Home  /  Quran  /  Surah
Loading...
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

Surah Al-Fatihah

Surah Al-Fatihah (The Opening) is Surah 1 of the Holy Quran, a Meccan Surah with 7 verses, available here in Tamil.

Surah 1 Meccan 7 verses Tamil

Verse 1:1

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ ۟

Bismil lahir Raḥmaanir Ra-ḥeem

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)

Verse 1:2

اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟ۙ

Al-Ḥamdu Lillaahi Rabbil ʻAalameen;

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! (அவன்தான்) அகிலத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து தகுந்த முறையில் பக்குவப்படுத்துபவன்.

Verse 1:3

الرَّحْمٰنِ الرَّحِیْمِ ۟ۙ

ʹAr-Raḥmaanir Raḥeem;

(அவன்தான்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன்,

Verse 1:4

مٰلِكِ یَوْمِ الدِّیْنِ ۟ؕ

Maaliki Yawmid Deen!

தீர்ப்பு நாளின் அதிபதி(யும் அவனே).

Verse 1:5

اِیَّاكَ نَعْبُدُ وَاِیَّاكَ نَسْتَعِیْنُ ۟ؕ

ʹIyyaaka naʻbudu wa-ʹiyyaaka nastaʻeen.

(அல்லாஹ்வே!) நாங்கள் உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம்.

Verse 1:6

اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِیْمَ ۟ۙ

ʹIhdinaṣ Ṣiraaṭal Mustaq̣eem.

நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக!

Verse 1:7

صِرَاطَ الَّذِیْنَ اَنْعَمْتَ عَلَیْهِمْ ۙ۬ۦ غَیْرِ الْمَغْضُوْبِ عَلَیْهِمْ وَلَا الضَّآلِّیْنَ ۟۠

Ṣiraaṭal laẓeena ʹanʻamta ʻalayhim G̣ayril mag̣ḍoobi ʻalayhim wa-laḍ ḍaaalleen.

(அவ்வழி) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி.(உன்) கோபத்திற்குள்ளானவர்களோ வழிதவறியவர்களோ சென்ற வழியல்ல.