Home  /  Quran  /  Surah
Loading...
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

Surah Al-Haqqah

Surah Al-Haqqah (The Reality) is Surah 69 of the Holy Quran, a Meccan Surah with 52 verses, available here in Tamil.

Surah 69 Meccan 52 verses Tamil

Verse 69:1

اَلْحَآقَّةُ ۟ۙ

ʹALḤAAAQ̣Q̣ATU!

(நிகழக்கூடிய) உண்மை(ச் சம்பவம்)

Verse 69:2

مَا الْحَآقَّةُ ۟ۚ

Mal Ḥaaaq̣q̣ah?

அந்த உண்மை(ச் சம்பவம்) எது?

Verse 69:3

وَمَاۤ اَدْرٰىكَ مَا الْحَآقَّةُ ۟ؕ

Wa-maaa ʹadraaka mal Ḥaaaq̣q̣ah?

(நபியே!) அந்த உண்மை(ச் சம்பவம்) என்னவென்பதை நீர் அறிவீரா?

Verse 69:4

كَذَّبَتْ ثَمُوْدُ وَعَادٌ بِالْقَارِعَةِ ۟

Kaẓẓabat S̤amoodu wa-ʻAadum bil-Q̣aariʻah!

‘ஸமூத்' என்னும் மக்களும் ‘ஆத்' என்னும் மக்களும் (மரணித்தவர்களைத்) தட்டி எழுப்பு(ம் அச்சம்ப)வ(த்)தைப் பொய்யாக்கினர்.

Verse 69:5

فَاَمَّا ثَمُوْدُ فَاُهْلِكُوْا بِالطَّاغِیَةِ ۟

Faʹammaa S̤amoodu faʹuhlikoo biṭ-Ṭaag̣iyah!

ஆகவே, ‘ஸமூத்' மக்கள் பெரும் சப்தத்தைக்கொண்டு அழிக்கப்பட்டனர்.

Verse 69:6

وَاَمَّا عَادٌ فَاُهْلِكُوْا بِرِیْحٍ صَرْصَرٍ عَاتِیَةٍ ۟ۙ

Wa-ʹammaa ʻAaduñ faʹuhlikoo bi-Reeḥiñ ṣarṣarin ʻaatiyah;

ஆத் என்னும் மக்களோ, அதிவேகமாக விரைந்து (இரைந்து) செல்லும் (புயல்) காற்றைக்கொண்டு அழிக்கப்பட்டனர்.

Verse 69:7

سَخَّرَهَا عَلَیْهِمْ سَبْعَ لَیَالٍ وَّثَمٰنِیَةَ اَیَّامٍ ۙ حُسُوْمًاۙ فَتَرَی الْقَوْمَ فِیْهَا صَرْعٰی ۙ كَاَنَّهُمْ اَعْجَازُ نَخْلٍ خَاوِیَةٍ ۟ۚ

Sakhkharahaa ʻalayhim sabʻa layaaliñw was̤amaaniyata ʹayyaamin ḥusoomañ fataral q̣awma feehaa ṣarʻaa kaʹannahum ʹaʻjaazu nakhlin khaawiyah!

ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ச்சியாக அவர்கள் மீது அக்காற்றை நடத்தி வைத்தான். (நபியே! அச்சமயம் நீர் அங்கிருந்தால்) வேரற்று சாய்ந்த ஈச்சமரங்களைப் போல், அந்த மக்கள் பூமியில் விழுந்து கிடப்பதைக் கண்டிருப்பீர்.

Verse 69:8

فَهَلْ تَرٰی لَهُمْ مِّنْ بَاقِیَةٍ ۟

Fahal taraa lahum mim baaq̣iyah?

(இன்றைக்கும்) அவர்களில் எவரும் தப்பி(ப் பிழைத்து) இருப்பதை நீர் காண்கிறீரா?

Verse 69:9

وَجَآءَ فِرْعَوْنُ وَمَنْ قَبْلَهٗ وَالْمُؤْتَفِكٰتُ بِالْخَاطِئَةِ ۟ۚ

Wa-jaaaʹa Firʻawnu wa-mañ q̣ablahoo wal-muʹtafikaatu bil-khaaṭiʹah,

ஃபிர்அவ்னும், அவனுக்கு முன்னிருந்தவர்களும் தலைகீழாகப் புறட்டப்பட்ட ஊரிலிருந்த (லூத்துடைய) மக்களும் (அந்த உண்மையான சம்பவத்தை நிராகரித்துப்) பாவம் செய்துகொண்டே வந்தார்கள்.

