Surah Al-Ma'idahBegins here at 5:82
-
5:82
۞ لَتَجِدَنَّ أَشَدَّ ٱلنَّاسِ عَدَٰوَةً لِّلَّذِينَ ءَامَنُوا۟ ٱلْيَهُودَ وَٱلَّذِينَ أَشْرَكُوا۟ ۖ وَلَتَجِدَنَّ أَقْرَبَهُم مَّوَدَّةً لِّلَّذِينَ ءَامَنُوا۟ ٱلَّذِينَ قَالُوٓا۟ إِنَّا نَصَـٰرَىٰ ۚ ذَٰلِكَ بِأَنَّ مِنْهُمْ قِسِّيسِينَ وَرُهْبَانًا وَأَنَّهُمْ لَا يَسْتَكْبِرُونَ
Latajidanna ʹashaddan naasi ʻadaawatal lillaẓeena ʹaamanul Yahooda wallaẓeena ʹashrakoo: wa-latajidanna ʹaq̣rabahum mawaddatal lil-laẓeena ʹaamanul laẓeena q̣aalooo innaa Naṣaaraa: ẓaalika biʹanna minhum Q̣isseeseena Wa-Ruhbaanañw Waʹannahum laa- yastakbiroon.
(நபியே!) யூதர்களும், இணைவைத்து வணங்குபவர்களும் நம்பிக்கையாளர்களுக்கு மனிதர்கள் அனைவரிலும் கொடிய எதிரிகளாக இருப்பதை நிச்சயமாக நீர் காண்பீர்! எவர்கள் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறுகின்றனரோ அவர்களை நம்பிக்கையாளர்களுக்கு (மற்றவர்களை விட) நட்பில் மிக நெருங்கியவர்களாக நீர் காண்பீர்! ஏனென்றால், அவர்களில் (கற்றறிந்த) குருக்களும், துறவிகளும் இருக்கின்றனர். மேலும், நிச்சயமாக அவர்கள் இறுமாப்பு கொள்வதுமில்லை.
-
5:83
وَإِذَا سَمِعُوا۟ مَآ أُنزِلَ إِلَى ٱلرَّسُولِ تَرَىٰٓ أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ ٱلدَّمْعِ مِمَّا عَرَفُوا۟ مِنَ ٱلْحَقِّ ۖ يَقُولُونَ رَبَّنَآ ءَامَنَّا فَٱكْتُبْنَا مَعَ ٱلشَّـٰهِدِينَ
Wa-ʹiẓaa samiʻoo maaa ʹuñzila ʹilar Rasooli taraaa ʹaʻyunahum tafeeḍu minad damʻi mimmaa ʻarafoo minal ḥaq̣q̣. Yaq̣ooloona Rabbanaaa ʹaamannaa faktubnaa maʻash shaahideen.
தவிர, (இவர்களில் பலர் நம்) தூதர் மீது அருளப்பட்டவற்றை செவியுற்றால், உண்மையை அவர்கள் உணர்வதன் காரணமாக அவர்களின் கண்கள் (தாரை தாரையாக) கண்ணீர் வடிப்பதைக் காண்பீர் “எங்கள் இறைவனே! (இவ்வேதத்தை) நாங்கள் நம்பிக்கை கொண்டோம். ஆகவே, (இவ்வேதம் உண்மையானதென) சாட்சி கூறுபவர்களுடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!'' என்றும் (பிரார்த்தித்துக்) கூறுகின்றனர்.
-
5:84
وَمَا لَنَا لَا نُؤْمِنُ بِٱللَّهِ وَمَا جَآءَنَا مِنَ ٱلْحَقِّ وَنَطْمَعُ أَن يُدْخِلَنَا رَبُّنَا مَعَ ٱلْقَوْمِ ٱلصَّـٰلِحِينَ
Wa-maa lanaa laa- nuʹminu billaahi wa-maa jaaaʹanaa minal ḥaq̣q̣i wa-naṭmaʻu ʹañy yudkhilanaa Rabbunaa maʻal q̣awmiṣ Ṣaaliḥeen.
அல்லாஹ்வையும் (அவனிடமிருந்து) நமக்கு வந்த சத்திய (வேத)த்தையும் நாங்கள் நம்பிக்கை கொள்ளாமலிருக்க எங்களுக்கென்ன நேர்ந்தது? (நற்செயல்கள் செய்த) நல்லவர்களுடன் எங்களையும் எங்கள் இறைவன் சேர்த்து வைக்கவே நாங்கள் ஆசைப்படுகிறோம்'' என்றும் (கூறுகின்றனர்.)
-
5:85
فَأَثَـٰبَهُمُ ٱللَّهُ بِمَا قَالُوا۟ جَنَّـٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ خَـٰلِدِينَ فِيهَا ۚ وَذَٰلِكَ جَزَآءُ ٱلْمُحْسِنِينَ
Faʹas̤aabahumul laahu bimaa q̣aaloo Jannaatiñ tajree miñ taḥtihal ʹanhaaru khaalideena feehaa. Waẓaalika jazaaaʹul Muḥsineen.
அவர்கள் இவ்வாறு கூறுவதன் காரணமாக, தொடர்ந்து நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கும் சொர்க்கங்களை அல்லாஹ் அவர்களுக்குப் பிரதிபலனாக அளிப்பான். அவற்றில் அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள். இதுவே நன்மை செய்பவர்களுக்குரிய கூலியாகும்.
-
5:86
وَٱلَّذِينَ كَفَرُوا۟ وَكَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَآ أُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلْجَحِيمِ
Wallaẓeena kafaroo wa-kaẓẓaboo biʹayaatinaaa ʹulaaaʹika ʹAṣḥaabul Jaḥeem.
எவர்கள் (நம் தூதரை) நிராகரித்து, நம் வசனங்களையும் பொய்யாக்குகின்றனரோ அவர்கள் நரகவாசிகளே!
