Surah Al-A'rafBegins here at 7:88
-
7:88
۞ قَالَ ٱلْمَلَأُ ٱلَّذِينَ ٱسْتَكْبَرُوا۟ مِن قَوْمِهِۦ لَنُخْرِجَنَّكَ يَـٰشُعَيْبُ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ مَعَكَ مِن قَرْيَتِنَآ أَوْ لَتَعُودُنَّ فِى مِلَّتِنَا ۚ قَالَ أَوَلَوْ كُنَّا كَـٰرِهِينَ
Q̣aalal malaʹul laẓeenas takbaroo miñ q̣awmihee lanukhrijannaka yaa-Shuʻaybu wallaẓeena ʹaamanoo maʻaka miñ q̣aryatinaaa ʹaw lataʻoodunna fee millatinaa. Q̣aala ʹa-wa law kunnaa kaariheen?
(ஷுஐப் நபியை நாம் நம் தூதராக அனுப்பிய பொழுது) அவருடைய மக்களில் கர்வம்கொண்ட தலைவர்கள் (அவரை நோக்கி) ‘‘ஷுஐபே! நீங்களும் உங்களை நம்பிக்கை கொண்டவர்களும் எங்கள் மார்க்கத்திற்கு திரும்பிவிட வேண்டும். இல்லையென்றால், நிச்சயமாக நாங்கள் உங்களை எங்கள் ஊரிலிருந்து துரத்தி விடுவோம்'' என்று கூறினார்கள். அதற்கு அவர் (அவர்களை நோக்கி ‘‘உங்கள் மார்க்கத்தை) நாங்கள் வெறுத்தபோதிலுமா?'' என்று கேட்டார்.
-
7:89
قَدِ ٱفْتَرَيْنَا عَلَى ٱللَّهِ كَذِبًا إِنْ عُدْنَا فِى مِلَّتِكُم بَعْدَ إِذْ نَجَّىٰنَا ٱللَّهُ مِنْهَا ۚ وَمَا يَكُونُ لَنَآ أَن نَّعُودَ فِيهَآ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّنَا ۚ وَسِعَ رَبُّنَا كُلَّ شَىْءٍ عِلْمًا ۚ عَلَى ٱللَّهِ تَوَكَّلْنَا ۚ رَبَّنَا ٱفْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِٱلْحَقِّ وَأَنتَ خَيْرُ ٱلْفَـٰتِحِينَ
Q̣adif taraynaa ʻalal laahi kaẓiban ʹin ʻudnaa fee millatikum̃ baʻda ʹiẓ najjaanal laahu minhaa. Wa-maa yakoonu lanaaa ʹan naʻooda feehaaa ʹillaaa ʹañy yashaaaʹal laahu Rabbunaa. Wasiʻa Rabbunaa kulla shayʹin ʻilmaa. ʻAlal laahi tawakkalnaa. Rabbanaf taḥ baynanaa wa-bayna q̣awminaa bilḥaq̣q̣i wa-ʹAñta Khayrul Faatiḥeen.
‘‘உங்கள் மார்க்கத்திலிருந்து அல்லாஹ் எங்களை பாதுகாத்துக் கொண்டதன் பின்னர் உங்கள் மார்க்கத்திற்கு நாங்கள் திரும்பினால் நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவர்களாவோம். எங்கள் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நாங்கள் அதில் மீளவே முடியாது. எங்கள் இறைவனின் கல்வி ஞானம் அனைத்தையும் சூழ்ந்திருக்கிறது. அல்லாஹ்வையே நாங்கள் நம்பினோம்'' (என்றும் கூறி, இறைவனை நோக்கி) ‘‘எங்கள் இறைவனே! எங்களுக்கும் எங்கள் மக்களுக்கும் இடையில் நீ நியாயமான தீர்ப்பளிப்பாயாக! நிச்சயமாக நீ தீர்ப்பளிப்பவர்களில் மிக்க மேலானவன்'' (என்றும் பிரார்த்தித்தார்).
-
7:90
وَقَالَ ٱلْمَلَأُ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِن قَوْمِهِۦ لَئِنِ ٱتَّبَعْتُمْ شُعَيْبًا إِنَّكُمْ إِذًا لَّخَـٰسِرُونَ
Wa-q̣aalal malaʹul laẓeena kafaroo miñ q̣awmihee laʹinit tabaʻtum Shuʻayban ʹinnakum ʹiẓal lakhaasiroon!
(ஷுஐபை) நிராகரித்த மக்களின் தலைவர்கள் (மற்றவர்களை நோக்கி) ‘‘நீங்கள் ஷுஐபைப் பின்பற்றினால் நிச்சயமாக நஷ்டமடைந்தே தீருவீர்கள்'' என்று கூறினார்கள்.
-
7:91
فَأَخَذَتْهُمُ ٱلرَّجْفَةُ فَأَصْبَحُوا۟ فِى دَارِهِمْ جَـٰثِمِينَ
Faʹakhaẓathumur rajfatu faʹaṣbaḥoo fee daarihim jaas̤imeen.
ஆகவே, அவர்களை (மிகக் கொடூரமான) பூகம்பம் பிடித்துக் கொண்டது. அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே இறந்து அழிந்து விட்டனர்.
-
7:92
ٱلَّذِينَ كَذَّبُوا۟ شُعَيْبًا كَأَن لَّمْ يَغْنَوْا۟ فِيهَا ۚ ٱلَّذِينَ كَذَّبُوا۟ شُعَيْبًا كَانُوا۟ هُمُ ٱلْخَـٰسِرِينَ
ʹAllaẓeena kaẓẓaboo Shuʻaybañ kaʹal lam yag̣naw feehal laẓeena kaẓẓaboo Shuʻaybañ kaanoo humul khaasireen!
ஷுஐபை பொய்யாக்கியவர்கள் தங்கள் ஊர்களில் (அழிந்து) எக்காலத்திலுமே வசித்திராதவர்களைப்போல் ஆகிவிட்டனர். எவர்கள் ஷுஐபை பொய்யாக்கினார்களோ அவர்கள்தான் முற்றிலும் நஷ்டமடைந்தார்கள்.
-
7:93
فَتَوَلَّىٰ عَنْهُمْ وَقَالَ يَـٰقَوْمِ لَقَدْ أَبْلَغْتُكُمْ رِسَـٰلَـٰتِ رَبِّى وَنَصَحْتُ لَكُمْ ۖ فَكَيْفَ ءَاسَىٰ عَلَىٰ قَوْمٍ كَـٰفِرِينَ
Fatawallaa ʹanhum wa-q̣aala yaa-q̣awmi laq̣ad ʹablag̣tukum risaalaati Rabbee wa-naṣaḥtu lakum; fakayfa ʹaasaa ʻalaa q̣awmiñ kaafireen.
(அது சமயம்) ஷுஐப் அவர்களிலிருந்து விலகி (அவர்களை நோக்கி) ‘‘என் மக்களே! நிச்சயமாக நான் இறைவனின் தூது செய்திகளைத்தான் உங்களுக்கு எடுத்துரைத்து உங்களுக்கு நல்லுபதேசமும் செய்தேன். ஆகவே, (அதை) நிராகரித்த மக்களுக்காக நான் எவ்வாறு கவலை கொள்வேன்'' என்று கூறினார்.
-
7:94
وَمَآ أَرْسَلْنَا فِى قَرْيَةٍ مِّن نَّبِىٍّ إِلَّآ أَخَذْنَآ أَهْلَهَا بِٱلْبَأْسَآءِ وَٱلضَّرَّآءِ لَعَلَّهُمْ يَضَّرَّعُونَ
Wa-maaa ʹarsalnaa fee q̣aryatim min nabiyyin ʹillaaa ʹakhaẓnaaa ʹahlahaa bil-baʹsaaaʹi waḍḍarraaaʹi laʻallahum yaḍḍarraʻoon.
நாம் நபிமார்களை அனுப்பிவைத்த ஒவ்வோர் ஊர் மக்களையும் (அவர்கள் நபிமார்களை நிராகரித்து விட்டால்) அவர்கள் (நம்பக்கம்) பணிந்து வருவதற்காக வறுமையைக் கொண்டும், நோயைக் கொண்டும் நாம் அவர்களைப் பிடிக்காமல் இருக்கவில்லை.
-
7:95
ثُمَّ بَدَّلْنَا مَكَانَ ٱلسَّيِّئَةِ ٱلْحَسَنَةَ حَتَّىٰ عَفَوا۟ وَّقَالُوا۟ قَدْ مَسَّ ءَابَآءَنَا ٱلضَّرَّآءُ وَٱلسَّرَّآءُ فَأَخَذْنَـٰهُم بَغْتَةً وَهُمْ لَا يَشْعُرُونَ
S̤umma baddalnaa makaanas sayyiʹatil ḥasanata ḥattaa ʻafaw Waq̣aaloo q̣ad massa ʹaabaaaʹanaḍ ḍarraaaʹu wassarraaaʹu faʹakhaẓnaahum̃ bag̣tatañw wahum laa- yashʻuroon.
பின்னர், நாம் அவர்களுடைய துன்பங்களுக்குப் பதிலாக இன்பங்களை கொடுக்கவே (அதனால்) அவர்களின் தொகை அதிகரித்து (கர்வம் கொண்டு) ‘‘நம் மூதாதைகளுக்குமே இத்தகைய சுக, துக்கம் ஏற்பட்டிருக்கிறது'' என்று (தாங்கள் அனுபவித்த தண்டனையை மறந்து) கூற ஆரம்பித்தனர். ஆதலால், அவர்கள் (ஒரு சிறிதும்) உணர்ந்துகொள்ளாத விதத்தில் நாம் அவர்களை (வேதனையைக் கொண்டு) திடீரென பிடித்துக்கொண்டோம்.
-
7:96
وَلَوْ أَنَّ أَهْلَ ٱلْقُرَىٰٓ ءَامَنُوا۟ وَٱتَّقَوْا۟ لَفَتَحْنَا عَلَيْهِم بَرَكَـٰتٍ مِّنَ ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ وَلَـٰكِن كَذَّبُوا۟ فَأَخَذْنَـٰهُم بِمَا كَانُوا۟ يَكْسِبُونَ
Wa-law ʹanna ʹahlal q̣uraaa ʹaamanoo wattaq̣aw lafataḥnaa ʻalayhim barakaatim minas samaaaʹi wal-ʹarḍi wa-laakiñ kaẓẓaboo faʹakhaẓnaahum̃ bimaa kaanoo yaksiboon.
அவ்வூர்களில் இருந்தவர்கள் நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடந்திருந்தால், அவர்களுக்காக வானத்திலும், பூமியிலும் உள்ள அருட்கொடைகளின் வாசல்களைத் திறந்து விட்டிருப்போம். எனினும், அவர்களோ (நபிமார்களை நம்பிக்கைகொள்ளாது) பொய்யாக்கினார்கள். ஆகவே, அவர்களுடைய (தீய) செயலின் காரணமாக நாம் (வேதனையைக் கொண்டு) அவர்களைப் பிடித்துக் கொண்டோம்.
-
7:97
أَفَأَمِنَ أَهْلُ ٱلْقُرَىٰٓ أَن يَأْتِيَهُم بَأْسُنَا بَيَـٰتًا وَهُمْ نَآئِمُونَ
ʹA-faʹamina ahlul q̣uraaa ʹañy yaʹtiyahum baʹsunaa bayaatañw wahum naaaʹimoon?
(நபியே!) இவ்வூரார் (தங்கள் வீடுகளில்) இரவில் நித்திரை செய்து கொண்டிருக்கும் பொழுதே நம் வேதனை அவர்களை வந்தடையாது என்று அவர்கள் அச்சமற்றிருக்கின்றனரா?
-
7:98
أَوَأَمِنَ أَهْلُ ٱلْقُرَىٰٓ أَن يَأْتِيَهُم بَأْسُنَا ضُحًى وَهُمْ يَلْعَبُونَ
ʹA-waʹamina ʹahlul q̣uraaa ʹañy yaʹtiyahum baʹsunaa ḍuḥañw wahum yalʻaboon?
அல்லது இவ்வூரார் (கவலையற்று) பகலில் விளையாடிக் கொண்டு இருக்கும் போதே நம் வேதனை அவர்களை வந்தடையாது என்று அவர்கள் அச்சமற்று இருக்கின்றனரா?
-
7:99
أَفَأَمِنُوا۟ مَكْرَ ٱللَّهِ ۚ فَلَا يَأْمَنُ مَكْرَ ٱللَّهِ إِلَّا ٱلْقَوْمُ ٱلْخَـٰسِرُونَ
ʹA-faʹaminoo makral laaḥ? Falaa yaʹmanu makral laahi ʹillal q̣awmul khaasiroon!
அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அவர்கள் அச்சமற்று விட்டனரா? (முற்றிலும்) நஷ்டமடையக்கூடிய மக்களைத் தவிர எவரும் அல்லாஹ்வின் சூழ்ச்சிக்கு அச்சமற்று இருக்க மாட்டார்கள்.
-
7:100
أَوَلَمْ يَهْدِ لِلَّذِينَ يَرِثُونَ ٱلْأَرْضَ مِنۢ بَعْدِ أَهْلِهَآ أَن لَّوْ نَشَآءُ أَصَبْنَـٰهُم بِذُنُوبِهِمْ ۚ وَنَطْبَعُ عَلَىٰ قُلُوبِهِمْ فَهُمْ لَا يَسْمَعُونَ
ʹA-walam yahdi lillaẓeena yaris̤oonal ʹarḍa mim baʻdi ʹahlihaaa ʹal law nashaaaʹu ʹaṣabnaahum̃ biẓunoobihim, wa-naṭbaʻu ʻalaa q̣uloobihim fahum laa- yasmaʻoon?
பூமியில் (அழிந்துபோன) முன்னிருந்தவர்களுக்குப் பின்னர் அதற்கு வாரிசான இவர்களையும் நாம் நாடினால் இவர்களுடைய பாவங்களின் காரணமாக (அவ்வாறே அழித்து) தண்டிப்போம் என்ற விஷயம் இவர்களுக்கு நல்லறிவைத் தரவில்லையா? நாம் இவர்களுடைய உள்ளங்களின் மீது முத்திரையிட்டு விட்டோம். ஆகவே, இவர்கள் (நல்லுபதேசங்களைச்) செவியுற மாட்டார்கள்.
-
7:101
تِلْكَ ٱلْقُرَىٰ نَقُصُّ عَلَيْكَ مِنْ أَنۢبَآئِهَا ۚ وَلَقَدْ جَآءَتْهُمْ رُسُلُهُم بِٱلْبَيِّنَـٰتِ فَمَا كَانُوا۟ لِيُؤْمِنُوا۟ بِمَا كَذَّبُوا۟ مِن قَبْلُ ۚ كَذَٰلِكَ يَطْبَعُ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِ ٱلْكَـٰفِرِينَ
Tilkal q̣uraa naq̣uṣṣu ʻalayka min ʹambaaaʹihaa. Wa-laq̣ad jaaaʹathum rusuluhum̃ bil-Bayyinaat: famaa kaanoo liyuʹminoo bimaa kaẓẓaboo miñ q̣abl. Kaẓaalika yaṭbaʻul laahu ʻalaa q̣uloobil kaafireen.
(நபியே!) இவ்வூர்களின் சரித்திரத்தை நாம் உங்களுக்குக் கூறுகிறோம். (அவற்றில் வசித்திருந்த) அவர்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் நிச்சயமாகத் தெளிவான வசனங்களையே கொண்டு வந்தனர். எனினும், அவர்களோ முன்னர் ஏதாவது ஒன்றை பொய்யாக்கிவிட்டால் (பின்னர் அதை) ஒருக்காலத்திலும் நம்பிக்கை கொள்ளாதவர்களாகவே இருந்தனர். இவ்வாறே, நிராகரிப்பவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான்.
-
7:102
وَمَا وَجَدْنَا لِأَكْثَرِهِم مِّنْ عَهْدٍ ۖ وَإِن وَجَدْنَآ أَكْثَرَهُمْ لَفَـٰسِقِينَ
Wa-maa wajadnaa liʹaks̤arihim min ʻahd. Wa-ʹiñw wajadnaaa ʹaks̤arahum lafaasiq̣een.
அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வாக்குறுதி(யை நிறைவேற்றும் தன்மை) இருப்பதாகவும் நாம் காணவில்லை. இன்னும், நாம் அவர்களில் பெரும்பாலானவர்களை பாவிகளாகவே கண்டோம்.
-
7:103
ثُمَّ بَعَثْنَا مِنۢ بَعْدِهِم مُّوسَىٰ بِـَٔايَـٰتِنَآ إِلَىٰ فِرْعَوْنَ وَمَلَإِي۟هِۦ فَظَلَمُوا۟ بِهَا ۖ فَٱنظُرْ كَيْفَ كَانَ عَـٰقِبَةُ ٱلْمُفْسِدِينَ
S̤umma baʻas̤naa mim baʻdihim Moosaa biʹAayaatinaaa ʹilaa Firʻawna wa-malaʹihee faz̤̣alamoo bihaa: fañz̤̣ur kayfa kaana ʻaaq̣ibatul mufsideen.
இதற்குப் பின்னரும் மூஸாவை நம் அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்னிடமும் அவனுடைய தலைவர்களிடமும் அனுப்பிவைத்தோம். எனினும், அவர்களோ அந்த அத்தாட்சிகளை அவமதித்து (நிராகரித்து) விட்டனர். (இத்தகைய) விஷமிகளின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக.
-
7:104
وَقَالَ مُوسَىٰ يَـٰفِرْعَوْنُ إِنِّى رَسُولٌ مِّن رَّبِّ ٱلْعَـٰلَمِينَ
Wa-q̣aala Moosaa Yaa- -Firʻawnu ʹinnee Rasoolum mir Rabbil ʻAalameen.
மூஸா (ஃபிர்அவ்னை நோக்கி) ‘‘ஃபிர்அவ்னே! நிச்சயமாக நான் அகிலத்தார் அனைவரின் இறைவனால் (உன்னிடம்) அனுப்பப்பட்ட ஒரு தூதர் ஆவேன்'' என்று கூறினார்.
-
7:105
حَقِيقٌ عَلَىٰٓ أَن لَّآ أَقُولَ عَلَى ٱللَّهِ إِلَّا ٱلْحَقَّ ۚ قَدْ جِئْتُكُم بِبَيِّنَةٍ مِّن رَّبِّكُمْ فَأَرْسِلْ مَعِىَ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
Ḥaq̣eeq̣un ʻalaaa ʹal laaa ʹaq̣oola ʻalal laahi ʹillal ḥaq̣q̣. Q̣ad jiʹtukum̃ bi-Bayyinatim mir Rabbikum faʹarsil maʻiya Baneee ʹIsraaaʹeel.
‘‘நான் அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறு எதையும்) கூறாமலிருப்பது (என்மீது) கடமையாகும். உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சியை நிச்சயமாக நான் உங்களிடம் கொண்டு வந்திருக்கிறேன். ஆதலால், (நீ அடிமைப்படுத்தி வைத்திருக்கும்) இஸ்ராயீலின் சந்ததிகளை என்னுடன் அனுப்பிவை'' (என்றும் கூறினார்.)
-
7:106
قَالَ إِن كُنتَ جِئْتَ بِـَٔايَةٍ فَأْتِ بِهَآ إِن كُنتَ مِنَ ٱلصَّـٰدِقِينَ
Q̣aala ʹiñ kuñta jiʹta biʹAayatiñ faʹti bihaaa ʹiñ kuñta minaṣ ṣaadiq̣een.
அதற்கவன் ‘‘நீர் அத்தாட்சி கொண்டு வந்திருப்பதாகக் கூறும் உமது கூற்றில் நீர் உண்மை சொல்பவராக இருந்தால் அதைக் கொண்டு வருவீராக'' என்று கூறினான்.
-
7:107
فَأَلْقَىٰ عَصَاهُ فَإِذَا هِىَ ثُعْبَانٌ مُّبِينٌ
Faʹalq̣aa ʻAṣaahu faʹiẓaa hiya s̤uʻbaanum mubeen!
ஆகவே, (மூஸா) தன் (கைத்)தடியை எறிந்தார். உடனே அது பெரியதொரு மலைப் பாம்பாகி விட்டது.
-
7:108
وَنَزَعَ يَدَهُۥ فَإِذَا هِىَ بَيْضَآءُ لِلنَّـٰظِرِينَ
Wa-nazaʻa yadahoo faʹiẓaa hiya bayḍaaaʹu linnaaz̤̣ireen!
மேலும், அவர் தன் கையை (சட்டைப் பையிலிட்டு) வெளியில் எடுத்தார். அது பார்ப்பவர்களுக்கு மிக வெண்மையானதாக(வும், மிக பிரகாசமானதாகவும்) இருந்தது.
-
7:109
قَالَ ٱلْمَلَأُ مِن قَوْمِ فِرْعَوْنَ إِنَّ هَـٰذَا لَسَـٰحِرٌ عَلِيمٌ
Q̣aalal malaʹu miñ q̣awmi Firʻawna ʹinna haaẓaa lasaaḥirun ʻaleem.
(இதைக் கண்ட) ஃபிர்அவ்னுடைய மக்களின் தலைவர்கள் (ஃபிர்அவ்னை நோக்கி) ‘‘நிச்சயமாக இவர் சூனியத்தில் மிக்க வல்லவராக இருக்கிறார்'' என்று கூறினார்கள்.
-
7:110
يُرِيدُ أَن يُخْرِجَكُم مِّنْ أَرْضِكُمْ ۖ فَمَاذَا تَأْمُرُونَ
Yureedu ʹañy yukhrijakum min ʹarḍikum: famaaẓaa taʹmuroon?
