Surah As-Saffat
Surah As-Saffat (Those who set the Ranks) is Surah 37 of the Holy Quran, a Meccan Surah with 182 verses, available here in Tamil.
Verse 37:1
وَالصّٰٓفّٰتِ صَفًّا ۟ۙ
Waṣṣaaaffaati ṣaffaa.
அணி அணியாக நிற்பவர்கள் மீது சத்தியமாக!
Verse 37:2
فَالزّٰجِرٰتِ زَجْرًا ۟ۙ
Fazzaajiraati zajraa.
(தீமைகளைத்) தீவிரமாக விரட்டுபவர்கள் மீது சத்தியமாக!
Verse 37:3
فَالتّٰلِیٰتِ ذِكْرًا ۟ۙ
Fattaaliyaati Ẓikraa.
(இறைவனின் வசனங்களை) ஓதுபவர்கள் மீது சத்தியமாக!
Verse 37:4
اِنَّ اِلٰهَكُمْ لَوَاحِدٌ ۟ؕ
ʹInna ʹIlaahakum la-Waaḥid!―
நிச்சயமாக உங்கள் வணக்கத்திற்குரிய இறைவன் ஒரே ஒருவன்தான்.
Verse 37:5
رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا وَرَبُّ الْمَشَارِقِ ۟ؕ
Rabbus samaawaati wal-ʹarḍi wa-maa baynahumaa wa-Rabbul mashaariq̣!
வானங்கள், பூமி இன்னும் அவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றின் இறைவன் அவனே. கீழ் திசை(கள் மேல் திசை)களின் இறைவனும் அவனே.
Verse 37:6
اِنَّا زَیَّنَّا السَّمَآءَ الدُّنْیَا بِزِیْنَةِ لْكَوَاكِبِ ۟ۙ
ʹInnaa zayyannas samaaa ʹad-dunyaa bizeenatinil kawaakib,―
நிச்சயமாக (உங்கள் இறைவனாகிய) நாம், (பூமிக்குச்) சமீபமாக உள்ள வானத்தைப் பிரகாசிக்கும் நட்சத்திரங்களைக் கொண்டு அழகுபடுத்தி வைத்தோம்.
Verse 37:7
وَحِفْظًا مِّنْ كُلِّ شَیْطٰنٍ مَّارِدٍ ۟ۚ
Wa-ḥifz̤̣am miñ kulli Shayṭaanim maarid,
மிக்க விஷமிகளான ஷைத்தான்களுக்கு ஒரு தடையாகவும் (ஆக்கி வைத்தோம்).
Verse 37:8
لَا یَسَّمَّعُوْنَ اِلَی الْمَلَاِ الْاَعْلٰی وَیُقْذَفُوْنَ مِنْ كُلِّ جَانِبٍ ۟ۗۖ
Laa- yassammaʻoona ʹilal Malaʹil ʹAʻlaa wa-yuq̣ẓafoona miñ kulli jaanib,
மேல் உலகத்தில் உள்ளவர்களின் விஷயங்களை (ஷைத்தான்கள்) செவியுற முடியாது. (ஏனென்றால், அதை நெருங்கும் ஒவ்வொருவரும்) பல பாகங்களிலிருந்தும் (கொள்ளிகளால்) எறியப்பட்டு விரட்டப்படுகின்றனர்.
Verse 37:9
دُحُوْرًا وَّلَهُمْ عَذَابٌ وَّاصِبٌ ۟ۙ
Duḥoorañw Walahum ʻaẓaabuñw waaṣib,
மேலும், அவர்களுக்கு நிலையான வேதனையுண்டு.
Verse 37:10
اِلَّا مَنْ خَطِفَ الْخَطْفَةَ فَاَتْبَعَهٗ شِهَابٌ ثَاقِبٌ ۟
ʹIllaa man khaṭifal khaṭfata faʹatbaʻahoo shihaabuñ s̤aaq̣ib.
(தப்பித் தவறி ஒரு வார்த்தையை) பறித்துச் செல்ல நெருங்கினால், உடனே அவனை(க் கொழுந்து விட்டெரியும்) பிரகாசமான நெருப்பு பின்தொடர்கிறது.
Verse 37:11
فَاسْتَفْتِهِمْ اَهُمْ اَشَدُّ خَلْقًا اَمْ مَّنْ خَلَقْنَا ؕ اِنَّا خَلَقْنٰهُمْ مِّنْ طِیْنٍ لَّازِبٍ ۟
Fastaftihim ʹahum ʹashaddu khalq̣an ʹam man khalaq̣naa? ʹInnaa khalaq̣naahum miñ ṭeenil laazib!
(நபியே!) இந்நிராகரிப்பவர்களை நீர் கேட்பீராக: (இறந்த பின்) உங்களைப் படைப்பது சிரமமா? அல்லது நாம் படைத்திருக்கும் (வானம், பூமி, நட்சத்திரங்கள் ஆகிய) இவற்றைப் படைப்பது சிரமமா? நிச்சயமாக நாம் இவர்களைப் பிசுபிசுப்பான களிமண்ணால்தான் படைத்திருக்கிறோம்.
Verse 37:12
بَلْ عَجِبْتَ وَیَسْخَرُوْنَ ۪۟
Bal ʹajibta wa-yaskharoon,
மாறாக, (நபியே!) நீர் (அல்லாஹ்வின் வல்லமையைக்கண்டு) ஆச்சரியப்படுகிறீர்; அவர்களோ (அதைப்) பரிகசிக்கின்றனர்.
Verse 37:13
وَاِذَا ذُكِّرُوْا لَا یَذْكُرُوْنَ ۪۟
Wa-ʹiẓaa ẓukkiroo laa- yaẓkuroon,―
மேலும், அவர்களுக்கு நல்லுபதேசம் கூறிய போதிலும் அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதேயில்லை.
Verse 37:14
وَاِذَا رَاَوْا اٰیَةً یَّسْتَسْخِرُوْنَ ۪۟
Wa-ʹiẓaa raʹaw ʹaayatañ yastaskhiroon.
எந்த அத்தாட்சியைக் கண்டபோதிலும் அவர்கள் பரிகாசம் செய்கின்றனர்.
Verse 37:15
وَقَالُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِیْنٌ ۟ۚۖ
Wa-q̣aalooo ʹin haaẓaaa ʹillaa siḥrum mubeen!
மேலும், ‘‘ இது பகிரங்கமான சூனியமே தவிர வேறில்லை'' என்றும் கூறுகின்றனர்.
Verse 37:16
ءَاِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَ ۟ۙ
ʹA-ʹiẓaa mitnaa wa-kunnaa turabañw waʻiz̤̣aaman ʹa-ʹinnaa lamabʻoos̤oon.
‘‘நாம் இறந்து (உக்கி) எலும்பாகவும் மண்ணாகவும், போன பின்னர் மெய்யாகவே நாம் எழுப்பப்படுவோமா? (என்றும்),
Verse 37:17
اَوَاٰبَآؤُنَا الْاَوَّلُوْنَ ۟ؕ
ʹA-waʹaabaaaʹunal ʹawwaloon?
(அவ்வாறே) நம் மூதாதைகளுமா? (எழுப்பப்படுவார்கள்'' என்றும் பரிகாசமாகக் கூறுகின்றனர்.)
Verse 37:18
قُلْ نَعَمْ وَاَنْتُمْ دَاخِرُوْنَ ۟ۚ
Q̣ul naʻam wa-ʹañtum daakhiroon.
அதற்கு (நபியே!) கூறுவீராக: ‘‘(நீங்கள் எழுப்பப்படுவது) உண்மைதான். அச்சமயம் நீங்கள் சிறுமைப்பட்டவர்களாக இருப்பீர்கள்.
Verse 37:19
فَاِنَّمَا هِیَ زَجْرَةٌ وَّاحِدَةٌ فَاِذَا هُمْ یَنْظُرُوْنَ ۟
Faʹinnamaa hiya zajratuñw waaḥidatuñ faʹiẓaa hum yañz̤̣uroon!
அது ஒரே ஒரு சப்தம்தான்; உடனே அவர்கள் (எழுந்து நின்று திருதிருவென்று) விழிப்பார்கள்.
Verse 37:20
وَقَالُوْا یٰوَیْلَنَا هٰذَا یَوْمُ الدِّیْنِ ۟
Wa-q̣aaloo yaa-waylanaa haaẓaa Yawmud deen!
நாங்கள் கெட்டோம்! இது கூலி கொடுக்கும் நாளாயிற்றே'' என்றும் அவர்கள் கூறுவார்கள்.
Verse 37:21
هٰذَا یَوْمُ الْفَصْلِ الَّذِیْ كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ ۟۠
Haaẓaa Yawmul Faṣlil laẓee kuñtum̃ bihee tukaẓẓiboon!
(அதற்கவர்களை நோக்கி) ‘‘நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த தீர்ப்பு நாள் இதுதான்'' (என்றும் கூறப்படும்).
Verse 37:22
اُحْشُرُوا الَّذِیْنَ ظَلَمُوْا وَاَزْوَاجَهُمْ وَمَا كَانُوْا یَعْبُدُوْنَ ۟ۙ
ʹUḥshurul laẓeena z̤̣alamoo wa-ʹazwaajahum wa-maa kaanoo yaʻbudoon.