-
5:87
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تُحَرِّمُوا۟ طَيِّبَـٰتِ مَآ أَحَلَّ ٱللَّهُ لَكُمْ وَلَا تَعْتَدُوٓا۟ ۚ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلْمُعْتَدِينَ
Yaaa-ʹayyuhal laẓeena ʹaamanoo laa- tuḥarrimoo ṭayyibaati maaa ʹaḥallal laahu lakum wa-laa taʻtadoo: ʹinnal laaha laa- yuḥibbul muʻtadeen.
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்திருக்கும் நல்லவற்றை நீங்கள் ஆகாதவையாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் வரம்பு மீறியும் செல்லாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ், வரம்பு மீறுபவர்களை நேசிப்பதேயில்லை.
-
5:88
وَكُلُوا۟ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُ حَلَـٰلًا طَيِّبًا ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ٱلَّذِىٓ أَنتُم بِهِۦ مُؤْمِنُونَ
Wa-kuloo mimmaa razaq̣akumul laahu ḥalaalañ ṭayyibaa; wattaq̣ul laahal laẓeee ʹañtum̃ bihee Muʹminoon.
அல்லாஹ் உங்களுக்கு அளித்தவற்றில் (நீங்கள் புசிக்க) அனுமதிக்கப்பட்ட நல்லவற்றையே புசியுங்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள்.
-
5:89
لَا يُؤَاخِذُكُمُ ٱللَّهُ بِٱللَّغْوِ فِىٓ أَيْمَـٰنِكُمْ وَلَـٰكِن يُؤَاخِذُكُم بِمَا عَقَّدتُّمُ ٱلْأَيْمَـٰنَ ۖ فَكَفَّـٰرَتُهُۥٓ إِطْعَامُ عَشَرَةِ مَسَـٰكِينَ مِنْ أَوْسَطِ مَا تُطْعِمُونَ أَهْلِيكُمْ أَوْ كِسْوَتُهُمْ أَوْ تَحْرِيرُ رَقَبَةٍ ۖ فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلَـٰثَةِ أَيَّامٍ ۚ ذَٰلِكَ كَفَّـٰرَةُ أَيْمَـٰنِكُمْ إِذَا حَلَفْتُمْ ۚ وَٱحْفَظُوٓا۟ أَيْمَـٰنَكُمْ ۚ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمْ ءَايَـٰتِهِۦ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
Laa- yuʹaakhiẓukumul laahu billag̣wi feee ʹaymaanikum wa-laakiñy yuʹaakhiẓukum̃ bimaa ʻaq̣q̣attumul ʹaymaan: fakaffaaratuhooo ʹiṭʻaamu ʻasharati masaakeena min ʹawsaṭi maa- tuṭʻimoona ʹahleekumʹ aw kiswatuhumʹ aw taḥreeru raq̣abah. Famal lam yajid fa-Ṣiyaamu s̤alaas̤ati ʹay-yaam. Ẓaalika kaffaaratu ʹaymaanikum ʹiẓaa ḥalaftum Waḥfaz̤̣ooo ʹaymaanakum. Kaẓaalika yubayyinul laahu lakum ʹAayaatihee laʻallakum tashkuroon.
உங்கள் வீணான சத்தியங்களைக் கொண்டு அல்லாஹ் உங்களை(க் குற்றம்) பிடிப்பதில்லை. எனினும், (எதையும்) உறுதிப்படுத்த நீங்கள் செய்கின்ற சத்தியத்தைப் பற்றி (அதில் தவறு செய்தால்) உங்களைப் பிடிப்பான். (அதில் தவறு ஏற்பட்டுவிட்டால்) அதற்குப் பரிகாரமாவது: நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்குக் கொடுத்து வரும் உணவில் மத்திய தரமான உணவை பத்து ஏழைகளுக்கு அளிக்க வேண்டும்; அல்லது (அவ்வாறே) அவர்களுக்கு ஆடையளிக்க வேண்டும். அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். (பரிகாரமாகக் கொடுக்கக்கூடிய இவற்றில் எதையும்) எவர் பெறவில்லையோ அவர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். (உங்கள் சத்தியத்தை நிறைவேற்ற முடியாவிட்டால்) நீங்கள் செய்த சத்தியத்திற்குரிய பரிகாரம் இதுதான். எனினும், நீங்கள் உங்கள் சத்தியங்களை (மிக எச்சரிக்கையுடன் பேணி)க் காப்பாற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதற்காக அவன் தன் வசனங்களை இவ்வாறு உங்களுக்கு விவரித்துக் கூறுகிறான்.
-
5:90
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِنَّمَا ٱلْخَمْرُ وَٱلْمَيْسِرُ وَٱلْأَنصَابُ وَٱلْأَزْلَـٰمُ رِجْسٌ مِّنْ عَمَلِ ٱلشَّيْطَـٰنِ فَٱجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
Yaaaʹayyuhal laẓeena ʻaamanoooʹ innamal khamru walmaysiru wal-ʹañṣaabu wal-ʹazlaamu rijsum min ʻamalish shayṭaani fajtaniboohu laʻal-lakum tufliḥoon.
நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக மது, சூதாட்டம், சிலை வணக்கம், அம்பெறிந்து குறி கேட்பது ஆகிய இவை ஷைத்தானுடைய அருவருக்கத்தக்க வேலைகளில் உள்ளவையாகும். ஆகவே, இவற்றில் இருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றியடைவீர்கள்.
-
5:91
إِنَّمَا يُرِيدُ ٱلشَّيْطَـٰنُ أَن يُوقِعَ بَيْنَكُمُ ٱلْعَدَٰوَةَ وَٱلْبَغْضَآءَ فِى ٱلْخَمْرِ وَٱلْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَن ذِكْرِ ٱللَّهِ وَعَنِ ٱلصَّلَوٰةِ ۖ فَهَلْ أَنتُم مُّنتَهُونَ
ʹInnamaa yureedush Shayṭaanu ʹañy yooq̣iʻa baynakumul ʻadaawata wal-bag̣ḍaaaʹa fil khamri wal-maysiri wa-yaṣuddakum ʻañ ẓikril laahi wa-ʻaniṣ Ṣalaah: fahal ʹañtum muñtahoon.