(அதற்கு ஃபிர்அவ்ன்) ‘‘இவர் உங்களை உங்கள் பூமியிலிருந்து வெளியேற்றிவிடவே எண்ணுகிறார். ஆகவே, இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?'' (என்று கேட்டான்.)
-
7:111
قَالُوٓا۟ أَرْجِهْ وَأَخَاهُ وَأَرْسِلْ فِى ٱلْمَدَآئِنِ حَـٰشِرِينَ
Q̣aalooo ʹarjih wa-ʹakhaahu wa-arsil fil Madaaaʹini ḥaashireena.
அதற்கவர்கள் ‘‘அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் தவணை கொடுத்துவிட்டு பல பட்டிணங்களுக்கும் துப்பறிபவர்களை அனுப்பிவை.
-
7:112
يَأْتُوكَ بِكُلِّ سَـٰحِرٍ عَلِيمٍ
Yaʹtooka bikulli saaḥirin ʻaleem.
அவர்கள் சூனியத்தில் வல்லவர்களை உம்மிடம் அழைத்து வருவார்கள்'' என்று கூறினார்கள்.
-
7:113
وَجَآءَ ٱلسَّحَرَةُ فِرْعَوْنَ قَالُوٓا۟ إِنَّ لَنَا لَأَجْرًا إِن كُنَّا نَحْنُ ٱلْغَـٰلِبِينَ
Wa-jaaaʹas saḥaratu Firʻawna q̣aalooo ʹinna lanaa laʹajran ʹiñ kunnaa naḥnul g̣aalibeen.
(அவ்வாறு அனுப்பியதில் பல திசைகளிலும் இருந்த) சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னிடம் வந்து நாங்கள் ‘‘(மூஸாவை) ஜெயித்துவிட்டால் நிச்சயமாக எங்களுக்கு (அதற்குரிய) வெகுமதி உண்டு (அல்லவா?)'' என்று கேட்டனர்.
-
7:114
قَالَ نَعَمْ وَإِنَّكُمْ لَمِنَ ٱلْمُقَرَّبِينَ
Q̣aala naʻam wa-ʹinnakum laminal muq̣arrabeen.
அதற்கவன் ‘‘ஆம்! (உங்களுக்கு வெகுமதி உண்டு.) மேலும், நிச்சயமாக நீங்கள் (நம் அரசவையிலும் எனக்கு) மிக்க நெருங்கியவர்களாக இருப்பீர்கள்'' என்றும் கூறினான்.
-
7:115
قَالُوا۟ يَـٰمُوسَىٰٓ إِمَّآ أَن تُلْقِىَ وَإِمَّآ أَن نَّكُونَ نَحْنُ ٱلْمُلْقِينَ
Q̣aaloo yaa-Moosaaa ʹimmaaa ʹañ tulq̣iya wa-ʹimmaaa ʹan nakoona naḥnul mulq̣een?
(பின்னர், அச்சூனியக்காரர்கள் மூஸாவை நோக்கி) ‘‘மூஸாவே! (முதலில் உமது தடியை) நீங்கள் எறிகிறீரா? அல்லது நாம் எறிவதா?'' என்று கேட்டனர்.
-
7:116
قَالَ أَلْقُوا۟ ۖ فَلَمَّآ أَلْقَوْا۟ سَحَرُوٓا۟ أَعْيُنَ ٱلنَّاسِ وَٱسْتَرْهَبُوهُمْ وَجَآءُو بِسِحْرٍ عَظِيمٍ
Q̣aala ʹalq̣oo. Falammaaa ʹalq̣aw saḥarooo ʹaʻyunan naasi wastarhaboohum wa-jaaaʹoo bisiḥrin ʻaz̤̣eem.
அதற்கு மூஸா ‘‘நீங்களே (முதலில்) எறியுங்கள்'' என்று கூறினார். அவ்வாறு அவர்கள் எறிந்து மக்களுடைய கண்களைக் கட்டி அவர்கள் திடுக்கிடும்படியான மகத்தான சூனியத்தைச் செய்தனர்.
-
7:117
۞ وَأَوْحَيْنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنْ أَلْقِ عَصَاكَ ۖ فَإِذَا هِىَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ
Wa-ʹawḥaynaaa ʹilaa Moosaaa ʹan ʹalq̣i ʻAṣaak: faʹiẓaa hiya talq̣afu maa- yaʹfikoon!
அதுசமயம் நாம் ‘‘மூஸாவே! நீர் உமது தடியை எறிவீராக'' என்று அவருக்கு வஹ்யி அறிவித்தோம். அவ்வாறு அவர் எறியவே (அது பெரியதொரு பாம்பாகி) அவர்கள் (சூனியத்தால்) கற்பனை செய்த யாவையும் விழுங்கிவிட்டது.
-
7:118
فَوَقَعَ ٱلْحَقُّ وَبَطَلَ مَا كَانُوا۟ يَعْمَلُونَ
Fawaq̣aʻal ḥaq̣q̣u wabaṭala maa- kaanoo yaʻmaloon.
இவ்வாறு அவர்கள் செய்த அனைத்தும் வீணாகி உண்மை உறுதியாயிற்று.
-
7:119
فَغُلِبُوا۟ هُنَالِكَ وَٱنقَلَبُوا۟ صَـٰغِرِينَ
Fag̣uliboo hunaalika wañq̣alaboo ṣaag̣ireen.
ஆகவே, (கர்வம் கொண்டிருந்த) அவர்கள், அங்கு தோல்வியுற்று சிறுமைப்பட்ட வர்களாக மாறினார்கள்.
-
7:120
وَأُلْقِىَ ٱلسَّحَرَةُ سَـٰجِدِينَ
Wa-ʹulq̣iyas saḥaratu saajideen,
அச்சூனியக்காரர்கள் சிரம் பணிந்து விழுந்தனர்,
-
7:121
قَالُوٓا۟ ءَامَنَّا بِرَبِّ ٱلْعَـٰلَمِينَ
Q̣aalooo ʹaamannaa bi-Rabbil ʻAalameen.
‘‘அகிலத்தார் அனைவரின் இறைவனாகிய அல்லாஹ்வையே நாங்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டு விட்டோம்'' என்று கூறினார்கள்.
-
7:122
رَبِّ مُوسَىٰ وَهَـٰرُونَ
Rabbi Moosaa wa-Haaroon.
மூஸா, ஹாரூனுடைய இறைவனை நாங்களும் (நம்பிக்கை கொண்டோம்'' என்று கூறினார்கள்.)
-
7:123
قَالَ فِرْعَوْنُ ءَامَنتُم بِهِۦ قَبْلَ أَنْ ءَاذَنَ لَكُمْ ۖ إِنَّ هَـٰذَا لَمَكْرٌ مَّكَرْتُمُوهُ فِى ٱلْمَدِينَةِ لِتُخْرِجُوا۟ مِنْهَآ أَهْلَهَا ۖ فَسَوْفَ تَعْلَمُونَ
Q̣aala Firʻawnu ʹaamañtum̃ bihee q̣abla ʹan ʹaaẓana lakum? ʹInna haaẓaa lamakrum makartumoohu fil Madeenati litukhrijoo minhaaa ʹahlahaa: fasawfa taʻlamoon.
அதற்கு ஃபிர்அவ்ன் (அவர்களை நோக்கி) ‘‘உங்களுக்கு நான் அனுமதியளிப்பதற்கு முன்னதாகவே நீங்கள் அவரை நம்பிக்கை கொண்டு விட்டீர்கள். நிச்சயமாக இந்நகரவாசிகளை அதிலிருந்து வெளியேற்றுவதற்காக (மூஸாவுடன் கலந்து) நீங்கள் செய்த சதியாகும் இது. (இச்சதியின் பலனை) அதிசீக்கிரத்தில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.
-
7:124
لَأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُم مِّنْ خِلَـٰفٍ ثُمَّ لَأُصَلِّبَنَّكُمْ أَجْمَعِينَ
Laʹuq̣aṭṭiʻanna ʹaydiyakum wa-ʹarjulakum min khilaafiñ s̤umma laʹuṣallibannakum ʹajmaʻeen.
நிச்சயமாக நான் உங்களை மாறு கை, மாறு கால் வெட்டி உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைந்து விடுவேன்'' என்று கூறினான்.
-
7:125
قَالُوٓا۟ إِنَّآ إِلَىٰ رَبِّنَا مُنقَلِبُونَ
Q̣aalooo ʹinnaaa ʹilaa Rabbinaa muñq̣aliboon:
அதற்கவர்கள் ‘‘(அவ்வாறாயின்) நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம்தான் திரும்பிச் செல்வோம். (அதைப்பற்றி எங்களுக்குக் கவலை இல்லை)'' என்று கூறினார்கள்.
-
7:126
وَمَا تَنقِمُ مِنَّآ إِلَّآ أَنْ ءَامَنَّا بِـَٔايَـٰتِ رَبِّنَا لَمَّا جَآءَتْنَا ۚ رَبَّنَآ أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ
Wa-maa tañq̣imu minnaaa ʹillaaa ʹan ʹaamannaa biʹAayaati Rabbinaa lammaa jaaaʹatnaa! Rabbanaaa ʹafrig̣ ʻalaynaa ṣabrañw watawaffanaa Muslimeen!
‘‘இன்னும், எங்களிடம் வந்த இறைவனின் அத்தாட்சிகளை நாங்கள் நம்பிக்கை கொண்டதைத் தவிர வேறு எதற்காகவும் நீ எங்களை பழிவாங்கவில்லை'' (என்று ஃபிர்அவ்னிடம் கூறிய பிறகு) ‘‘எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையைச் சொரிவாயாக! (உனக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக (எங்களை ஆக்கி) எங்களை நீ கைப்பற்றிக் கொள்வாயாக!'' (என்று பிரார்த்தித்தார்கள்.)
-
7:127
وَقَالَ ٱلْمَلَأُ مِن قَوْمِ فِرْعَوْنَ أَتَذَرُ مُوسَىٰ وَقَوْمَهُۥ لِيُفْسِدُوا۟ فِى ٱلْأَرْضِ وَيَذَرَكَ وَءَالِهَتَكَ ۚ قَالَ سَنُقَتِّلُ أَبْنَآءَهُمْ وَنَسْتَحْىِۦ نِسَآءَهُمْ وَإِنَّا فَوْقَهُمْ قَـٰهِرُونَ
Wa-q̣aalal malaʹu miñ q̣awmi Firʻawna ʹataẓaru Moosaa wa-q̣awmahoo liyufsidoo fil ʹarḍi wa-yaẓaraka wa-ʹaalihatak? Q̣aala sanuq̣attilu ʹabnaaaʹahum wa-nastaḥyee nisaaaʹahum; wa-ʹinnaa fawq̣ahum q̣aahiroon.
அதற்கு ஃபிர்அவ்னுடைய மக்களிலுள்ள தலைவர்கள் (ஃபிர்அவ்னை நோக்கி) ‘‘மூஸாவும் அவருடைய மக்களும் பூமியில் விஷமம் செய்து உன்னையும், உனது தெய்வங்களையும் புறக்கணித்து விடும்படி நீ அவர்களை விட்டு வைப்பாயா?'' என்று கேட்டார்கள். அதற்கவன் (அல்ல!) அவர்களுடைய ஆண் மக்களை வெட்டிவிட்டு (அவர்களை இழிவுபடுத்துவதற்காக) அவர்களுடைய பெண் மக்களை (மட்டும்) உயிருடன் வாழவிடுவோம். நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஆதிக்கம் வகித்திருக்கிறோம். (ஆகவே, நாம் விரும்பியவாறெல்லாம் செய்யலாம்)'' என்று கூறினான்.
-
7:128
قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ ٱسْتَعِينُوا۟ بِٱللَّهِ وَٱصْبِرُوٓا۟ ۖ إِنَّ ٱلْأَرْضَ لِلَّهِ يُورِثُهَا مَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦ ۖ وَٱلْعَـٰقِبَةُ لِلْمُتَّقِينَ
Q̣aala Moosaa liq̣awmihis taʻeenoo billaahi waṣbiroo. ʹInnal ʹarḍa lillaahi yooris̤uhaa mañy yashaaaʹu min ʻibaadih; wal-ʻaaq̣ibatu lil-Muttaq̣een.
(அதற்கு) மூஸா தன் இனத்தாரை நோக்கி ‘‘நீங்கள் அல்லாஹ்விடம் உதவி தேடி (ஃபிர்அவ்னால் உங்களுக்கு ஏற்படும் துன்பங்களை) பொறுமையுடன் சகித்திருங்கள். நிச்சயமாக இந்த பூமி அல்லாஹ்வுக்குரியதே! அதை அவன் தன் அடியார்களில் தான் விரும்பியவர்களுக்குச் சொந்தமாக்கி விடுவான். (அல்லாஹ்வுக்கு) பயப்படுகிறவர்களே முடிவில் வெற்றி பெறுவார்கள்'' என்று கூறினார்.
-
7:129
قَالُوٓا۟ أُوذِينَا مِن قَبْلِ أَن تَأْتِيَنَا وَمِنۢ بَعْدِ مَا جِئْتَنَا ۚ قَالَ عَسَىٰ رَبُّكُمْ أَن يُهْلِكَ عَدُوَّكُمْ وَيَسْتَخْلِفَكُمْ فِى ٱلْأَرْضِ فَيَنظُرَ كَيْفَ تَعْمَلُونَ
Q̣aalooo ʹooẓeenaa miñ q̣abli ʹañ taʹtiyanaa wa-mim baʻdi maa- jiʹtanaa. Q̣aala ʻasaa Rabbukum ʹañy yuhlika ʻaduwwakum wa-yastakhlifakum fil ʹarḍi fayañz̤̣ura kayfa taʻmaloon.
(அதற்கு மூஸாவுடைய மக்கள் அவரை நோக்கி) நீங்கள் நம்மிடம் வருவதற்கு முன்னரும் நாங்கள் துன்புறுத்தப்பட்டோம்; நீங்கள் வந்ததன் பின்னரும் (துன்புறுத்தப்பட்டே வருகிறோம். நீங்கள் வந்ததால் எங்களுக்கு ஒன்றும் பயனேற்படவில்லை) என்று கூறினார்கள். (அதற்கு மூஸா) ‘‘உங்கள் இறைவன் உங்கள் எதிரிகளை அழித்து (அவர்களுடைய) பூமிக்கு உங்களை அதிபதியாக்கி வைக்கக்கூடும். உங்கள் நடத்தை எவ்வாறு இருக்கிறது என்பதை அவன் கவனித்துக் கொண்டு இருக்கிறான்'' என்று கூறினார்.
-
7:130
وَلَقَدْ أَخَذْنَآ ءَالَ فِرْعَوْنَ بِٱلسِّنِينَ وَنَقْصٍ مِّنَ ٱلثَّمَرَٰتِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ
Wa-laq̣ad ʹakhaẓnaaa ʹaala Firʻawna bis-sineena wa-naq̣ṣim minas̤ s̤amaraati laʻallahum yaẓẓakkaroon.
பின்னர், ஃபிர்அவ்னுடைய மக்களைப் பஞ்சத்தைக் கொண்டும் (அவர்களுடைய விவசாய) விளைச்சல்களில் நஷ்டத்தைக் கொண்டும் தண்டித்தோம். (இதனால்) அவர்கள் நல்லுணர்ச்சிப் பெற்றிருக்கலாம்.
-
7:131
فَإِذَا جَآءَتْهُمُ ٱلْحَسَنَةُ قَالُوا۟ لَنَا هَـٰذِهِۦ ۖ وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌ يَطَّيَّرُوا۟ بِمُوسَىٰ وَمَن مَّعَهُۥٓ ۗ أَلَآ إِنَّمَا طَـٰٓئِرُهُمْ عِندَ ٱللَّهِ وَلَـٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ
Faʹiẓaa jaaaʹathumul ḥasanatu q̣aaloo lanaa ḥaazih: wa-ʹiñ tuṣibhum sayyiʹatuñy yaṭṭayyaroo bi-Moosaa wa-mam maʻah. ʹAlaaa ʹinnamaa ṭaaaʹiruhum ʻiñdal laahi wa-laakinna ʹaks̤arahum laa- yaʻlamoon!
எனினும் அவர்களோ, அவர்களுக்கு (ஒரு) நன்மை வரும் சமயத்தில் எங்களுக்கு (வரவேண்டியது)தான் வந்தது என்றும், ஒரு தீங்கேற்படும் சமயத்தில் ‘‘(இது எங்களுக்கு வரவேண்டியதல்ல. எனினும் பீடை பிடித்த இந்த) மூஸாவாலும், அவருடைய மக்களாலுமே வந்தது'' என்றும் கூறினார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட (இத்)துர்ப்பாக்கியம் அல்லாஹ்விடம் இருந்தே வந்தது என்பதை அறிந்து கொள்ளுங்கள். எனினும் அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்து கொள்வதில்லை.
-
7:132
وَقَالُوا۟ مَهْمَا تَأْتِنَا بِهِۦ مِنْ ءَايَةٍ لِّتَسْحَرَنَا بِهَا فَمَا نَحْنُ لَكَ بِمُؤْمِنِينَ
Wa-q̣aaloo mahmaa taʹtinaa bihee min ʹAayatil litasḥaranaa bihaa famaa naḥnu laka bi-Muʹmineen.
இன்னும், அவர்கள் (மூஸாவை நோக்கி) ‘‘நீர் எங்களை வசப்படுத்துவதற்காக எவ்வளவோ (அற்புதமான) சூனியத்தை எங்கள் முன் செய்த போதிலும் நாங்கள் உம்மை நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்'' என்று கூறிவிட்டார்கள்.
-
7:133
فَأَرْسَلْنَا عَلَيْهِمُ ٱلطُّوفَانَ وَٱلْجَرَادَ وَٱلْقُمَّلَ وَٱلضَّفَادِعَ وَٱلدَّمَ ءَايَـٰتٍ مُّفَصَّلَـٰتٍ فَٱسْتَكْبَرُوا۟ وَكَانُوا۟ قَوْمًا مُّجْرِمِينَ
Faʹarsalnaa ʻalayhimuṭ Ṭoofaana wal-Jaraada wal-Q̣ummala waḍ-Ḍafaadiʻa wad-Dama ʹaayaatim mufaṣṣalaat. Fastakbaroo wa-kaanoo q̣awmam mujrimeen.
ஆகவே, அவர்கள் மீது (மழையுடன் கூடிய) புயல் காற்று, வெட்டுக்கிளி, பேன், தவளை, இரத்தம் ஆகிய தெளிவான இவ்வத்தாட்சிகளை (ஒன்றன் பின் ஒன்றாக) நாம் அனுப்பிவைத்தோம். (இதன்) பின்னரும் அவர்கள் கர்வம்கொண்டு குற்றம் செய்யும் மக்களாகவே இருந்தார்கள்.
-
7:134
وَلَمَّا وَقَعَ عَلَيْهِمُ ٱلرِّجْزُ قَالُوا۟ يَـٰمُوسَى ٱدْعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِندَكَ ۖ لَئِن كَشَفْتَ عَنَّا ٱلرِّجْزَ لَنُؤْمِنَنَّ لَكَ وَلَنُرْسِلَنَّ مَعَكَ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
Wa-lammaa waq̣aʻa ʻalayhimur rijzu q̣aaloo yaa-Moosad ʻu lanaa Rabbaka bimaa ʻahida ʻiñdaka laʹiñ kashafta ʻannar rijza lanuʹminanna laka wa-lanursilanna maʻaka Baneee ʹIsraaaʹeel.
அவர்கள் மீது (இவற்றில் ஒரு) வேதனை வரும்போதெல்லாம் அவர்கள் (மூஸாவை நோக்கி) ‘‘மூஸாவே! உம் இறைவன் (உங்கள் பிரார்த்தனையை அங்கீகரிப்பதாக) உமக்கு அளித்திருக்கும் வாக்குறுதியின்படி (இந்த சிரமத்தை நீக்கும்படி) நமக்காக நீர் பிரார்த்தனை செய்யுங்கள். நமது சிரமத்தை நீங்கள் நீக்கினால் நிச்சயமாக நாங்கள் உம்மை நம்பிக்கை கொண்டு இஸ்ராயீலின் சந்ததிகளையும் நிச்சயமாக நாம் உம்முடன் அனுப்பி விடுகிறோம்'' என்று கூறுவார்கள்.
-
7:135
فَلَمَّا كَشَفْنَا عَنْهُمُ ٱلرِّجْزَ إِلَىٰٓ أَجَلٍ هُم بَـٰلِغُوهُ إِذَا هُمْ يَنكُثُونَ
Falammaa kashafnaa ʻanhumur rijza ʹilaaa ʹajalin hum̃ baalig̣oohu ʹiẓaa hum yañkus̤oon!
நாம் அவர்களுடைய வேதனையை நீக்கியபோதெல்லாம் (அவர்கள் தங்கள் வாக்குறுதிக்கு மாறுசெய்துகொண்டே வந்தார்கள்.) இவ்வாறு அவர்களுக்கு ஏற்பட்ட (இறுதி) தவணையை அவர்கள் அடையும்வரை (தொடர்ந்து) மாறு செய்தே வந்தனர்.
-
7:136
فَٱنتَقَمْنَا مِنْهُمْ فَأَغْرَقْنَـٰهُمْ فِى ٱلْيَمِّ بِأَنَّهُمْ كَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَا وَكَانُوا۟ عَنْهَا غَـٰفِلِينَ
Fañtaq̣amnaa minhum faʹag̣raq̣naahum fil yammi biʹannahum kaẓẓaboo biʹAayaatinaa wa-kaanoo ʻanhaa g̣aafileen.
ஆகவே, அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொருட்படுத்தாது (இவ்வாறு) அவற்றைப் பொய்யாக்கிக் கொண்டிருந்ததன் காரணமாக அவர்களை கடலில் மூழ்கடித்து அவர்களிடம் நாம் பழி வாங்கினோம்.