அநியாயம் செய்தவர்களையும், அவர்களுடைய தோழர்களையும், அல்லாஹ்வை அன்றி அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களையும் நீங்கள் ஒன்று சேர்த்து,
Verse 37:23
مِنْ دُوْنِ اللّٰهِ فَاهْدُوْهُمْ اِلٰی صِرَاطِ الْجَحِیْمِ ۟
Miñ doonil laahi fahdoohum ʹilaa Ṣiraaṭil Jaḥeem!
‘‘அவர்களை நரகத்திற்குக் கொண்டு செல்லுங்கள்'' (என்றும்),
Verse 37:24
وَقِفُوْهُمْ اِنَّهُمْ مَّسْـُٔوْلُوْنَ ۟ۙ
Waq̣ifoohum ʹinnahum masʹooloon:
‘‘அங்கு அவர்களை நிறுத்தி வையுங்கள்; நிச்சயமாக அவர்களைக் (கேள்வி கணக்குக்) கேட்க வேண்டியதிருக்கிறது'' (என்றும் கூறப்படும்).
Verse 37:25
مَا لَكُمْ لَا تَنَاصَرُوْنَ ۟
Maa- lakum laa- tanaaṣaroon?
‘‘உங்களுக்கு என்ன நேர்ந்தது? (உலகத்தில் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டிருந்தபடி இங்கு) நீங்கள் ஏன் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளவில்லை'' (என்றும் கேட்கப்படும்).
Verse 37:26
بَلْ هُمُ الْیَوْمَ مُسْتَسْلِمُوْنَ ۟
Bal humul yawma mustaslimoon;
எனினும், அன்றைய தினம் அவர்கள் தலை குனிந்தவர்களாக இருப்பார்கள்.
Verse 37:27
وَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰی بَعْضٍ یَّتَسَآءَلُوْنَ ۟
Wa-ʹaq̣bala baʻḍuhum ʻalaa baʻḍiñy yatasaaaʹaloon.
, 28. அவர்களில் ஒருவர் மற்றொருவருடன் தர்க்கிக்க முற்பட்டு, (சிலர் தங்கள் தலைவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நீங்கள் நம்மிடம் பலவந்தமாகவே வந்(து உங்களுக்கு கீழ்ப்படியும்படி எங்களை நிர்ப்பந்தித்)தீர்கள்'' என்று கூறுவார்கள்.
Verse 37:28
قَالُوْۤا اِنَّكُمْ كُنْتُمْ تَاْتُوْنَنَا عَنِ الْیَمِیْنِ ۟
Q̣aalooo ʹinnakum kuñtum taʹtoonanaa ʻanil yameen!
, 28. அவர்களில் ஒருவர் மற்றொருவருடன் தர்க்கிக்க முற்பட்டு, (சிலர் தங்கள் தலைவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நீங்கள் நம்மிடம் பலவந்தமாகவே வந்(து உங்களுக்கு கீழ்ப்படியும்படி எங்களை நிர்ப்பந்தித்)தீர்கள்'' என்று கூறுவார்கள்.
Verse 37:29
قَالُوْا بَلْ لَّمْ تَكُوْنُوْا مُؤْمِنِیْنَ ۟ۚ
Q̣aaloo bal lam takoonoo Muʹmineen!
அதற்கு அ(த்தலை)வர்கள் ‘‘அவ்வாறல்ல. (நாங்கள் உங்களைத் தடை செய்யவில்லை.) நீங்கள்தான் நம்பிக்கை கொள்ளவில்லை.''
Verse 37:30
وَمَا كَانَ لَنَا عَلَیْكُمْ مِّنْ سُلْطٰنٍ ۚ بَلْ كُنْتُمْ قَوْمًا طٰغِیْنَ ۟
Wa-maa kaana lanaa ʻalaykum miñ sulṭaan. Bal kuñtum q̣awmañ ṭaag̣een!
‘‘எங்களுக்கு உங்கள் மீது ஓர் அதிகாரமும் இருக்கவில்லை. நீங்கள் தான் பொல்லாத மக்களாக இருந்தீர்கள்.
Verse 37:31
فَحَقَّ عَلَیْنَا قَوْلُ رَبِّنَاۤ ۖۗ اِنَّا لَذَآىِٕقُوْنَ ۟
Faḥaq̣q̣a ʻalaynaa Q̣awlu Rabbinaaa ʹinnaa laẓaaaʹiq̣oon.
ஆதலால், எங்கள் இறைவனுடைய வாக்கு எங்களுக்கு உண்மையாகி விட்டது. நிச்சயமாக நாம் அனைவரும் (வேதனையைச்) சுவைக்க வேண்டியவர்களே.
Verse 37:32
فَاَغْوَیْنٰكُمْ اِنَّا كُنَّا غٰوِیْنَ ۟
Faʹag̣waynaakum ʹinnaa kunnaa g̣aaween.
நிச்சயமாக நாங்கள் உங்களை வழிகெடுத்தோம். ஏனென்றால், நாங்கள் வழிகெட்டே போயிருந்தோம் என்று கூறுவார்கள்.
Verse 37:33
فَاِنَّهُمْ یَوْمَىِٕذٍ فِی الْعَذَابِ مُشْتَرِكُوْنَ ۟
Faʹinnahum Yawmaʹiẓiñ fil ʻAẓaabi mushtarikoon.
முடிவில் நிச்சயமாக அவர்கள் அனைவரும் அன்றைய தினம் வேதனையில் (சம) பங்காளிகள்தான்.
Verse 37:34
اِنَّا كَذٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِیْنَ ۟
ʹInnaa kaẓaalika nafʻalu bil-mujrimeen.
நிச்சயமாக நாம், குற்றவாளிகளை இவ்வாறே நடத்துவோம்.
Verse 37:35
اِنَّهُمْ كَانُوْۤا اِذَا قِیْلَ لَهُمْ لَاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُۙ یَسْتَكْبِرُوْنَ ۟ۙ
ʹInnahum kaanooo ʹiẓaa q̣eela lahum ˹Laaa ʹilaaha ʹillal laahu˺ yastakbiroon,
‘‘அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் அறவே இல்லை (ஆகவே, அவனையே வணங்குங்கள்)'' என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், நிச்சயமாக அவர்கள் கர்வம் கொள்கின்றனர்,
Verse 37:36
وَیَقُوْلُوْنَ اَىِٕنَّا لَتَارِكُوْۤا اٰلِهَتِنَا لِشَاعِرٍ مَّجْنُوْنٍ ۟ؕ
Wa-yaq̣ooloona ʹaʹinnaa lataarikooo ʹaalihatinaa lishaaʻirim majnoon?
‘‘என்னே! நாங்கள் பைத்தியம் பிடித்த ஒரு கவிஞருக்காக எங்கள் தெய்வங்களை மெய்யாகவே விட்டுவிடுவோமா?'' என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
Verse 37:37
بَلْ جَآءَ بِالْحَقِّ وَصَدَّقَ الْمُرْسَلِیْنَ ۟
Bal jaaaʹa bil-Ḥaq̣q̣i wa-ṣaddaq̣al mursaleen.
‘‘(அவர் பைத்தியக்காரர் அல்ல.) மாறாக, அவர் உண்மையையே கொண்டு வந்தார். (தனக்கு முன்னர் வந்த) நபிமார்களையும் அவர் உண்மையாக்கி வைத்தார். (இவற்றை எல்லாம் நீங்கள் பொய்யாக்கி விட்டீர்கள்.)
Verse 37:38
اِنَّكُمْ لَذَآىِٕقُوا الْعَذَابِ الْاَلِیْمِ ۟ۚ
ʹInnakum laẓaaaʹiq̣ul ʻAẓaabil ʹAleem;
ஆதலால், நிச்சயமாக நீங்கள் துன்புறுத்தும் வேதனையை அனுபவிக்க வேண்டியதுதான்.
Verse 37:39
وَمَا تُجْزَوْنَ اِلَّا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟ۙ
Wa-maa tujzawna ʹillaa maa- kuñtum taʻmaloon;
நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றுக்கே தவிர உங்களுக்குக் கூலி கொடுக்கப்படவில்லை'' (என்றும் கூறப்படும்).
Verse 37:40
اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِیْنَ ۟
ʹIllaa ʻibaadal laahil mukhlaṣeen.
கலப்பற்ற, மனத்தூய்மையுடைய அல்லாஹ்வுடைய அடியார்களைத் தவிர.
Verse 37:41
اُولٰٓىِٕكَ لَهُمْ رِزْقٌ مَّعْلُوْمٌ ۟ۙ
ʹUlaaaʹika lahum Rizq̣um maʻloom,
அவர்களுக்கு (அல்லாஹ்வின் புறத்திலிருந்து உயர்ரக) பழக்கமான உணவு தயார் செய்யப்பட்டிருக்கும்.
Verse 37:42
فَوَاكِهُ ۚ وَهُمْ مُّكْرَمُوْنَ ۟ۙ
Fawaakihu wa-hum mukramoon,
(இன்னும், சுவையான) கனிவர்க்கங்கள் அவர்களுக்கு உண்டு. அவர்கள் (இவ்வாறு) கண்ணியப்படுத்தப்படுவார்கள்.
