Surah Al-Mursalat
Surah Al-Mursalat (Those Sent Forth) is Surah 77 of the Holy Quran, a Meccan Surah with 50 verses, available here in Tamil.
Verse 77:1
وَالْمُرْسَلٰتِ عُرْفًا ۟ۙ
WALMURSALAATI ʻurfaa,
நன்மைக்காக அனுப்பப்படுபவர்கள் மீது சத்தியமாக!
Verse 77:2
فَالْعٰصِفٰتِ عَصْفًا ۟ۙ
Falʻaaṣifaati ʻaṣfaa,
இன்னும் அதி வேகமாகச் செல்லும் (புயல்) காற்றுகள் மீது சத்தியமாக!
Verse 77:3
وَّالنّٰشِرٰتِ نَشْرًا ۟ۙ
Wannaashiraati nashraa,
(மேகங்களை பல திசைகளில்) பரப்பிவிடுபவர்கள் மீதும் சத்தியமாக!
Verse 77:4
فَالْفٰرِقٰتِ فَرْقًا ۟ۙ
Falfaariq̣aati farq̣aa,
(உண்மை, பொய்களுக்கிடையில்) தெளிவாகப் பிரித்தறிவிப்பவை(யான வேதங்கள்) மீதும் சத்தியமாக!
Verse 77:5
فَالْمُلْقِیٰتِ ذِكْرًا ۟ۙ
Falmulq̣iyaati ẓikraa,
, 6. மன்னிப்பு அல்லது எச்சரிக்கையாக இருக்கும் நல்லுரைகளை (வஹ்யின் மூலம் இறைத்தூதர்களுக்கு) எடுத்துரைப்பவர்கள் மீதும் சத்தியமாக!
Verse 77:6
عُذْرًا اَوْ نُذْرًا ۟ۙ
ʻUẓran ʹaw nuẓraa;―
, 6. மன்னிப்பு அல்லது எச்சரிக்கையாக இருக்கும் நல்லுரைகளை (வஹ்யின் மூலம் இறைத்தூதர்களுக்கு) எடுத்துரைப்பவர்கள் மீதும் சத்தியமாக!
Verse 77:7
اِنَّمَا تُوْعَدُوْنَ لَوَاقِعٌ ۟ؕ
ʹInnamaa tooʻadoona lawaaq̣iʻ.
நிச்சயமாக உங்களுக்குப் பயமுறுத்தப்படும் (நாள்) வந்தே தீரும்.
Verse 77:8
فَاِذَا النُّجُوْمُ طُمِسَتْ ۟ۙ
Faʹiẓan nujoomu ṭumisat;
அந்நேரத்தில், நட்சத்திரங்கள் அழிக்கப்பட்டுவிடும்.
Verse 77:9
وَاِذَا السَّمَآءُ فُرِجَتْ ۟ۙ
Wa-ʹiẓas samaaaʹu furijat;
அப்போது வானம் திறக்கப்பட்டுவிடும்.
Verse 77:10
وَاِذَا الْجِبَالُ نُسِفَتْ ۟ۙ
Wa-ʹiẓal jibaalu nusifat;
அப்போது மலைகள் (தூசிகளைப் போல்) தவிடு பொடியாக்கப்படும்.
Verse 77:11
وَاِذَا الرُّسُلُ اُقِّتَتْ ۟ؕ
Wa-ʹizar rusulu ʹuq̣q̣itat;
அப்போது தூதர்கள் விசாரணைக்காகக் கொண்டு வரப்படுவார்கள்.
Verse 77:12
لِاَیِّ یَوْمٍ اُجِّلَتْ ۟ؕ
Liʹayyi Yawmin ʹujjilat?
(இவை எல்லாம்) எதுவரை பிற்படுத்தப்பட்டிருக்கின்றன (என்பதை நபியே! நீர் அறிவீரா)?
Verse 77:13
لِیَوْمِ الْفَصْلِ ۟ۚ
Li-Yawmil faṣl.
தீர்ப்பு கூறப்படும் நாள் வரைதான்!
