Surah Al-Inshiqaq
Surah Al-Inshiqaq (The Splitting Open) is Surah 84 of the Holy Quran, a Meccan Surah with 25 verses, available here in Tamil.
Verse 84:1
اِذَا السَّمَآءُ انْشَقَّتْ ۟ۙ
ʹIẓas Samaaaʹuñ shaq̣q̣at,
(உலகம் அழியும் சமயத்தில்) வானம் பிளந்து விடும்போது,
Verse 84:2
وَاَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ۟ۙ
Wa-ʹaẓinat li-Rabbihaa wa-ḥuq̣q̣at;
அது தன் இறைவனின் கட்டளைக்கு செவிசாய்த்துவிடும் போது. (அவ்வாறே) அதற்கு விதிக்கப்பட்டுள்ளது.
Verse 84:3
وَاِذَا الْاَرْضُ مُدَّتْ ۟ؕ
Wa-ʹiẓal ʹarḍu muddat,
மேலும், பூமி விரிக்கப்படும்போது,
Verse 84:4
وَاَلْقَتْ مَا فِیْهَا وَتَخَلَّتْ ۟ۙ
Waʹalq̣at maa- feehaa wa-takhallat,
மேலும், அது தன்னிடம் உள்ளவற்றையெல்லாம் எறிந்து வெறுமனே ஆகிவிடும்போது,
Verse 84:5
وَاَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ۟ؕ
Wa-ʹaẓinat li-Rabbihaa wa-ḥuq̣q̣at.
மேலும், அது தன் இறைவனின் கட்டளைக்கு செவிசாய்த்து விடும் (போது மனிதன் தன் செயலுக்குரிய கூலியைப் பெறுவான்). (அவ்வாறே) அதற்கு விதிக்கப்பட்டுள்ளது.
Verse 84:6
یٰۤاَیُّهَا الْاِنْسَانُ اِنَّكَ كَادِحٌ اِلٰی رَبِّكَ كَدْحًا فَمُلٰقِیْهِ ۟ۚ
Yaaaʹayyuhal ʹiñsaanu ʹinnaka kaadiḥun ʹilaa Rabbika kad-ḥañ famulaaq̣eeh.
மனிதனே! நீ உன் இறைவனிடம் செல்லும் வரை (நன்மையோ தீமையோ பல வேலைகளில் ஈடுபட்டு) சிரமத்துடன் முயற்சி செய்துகொண்டே இருக்கிறாய். (பின்னர், மறுமையில்) அவனை நீ சந்திக்கிறாய்.
Verse 84:7
فَاَمَّا مَنْ اُوْتِیَ كِتٰبَهٗ بِیَمِیْنِهٖ ۟ۙ
Faʹammaa man ʹootiya Kitaabahoo biyameenih.
ஆகவே, (அந்நாளில்) எவருடைய வலது கையில் அவருடைய செயலேடு கொடுக்கப்படுகிறதோ,
Verse 84:8
فَسَوْفَ یُحَاسَبُ حِسَابًا یَّسِیْرًا ۟ۙ
Fasawfa yuḥaasabu ḥisaabañy yaseeraa,
அவர் மிக்க இலகுவாகக் கேள்வி கணக்குக் கேட்கப்படுவார்.
Verse 84:9
وَّیَنْقَلِبُ اِلٰۤی اَهْلِهٖ مَسْرُوْرًا ۟ؕ
Wa-yañq̣alibu ʹilaaa ʹahlihee masrooraa.
அவர் மகிழ்ச்சியடைந்தவராக(ச் சொர்க்கத்திலுள்ள) தன் குடும்பத்தார்களிடம் திரும்புவார்.
Verse 84:10
وَاَمَّا مَنْ اُوْتِیَ كِتٰبَهٗ وَرَآءَ ظَهْرِهٖ ۟ۙ
Wa-ʹammaa man ʹootiya Kitaabahoo wa-raaaʹa z̤̣ahrih,
எவனுடைய செயலேடு அவனுடைய முதுகுப்புறம் கொடுக்கப்பட்டதோ,
Verse 84:11
فَسَوْفَ یَدْعُوْا ثُبُوْرًا ۟ۙ
Fasawfa yadʻoo s̤ubooraa,
அவன், (தனக்குக்) கேடுதான் என்று (அப்படியே) சப்தமிடுவான்,
Verse 84:12
وَّیَصْلٰی سَعِیْرًا ۟ؕ
Wa-yaṣlaa Saʻeeraa.
நரகத்தில் நுழைவான்.