Verse 37:43
فِیْ جَنّٰتِ النَّعِیْمِ ۟ۙ
Fee Jannaatin Naʻeem,
இன்பம் தரும் சொர்க்கங்களில் இருப்பார்கள்.
Verse 37:44
عَلٰی سُرُرٍ مُّتَقٰبِلِیْنَ ۟
ʻAlaa sururim mutaq̣aabileen:
கட்டில்களில் ஒருவர் மற்றொருவரை முகம் நோக்கி (உல்லாசமாகப் பேசிக்கொண்டு) உட்கார்ந்திருப்பார்கள்.
Verse 37:45
یُطَافُ عَلَیْهِمْ بِكَاْسٍ مِّنْ مَّعِیْنٍ ۟ۙ
Yuṭaafu ʻalayhim̃ bikaʹsim mim maʻeen,
மிகத் தெளிவான ஊற்றுக்களின் பானம் நிறைந்த குவளைகள் அவர்களைச் சுற்றிக்கொண்டே இருக்கும்.
Verse 37:46
بَیْضَآءَ لَذَّةٍ لِّلشّٰرِبِیْنَ ۟ۚۖ
Bayḍaaaʹa laẓẓatillish shaaribeen,
(அது) மிக்க வெண்மையானதாகவும், குடிப்பவர்களுக்கு மிக்க இன்பமானதாகவும் இருக்கும்.
Verse 37:47
لَا فِیْهَا غَوْلٌ وَّلَا هُمْ عَنْهَا یُنْزَفُوْنَ ۟
Laa- feehaa g̣awluñw walaa hum ʻanhaa yuñzafoon.
அதில் போதையே இருக்காது; அதனால், அவர்களுடைய அறிவும் நீங்கிவிடாது.
Verse 37:48
وَعِنْدَهُمْ قٰصِرٰتُ الطَّرْفِ عِیْنٌ ۟ۙ
Wa-ʻiñdahum q̣aaṣiraatuṭ ṭarfi ʻeen,
அவர்களிடத்தில் கீழ் நோக்கிய, அடக்கமான பார்வையையுடைய (ஹுருல் ஈன் என்னும்) கண்ணழகிகளும் இருப்பார்கள்.
Verse 37:49
كَاَنَّهُنَّ بَیْضٌ مَّكْنُوْنٌ ۟
Kaʹannahunna bayḍum maknoon.
அவர்களின் நிறம் (இறக்கைகளில்) மறைக்கப்பட்ட (நெருப்புக் கோழியின் இலேசான மஞ்சள் வர்ணமுடைய) முட்டைகளைப் போலிருக்கும்.
Verse 37:50
فَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰی بَعْضٍ یَّتَسَآءَلُوْنَ ۟
Faʹaq̣bala baʻḍuhum ʻalaa baʻḍiñy yatasaaaʹaloon.
அவர்களில் ஒருவர் மற்றவர்களை நோக்கி, (இம்மையில் நடைபெற்றவற்றைப் பற்றி மகிழ்ச்சியுடன்) பேசிக் கொண்டிருப்பார்கள்.
Verse 37:51
قَالَ قَآىِٕلٌ مِّنْهُمْ اِنِّیْ كَانَ لِیْ قَرِیْنٌ ۟ۙ
Q̣aala q̣aaaʹilum minhum ʹinnee kaana lee q̣areen,
அவர்களில் ஒருவர் கூறுவார்: ‘‘(இம்மையில்) மெய்யாகவே எனக்கொரு நண்பன் இருந்தான்.
Verse 37:52
یَّقُوْلُ اَىِٕنَّكَ لَمِنَ الْمُصَدِّقِیْنَ ۟
Yaq̣oolu ʹa-ʹinnaka laminal muṣaddiq̣een?
அவன் என்னை நோக்கி ‘‘நிச்சயமாக நீ இதை நம்புகிறாயா?'' என்று கேட்டான்.
Verse 37:53
ءَاِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَدِیْنُوْنَ ۟
ʹA-ʹiẓaa mitnaa wa-kunnaa turaabañw waʻiz̤̣aaman ʹa-ʹinnaa lamadeenoon?
என்ன! நாம் இறந்து உக்கி எலும்பாகவும், மண்ணாகவும் போனதன் பின்னர் (எழுப்பப்படுவோமா?) நிச்சயமாக நாம் (நமது செயல்களுக்குரிய) கூலிகள் கொடுக்கப்படுவோமா?'' என்று (பரிகாசமாகக்) கூறிக் கொண்டிருந்தான்.
Verse 37:54
قَالَ هَلْ اَنْتُمْ مُّطَّلِعُوْنَ ۟
Q̣aala hal ʹañtum muṭṭaliʻoon?
‘‘(ஆகவே, அவனை) நீங்கள் பார்க்க விரும்புகிறீர்களா? என்று கூறி,
Verse 37:55
فَاطَّلَعَ فَرَاٰهُ فِیْ سَوَآءِ الْجَحِیْمِ ۟
Faṭṭalaʻa faraʹaahu fee sawaaaʹil Jaḥeem.
அவனை எட்டிப் பார்த்து, அவன் நரகத்தின் மத்தியில் இருப்பதைக் கண்டு,
Verse 37:56
قَالَ تَاللّٰهِ اِنْ كِدْتَّ لَتُرْدِیْنِ ۟ۙ
Q̣aala tallaahi ʹiñ kitta laturdeen!
(அவனை நோக்கி) ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ என்னை அழித்துவிடவே கருதினாய்.''
Verse 37:57
وَلَوْلَا نِعْمَةُ رَبِّیْ لَكُنْتُ مِنَ الْمُحْضَرِیْنَ ۟
Wa-lawlaa Niʻmatu Rabbee lakuñtu minal muḥḍareen!
‘‘என் இறைவனுடைய அருள் எனக்குக் கிடைக்காதிருந்தால், நானும் (உன்னுடன் நரகத்தில்) சேர்க்கப்பட்டே இருப்பேன்.
Verse 37:58
اَفَمَا نَحْنُ بِمَیِّتِیْنَ ۟ۙ
ʹAfamaa naḥnu bimayyiteen,
(இதற்கு முன்னர்) நாம் இறந்துவிடவில்லையா?
Verse 37:59
اِلَّا مَوْتَتَنَا الْاُوْلٰی وَمَا نَحْنُ بِمُعَذَّبِیْنَ ۟
ʹIllaa mawtatanal ʹoolaa wa-maa naḥnu bimuʻaẓẓabeen?
(பின்னர் உயிர் பெற்றிருக்கும் நமக்கு) முந்திய மரணத்தைத் தவிர வேறில்லை. (இனி நாம் இறக்கவே மாட்டோம். சொர்க்கத்தில் இருக்கும்) நாம் வேதனைக்கு உள்ளாக்கப்படவும் மாட்டோம்'' (என்றும் கூறுவார்).
Verse 37:60
اِنَّ هٰذَا لَهُوَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟
ʹInna haaẓaa lahuwal fawzul ʻaz̤̣eem!
நிச்சயமாக இதுதான் மகத்தான பாக்கியமாகும்.
Verse 37:61
لِمِثْلِ هٰذَا فَلْیَعْمَلِ الْعٰمِلُوْنَ ۟
Limis̤li haaẓaa falyaʻmalil ʻaamiloon.
ஏதும் நன்மை செய்யக்கூடியவர்கள் எல்லோரும் இதைப் போன்ற (நற்பேறுகளை பெறுவ)தற்காகவே பாடுபடவும்.
Verse 37:62
اَذٰلِكَ خَیْرٌ نُّزُلًا اَمْ شَجَرَةُ الزَّقُّوْمِ ۟
ʹAẓaalika khayrun nuzulan ʹam Shajaratuz Zaq̣q̣oom?
(சொர்க்கத்தில் கிடைக்கும்) இது மேலான விருந்தா? அல்லது (நரகத்திலிருக்கும்) கள்ளி மரம் மேலான விருந்தா?
Verse 37:63
اِنَّا جَعَلْنٰهَا فِتْنَةً لِّلظّٰلِمِیْنَ ۟
ʹInnaa jaʻalnaahaa fitnatal liz̤̣z̤̣aalimeen.
(மனிதர்களே!) நிச்சயமாக நாம் இந்த அநியாயக்காரர்களை வேதனை செய்வதற்காகவே அதை உண்டு பண்ணி இருக்கிறோம்.
Verse 37:64
اِنَّهَا شَجَرَةٌ تَخْرُجُ فِیْۤ اَصْلِ الْجَحِیْمِ ۟ۙ
ʹInnahaa shajaratuñ takhruju feee ʹaṣlil Jaḥeem:
மெய்யாகவே அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வெளிப்பட்ட ஒரு மரமாகும்.
Verse 37:65
طَلْعُهَا كَاَنَّهٗ رُءُوْسُ الشَّیٰطِیْنِ ۟
Ṭalʻuhaa kaʹannahoo ruʹoosush shayaaṭeen:
அதன் கிளைகள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் இருக்கும்.
Verse 37:66
فَاِنَّهُمْ لَاٰكِلُوْنَ مِنْهَا فَمَالِـُٔوْنَ مِنْهَا الْبُطُوْنَ ۟ؕ
Faʹinnahum laʹaakiloona minhaa famaaliʹoona minhal buṭoon.