மதுவாலும் சூதாட்டத்தாலும் உங்களுக்கிடையில் பகைமையையும் பொறாமையையும் உண்டுபண்ணி அல்லாஹ்வின் ஞாபகத்திலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடவுமே நிச்சயமாக ஷைத்தான் விரும்புகிறான். (ஆகவே, அவற்றிலிருந்து) நீங்கள் விலகிக் கொள்வீர்களா? (மாட்டீர்களா?)
-
5:92
وَأَطِيعُوا۟ ٱللَّهَ وَأَطِيعُوا۟ ٱلرَّسُولَ وَٱحْذَرُوا۟ ۚ فَإِن تَوَلَّيْتُمْ فَٱعْلَمُوٓا۟ أَنَّمَا عَلَىٰ رَسُولِنَا ٱلْبَلَـٰغُ ٱلْمُبِينُ
Wa-ʹaṭeeʻul laaha wa-ʹaṭeeʻur Rasoola waḥẓaroo: faʹiñ tawal-laytum faʻlamooo ʹannamaa ʻalaa Rasoolinal balaag̣ul mubeen.
அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள்; (அல்லாஹ்வுடைய) தூதருக்கும் கட்டுப்படுங்கள். (அவர்களுக்கு மாறு செய்யாது) எச்சரிக்கையாக இருங்கள். (இதை) நீங்கள் புறக்கணித்து விட்டால் (நம் கட்டளைகளை, உங்களுக்குத்) தெளிவாக எடுத்துரைப்பது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
-
5:93
لَيْسَ عَلَى ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ جُنَاحٌ فِيمَا طَعِمُوٓا۟ إِذَا مَا ٱتَّقَوا۟ وَّءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ ثُمَّ ٱتَّقَوا۟ وَّءَامَنُوا۟ ثُمَّ ٱتَّقَوا۟ وَّأَحْسَنُوا۟ ۗ وَٱللَّهُ يُحِبُّ ٱلْمُحْسِنِينَ
Laysa ʻalal laẓeena ʹaamanoo wa-ʻamilus ṣaaliḥaati junaaḥuñ feemaa ṭaʻimooo ʹiẓaa mat taq̣aw waʹaamanoo wa-ʻamiluṣ Ṣaaliḥaati s̤ummat taq̣aw waʹaamanoo s̤ummat taq̣aw waʹaḥsanoo. Wallaahu yuḥibbul muḥsineen.
நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறவர்கள் (தடுக்கப்பட்ட உணவில்) எதையும் (அது தடை செய்யப்படுவதற்கு முன்னர்) புசித்திருந்தால் (அது) அவர்களின் மீது குற்றமாகாது, (தடுக்கப்பட்டபின் அவற்றிலிருந்து) அவர்கள் விலகி, நம்பிக்கையின் மீதே உறுதியாக இருந்து, நற்செயல்களையும் செய்து, (மற்ற பாவங்களிலிருந்தும்) விலகி, நம்பிக்கையை உறுதிப்படுத்தி, (அல்லாஹ்வுக்குப்) பயந்து, (பிறருக்கு) நன்மையும் செய்து கொண்டிருந்தால் (போதுமானது. ஆகவே, தடுக்கப்பட்டவற்றை முன்னர் புசித்துவிட்டது பற்றிக் குற்றம் பிடிக்கப்பட மாட்டாது.) அல்லாஹ் (இத்தகைய) நல்லவர்களையே நேசிக்கிறான்.
-
5:94
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَيَبْلُوَنَّكُمُ ٱللَّهُ بِشَىْءٍ مِّنَ ٱلصَّيْدِ تَنَالُهُۥٓ أَيْدِيكُمْ وَرِمَاحُكُمْ لِيَعْلَمَ ٱللَّهُ مَن يَخَافُهُۥ بِٱلْغَيْبِ ۚ فَمَنِ ٱعْتَدَىٰ بَعْدَ ذَٰلِكَ فَلَهُۥ عَذَابٌ أَلِيمٌ
Yaaa-ʹayyuhal laẓeena ʹaamanoo layabluwannakumul laahu bishayʹim minaṣ ṣaydi tanaaluhooo ʹaydeekum wa-rimaaḥukum liyaʻlamal laahu mañy yakhaafuhoo bilg̣ayb: famaniʻ tadaa baʻda ẓaalika falahoo ʻaẓaabun ʹaleem.
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வைப் பார்க்காமலே அவனை அஞ்சுபவர் யார் என்பதை அவன் அறி(வித்து விடு)வதற்காக (நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் சமயத்தில்) உங்கள் கைகளும், அம்புகளும் (எளிதில்) அடையக்கூடிய ஒரு வேட்டைப் பொருளைக் கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உங்களைச் சோதிப்பான். இதற்குப் பின்னர் எவரேனும் (அல்லாஹ்வின் கட்டளையை) மீறினால் அவருக்கு துன்புறுத்தும் வேதனையுண்டு.