Verse 69:10

فَعَصَوْا رَسُوْلَ رَبِّهِمْ فَاَخَذَهُمْ اَخْذَةً رَّابِیَةً ۟

Faʻaṣaw rasoola Rabbihim faʹakhaẓahum ʹakhẓatar raabiyah.

இன்னும் அவர்கள், தங்கள் இறைவனின் தூதருக்கு மாறு செய்தனர். ஆதலால், அவன் அவர்களை மிக்க பலமாகப் பிடித்துக்கொண்டான்.

Verse 69:11

اِنَّا لَمَّا طَغَا الْمَآءُ حَمَلْنٰكُمْ فِی الْجَارِیَةِ ۟ۙ

ʹInnaa lammaa ṭag̣al maaaʹu ḥamalnaakum fil jaariyah.

(நூஹ் நபி காலத்தில் ஏற்பட்ட பிரளயத்தில்) தண்ணீர் பெருக்கெடுத்தபோது, நிச்சயமாக நாம் உங்(கள் மூதாதை)களைக் கப்பலில் ஏற்றி (காப்பாற்றி)க் கொண்டோம்.

Verse 69:12

لِنَجْعَلَهَا لَكُمْ تَذْكِرَةً وَّتَعِیَهَاۤ اُذُنٌ وَّاعِیَةٌ ۟

Linajʻalahaa lakum Taẓkiratañwwa taʻiyahaaa ʹuẓunuñw waaʻiyah.

அதை உங்களுக்கு ஒரு படிப்பினையாகச் செய்வதற்கும், அதைக் காதால் கேட்பவன் ஞாபகத்தில் வைப்பதற்கும் (அவ்வாறு செய்தோம்).

Verse 69:13

فَاِذَا نُفِخَ فِی الصُّوْرِ نَفْخَةٌ وَّاحِدَةٌ ۟ۙ

Faʹiẓaa nufikha fiṣ Ṣoori nafkhatuñw waaḥidah,

(பலமாக) ஒரு முறை ஸூர் ஊதப்பட்டு,

Verse 69:14

وَّحُمِلَتِ الْاَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَّاحِدَةً ۟ۙ

Wa-ḥumilatil ʹarḍu wal-jibaalu fadukkataa dakkatañw waaḥidah,―

பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) ஒன்றோடொன்று மோதி பலமாக அடிக்கப்பட்டால்,

Verse 69:15

فَیَوْمَىِٕذٍ وَّقَعَتِ الْوَاقِعَةُ ۟ۙ

Fayawmaʹiẓiñw Waq̣aʻatil Waaq̣iʻah,

அந்நாளில்தான் யுகமுடிவின் மாபெரும் சம்பவம் நிகழும்.

Verse 69:16

وَانْشَقَّتِ السَّمَآءُ فَهِیَ یَوْمَىِٕذٍ وَّاهِیَةٌ ۟ۙ

Wañshaq̣q̣atis samaaaʹu fahiya Yawmaʹiẓiñw waahiyah,

அந்நாளில் வானம் வெடித்து, அது பலவீனமாகி விடும்.

Verse 69:17

وَّالْمَلَكُ عَلٰۤی اَرْجَآىِٕهَا ؕ وَیَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ یَوْمَىِٕذٍ ثَمٰنِیَةٌ ۟ؕ

Wal-malaku ʻalaaa ʹarjaaaʹihaa, wa-yaḥmilu ʻArsha Rabbika fawq̣ahum Yawmaʹiẓiñ s̤amaaniyah.

(நபியே!) வானவர்கள் அதன் கோடிகளிலிருப்பார்கள். மேலும், அந்நாளில் உமது இறைவனின் அர்ஷை, எட்டு வானவர்கள் தங்களுக்கு மேலாகச் சுமந்து கொண்டு நிற்பார்கள்.

Verse 69:18

یَوْمَىِٕذٍ تُعْرَضُوْنَ لَا تَخْفٰی مِنْكُمْ خَافِیَةٌ ۟

Yawmaʹiẓiñ tuʻraḍoona laa- takhfaa miñ-kum khaafiyah.

