Surah Al-Layl
Surah Al-Layl (The Night) is Surah 92 of the Holy Quran, a Meccan Surah with 21 verses, available here in Tamil.
Verse 92:1
وَالَّیْلِ اِذَا یَغْشٰی ۟ۙ
Wal-Layli ʹiẓaa yag̣shaa;
(அனைத்தையும்) மூடிக்கொள்ளும் (இருண்ட) இரவின் மீது சத்தியமாக!
Verse 92:2
وَالنَّهَارِ اِذَا تَجَلّٰی ۟ۙ
Wan-Nahaari ʹiẓaa tajallaa;
பிரகாசமுள்ள பகலின் மீது சத்தியமாக!
Verse 92:3
وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْاُ ۟ۙ
Wa-maa khalaq̣aẓ ẓakara wal-ʹuñs̤aaa;
ஆணையும் பெண்ணையும் படைத்தவன் மீது சத்தியமாக!
Verse 92:4
اِنَّ سَعْیَكُمْ لَشَتّٰی ۟ؕ
ʹInna saʻyakum lashattaa.
(மனிதர்களே!) நிச்சயமாக உங்கள் முயற்சிகள் பலவாறாக இருக்கின்றன.
Verse 92:5
فَاَمَّا مَنْ اَعْطٰی وَاتَّقٰی ۟ۙ
Faʹammaa man ʹaʻṭaa wattaq̣aa,―
ஆகவே, (உங்களில்) எவர் தானம் செய்து (அல்லாஹ்வுக்குப்) பயந்து,
Verse 92:6
وَصَدَّقَ بِالْحُسْنٰی ۟ۙ
Wa-ṣaddaq̣a bil-Ḥusnaa,―
(இந்த மார்க்கத்திலுள்ள) நல்ல காரியங்களையும் (நல்லதென்றே) உண்மையாக்கி வைக்கிறாரோ,
Verse 92:7
فَسَنُیَسِّرُهٗ لِلْیُسْرٰی ۟ؕ
Fasanuyassiruhoo lil-Yusraa.
அவருக்கு சொர்க்கப் பாதையை நாம் எளிதாக்கித் தருவோம்.
Verse 92:8
وَاَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنٰی ۟ۙ
Wa-ʹammaa mam bakhila wastag̣naa,
எவன் கஞ்சத்தனம் செய்து (அல்லாஹ்வையும்) பொருட்படுத்தாது,
Verse 92:9
وَكَذَّبَ بِالْحُسْنٰی ۟ۙ
Wa-kaẓẓaba bil-Ḥusnaa,―
(இம்மார்க்கத்திலுள்ள) நல்ல காரியங்களையும் பொய்யாக்கி வைக்கிறானோ,
Verse 92:10
فَسَنُیَسِّرُهٗ لِلْعُسْرٰی ۟ؕ
Fasanuyassiruhoo lilʻusraa;
அவனுக்குக் (கஷ்டத்திற்குரிய) நரகப் பாதையைத்தான் நாம் எளிதாக்கி வைப்போம்.
Verse 92:11
وَمَا یُغْنِیْ عَنْهُ مَالُهٗۤ اِذَا تَرَدّٰی ۟ؕ
Wa-maa yug̣nee ʻanhu maaluhooo ʹiẓaa taraddaa.
அவன் (நரகத்தில்) விழுந்துவிட்டால், அவனுடைய பொருள் அவனுக்கு (ஒரு) பயனுமளிக்காது.
Verse 92:12
اِنَّ عَلَیْنَا لَلْهُدٰی ۟ؗۖ
ʹInna ʻalaynaa lal-hudaa,
நிச்சயமாக நேர்வழியை அறிவிப்பது நம்மீதுதான் கடமையாகும்.
Verse 92:13
وَاِنَّ لَنَا لَلْاٰخِرَةَ وَالْاُوْلٰی ۟
Wa-ʹinna lanaa lal-ʹAakhirata wal-ʹOolaa.
நிச்சயமாக இம்மையும், மறுமையும் நமக்கே சொந்தமானவை!
Verse 92:14
فَاَنْذَرْتُكُمْ نَارًا تَلَظّٰی ۟ۚ
Faʹañẓartukum Naarañ talaz̤̣z̤̣aa.
(மக்காவாசிகளே!) கொழுந்து விட்டெரியும் நெருப்பைப் பற்றி நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன்.
Verse 92:15
لَا یَصْلٰىهَاۤ اِلَّا الْاَشْقَی ۟ۙ
Laa- yaṣlaahaaa ʹillal ʹashq̣aa,―
மிக்க துர்பாக்கியம் உடையவனைத் தவிர, (மற்றெவனும்) அதற்குள் செல்லமாட்டான்.
Verse 92:16
الَّذِیْ كَذَّبَ وَتَوَلّٰی ۟ؕ
ʹAllaẓee kaẓẓaba wa-tawallaa.
அவன் (நம் வசனங்களைப்) பொய்யாக்கிப் புறக்கணித்துவிடுவான்.
Verse 92:17
وَسَیُجَنَّبُهَا الْاَتْقَی ۟ۙ
Wa-sa-yujannabuhal ʹatq̣aa,―
இறையச்சமுடையவர்தான் அதிலிருந்து தப்பித்துக்கொள்வார்.
Verse 92:18
الَّذِیْ یُؤْتِیْ مَالَهٗ یَتَزَكّٰی ۟ۚ
ʹAllaẓee yuʹtee maalahoo yatazakkaa,
அவர் (பாவத்திலிருந்து தன்னைப்) பரிசுத்தமாக்கிக் கொள்வதற்காக தன் பொருளை(த் தானமாக)க் கொடுப்பார்.
Verse 92:19
وَمَا لِاَحَدٍ عِنْدَهٗ مِنْ نِّعْمَةٍ تُجْزٰۤی ۟ۙ
Wa-maa liʹaḥadin ʻiñdahoo min niʻmatiñ tujzaa,
தான் பதில் நன்மை செய்யக்கூடியவாறு எவருடைய நன்றியும் தன் மீது இருக்காது.
Verse 92:20
اِلَّا ابْتِغَآءَ وَجْهِ رَبِّهِ الْاَعْلٰی ۟ۚ
ʹIllab tig̣aaaʹa Wajhi Rabbihil ʹAʻ-laa;
இருப்பினும், மிக்க மேலான தன் இறைவனின் திருமுகத்தை விரும்பியே தவிர (வேறு எதற்காகவும் தானம் செய்ய மாட்டார்).
Verse 92:21
وَلَسَوْفَ یَرْضٰی ۟۠
Wa-lasawfa yarḍaa.
(இறைவன் அவருக்கு அளிக்கும் கொடையைப் பற்றிப்) பின்னர் அவரும் திருப்தியடைவார்.