-
5:95
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَقْتُلُوا۟ ٱلصَّيْدَ وَأَنتُمْ حُرُمٌ ۚ وَمَن قَتَلَهُۥ مِنكُم مُّتَعَمِّدًا فَجَزَآءٌ مِّثْلُ مَا قَتَلَ مِنَ ٱلنَّعَمِ يَحْكُمُ بِهِۦ ذَوَا عَدْلٍ مِّنكُمْ هَدْيًۢا بَـٰلِغَ ٱلْكَعْبَةِ أَوْ كَفَّـٰرَةٌ طَعَامُ مَسَـٰكِينَ أَوْ عَدْلُ ذَٰلِكَ صِيَامًا لِّيَذُوقَ وَبَالَ أَمْرِهِۦ ۗ عَفَا ٱللَّهُ عَمَّا سَلَفَ ۚ وَمَنْ عَادَ فَيَنتَقِمُ ٱللَّهُ مِنْهُ ۗ وَٱللَّهُ عَزِيزٌ ذُو ٱنتِقَامٍ
Yaaa-ʹayyuhal laẓeena ʹaamanoo laa- taq̣tuluṣ ṣayda wa-ʹañtum ḥurum. Wa-mañ q̣atalahoo miñkum mutaʻammidañ fajazaaaʹum mis̤lu maa- q̣atala minan naʻami yaḥkumu bihee ẓawaa ʻadlim miñkum hadyam baalig̣al kaʻbati ʹaw kaffaaratuñ ṭaʻaamu masaakeena ʹaw ʻadlu ẓaalika ṣiyaamal liyaẓooq̣a wabaala ʹamrih. ʻAfal laahu ʻammaa salaf: wa-man ʻaada fayañtaq̣imul laahu minh. Wallaahu ʻAzeezuñ Ẓun tiq̣aam.
நம்பிக்கையாளர்களே! நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் சமயத்தில் வேட்டையாடி மிருகங்களைக் கொல்லாதீர்கள். உங்களில் எவரேனும், அதை வேண்டுமென்ன்ற கொன்றுவிட்டால் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் அதற்குச் சமமானதை (பரிகாரமாக) ஈடு கொடுக்க வேண்டும். உங்களில் நேர்மையான இருவர் நீங்கள் (ஈடாகக்) கொடுக்கும் பொருள் அதற்குச் சமமெனத் தீர்ப்பளிக்க வேண்டும். இதைக் காணிக்கையாக கஅபாவுக்கு அனுப்பிவிட வேண்டும். அல்லது (அதன் மதிப்புக்கு) ஏழைகளுக்கு உணவு அளிப்பது கொண்டு பரிகாரம் செய்ய வேண்டும். (பரிகாரமளிக்கப் பொருள் இல்லாதவன்) தான் செய்த குற்றத்தின் பலனை அனுபவிப்பதற்காக (எண்ணிக்கையில்) அதற்குச் சமமான நோன்புகள் நோற்க வேண்டும். (இதற்கு) முன் நடந்தவற்றை அல்லாஹ் மன்னித்து விட்டான். எவரேனும் (இத்தகைய குற்றம் செய்ய) மீண்டும் திரும்பி விட்டால் அல்லாஹ் அவனை தண்டிப்பான். அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவன், (குற்றவாளிகளை) தண்டிப்பவன் ஆவான்.
-
5:96
أُحِلَّ لَكُمْ صَيْدُ ٱلْبَحْرِ وَطَعَامُهُۥ مَتَـٰعًا لَّكُمْ وَلِلسَّيَّارَةِ ۖ وَحُرِّمَ عَلَيْكُمْ صَيْدُ ٱلْبَرِّ مَا دُمْتُمْ حُرُمًا ۗ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ٱلَّذِىٓ إِلَيْهِ تُحْشَرُونَ
ʹUḥilla lakum ṣaydul baḥri waṭaʻaamuhoo mataaʻal lakum wa-lis-sayyaarah; waḥurrima ʻalaykum ṣaydul barri maa- dumtum ḥurumaa. Wattaq̣ul lahal laẓeee ʹilayhi tuḥ-sharoon.
(நம்பிக்கையாளர்களே!) நீரில் வேட்டையாடுவதும், அதை இன்பமாக புசிப்பதும் (இஹ்ராம் அணிந்துள்ள) உங்களுக்கும் (மற்ற) பிரயாணிகளுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளன. எனினும், நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் வரை (நீர் நிலையில்லாமல்) தரையில் வேட்டையாடுவது உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது. ஆகவே, அல்லாஹ்வுக்குப் பயந்து நட(ந்து கொள்ளு)ங்கள். அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்.
-
5:97
۞ جَعَلَ ٱللَّهُ ٱلْكَعْبَةَ ٱلْبَيْتَ ٱلْحَرَامَ قِيَـٰمًا لِّلنَّاسِ وَٱلشَّهْرَ ٱلْحَرَامَ وَٱلْهَدْىَ وَٱلْقَلَـٰٓئِدَ ۚ ذَٰلِكَ لِتَعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ يَعْلَمُ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ وَأَنَّ ٱللَّهَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ
Jaʻalal laahul Kaʻbatal Baytal Ḥaraama q̣iyaamal linnaasi wash-Shahral Ḥaraama wal-hadya wal-q̣alaaaʹid. Ẓaalika litaʻlamooo ʹannal laaha yaʻlamu maa- fis samaawaati wa-maa fil ʹarḍi wa-ʹannal laaha bikulli shayʹin ʻAleem.
சிறப்புற்ற வீடாகிய கஅபாவை மனிதர்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய இடமாக அல்லாஹ் ஆக்கியிருக்கிறான். (அவ்வாறே துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய இந்நான்கு) சிறப்புற்ற மாதங்களையும், (ஹஜ்ஜின்) குர்பானிகளையும், (அல்லாஹ்வுடைய காணிக்கை என்பதற்காக) அடையாளம் இடப்பட்ட கால்நடைகளையும் (பாதுகாப்பு பெற்றவையாக ஆக்கியிருக்கிறான்). வானங்களிலும், பூமியிலுமுள்ள அனைத்தையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிகிறான்; மேலும், நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிபவன் என்பதை நீங்கள் அறிவதற்காகவே (இவ்வாறு செய்தான்).
-
5:98
ٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلْعِقَابِ وَأَنَّ ٱللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
ʹIʻlamooo ʹannal laaha Shadeedul ʻiq̣aabi wa-ʹannal laaha G̣afoorur Raḥeem.
நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன்; (அத்துடன்) நிச்சயமாக அல்லாஹ் மிக்க பிழை பொறுத்து பெரும் கருணை காட்டுபவன் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.