Verse 77:14
وَمَاۤ اَدْرٰىكَ مَا یَوْمُ الْفَصْلِ ۟ؕ
Wa-maaa ʹadraaka maa- Yawmul faṣl?
(நபியே!) தீர்ப்பு கூறப்படும் நாளின் தன்மையை நீர் அறிவீரா?.
Verse 77:15
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
Wayluñy Yawmaʹiẓil lilmukaẓẓibeen!
(நம் வசனங்களைப்) பொய்யாக்கியவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
Verse 77:16
اَلَمْ نُهْلِكِ الْاَوَّلِیْنَ ۟ؕ
ʹAlam nuhlikil ʹawwaleen?
(அதைப் பொய்யாக்கிக் கொண்டிருந்த) முன்னிருந்தவர்களையும் நாம் அழித்துவிடவில்லையா?
Verse 77:17
ثُمَّ نُتْبِعُهُمُ الْاٰخِرِیْنَ ۟
S̤umma nutbiʻuhumul ʹaakhireen.
அதற்கு பின்னுள்ளவர்களையும் (அழிந்து போன அவர்களைப்) பின்தொடரும்படி நாம் செய்வோம்,
Verse 77:18
كَذٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِیْنَ ۟
Kaẓaalika nafʻalu bilmujrimeen.
(அவர்களையும் அழித்தோம்.) அவ்வாறே, இக்குற்றவாளிகளையும் நாம் (அழிந்துபோகச்) செய்வோம்.
Verse 77:19
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
Wayluñy Yawmaʹiẓil lil-mukaẓẓibeen!
ஆகவே, (நம் வசனங்களைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
Verse 77:20
اَلَمْ نَخْلُقْكُّمْ مِّنْ مَّآءٍ مَّهِیْنٍ ۟ۙ
ʹAlam nakhlukkum mim maaaʹim maheen?
ஓர் அற்பத் துளியைக் கொண்டு நாம் உங்களைப் படைக்கவில்லையா?
Verse 77:21
فَجَعَلْنٰهُ فِیْ قَرَارٍ مَّكِیْنٍ ۟ۙ
Fajaʻalnaahu fee q̣araarim makeen,
, 22. அதை(ப் பத்திரமாக) உறுதிமிக்க (கர்ப்ப) ஸ்தானத்தில் குறிப்பிட்ட காலம் வரை தங்கும்படி நாம் செய்தோம்,
Verse 77:22
اِلٰی قَدَرٍ مَّعْلُوْمٍ ۟ۙ
ʹIlaa q̣adarim maʻloom?
, 22. அதை(ப் பத்திரமாக) உறுதிமிக்க (கர்ப்ப) ஸ்தானத்தில் குறிப்பிட்ட காலம் வரை தங்கும்படி நாம் செய்தோம்,
Verse 77:23
فَقَدَرْنَا ۖۗ فَنِعْمَ الْقٰدِرُوْنَ ۟
Faq̣adarnaa faniʻmal Q̣aadiroon.
பின்னர் நாமே அதை (மனிதனாகவும்) நிர்ணயம் செய்தோம். நிர்ணயம் செய்பவர்களில் நாமே மிக மேலானோர்.
Verse 77:24
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
Wayluñy Yawmaʹiẓil lilmukaẓẓibeen!
ஆகவே, (இவற்றைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
Verse 77:25
اَلَمْ نَجْعَلِ الْاَرْضَ كِفَاتًا ۟ۙ
ʹAlam najʻalil ʹarḍa kifaataa,
, 26. பூமியை, (உங்களில்) உயிரோடு இருப்பவர்களுக்கும், மரணித்தவர்களுக்கும் இடமளிக்கக்கூடியதாக நாம் ஆக்கி வைக்கவில்லையா?
Verse 77:26
اَحْیَآءً وَّاَمْوَاتًا ۟ۙ
ʹAḥyaaaʹañw Waʹamwaataa,
, 26. பூமியை, (உங்களில்) உயிரோடு இருப்பவர்களுக்கும், மரணித்தவர்களுக்கும் இடமளிக்கக்கூடியதாக நாம் ஆக்கி வைக்கவில்லையா?