(மனிதர்களே!) அந்நாளில் நீங்கள் (உங்கள் இறைவன் முன்) கொண்டு போகப்படுவீர்கள். மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது.

Verse 69:19

فَاَمَّا مَنْ اُوْتِیَ كِتٰبَهٗ بِیَمِیْنِهٖ ۙ فَیَقُوْلُ هَآؤُمُ اقْرَءُوْا كِتٰبِیَهْ ۟ۚ

Faʹammaa man ʹootiya Kitaabahoo biyameenihee fayaq̣oolu haaaʹumuq̣ raʹoo Kitaabiyah!

எவருடைய (செயல்கள் எழுதப்பட்ட) ஏடு அவருடைய வலது கையில் கொடுக்கப்படுகிறாரோ அவர் (மற்றவர்களை நோக்கி மகிழ்ச்சியுடன்)கூறுவார்: ‘‘இதோ! என் ஏடு; இதை நீங்கள் படித்துப் பாருங்கள்,

Verse 69:20

اِنِّیْ ظَنَنْتُ اَنِّیْ مُلٰقٍ حِسَابِیَهْ ۟ۚ

ʹInnee z̤̣anañtu ʹannee mulaaq̣in Ḥisaabiyah!

நிச்சயமாக நான் என் கேள்வி கணக்கைச் சந்திப்பேன் என்றே நம்பியிருந்தேன்.''

Verse 69:21

فَهُوَ فِیْ عِیْشَةٍ رَّاضِیَةٍ ۟ۙ

Fahuwa fee ʻeeshatir raaḍiyah,

ஆகவே, அவர் திருப்தியான (சுகபோக) வாழ்க்கையில்,

Verse 69:22

فِیْ جَنَّةٍ عَالِیَةٍ ۟ۙ

Fee Jannatin ʻaaliyah,

மேலான சொர்க்கத்தில் இருப்பார்.

Verse 69:23

قُطُوْفُهَا دَانِیَةٌ ۟

Q̣utoofuhaa daaniyah.

அதன் கனிகள் (இவர்கள், படுத்திருந்தாலும் உட்கார்ந்திருந்தாலும், நின்று கொண்டிருந்தாலும், எந்நிலைமையிலும் கைக்கு எட்டக்கூடியதாக இவர்களை) நெருங்கி இருக்கும்.

Verse 69:24

كُلُوْا وَاشْرَبُوْا هَنِیْٓـًٔا بِمَاۤ اَسْلَفْتُمْ فِی الْاَیَّامِ الْخَالِیَةِ ۟

Kuloo washraboo haneeeʹam bimaaa ʹaslaftum fil ʹayyaamil khaaliyah!

(இவர்களை நோக்கி) ‘‘சென்ற நாள்களில் நீங்கள் சேகரித்து வைத்திருந்த (நன்மையான)வற்றின் காரணமாக, மிக்க தாராளமாக இவற்றைப் புசியுங்கள்! அருந்துங்கள்'' (என்று கூறப்படும்).

Verse 69:25

وَاَمَّا مَنْ اُوْتِیَ كِتٰبَهٗ بِشِمَالِهٖ ۙ۬ فَیَقُوْلُ یٰلَیْتَنِیْ لَمْ اُوْتَ كِتٰبِیَهْ ۟ۚ

Wa-ʹammaa man ʹootiya Kitaabahoo bishimaalihee fayaq̣oolu yaalaytanee lam ʹoota Kitaabiyah!

எவனுடைய (செயல்கள் எழுதப்பட்ட) ஏடு அவனுடைய இடது கையில் கொடுக்கப்பெறுவானோ அவன், ‘‘என் ஏடு எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டாமா? என்று கூறுவான்.

Verse 69:26

وَلَمْ اَدْرِ مَا حِسَابِیَهْ ۟ۚ

Wa-lam ʹadri maa- ḥisaabiyah!

மேலும், என் கணக்கை இன்னதென்று நான் அறியாதிருக்க வேண்டுமே!

Verse 69:27

یٰلَیْتَهَا كَانَتِ الْقَاضِیَةَ ۟ۚ

Yaa-laytahaa kaanatil q̣aaḍiyah!

நான் இறந்தபொழுதே என் காரியம் முடிவு பெற்றிருக்க வேண்டுமே!

