Home  /  Quran  /  Surah
Loading...
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

Surah Al-Balad

Surah Al-Balad (The City) is Surah 90 of the Holy Quran, a Meccan Surah with 20 verses, available here in Tamil.

Surah 90 Meccan 20 verses Tamil

Verse 90:1

لَاۤ اُقْسِمُ بِهٰذَا الْبَلَدِ ۟ۙ

Laaa ʹuq̣simu bihaaẓal Balad;

(நபியே! அபயமளிக்கும்) இந்நகரத்தின் மீது சத்தியம் செய்கிறேன்.

Verse 90:2

وَاَنْتَ حِلٌّۢ بِهٰذَا الْبَلَدِ ۟ۙ

Wa-ʹañta ḥillum bihaaẓal Balad;

அதிலும் நீர் இந்நகரத்தில் தங்கக்கூடிய சமயத்தில்.

Verse 90:3

وَوَالِدٍ وَّمَا وَلَدَ ۟ۙ

Wa-Waalidiñw Wamaa Walad;

(மனிதர்களின்) தந்தை மீதும், அவர் பெற்றெடுத்த சந்ததிகள் மீதும் சத்தியமாக!

Verse 90:4

لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِیْ كَبَدٍ ۟ؕ

Laq̣ad khalaq̣nal ʹiñsaana fee kabad.

மெய்யாகவே நாம் மனிதனை சிரமத்தில் மூழ்கியவனாகவே படைத்திருக்கிறோம்.

Verse 90:5

اَیَحْسَبُ اَنْ لَّنْ یَّقْدِرَ عَلَیْهِ اَحَدٌ ۟ۘ

ʹAyaḥsabu ʹal lañy yaq̣dira ʻalayhi ʹaḥad?

(அவ்வாறிருக்க,) அவன் தன்னை அடக்க எவராலும் முடியாது என்று எண்ணிக் கொண்டானா?

Verse 90:6

یَقُوْلُ اَهْلَكْتُ مَالًا لُّبَدًا ۟ؕ

Yaq̣oolu ʹahlaktu maalal lubadaa!

‘‘ஏராளமான பொருளை நான் (சம்பாதித்துச் செலவு செய்து) அழித்துவிட்டேன்'' என்று, அவன் (கர்வம் கொண்டு பெருமையாகக்) கூறுகிறான்.

Verse 90:7

اَیَحْسَبُ اَنْ لَّمْ یَرَهٗۤ اَحَدٌ ۟ؕ

ʹAyaḥsabu ʹal lam yarahooo ʹaḥad?

அவ்வளவு பொருளை ஒருவருமே பார்த்திருக்கவில்லை என்று அவன் எண்ணிக் கொண்டானோ?

Verse 90:8

اَلَمْ نَجْعَلْ لَّهٗ عَیْنَیْنِ ۟ۙ

ʹAlam najʻal lahoo ʻaynayn?―

(பார்க்கக்கூடிய) இரு கண்களையும், நாம் அவனுக்குக் கொடுக்கவில்லையா? (அவ்வாறிருந்தும் உண்மையை அவன் கண்டுகொள்ளவில்லை.)

Verse 90:9

وَلِسَانًا وَّشَفَتَیْنِ ۟ۙ

Wa-lisaanañw Washafatayn?―

(பேசக்கூடிய) ஒரு நாவையும், இரு உதடுகளையும் (நாம் அவனுக்குக் கொடுக்கவில்லையா? அதைத் தானாகவே அவன் அடைந்துவிட்டானா?)

Verse 90:10

وَهَدَیْنٰهُ النَّجْدَیْنِ ۟ۚ

Wa-hadaynaahun najdayn?

(நன்மை தீமையின்) இரு வழிகளையும் நாம் அவனுக்குப் பிரித்தறிவித்தோம்;

Verse 90:11

فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ ۟ؗۖ

Falaq̣ taḥamal ʻaq̣abah.

எனினும், (இதுவரை) அவன் ‘அகபா'வை (கணவாயை)க் கடக்கவில்லை.

Verse 90:12

وَمَاۤ اَدْرٰىكَ مَا الْعَقَبَةُ ۟ؕ

Wa-maaa ʹadraaka mal ʻaq̣abah?―

(நபியே!) ‘அகபா' என்னவென்று நீர் அறிவீரா?

Verse 90:13

فَكُّ رَقَبَةٍ ۟ۙ

Fakku raq̣abah.

அதுதான் ஓர் அடிமையை விடுதலை செய்வது.

Verse 90:14

اَوْ اِطْعٰمٌ فِیْ یَوْمٍ ذِیْ مَسْغَبَةٍ ۟ۙ

ʹAw ʹiṭʻaamuñ fee yawmiñ ẓee masg̣abah,

அல்லது, உறவினர்களில் உள்ள ஓர் அநாதைக்கோ அல்லது கடினமான வறுமையுடைய (மண்ணைக் கவ்விக் கிடக்கும்) ஓர் ஏழைக்கோ பசியுடைய (பஞ்ச) நாளில் உணவு அளிப்பதாகும்.

Verse 90:15

یَّتِیْمًا ذَا مَقْرَبَةٍ ۟ۙ

Yateemañ ẓaa maq̣rabah,

அல்லது, உறவினர்களில் உள்ள ஓர் அநாதைக்கோ அல்லது கடினமான வறுமையுடைய (மண்ணைக் கவ்விக் கிடக்கும்) ஓர் ஏழைக்கோ பசியுடைய (பஞ்ச) நாளில் உணவு அளிப்பதாகும்.

Verse 90:16

اَوْ مِسْكِیْنًا ذَا مَتْرَبَةٍ ۟ؕ

ʹAw miskeenañ ẓaa matrabah.

அல்லது, உறவினர்களில் உள்ள ஓர் அநாதைக்கோ அல்லது கடினமான வறுமையுடைய (மண்ணைக் கவ்விக் கிடக்கும்) ஓர் ஏழைக்கோ பசியுடைய (பஞ்ச) நாளில் உணவு அளிப்பதாகும்.

Verse 90:17

ثُمَّ كَانَ مِنَ الَّذِیْنَ اٰمَنُوْا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ ۟ؕ

S̤umma kaana minal laẓeena ʹaamanoo wa-tawaaṣaw biṣṣabri wa-tawaaṣaw bil-Marḥamah.

பிறகு, எவர்கள் நம்பிக்கை கொண்டும் ஒருவருக்கொருவர் பொறுமையைக் கடைபிடிக்குமாறு நல்லுபதேசம் செய்துகொண்டும், கருணை காட்டவேண்டும் என்று ஒருவருக்கொருவர் நல்லுபதேசம் செய்துகொண்டும் இருக்கிறார்களோ அவர்களிலும் அவர் சேர்ந்துவிடுவார்.

Verse 90:18

اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْمَیْمَنَةِ ۟ؕ

ʹUlaaaʹika ʹAṣḥaabul Maymanah.

இவர்கள்தான் வலது பக்கத்தில் இருப்பவர்கள்.

Verse 90:19

وَالَّذِیْنَ كَفَرُوْا بِاٰیٰتِنَا هُمْ اَصْحٰبُ الْمَشْـَٔمَةِ ۟ؕ

Wallaẓeena kafaroo biʹAayaatinaa hum ʹAṣḥaabul mashʹamah.

எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள்தான் இடப்பக்கத்தில் இருப்பவர்கள்.

Verse 90:20

عَلَیْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌ ۟۠

ʻAlayhim Naarum muʹṣadah.

அவர்களை நரகத்தில் போட்டு (எல்லா வழிகளும்) மூடப்பட்டுவிடும்.