-
5:99
مَّا عَلَى ٱلرَّسُولِ إِلَّا ٱلْبَلَـٰغُ ۗ وَٱللَّهُ يَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا تَكْتُمُونَ
Maa- ʻalar rasooli ʹillal balaag̣. Wallaahu yaʻlamu maa- tubdoona wa-maa taktumoon.
நம் தூதருடைய கடமை (நம்) தூதை எடுத்துரைப்பதே தவிர (அவ்வாறே நடக்கும்படி உங்களை நிர்ப்பந்திப்பது) அல்ல. நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்.
-
5:100
قُل لَّا يَسْتَوِى ٱلْخَبِيثُ وَٱلطَّيِّبُ وَلَوْ أَعْجَبَكَ كَثْرَةُ ٱلْخَبِيثِ ۚ فَٱتَّقُوا۟ ٱللَّهَ يَـٰٓأُو۟لِى ٱلْأَلْبَـٰبِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
Q̣ul laa yastawil khabees̤u waṭṭayyibu wa-law ʹaʻjabaka kas̤ratul khabees̤; fattaq̣ul laaha yaaaʹulil ʹalbaabi laʻallakum tufliḥoon.
(நபியே! நீர் அவர்களை நோக்கி ‘‘எங்கும்) தீயவை அதிகரித்திருப்பது உங்களை ஆச்சரியப்படுத்திய போதிலும், நல்லதும் தீயதும் சமமாகாது. ஆகவே, அறிவாளிகளே! அல்லாஹ்வுக்குப் பயந்து (தீயவற்றிலிருந்து விலகிக்) கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றி அடைவீர்கள்'' என்று கூறுவீராக.
-
5:101
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَسْـَٔلُوا۟ عَنْ أَشْيَآءَ إِن تُبْدَ لَكُمْ تَسُؤْكُمْ وَإِن تَسْـَٔلُوا۟ عَنْهَا حِينَ يُنَزَّلُ ٱلْقُرْءَانُ تُبْدَ لَكُمْ عَفَا ٱللَّهُ عَنْهَا ۗ وَٱللَّهُ غَفُورٌ حَلِيمٌ
Yaaaʹayyuhal laẓeena ʹaamanoo laa- tasʹaloo ʻan ʹashyaaaʹa iñ tubda lakum tasuʹkum. Wa-ʹiñ tasʹaloo ʻanhaa ḥeena yunazzalul Q̣urʹaanu tubda lakum. ʻAfal laahu ʻanhaa; wallaahu G̣afoorun Ḥaleem.
நம்பிக்கையாளர்களே! (நபியிடம் அவசியமின்றி) ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் (துருவித் துருவிக்) கேட்டுக் கொண்டிருக்காதீர்கள். (பல விஷயங்கள்) உங்களுக்கு அறிவிக்கப்பட்டால் (அவை) உங்களுக்கு வருத்தம் தரக்கூடும். அதிலும் இந்தக் குர்ஆன் இறக்கப்படும் சமயத்தில், அத்தகைய விஷயங்களைப் பற்றி நீங்கள் கேட்டுக்கொண்டிருந்தால் அவை உங்களுக்கு தெளிவாக்கப்பட்டு (கடமையாகி)விடும். (அதனால் நீங்கள் சிரமத்திற்குள்ளாகி விடலாம். எனினும், இதுசமயம்) அதைப் பற்றி அல்லாஹ் உங்களை மன்னித்து விட்டான். ஏனென்றால், அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், அதிகம் சகித்துக்கொள்பவன் ஆவான்.
-
5:102
قَدْ سَأَلَهَا قَوْمٌ مِّن قَبْلِكُمْ ثُمَّ أَصْبَحُوا۟ بِهَا كَـٰفِرِينَ
Q̣ad saʹalahaa q̣awmum miñ q̣ablikum s̤umma ʹaṣbaḥoo bihaa kaafireen.
உங்களுக்கு முன்னிருந்த மக்களும் (அவர்களுடைய நபியிடம் இத்தகைய) கேள்விகளையே கேட்டுக் கொண்டிருந்தனர். (அவை அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட) பின்னர் அவர்கள் அவற்றை நிராகரிப்பவர்களாக(த்தான்) மாறிவிட்டார்கள்.
-
5:103
مَا جَعَلَ ٱللَّهُ مِنۢ بَحِيرَةٍ وَلَا سَآئِبَةٍ وَلَا وَصِيلَةٍ وَلَا حَامٍ ۙ وَلَـٰكِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ يَفْتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلْكَذِبَ ۖ وَأَكْثَرُهُمْ لَا يَعْقِلُونَ
Maa- jaʻalal laahu mim baḥeeratiñw walaa saaaʹibatiñw walaa waṣeelatiñw walaa ḥaamiñw walaakinnal laẓeena kafaroo yaftaroona ʻalal laahil kaẓib; waʹaks̤aruhum laa- yaʻq̣iloon.
பஹீரா, ஸாயிபா, வஸீலா, ஹாம் (போன்ற) இவையெல்லாம் அல்லாஹ் ஏற்படுத் தியவையல்ல. எனினும், நிராகரிப்பவர்கள்தான் (இவை அல்லாஹ் ஏற்படுத்தியவை என) அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனை செய்(து கூறு)கின்றனர். அவர்களில் பலர் (உண்மையை) விளங்காதவர்களாகவே இருக்கின்றனர்.
-
5:104
وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا۟ إِلَىٰ مَآ أَنزَلَ ٱللَّهُ وَإِلَى ٱلرَّسُولِ قَالُوا۟ حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ ءَابَآءَنَآ ۚ أَوَلَوْ كَانَ ءَابَآؤُهُمْ لَا يَعْلَمُونَ شَيْـًٔا وَلَا يَهْتَدُونَ
Wa-ʹiẓaa q̣eela lahum taʻaalaw ʹilaa maaa ʹañzalal laahu wa-ʹilar Rasooli q̣aaloo ḥasbunaa maa- wajadnaa ʻalayhi ʹaabaaaʹanaa. ʹA-walaw kaana ʹaabaaaʹuhum laa- yaʻlamoona shayʹañw walaa vahtadoon?