Verse 84:13
اِنَّهٗ كَانَ فِیْۤ اَهْلِهٖ مَسْرُوْرًا ۟ؕ
ʹInnahoo kaana feee ahlihee masrooraa.
ஏனென்றால், நிச்சயமாக அவன் (இம்மையிலிருந்த காலமெல்லாம் மறுமையை மறந்து) தன் குடும்பத்தார்களுடன் மிக்க மகிழ்ச்சியாக இருந்தான்.
Verse 84:14
اِنَّهٗ ظَنَّ اَنْ لَّنْ یَّحُوْرَ ۟ۚۛ
ʹInnahoo z̤̣anna ʹal lañy yaḥoor!
மெய்யாகவே அவன் (தன் இறைவனிடம்) மீளவே மாட்டோம் என்றும் எண்ணிக் கொண்டிருந்தான்.
Verse 84:15
بَلٰۤی ۛۚ اِنَّ رَبَّهٗ كَانَ بِهٖ بَصِیْرًا ۟ؕ
Balaaa ʹinna Rabbahoo kaana bihee Baṣeeraa!
அது சரியன்று! நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனை உற்று நோக்குபவனாகவே இருந்தான்.
Verse 84:16
فَلَاۤ اُقْسِمُ بِالشَّفَقِ ۟ۙ
Falaaa ʹuq̣simu bish-Shafaq̣;
(மாலை நேர) செம்மேகத்தின் மீது சத்தியமாக!
Verse 84:17
وَالَّیْلِ وَمَا وَسَقَ ۟ۙ
Wallayli wa-maa wa-saq̣;
இரவின் மீதும், அது மறைத்துக் கொண்டிருப்பவற்றின் மீதும் (சத்தியமாக!)
Verse 84:18
وَالْقَمَرِ اِذَا اتَّسَقَ ۟ۙ
Wal-Q̣amari ʹiẓat tasaq̣;
பூரணச் சந்திரன் மீது சத்தியமாக!
Verse 84:19
لَتَرْكَبُنَّ طَبَقًا عَنْ طَبَقٍ ۟ؕ
Latarkabunna ṭabaq̣an ʻañ ṭabaq̣.
(ஒரு நிலைமையிலிருந்து மற்றொரு நிலைமைக்கு) நிச்சயமாக நீங்கள் படிப்படியாகக் கடக்க வேண்டியதிருக்கிறது.
Verse 84:20
فَمَا لَهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟ۙ
Famaa lahum laa- yuʹminoon,
ஆகவே, (இதை மறுத்துக் கொண்டிருக்கும்) அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் இதை நம்பிக்கை கொள்வதில்லை.
Verse 84:21
وَاِذَا قُرِئَ عَلَیْهِمُ الْقُرْاٰنُ لَا یَسْجُدُوْنَ ۟
Wa-ʹiẓaa q̣uriʹa ʻalayhimul Q̣urʹaanu laa- yasjudoon?
அவர்களுக்கு இந்த குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்ட போதிலும், (இறைவனை) அவர்கள் சிரம் பணிந்து வணங்குவது இல்லை.
Verse 84:22
بَلِ الَّذِیْنَ كَفَرُوْا یُكَذِّبُوْنَ ۟ؗۖ
Balil laẓeena kafaroo yukaẓẓiboon.
அது மட்டுமா? இந்நிராகரிப்பவர்கள் (இந்த குர்ஆனையே) பொய்யாக்குகின்றனர்.
Verse 84:23
وَاللّٰهُ اَعْلَمُ بِمَا یُوْعُوْنَ ۟ؗۖ
Wallaahu ʹAʻlamu bimaa yooʻoon.
எனினும், இவர்கள் (தங்கள் மனதில்) சேகரித்து (மறைத்து) வைத்திருப்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தே இருக்கிறான்.
Verse 84:24
فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِیْمٍ ۟ۙ
Fabashshirhum̃ biʻAẓaabin ʹaleem,
ஆகவே, (நபியே!) துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு அவர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவீராக.
Verse 84:25
اِلَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ اَجْرٌ غَیْرُ مَمْنُوْنٍ ۟۠
ʹIllal laẓeena ʹaamanoo wa-ʻamiluṣ ṣaaliḥaati lahum ʹAjrun g̣ayru mamnoon.
எனினும், இவர்களில் எவர்கள் (தங்கள் பாவத்திலிருந்து திருந்தி) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு (என்றென்றுமே) முடிவுறாத (நற்)கூலியுண்டு.