நிச்சயமாக அவர்கள் (தங்கள் பசிக் கொடுமையினால்) அதை புசிப்பார்கள்! இன்னும், (வேறு உணவின்றி) அதிலிருந்தே (தங்கள்) வயிறுகளை நிரப்பிக் கொண்டிருப்பார்கள்.
Verse 37:67
ثُمَّ اِنَّ لَهُمْ عَلَیْهَا لَشَوْبًا مِّنْ حَمِیْمٍ ۟ۚ
S̤umma ʹinna lahum ʻalayhaa lashawbam min ḥameem.
பின்னர், அதற்கு மேலும் நரகத்தில் கொதித்து சூடேறி இருக்கும் (சீழ் கலந்த) தண்ணீரே நிச்சயமாக அவர்களுக்கு பானமாக கொடுக்கப்படும்.
Verse 37:68
ثُمَّ اِنَّ مَرْجِعَهُمْ لَاۡاِلَی الْجَحِیْمِ ۟
S̤umma ʹinna marjiʻahum laʹilal Jaḥeem.
(இவற்றைப் புசித்துக் குடித்த) பின்னர், நிச்சயமாக ‘ஜஹீம்' என்ற நரகத்திற்கே திருப்பப்படுவார்கள்.
Verse 37:69
اِنَّهُمْ اَلْفَوْا اٰبَآءَهُمْ ضَآلِّیْنَ ۟ۙ
ʹInnahum ʹalfaw ʹaabaaaʹahum ḍaaalleen;
இவர்கள் தங்கள் மூதாதைகளை மெய்யாகவே வழி கெட்டவர்களாகக் கண்டு கொண்டார்கள்.
Verse 37:70
فَهُمْ عَلٰۤی اٰثٰرِهِمْ یُهْرَعُوْنَ ۟
Fahum ʻalaaa ʹaas̤aarihim yuhraʻoon!
அவ்வாறிருந்தும், அவர்களுடைய அடிச்சுவட்டையே இவர்கள் பின்பற்றி ஓடினார்கள்.
Verse 37:71
وَلَقَدْ ضَلَّ قَبْلَهُمْ اَكْثَرُ الْاَوَّلِیْنَ ۟ۙ
Wa-laq̣ad ḍalla q̣ablahum ʹaks̤arul ʹawwaleen;―
இவர்களுக்கு முன்னிருந்த பெரும்பாலானவர்களும் (இவ்வாறே) தவறான வழியில் சென்றனர்.
Verse 37:72
وَلَقَدْ اَرْسَلْنَا فِیْهِمْ مُّنْذِرِیْنَ ۟
Wa-laq̣ad ʹarsalnaa feehim muñẓireen;―
நிச்சயமாக நாம் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கும் (நம்) தூதர்களை அனுப்பியே வைத்தோம்.
Verse 37:73
فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُنْذَرِیْنَ ۟ۙ
Fañz̤̣ur kayfa kaana ʻAaq̣ibatul muñẓareen,―
ஆகவே, அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட இவர்களுடைய முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே!) பார்ப்பீராக.
Verse 37:74
اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِیْنَ ۟۠
ʹIllaa ʻibaadal laahil mukhlaṣeen.
அல்லாஹ்வுடைய பரிசுத்த எண்ணமுள்ள அடியார்களைத் தவிர, (மற்றவர்கள் எல்லோரும்) நம் வேதனைக்கு ஆளாகி விட்டார்கள்.
Verse 37:75
وَلَقَدْ نَادٰىنَا نُوْحٌ فَلَنِعْمَ الْمُجِیْبُوْنَ ۟ؗۖ
Wa-laq̣ad naadaanaa Nooḥuñ falaniʻmal Mujeeboon,
நூஹ் (நபி) நம்மிடம் (உதவி கோரி) பிரார்த்தனை செய்தார். (நாமோ) பிரார்த்தனைகளை அங்கீகரிப்பவர்களில் மிக்க சிறந்தவர்கள்.
Verse 37:76
وَنَجَّیْنٰهُ وَاَهْلَهٗ مِنَ الْكَرْبِ الْعَظِیْمِ ۟ؗۖ
Wa-najjaynaahu wa-ʹahlahoo minal Karbil ʻAz̤̣eem,
ஆகவே, அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் கடுமையான சிரமத்திலிருந்து பாதுகாத்துக் கொண்டோம்.
Verse 37:77
وَجَعَلْنَا ذُرِّیَّتَهٗ هُمُ الْبٰقِیْنَ ۟ؗۖ
Wa-jaʻalnaa ẓurriyyatahoo humul baaq̣een.
அவர்களுடைய சந்ததிகளைப் பிற்காலத்தில் என்றுமே நிலைத்திருக்கும்படி செய்தோம்.
Verse 37:78
وَتَرَكْنَا عَلَیْهِ فِی الْاٰخِرِیْنَ ۟ؗۖ
Wa-taraknaa ʻalayhi fil ʹaakhireen:
அவருடைய கீர்த்தியையும், பின்னுள்ளோர்களில் என்றுமே நிலைத்திருக்கும்படி செய்தோம்.
Verse 37:79
سَلٰمٌ عَلٰی نُوْحٍ فِی الْعٰلَمِیْنَ ۟
Salaamun ʻalaa Nooḥiñ fil ʻaalameen!
‘‘ஸலாம்'' ஈடேற்றம் நூஹுக்கு உண்டாவதாக! என்று உலகம் முழுவதிலுமே கூறப்படுகிறது.
Verse 37:80
اِنَّا كَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟
ʹInnaa kaẓaalika najzil Muḥsineen.
இவ்வாறே நன்மை செய்தவர்களுக்கு நாம் கூலி கொடுக்கிறோம்.
Verse 37:81
اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِیْنَ ۟
ʹInnahoo min ʻibaadinal Muʹmineen.
(நூஹ் நபி) நம்பிக்கையுள்ள நம் அடியார்களில் ஒருவராகவே இருந்தார்.
Verse 37:82
ثُمَّ اَغْرَقْنَا الْاٰخَرِیْنَ ۟
S̤umma ʹag̣raq̣nal ʹaakhareen.
(ஆகவே, அவரையும் அவரைப் பின்பற்றியவர்களையும் தவிர,) மற்றவர்களை (வெள்ளப் பிரளயத்தில்) நாம் மூழ்கடித்து விட்டோம்.
Verse 37:83
وَاِنَّ مِنْ شِیْعَتِهٖ لَاِبْرٰهِیْمَ ۟ۘ
Wa-ʹinna miñ Sheeʻatihee laʹIbraaheem.
நிச்சயமாக நூஹ் (நபி) உடைய வழியைப் பின்பற்றியவர்தான் இப்ராஹீம்.
Verse 37:84
اِذْ جَآءَ رَبَّهٗ بِقَلْبٍ سَلِیْمٍ ۟
ʹIẓ jaaaʹa Rabbahoo biq̣albiñ saleem.
அவர் (பண்பட்ட) நேரான உள்ளத்துடன் தன் இறைவனிடம் வந்த சமயத்தில்,
Verse 37:85
اِذْ قَالَ لِاَبِیْهِ وَقَوْمِهٖ مَاذَا تَعْبُدُوْنَ ۟ۚ
ʹIẓ q̣aala liʹabeehi wa-q̣awmihee maaẓaa taʻbudoon?
அவர் தன் தந்தையையும், தன் மக்களையும் நோக்கி ‘‘நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?'' என்று கேட்டார்,
Verse 37:86
اَىِٕفْكًا اٰلِهَةً دُوْنَ اللّٰهِ تُرِیْدُوْنَ ۟ؕ
ʹAʹifkan ʹaalihatañ doonal laahi tureedoon?
‘‘நீங்கள் அல்லாஹ்வையன்றி பொய்யான தெய்வங்களையே விரும்புகிறீர்களா?
Verse 37:87
فَمَا ظَنُّكُمْ بِرَبِّ الْعٰلَمِیْنَ ۟
Famaa z̤̣annukum̃ bi-Rabbil ʻAalameen?
அவ்வாறாயின், உலகத்தாரைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவனைப்பற்றி உங்கள் எண்ணம் என்ன?'' (என்று கேட்டார்).
Verse 37:88
فَنَظَرَ نَظْرَةً فِی النُّجُوْمِ ۟ۙ
Fanaz̤̣ara naz̤̣ratañ fin Nujoom,
‘‘பின்னர், நட்சத்திரங்களைக் கூர்ந்து பார்த்தார்.
Verse 37:89
فَقَالَ اِنِّیْ سَقِیْمٌ ۟
Faq̣aala ʹinnee saq̣eem!
நிச்சயமாக எனக்கு ஒரு நோய் ஏற்படும் (போல் இருக்கிறது)'' என்று கூறினார்,
Verse 37:90
فَتَوَلَّوْا عَنْهُ مُدْبِرِیْنَ ۟
Fatawallaw ʻanhu mudbireen.
ஆகவே, அவர்கள் அவரை விட்டுவிட்டு (திருநாள் கொண்டாடச்) சென்று விட்டனர்.
Verse 37:91
فَرَاغَ اِلٰۤی اٰلِهَتِهِمْ فَقَالَ اَلَا تَاْكُلُوْنَ ۟ۚ
Faraag̣a ʹilaaa ʹaalihatihim faq̣aala ʹalaa taʹkuloon?...