Verse 77:27
وَّجَعَلْنَا فِیْهَا رَوَاسِیَ شٰمِخٰتٍ وَّاَسْقَیْنٰكُمْ مَّآءً فُرَاتًا ۟ؕ
Wa-jaʻalnaa feehaa rawaasiya shaamikhaatiñw waʹasq̣aynaakum maaaʹañ furaataa?
அதில் உயர்ந்த மலைகளையும் நாம் அமைத்து (அவற்றிலிருந்து) மதுரமான நீரையும் உங்களுக்குப் புகட்டுகிறோம்.
Verse 77:28
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
Wayluñy Yawmaʹiẓil lilmukaẓẓibeen!
(நம் அருட்கொடைகளைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
Verse 77:29
اِنْطَلِقُوْۤا اِلٰی مَا كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ ۟ۚ
ʹIñṭaliq̣ooo ʹilaa maa- kuñtum̃ bihee tukaẓẓiboon:
‘‘எ(ந்த நரகத்)தை நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்தீர்களோ, அதன் பாலே நீங்கள் செல்லுங்கள்.
Verse 77:30
اِنْطَلِقُوْۤا اِلٰی ظِلٍّ ذِیْ ثَلٰثِ شُعَبٍ ۟ۙ
ʹIñṭaliq̣ooo ʹilaa z̤̣illiñ ẓee s̤alaas̤i shuʻab.
மூன்று கிளைகளையுடைய (நரகத்தின்) புகையின் நிழலின் பக்கம் நீங்கள் செல்லுங்கள்'' (என்றும் கூறப்படும்).
Verse 77:31
لَّا ظَلِیْلٍ وَّلَا یُغْنِیْ مِنَ اللَّهَبِ ۟ؕ
laa-Laa z̤̣aleeliñw wa yug̣nee minal lahab.
அதில் (குளிர்ச்சிதரும்) நிழலுமிராது; உஷ்ணத்தைத் தணிக்கக்கூடிய எதுவுமிராது.
Verse 77:32
اِنَّهَا تَرْمِیْ بِشَرَرٍ كَالْقَصْرِ ۟ۚ
ʹInnahaa tarmee bisharariñ kalq̣aṣr,
(எனினும்,) பெரிய மாளிகைகளைப்போன்ற நெருப்புக் கங்குகளை அது கக்கிக் கொண்டே இருக்கும்.
Verse 77:33
كَاَنَّهٗ جِمٰلَتٌ صُفْرٌ ۟ؕ
Kaʹannahoo jimaalatuñ ṣufr.
அவை மஞ்சள் நிறமுள்ள (பெரிய) ஒட்டகங்களைப் போல் தோன்றும்.
Verse 77:34
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
Wayluñy Yawmaʹiẓil lilmukaẓẓibeen!
(இவற்றைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
Verse 77:35
هٰذَا یَوْمُ لَا یَنْطِقُوْنَ ۟ۙ
Haaẓaa Yawmu laa- yañṭiq̣oon,
இது ஒரு நாளாகும். (இந்நாளில் எதுவுமே) அவர்கள் பேச சக்தி பெறமாட்டார்கள்.
Verse 77:36
وَلَا یُؤْذَنُ لَهُمْ فَیَعْتَذِرُوْنَ ۟
Wa-laa yuʹẓanu lahum fayaʻtaẓiroon.
மேலும், புகல் கூறவும் அவர்களுக்கு அனுமதி கிடைக்காது.
Verse 77:37
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
Wayluñy Yawmaʹiẓil lilmukaẓẓibeen!
(இவற்றைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
Verse 77:38
هٰذَا یَوْمُ الْفَصْلِ ۚ جَمَعْنٰكُمْ وَالْاَوَّلِیْنَ ۟
Haaẓaa Yawmul Faṣl! Jamaʻnaakum wal-ʹawwaleen!
இதுவே தீர்ப்பு நாள். உங்களையும், (உங்களுக்கு) முன்னுள்ளோரையும் (விசாரணைக்காக) நாம் ஒன்று சேர்த்துவிடுவோம்.
