Surah Az-Zalzalah
Surah Az-Zalzalah (The Earthquake) is Surah 99 of the Holy Quran, a Medinan Surah with 8 verses, available here in Tamil.
Verse 99:1
اِذَا زُلْزِلَتِ الْاَرْضُ زِلْزَالَهَا ۟ۙ
ʹIẓaa zul-zilatil ʹArḍu zil-zaalahaa,
(பூகம்பத்தால்) பூமி பலமாக அசைக்கப்படும்போது,
Verse 99:2
وَاَخْرَجَتِ الْاَرْضُ اَثْقَالَهَا ۟ۙ
Wa-ʹakhrajatil ʹArḍu ʹas̤q̣aalahaa,
அது, தான் சுமந்திருப்பவற்றை (எல்லாம் வெளியில்) எறிந்துவிடும் சமயத்தில்,
Verse 99:3
وَقَالَ الْاِنْسَانُ مَا لَهَا ۟ۚ
Waq̣aalal ʹiñsaanu maa- lahaa?
மனிதன் (திடுக்கிட்டு) ‘இதற்கென்ன நேர்ந்தது' (ஏன் இவ்வாறு அசைக்கப்பட்டது?) என்று கேட்பான்.
Verse 99:4
یَوْمَىِٕذٍ تُحَدِّثُ اَخْبَارَهَا ۟ؕ
Yawmaʹiẓiñ tuḥaddis̤u ʹakhbaarahaa,
அந்நாளில் அது, தனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் அறிவித்து விடும்.
Verse 99:5
بِاَنَّ رَبَّكَ اَوْحٰی لَهَا ۟ؕ
Biʹanna Rabbaka ʹawḥaa lahaa.
(இவ்வாறே) உமது இறைவன் வஹ்யி மூலம் (தனக்கு) கட்டளையிட்டிருக்கிறான் என்று கூறும்.
Verse 99:6
یَوْمَىِٕذٍ یَّصْدُرُ النَّاسُ اَشْتَاتًا ۙ۬ لِّیُرَوْا اَعْمَالَهُمْ ۟ؕ
Yawmaʹiẓiñy yaṣ-durun naasu ʹash-taatal liyuraw ʹaʻmaalahum.
அந்நாளில் மனிதர்கள், (நன்மையோ தீமையோ) தாங்கள் செய்த செயல்களைக் காண்பதற்காக(ப் பல பிரிவுகளாகப் பிரிந்து) கூட்டம் கூட்டமாக (விசாரணைக்காக) வருவார்கள்.
Verse 99:7
فَمَنْ یَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَیْرًا یَّرَهٗ ۟ؕ
Famañy yaʻmal mis̤q̣aala ẓarratin khayrañy yarah.
ஆகவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர், (அங்கு) அதையும் கண்டுகொள்வார்.
Verse 99:8
وَمَنْ یَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا یَّرَهٗ ۟۠
Wa-mañy yaʻmal mis̤q̣aala ẓarratiñ sharrañy yarah.
(அவ்வாறே) எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தானோ, அதையும் அவன் (அங்கு) கண்டு கொள்வான்.