-
7:137
وَأَوْرَثْنَا ٱلْقَوْمَ ٱلَّذِينَ كَانُوا۟ يُسْتَضْعَفُونَ مَشَـٰرِقَ ٱلْأَرْضِ وَمَغَـٰرِبَهَا ٱلَّتِى بَـٰرَكْنَا فِيهَا ۖ وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ ٱلْحُسْنَىٰ عَلَىٰ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ بِمَا صَبَرُوا۟ ۖ وَدَمَّرْنَا مَا كَانَ يَصْنَعُ فِرْعَوْنُ وَقَوْمُهُۥ وَمَا كَانُوا۟ يَعْرِشُونَ
Wa-ʹawras̤nal q̣awmal laẓeena kaanoo yustaḍʻafoona mashaariq̣al ʹarḍi wa-mag̣aari-bahal latee baaraknaa feehaa. Watammat Kalimatu Rabbikal ḥusnaa ʻalaa Baneee ʹIsraaaʹeela bimaa ṣabaroo; wadammarnaa maa- kaana yaṣnaʻu Firʻawnu wa-q̣awmuhoo wa-maa kaanoo yaʻrishoon.
இன்னும், எவர்களை இவர்கள் பலவீனமானவர்களென்று (கேவலமாக) எண்ணிக் கொண்டிருந்தார்களோ அந்த மக்களுக்கே மிக்க பாக்கியமுள்ள (அவர்களுடைய) பூமியின் கிழக்குப் பாகங்களையும், மேற்குப் பாகங்களையும் சொந்தமாக்கிக் கொடுத்தோம். ஆகவே, இஸ்ராயீலின் சந்ததிகள் (ஃபிர்அவ்னால் ஏற்பட்ட கஷ்டங்களை) பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்ததன் காரணமாக (அவர்களுக்கு) உங்கள் இறைவன் கொடுத்த வாக்கு மிக நல்ல விதமாகவே நிறைவேறிற்று. ஃபிர்அவ்னும் அவனுடைய மக்களும் கட்டியிருந்த மாட மாளிகைகளையும் (உற்பத்தி செய்திருந்த தோட்டம் துறவுகளையும்) நாம் தரைமட்டமாக்கி விட்டோம்.
-
7:138
وَجَـٰوَزْنَا بِبَنِىٓ إِسْرَٰٓءِيلَ ٱلْبَحْرَ فَأَتَوْا۟ عَلَىٰ قَوْمٍ يَعْكُفُونَ عَلَىٰٓ أَصْنَامٍ لَّهُمْ ۚ قَالُوا۟ يَـٰمُوسَى ٱجْعَل لَّنَآ إِلَـٰهًا كَمَا لَهُمْ ءَالِهَةٌ ۚ قَالَ إِنَّكُمْ قَوْمٌ تَجْهَلُونَ
Wa-jaawaznaa bi-Baneee ʹIsraaaʹeelal baḥra faʹataw ʻalaa q̣awmiñy yaʻkufoona ʻalaaa ʹaṣnaamil lahum. Q̣aaloo yaa-Moosaj ʻal lanaaa ʹilaahañ kamaa lahum ʹaalihah. Q̣aala ʹinnakum q̣awmuñ tajhaloon.
நாம் இஸ்ராயீலின் சந்ததிகளை கடலைக் கடத்தி (அழைத்து)ச் சென்ற சமயம் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்த ஒரு சமூகத்தினர் அருகில் அவர்கள் சென்றபொழுது, (அதைக் கண்ணுற்ற அவர்கள் மூஸாவை நோக்கி) ‘‘மூஸாவே! அவர்கள் வைத்திருக்கும் சிலைகளைப் போல் எங்களுக்கும் ஒரு சிலையை (நாங்கள் வணங்குவதற்கு) ஆக்கிவைப்பீராக!'' என்று கூறினார்கள். அதற்கு (மூஸா அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நீங்கள் அறிவில்லாத மக்களாக இருக்கிறீர்கள்'' என்று கூறினார்.
-
7:139
إِنَّ هَـٰٓؤُلَآءِ مُتَبَّرٌ مَّا هُمْ فِيهِ وَبَـٰطِلٌ مَّا كَانُوا۟ يَعْمَلُونَ
ʹInna haaaʹulaaaʹi mutabbarum maa hum feehi wa-baaṭilum maa kaanoo yaʻmaloon.
(அந்த சிலைவணங்கிகளைச் சுட்டிக் காண்பித்து,) ‘‘நிச்சயமாக இந்த மக்கள் இருக்கின்ற மார்க்கம் அழிந்துவிடக்கூடியது. அவர்கள் செய்பவை அனைத்தும் வீணானவை. (அவர்களுக்கு ஒரு பலனையும் அளிக்காது'' என்றும் கூறினார்.)
-
7:140
قَالَ أَغَيْرَ ٱللَّهِ أَبْغِيكُمْ إِلَـٰهًا وَهُوَ فَضَّلَكُمْ عَلَى ٱلْعَـٰلَمِينَ
Q̣aala ʹa-g̣ayral laahi ʹabg̣eekum ʹilaahañw Wa-Huwa faḍḍalakum ʻalal ʻaalameen?
(தவிர) ‘‘அல்லாஹ் அல்லாததையா நான் உங்களுக்கு இறைவனாக ஆக்கிவைப்பேன்? அவன்தான் உங்களை உலகத்தார் அனைவரையும் விட மேன்மையாக்கி வைத்தான்'' என்றும் அவர் கூறினார்.
-
7:141
وَإِذْ أَنجَيْنَـٰكُم مِّنْ ءَالِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوٓءَ ٱلْعَذَابِ ۖ يُقَتِّلُونَ أَبْنَآءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَآءَكُمْ ۚ وَفِى ذَٰلِكُم بَلَآءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ
Wa-ʹiẓ ʹañjaynaakum min ʹAali Firʻawna yasoomoonakum soooʹal ʻaẓaabi, yuq̣attiloona ʹabnaaaʹakum wa-yastaḥyoona nisaaaʹakum: wa-fee ẓaalikum balaaaʹum mir Rabbikum ʻaz̤̣eem.
(இஸ்ராயீலின் சந்ததிகளே!) உங்களுக்கு மிகக் கொடிய துன்பங்களை விளைவித்துக் கொண்டிருந்த ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து நாம் உங்களை பாதுகாத்துக் கொண்டதை நீங்கள் நினைத்துப் பாருங்கள். அவர்கள் உங்கள் ஆண் பிள்ளைகளைக் கொலை செய்துவிட்டு உங்கள் பெண் பிள்ளைகளை (மட்டும்) உயிருடன் வாழவிட்டு வந்தார்கள். இதில் உங்களுக்கு உங்கள் இறைவனால் பெரியதொரு சோதனை ஏற்பட்டிருந்தது.
-
7:142
۞ وَوَٰعَدْنَا مُوسَىٰ ثَلَـٰثِينَ لَيْلَةً وَأَتْمَمْنَـٰهَا بِعَشْرٍ فَتَمَّ مِيقَـٰتُ رَبِّهِۦٓ أَرْبَعِينَ لَيْلَةً ۚ وَقَالَ مُوسَىٰ لِأَخِيهِ هَـٰرُونَ ٱخْلُفْنِى فِى قَوْمِى وَأَصْلِحْ وَلَا تَتَّبِعْ سَبِيلَ ٱلْمُفْسِدِينَ
Wa-waaʻadnaa Moosaa s̤alaas̤eena laylatañw waʹatmamnaahaa biʻashriñ fatamma meeq̣aatu Rabbiheee ʹarbaʻeena laylah. Wa-q̣aala Moosaa liʹakheehi Haaroonakh lufnee fee q̣awmee wa-ʹaṣliḥ wa-laa tattabiʻ sabeelal mufsideen.
மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்திருந்தோம். பின்னர் அத்துடன் பத்து (இரவுகளைச்) சேர்த்தோம். ஆகவே, அவருடைய இறைவனின் வாக்குறுதி நாற்பது இரவுகளாகப் பூர்த்தியாயிற்று. ஆகவே, அதுசமயம் மூஸா தன் சகோதரர் ஹாரூனை நோக்கி ‘‘நீர் எனது மக்களிடையே என் இடத்திலிருந்து அவர்களைச் சீர்திருத்துவீராக. மேலும், விஷமிகளுடைய வழியை நீர் பின்பற்றாதீர்'' என்று கூறினார்.
-
7:143
وَلَمَّا جَآءَ مُوسَىٰ لِمِيقَـٰتِنَا وَكَلَّمَهُۥ رَبُّهُۥ قَالَ رَبِّ أَرِنِىٓ أَنظُرْ إِلَيْكَ ۚ قَالَ لَن تَرَىٰنِى وَلَـٰكِنِ ٱنظُرْ إِلَى ٱلْجَبَلِ فَإِنِ ٱسْتَقَرَّ مَكَانَهُۥ فَسَوْفَ تَرَىٰنِى ۚ فَلَمَّا تَجَلَّىٰ رَبُّهُۥ لِلْجَبَلِ جَعَلَهُۥ دَكًّا وَخَرَّ مُوسَىٰ صَعِقًا ۚ فَلَمَّآ أَفَاقَ قَالَ سُبْحَـٰنَكَ تُبْتُ إِلَيْكَ وَأَنَا۠ أَوَّلُ ٱلْمُؤْمِنِينَ
Wa-lammaa jaaaʹa Moosaa limeeq̣aatinaa wa-kallamahoo Rabbuhoo q̣aala Rabbi ʹarineee ʹañz̤̣ur ʹilayk. Q̣aala lañ taraanee wa-laakiniñ z̤̣ur ʹilal jabali faʹinis taq̣arra makaanahoo fasawfa taraanee. Falammaa tajallaa Rabbuhoo lil-Jabali jaʻalahoo dakkañw wakharra Moosaa ṣaʻiq̣aa. Falammaaa ʹafaaq̣a q̣aala Subḥaanaka tubtu ʹilayka wa-ʹana ʹawwalul Muʹmineen.
நாம் (குறிப்பிட்ட இடத்திற்கு) குறிப்பிட்ட நேரத்தில் மூஸா வந்த பொழுது அவருடைய இறைவன் அவருடன் பேசினான். (அப்பொழுது மூஸா தன் இறைவனை நோக்கி) ‘‘என் இறைவனே! நான் உன்னை (என் கண்ணால்) பார்க்க (விரும்புகிறேன்.) நீ உன்னை எனக்கு காண்பி'' என்று கூறினார். (அதற்கு இறைவன் ‘‘நேர்முகமாக) என்னைக் காண உம்மால் ஒருக்காலும் முடியாது. எனினும் இம்மலையை நீர் நோக்குவீராக. அது தன் இடத்தில் நிலைத்திருந்தால் பின்னர் நீர் என்னைக் காண்பீர்'' என்று கூறினான். அவருடைய இறைவன் அம்மலை மீது தோற்றமளிக்கவே அது தவிடு பொடியாயிற்று. மூஸா திடுக்கிட்டு (மூர்ச்சையாகி) விழுந்தார். அவர் தெளிவு பெறவே (இறைவனை நோக்கி) ‘‘நீ மிகப் பரிசுத்தமானவன். நான் (உன்னைப் பார்க்கக் கோரிய குற்றத்திலிருந்து விலகி) உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன். அன்றி, உன்னை நம்பிக்கை கொள்பவர்களில் நான் முதன்மையானவன்'' என்று கூறினார்.
-
7:144
قَالَ يَـٰمُوسَىٰٓ إِنِّى ٱصْطَفَيْتُكَ عَلَى ٱلنَّاسِ بِرِسَـٰلَـٰتِى وَبِكَلَـٰمِى فَخُذْ مَآ ءَاتَيْتُكَ وَكُن مِّنَ ٱلشَّـٰكِرِينَ
Q̣aala yaa-Moosaaa ʹinniṣ ṭafaytuka ʻalan naasi bi-Risaalaatee wa-bi-Kalaamee fakhuẓ maaa ʹaataytuka wa-kum minash shaakireen.
(அதற்கு இறைவன்) ‘‘மூஸாவே! என் தூதராக அனுப்புவதற்கும், என்னுடன் பேசுவதற்கும் (உங்கள் காலத்தில் உள்ள) மனிதர்கள் அனைவரிலிருந்தும் நிச்சயமாக நான் உம்மைத் தேர்ந்தெடுத்து இருக்கிறேன். ஆகவே, நான் உமக்குக் கொடுப்பதை (பலமாக)ப் பற்றிப் பிடித்துக் கொள்வீராக! மேலும், (அதற்காக) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராக) நீரும் இருப்பீராக'' என்று கூறினான்.
-
7:145
وَكَتَبْنَا لَهُۥ فِى ٱلْأَلْوَاحِ مِن كُلِّ شَىْءٍ مَّوْعِظَةً وَتَفْصِيلًا لِّكُلِّ شَىْءٍ فَخُذْهَا بِقُوَّةٍ وَأْمُرْ قَوْمَكَ يَأْخُذُوا۟ بِأَحْسَنِهَا ۚ سَأُو۟رِيكُمْ دَارَ ٱلْفَـٰسِقِينَ
Wa-katabnaa lahoo fil ʹAlwaaḥi miñ kulli shayʹim mawʻiz̤̣a watafṣeelal likulli shayʹ: fakhuzhaa biq̣uwwatiñw waʹmur q̣awmaka yaʹkhuẓoo biʹaḥsanihaa: saʹureekum, daaral faasiq̣een.
(நாம் அவருக்குக் கொடுத்த கற்)பலகைகளில் நல்லுபதேசங்கள் அனைத்தையும், ஒவ்வொரு கட்டளையின் விவரத்தையும் அவருக்காக நாம் எழுதி ‘‘நீர் இதைப் பலமாகப் பற்றிப் பிடித்துக்கொண்டு அதிலிருக்கும் மிக அழகியவற்றை எடுத்து நடக்கும் படி உம் மக்களுக்கு நீர் கட்டளையிடுங்கள். (உமக்கு மாறு செய்யும்) பாவிகள் தங்கும் இடத்தை அதிசீக்கிரத்தில் நாம் உங்களுக்குக் காண்பிப்போம்'' (என்றும் நாம் மூஸாவுக்குக் கூறினோம்).
-
7:146
سَأَصْرِفُ عَنْ ءَايَـٰتِىَ ٱلَّذِينَ يَتَكَبَّرُونَ فِى ٱلْأَرْضِ بِغَيْرِ ٱلْحَقِّ وَإِن يَرَوْا۟ كُلَّ ءَايَةٍ لَّا يُؤْمِنُوا۟ بِهَا وَإِن يَرَوْا۟ سَبِيلَ ٱلرُّشْدِ لَا يَتَّخِذُوهُ سَبِيلًا وَإِن يَرَوْا۟ سَبِيلَ ٱلْغَىِّ يَتَّخِذُوهُ سَبِيلًا ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ كَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَا وَكَانُوا۟ عَنْهَا غَـٰفِلِينَ
Saʹaṣrifu ʻan ʹAayaatiyal laẓeena yatakabbaroona fil ʹarḍi big̣ayril ḥaq̣q̣: wa-ʹiñy yaraw kulla ʹAayatil laa yuʹminoo bihaa; wa-ʹiñy yaraw sabeelar rushdi laa- yattakhiẓoohu Sabeelaa: wa-ʹiñy yaraw sabeelal g̣ayyi yattakhiẓoohu Sabeelaa. Ẓaalika biʹannahum kaẓẓaboo biʹAayaatinaa wa-kaanoo ʻanhaa g̣aafileen.
நியாயமின்றி பூமியில் கர்வம் கொண்டலைபவர்கள் நம் கட்டளைகளைப் புறக்கணிக்கும்படிச் செய்து விடுவோம். ஆகவே, அவர்கள் நம் அத்தாட்சிகள் அனைத்தையும் (தங்கள் கண்ணால்) கண்டபோதிலும் அவற்றை நம்பவே மாட்டார்கள். அவ்வாறே நேரான வழியை அவர்கள் கண்டபோதிலும் அவர்கள் அதை (தாங்கள்) செல்லும் வழியாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். எனினும், தவறான வழியைக் கண்டாலோ அதையே (தாங்கள்) செல்லும் வழியாக எடுத்துக் கொள்வார்கள். நிச்சயமாக அவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்கி, அவற்றைப் புறக்கணித்து பராமுகமாயிருந்ததே இதற்குரிய காரணமாகும்.
-
7:147
وَٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَا وَلِقَآءِ ٱلْـَٔاخِرَةِ حَبِطَتْ أَعْمَـٰلُهُمْ ۚ هَلْ يُجْزَوْنَ إِلَّا مَا كَانُوا۟ يَعْمَلُونَ
Wallaẓeena kaẓẓaboo biʹAayaatinaa wa-Liq̣aaaʹil ʹAakhirati ḥabiṭat ʹaʻmaaluhum. Hal yujzawna ʹillaa maa- kaanoo yaʻmaloon?
ஆகவே, எவர்கள் நம் வசனங்களையும், மறுமையில் (நம்மைச்) சந்திப்பதையும் பொய்யாக்குகிறார்களோ அவர்களுடைய (நற்)காரியங்கள் அனைத்தும் அழிந்து விடும். (நம் வசனங்களைப் பொய்யாக்கி) அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயல்களுக்குத் தவிர (வேறெதற்கும்) கூலி கொடுக்கப்படுவார்களா?
-
7:148
وَٱتَّخَذَ قَوْمُ مُوسَىٰ مِنۢ بَعْدِهِۦ مِنْ حُلِيِّهِمْ عِجْلًا جَسَدًا لَّهُۥ خُوَارٌ ۚ أَلَمْ يَرَوْا۟ أَنَّهُۥ لَا يُكَلِّمُهُمْ وَلَا يَهْدِيهِمْ سَبِيلًا ۘ ٱتَّخَذُوهُ وَكَانُوا۟ ظَـٰلِمِينَ
Wattakhaẓa q̣awmu Moosaa mim baʻdihee min ḥuliyyihim ʻijlañ jasadal lahoo khuwaar. ʹAlam yaraw ʹannahoo laa- yukallimuhum wa-laa yahdeehim Sabeelaa? ʹItta-Khaẓoohu wa-kaanoo z̤̣aalimeen.
(தன் இறைவனிடம் உரையாட மூஸா சென்றதற்குப்) பின்னர் மூஸாவுடைய மக்கள் தங்கள் ஆபரணங்களைக் கொண்(டு செய்யப்பட்)ட கன்றுக் குட்டியின் சிலையை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டார்கள். அதற்கு (மாட்டின் சப்தத்தைப் போன்ற) சப்தமிருந்தது. எனினும் (அது உயிரற்ற வெறும் சிலை.) நிச்சயமாக அது அவர்களுடன் பேசுவதுமில்லை; அவர்களுக்கு ஒரு வழியை அறிவிப்பதுமில்லை என்பதையும் அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா? எனினும், அவர்கள் அதையே (தெய்வமாக) எடுத்துக் கொண்டு (அதனால் தங்களுக்குத்தாமே) தீங்கிழைத்துக் கொண்டவர்களாக ஆகிவிட்டார்கள்.
-
7:149
وَلَمَّا سُقِطَ فِىٓ أَيْدِيهِمْ وَرَأَوْا۟ أَنَّهُمْ قَدْ ضَلُّوا۟ قَالُوا۟ لَئِن لَّمْ يَرْحَمْنَا رَبُّنَا وَيَغْفِرْ لَنَا لَنَكُونَنَّ مِنَ ٱلْخَـٰسِرِينَ
Wa-lammaa suq̣iṭa feee ʹaydeehim wa-ra ʹawʹannahum q̣ad ḍalloo q̣aaloo laʹil lam yarḥamnaa Rabbunaa wa-yag̣fir lanaa lanakoonanna minal khaasireen.
அவர்கள் நிச்சயமாகத் தாங்கள் வழிகெட்டு விட்டோம் என்பதைக் கண்டு கைசேதப்பட்டபொழுது ‘‘எங்கள் இறைவன் எங்களுக்கு அருள் புரிந்து எங்கள் குற்றங்களை மன்னிக்காவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்'' என்று கூறினார்கள்.
-
7:150
وَلَمَّا رَجَعَ مُوسَىٰٓ إِلَىٰ قَوْمِهِۦ غَضْبَـٰنَ أَسِفًا قَالَ بِئْسَمَا خَلَفْتُمُونِى مِنۢ بَعْدِىٓ ۖ أَعَجِلْتُمْ أَمْرَ رَبِّكُمْ ۖ وَأَلْقَى ٱلْأَلْوَاحَ وَأَخَذَ بِرَأْسِ أَخِيهِ يَجُرُّهُۥٓ إِلَيْهِ ۚ قَالَ ٱبْنَ أُمَّ إِنَّ ٱلْقَوْمَ ٱسْتَضْعَفُونِى وَكَادُوا۟ يَقْتُلُونَنِى فَلَا تُشْمِتْ بِىَ ٱلْأَعْدَآءَ وَلَا تَجْعَلْنِى مَعَ ٱلْقَوْمِ ٱلظَّـٰلِمِينَ
Wa-lammaa rajaʻa Moosaaa ʹilaa q̣awmihee g̣aḍbaana ʹasifañ q̣aala biʹsamaa khalaftumoonee mim baʻdee. ʹA-ʻajiltum ʹamra rabbikum? Wa-ʹalq̣al ʹAlwaaḥa wa-ʹakhaẓa biraʹsi akheehi yajurruhooo ʹilayh. Q̣aalab na umma ʹinnal q̣awmas taḍʻafoonee wa-kaadoo yaq̣tuloonanee. Falaa tushmit biyal ʹaʻdaaaʹa wa-laa tajʻalnee maʻal q̣awmiz̤̣ z̤̣aalimeen.
