் அனைவரின் (எஜமானாகிய) இறைவனால் இது இறக்கப்பட்டது.

Verse 56:81

اَفَبِهٰذَا الْحَدِیْثِ اَنْتُمْ مُّدْهِنُوْنَ ۟ۙ

ʹAfabihaaẓal Ḥadees̤i ʹañtum mudhinoon?

ஆகவே, இதிலுள்ள விஷயங்களையும் நீங்கள் அலட்சியம் செய்யக் கருதுகிறீர்களா?

Verse 56:82

وَتَجْعَلُوْنَ رِزْقَكُمْ اَنَّكُمْ تُكَذِّبُوْنَ ۟

Wa-tajʻaloona rizq̣akum ʹannakum tukaẓẓiboon?

அல்லது பொய்யாக்குவதையே நீங்கள் உங்கள் தொழிலாக்கிக் கொள்கிறீர்களா?

Verse 56:83

فَلَوْلَاۤ اِذَا بَلَغَتِ الْحُلْقُوْمَ ۟ۙ

Falawlaa ʹiẓaa balag̣atil ḥulq̣oom,―

(உங்களில் மரணிக்கும் ஒருவரின் உயிர்) தொண்டைக் குழியை அடைந்தால்,

Verse 56:84

وَاَنْتُمْ حِیْنَىِٕذٍ تَنْظُرُوْنَ ۟ۙ

Wa-ʹañtum ḥeenaʹiẓiñ tañz̤̣uroon,―

அந்நேரத்தில் நீங்கள் (இறப்பவனுக்குச் சமீபமாயிருந்தும், ஒன்றும் செய்ய முடியாமல்) பரக்கப் பரக்க விழிக்கிறீர்கள்.

Verse 56:85

وَنَحْنُ اَقْرَبُ اِلَیْهِ مِنْكُمْ وَلٰكِنْ لَّا تُبْصِرُوْنَ ۟

Wa-Naḥnu ʹaq̣rabu ʹilayhi miñkum wa-laakil laa tubṣiroon,―

ஆயினும், நாம் அவனுக்கு உங்களைவிட மிக சமீபமாக இருக்கிறோம். எனினும், நீங்கள் (நம்மைப்) பார்ப்பதில்லை.

Verse 56:86

فَلَوْلَاۤ اِنْ كُنْتُمْ غَیْرَ مَدِیْنِیْنَ ۟ۙ

Falawlaaa ʹiñ kuñtum g̣ayra madeeneen,―

நீங்கள் எவருக்குமே கட்டுப்படாமல் (பூரண சுதந்திரம் உடையவர்களாக) இருந்தால்...

Verse 56:87

تَرْجِعُوْنَهَاۤ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟

Tarjiʻoonahaaa ʹiñ kuñtum ṣaadiq̣een?

மெய்யாகவே, நீங்கள் (இதில்) உண்மை சொல்பவர்களாகவுமிருந்தால், (இறந்த அவனுடைய உயிரை) நீங்கள் மீட்டுக் கொண்டு வரவேண்டியது தானே!

Verse 56:88

فَاَمَّاۤ اِنْ كَانَ مِنَ الْمُقَرَّبِیْنَ ۟ۙ

Faʹammaaa ʹiñ kaana minal Muq̣arrabeen,―

(இறந்தவர் இறையச்சமுடையவராக இருந்து அல்லாஹ்வின்) நெருக்கத்தை பெற்றவர்களில் ஒருவராக இருந்தால்,

Verse 56:89

فَرَوْحٌ وَّرَیْحَانٌ ۙ۬ وَّجَنَّتُ نَعِیْمٍ ۟

Fa-Rawḥuñw Wa-Rayḥaanuñw Wa-Jannatu Naʻeem.

அவருக்குச் சுகமும் மகிழ்ச்சியும் நறுமனமும் உண்டு; இன்பமளிக்கும் சொர்க்கமும் உண்டு.

Verse 56:90

وَاَمَّاۤ اِنْ كَانَ مِنْ اَصْحٰبِ الْیَمِیْنِ ۟ۙ

Wa-ʹammaaa ʹiñ kaana min ʹAṣḥaabil yameen.―

(அதிலும்) அவர் வலப்பக்கத்திலுள்ளவராக இருந்தாலோ,

Verse 56:91

فَسَلٰمٌ لَّكَ مِنْ اَصْحٰبِ الْیَمِیْنِ ۟ؕ

Fa-Salaamul laka min Aṣḥaabil yameen.

அவரை நோக்கி ‘‘வலப்பக்கத்தில் உள்ளவர்களில் இருந்து உமக்கு ‘‘ஸலாம்'' ஈடேற்றம் உண்டாகுக! (என்ற முகமன்) கூறப்படும்.

Verse 56:92

وَاَمَّاۤ اِنْ كَانَ مِنَ الْمُكَذِّبِیْنَ الضَّآلِّیْنَ ۟ۙ

Wa-ʹammaaa ʹiñ kaana minal Mukaẓẓibeenaḍ ḍaaalleen,

அவன் வழிகெட்டவனாகவும் (இவ்வேதத்தைப்) பொய்யாக்குகிறவனாகவும் இருந்தால்,

Verse 56:93

فَنُزُلٌ مِّنْ حَمِیْمٍ ۟ۙ

Fanuzulum min ḥameem,―

முற்றிலும் கொதித்த சுடுநீர் அவனுக்கு விருந்தாகும்.

Verse 56:94

وَّتَصْلِیَةُ جَحِیْمٍ ۟

Wa-taṣliyatu Jaḥeem.

இன்னும், நரகத்தில் தள்ளப்படுவான்.

Verse 56:95

اِنَّ هٰذَا لَهُوَ حَقُّ الْیَقِیْنِ ۟ۚ

ʹInna haaẓaa lahuwa Ḥaq̣q̣ul Yaq̣een.

நிச்சயமாக இது சந்தேகமற்ற உண்மையாகும்.

Verse 56:96

فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِیْمِ ۟۠

Fasabbiḥ bismi Rabbikal ʻAz̤̣eem.

ஆகவே (நபியே!) நீர் மகத்தான உமது இறைவனின் திருப்பெயரைக் கூறி புகழ்ந்து கொண்டிருப்பீராக!