Verse 69:28

مَاۤ اَغْنٰی عَنِّیْ مَالِیَهْ ۟ۚ

Maaa ʹag̣naa ʻannee maaliyah!

என் பொருள் எனக்கு ஒன்றும் பயனளிக்கவில்லையே!

Verse 69:29

هَلَكَ عَنِّیْ سُلْطٰنِیَهْ ۟ۚ

Halaka ʻannee sulṭaaniyah!

என் அரசாட்சியும் அழிந்துவிட்டதே!'' (என்றும் புலம்புவான்).

Verse 69:30

خُذُوْهُ فَغُلُّوْهُ ۟ۙ

Khuẓoohu fag̣ullooh,

(பின்னர் நாம்) ‘‘அவனைப் பிடியுங்கள், அவனுக்கு விலங்கிடுங்கள்;

Verse 69:31

ثُمَّ الْجَحِیْمَ صَلُّوْهُ ۟ۙ

S̤ummal Jaḥeema ṣallooh,

அவனை நரகத்தில் தள்ளுங்கள் என்றும்,

Verse 69:32

ثُمَّ فِیْ سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُوْنَ ذِرَاعًا فَاسْلُكُوْهُ ۟ؕ

S̤umma fee silsilatiñ ẓarʻuhaa sabʻoona ẓiraaʻañ faslukooh!

எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்'' என்றும் (கூறுவோம்).

Verse 69:33

اِنَّهٗ كَانَ لَا یُؤْمِنُ بِاللّٰهِ الْعَظِیْمِ ۟ۙ

ʹInnahoo kaana laa- yuʹminu billaahil ʻAz̤̣eem,

நிச்சயமாக அவன் மகத்தான அல்லாஹ்வையே நம்பிக்கை கொள்ளவில்லை.

Verse 69:34

وَلَا یَحُضُّ عَلٰی طَعَامِ الْمِسْكِیْنِ ۟ؕ

Wa-laa yaḥuḍḍu ʻalaa ṭaʻaamil miskeen!

ஏழைகளுக்கு (தானும் உணவளிக்காததுடன், பிறரையும்) உணவளிக்கும்படி அவன் தூண்டவில்லை.

Verse 69:35

فَلَیْسَ لَهُ الْیَوْمَ هٰهُنَا حَمِیْمٌ ۟ۙ

Falaysa lahul Yawma haahunaa ḥameem,

‘‘ஆகவே, இன்று அவனுக்கு (இங்கு) ஒரு நண்பனும் இல்லை.

Verse 69:36

وَّلَا طَعَامٌ اِلَّا مِنْ غِسْلِیْنٍ ۟ۙ

Wa-laa ṭaʻaamun ʹillaa min g̣isleen,

(புண்களில் வடியும்) சீழ் சலங்களைத் தவிர, (அவனுக்கு வேறு) உணவில்லை'' (என்றும் கூறப்படும்).

Verse 69:37

لَّا یَاْكُلُهٗۤ اِلَّا الْخَاطِـُٔوْنَ ۟۠

Laa- yaʹkuluhooo ʹillal khaaṭiʹoon.

அதைக் குற்றவாளிகளைத் தவிர (மற்றெவரும்) உண்ண மாட்டார்கள்.

Verse 69:38

فَلَاۤ اُقْسِمُ بِمَا تُبْصِرُوْنَ ۟ۙ

Falaaa ʹuq̣simu bimaa tubṣiroon

(மக்களே!) நீங்கள் பார்ப்பவற்றின் மீதும், (உங்கள் கண்களுக்குத் தோன்றுபவற்றின் மீதும்,)

Verse 69:39

وَمَا لَا تُبْصِرُوْنَ ۟ۙ

Wamaa laa- tubṣiroon,―

நீங்கள் பார்க்காதவற்றின் மீதும், (உங்கள் கண்களுக்குத் தோன்றாதவற்றின் மீதும்) சத்தியமாக!

Verse 69:40

اِنَّهٗ لَقَوْلُ رَسُوْلٍ كَرِیْمٍ ۟ۚۙ

ʹInnahoo laq̣awlu Rasooliñ Kareem;

இது, நிச்சயமாக (நம்மால் அறிவிக்கப்பட்டபடியே) மிக்க கண்ணியமான ஒரு தூதரால் கூறப்பட்டதாகும்.