(இதைக் கேள்வியுற்ற) மூஸா கோபத்துடனும் துக்கத்துடனும் தன் மக்களிடம் திரும்பி வந்தபொழுது (அவர்களை நோக்கி) ‘‘நான் இல்லாத சமயத்தில் நீங்கள் செய்த இக்காரியம் மிகக் கெட்டது. உங்கள் இறைவனின் கட்டளை(யாகிய வேதனை)யை நீங்கள் அவசரப்படுத்துகிறீர்களா?'' என்று கூறி (இறைவனின் கட்டளைகள் எழுதப்பட்ட கற்)பலகைகளை எறிந்து விட்டு தன் சகோதரரின் தலை (முடி)யைப் பிடித்துத் தன் பக்கம் இழுத்தார். அ(தற்க)வர் ‘‘என் தாயின் மகனே! இந்த மக்கள் நிச்சயமாக என்னை பலவீனப்படுத்தி என்னைக் கொலை செய்துவிடவும் முற்பட்டனர். (ஆதலால், நான் ஒன்றும் செய்ய முடியாமலாகிவிட்டது. ஆகவே, என்னை அவமானப்படுத்தி) எதிரிகள் சந்தோஷப்படுமாறு நீர் செய்து விடாதீர். (இந்த) அநியாயக்கார மக்களுடனும் என்னை சேர்த்து விடாதீர்'' என்று கூறினார்.
-
7:151
قَالَ رَبِّ ٱغْفِرْ لِى وَلِأَخِى وَأَدْخِلْنَا فِى رَحْمَتِكَ ۖ وَأَنتَ أَرْحَمُ ٱلرَّٰحِمِينَ
Q̣aala Rabbig̣ fir lee wa-liʹakhee wa-ʹadkhilnaa fee Raḥmatika wa-ʹAñta ʹArḥamur raaḥimeen!
(பிறகு மூஸா இறைவனை நோக்கி) ‘‘என் இறைவனே! எனக்கும் என் சகோதரருக்கும் நீ பிழை பொருத்தருள்வாயாக! உன் அன்பிலும் எங்களை சேர்த்துக் கொள்வாயாக! நீ கிருபை செய்பவர்களில் எல்லாம் மிக்க கிருபையாளன்'' என்று (பிரார்த்தனை செய்து) கூறினார்.
-
7:152
إِنَّ ٱلَّذِينَ ٱتَّخَذُوا۟ ٱلْعِجْلَ سَيَنَالُهُمْ غَضَبٌ مِّن رَّبِّهِمْ وَذِلَّةٌ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۚ وَكَذَٰلِكَ نَجْزِى ٱلْمُفْتَرِينَ
ʹInnal laẓeenat takhaẓul ʻijlasa yanaaluhum g̣aḍabum mir Rabbihim waẓillatuñ fil ḥayaatid dunyaa: wa-kaẓaalika najzil muftareen.
(பின்னர் இறைவன் மூஸாவை நோக்கிக் கூறினான்:) ‘‘எவர்கள் காளைக்கன்றை (தெய்வமாக) எடுத்துக் கொண்டார்களோ அவர்களை நிச்சயமாக இறைவனின் கோபமும் இழிவும் இவ்வுலக வாழ்க்கையிலேயே அதிசீக்கிரத்தில் வந்தடையும். பொய்யைக் கற்பனை செய்பவர்களுக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம்.
-
7:153
وَٱلَّذِينَ عَمِلُوا۟ ٱلسَّيِّـَٔاتِ ثُمَّ تَابُوا۟ مِنۢ بَعْدِهَا وَءَامَنُوٓا۟ إِنَّ رَبَّكَ مِنۢ بَعْدِهَا لَغَفُورٌ رَّحِيمٌ
Wallaẓeena ʻamilus sayyiʹaati s̤umma taaboo mim baʻdihaa wa-ʹaamanooo ʹinna Rabbaka mim baʻdihaa la-G̣afoorur Raḥeem.
(எனினும் இத்தகைய) பாவங்கள் செய்து கொண்டிருந்தவர்களிலும் எவர்கள் கைசேதப்பட்டு அதிலிருந்து விலகி உண்மையாகவே நம்பிக்கை கொள்கிறார்களோ (அவர்களை), அதற்குப் பின்னர் நிச்சயமாக உமது இறைவன் மன்னித்துக் கருணை செய்பவன் ஆவான்.
-
7:154
وَلَمَّا سَكَتَ عَن مُّوسَى ٱلْغَضَبُ أَخَذَ ٱلْأَلْوَاحَ ۖ وَفِى نُسْخَتِهَا هُدًى وَرَحْمَةٌ لِّلَّذِينَ هُمْ لِرَبِّهِمْ يَرْهَبُونَ
Wa-lammaa sakata ʻam Moosal g̣aḍabu ʹakhaẓal ʹAlwaaḥa wa-fee nuskhatihaa Hudañw Wa-Raḥmatul lil-laẓeena hum li-Rabbihim yarhaboon.
மூஸாவுடைய கோபம் தணிந்த பின்னர் அவர்(அக்கற்) பலகைகளை எடுத்துக் கொண்டார். அதன் ஏடுகளில் தங்கள் இறைவனை அஞ்சுபவர்களுக்கு நேரான வழியும் அருளும் இருந்தன.
-
7:155
وَٱخْتَارَ مُوسَىٰ قَوْمَهُۥ سَبْعِينَ رَجُلًا لِّمِيقَـٰتِنَا ۖ فَلَمَّآ أَخَذَتْهُمُ ٱلرَّجْفَةُ قَالَ رَبِّ لَوْ شِئْتَ أَهْلَكْتَهُم مِّن قَبْلُ وَإِيَّـٰىَ ۖ أَتُهْلِكُنَا بِمَا فَعَلَ ٱلسُّفَهَآءُ مِنَّآ ۖ إِنْ هِىَ إِلَّا فِتْنَتُكَ تُضِلُّ بِهَا مَن تَشَآءُ وَتَهْدِى مَن تَشَآءُ ۖ أَنتَ وَلِيُّنَا فَٱغْفِرْ لَنَا وَٱرْحَمْنَا ۖ وَأَنتَ خَيْرُ ٱلْغَـٰفِرِينَ
Wakhtaara Moosaa q̣awmahoo sabʻeena rajulal li-Meeq̣aatinaa: falammaaa ʹakhaẓathumur rajfatu q̣aala Rabbi law shiʹta ʹahlaktahum miñ q̣ablu wa-ʹiyyaay. ʹA-tuhlikunaa bimaa faʻalas sufahaaaʹu minnaa? ʹIn hiya ʹillaa fitnatuk. Tuḍillu bihaa mañ tashaaaʹu wa-tahdee mañ tashaaaʹ. ʹAñta Waliyyunaa fag̣fir lanaa warḥamnaa wa-ʹAñta Khayrul g̣aafireen.
மூஸா, நாம் குறித்த நேரத்தி(ல் ‘‘தூர்' என்னும் மலைக்குத் தம்முடன் வருவத)ற்காக தம் மக்களில் எழுபது ஆண்களைத் தேர்ந்தெடுத்தார். அவர்களை பூகம்பம் பிடித்(து மூர்ச்சையாகி விழுந்)ததும் அவர் (தன் இறைவனை நோக்கி) ‘‘என் இறைவனே! (எங்களை அழித்துவிட வேண்டுமென்று) நீ கருதியிருந்தால் இதற்கு முன்னதாகவே என்னையும் இவர்களையும் நீ அழித்திருக்கலாம். எங்களிலுள்ள சில அறிவீனர்கள் செய்த (குற்றத்)திற்காக எங்கள் அனைவரையும் நீ அழித்து விடுகிறாயா? இது உன் சோதனையே தவிர வேறில்லை. இதைக் கொண்டு நீ நாடியவர்களை வழி தவற விடுகிறாய்; நீ நாடியவர்களை நேரான வழியில் செலுத்துகிறாய். நீதான் எங்கள் இறைவன். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு நீ அருள் புரிவாயாக! மன்னிப்பவர்கள் அனைவரிலும் நீ மிக்க மேலானவன்'' என்று(ம் பிரார்த்தித்துக்) கூறினார்.
-
7:156
۞ وَٱكْتُبْ لَنَا فِى هَـٰذِهِ ٱلدُّنْيَا حَسَنَةً وَفِى ٱلْـَٔاخِرَةِ إِنَّا هُدْنَآ إِلَيْكَ ۚ قَالَ عَذَابِىٓ أُصِيبُ بِهِۦ مَنْ أَشَآءُ ۖ وَرَحْمَتِى وَسِعَتْ كُلَّ شَىْءٍ ۚ فَسَأَكْتُبُهَا لِلَّذِينَ يَتَّقُونَ وَيُؤْتُونَ ٱلزَّكَوٰةَ وَٱلَّذِينَ هُم بِـَٔايَـٰتِنَا يُؤْمِنُونَ
Waktub lanaa fee haaẓihid dunyaa ḥasanatañw wafil ʹAakhirati ʹinnaa hudnaaa ʹilayk. Q̣aala ʻaẓaabeee ʹuṣeebu bihee man ʹashaaaʹ. Wa-Raḥmatee wasiʻat kulla shayʹ. Fasaʹaktubuhaa lil-laẓeena yattaq̣oona wa-yuʹtoonaz Zakaata wal-laẓeena hum̃ biʹAayaatinaa yuʹminoon;―
மேலும், ‘‘(இறைவனே!) இம்மையில் நீ எங்களுக்கு நன்மையை முடிவு செய்வாயாக! (அவ்வாறே) மறுமையிலும் (செய்வாயாக)! நிச்சயமாக நாங்கள் உன் பக்கமே முன்னோக்கினோம்'' (என்றும் பிரார்த்தித்தார்). அ(தற்கு இறை)வன் ‘‘நான் நாடியவர்களை என் வேதனை வந்தடையும். எனினும், என் அருட்கொடை அனைத்தையும்விட மிக விரிவானது. ஆகவே, எவர்கள் (எனக்குப்) பயந்து ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ அவர்களுக்கும், எவர்கள் நம் வசனங்களை நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களுக்கும் (என் அருளை) நான் முடிவு செய்வேன்'' என்று கூறினான்.
-
7:157
ٱلَّذِينَ يَتَّبِعُونَ ٱلرَّسُولَ ٱلنَّبِىَّ ٱلْأُمِّىَّ ٱلَّذِى يَجِدُونَهُۥ مَكْتُوبًا عِندَهُمْ فِى ٱلتَّوْرَىٰةِ وَٱلْإِنجِيلِ يَأْمُرُهُم بِٱلْمَعْرُوفِ وَيَنْهَىٰهُمْ عَنِ ٱلْمُنكَرِ وَيُحِلُّ لَهُمُ ٱلطَّيِّبَـٰتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ ٱلْخَبَـٰٓئِثَ وَيَضَعُ عَنْهُمْ إِصْرَهُمْ وَٱلْأَغْلَـٰلَ ٱلَّتِى كَانَتْ عَلَيْهِمْ ۚ فَٱلَّذِينَ ءَامَنُوا۟ بِهِۦ وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ وَٱتَّبَعُوا۟ ٱلنُّورَ ٱلَّذِىٓ أُنزِلَ مَعَهُۥٓ ۙ أُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ
ʹAllaẓeena yattabiʻoonar Rasoolan Nabiyyal ʹUmmiyyal laẓee yajidoonahoo maktooban ʻiñdahum fit Tawraati wal-ʹIñjeel. Yaʹmuruhum̃ bilmaʻroofi wa-yanhaahum ʻanil muñkari wa-yuḥillu lahumuṭ ṭayyibaati wa-yuḥarrimu ʻalayhimul khabaaaʹis̤a wa-yaḍaʻu ʻanhum ʹiṣrahum wal-ʹag̣laalal latee kanat ʻalayhim. Fallaẓeena ʹaamanoo bihee wa-ʻazzaroohu wa-naṣaroohu wattabaʻun Nooral laẓeee ʹuñzila maʻahooo ʹulaaaʹika humul Mufliḥoon.
(ஆகவே, அவர்களில்) எவர்கள் எழுதப் படிக்கத் தெரியாத (நம்) தூதராகிய இந்த நபியைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள் தங்களிடமுள்ள தவ்றாத்திலும், இன்ஜீலிலும் இவருடைய பெயர் எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள். (இத்தூதரோ) அவர்களை நன்மையான காரியங்களைச் செய்யும்படி ஏவி, பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார். நல்லவற்றையே அவர்களுக்கு ஆகுமாக்கி வைப்பார். கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார். மேலும், அவர்களது சுமையையும் அவர்கள் மீதிருந்த (கடினமான சட்ட) விலங்குகளையும் (இறைவனின் அனுமதி கொண்டு) நீக்கிவிடுவார். ஆகவே, எவர்கள் அவரை உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, அவரை பலப்படுத்தி அவருக்கு உதவி செய்து, அவருக்கு இறக்கப்பட்ட பிரகாசமான (இவ்வேதத்)தைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள்.
-
7:158
قُلْ يَـٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنِّى رَسُولُ ٱللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا ٱلَّذِى لَهُۥ مُلْكُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ يُحْىِۦ وَيُمِيتُ ۖ فَـَٔامِنُوا۟ بِٱللَّهِ وَرَسُولِهِ ٱلنَّبِىِّ ٱلْأُمِّىِّ ٱلَّذِى يُؤْمِنُ بِٱللَّهِ وَكَلِمَـٰتِهِۦ وَٱتَّبِعُوهُ لَعَلَّكُمْ تَهْتَدُونَ
Q̣ul yaaaʹayyuhan naasu ʹinnee Rasoolul laahi ʹilaykum jameeʻanil laẓee lahoo mulkus samaawaati wal-ʹarḍ. Laaa ʹillaa ʹilaaha Huwa yuḥyee wa-yumeet. Faʹaaminoo billaahi wa-Rasoolihin Nabiyyil ʹUmmiyyil laẓee yuʹminu billaahi wa-Kalimaatihee wattabiʻoohu laʻallakum tahtadoon.
(நபியே!) கூறுவீராக: ‘‘மனிதர்களே! (நீங்கள் எந்த நாட்டவர் ஆயினும் எவ்வகுப்பாராயினும்) நிச்சயமாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட தூதர் ஆவேன். வானங்கள் பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! (வணக்கத்திற்குரிய) இறைவன் அவனைத்தவிர வேறு ஒருவருமில்லை. அவனே உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கும்படி செய்கிறான். ஆகவே, அந்த அல்லாஹ்வையும், எழுதப் படிக்க அறியாத அவனுடைய இத்தூதரையும் நீங்கள் நம்பிக்கை கொள்வீர்களாக! அவரும் அல்லாஹ்வையும், அவனுடைய வசனங்களையும் நம்பிக்கை கொள்கிறார். ஆகவே, நீங்கள் நேரான வழியை அடைய அவரையே நீங்கள் பின்பற்றுங்கள்.
-
7:159
وَمِن قَوْمِ مُوسَىٰٓ أُمَّةٌ يَهْدُونَ بِٱلْحَقِّ وَبِهِۦ يَعْدِلُونَ
Wa-miñ q̣awmi Moosaaa ʹummatuñy yahdoona bilḥaq̣q̣i wa-bihee yaʻdiloon.
மூஸாவுடைய மக்களில் பலர் இருக்கின்றனர். அவர்கள் (தாங்கள் சத்திய வழியில் செல்வதுடன், மக்களுக்கும்) சத்திய வழியை அறிவித்து, அதன்படி நீதமாகவும் நடக்கின்றனர்.
-
7:160
وَقَطَّعْنَـٰهُمُ ٱثْنَتَىْ عَشْرَةَ أَسْبَاطًا أُمَمًا ۚ وَأَوْحَيْنَآ إِلَىٰ مُوسَىٰٓ إِذِ ٱسْتَسْقَىٰهُ قَوْمُهُۥٓ أَنِ ٱضْرِب بِّعَصَاكَ ٱلْحَجَرَ ۖ فَٱنۢبَجَسَتْ مِنْهُ ٱثْنَتَا عَشْرَةَ عَيْنًا ۖ قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَّشْرَبَهُمْ ۚ وَظَلَّلْنَا عَلَيْهِمُ ٱلْغَمَـٰمَ وَأَنزَلْنَا عَلَيْهِمُ ٱلْمَنَّ وَٱلسَّلْوَىٰ ۖ كُلُوا۟ مِن طَيِّبَـٰتِ مَا رَزَقْنَـٰكُمْ ۚ وَمَا ظَلَمُونَا وَلَـٰكِن كَانُوٓا۟ أَنفُسَهُمْ يَظْلِمُونَ
Wa-q̣aṭṭaʻnaahumus̤ natay ʹasbaaṭan ʻashrata ʹumamaa. Wa-ʹawḥaynaaa ʹilaa Moosaaa ʹiẓis tasq̣aahu q̣awmuhooo ʹaniḍ rib biʻaṣaakal ḥajar. Fambajasat minhus̤ nataa ʻashrata ʻaynaa q̣ad ʻalima kullu ʹunaasim mashrabahum. Waz̤̣allalnaa ʻalayhimul g̣amaama wa-ʹañzalnaa ʻalayhimul Manna was-Salwaa: kuloo miñ ṭayyibaati maa- razaq̣naakum. Wa-maa z̤̣alamoonaa wa-laakiñ kaanooo ʹañfusahum yaz̤̣limoon.
மூஸாவின் மக்களைப் பன்னிரெண்டு கூட்டங்களாகப் பிரித்தோம். மூஸாவிடம் அவர்கள் குடிதண்ணீர் கேட்டபோது (நாம் அவரை நோக்கி) ‘‘உங்கள் (கைத்) தடியைக் கொண்டு இக்கல்லை அடியுங்கள்!'' என்று அவருக்கு வஹ்யி அறிவித்தோம். (அவ்வாறு அவர் அடிக்கவே) அதிலிருந்து பன்னிரெண்டு ஊற்றுக்கள் பீறிட்டோடின. (பன்னிரெண்டு வகுப்பினரில்) ஒவ்வொரு வகுப்பினரும் (அவற்றில்) தாங்கள் அருந்தும் ஊற்றை (குறிப்பாக) அறிந்து கொண்டனர். அன்றி, அவர்கள் மீது மேகம் நிழலிடும்படிச் செய்தோம். அவர்களுக்காக ‘மன்னு ஸல்வா'வையும் இறக்கிவைத்து ‘‘உங்களுக்குக் கொடுக்கும் இந்த நல்ல உணவுகளை (அன்றாடம்) புசித்து வாருங்கள். (அதில் எதையும் நாளைக்கு என்று சேகரித்து வைக்காதீர்கள்'' எனக் கூறினோம். அவ்வாறிருந்தும் அவர்கள் நமக்கு மாறுசெய்தனர். இதனால்) அவர்கள் நமக்கு தீங்கிழைத்து விடவில்லை. எனினும், அவர்கள் தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.
-
7:161
وَإِذْ قِيلَ لَهُمُ ٱسْكُنُوا۟ هَـٰذِهِ ٱلْقَرْيَةَ وَكُلُوا۟ مِنْهَا حَيْثُ شِئْتُمْ وَقُولُوا۟ حِطَّةٌ وَٱدْخُلُوا۟ ٱلْبَابَ سُجَّدًا نَّغْفِرْ لَكُمْ خَطِيٓـَٔـٰتِكُمْ ۚ سَنَزِيدُ ٱلْمُحْسِنِينَ
Wa-ʹiẓ q̣eela lahumus kunoo haaẓihil q̣aryata wa-kuloo minhaa ḥays̤u shiʹtum wa-q̣ooloo Ḥiṭṭatuñw wadkhulul baaba sujjadan nag̣fir lakum khaṭeeeʹaatikum: sanazeedul Muḥsineen.
(மேலும், அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் இவ்வூரில் வசித்திருங்கள். இதில் நீங்கள் விரும்பிய இடத்திலெல்லாம் (விரும்பிய பொருள்களைப்) புசித்துக் கொள்ளுங்கள். அன்றி ‘ஹித்ததுன்' (எங்கள் பாவச்சுமையை அகற்றுவாயாக!) என்று கூறிக்கொண்டே தலை குனிந்தவர்களாக அதன் வாயிலில் நுழையுங்கள். நாம் உங்கள் குற்றங்களை மன்னித்துவிடுவோம். நன்மை செய்பவர்களுக்கு மேலும், அதிகமாகவே நாம் (நற்)கூலி கொடுப்போம் என்று அவர்களுக்குக் கூறப்பட்டதற்கு,
-
7:162
فَبَدَّلَ ٱلَّذِينَ ظَلَمُوا۟ مِنْهُمْ قَوْلًا غَيْرَ ٱلَّذِى قِيلَ لَهُمْ فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِجْزًا مِّنَ ٱلسَّمَآءِ بِمَا كَانُوا۟ يَظْلِمُونَ
Fabaddalal laẓeena z̤̣alamoo minhum q̣awlan g̣ayral laẓee q̣eela lahum faʹarsalnaa ʻalayhim rijzam minas samaaaʹi bimaa kaanoo yaz̤̣limoon.
அவர்களில் வரம்பு மீறியவர்களோ, அவர்களுக்குக் கூறப்பட்ட (‘ஹித்ததுன்' என்ப)தை மாற்றி (‘ஹின்த்ததுன்' கோதுமை என்று) கூறினார்கள். ஆகவே, (இவ்வாறு) அவர்கள் அநியாயம் செய்ததன் காரணமாக நாம் அவர்கள் மீது வானத்திலிருந்து வேதனையை இறக்கிவைத்தோம்.