“அல்லாஹ் இறக்கிவைத்த (வேதத்)தின் பக்கமும், (அவனுடைய) தூதரின் பக்கமும் வாருங்கள்'' என அவர்களுக்குக் கூறப்பட்டால், “எங்கள் மூதாதைகள் எதன் மீதிருக்க நாங்கள் கண்டோமோ அதுவே (நாங்கள் பின்பற்ற) எங்களுக்கு போதும்'' எனக் கூறுகின்றனர். அவர்களுடைய மூதாதைகள் எதையும் அறிந்து கொள்ளாமலும், நேரான வழியில் இல்லாமலும் இருந்தாலுமா (அவர்கள் தங்கள் மூதாதைகளைப் பின்பற்றுவார்கள்)!
-
5:105
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ عَلَيْكُمْ أَنفُسَكُمْ ۖ لَا يَضُرُّكُم مَّن ضَلَّ إِذَا ٱهْتَدَيْتُمْ ۚ إِلَى ٱللَّهِ مَرْجِعُكُمْ جَمِيعًا فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
Yaaaʹayyuhal laẓeena ʹaamanoo ʻalaykum ʹañfusakum: laa- yaḍurrukum mañ ḍalla ʹiẓah tadaytum. ʹIlal laahi marjiʻukum jameeʻañ fayunabbiʹukum̃ bimaa kuñtum taʻmaloon.
நம்பிக்கையாளர்களே! நீங்கள் (தவறான வழியில் செல்லாது) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நேரான வழியில் சென்றால் வழி தவறிய எவனுடைய தீங்கும் உங்களை பாதிக்காது. நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடமே செல்ல வேண்டியிருக்கிறது. நீங்கள் (இங்கு) செய்து கொண்டிருப்பவற்றைப் பற்றி (அது சமயம்) அவன் உங்களுக்கு அறிவித்துவிடுவான்.
-
5:106
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ شَهَـٰدَةُ بَيْنِكُمْ إِذَا حَضَرَ أَحَدَكُمُ ٱلْمَوْتُ حِينَ ٱلْوَصِيَّةِ ٱثْنَانِ ذَوَا عَدْلٍ مِّنكُمْ أَوْ ءَاخَرَانِ مِنْ غَيْرِكُمْ إِنْ أَنتُمْ ضَرَبْتُمْ فِى ٱلْأَرْضِ فَأَصَـٰبَتْكُم مُّصِيبَةُ ٱلْمَوْتِ ۚ تَحْبِسُونَهُمَا مِنۢ بَعْدِ ٱلصَّلَوٰةِ فَيُقْسِمَانِ بِٱللَّهِ إِنِ ٱرْتَبْتُمْ لَا نَشْتَرِى بِهِۦ ثَمَنًا وَلَوْ كَانَ ذَا قُرْبَىٰ ۙ وَلَا نَكْتُمُ شَهَـٰدَةَ ٱللَّهِ إِنَّآ إِذًا لَّمِنَ ٱلْـَٔاثِمِينَ
Yaaaʹayyuhal laẓeena ʹaamanoo shahaadatu baynikum ʹiẓaa ḥaḍara ʹaḥadakumul mawtu ḥeenal waṣiyyatis̤ naani ẓawaa ʻadlim miñkum ʹaw ʹaakharaani min g̣ayrikum ʹin ʹañtum ḍarabtum fil ʹarḍi faʹaṣaabatkum muṣeebatul mawt. Taḥbisoonahumaa mim baʻdiṣ Ṣalaati fayuq̣simaani billaahi ʹinir tabtum laa- nashtaree bihee s̤amanañw wa law kaana ẓaa q̣urbaa wa-laa naktumu shahaadatal laahi ʹinnaaa ʹiẓal laminal ʹaas̤imeen.
நம்பிக்கையாளர்களே! உங்களில் எவருக்கும் மரணம் சமீபித்து (அவர் மரண சாசனம் கூற விரும்பினால்) அவர் மரண சாசனம் (வஸீயத்) கூறும் சமயத்தில் உங்களில் நம்பிக்கைக்குரிய (நேர்மையான) இருவர் சாட்சியாக இருக்கவேண்டும். அல்லது உங்களில் எவரும் பூமியில் பயணம் செய்துகொண்டு இருக்கும்பொழுது மரணம் சமீபித்தால் (அது சமயம் சாசனத்தின் சாட்சிக்காக முஸ்லிம்களாகிய இருவர் கிடைக்காவிடில்) நீங்கள் அல்லாத வேறிருவர் (சாட்சியாக) இருக்கவும். (இந்தச் சாட்சிகள் கூறும் விஷயத்தில்) உங்களுக்குச் சந்தேகமேற்பட்டால் அவ்விருவரையும் (அஸர்) தொழுகைக்குப்பின் தடுத்து வைத்துக்கொள்ளவும். அவ்விருவரும் ‘‘நாங்கள் கூறிய (சாட்சியத்)தைக் கொண்டு ஒரு பொருளையும் அதற்காக நாங்கள் அடையவிரும்பவில்லை. அவர்கள் எங்கள் உறவினர்களாக இருந்தபோதிலும் நாங்கள் அல்லாஹ்வுக்காக சாட்சி கூறியதில் எதையும் மறைக்கவே இல்லை. அவ்வாறு செய்திருந்தால் நிச்சயமாக நாங்கள் பாவிகளாகி விடுவோம்'' என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறவேண்டும்.