(பின்னர்) அவர், (அவர்களுடைய கோயிலுக்குள்) அவர்களுடைய தெய்வங்களிடம் இரகசியமாகச் சென்றார். (விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட பல வகை உணவுகள் இருக்கக் கண்டு, சிலைகளை நோக்கி) ‘‘நீங்கள் இவற்றை ஏன் புசிப்பதில்லை?
Verse 37:92
مَا لَكُمْ لَا تَنْطِقُوْنَ ۟
Maa- lakum laa- tañṭiq̣oon?
உங்களுக்கு என்ன (நேர்ந்தது)? நீங்கள் ஏன் பேசுவதில்லை?'' என்று கேட்டார். (ஆனால், அவை பதில் அளிக்கவில்லை.)
Verse 37:93
فَرَاغَ عَلَیْهِمْ ضَرْبًا بِالْیَمِیْنِ ۟
Faraag̣a ʻalayhim ḍarbam bilyameen.
ஆகவே, அவற்றைப் பலமாக அடித்து (நொறுக்கிவிட்டு வெளியில் சென்று) விட்டார்.
Verse 37:94
فَاَقْبَلُوْۤا اِلَیْهِ یَزِفُّوْنَ ۟
Faʹaq̣balooo ʹilayhi yaziffoon.
ஆகவே, (திருநாள் கொண்டாடச் சென்றவர்கள் திரும்பி வந்து இதைக் கண்டதும் அதைப் பற்றிக் கேட்கவே) இப்ராஹீமிடம் ஓடி வந்தனர்.
Verse 37:95
قَالَ اَتَعْبُدُوْنَ مَا تَنْحِتُوْنَ ۟ۙ
Q̣aala ʹataʻbudoona maa- tanḥitoon?
அவர், (அவர்களை நோக்கி) ‘‘உங்கள் கைகளால் சித்தரித்த பொம்மைகளை நீங்கள் வணங்குகிறீர்களா?
Verse 37:96
وَاللّٰهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُوْنَ ۟
Wallaahu khalaq̣akum wa-maa taʻmaloon!
உங்களையும், நீங்கள் சித்தரித்த அவற்றையும் அல்லாஹ்வே படைத்தான்'' என்றார்.
Verse 37:97
قَالُوا ابْنُوْا لَهٗ بُنْیَانًا فَاَلْقُوْهُ فِی الْجَحِیْمِ ۟
Q̣aalub noo lahoo bun-yaanañ faʹalq̣oohu fil Jaḥeem!
(அதற்கு அவர்கள் பதில்கூற வகையறியாது கோபம் கொண்டு,) ‘‘இவருக்காகப் பெரியதொரு (நெருப்புக்) கிடங்கை அமைத்து, அந்நெருப்பில் அவரை எறிந்து விடுங்கள்'' என்று கூறினார்கள்.
Verse 37:98
فَاَرَادُوْا بِهٖ كَیْدًا فَجَعَلْنٰهُمُ الْاَسْفَلِیْنَ ۟
Faʹaraadoo bihee kaydañ fajaʻalnaahumul ʹasfaleen!
இவ்வாறு அவர்கள், அவருக்குத் தீங்கிழைக்கக்கருதினார்கள். எனினும், நாம் அவர்களையே இழிவானவர்களாக ஆக்கி விட்டோம்.
Verse 37:99
وَقَالَ اِنِّیْ ذَاهِبٌ اِلٰی رَبِّیْ سَیَهْدِیْنِ ۟
Wa-q̣aala ʹinnee ẓaahibun ʹilaa Rabbee sayahdeen!
பின்னர், இப்ராஹீம் (அவ்வூரை விட்டு வெளிப்பட்டு,) ‘‘நான் என் இறைவனிடமே செல்கிறேன். அவன் நிச்சயமாக எனக்கு நேரான வழியைக் காண்பிப்பான்'' என்று கூறினார்.
Verse 37:100
رَبِّ هَبْ لِیْ مِنَ الصّٰلِحِیْنَ ۟
Rabbi hab lee minaṣ Ṣaaliḥeen!
‘‘என் இறைவனே! நல்லோர்களில் (ஒருவரை) நீ எனக்கு(ச் சந்ததியாக) வழங்கி அருள் புரிவாயாக!'' (என்றார்.)
Verse 37:101
فَبَشَّرْنٰهُ بِغُلٰمٍ حَلِیْمٍ ۟
Fabashsharnaahu big̣ulaamin ḥaleem.
ஆதலால், மிகப் பொறுமையுடைய (இஸ்மாயீல் என்னும்) மகனைக் கொண்டு அவருக்கு நற்செய்தி கூறினோம்.
Verse 37:102
فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْیَ قَالَ یٰبُنَیَّ اِنِّیْۤ اَرٰی فِی الْمَنَامِ اَنِّیْۤ اَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرٰی ؕ قَالَ یٰۤاَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ ؗ سَتَجِدُنِیْۤ اِنْ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰبِرِیْنَ ۟
Falammaa balag̣a maʻahus saʻya q̣aala yaa-bunayya ʹinneee ʹaraa fil manaami ʹanneee ʹaẓbaḥuka fañz̤̣ur maaẓaa taraa! Q̣aala yaaaʹabatif ʻal maa- tuʹmar: satajiduneee ʹiñ shaaa ʹallaahu minaṣ Ṣaabireen!
(அவருடைய அந்த மகன் அவருடன்) நடந்து திரியக்கூடிய வயதை அடைந்தபொழுது, அவர் (தன் மகனை நோக்கி) ‘‘என் அருமை மைந்தனே! நான் உன்னை (என் கைகொண்டு) அறுத்துப் பலியிடுவதாக மெய்யாகவே நான் என் கனவில் கண்டேன். (இதைப் பற்றி) நீ என்ன அபிப்பிராயப்படுகிறாய்?'' என்று கேட்டார். அதற்கவர், ‘‘என்(னருமைத்) தந்தையே! உங்களுக்கு இடப்பட்ட கட்டளைப்படியே நீங்கள் செய்யுங்கள். அல்லாஹ் அருள் புரிந்தால் (அதைச் சகித்துக் கொண்டு) உறுதியாயிருப்பவனாகவே நீங்கள் என்னைக் காண்பீர்கள்'' என்று கூறினார்.
Verse 37:103
فَلَمَّاۤ اَسْلَمَا وَتَلَّهٗ لِلْجَبِیْنِ ۟ۚ
Falammaaa ʹaslamaa wa-tallahoo liljabeen,
ஆகவே, அவ்விருவரும் (இறைவனின் விருப்பத்திற்கு) முற்றிலும் பணிந்து, (இப்ராஹீம் தன் மகன் இஸ்மாயீலை அறுத்துப் பலியிட) அவரை முகங்குப்புறக் கிடத்தினார்.
Verse 37:104
وَنَادَیْنٰهُ اَنْ یّٰۤاِبْرٰهِیْمُ ۟ۙ
Wa-naadaynaahu ʹañy YaaaʹIbraaheem!
அச்சமயம் நாம் ‘‘இப்ராஹீமே!'' என அழைத்தோம்:
Verse 37:105
قَدْ صَدَّقْتَ الرُّءْیَا ۚ اِنَّا كَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟
Q̣ad ṣaddaq̣tar ruʹyaa! ʹInnaa kaẓaalika najzil Muḥsineen.
உண்மையாகவே நீர் உமது கனவை மெய்யாக்கி வைத்து விட்டீர் என்றும், நன்மை செய்பவர்களுக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்'' (என்றும் கூறி,)
Verse 37:106
اِنَّ هٰذَا لَهُوَ الْبَلٰٓؤُا الْمُبِیْنُ ۟
ʹInna haaẓaa lahuwal balaaaʹul mubeen.
‘‘நிச்சயமாக இதுதான் மாபெரும் சோதனையாகும்'' (என்றும் கூறினோம்).
Verse 37:107
وَفَدَیْنٰهُ بِذِبْحٍ عَظِیْمٍ ۟
Wa-fadaynaahu biẓibḥin ʻaz̤̣eem:
ஆகவே, மகத்தானதொரு பலியை அவருக்கு பகரமாக்கினோம்.
Verse 37:108
وَتَرَكْنَا عَلَیْهِ فِی الْاٰخِرِیْنَ ۟ۖ
Wa-taraknaa ʻalayhi fil ʹaakhireen:
அவருடைய கீர்த்தியைப் பிற்காலத்திலும் நிலைக்க வைத்தோம்.
Verse 37:109
سَلٰمٌ عَلٰۤی اِبْرٰهِیْمَ ۟
Salaamun ʻalaaa ʹIbraaheem!
(ஆகவே, உலகத்திலுள்ள அனைவருமே) ‘‘இப்ராஹீமுக்கு ‘‘ஸலாம்'' (ஈடேற்றம்) உண்டாவதாகுக' (என்றும் கூறுகின்றனர்).
Verse 37:110
كَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟
Kaẓaalika najzil Muḥsineen.
இவ்வாறே, நன்மை செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
Verse 37:111
اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِیْنَ ۟
ʹInnahoo min ʻIbaadinal Muʹmineen.
நிச்சயமாக அவர் மிக்க நம்பிக்கையுள்ள நம் அடியார்களில் இருந்தார்.