-
7:163
وَسْـَٔلْهُمْ عَنِ ٱلْقَرْيَةِ ٱلَّتِى كَانَتْ حَاضِرَةَ ٱلْبَحْرِ إِذْ يَعْدُونَ فِى ٱلسَّبْتِ إِذْ تَأْتِيهِمْ حِيتَانُهُمْ يَوْمَ سَبْتِهِمْ شُرَّعًا وَيَوْمَ لَا يَسْبِتُونَ ۙ لَا تَأْتِيهِمْ ۚ كَذَٰلِكَ نَبْلُوهُم بِمَا كَانُوا۟ يَفْسُقُونَ
Wasʹalhum ʻanil q̣aryatil latee kaanat ḥaaḍiratal baḥr. ʹIẓ yaʻdoona fis Sabti ʹiẓ taʹteehim ḥeetaanuhum yawma Sabtihim shurraʻañw wayawma laa- yasbitoona laa- taʹteehim. Kaẓaalika nabloohum̃ bimaa kaanoo yafsuq̣oon.
(நபியே) கடற்கரையிலிருந்த ஊர் (மக்களைப்) பற்றி நீர் அவர்களைக் கேட்பீராக. (ஓய்வு நாளாகிய) சனிக்கிழமையன்று (மீன் வேட்டையாடக் கூடாதென்று தடுக்கப்பட்டிருந்தும்) அவர்கள் வரம்பு மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள். ஏனென்றால், சனிக்கிழமையன்று (அக்கடலில் உள்ள) மீன்கள் அவர்கள் முன் வந்து (நீர் மட்டத்திற்குத்) தலைகளை நீட்டிக் கொண்டிருந்தன. சனிக்கிழமையல்லாத நாள்களில் அவர்களிடம் அவை வருவதில்லை. அவர்கள் பாவம் செய்து கொண்டிருந்ததன் காரணமாக அவர்களை இவ்வாறு (மிகக் கடினமான) சோதனைக்கு உள்ளாக்கினோம்.
-
7:164
وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا ۙ ٱللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا ۖ قَالُوا۟ مَعْذِرَةً إِلَىٰ رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَتَّقُونَ
wa-ʹiẓ q̣aalat ʹummatum minhum lima taʻiz̤̣oona q̣aw-manil laahu muhlikuhum ʹaw muʻaẓẓibuhum ʻazaabañ shadeedaa? Q̣aaloo maʻẓiratan ʹilaa Rabbikum wa-laʻallahum yattaq̣oon.
(இதை அவ்வூரிலிருந்த நல்லோர் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்து தடை செய்தார்கள். இதைக் கண்ட வேறு) ஒரு கூட்டத்தினர் (அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ் எவர்களை அழித்துவிட வேண்டுமென்றோ, கடினமான வேதனைக்குள்ளாக்க வேண்டுமென்றோ நாடியிருக்கிறானோ அந்த மக்களுக்கு நீங்கள் ஏன் நல்லுபதேசம் செய்கிறீர்கள்'' என்று கூறினார்கள். அதற்கவர்கள் ‘‘இதனால் நாம் உங்கள் இறைவனிடம் நம் பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காக (நாங்கள் நல்லுபதேசம் செய்கிறோம் என்றும், இதனால் மீன் பிடிக்கும்) அவர்கள் (ஒருக்கால்) விலகிவிடலாம்'' என்றும் பதில் கூறினார்கள்.
-
7:165
فَلَمَّا نَسُوا۟ مَا ذُكِّرُوا۟ بِهِۦٓ أَنجَيْنَا ٱلَّذِينَ يَنْهَوْنَ عَنِ ٱلسُّوٓءِ وَأَخَذْنَا ٱلَّذِينَ ظَلَمُوا۟ بِعَذَابٍۭ بَـِٔيسٍۭ بِمَا كَانُوا۟ يَفْسُقُونَ
Falammaa nasoo maa- ẓukkiroo biheee ʹañjaynal laẓeena yanhawna ʻanis soooʹi wa-ʹakhaẓnal laẓeena z̤̣alamoo biʻaẓaabim baʹeesim bimaa kaanoo yafsuq̣oon.
அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டதை அவர்கள் (பொருட்படுத்தாது) மறந்து (தொடர்ந்து மீன் பிடிக்க முற்பட்டு)விடவே, பாவத்திலிருந்து விலக்கி வந்தவர்களை நாம் பாதுகாத்துக் கொண்டு வரம்பு மீறியவர்களை அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக கொடிய வேதனையைக் கொண்டு நாம் பிடித்துக் கொண்டோம்.
-
7:166
فَلَمَّا عَتَوْا۟ عَن مَّا نُهُوا۟ عَنْهُ قُلْنَا لَهُمْ كُونُوا۟ قِرَدَةً خَـٰسِـِٔينَ
Falammaa ʻataw ʻam maa nuhoo ʻanhu q̣ulnaa lahum koonoo q̣iradatan khaasiʹeen.
ஆகவே தடுக்கப்பட்டிருந்த வரம்பை அவர்கள் மீறவே, அவர்களை நோக்கி ‘‘நீங்கள் சிறுமைப்பட்ட குரங்குகளாகி விடுங்கள்'' என்று (சபித்துக்) கூறினோம். (அவ்வாறே அவர்கள் ஆகிவிட்டனர்.)
-
7:167
وَإِذْ تَأَذَّنَ رَبُّكَ لَيَبْعَثَنَّ عَلَيْهِمْ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَـٰمَةِ مَن يَسُومُهُمْ سُوٓءَ ٱلْعَذَابِ ۗ إِنَّ رَبَّكَ لَسَرِيعُ ٱلْعِقَابِ ۖ وَإِنَّهُۥ لَغَفُورٌ رَّحِيمٌ
Wa-ʹiẓ taʹaẓẓana Rabbuka layabʻas̤anna ʻalayhim ʹilaa yawmil Q̣iyaamati mañy yasoomuhum soooʹal ʻaẓaab. ʹInna rabbaka la-Sareeʻul ʻiq̣aabi wa-ʹinnahoo la-G̣afoorur Raḥeem.
(நபியே!) அவர்களுக்குக் கொடிய நோவினை செய்யக்கூடியவர்களையே அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும்படி இறுதிநாள் வரை நாம் செய்து வருவோம் என்று உமது இறைவன் அவர்களுக்கு அறிக்கை இட்டதை (நீங்கள் அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக. நிச்சயமாக உமது இறைவன் வேதனை செய்வதில் மிகத் தீவிரமானவன். மேலும், நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவன், மகா கருணையாளன் ஆவான்.
-
7:168
وَقَطَّعْنَـٰهُمْ فِى ٱلْأَرْضِ أُمَمًا ۖ مِّنْهُمُ ٱلصَّـٰلِحُونَ وَمِنْهُمْ دُونَ ذَٰلِكَ ۖ وَبَلَوْنَـٰهُم بِٱلْحَسَنَـٰتِ وَٱلسَّيِّـَٔاتِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ
Wa-q̣aṭṭaʻnaahum fil ʹarḍi ʹumamaa. Min-humuṣ ṣaaliḥoona wa-minhum doona ẓaalik. Wa-balawnaahum̃ bil-ḥasanaati was-sayyiʹaati laʻallahum yarjiʻoon.
அவர்களை இப்புவியில் பல பிரிவுகளாகப் பிரித்து (பூமியின் பல பாகங்களிலும் சிதறடித்து) விட்டோம். அவர்களில் நல்லவர்களும் இருக்கின்றனர்; இது அல்லாத (பொல்லாத)வர்களும் அவர்களில் இருக்கின்றனர். அவர்கள் (பாவத்திலிருந்து) மீள்வதற்காக இன்பங்களைக் கொண்டும், துன்பங்களைக் கொண்டும் நாம் அவர்களைச் சோதித்தோம்.
-
7:169
فَخَلَفَ مِنۢ بَعْدِهِمْ خَلْفٌ وَرِثُوا۟ ٱلْكِتَـٰبَ يَأْخُذُونَ عَرَضَ هَـٰذَا ٱلْأَدْنَىٰ وَيَقُولُونَ سَيُغْفَرُ لَنَا وَإِن يَأْتِهِمْ عَرَضٌ مِّثْلُهُۥ يَأْخُذُوهُ ۚ أَلَمْ يُؤْخَذْ عَلَيْهِم مِّيثَـٰقُ ٱلْكِتَـٰبِ أَن لَّا يَقُولُوا۟ عَلَى ٱللَّهِ إِلَّا ٱلْحَقَّ وَدَرَسُوا۟ مَا فِيهِ ۗ وَٱلدَّارُ ٱلْـَٔاخِرَةُ خَيْرٌ لِّلَّذِينَ يَتَّقُونَ ۗ أَفَلَا تَعْقِلُونَ
Fakhalafa mim baʻdihim khalfuñw waris̤ul Kitaaba yaʹkhuẓoona ʻaraḍa haaẓal ʹadnaa wa-yaq̣ooloona sayug̣faru lanaa. Wa-ʹiñy yaʹtihim ʻaraḍum mis̤luhoo yaʹkhuẓooh. ʹAlam Yuʹkhaẓ ʻalayhim Mees̤aaq̣ul Kitaabi ʹal laa yaq̣ooloo ʻalal laahi ʹillal ḥaq̣q̣a wadarasoo maa- feeh? Wad-Daarul ʹAakhiratu khayrul lil-laẓeena yattaq̣oon. ʹAfalaa taʻq̣iloon?
அவர்களுக்குப் பின்னர் அவர்களுடைய இடத்தை (சிறிதும் தகுதியற்ற) பலர் அடைந்தனர். அவர்கள், (தாங்கள்தான்) வேதத்திற்குச் சொந்தக்காரர்கள் என(க் கூறி), இவ்வற்ப (உலகின்) பொருளைப் பெற்றுக்கொண்டு (அதற்கேற்றவாறு வேத வசனங்களைப் புரட்டுகின்றனர். மேலும், இக்குற்றத்தைப் பற்றி) ‘‘நாங்கள் மன்னிக்கப்படுவோம்'' என்றும் கூறுகின்றனர். (வேதத்தில் இவர்கள் புரட்டியதை தொடர்ந்து முன்பு போல் புரட்டுவதற்காக) இதேபோன்ற அற்பப் பொருள்கள் பின்னரும் அவர்களிடம் வரும் சமயத்தில் அதையும் பெற்றுக்கொள்வார்கள். அவர்கள் அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறு எதையும்) கூறக்கூடாது என்று (அவர்களுடைய) வேதத்தின் மூலம் அவர்களிடம் உறுதிமொழி வாங்கப்படவில்லையா? அதை அவர்களும் படித்து (அறிந்து வைத்து)ள்ளனர். (எனினும் அதிலுள்ளவற்றைப் பொருட்படுத்துவது இல்லை.) இறையச்சமுடையவர்களுக்கு மறுமையின் வீடே மிக மேலானது. (யூதர்களே! இவ்வளவு கூட) நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டாமா?
-
7:170
وَٱلَّذِينَ يُمَسِّكُونَ بِٱلْكِتَـٰبِ وَأَقَامُوا۟ ٱلصَّلَوٰةَ إِنَّا لَا نُضِيعُ أَجْرَ ٱلْمُصْلِحِينَ
Wallaẓeena yumassikoona bil-Kitaabi wa-ʹaq̣aamuṣ Ṣalaata ʹinnaa laa- nuḍeeʻu ʹajral Muṣliḥeen.
எவர்கள் இவ்வேதத்தை(ச் சிறிதும் மாற்றாது) பலமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டு தொழுகையையும் கடைப்பிடித்து நிறைவேற்றி வருகிறார்களோ அத்தகைய சீர்திருத்தவாதிகளான நல்லவர்களின் கூலியை நிச்சயமாக நாம் வீணாக்குவதில்லை.
-
7:171
۞ وَإِذْ نَتَقْنَا ٱلْجَبَلَ فَوْقَهُمْ كَأَنَّهُۥ ظُلَّةٌ وَظَنُّوٓا۟ أَنَّهُۥ وَاقِعٌۢ بِهِمْ خُذُوا۟ مَآ ءَاتَيْنَـٰكُم بِقُوَّةٍ وَٱذْكُرُوا۟ مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ
Wa-ʹiẓ nataq̣nal Jabala fawq̣ahum kaʹannahoo z̤̣ullatuñw waz̤̣annooo ʹannahoo waaq̣iʻum bihim: khuẓoo maaa ʹaataynaakum̃ biq̣uwwatiñw waẓkuroo maa- feehi laʻallakum tattaq̣oon.
தங்கள் மீது விழுந்து விடுமென்று அவர்கள் எண்ணக்கூடியவாறு (சீனாய்) மலையை அவர்களுக்கு மேல் முகட்டைப்போல் நிறுத்தி (அவர்களை நோக்கி) ‘‘நாம் உங்களுக்குக் கொடுத்த (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; அதிலுள்ளவற்றை (எப்பொழுதும்) கவனத்தில் வையுங்கள்; (அதனால்) நீங்கள் இறையச்சமுடையவர்களாகி விடலாம்'' (என்று நாம் அவர்களுக்குக் கூறியதை நபியே!) நீர் அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக.
-
7:172
وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنۢ بَنِىٓ ءَادَمَ مِن ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَىٰٓ أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ ۖ قَالُوا۟ بَلَىٰ ۛ شَهِدْنَآ ۛ أَن تَقُولُوا۟ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ إِنَّا كُنَّا عَنْ هَـٰذَا غَـٰفِلِينَ
Wa-ʹiẓ akhaẓa Rabbuka mim Baneee ʹaadama miñ z̤̣uhoorihim ẓurriyyatahum wa-ʹashhadahum ʻalaaa ʹañfusihim: ʹAlastu bi-Rabbikum? Q̣aaloo Balaa shahidnaa! ʹAñ taq̣ooloo Yawmal Q̣iyaamati ʹinnaa kunnaa ʻan haaẓaa g̣aafileen:
(நபியே!) உமது இறைவன் ஆதமுடைய மக்களை அவர்களுடைய (தந்தைகளின்) முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளாக வெளியாக்கி, அவர்களையே அவர்களுக்கு சாட்சியாகவும் வைத்து (அவர்களை நோக்கி) ‘‘நான் உங்கள் இறைவனாக இல்லையா?'' என்று கேட்டதற்கு, ‘‘ஏன் இல்லை (நீதான் எங்கள் இறைவன்! என்று) நாங்கள் சாட்சி கூறுகிறோம்'' என்று அவர்கள் கூறியதை (நீர்அவர்களுக்கு) ஞாபக மூட்டுவீராக. ஏனென்றால் (இதை ஒருவரும் எங்களுக்கு ஞாபகமூட்டாததால்) நிச்சயமாக நாங்கள் இதை (மறந்து) விட்டுப் பராமுகமாகி இருந்தோம்'' என்று மறுமை நாளில் சொல்லாமல் இருப்பதற்காகவும்,
-
7:173
أَوْ تَقُولُوٓا۟ إِنَّمَآ أَشْرَكَ ءَابَآؤُنَا مِن قَبْلُ وَكُنَّا ذُرِّيَّةً مِّنۢ بَعْدِهِمْ ۖ أَفَتُهْلِكُنَا بِمَا فَعَلَ ٱلْمُبْطِلُونَ
ʹAw taq̣oolooo ʹinnamaaa ʹashraka ʹaabaaaʹunaa miñ q̣ablu wa-kunnaa ẓurriyyatam mim baʻdihim: ʹa-fa-tuhlikunaa bimaa faʻalal mubṭiloon.
அல்லது (பொய்யான தெய்வங்களை) இணையாக்கியதெல்லாம் (நாங்களல்ல;) எங்களுக்கு முன் சென்றுபோன எங்கள் மூதாதைகள்தான். நாங்களோ அவர்களுக்குப் பின்னர் வந்த அவர்களுடைய சந்ததிகள். ஆகவே, (அவர்களை நாங்கள் பின்பற்றினோம்.) அவர்கள் செய்த தகாத காரியங்களுக்காக நீ எங்களை அழித்து விடலாமா?'' என்று கூறாதிருப்பதற்காகவே (இதை நாம் ஞாபக மூட்டுகிறோம் என்று நபியே! நீர் கூறுவீராக.)
-
7:174
وَكَذَٰلِكَ نُفَصِّلُ ٱلْـَٔايَـٰتِ وَلَعَلَّهُمْ يَرْجِعُونَ
Wa-kaẓaalika nufaṣṣilul ʹAayaati wa-laʻallahum yarjiʻoon.
அவர்கள் (பாவங்களிலிருந்து) மீள்வதற்காக (நம்) வசனங்களை இவ்வாறு (தெளிவாக) விவரித்துக் கூறுகிறோம்.
-
7:175
وَٱتْلُ عَلَيْهِمْ نَبَأَ ٱلَّذِىٓ ءَاتَيْنَـٰهُ ءَايَـٰتِنَا فَٱنسَلَخَ مِنْهَا فَأَتْبَعَهُ ٱلشَّيْطَـٰنُ فَكَانَ مِنَ ٱلْغَاوِينَ
Watlu ʻalayhim naba ʹallaẓeee ʹaataynaahu ʹaayaatinaa fañsalakha minhaa faʹatba ʻahush-Shayṭaanu fakaana minal g̣aaween.
(நபியே!) நீர் அவர்களுக்கு (‘பல்ஆம் இப்னு பாஊர்' என்னும்) ஒருவனுடைய சரித்திரத்தை ஓதிக் காண்பிப்பீராக. அவனுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்(து கண்ணியமாக்கி வைத்)திருந்தோம். எனினும் அவன் ‘‘(பாம்பு தன் சட்டையை விட்டு வெளியேறுவதைப் போல) அதிலிருந்து முற்றிலும் வெளியேறிவிட்டான். ஆகவே, ஷைத்தான் அவனைப் பின்தொடர்ந்து சென்றான்; (அவனுடைய சூழ்ச்சிக்குள் சிக்கி) அவன் வழிதவறி விட்டான்.
-
7:176
وَلَوْ شِئْنَا لَرَفَعْنَـٰهُ بِهَا وَلَـٰكِنَّهُۥٓ أَخْلَدَ إِلَى ٱلْأَرْضِ وَٱتَّبَعَ هَوَىٰهُ ۚ فَمَثَلُهُۥ كَمَثَلِ ٱلْكَلْبِ إِن تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ أَوْ تَتْرُكْهُ يَلْهَث ۚ ذَّٰلِكَ مَثَلُ ٱلْقَوْمِ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَا ۚ فَٱقْصُصِ ٱلْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ
Wa-law shiʹnaa larafaʻnaahu bihaa walaakinnahooo ʹakhlada ʹilal ʹarḍi wattabaʻa hawaah. Famas̤aluhoo kamas̤alil kalb: ʹiñ taḥmil ʻalayhi yalhas̤ ʹaw tatrukhu yalhas̤. Ẓaalika mas̤alul q̣awmil laẓeena kaẓẓaboo biʹAayaatinaa. Faq̣ṣuṣil q̣aṣaṣa laʻallahum yatafakkaroon.
நாம் எண்ணியிருந்தால் (நம்) அத்தாட்சிகளின் காரணமாக அவனை நாம் உயர்த்தியிருப்போம். எனினும், அவன் இவ்வுலக வாழ்க்கையை நிரந்தரம் என எண்ணி தன் (சரீர) இச்சையைப் பின்பற்றிவிட்டான். அவனுடைய உதாரணம் ஒரு நாயின் உதாரணத்தை ஒத்திருக்கிறது. நீங்கள் அதைத் துரத்தினாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொள்கிறது. அதை(த் துரத்தாது) விட்டுவிட்டாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொள்கிறது. இதுவே, நம் வசனங்களைப் பொய்யாக்கும் (மற்ற) மக்களுக்கும் உதாரணமாகும். ஆகவே, அவர்கள் சிந்தித்து நல்லுணர்ச்சி பெறுவதற்காக இச்சரித்திரத்தை (அடிக்கடி) ஓதிக் காண்பியுங்கள்.
-
7:177
سَآءَ مَثَلًا ٱلْقَوْمُ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَا وَأَنفُسَهُمْ كَانُوا۟ يَظْلِمُونَ
Saaaʹa mas̤alanil q̣awmul laẓeena kaẓẓaboo biʹAayaatinaa wa-ʹañfusahum kaanoo yaz̤̣limoon.
நம் வசனங்களைப் பொய்யாக்கிய மக்களின் இவ்வுதாரணம் மிகக் கேவலமானது; அவர்கள் தங்களுக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.
-
7:178
مَن يَهْدِ ٱللَّهُ فَهُوَ ٱلْمُهْتَدِى ۖ وَمَن يُضْلِلْ فَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْخَـٰسِرُونَ
Mañy yahdil laahu fahuwal muhtadee: wa-mañy yuḍlil faʹulaaaʹika humul khaasiroon.
அல்லாஹ் எவர்களை நேரான வழியில் செலுத்துகிறானோ அவர்களே நேரான வழியை அடைந்தவர்கள்; எவர்களைத் தவறான வழியில் விட்டுவிட்டானோ அவர்கள் முற்றிலும் நஷ்டமடைந்தவர்களே!
-
7:179
وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِّنَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ ۖ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ ءَاذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَآ ۚ أُو۟لَـٰٓئِكَ كَٱلْأَنْعَـٰمِ بَلْ هُمْ أَضَلُّ ۚ أُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْغَـٰفِلُونَ
Wa-laq̣ad ẓaraʹnaa lijahannama kas̤eeram minal jinni wal-ʹiñs: lahum q̣uloobul laa yafq̣ahoona bihaa, wa-lahum ʹaʻyunul laa yubṣiroona bihaa, wa-lahum ʹaaẓaanul laa yasmaʻoona bihaa. ʹUlaaaʹika kal-ʹanʻaami bal hum ʹaḍall: ʹulaaaʹika humul g̣aafiloon.