Verse 77:39
فَاِنْ كَانَ لَكُمْ كَیْدٌ فَكِیْدُوْنِ ۟
Faʹiñ kaana lakum kayduñ fakeedoon!
ஆகவே, (அந்நாளில் அவர்களை நோக்கி, ‘‘தப்பித்துக் கொள்ள) நீங்கள் ஏதும் சூழ்ச்சி செய்யக் கூடுமானால் சூழ்ச்சி செய்து பாருங்கள்'' (என்றும் கூறப்படும்).
Verse 77:40
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟۠
Wayluñy Yawmaʹiẓil lilmukaẓẓibeen!
(இதைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
Verse 77:41
اِنَّ الْمُتَّقِیْنَ فِیْ ظِلٰلٍ وَّعُیُوْنٍ ۟ۙ
ʹInnal Muttaq̣eena fee z̤̣ilaaliñw waʻuyoon,
நிச்சயமாக இறையச்சமுடையவர்கள், நிச்சயமாக (அந்நாளில் சொர்க்கத்திலுள்ள மரங்களின்) நிழல்களிலும் (அதன் அடியில் உள்ள) ஊற்றுக்களிலும் இருப்பார்கள்.
Verse 77:42
وَّفَوَاكِهَ مِمَّا یَشْتَهُوْنَ ۟ؕ
Wa-fawaakiha mimmaa yashtahoon.
அவர்கள் விரும்பிய கனிவர்க்கங்கள் அவர்களுக்குண்டு.
Verse 77:43
كُلُوْا وَاشْرَبُوْا هَنِیْٓـًٔا بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
Kuloo washraboo haneeeʹam bimaa kuñtum taʻmaloon.
(அவர்களை நோக்கி,) ‘‘நீங்கள் செய்து கொண்டிருந்த நன்மையின் காரணமாக, மிக தாராளமாக இவற்றைப் புசித்துப் பருகிக் கொண்டிருங்கள்'' (என்று கூறப்படும்).
Verse 77:44
اِنَّا كَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟
ʹInnaa kaẓaalika najzil Muḥsineen.
இவ்வாறே நன்மை செய்பவர்களுக்கு நிச்சயமாக நாம் கூலி கொடுப்போம்.
Verse 77:45
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
Wayluñy Yawmaʹiẓil lil-Mukaẓẓibeen!
(இதைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
Verse 77:46
كُلُوْا وَتَمَتَّعُوْا قَلِیْلًا اِنَّكُمْ مُّجْرِمُوْنَ ۟
Kuloo wa-tamattaʻoo q̣aleelan ʹinnakum mujrimoon.
(இதைப் பொய்யாக்குபவர்களே! இம்மையில்) நீங்கள் புசித்துச் சிறிது சுகமனுபவித்துக் கொள்ளுங்கள். எனினும், நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகள்தான்.
Verse 77:47
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
Wayluñy Yawmaʹiẓil lil-Mukaẓẓibeen!
(இறைவனின் வசனங்களைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
Verse 77:48
وَاِذَا قِیْلَ لَهُمُ ارْكَعُوْا لَا یَرْكَعُوْنَ ۟
Wa-ʹiẓaa q̣eela lahumur kaʻoo laa- yarkaʻoon.
அவர்களை நோக்கி, ‘‘(இறைவன் முன்) நீங்கள் குனிந்து வணங்குங்கள்'' என்று கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்கவே மாட்டார்கள்.
Verse 77:49
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
Wayluñy Yawmaʹiẓil lil-Mukaẓẓibeen!
(அவனுடைய இக்கட்டளையைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
Verse 77:50
فَبِاَیِّ حَدِیْثٍ بَعْدَهٗ یُؤْمِنُوْنَ ۟۠
Fabiʹayyi Ḥadees̤im baʻdahoo yuʹminoon?
இதற்குப் பின்னர், எவ்விஷயத்தைத்தான் அவர்கள் நம்பிக்கை கொள்வார்களோ!