Verse 69:41

وَّمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍ ؕ قَلِیْلًا مَّا تُؤْمِنُوْنَ ۟ۙ

Wa-maa huwa biq̣awli shaaʻir: q̣aleelam maa tuʹminoon!

இது, ஒரு கவிஞனுடைய சொல்லல்ல. எனினும், (இதை) நீங்கள் வெகு சொற்பமாகவே நம்பிக்கை கொள்கிறீர்கள்.

Verse 69:42

وَلَا بِقَوْلِ كَاهِنٍ ؕ قَلِیْلًا مَّا تَذَكَّرُوْنَ ۟ؕ

Wa-laa biq̣awli kaahin: q̣aleelam maa taẓakkaroon.

(இது) ஒரு குறிகாரனுடைய சொல்லுமல்ல. (எனினும், இதைக் கொண்டு) வெகு சொற்பமாகவே நீங்கள் நல்லுபதேசம் பெறுகிறீர்கள்.

Verse 69:43

تَنْزِیْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِیْنَ ۟

Tañzeelum mir Rabbil ʻAalameen.

அகிலத்தார்களின் இறைவனால் (இது) இறக்கப்பட்டுள்ளது.

Verse 69:44

وَلَوْ تَقَوَّلَ عَلَیْنَا بَعْضَ الْاَقَاوِیْلِ ۟ۙ

Wa-law taq̣awwala ʻalaynaa baʻḍal ʹaq̣aaweel,

ஒரு சில வார்த்தைகளை அவர் நம்மீது கற்பனை செய்து பொய்யாகக் கூறினாலும்,

Verse 69:45

لَاَخَذْنَا مِنْهُ بِالْیَمِیْنِ ۟ۙ

Laʹakhaẓnaa minhu bilyameen,

அவருடைய வலது கரத்தை நாம் (பலமாகப்) பிடித்துக் கொண்டு,

Verse 69:46

ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِیْنَ ۟ؗۖ

S̤umma laq̣aṭaʻnaa minhul wateen:

பிறகு, அவருடைய உயிர் நாடியை நாம் தறித்து விடுவோம்.

Verse 69:47

فَمَا مِنْكُمْ مِّنْ اَحَدٍ عَنْهُ حٰجِزِیْنَ ۟

Famaa miñkum min ʹaḥadin ʻanhu ḥaajizeen.

உங்களில் எவருமே அவரை விட்டும் அதைத் தடுத்துவிட முடியாது.

Verse 69:48

وَاِنَّهٗ لَتَذْكِرَةٌ لِّلْمُتَّقِیْنَ ۟

Wa-ʹinnahoo la-Taẓkiratul lil-Muttaq̣een.

நிச்சயமாக இது இறையச்சமுடையவர்களுக்கு நல்லுபதேசமாகவே இருக்கிறது.

Verse 69:49

وَاِنَّا لَنَعْلَمُ اَنَّ مِنْكُمْ مُّكَذِّبِیْنَ ۟

Wa-ʹinnaa lanaʻlamu ʹanna miñkum mukaẓẓibeen.

(எனினும்,) உங்களில் அதைப் பொய்யாக்குகிறவர்களும் இருக்கின்றனர் என்பதை நிச்சயமாக நாம் நன்கறிவோம்.

Verse 69:50

وَاِنَّهٗ لَحَسْرَةٌ عَلَی الْكٰفِرِیْنَ ۟

Wa-ʹinnahoo laḥasratun ʻalal kaafireen.

நிச்சயமாக அது நிராகரிப்பவர்களுக்குத் துக்கத்தைத் தரக்கூடியதாகவே இருக்கிறது.

Verse 69:51

وَاِنَّهٗ لَحَقُّ الْیَقِیْنِ ۟

Wa-ʹinnahoo la-Ḥaq̣q̣ul yaq̣een.

(எனினும்) நிச்சயமாக இது, ஒரு சிறிதும் சந்தேகமற்ற உண்மையாகும்.

Verse 69:52

فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِیْمِ ۟۠

Fasabbiḥ bismi Rabbikal ʻAz̤̣eem.

ஆகவே, (நபியே!) நீர் மகத்தான உமது இறைவனின் திருப்பெயரை துதிசெய்து கொண்டிருப்பீராக!