நிச்சயமாக மனிதர்களிலும், ஜின்களிலும் பலரை நரகத்திற்காகவே நாம் படைத்திருக்கிறோம். (அவர்கள் எத்தகையவர்கள் என்றால்) அவர்களுக்கு உள்ளங்கள் இருக்கின்றன; எனினும் அவற்றைக் கொண்டு (நல்லுபதேசங்களை) அவர்கள் உணர்ந்துகொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு கண்களுமுண்டு; எனினும், அவற்றைக்கொண்டு (இவ்வுலகிலுள்ள இறைவனின் அத்தாட்சிகளை) அவர்கள் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு செவிகளுமுண்டு; எனினும், அவற்றைக் கொண்டு அவர்கள் (நல்லுபதேசங்களுக்கு) செவிசாய்க்க மாட்டார்கள். இவர்கள் மிருகங்களைப் போல் அல்லது அவற்றைவிட அதிகமாக வழி கெட்டவர்களாகவே இருக்கின்றனர். இவர்கள்தான் (நம் வசனங்களை) அலட்சியம் செய்தவர்கள் ஆவார்.
-
7:180
وَلِلَّهِ ٱلْأَسْمَآءُ ٱلْحُسْنَىٰ فَٱدْعُوهُ بِهَا ۖ وَذَرُوا۟ ٱلَّذِينَ يُلْحِدُونَ فِىٓ أَسْمَـٰٓئِهِۦ ۚ سَيُجْزَوْنَ مَا كَانُوا۟ يَعْمَلُونَ
Wa-lillaahil ʹAsmaaaʹul Ḥusnaa fadʻoohu bihaa. Waẓarul laẓeena yulḥidoona feee ʹAsmaaaʹih: sayujzawna maa- kaanoo yaʻmaloon.
அல்லாஹ்வுக்கு மிக அழகான திருப்பெயர்கள் இருக்கின்றன. ஆகவே, அவற்றைக் கொண்டே நீங்கள் அவனை அழையுங்கள். (அவனிடம் துஆ கேளுங்கள்.) அவனுடைய திருப்பெயர்களில் தவறிழைப்பவர்களை நீங்கள் விட்டு விடுங்கள்; இவர்கள் தங்கள் செயலுக்குத் தக்க கூலியை விரைவில் கொடுக்கப்படுவார்கள்.
-
7:181
وَمِمَّنْ خَلَقْنَآ أُمَّةٌ يَهْدُونَ بِٱلْحَقِّ وَبِهِۦ يَعْدِلُونَ
Wa-mimman khalaq̣naaa ʹummatuñy yahdoona bilḥaq̣q̣i wa-bihee yaʻdiloon.
நாம் படைத்தவர்களில் சிலருண்டு; அவர்கள் சத்திய வழியை(ப் பின்பற்றுவதுடன், மற்ற மக்களுக்கும்) அறிவித்து அதைக் கொண்டே நீதியும் செய்கின்றனர்.
-
7:182
وَٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَا سَنَسْتَدْرِجُهُم مِّنْ حَيْثُ لَا يَعْلَمُونَ
Wallaẓeena kaẓẓaboo biʹAayaatinaa sanastadrijuhum min ḥays̤u laa- yaʻlamoon.
எவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ அவர்களை அவர்கள் உணர்ந்துகொள்ளாத விதத்தில் நாம் படிப்படியாக (கீழ் நிலைக்கு இறக்கி நரகத்திலும்) புகுத்தி விடுவோம்.
-
7:183
وَأُمْلِى لَهُمْ ۚ إِنَّ كَيْدِى مَتِينٌ
Wa-ʹumlee lahum: ʹinna kaydee mateen.
(இவ்வுலகில்) நான் அவர்களுக்கு (நீண்ட) அவகாசம் அளிக்கிறேன். நிச்சயமாக என் சூழ்ச்சி (திட்டம்) மிக்க உறுதியானது; (தப்பிக்க முடியாதது.)
-
7:184
أَوَلَمْ يَتَفَكَّرُوا۟ ۗ مَا بِصَاحِبِهِم مِّن جِنَّةٍ ۚ إِنْ هُوَ إِلَّا نَذِيرٌ مُّبِينٌ
ʹAwalam yatafakkaroo, Maa- bi-Ṣaaḥibihim miñ jinnah; ʹin huwa ʹillaa naẓeerum mubeen.
(நம் தூதராகிய) அவர்களுடைய (இத்)தோழருக்கு எவ்வித பைத்தியமும் இல்லை என்பதை அவர்கள் சிந்தித்து உணர்ந்து கொள்ள வேண்டாமா? அவர் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றவரே அன்றி வேறில்லை.
-
7:185
أَوَلَمْ يَنظُرُوا۟ فِى مَلَكُوتِ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا خَلَقَ ٱللَّهُ مِن شَىْءٍ وَأَنْ عَسَىٰٓ أَن يَكُونَ قَدِ ٱقْتَرَبَ أَجَلُهُمْ ۖ فَبِأَىِّ حَدِيثٍۭ بَعْدَهُۥ يُؤْمِنُونَ
ʹAwalam yañz̤̣uroo fee Malakootis samaawaati wal-ʹarḍi wa-maa khalaq̣al laahu miñ shayʹiñw waʹan ʻasaaa ʹañy yakoona q̣adiq̣ taraba ʹajaluhum? fabiʹayyi Ḥadees̤im baʻdahoo yuʹminoon?
வானங்கள், பூமியினுடைய ஆட்சியையும் அல்லாஹ் படைத்திருக்கும் மற்ற பொருள்களையும் அவர்கள் பார்க்கவில்லையா? அவர்களுடைய (மரண) தவணை நெருங்கி இருக்கக் கூடும் என்பதையும் (அவர்கள் எண்ணவில்லையா?) இவ்வேதத்திற்குப் பின்னர் எதைத்தான் அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்.
-
7:186
مَن يُضْلِلِ ٱللَّهُ فَلَا هَادِىَ لَهُۥ ۚ وَيَذَرُهُمْ فِى طُغْيَـٰنِهِمْ يَعْمَهُونَ
Mañy yuḍlilil laahu falaa haadiya lah: wa-yaẓaruhum fee ṭug̣yaanihim yaʻmahoon.
எவர்களை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விடுகிறானோ அவர்களை நேரான வழியில் செலுத்த ஒருவராலும் முடியாது; அவர்கள் தங்கள் வழிகேட்டிலேயே தட்டழி(ந்து கெட்டலை)யும்படி விட்டுவிடுகிறான்.
-
7:187
يَسْـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرْسَىٰهَا ۖ قُلْ إِنَّمَا عِلْمُهَا عِندَ رَبِّى ۖ لَا يُجَلِّيهَا لِوَقْتِهَآ إِلَّا هُوَ ۚ ثَقُلَتْ فِى ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ لَا تَأْتِيكُمْ إِلَّا بَغْتَةً ۗ يَسْـَٔلُونَكَ كَأَنَّكَ حَفِىٌّ عَنْهَا ۖ قُلْ إِنَّمَا عِلْمُهَا عِندَ ٱللَّهِ وَلَـٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ
Yasʹaloonaka ʻanis Saaʻati ʹayyaana mursaahaa? Q̣ul ʹinnamaa ʻilmuhaa ʻiñda Rabbee. Laa- yujalleehaa liwaq̣tihaaa ʹillaa Hoo. S̤aq̣ulat fis samaawaati wal-ʹarḍ. Laa- taʹteekum ʹillaa bag̣tah. Yasʹaloonaka kaʹannaka ḥafiyyun ʻanhaa. Q̣ul ʹinnamaa ʻilmuhaa ʻiñdal laahi wa-laakinna ʹaks̤aran naasi laa- yaʻlamoon.
(நபியே!) இறுதி நாளைப் பற்றி - அது எப்பொழுது வரும் என அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘அதன் அறிவு என் இறைவனிடத்தில்தான் இருக்கிறது. அது வரும் நேரத்தை அவனைத் தவிர மற்றெவரும் தெளிவாக்க முடியாது. (அது சமயம்) வானங்களிலும் பூமியிலும் மகத்தான சம்பவங்கள் நிகழும். திடீரென்றே தவிர (அது) உங்களிடம் வராது. அதை முற்றிலும் அறிந்து கொண்டவராக உம்மை அவர்கள் எண்ணி, (அதைப் பற்றி) உம்மிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘அதன் அறிவு அல்லாஹ்விடத்தில்தான் இருக்கிறது; மனிதரில் பெரும்பாலானவர்கள் இதை அறிய மாட்டார்கள்.''
-
7:188
قُل لَّآ أَمْلِكُ لِنَفْسِى نَفْعًا وَلَا ضَرًّا إِلَّا مَا شَآءَ ٱللَّهُ ۚ وَلَوْ كُنتُ أَعْلَمُ ٱلْغَيْبَ لَٱسْتَكْثَرْتُ مِنَ ٱلْخَيْرِ وَمَا مَسَّنِىَ ٱلسُّوٓءُ ۚ إِنْ أَنَا۠ إِلَّا نَذِيرٌ وَبَشِيرٌ لِّقَوْمٍ يُؤْمِنُونَ
Q̣ul laaa ʹamliku linafsee nafʻañw walaa ḍarran ʹillaa maa- shaaaʹal laah. Wa-law kuñtu ʹaʻlamul g̣ayba lastaks̤artu minal khayri wa-maa massaniyas soooʹ. ʹIn ʹana ʹillaa naẓeeruñw wabasheerul liq̣awmiñy yuʹminoon.
(மேலும்,) நீர் கூறுவீராக: ‘‘அல்லாஹ் நாடினாலே தவிர நான் எனக்கு ஒரு நன்மையையோ தீமையையோ செய்து கொள்ள சக்தி பெறமாட்டேன். நான் மறைவானவற்றை அறியக்கூடுமாயின் நன்மைகளையே அதிகமாகத் தேடிக் கொண்டிருப்பேன்; ஒரு தீங்குமே என்னை அணுகி இருக்காது. நான் (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நம்பிக்கை கொள்பவர்களுக்கு நற்செய்தி கூறுபவனுமே தவிர வேறில்லை.''
-
7:189
۞ هُوَ ٱلَّذِى خَلَقَكُم مِّن نَّفْسٍ وَٰحِدَةٍ وَجَعَلَ مِنْهَا زَوْجَهَا لِيَسْكُنَ إِلَيْهَا ۖ فَلَمَّا تَغَشَّىٰهَا حَمَلَتْ حَمْلًا خَفِيفًا فَمَرَّتْ بِهِۦ ۖ فَلَمَّآ أَثْقَلَت دَّعَوَا ٱللَّهَ رَبَّهُمَا لَئِنْ ءَاتَيْتَنَا صَـٰلِحًا لَّنَكُونَنَّ مِنَ ٱلشَّـٰكِرِينَ
Huwal laẓee khalaq̣akum min nafsiñw waaḥidatiñw wajaʻala minhaa zawjahaa liyaskuna ʹilayhaa. Falammaa tag̣ashshaahaa ḥamalat ḥamlan khafeefañ famarrat bih. Falammaaa ʹas̤q̣alad daʻawal laaha Rabbahumaa laʹin ʹaataytanaa ṣaaliḥal lanakoonanna minash Shaakireen.
ஒரே மனிதரிலிருந்து உங்களை படைத்தவன் அவன்தான்; அவருடன் (சுகமாகக்) கூடி வசிப்பதற்காக அவருடைய மனைவியை அவரிலிருந்தே உற்பத்தி செய்தான். அவளை அவர் (தன் தேகத்தைக் கொண்டு) மூடிக் கொண்டபோது அவள் இலேசான கர்ப்பமானாள். பின்னர் அதை(ச் சுமந்து) கொண்டு திரிந்தாள். அவள் சுமை பளுவாகவே ‘‘எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நல்லதொரு சந்ததியை அளித்தால் நிச்சயமாக நாங்கள் உனக்கு நன்றி செலுத்திக் கொண்டிருப்போம்'' என்று அவ்விருவரும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்.
-
7:190
فَلَمَّآ ءَاتَىٰهُمَا صَـٰلِحًا جَعَلَا لَهُۥ شُرَكَآءَ فِيمَآ ءَاتَىٰهُمَا ۚ فَتَعَـٰلَى ٱللَّهُ عَمَّا يُشْرِكُونَ
Falammaaa ʹaataahumaa ṣaaliḥañ jaʻalaa lahoo shurakaaaʹa feemaaa ʹaataahumaa. Fataʻaalal laahu ʻammaa yushrikoon.
(அவர்கள் பிரார்த்தனையின்படி) அவர்களுக்கு (இறைவன்) நல்லதோர் சந்ததியை அளித்தாலோ அதை அவர்களுக்கு அளித்ததில் (அவர்களுடைய தெய்வங்களும் துணையாய் இருந்தன என அவற்றை இறைவனுக்குக்) கூட்டாக்குகின்றனர். (அவர்கள் கூறும்) இணை துணைகளிலிருந்து அல்லாஹ் மிக உயர்ந்தவன்.
-
7:191
أَيُشْرِكُونَ مَا لَا يَخْلُقُ شَيْـًٔا وَهُمْ يُخْلَقُونَ
ʹA-yushrikoona Maa laa- yakhluq̣u shayʹañw wahum yukhlaq̣oon?
ஒரு பொருளையும் படைக்க சக்தியற்றவற்றை அவர்கள் (அவனுக்கு) இணையாக்குகின்றனரா? அவையோ (அவனால்) படைக்கப்பட்டவைதான்.
-
7:192
وَلَا يَسْتَطِيعُونَ لَهُمْ نَصْرًا وَلَآ أَنفُسَهُمْ يَنصُرُونَ
Wa-laa yastaṭeeʻoona lahum naṣrañw walaaa ʹañfusahum yañṣuroon.
அவை இவர்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்தியற்றவையாக இருப்பதுடன், தங்களுக்குத்தாமே ஏதும் உதவி செய்துகொள்ளவும் சக்தியற்றவையாக இருக்கின்றன.
-
7:193
وَإِن تَدْعُوهُمْ إِلَى ٱلْهُدَىٰ لَا يَتَّبِعُوكُمْ ۚ سَوَآءٌ عَلَيْكُمْ أَدَعَوْتُمُوهُمْ أَمْ أَنتُمْ صَـٰمِتُونَ
Wa-ʹiñ tadʻoohum ʹilal hudaa laa- yattabiʻookum. Sawaaaʹun ʻalaykum ʹa-daʻawtumoohum ʹam ʹañtum ṣaamitoon.
நீங்கள் அவற்றை நேரான வழிக்கு அழைத்தபோதிலும் உங்களை அவை பின்பற்றாது. நீங்கள் அவற்றை அழைப்பதும் அல்லது அழைக்காது வாய்மூடிக் கொண்டிருப்பதும் சமமே.
-
7:194
إِنَّ ٱلَّذِينَ تَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ عِبَادٌ أَمْثَالُكُمْ ۖ فَٱدْعُوهُمْ فَلْيَسْتَجِيبُوا۟ لَكُمْ إِن كُنتُمْ صَـٰدِقِينَ
ʹInnal laẓeena tadʻoona miñ doonil laahi ʻibaadun ʹams̤aalukum fadʻoohum fal-yastajeeboo lakum ʹiñ kuñtum ṣaadiq̣een!
நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர எவர்களை நீங்கள் (இறைவனென) அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடியார்களே! (உங்கள் கோரிக்கைகளை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள் என்று கூறுவதில்) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் அவர்களை நீங்கள் அழையுங்கள்; உங்களுக்கு அவர்கள் பதிலளிக்கட்டும்!
-
7:195
أَلَهُمْ أَرْجُلٌ يَمْشُونَ بِهَآ ۖ أَمْ لَهُمْ أَيْدٍ يَبْطِشُونَ بِهَآ ۖ أَمْ لَهُمْ أَعْيُنٌ يُبْصِرُونَ بِهَآ ۖ أَمْ لَهُمْ ءَاذَانٌ يَسْمَعُونَ بِهَا ۗ قُلِ ٱدْعُوا۟ شُرَكَآءَكُمْ ثُمَّ كِيدُونِ فَلَا تُنظِرُونِ
ʹAlahum ʹarjuluñy yamshoona bihaaa ʹam lahum ʹaydiñy yabṭishoona bihaaa ʹam lahum ʹaʻyunuñy yubṣiroona bihaaa ʹam lahum ʹaaẓaanuñy yasmaʻoona bihaa? Q̣ulid ʻoo shurakaaaʹakum s̤umma keedooni falaa tuñz̤̣iroon.
(சிலை வணங்கிகளே! நீங்கள் வணங்கும்) அவற்றுக்குக் கால்கள் இருக்கின்றனவே; அவற்றைக் கொண்டு நடக்கின்றனவா? அவற்றுக்குக் கைகள் இருக்கின்றனவே; அவற்றைக் கொண்டு பிடிக்கின்றனவா? அவற்றுக்குக் கண்கள் இருக்கின்றனவே; அவற்றைக் கொண்டு பார்க்கின்றனவா? அவற்றுக்குக் காதுகள் இருக்கின்றனவே; அவற்றைக் கொண்டு கேட்கின்றனவா? (அவ்வாறாயின்) ‘‘நீங்கள் இணைவைத்து வணங்கும் (அத்)தெய்வங்களை (உங்களுக்கு உதவியாக) அழைத்துக் கொண்டு (நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எனக்கு ஒரு இடையூறை உண்டுபண்ண) எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள். (இதில்) நீங்கள் சிறிதும் எனக்கு அவகாசம் அளிக்க வேண்டாம்'' என்று (நபியே!) நீர் கூறுவீராக.
-
7:196
إِنَّ وَلِـِّۧىَ ٱللَّهُ ٱلَّذِى نَزَّلَ ٱلْكِتَـٰبَ ۖ وَهُوَ يَتَوَلَّى ٱلصَّـٰلِحِينَ
ʹInna Waliyyal laahul laẓee nazzalal Kitaaba wa-Huwa yatawallaṣ Ṣaaliḥeen.
‘‘நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்தான்; அவனே இவ்வேதத்தை இறக்கினான். அவனே நல்லடியார்களை பாதுகாக்கிறான்.
-
7:197
وَٱلَّذِينَ تَدْعُونَ مِن دُونِهِۦ لَا يَسْتَطِيعُونَ نَصْرَكُمْ وَلَآ أَنفُسَهُمْ يَنصُرُونَ
Wallaẓeena tadʻoona miñ doonihee laa- yastaṭeeʻoona naṣrakum wa-laaa ʹañfusahum yañṣuroon.
ஆகவே, (இணைவைத்து வணங்குபவர்களே!) அல்லாஹ்வைத் தவிர எவற்றை (இறைவனென) நீங்கள் அழைக்கிறீர்களோ அவை உங்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்தியற்றவையாக இருப்பதுடன், தமக்குத்தாமே உதவி செய்து கொள்ளவும் சக்தியற்றவையாக இருக்கின்றன.
-
7:198
وَإِن تَدْعُوهُمْ إِلَى ٱلْهُدَىٰ لَا يَسْمَعُوا۟ ۖ وَتَرَىٰهُمْ يَنظُرُونَ إِلَيْكَ وَهُمْ لَا يُبْصِرُونَ
Wa-ʹiñ tadʻoohum ʹilal hudaa laa- yasmaʻoo. Wa-taraahum yañz̤̣uroona ʹilayka Wahum laa- yubṣiroon.
நீங்கள் அவற்றை நேரான பாதையில் அழைத்த போதிலும் (நீங்கள் கூறுவதை) அவை செவியுறாது. (நபியே!) அவை உம்மைப் பார்ப்பதைப்போல உமக்குத் தோன்றுகிறது. உண்மையில் அவை (உம்மைப்) பார்ப்பதே இல்லை.
-
7:199
خُذِ ٱلْعَفْوَ وَأْمُرْ بِٱلْعُرْفِ وَأَعْرِضْ عَنِ ٱلْجَـٰهِلِينَ
Khuẓil ʻafwa waʹmur bilʻurfi wa-ʹaʻriḍ ʻanil jaahileen.
(நபியே!) இவ்வறிவீனர்(களின் செயல்)களை நீர் மன்னித்துப் புறக்கணித்து விட்டு (பொறுமையையும் கைக்கொண்டு, மற்றவர்களை) நன்மை (செய்யும்படி) ஏவி வருவீராக.
-
7:200
وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ ٱلشَّيْطَـٰنِ نَزْغٌ فَٱسْتَعِذْ بِٱللَّهِ ۚ إِنَّهُۥ سَمِيعٌ عَلِيمٌ
Wa-ʹimmaa yañzag̣annaka minash Shayṭaani nazg̣uñ fastaʻiẓ billaah; ʹinnahoo Sameeʻun ʻAleem.
ஷைத்தான் ஒரு (தவறான) எண்ணத்தை உமது மனதில் ஊசலாடச் செய்து (தகாததொரு காரியத்தைச் செய்யும்படி உம்மைத் தூண்டினால் உடனே நீர் உம்மை காப்பாற்றும்படி அல்லாஹ்விடம் கோருவீராக. நிச்சயமாக அவன் நன்கு செவியுறுபவன், (அனைத்தையும்) நன்கறிந்தவன்.
-
7:201
إِنَّ ٱلَّذِينَ ٱتَّقَوْا۟ إِذَا مَسَّهُمْ طَـٰٓئِفٌ مِّنَ ٱلشَّيْطَـٰنِ تَذَكَّرُوا۟ فَإِذَا هُم مُّبْصِرُونَ
ʹInnal laẓeenat taq̣aw ʹiẓaa massahum ṭaaaʹifum minash Shayṭaani taẓakkaroo faʹiẓaa hum mubṣiroon!
நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானுடைய (தவறான) எண்ணம் ஊசலாடினால் அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கிறார்கள்; அது சமயம் அவர்களுடைய (அறிவுக்) கண் திறந்து விழிப்படைந்து விடுகிறார்கள்.