-
5:107
فَإِنْ عُثِرَ عَلَىٰٓ أَنَّهُمَا ٱسْتَحَقَّآ إِثْمًا فَـَٔاخَرَانِ يَقُومَانِ مَقَامَهُمَا مِنَ ٱلَّذِينَ ٱسْتَحَقَّ عَلَيْهِمُ ٱلْأَوْلَيَـٰنِ فَيُقْسِمَانِ بِٱللَّهِ لَشَهَـٰدَتُنَآ أَحَقُّ مِن شَهَـٰدَتِهِمَا وَمَا ٱعْتَدَيْنَآ إِنَّآ إِذًا لَّمِنَ ٱلظَّـٰلِمِينَ
Faʹin ʻus̤ira ʻalaaa ʹannahumas taḥaq̣q̣aaa ʹis̤mañ faʹaakharaani yaq̣oomaani maq̣aamahumaa minal laẓeenas taḥaq̣q̣a ʻalayhimul ʹawlayaani fayuq̣simaani billaahi lashahaadatunaaa ʹaḥaq̣q̣u miñ shahaadatihimaa wa-maʻ tadaynaaa ʹinnaaa ʹiẓal laminaz̤̣ z̤̣aalimeen.
(இவ்வாறு அவர்கள் சத்தியம் செய்து கூறியதிலும்) அவர்கள் பொய்யே கூறினார்கள் என்று நிச்சயமாக தெரியவந்தால் (இந்தப் பொய் சாட்சியத்தினால்) எவருக்கு நஷ்டமேற்பட்டதோ அவர் சார்பில் வேறு இருவர், (முன்பு சத்தியம் செய்த) அவர்களுடைய இடத்தில் நின்று, ‘‘அவர்களுடைய சாட்சியத்தை விட எங்கள் சாட்சியம்தான் உண்மையானது (என உறுதி கூறுகிறோம்), நாங்கள் தவறாக ஏதும் கூறவில்லை. அவ்வாறு கூறினால் நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாகி விடுவோம்'' என்று அவ்விருவரும் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறவேண்டும்.
-
5:108
ذَٰلِكَ أَدْنَىٰٓ أَن يَأْتُوا۟ بِٱلشَّهَـٰدَةِ عَلَىٰ وَجْهِهَآ أَوْ يَخَافُوٓا۟ أَن تُرَدَّ أَيْمَـٰنٌۢ بَعْدَ أَيْمَـٰنِهِمْ ۗ وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَٱسْمَعُوا۟ ۗ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلْفَـٰسِقِينَ
Ẓaalika ʹadnaaa ʹañy yaʹtoo bishshahaadati ʻalaa wajhihaaa ʹaw yakhaafooo ʹañ turadda ʹaymaanum baʻda ʹaymaanihim. Wattaq̣ul laaha wasmaʻoo: wallaahu laa- yahdil q̣awmal faasiq̣een.
உள்ளதை உள்ளவாறு அவர்கள் சாட்சியம் கூறும்படி செய்வதற்கு இது மிக்க சுலபமான வழியாகும், அவர்கள் (பொய்) சத்தியம் செய்தாலும், மற்றவரின் சத்தியம் அதைத் தடுத்துவிடும் என்று அவர்கள் பயப்படுவதற்கும் இது மிக்க சுலபமான வழி. ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து (அவன் கட்டளைக்கே) நீங்கள் செவிசாயுங்கள். (இதற்கு மாறு செய்யும்) பாவிகளை அல்லாஹ் நேரான வழியில் செலுத்த மாட்டான்.
-
5:109
۞ يَوْمَ يَجْمَعُ ٱللَّهُ ٱلرُّسُلَ فَيَقُولُ مَاذَآ أُجِبْتُمْ ۖ قَالُوا۟ لَا عِلْمَ لَنَآ ۖ إِنَّكَ أَنتَ عَلَّـٰمُ ٱلْغُيُوبِ
Yawma yajmaʻul laahur rusula fayaq̣oolu maa-ẓaaa ʹujibtum? Q̣aaloo laa- ʻilma lanaa: innaka ʹAñta ʻAllaamul g̣uyoob.
(நபியே!) ஒரு நாளில் அல்லாஹ், (தன்) தூதர்களை ஒன்று சேர்த்து ‘‘நீங்கள் எனது தூதை மக்களிடம் எடுத்துரைத்த சமயத்தில்) அவர்கள் உங்களுக்கு என்ன பதில் கூறினார்கள்?'' என்று கேட்பான். அதற்கவர்கள், (‘‘நாங்கள் உயிருடன் இருந்த வரை அவர்களுடைய வெளிக்கோலத்தையே நாங்கள் அறிவோம். அதற்கு மாறாக உள்ளத்தில் உள்ளதையோ, நாங்கள் இறந்தபின் அவர்கள் செய்ததையோ) நாங்கள் அறியமாட்டோம். நிச்சயமாக நீதான் மறைவான அனைத்தையும் நன்கறிந்தவன்'' என்று கூறுவார்கள்.