Verse 37:112
وَبَشَّرْنٰهُ بِاِسْحٰقَ نَبِیًّا مِّنَ الصّٰلِحِیْنَ ۟
Wa-bashsharnaahu biʹIsḥaaq̣a Nabiyyam minaṣ Ṣaaliḥeen.
இதன் பின்னர், நல்லடியார்களிலுள்ள இஸ்ஹாக் நபியை அவருக்கு (மற்றுமொரு மகனாகத் தருவதாக) நற்செய்தி கூறினோம்.
Verse 37:113
وَبٰرَكْنَا عَلَیْهِ وَعَلٰۤی اِسْحٰقَ ؕ وَمِنْ ذُرِّیَّتِهِمَا مُحْسِنٌ وَّظَالِمٌ لِّنَفْسِهٖ مُبِیْنٌ ۟۠
Wa-baaraknaa ʻalayhi wa-ʻalaaa ʹIsḥaaq̣: wa-miñ ẓurriyyatihimaa muḥsinuñw waz̤̣aalimul linafsihee mubeen.
அவர் மீதும், இஸ்ஹாக் மீதும் நாம் நம் நற்பாக்கியங்களைச் சொரிந்தோம். அவர்களுடைய சந்ததிகளில் நல்லவர்களும் இருக்கின்றனர்; பகிரங்கமாக தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்(ட கெட்)டவர்களும் இருக்கின்றனர்.
Verse 37:114
وَلَقَدْ مَنَنَّا عَلٰی مُوْسٰی وَهٰرُوْنَ ۟ۚ
Wa-laq̣ad manannaa ʻalaa Moosaa wa-Haaroon.
நிச்சயமாக நாம் மூஸாவின் மீதும், ஹாரூன் மீதும் அருள் புரிந்தோம்.
Verse 37:115
وَنَجَّیْنٰهُمَا وَقَوْمَهُمَا مِنَ الْكَرْبِ الْعَظِیْمِ ۟ۚ
Wa-najjaynaahumaa wa-q̣awmahumaa minal Karbil ʻAz̤̣eem;
அவ்விருவரையும், அவர்களுடைய மக்களையும் கடுமையான துன்பத்திலிருந்து பாதுகாத்துக் கொண்டோம்.
Verse 37:116
وَنَصَرْنٰهُمْ فَكَانُوْا هُمُ الْغٰلِبِیْنَ ۟ۚ
Wa-naṣarnaahum fakaanoo humul g̣aalibeen.
அவர்களுக்கு உதவிபுரிந்தோம். ஆகவே, அவர்கள் (தங்கள் எதிரிகளை) வெற்றி கொண்டார்கள்.
Verse 37:117
وَاٰتَیْنٰهُمَا الْكِتٰبَ الْمُسْتَبِیْنَ ۟ۚ
Wa-ʹaataynaahumal kitaabal mustabeen;
அவ்விருவருக்கும் தெளிவான வேதத்தையும் நாம் கொடுத்தோம்.
Verse 37:118
وَهَدَیْنٰهُمَا الصِّرَاطَ الْمُسْتَقِیْمَ ۟ۚ
Wa-hadaynaahumaṣ Ṣiraaṭal Mustaq̣eem.
அவ்விருவரையும் நேரான வழியிலும் நாம் செலுத்தினோம்.
Verse 37:119
وَتَرَكْنَا عَلَیْهِمَا فِی الْاٰخِرِیْنَ ۟ۙ
Wa-taraknaa ʻalayhimaa fil ʹaakhireen:
பிற்காலத்திலும் அவ்விருவரின் கீர்த்தியை நிலைக்கச் செய்தோம்.
Verse 37:120
سَلٰمٌ عَلٰی مُوْسٰی وَهٰرُوْنَ ۟
Salaamun ʻalaa Moosaa wa-Haroon!
(ஆகவே, உலகத்திலுள்ளவர்கள்) மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் ‘‘ஸலாம்'' ஈடேற்றம் உண்டாவதாக! (என்று கூறுகின்றனர்).
Verse 37:121
اِنَّا كَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟
ʹInnaa kaẓaalika najzil Muḥsineen.
நிச்சயமாக நாம் இவ்வாறே நன்மை செய்பவர்களுக்குக் கூலி கொடுக்கிறோம்.
Verse 37:122
اِنَّهُمَا مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِیْنَ ۟
ʹInnahumaa min ʻibaadinal Muʹmineen.
நிச்சயமாக அவ்விருவரும், நம்பிக்கை கொண்ட நம் அடியார்களில் இருந்தனர்.
Verse 37:123
وَاِنَّ اِلْیَاسَ لَمِنَ الْمُرْسَلِیْنَ ۟ؕ
Wa-ʹinna ʹIlyaasa laminal mursaleen.
நிச்சயமாக இல்யாஸும் நம் தூதர்களில் ஒருவர்தான்.
Verse 37:124
اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اَلَا تَتَّقُوْنَ ۟
ʹIẓ q̣aala liq̣awmiheee ʹalaa tattaq̣oon?
அவர் தன் மக்களை நோக்கி, ‘‘நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்பட வேண்டாமா?'' என்று கூறிய சமயத்தில்,
Verse 37:125
اَتَدْعُوْنَ بَعْلًا وَّتَذَرُوْنَ اَحْسَنَ الْخَالِقِیْنَ ۟ۙ
ʹAtadʻoona taẓaroona Baʻlañwwa ʹAḥsanal Khaaliq̣een,―
‘‘படைப்பவர்களில் மிக அழகானவனை நீங்கள் புறக்கணித்து விட்டு, ‘பஅலு' என்னும் சிலையை வணங்குகிறீர்களா?
Verse 37:126
اللّٰهَ رَبَّكُمْ وَرَبَّ اٰبَآىِٕكُمُ الْاَوَّلِیْنَ ۟
ʹAllaaha Rabbakum wa-Rabba ʹaabaaaʹikumul ʹawwaleen?
உங்கள் இறைவனும், முன் சென்ற உங்கள் மூதாதையர்களின் இறைவனுமான அல்லாஹ்வை விட்டு விடுகிறீர்களா?''
Verse 37:127
فَكَذَّبُوْهُ فَاِنَّهُمْ لَمُحْضَرُوْنَ ۟ۙ
Fakaẓẓaboohu faʹinnahum lamuḥḍaroon,―
ஆயினும், அவர்கள் அவரைப் பொய்யாக்கி விட்டனர். ஆதலால், நிச்சயமாக அவர்கள் (மறுமையில் நம்மிடம் தண்டனைக்காகக்) கொண்டு வரப்படுவார்கள்.
Verse 37:128
اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِیْنَ ۟
ʹIllaa ʻibaadal laahil mukhlaṣeen.
அல்லாஹ்வுடைய கலப்பற்ற அடியார்களைத் தவிர, (நல்லடியார்களுக்கு நல்ல சன்மானமுண்டு.)
Verse 37:129
وَتَرَكْنَا عَلَیْهِ فِی الْاٰخِرِیْنَ ۟ۙ
Wa-taraknaa ʻalayhi fil ʹaakhireen:
பிற்காலத்தில் உள்ளவர்களிலும் இவருடைய கீர்த்தியை நிலைக்கச் செய்தோம்.
Verse 37:130
سَلٰمٌ عَلٰۤی اِلْ یَاسِیْنَ ۟
Salaamun ʻalaaa ʹIlyaaseen!
(ஆகவே உலகத்திலுள்ளவர்கள்) ‘‘இல்யாஸுக்கு ‘‘ஸலாம்'' (ஈடேற்றம்) உண்டாவதாகுக!'' (என்று கூறுகின்றனர்).
Verse 37:131
اِنَّا كَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟
ʹInnaa kaẓaalika najzil Muḥsineen.
நிச்சயமாக நன்மை செய்பவர்களுக்கு நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம்.
Verse 37:132
اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِیْنَ ۟
ʹInnahoo min ʻIbaadinal Muʹmineen.
நிச்சயமாக அவர் நம்பிக்கை கொண்ட நம் அடியார்களில் ஒருவராக இருந்தார்.
Verse 37:133
وَاِنَّ لُوْطًا لَّمِنَ الْمُرْسَلِیْنَ ۟ؕ
Wa-ʹinna Looṭal laminal mursaleen.
நிச்சயமாக லூத்தும் நம் தூதர்களில் ஒருவர்தான்.
Verse 37:134
اِذْ نَجَّیْنٰهُ وَاَهْلَهٗۤ اَجْمَعِیْنَ ۟ۙ
ʹIẓ najjaynaahu wa-ʹahlahooo ʹajmaʻeen,
அவரையும் அவருடைய குடும்பம் முழுவதையும் பாதுகாத்துக் கொண்டோம்.
Verse 37:135
اِلَّا عَجُوْزًا فِی الْغٰبِرِیْنَ ۟
ʹIllaa ʻajoozañ fil g̣aabireen:
ஆயினும், (அவருடைய) ஒரு கிழ (மனை)வியைத் தவிர, அவள் (அந்தப் பாவிகளுடன்) தங்கிவிட்டாள்.
Verse 37:136
ثُمَّ دَمَّرْنَا الْاٰخَرِیْنَ ۟
S̤umma dammarnal ʹaakhareen.
(பிறகு பாவம் செய்த) மற்றவர்களையும் நாம் அழித்து விட்டோம்.