-
7:202
وَإِخْوَٰنُهُمْ يَمُدُّونَهُمْ فِى ٱلْغَىِّ ثُمَّ لَا يُقْصِرُونَ
Wa-ʹikhwaanuhum yamuddoonahum fil g̣ayyi s̤umma laa- yuq̣ṣiroon.
எனினும் ஷைத்தானுடைய சகோதரர்களோ அவர்களை வழி கேட்டிலேயே இழுத்துச் செல்வார்கள். (அவர்களுக்குத் தீங்கிழைப்பதில்) ஒரு குறைவும் செய்வதில்லை.
-
7:203
وَإِذَا لَمْ تَأْتِهِم بِـَٔايَةٍ قَالُوا۟ لَوْلَا ٱجْتَبَيْتَهَا ۚ قُلْ إِنَّمَآ أَتَّبِعُ مَا يُوحَىٰٓ إِلَىَّ مِن رَّبِّى ۚ هَـٰذَا بَصَآئِرُ مِن رَّبِّكُمْ وَهُدًى وَرَحْمَةٌ لِّقَوْمٍ يُؤْمِنُونَ
Wa-ʹiẓaa lam taʹtihim̃ biʹAayatiñ q̣aaloo law-laj tabaytahaa? Q̣ul ʹinnamaaa ʹattabiʻu maa- yooḥaaa ʹilayya mir Rabbee. Haaẓaa Baṣaaaʹiru mir Rabbikum wa-Hudañw wa-Raḥmatul liq̣awmiñy yuʹminoon.
(அவர்கள் விருப்பப்படி) ஒரு வசனத்தை நீர் அவர்களிடம் கொண்டு வராவிட்டால் (அதற்குப் பதிலாகத் தங்கள் விருப்பப்படி கற்பனையாக ஒரு வசனத்தை அமைத்து) ‘‘இதை நீர் வசனமாக எடுத்துக்கொள்ள வேண்டாமா?'' என்று (பரிகாசமாகக்) கூறுகின்றனர். அதற்கு (நபியே!) நீர் கூறுவீராக: ‘‘என் இறைவனால் எனக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டவற்றையே நான் பின்பற்றுகிறேன். இதுவோ உங்கள் இறைவனால் (உங்களுக்கு) அளிக்கப்பட்ட நல்லறிவாகவும், நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நேர்வழியாகவும், (இறைவனின்) அருளாகவும் இருக்கிறது.
-
7:204
وَإِذَا قُرِئَ ٱلْقُرْءَانُ فَٱسْتَمِعُوا۟ لَهُۥ وَأَنصِتُوا۟ لَعَلَّكُمْ تُرْحَمُونَ
Wa-ʹiẓaa q̣uriʹal Q̣urʹaanu fastamiʻoo lahoo wa-añṣitoo laʻallakum turḥamoon.
(மனிதர்களே!) திரு குர்ஆன் ஓதப்பட்டால் வாய்மூடி, செவிதாழ்த்தி அதைக் கேளுங்கள். (அதனால்) நீங்கள் (இறைவனின்) அருளை அடைவீர்கள்.
-
7:205
وَٱذْكُر رَّبَّكَ فِى نَفْسِكَ تَضَرُّعًا وَخِيفَةً وَدُونَ ٱلْجَهْرِ مِنَ ٱلْقَوْلِ بِٱلْغُدُوِّ وَٱلْـَٔاصَالِ وَلَا تَكُن مِّنَ ٱلْغَـٰفِلِينَ
Waẓkur Rabbaka fee nafsika taḍarruʻañw wakheefatañw wadoonal jahri minal q̣awli bilg̣uduwwi wal-ʹaaṣaali wa-laa takum minal g̣aafileen.
(நபியே!) உமது மனதிற்குள் மிகப் பணிவோடு, உரத்த சப்தமின்றி பயத்தோடு, மெதுவாக காலையிலும், மாலையிலும் உமது இறைவனை நினைவு செய்து கொண்டிருப்பீராக! அவனை மறந்தவர்களில் நீர் ஆகிவிடாதீர்!
-
7:206
إِنَّ ٱلَّذِينَ عِندَ رَبِّكَ لَا يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِهِۦ وَيُسَبِّحُونَهُۥ وَلَهُۥ يَسْجُدُونَ ۩
ʹInnal laẓeena ʻiñda Rabbika laa- yastakbiroona ʻan ʻibaadatihee wa-yusabbiḥoonahoo wa-lahoo yasjudoon,
எவர்கள் நிச்சயமாக உமது இறைவனிடத்தில் இருக்கிறார்களோ அவர்கள் (வானவர்கள்) இறுமாப்பு கொண்டு அவனை வணங்காதிருப்பதில்லை. எனினும் ‘‘(நீ மிகப் பரிசுத்தமானவன்; நீ மிகப் பரிசுத்தமானவன்'' என்று) அவனை (எப்பொழுதும்) நினைவு செய்து கொண்டும், அவனுக்கு சிரம் பணிந்து (வணங்கிக்) கொண்டும் இருக்கின்றனர்.
Surah Al-AnfalBegins here at 8:1
-
8:1
يَسْـَٔلُونَكَ عَنِ ٱلْأَنفَالِ ۖ قُلِ ٱلْأَنفَالُ لِلَّهِ وَٱلرَّسُولِ ۖ فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَصْلِحُوا۟ ذَاتَ بَيْنِكُمْ ۖ وَأَطِيعُوا۟ ٱللَّهَ وَرَسُولَهُۥٓ إِن كُنتُم مُّؤْمِنِينَ
Yasʹaloonaka ʻanil ʹAÑ-FAAL. Q̣ulil ʹAñfaalu lillaahi war-Rasool: Fattaq̣ul laaha wa-ʹaṣliḥoo ẓaata baynikum: wa-ʹaṭeeʻul laaha wa-Rasoolahooo ʹiñ kuñtum Muʹmineen.
(நபியே!) ‘அன்ஃபால்' (என்னும் போரில் கிடைத்த பொருள்களைப்) பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘அன்ஃபால்' அல்லாஹ்வுக்கும், (அல்லாஹ்வுடைய) தூதருக்கும் சொந்தமானது. ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து (அதில் எதையும் மறைத்துக் கொள்ளாது) உங்களுக்கிடையில் ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள். உண்மையாகவே நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடங்கள்.
-
8:2
إِنَّمَا ٱلْمُؤْمِنُونَ ٱلَّذِينَ إِذَا ذُكِرَ ٱللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ ءَايَـٰتُهُۥ زَادَتْهُمْ إِيمَـٰنًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
ʹInnamal Muʹminoonal laẓeena ʹizaa ẓukiral laahu wajilat q̣uloobuhum wa-ʹiẓaa tuliyat ʻalayhim ʹAayaatuhoo zaadathum ʹeemaanañw Waʻalaa Rabbihim yatawakkaloon;
உண்மையான நம்பிக்கையாளர்கள் யாரென்றால், அல்லாஹ்வை (அவர்கள் முன்) நினைவு கூறப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் பயந்து நடுங்கிவிடும்; அல்லாஹ்வுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய நம்பிக்கை (மென்மேலும்,) அதிகரிக்கும். அவர்கள் தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பார்கள்.
-
8:3
ٱلَّذِينَ يُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَمِمَّا رَزَقْنَـٰهُمْ يُنفِقُونَ
ʹAllaẓeena yuq̣eemoonaṣ Ṣalaata wa-mimmaa razaq̣naahum yuñfiq̣oon:
அவர்கள் தொழுகையையும் கடைப்பிடிப்பார்கள்; நாம் அவர்களுக்குக் கொடுத்த பொருள்களிலிருந்து (தானமாக) செலவும் செய்வார்கள்.
-
8:4
أُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْمُؤْمِنُونَ حَقًّا ۚ لَّهُمْ دَرَجَـٰتٌ عِندَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ
ʹUlaaaʹika humul Muʹminoona ḥaq̣q̣aa; lahum darajaatun ʻiñda Rabbihim wa-mag̣firatuñw warizq̣uñ kareem.
இவர்கள்தான் உண்மையான நம்பிக்கையாளர்கள். அவர்களுக்கு அவர்கள் இறைவனிடத்தில் பல உயர் பதவிகளும் மன்னிப்பும் உண்டு; இன்னும், கண்ணியமான உணவும் உண்டு.
-
8:5
كَمَآ أَخْرَجَكَ رَبُّكَ مِنۢ بَيْتِكَ بِٱلْحَقِّ وَإِنَّ فَرِيقًا مِّنَ ٱلْمُؤْمِنِينَ لَكَـٰرِهُونَ
Kamaaa ʹakhrajaka Rabbuka mim baytika bilḥaq̣q̣i wa-ʹinna fareeq̣am minal Muʹmineena lakaarihoon,
(நபியே!) உமது இறைவன் உமது இல்லத்திலிருந்து சத்தியத்தைக் கொண்டு உம்மை வெளியேற்றிய சமயத்தில் நம்பிக்கையாளர்களில் ஒரு கூட்டத்தினர் (உம்முடன் வர) விரும்பாதவாறே,
-
8:6
يُجَـٰدِلُونَكَ فِى ٱلْحَقِّ بَعْدَ مَا تَبَيَّنَ كَأَنَّمَا يُسَاقُونَ إِلَى ٱلْمَوْتِ وَهُمْ يَنظُرُونَ
Yujaadiloonaka fil Ḥaq̣q̣i baʻdamaa- tabayyana kaʹannamaa yusaaq̣oona ʹilal mawti wa-hum yañz̤̣uroon.
(போர் செய்வது அவசியம் என) அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்த பின்னரும் இவ்வுண்மை விஷயத்திலும் அவர்கள் உம்முடன் தர்க்கிக்கின்றனர். தங்கள் கண்களால் காணும் மரணத்தின் பக்கமே அவர்கள் ஓட்டிச் செல்லப்படுகின்றனர் போலும்!
-
8:7
وَإِذْ يَعِدُكُمُ ٱللَّهُ إِحْدَى ٱلطَّآئِفَتَيْنِ أَنَّهَا لَكُمْ وَتَوَدُّونَ أَنَّ غَيْرَ ذَاتِ ٱلشَّوْكَةِ تَكُونُ لَكُمْ وَيُرِيدُ ٱللَّهُ أَن يُحِقَّ ٱلْحَقَّ بِكَلِمَـٰتِهِۦ وَيَقْطَعَ دَابِرَ ٱلْكَـٰفِرِينَ
Wa-ʹiẓ yaʻidukumul laahu ʹiḥdaṭ ṭaaaʹifatayni ʹannahaa lakum wa-tawaddoona ʹanna g̣ayra ẓaatish shawkati takoonu lakum wa-yureedul laahu ʹañy yuḥiq̣q̣al Ḥaq̣q̣a bi-Kalimaatihee wa-yaq̣ṭaʻa daabiral kaafireen;―
(எதிரிகளின்) இரு கூட்டங்களில் ஒன்று, நிச்சயமாக உங்களுக்குக் கிடைத்து விடுமென்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்த சமயத்தில் நீங்கள் (அவ்விரண்டில்) பலமில்லாத (வர்த்தகக்) கூட்டத்தை (அடைய) விரும்பினீர்கள். எனினும், அல்லாஹ்வோ தன் வாக்கின்படி உண்மையை நிலைநாட்டி நிராகரிப்பவர்களின் வேரை அறுத்து விடவே நாடினான்.
-
8:8
لِيُحِقَّ ٱلْحَقَّ وَيُبْطِلَ ٱلْبَـٰطِلَ وَلَوْ كَرِهَ ٱلْمُجْرِمُونَ
Liyuḥiq̣q̣al Ḥaq̣q̣a wa-yubṭilal Baaṭila wa-law karihal mujrimoon.
பாவிகள் வெறுத்தபோதிலும் இறுதியில் பொய்யை அழித்து உண்மையை நிலை நாட்(டவே நா)டினான்.
-
8:9
إِذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَٱسْتَجَابَ لَكُمْ أَنِّى مُمِدُّكُم بِأَلْفٍ مِّنَ ٱلْمَلَـٰٓئِكَةِ مُرْدِفِينَ
ʹIẓ tastag̣ees̤oona Rabbakum fastajaaba lakum ʹannee mumiddukum̃ biʹalfim minal malaaaʹikati murdifeen.
(உங்களை) பாதுகாக்குமாறு நீங்கள் உங்கள் இறைவனிடம் கோரியபோது ‘‘அணியணியாக உங்களைப் பின்பற்றி வரக்கூடிய ஆயிரம் வானவர்களைக் கொண்டு நிச்சயமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன்'' என்று அவன் உங்களுக்குப் பதிலளித்தான்.
-
8:10
وَمَا جَعَلَهُ ٱللَّهُ إِلَّا بُشْرَىٰ وَلِتَطْمَئِنَّ بِهِۦ قُلُوبُكُمْ ۚ وَمَا ٱلنَّصْرُ إِلَّا مِنْ عِندِ ٱللَّهِ ۚ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٌ
Wa-maa jaʻalahul laahu ʹillaa bushraa wa-litaṭmaʹinna bihee q̣uloobukum. Wa-man naṣru ʹillaa min ʻiñdil laah: ʹinnal laaha ʻAzeezun Ḥakeem.
உங்கள் உள்ளங்கள் இதன் மூலம் திருப்தியடைவதற்காக ஒரு நற்செய்தியாகவே இதை அல்லாஹ் (உங்களுக்கு) ஆக்கி வைத்தான். அல்லாஹ்விடம் இருந்தே தவிர (உங்களுக்கு) இவ்வுதவி கிடைத்து விடவில்லை. நிச்சயமாக அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவன் ஞானமுடையவன் ஆவான்.
-
8:11
إِذْ يُغَشِّيكُمُ ٱلنُّعَاسَ أَمَنَةً مِّنْهُ وَيُنَزِّلُ عَلَيْكُم مِّنَ ٱلسَّمَآءِ مَآءً لِّيُطَهِّرَكُم بِهِۦ وَيُذْهِبَ عَنكُمْ رِجْزَ ٱلشَّيْطَـٰنِ وَلِيَرْبِطَ عَلَىٰ قُلُوبِكُمْ وَيُثَبِّتَ بِهِ ٱلْأَقْدَامَ
ʹIẓ yug̣ashsheekumun nuʻaasa ʹamanatam minhu wa-yunazzilu ʻalaykum minas samaaaʹi maaaʹal liyuṭahhirakum̃ bihee wa-yuẓhiba ʻañkum rijzash Shayṭaani wa-liyarbiṭa ʻalaa q̣uloobikum wa-yus̤abbita bihil ʹaq̣daam.
(நம்பிக்கையாளர்களே! உங்கள் மனம்) சாந்தியடைந்தவர்களாக, சிறியதொரு நித்திரை உங்களை சூழ்ந்து கொள்ளும்படி (இறைவன்) செய்ததை நினைத்துப் பாருங்கள்! அன்றி (அது சமயம்) உங்கள் தேகத்தை நீங்கள் சுத்தப்படுத்திக் கொள்வதற்காகவும், உங்களை விட்டு ஷைத்தானுடைய அசுத்தத்தைப் போக்கி விடுவதற்காகவும், உங்கள் உள்ளங்களை பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும் (அவனே) வானத்திலிருந்து மழையை பொழியச் செய்தான்.
-
8:12
إِذْ يُوحِى رَبُّكَ إِلَى ٱلْمَلَـٰٓئِكَةِ أَنِّى مَعَكُمْ فَثَبِّتُوا۟ ٱلَّذِينَ ءَامَنُوا۟ ۚ سَأُلْقِى فِى قُلُوبِ ٱلَّذِينَ كَفَرُوا۟ ٱلرُّعْبَ فَٱضْرِبُوا۟ فَوْقَ ٱلْأَعْنَاقِ وَٱضْرِبُوا۟ مِنْهُمْ كُلَّ بَنَانٍ
ʹIẓ yooḥee Rabbuka ʹilal malaaaʹikati ʹannee maʻakum fas̤abbitul laẓeena ʹaamanoo. Saʹulq̣ee fee q̣uloobil laẓeena kafarur ruʻba faḍriboo fawq̣al ʹaʻnaaq̣i waḍriboo minhum kulla banaan.
(நபியே!) உமது இறைவன் வானவர்களை நோக்கி ‘‘நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். ஆகவே, நீங்கள் நம்பிக்கையாளர்களை உறுதிப்படுத்துங்கள்; (என்று கட்டளையிட்டு) நிராகரிப்பவர்களுடைய உள்ளங்களில் நான் திகிலை உண்டு பண்ணுவேன் (என்று கூறி, நம்பிக்கையாளர்களை நோக்கி) நீங்கள் அவர்களுடைய பிடரிகளின் மேல் வெட்டுங்கள். அவர்களை கணுக்கணுவாகத் துண்டித்து விடுங்கள்'' என்று அறிவித்ததை நினைத்துப் பாருங்கள்.
-
8:13
ذَٰلِكَ بِأَنَّهُمْ شَآقُّوا۟ ٱللَّهَ وَرَسُولَهُۥ ۚ وَمَن يُشَاقِقِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَإِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلْعِقَابِ
Ẓaalika biʹannahum shaaaq̣q̣ul laaha wa-Rasoolah: wa-mañy yushaaq̣iq̣il laaha wa-Rasoolahoo faʹinnal laaha shadeedul ʻiq̣aab.
இதற்குக் காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்ததுதான். ஆகவே, எவரேனும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறுசெய்தால் நிச்சயமாக அல்லாஹ் (அவர்களை) மிகக் கடுமையாகவே வேதனை செய்வான்.
-
8:14
ذَٰلِكُمْ فَذُوقُوهُ وَأَنَّ لِلْكَـٰفِرِينَ عَذَابَ ٱلنَّارِ
Ẓaalikum faẓooq̣oohu wa-ʹanna lilkaafireena ʻaẓaaban Naar.
(நிராகரிப்பவர்களே! நீங்கள் அடையப்போகும் வேதனை) இதோ! இதை நீங்கள் சுவைத்துப் பாருங்கள். அன்றி (உங்களைப் போன்ற) நிராகரிப்பவர்களுக்கு (மறுமையில்) நிச்சயமாக நரக வேதனையும் உண்டு.
-
8:15
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا لَقِيتُمُ ٱلَّذِينَ كَفَرُوا۟ زَحْفًا فَلَا تُوَلُّوهُمُ ٱلْأَدْبَارَ
Yaaaʹayyuhal laẓeena ʹaamanooo ʹiẓaa laq̣eetumul laẓeena kafaroo zaḥfañ falaa tuwalloohumul ʹadbaar.
நம்பிக்கையாளர்களே! நீங்கள் நிராகரிப்பவர்களின் படையைச் சந்தித்தால் அவர்களுக்குப் புறங்காட்(டி ஓடிவி)டாதீர்கள்.
-
8:16
وَمَن يُوَلِّهِمْ يَوْمَئِذٍ دُبُرَهُۥٓ إِلَّا مُتَحَرِّفًا لِّقِتَالٍ أَوْ مُتَحَيِّزًا إِلَىٰ فِئَةٍ فَقَدْ بَآءَ بِغَضَبٍ مِّنَ ٱللَّهِ وَمَأْوَىٰهُ جَهَنَّمُ ۖ وَبِئْسَ ٱلْمَصِيرُ
Wa-mañy yuwallihim yawmaʹiẓiñ duburahooo ʹillaa mutaḥarrifal liq̣itaalin ʹaw mutaḥayyizan ʹilaa fiʹatiñ faq̣ad baaaʹa big̣aḍabim minal laahi wa-maʹwaahu Jahannam,― wa-biʹsal maṣeer!
(எதிரியை) வெட்டுவதற்காகவோ அல்லது (தன்) கூட்டத்துடன் சேர்ந்து கொள்வதற்காகவோ தவிர, எவரேனும் அதுசமயம் புறங்காட்(டி ஓ)டினால் நிச்சயமாக அவன் அல்லாஹ்வுடைய கோபத்திற்குள்ளாகி விடுவான். அவன் தங்குமிடம் நரகம்தான்; அது மிகக்கெட்ட தங்குமிடம்.
-
8:17
فَلَمْ تَقْتُلُوهُمْ وَلَـٰكِنَّ ٱللَّهَ قَتَلَهُمْ ۚ وَمَا رَمَيْتَ إِذْ رَمَيْتَ وَلَـٰكِنَّ ٱللَّهَ رَمَىٰ ۚ وَلِيُبْلِىَ ٱلْمُؤْمِنِينَ مِنْهُ بَلَآءً حَسَنًا ۚ إِنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٌ
Falam taq̣tuloohum wa-laakinnal laaha q̣atalahum. Wa-maa ramayta ʹiẓ ramayta wa-laakinnal laaha ramaa: wa-liyubliyal Muʹmineena minhu balaaaʹan ḥasanaa: ʹinnal laaha Sameeʻun ʻAleem.
(நம்பிக்கையாளர்களே! போர் புரிந்த சமயம்) நீங்கள் அவர்களைக் கொன்று விடவில்லை; அல்லாஹ்தான் அவர்களை கொன்றான். (நபியே! எதிரிகளின் மீது) நீங்கள் (மண்ணை) எறிந்தபோது (அதை) நீங்கள் எறியவில்லை; அல்லாஹ்தான் (அதை) எறிந்தான். நம்பிக்கையாளர்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்தான்.) நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், மிக அறிந்தவன் ஆவான்.
-
8:18
ذَٰلِكُمْ وَأَنَّ ٱللَّهَ مُوهِنُ كَيْدِ ٱلْكَـٰفِرِينَ
Ẓaalikum wa-ʹannal laaha moohinu kaydil kaafireen.