Verse 37:137
وَاِنَّكُمْ لَتَمُرُّوْنَ عَلَیْهِمْ مُّصْبِحِیْنَ ۟ۙ
Wa-ʹinnakum latamurroona ʻalayhim muṣbiḥeen―
ஆகவே, (மக்காவாசிகளே! நீங்கள் வர்த்தகத்திற்காக ஷாம் தேசம் போகும்பொழுதும், வரும்பொழுதும்) காலையிலோ மாலையிலோ, நிச்சயமாக நீங்கள் (அழிந்துபோன) அவர்களை கடந்து செல்கிறீர்கள்.
Verse 37:138
وَبِالَّیْلِ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ ۟۠
Wa-billayli ʹafalaa taʻq̣iloon?
(இதைக் கொண்டு நீங்கள்) நல்லறிவு பெறவேண்டாமா?
Verse 37:139
وَاِنَّ یُوْنُسَ لَمِنَ الْمُرْسَلِیْنَ ۟ؕ
Wa-ʹinna Yoonusa laminal mursaleen.
நிச்சயமாக யூனுஸும் நம் தூதர்களில் ஒருவர்தான்.
Verse 37:140
اِذْ اَبَقَ اِلَی الْفُلْكِ الْمَشْحُوْنِ ۟ۙ
ʹIẓ ʹabaq̣a ʹilal fulkil mashḥoon.
(மக்களால்) நிறைந்த கப்பலின் பக்கம் அவர் தப்பி ஓடிய சமயத்தில் (அதில் ஏறிக்கொண்டார்).
Verse 37:141
فَسَاهَمَ فَكَانَ مِنَ الْمُدْحَضِیْنَ ۟ۚ
Fasaahama fakaana minal mudḥaḍeen:
அ(க்கப்பலில் உள்ள)வர்கள் சீட்டு (குலுக்கி)ப் போட்டதில் இவர் (கடலில்) எறியப்பட வேண்டியவரானார்.
Verse 37:142
فَالْتَقَمَهُ الْحُوْتُ وَهُوَ مُلِیْمٌ ۟
Faltaq̣amahul Ḥootu wa-huwa muleem.
(அவ்வாறு அவர்கள் இவரை எறியவே) மீன் அவரை விழுங்கி விட்டது. அச்சமயம், அவர் தன்னைத்தானே நிந்தித்துக் கொண்டிருந்தார்.
Verse 37:143
فَلَوْلَاۤ اَنَّهٗ كَانَ مِنَ الْمُسَبِّحِیْنَ ۟ۙ
Falawlaaa ʹannahoo kaana minal musabbiḥeen,
நிச்சயமாக அவர் நம்மைத் துதி செய்பவர்களில் ஒருவராக இல்லாதிருந்தால்,
Verse 37:144
لَلَبِثَ فِیْ بَطْنِهٖۤ اِلٰی یَوْمِ یُبْعَثُوْنَ ۟ۚ
Lalabis̤a fee baṭniheee ʹilaa Yawmi yubʻas̤oon.
(மறுமையில்) எழுப்பப்படும் நாள் (வரும்) வரை அவர் அதன் வயிற்றில் தங்கியிருந்திருப்பார்.
Verse 37:145
فَنَبَذْنٰهُ بِالْعَرَآءِ وَهُوَ سَقِیْمٌ ۟ۚ
Fanabaẓnaahu bilʻaraaaʹi wa-huwa saq̣eem.
(அவர் துதி செய்திருப்பதன் காரணமாக) வெட்ட வெளியான பூமியில் (மீன் வயிற்றிலிருந்து) அவரை நாம் எறியச் செய்தோம். அச்சமயம் அவரோ மிக களைப்புடனும் சோர்வுடனும் இருந்தார்.
Verse 37:146
وَاَنْۢبَتْنَا عَلَیْهِ شَجَرَةً مِّنْ یَّقْطِیْنٍ ۟ۚ
Wa-ʹambatnaa ʻalayhi shajaratam miñy yaq̣ṭeen.
ஆகவே, அவருக்கு (நிழலிடுவதற்காக) ஒரு சுரைச்செடியை முளைப்பித்தோம்.
Verse 37:147
وَاَرْسَلْنٰهُ اِلٰی مِائَةِ اَلْفٍ اَوْ یَزِیْدُوْنَ ۟ۚ
Wa-ʹarsalnaahu ʹilaa miʹati ʹalfin ʹaw yazeedoon.
பின்னர், நாம் அவரை ஒரு நூறாயிரம் அல்லது அதற்கு அதிகமான மக்களிடம் நம் தூதராக அனுப்பி வைத்தோம்.
Verse 37:148
فَاٰمَنُوْا فَمَتَّعْنٰهُمْ اِلٰی حِیْنٍ ۟ؕ
Faʹaamanoo famattaʻnaahum ʹilaa ḥeen.
அவர்கள் அனைவரும் நம்பிக்கை கொண்டார்கள். ஆதலால், நாமும் அவர்களை ஒரு (நீண்ட) காலம் வரை சுகமாக வாழவைத்தோம்.
Verse 37:149
فَاسْتَفْتِهِمْ اَلِرَبِّكَ الْبَنَاتُ وَلَهُمُ الْبَنُوْنَ ۟ۙ
Fastaftihim ʹa-li-Rabbikal banaatu wa-lahumul banoon?―
(நபியே!) அவர்களை கேட்பீராக: ‘‘(நீங்கள் வெறுக்கும்) பெண் மக்களை உங்கள் இறைவனுக்கும் உங்களுக்கு ஆண் மக்களையுமா? (விரும்புகிறீர்கள்.)
Verse 37:150
اَمْ خَلَقْنَا الْمَلٰٓىِٕكَةَ اِنَاثًا وَّهُمْ شٰهِدُوْنَ ۟
ʹAm khalaq̣nal malaaaʹikata ʹinaas̤añw Wahum shaahidoon?
அல்லது நாம் வானவர்களைப் பெண்களாக படைத்த(தாகக் கூறுகின்றனரே அ)தை அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா?
Verse 37:151
اَلَاۤ اِنَّهُمْ مِّنْ اِفْكِهِمْ لَیَقُوْلُوْنَ ۟ۙ
ʹAlaaa ʹinnahum min ʹifkihim layaq̣ooloon:
‘‘அல்லாஹ் (பிள்ளைகளைப்) பெற்றான் என்று'' இவர்கள் கற்பனையான பொய்யையே கூறுகிறார்கள் என்பதை நிச்சயமாக நீர் அறிந்து கொள்வீராக. நிச்சயமாக இவர்கள் பொய்யர்களே!
Verse 37:152
وَلَدَ اللّٰهُ ۙ وَاِنَّهُمْ لَكٰذِبُوْنَ ۟
Waladal laahu wa-ʹinnahum lakaaẓiboon!
‘‘அல்லாஹ் (பிள்ளைகளைப்) பெற்றான் என்று'' இவர்கள் கற்பனையான பொய்யையே கூறுகிறார்கள் என்பதை நிச்சயமாக நீர் அறிந்து கொள்வீராக. நிச்சயமாக இவர்கள் பொய்யர்களே!
Verse 37:153
اَصْطَفَی الْبَنَاتِ عَلَی الْبَنِیْنَ ۟ؕ
ʹAṣṭafal banaati ʻalal baneen?
(அதிலும்) ஆண் சந்ததிகளைவிட்டு, பெண் சந்ததிகளையா அவன் தேர்ந்தெடுத்துக் கொண்டான்?
Verse 37:154
مَا لَكُمْ ۫ كَیْفَ تَحْكُمُوْنَ ۟
Maa- lakum Kayfa taḥkumoon?
(இவ்வாறு கூற) உங்களுக்கு என்ன நியாயம் (இருக்கிறது.) ஏன் இவ்வாறு (பொய்யாக) தீர்மானிக்கிறீர்கள்?
Verse 37:155
اَفَلَا تَذَكَّرُوْنَ ۟ۚ
ʹAfalaa taẓakkaroon?
நீங்கள் இதை கவனித்துச் சிந்திக்க வேண்டாமா?
Verse 37:156
اَمْ لَكُمْ سُلْطٰنٌ مُّبِیْنٌ ۟ۙ
ʹAm lakum sulṭaanum mubeen?
அல்லது உங்களுக்கு (இதற்காக ஒரு) தெளிவான ஆதாரம் இருக்கிறதா?
Verse 37:157
فَاْتُوْا بِكِتٰبِكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
Faʹtoo bi-Kitaabikum ʹiñ kuñtum ṣaadiq̣een!
(கிறிஸ்தவர்களே! அவ்வாறு) நீங்கள் கூறுவது உண்மையாகவே இருப்பின், அதற்கு உங்கள் வேதத்தை ஆதாரமாகக் கொண்டு வாருங்கள்.
Verse 37:158
وَجَعَلُوْا بَیْنَهٗ وَبَیْنَ الْجِنَّةِ نَسَبًا ؕ وَلَقَدْ عَلِمَتِ الْجِنَّةُ اِنَّهُمْ لَمُحْضَرُوْنَ ۟ۙ
Wa-jaʻaloo baynahoo wa-baynal Jinnati nasabaa: wa-laq̣ad ʻalimatil Jinnatu ʹinnahum lamuḥḍaroon!
(நபியே!) இவர்கள் அல்லாஹ்வுக்கும் ஜின்களுக்கும் இடையில் பந்துத்துவத்தைக் கற்பனை செய்கின்றனர். ஆயினும், ஜின்களோ (தாங்கள் குற்றம் செய்தால் தண்டனைக்காக) நிச்சயமாக அவனிடம் கொண்டு வரப்படுவோம் என்று திட்டமாக அறிந்து இருக்கின்றனர்.
Verse 37:159
سُبْحٰنَ اللّٰهِ عَمَّا یَصِفُوْنَ ۟ۙ
Subḥaanal laahi ʻammaa yaṣifoon!
அவர்கள் கூறும் இவ்வர்ணிப்புகளை விட்டு அல்லாஹ் மிக்க பரிசுத்தமானவன்.
Verse 37:160
اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِیْنَ ۟
ʹIllaa ʻIbaadal laahil mukhlaṣeen.
அல்லாஹ்வின் கலப்பற்ற நம்பிக்கையுள்ள அடியார்களைத் தவிர, (அவர்கள் தண்டனைக்குள்ளாக மாட்டார்கள்.)
Verse 37:161
فَاِنَّكُمْ وَمَا تَعْبُدُوْنَ ۟ۙ
Faʹinnakum wa-maa taʻbudoon―
, 162. (நபியே! கூறுவீராக:) ‘‘நிச்சயமாக நீங்களும், நீங்கள் வணங்கும் (ஜின்களாகிய) இவையும் ஒன்று சேர்ந்தபோதிலும், (எவரின் உள்ளத்தையும் அல்லாஹ்வுக்கு விரோதமாக) நீங்கள் மாற்றிவிட முடியாது.
Verse 37:162
مَاۤ اَنْتُمْ عَلَیْهِ بِفٰتِنِیْنَ ۟ۙ
Maaa ʹañtum ʻalayhi bifaatineen,
, 162. (நபியே! கூறுவீராக:) ‘‘நிச்சயமாக நீங்களும், நீங்கள் வணங்கும் (ஜின்களாகிய) இவையும் ஒன்று சேர்ந்தபோதிலும், (எவரின் உள்ளத்தையும் அல்லாஹ்வுக்கு விரோதமாக) நீங்கள் மாற்றிவிட முடியாது.
Verse 37:163
اِلَّا مَنْ هُوَ صَالِ الْجَحِیْمِ ۟
ʹIllaa man huwa ṣaalil Jaḥeem!
நரகம் செல்லக்கூடியவனைத் தவிர.
Verse 37:164
وَمَا مِنَّاۤ اِلَّا لَهٗ مَقَامٌ مَّعْلُوْمٌ ۟ۙ
Wa-maa minnaaa ʹillaa lahoo maq̣aamum maʻloom;
(வானவர்கள் கூறுவதாவது:) எங்களில் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட பணியுண்டு;
Verse 37:165
وَّاِنَّا لَنَحْنُ الصَّآفُّوْنَ ۟ۚ
Wa-ʹinnaa lanaḥnuṣ ṣaaaffoon;
நிச்சயமாக நாங்கள் (கட்டளையை நிறைவேற்ற அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து) அணிவகுத்து நின்ற வண்ணமாகவே இருக்கிறோம்.
Verse 37:166
وَاِنَّا لَنَحْنُ الْمُسَبِّحُوْنَ ۟
Wa-ʹinnaa lanaḥnul musabbiḥoon!
நிச்சயமாக நாங்கள் அவனைப் புகழ்ந்து துதி செய்து கொண்டும் இருக்கிறோம்.
Verse 37:167
وَاِنْ كَانُوْا لَیَقُوْلُوْنَ ۟ۙ
Wa-ʹiñ kaanoo layaq̣ooloon,
(நபியே! இதற்குமுன் மக்காவாசிகளாகிய) அவர்கள் கூறிக் கொண்டிருந்ததாவது:
Verse 37:168
لَوْ اَنَّ عِنْدَنَا ذِكْرًا مِّنَ الْاَوَّلِیْنَ ۟ۙ
Law ʹanna ʻiñdanaa Ẓikram minal ʹawwaleen,
‘‘முன்சென்றவர்களிடம் இருந்த வேதத்தைப் போன்று ஒரு வேதம் எங்களிடம் இருந்தால்,
Verse 37:169
لَكُنَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِیْنَ ۟
Lakunnaa ʻIbaadal laahil mukhlaṣeen!
நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுடைய கலப்பற்ற அடியார்களாகி விடுவோம்'' என்றார்கள்.
Verse 37:170
فَكَفَرُوْا بِهٖ فَسَوْفَ یَعْلَمُوْنَ ۟
Fakafaroo bihee fasawfa yaʻlamoon!
எனினும், இவ்வாறு கூறிக்கொண்டிருந்த இவர்களிடம் (இவ்வேதம் வரவே,) அதை இவர்கள் நிராகரிக்கின்றனர். அதிசீக்கிரத்தில் (இதன் முடிவை) இவர்கள் அறிந்து கொள்வார்கள்.
Verse 37:171
وَلَقَدْ سَبَقَتْ كَلِمَتُنَا لِعِبَادِنَا الْمُرْسَلِیْنَ ۟ۚۖ
Wa-laq̣ad sabaq̣at Kalimatunaa liʻIbaadinal mursaleen;
தூதர்களாகிய நம் அடியார்களைப் பற்றி ஏற்கனவே நம் வாக்கு நிச்சயமாக ஏற்பட்டு விட்டது.
Verse 37:172
اِنَّهُمْ لَهُمُ الْمَنْصُوْرُوْنَ ۪۟
ʹInnahum lahumul mañṣooroon,
ஆதலால், நிச்சயமாக அவர்கள்தான் உதவி செய்யப்படுவார்கள்.
Verse 37:173
وَاِنَّ جُنْدَنَا لَهُمُ الْغٰلِبُوْنَ ۟
Wa-ʹinna juñdanaa lahumul g̣aaliboon.
நிச்சயமாக நம் படையினர்(களாகிய நம்பிக்கையாளர்கள்)தான் வெற்றி பெறுவார்கள்.
Verse 37:174
فَتَوَلَّ عَنْهُمْ حَتّٰی حِیْنٍ ۟ۙ
Fatawalla ʻanhum ḥattaa ḥeen,
ஆதலால், (நபியே!) சிறிது காலம் வரை (அரபிகளாகிய) இவர்களிலிருந்து நீர் விலகியிரும்.
Verse 37:175
وَّاَبْصِرْهُمْ فَسَوْفَ یُبْصِرُوْنَ ۟
Wa-ʹabṣirhum fasawfa yubṣiroon!
(இவர்கள் எவ்வாறு தண்டனைக்கு உள்ளாகிறார்கள் என்பதை அறிய) அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பீராக. அதிசீக்கிரத்தில் அவர்களும் அதைக் கண்டு கொள்வார்கள்.
Verse 37:176
اَفَبِعَذَابِنَا یَسْتَعْجِلُوْنَ ۟
ʹAfabiʻaẓaabinaa yastaʻjiloon?
(என்னே!) நம் வேதனைக்காகவா இவர்கள் அவசரப்படுகின்றனர்?
Verse 37:177
فَاِذَا نَزَلَ بِسَاحَتِهِمْ فَسَآءَ صَبَاحُ الْمُنْذَرِیْنَ ۟
Faʹiẓaa nazala bisaaḥatihim fasaaaʹa ṣabaaḥul muñẓareen!
(நம் வேதனை) அவர்கள் மத்தியில் இறங்கும் சமயத்தில், அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட அவர்களின் விடியற்காலை மகா கெட்டதாகிவிடும்.
Verse 37:178
وَتَوَلَّ عَنْهُمْ حَتّٰی حِیْنٍ ۟ۙ
Wa-tawalla ʻanhum ḥattaa ḥeen,
(நபியே!) அவர்களை நீர் சிறிது காலம் புறக்கணித்து விடுவீராக.
Verse 37:179
وَّاَبْصِرْ فَسَوْفَ یُبْصِرُوْنَ ۟
Wa-ʹabṣir fasawfa yubṣiroon!
(அவர்களுக்கு வேதனை வருவதை) நீர் எதிர்பார்த்திருப்பீராக. அவர்களும் (அதை) நிச்சயமாகக் காண்பார்கள்.
Verse 37:180
سُبْحٰنَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا یَصِفُوْنَ ۟ۚ
Subḥaana Rabbika Rabbil ʻIzzati ʻammaa yaṣifoon!
அவர்களுடைய (தப்பான) வர்ணிப்புகளை விட்டும் மிக்க கண்ணியத்திற்குரிய உமது இறைவன் மிகப் பரிசுத்தமானவன்.
Verse 37:181
وَسَلٰمٌ عَلَی الْمُرْسَلِیْنَ ۟ۚ
Wa-Salaamun ʻalal mursaleen!
(அவனால்) அனுப்பப்பட்ட தூதர்கள் (அனைவர்) மீதும் (அவனுடைய) ஸலாம் (ஈடேற்றம்) உண்டாவதாக!
Verse 37:182
وَالْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟۠
Wal-Ḥamdu lillaahi Rabbil ʻAalameen.
புகழ் அனைத்தும் உலகத்தாரின் இறைவனான அல்லாஹ்வுக்கு உரித்தானது.