நிராகரிப்பவர்களின் சூழ்ச்சியை (இழிவுபடுத்தி) பலவீனப்படுத்துவதற்காகவே நிச்சயமாக அல்லாஹ் இவ்வாறு செய்தான்.
-
8:19
إِن تَسْتَفْتِحُوا۟ فَقَدْ جَآءَكُمُ ٱلْفَتْحُ ۖ وَإِن تَنتَهُوا۟ فَهُوَ خَيْرٌ لَّكُمْ ۖ وَإِن تَعُودُوا۟ نَعُدْ وَلَن تُغْنِىَ عَنكُمْ فِئَتُكُمْ شَيْـًٔا وَلَوْ كَثُرَتْ وَأَنَّ ٱللَّهَ مَعَ ٱلْمُؤْمِنِينَ
ʹIñ tastaftiḥoo faq̣ad jaaaʹakumul fatḥ. Wa-ʹiñ tañtahoo fahuwa khayrul lakum. Wa-ʹiñ taʻoodoo naʻud. Wa-lañ tug̣niya ʻañkum fiʹatukum shayʹañw walaw kas̤urat wa-ʹannal laaha maʻal Muʹmineen!
(நிராகரிப்பாளர்களே!) நீங்கள் வெற்றியின் மூலம் (முடிவான) தீர்ப்பைத் தேடிக் கொண்டிருந்தீர்கள். நிச்சயமாக அந்த வெற்றி உங்கள் முன் வந்துவிட்டது. (எனினும் அது உங்களுக்கல்ல; நம்பிக்கையாளர்களாகிய எங்களுக்கே! நாங்கள்தான் உங்களை வெற்றி கொண்டோம். ஆகவே, விஷமம் செய்வதிலிருந்து) இனியேனும் நீங்கள் விலகிக்கொண்டால் அது உங்களுக்கே நன்று. இனியும் நீங்கள் (விஷமம் செய்ய) முன் வரும்பட்சத்தில் நாமும் முன் வருவோம். உங்கள் கூட்டம் எவ்வளவு பெரிதாக இருந்த போதிலும் (அது) உங்களுக்கு ஒரு பலனையுமளிக்காது. ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களுடன் இருக்கிறான்.
-
8:20
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَطِيعُوا۟ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَلَا تَوَلَّوْا۟ عَنْهُ وَأَنتُمْ تَسْمَعُونَ
Yaaaʹayyuhaal laẓeena ʹaamanooo ʹaṭeeʻul laaha wa-Rasoolahoo wa-laa tawallaw ʻanhu wa-ʹañtum tasmaʻoon.
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். நீங்கள் (நம் வசனங்களை) செவியுற்ற பின் அதற்குக் கீழ்ப்படிவதிலிருந்து விலகாதீர்கள்.
-
8:21
وَلَا تَكُونُوا۟ كَٱلَّذِينَ قَالُوا۟ سَمِعْنَا وَهُمْ لَا يَسْمَعُونَ
Wa-laa takoonoo kallaẓeena q̣aaloo samiʻnaa wahum laa- yasmaʻoon:
(நம்பிக்கையாளர்களே! மனமாற) செவியுறாது ‘‘செவியுற்றோம்'' என்று (வாயால் மட்டும்) கூறியவர்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம்.
-
8:22
۞ إِنَّ شَرَّ ٱلدَّوَآبِّ عِندَ ٱللَّهِ ٱلصُّمُّ ٱلْبُكْمُ ٱلَّذِينَ لَا يَعْقِلُونَ
ʹInna sharrad dawaaabbi ʻiñdal laahiṣ ṣummul bukmul laẓeena laa- yaʻq̣iloon.
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் கால்நடைகளில் மிகக் கேவலமானவை (எவையென்றால் சத்தியத்தை) அறிந்துகொள்ள முடியாத செவிடர்களும், ஊமையர்களும்தான்.
-
8:23
وَلَوْ عَلِمَ ٱللَّهُ فِيهِمْ خَيْرًا لَّأَسْمَعَهُمْ ۖ وَلَوْ أَسْمَعَهُمْ لَتَوَلَّوا۟ وَّهُم مُّعْرِضُونَ
Wa-law ʻalimal laahu feehim khayral laʹasmaʻahum: wa-law ʹasmaʻahum latawallaw wahum muʻriḍoon.
அவர்களிடம் ஒரு நன்மை இருக்கிறதென்று அல்லாஹ் அறிந்திருந்தால் அவன் அவர்களை செவியுறச் செய்திருப்பான். (அவர்களிடம் ஒரு நன்மையும் இல்லாததனால் அல்லாஹ்) அவர்களைச் செவியுறச் செய்தபோதிலும் அவர்கள் புறக்கணித்து மாறிவிடுவார்கள்.
-
8:24
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱسْتَجِيبُوا۟ لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيكُمْ ۖ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ يَحُولُ بَيْنَ ٱلْمَرْءِ وَقَلْبِهِۦ وَأَنَّهُۥٓ إِلَيْهِ تُحْشَرُونَ
Yaaaʹayyuhal laẓeena ʹaamanus tajeeboo lillaahi wa-lir-Rasooli ʹiẓaa daʻaakum limaa yuḥyeekum: waʻlamooo ʹannal laaha yaḥoolu baynal marʹi wa-q̣albihee wa-ʹannahooo ʹilayhi tuḥsharoon.
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வும், (அவனுடைய) தூதரும் உங்களுக்குப் புத்துயிர் அளிக்க உங்களை அழைத்தால் (அவர்களுடைய அழைப்புக்குப்) பதில் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மனிதனுக்கும் அவனுடைய உள்ளங்களில் உள்ளதற்கும் இடையில் தடையேற்படுத்தி விடுகிறான் என்பதையும், நிச்சயமாக நீங்கள் அவனிடமே (கொண்டு வரப்பட்டு) ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.
-
8:25
وَٱتَّقُوا۟ فِتْنَةً لَّا تُصِيبَنَّ ٱلَّذِينَ ظَلَمُوا۟ مِنكُمْ خَآصَّةً ۖ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلْعِقَابِ
Wattaq̣oo fitnatal laa tuṣeebannal laẓeena z̤̣alamoo miñkum khaaaṣṣah: waʻlamooo ʹannal laaha shadeedul ʻiq̣aab.
நீங்கள் ஒரு வேதனையை பயந்துகொள்ளுங்கள். அது உங்களில் அநியாயக் காரர்களை மட்டுமே பிடிக்குமென்பதல்ல; (முடிவில் அது உங்களையும் சூழ்ந்து கொள்ளலாம்.) நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் கடுமையானவன் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.
-
8:26
وَٱذْكُرُوٓا۟ إِذْ أَنتُمْ قَلِيلٌ مُّسْتَضْعَفُونَ فِى ٱلْأَرْضِ تَخَافُونَ أَن يَتَخَطَّفَكُمُ ٱلنَّاسُ فَـَٔاوَىٰكُمْ وَأَيَّدَكُم بِنَصْرِهِۦ وَرَزَقَكُم مِّنَ ٱلطَّيِّبَـٰتِ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
Waẓkurooo ʹiẓ ʹañtum q̣aleelum mustaḍʻafoona fil ʹarḍi takhaafoona ʹañy yatakhaṭṭafakumun naasu faʹaawaakum wa-ʹayyadakum̃ binaṣrihee wa-razaq̣akum minaṭ ṭayyibaati laʻallakum tashkuroon.
நீங்கள் பூமியில் (மக்காவில்) வலுவிழந்த வெகு குறைந்த தொகையினராக இருந்து உங்களை எம்மனிதரும் (எந்நேரத்திலும் பலவந்தமாக) திடீரென தாக்கிவிடுவார்களோ என்று நீங்கள் அஞ்சி (நடுங்கி)க் கொண்டிருந்த சமயத்தில் அவன் உங்களுக்கு (மதீனாவில்) இடமளித்துத் தன் உதவியைக் கொண்டு உங்களைப் பலப்படுத்தி நல்ல உணவுகளை உங்களுக்கு அளித்ததையும் நினைத்துப் பாருங்கள். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!
-
8:27
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَخُونُوا۟ ٱللَّهَ وَٱلرَّسُولَ وَتَخُونُوٓا۟ أَمَـٰنَـٰتِكُمْ وَأَنتُمْ تَعْلَمُونَ
Yaaaʹayyuhal laẓeena ʹaamanoo laa- takhoonul laaha war-Rasoola wa-takhoonooo ʹamaanaatikum wa-ʹañtum taʻlamoon.
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் மோசம் செய்யாதீர்கள். தவிர, நீங்கள் (செய்வது அநியாயம் என) அறிந்து கொண்டே உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களுக்கு மோசம் செய்யாதீர்கள்.
-
8:28
وَٱعْلَمُوٓا۟ أَنَّمَآ أَمْوَٰلُكُمْ وَأَوْلَـٰدُكُمْ فِتْنَةٌ وَأَنَّ ٱللَّهَ عِندَهُۥٓ أَجْرٌ عَظِيمٌ
Waʻlamooo ʹannamaaa ʹamwaalukum wa-ʹawlaadukum fitnatuñw waʹannal laaha ʻiñdahooo ʹajrun ʻaz̤̣eem.
மேலும், உங்கள் பொருள்களும், உங்கள் சந்ததிகளும் (உங்களுக்குப்) பெரும் சோதனையாக இருக்கின்றன என்பதையும், நிச்சயமாக அல்லாஹ்விடத்தில்தான் (உங்களுக்கு) மகத்தான வெகுமதி உண்டு என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.
-
8:29
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِن تَتَّقُوا۟ ٱللَّهَ يَجْعَل لَّكُمْ فُرْقَانًا وَيُكَفِّرْ عَنكُمْ سَيِّـَٔاتِكُمْ وَيَغْفِرْ لَكُمْ ۗ وَٱللَّهُ ذُو ٱلْفَضْلِ ٱلْعَظِيمِ
Yaaaʹayyuhal laẓeena ʹaamanooo ʹiñ tattaq̣ul laaha yajʻal lakum Furq̣aanañw Wayukaffir ʻañkum sayyiʹaatikum wa-yag̣fir lakum. Wallaahu Ẓul Faḍlil ʻaz̤̣eem.
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயப்படுவீர்களாயின், அவன் உங்களுக்குக் கண்ணியத்தை அளிப்பான். மேலும், உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னித்து விடுவான். ஏனென்றால், அல்லாஹ் மிக மகத்தான அருளுடையவன் ஆவான்.
-
8:30
وَإِذْ يَمْكُرُ بِكَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ ۚ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ ٱللَّهُ ۖ وَٱللَّهُ خَيْرُ ٱلْمَـٰكِرِينَ
Wa-ʹiẓ yamkuru bikal laẓeena kafaroo liyus̤bitooka ʹaw yaq̣tulooka ʹaw yukhrijook. Wa-yamkuroona wa-yamkurul laah: wallaahu Khayrul maakireen.
(நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) அப்புறப்படுத்தவோ நிராகரிப்பவர்கள் சூழ்ச்சி செய்துகொண்டிருந்த (நேரத்)தை நினைத்துப் பார்ப்பீராக. அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; (அவர்களுக் கெதிராக) அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். ஆனால், சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் அல்லாஹ் மிக மேலானவன்.
-
8:31
وَإِذَا تُتْلَىٰ عَلَيْهِمْ ءَايَـٰتُنَا قَالُوا۟ قَدْ سَمِعْنَا لَوْ نَشَآءُ لَقُلْنَا مِثْلَ هَـٰذَآ ۙ إِنْ هَـٰذَآ إِلَّآ أَسَـٰطِيرُ ٱلْأَوَّلِينَ
Wa-ʹiẓaa tutlaa ʻalayhim ʹAayaatunaa q̣aaloo q̣ad samiʻnaa law nashaaaʹu laq̣ulnaa mis̤la haaẓaaa ʹin haaẓaaa ʹillaaa ʹasaaṭeerul ʹawwaleen.
நம் வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படுமானால் அதற்கவர்கள், ‘‘நிச்சயமாக நாம் (இதை முன்னரே) செவியுற்றுள்ளோம்; நாம் விரும்பினால் இம்மாதிரியான வசனங்களை நாமும் கூறுவோம். இவை முன்னோரின் கட்டுக்கதைகளே தவிர வேறில்லை'' என்று கூறுகின்றனர்.
-
8:32
وَإِذْ قَالُوا۟ ٱللَّهُمَّ إِن كَانَ هَـٰذَا هُوَ ٱلْحَقَّ مِنْ عِندِكَ فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِّنَ ٱلسَّمَآءِ أَوِ ٱئْتِنَا بِعَذَابٍ أَلِيمٍ
Wa-ʹiẓ q̣aalul laahumma ʹiñ kaana haaẓaa huwal Ḥaq̣q̣a min ʻiñdika faʹamṭir ʻalaynaa ḥijaaratam minas samaaaʹi ʹawiʹ tinaa biʻaẓaabin ʹaleem.
மேலும், (அந்நிராகரிப்பவர்கள்) ''எங்கள் அல்லாஹ்வே! இவ்வேதம் உன்னிடமிருந்து வந்தது உண்மையானால் எங்கள்மீது வானத்திலிருந்து கல்மாரியைப் பொழி! அல்லது துன்புறுத்தும் ஒரு வேதனையை எங்களுக்குக் கொண்டுவா!'' என்று அவர்கள் கூறியதையும் (நபியே!) நீர் நினைத்துப் பார்ப்பீராக.
-
8:33
وَمَا كَانَ ٱللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنتَ فِيهِمْ ۚ وَمَا كَانَ ٱللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ
Wa-maa kaanal laahu liyuʻaẓẓibahum wa-ʹañta feehim; wa-maa kaanal laahu muʻaẓẓibahum wa-hum yastag̣firoon.
ஆனால், நீர் அவர்களுக்கிடையில் இருக்கும் வரை அல்லாஹ் அவர்களை வேதனை செய்ய மாட்டான். மேலும், அவர்கள் மன்னிப்பைக் கோரிக்கொண்டிருக்கும் வரையிலும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்யமாட்டான்.
-
8:34
وَمَا لَهُمْ أَلَّا يُعَذِّبَهُمُ ٱللَّهُ وَهُمْ يَصُدُّونَ عَنِ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ وَمَا كَانُوٓا۟ أَوْلِيَآءَهُۥٓ ۚ إِنْ أَوْلِيَآؤُهُۥٓ إِلَّا ٱلْمُتَّقُونَ وَلَـٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ
Wa-maa lahum ʹallaa yuʻaẓẓibahumul laahu wa-hum yaṣuddoona ʻanil Masjidil Ḥaraami wa-maa kaanooo ʹawliyaaaʹah? ʹIn ʹawliyaaaʹuhooo ʹillal Muttaq̣oona walaakinna ʹaks̤arahum laa- yaʻlamoon.
(இவ்விரு காரணங்களும் இல்லாதிருப்பின்) அல்லாஹ் அவர்களை வேதனை செய்யாமலிருப்பதற்கு என்ன (தடை) இருக்கிறது? ஏனென்றால், அவர்களோ சிறப்புற்ற மஸ்ஜிதுக்கு (மக்கள்) செல்வதைத் தடுக்கின்றனர். அவர்கள் அதற்கு பொறுப்பாளர்களல்ல. இறையச்சமுடையவர்களைத் தவிர வேறு எவரும் அதன் பொறுப்பாளர்களாக இருக்கமுடியாது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிய மாட்டார்கள்.
-
8:35
وَمَا كَانَ صَلَاتُهُمْ عِندَ ٱلْبَيْتِ إِلَّا مُكَآءً وَتَصْدِيَةً ۚ فَذُوقُوا۟ ٱلْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْفُرُونَ
Wa-maa kaana ṣalaatuhum ʻiñdal Bayti ʹillaa mukaaaʹañw wataṣdiyah: faẓooq̣ul ʻaẓaaba bimaa kuñtum takfuroon.
அந்த அல்லாஹ்வின் வீட்டில் அவர்கள் புரியும் வணக்கமெல்லாம் சீட்டியடிப்பதும், கைதட்டுவதும் தவிர வேறில்லை! (ஆகவே, மறுமையில்) ‘‘உங்கள் நிராகரிப்பின் காரணமாக (இன்றைய தினம்) வேதனையை சுவைத்துப் பாருங்கள்'' (என்றே கூறப்படும்.)
-
8:36
إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ يُنفِقُونَ أَمْوَٰلَهُمْ لِيَصُدُّوا۟ عَن سَبِيلِ ٱللَّهِ ۚ فَسَيُنفِقُونَهَا ثُمَّ تَكُونُ عَلَيْهِمْ حَسْرَةً ثُمَّ يُغْلَبُونَ ۗ وَٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِلَىٰ جَهَنَّمَ يُحْشَرُونَ
ʹInnal laẓeena kafaroo yuñfiq̣oona ʹamwaalahum liyaṣuddoo ʻañ Sabeelil laah. Fasayuñfiq̣oonahaa s̤umma takoonu ʻalayhim ḥasratañ s̤umma yug̣laboon. Wal-laẓeena kafarooo ʹilaa Jahannama yuḥsharoon.
நிச்சயமாக, நிராகரிப்பவர்கள் தங்கள் பொருள்களை (மக்கள்) அல்லாஹ்வுடைய வழியில் செல்வதைத் தடை செய்ய செலவு செய்கின்றனர். அவர்கள் மேலும், இவ்வாறே செலவு செய்வார்கள், முடிவில் அது அவர்களுக்கே துக்கமாக ஏற்பட்டுவிடும்! பின்னர் அவர்கள் தோற்கடிக்கப்பட்டு வெற்றி கொள்ளப்படுவார்கள். (இப்படிப்பட்ட) நிராகரிப்பவர்கள் (மறுமையில்) நரகத்தின் பக்கமே ஓட்டிச் செல்லப்படுவார்கள்.
-
8:37
لِيَمِيزَ ٱللَّهُ ٱلْخَبِيثَ مِنَ ٱلطَّيِّبِ وَيَجْعَلَ ٱلْخَبِيثَ بَعْضَهُۥ عَلَىٰ بَعْضٍ فَيَرْكُمَهُۥ جَمِيعًا فَيَجْعَلَهُۥ فِى جَهَنَّمَ ۚ أُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْخَـٰسِرُونَ
Liyameezal laahul khabees̤a minaṭ ṭayyibi wa-yajʻalal khabees̤a baʻḍahoo ʻalaa baʻḍiñ fayarkumahoo jameeʻañ fayajʻalahoo fee jahannam. ʹUlaaaʹika humul khaasiroon.
அல்லாஹ் நல்லவர்களிலிருந்து கெட்டவர்களைப் பிரித்தெடுப்பதற்காகவும்; கெட்டவர்கள் ஒருவர் மீது ஒருவராக அடுக்கப்பட்டு ஒன்றாகக் குவிக்கப்பட்ட பின்னர் நரகத்தில் தூக்கி எறியப்படுவதற்காகவும் (இவ்வாறு செய்கிறான்.) இவர்கள்தான் முற்றிலும் நஷ்டமடைந்தவர்கள்.
-
8:38
قُل لِّلَّذِينَ كَفَرُوٓا۟ إِن يَنتَهُوا۟ يُغْفَرْ لَهُم مَّا قَدْ سَلَفَ وَإِن يَعُودُوا۟ فَقَدْ مَضَتْ سُنَّتُ ٱلْأَوَّلِينَ
Q̣ul lillaẓeena kafarooo ʹiñy yañtahoo yug̣far lahum maa q̣ad salaf; wa-ʹiñy yaʻoodoo faq̣ad maḍat Sunnatul ʹawwaleen.
(நபியே!) நிராகரிப்பவர்களுக்கு நீர் கூறுவீராக: இனியேனும் அவர்கள் (விஷமம் செய்யாது) விலகிக் கொண்டால் (அவர்களுடைய) முந்திய குற்றங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படும். (அவ்வாறில்லாமல் விஷமம் செய்யவே) முன் வருவார்களாயின் முன் சென்(ற இவர்கள் போன்)றவர்களின் வழி ஏற்பட்டே இருக்கிறது. (அவர்களுக்கு ஏற்பட்ட கதிதான் இவர்களுக்கும் ஏற்படும்.)
-
8:39
وَقَـٰتِلُوهُمْ حَتَّىٰ لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ ٱلدِّينُ كُلُّهُۥ لِلَّهِ ۚ فَإِنِ ٱنتَهَوْا۟ فَإِنَّ ٱللَّهَ بِمَا يَعْمَلُونَ بَصِيرٌ
Wa-q̣aatiloohum ḥattaa laa- takoona fitnatuñw wayakoonad Deenu kulluhoo lillaah; faʹiniñ tahaw faʹinnal laaha bimaa yaʻmaloona Baṣeer.
(நம்பிக்கையாளர்களே! இந்நிராகரிப்பவர்களின்) விஷமத்தனம் முற்றிலும் நீங்கி, அல்லாஹ்வுடைய மார்க்கம் முழுமையாக நிலைபெறும் வரை (மக்காவாசிகளாகிய நிராகரிக்கும்) இவர்களுடன் போர் புரியுங்கள். (விஷமம் செய்வதிலிருந்து) அவர்கள் விலகிக்கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்குகிறான்.
-
8:40
وَإِن تَوَلَّوْا۟ فَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ مَوْلَىٰكُمْ ۚ نِعْمَ ٱلْمَوْلَىٰ وَنِعْمَ ٱلنَّصِيرُ
Wa-ʹin tawallaw faʻlamooo ʹannal laaha Mawlaakum― Niʻmal Mawlaa wa-Niʻman Naṣeer.
(இதற்கு) அவர்கள் மாறு செய்தால் நிச்சயமாக அல்லாஹ் உங்கள் பாதுகாவலன் (பொறுப்பாளன்) என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். அவன் சிறந்த பாதுகாவலன்; அவன் சிறந்த உதவியாளன்.