-
5:110
إِذْ قَالَ ٱللَّهُ يَـٰعِيسَى ٱبْنَ مَرْيَمَ ٱذْكُرْ نِعْمَتِى عَلَيْكَ وَعَلَىٰ وَٰلِدَتِكَ إِذْ أَيَّدتُّكَ بِرُوحِ ٱلْقُدُسِ تُكَلِّمُ ٱلنَّاسَ فِى ٱلْمَهْدِ وَكَهْلًا ۖ وَإِذْ عَلَّمْتُكَ ٱلْكِتَـٰبَ وَٱلْحِكْمَةَ وَٱلتَّوْرَىٰةَ وَٱلْإِنجِيلَ ۖ وَإِذْ تَخْلُقُ مِنَ ٱلطِّينِ كَهَيْـَٔةِ ٱلطَّيْرِ بِإِذْنِى فَتَنفُخُ فِيهَا فَتَكُونُ طَيْرًۢا بِإِذْنِى ۖ وَتُبْرِئُ ٱلْأَكْمَهَ وَٱلْأَبْرَصَ بِإِذْنِى ۖ وَإِذْ تُخْرِجُ ٱلْمَوْتَىٰ بِإِذْنِى ۖ وَإِذْ كَفَفْتُ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ عَنكَ إِذْ جِئْتَهُم بِٱلْبَيِّنَـٰتِ فَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِنْهُمْ إِنْ هَـٰذَآ إِلَّا سِحْرٌ مُّبِينٌ
ʹIẓ q̣aalal laahu yaa-ʻEesab na Maryamaẓ kur niʻmatee ʻalayka wa-ʻalaa waalidatik. ʹIẓ ʹayyattuka birooḥil q̣udus. Tukallimun naasa fil mahdi wa-kahlaa. Wa-ʹiẓ ʻallamtukal Kitaaba wal-Ḥikmata wat-Tawraata wal-ʹIñjeel. Wa-ʹiẓ takhluq̣u minaṭ ṭeeni kahayʹatiṭ ṭayri biʹiẓnee fatañfukhu feehaa fatakoonu ṭayram biʹiẓnee wa-tubriʹul ʹakmaha wal-ʹabraṣa biʹiẓnee. Wa-ʹiẓ tukhrijul mawtaa biʹiẓnee. Wa-ʹiz kafaftu Baneee ʹIsraaaʹeela ʻañka ʹiẓ jiʹtahum̃ bil-bayyinaati faq̣aalal laẓeena kafaroo minhum ʹin haaẓaaa ʹillaa siḥrum mubeen.
பிறகு அல்லாஹ் (ஈஸாவை நோக்கிக்) கூறுவான்: ‘‘மர்யமுடைய மகன் ஈஸாவே! உம் மீதும், உமது தாய் மீது(ம் நான் புரிந்து)ள்ள என் அருளை நினைத்துப் பார்ப்பீராக. பரிசுத்த ஆத்மாவைக் கொண்டு உமக்கு உதவி புரிந்து (உமது தாயின் பரிசுத்தத் தன்மையைப் பற்றி) நீர் தொட்டில் குழந்தையாக இருந்த சமயத்திலும் (உமது தீர்க்க தரிசனத்தைப் பற்றி) வாலிபத்திலும் உம்மைப் பேசச் செய்ததையும், (நினைத்துப் பார்ப்பீராக.) வேதத்தையும், ஞானத்தையும், தவ்றாத்தையும், இன்ஜீலையும் நான் உமக்குக் கற்பித்ததையும் (நினைத்துப் பார்ப்பீராக). மேலும், நீர் என் கட்டளைப்படி களிமண்ணால் பறவையின் உருவத்தைப் போல் செய்து அதில் நீர் ஊதிய சமயத்தில், அது என் கட்டளையைக் கொண்டு பறவையாக மாறியதையும், பிறவிக் குருடனையும், வெண் குஷ்டரோகியையும் என் உதவியினால் நீர் சுகமாக்கியதையும் (நினைத்துப் பார்ப்பீராக). நீர் என் அருளைக்கொண்டு மரணித்தவர்களை (கல்லறையிலிருந்து உயிர்கொடுத்து) புறப்படச் செய்ததையும் (நினைத்துப் பார்ப்பீராக). இஸ்ராயீலின் சந்ததிகளிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது அவர்களில் நிராகரித்தவர்கள் நிச்சயமாக இது சந்தேகமற்ற சூனியத்தைத் தவிர வேறல்ல என்று கூறிய(துடன் உமக்குத் தீங்கிழைக்க முயற்சித்த) சமயத்தில் அவர்(களுடைய தீங்கு)களிலிருந்து நான் உம்மை தடுத்துக் கொண்டதையும் நினைத்துப் பார்ப்பீராக.
-
5:111
وَإِذْ أَوْحَيْتُ إِلَى ٱلْحَوَارِيِّـۧنَ أَنْ ءَامِنُوا۟ بِى وَبِرَسُولِى قَالُوٓا۟ ءَامَنَّا وَٱشْهَدْ بِأَنَّنَا مُسْلِمُونَ
Wa-ʹiẓ ʹawḥaytu ʹilal Ḥawaariyyeena ʹan ʹaaminoo bee wa-bi-Rasoolee: q̣aalooo ʹaamannaa washhad biʹannanaa Muslimoon.
என்னையும், என் தூதரையும் (அதாவது உம்மையும்) நம்பிக்கை கொள்ளும்படி (அப்போஸ்தலர்கள் என்னும் உமது) சிஷ்யர்களுக்கு நான் வஹ்யின் மூலம் தெரிவித்த சமயத்தில், அவர்கள் (அவ்வாறே) நாங்கள் நம்பினோம்; நிச்சயமாக நாங்கள் (இறைவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்த) முஸ்லிம்கள் என்பதற்கு நீர் சாட்சியாக இருக்கவும்! என்று கூறியதையும் நினைத்துப் பார்ப்பீராக (என்றும் அந்நாளில் கூறுவான்).
-
5:112
إِذْ قَالَ ٱلْحَوَارِيُّونَ يَـٰعِيسَى ٱبْنَ مَرْيَمَ هَلْ يَسْتَطِيعُ رَبُّكَ أَن يُنَزِّلَ عَلَيْنَا مَآئِدَةً مِّنَ ٱلسَّمَآءِ ۖ قَالَ ٱتَّقُوا۟ ٱللَّهَ إِن كُنتُم مُّؤْمِنِينَ
ʹIẓ q̣aalal Ḥawaariyyoona yaa-ʻEesab na Maryama hal yastaṭeeʻu Rabbuka ʹañy yunazzila ʻalaynaa maaaʹidatam minas samaaaʹ? Q̣aalat taq̣ul laaha ʹiñ kuñtum Muʹmineen.
தவிர, (நபியே! நீர் அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக:) அந்த சிஷ்யர்கள் (ஈஸாவை நோக்கி) ‘‘மர்யமுடைய மகன் ஈஸாவே! உமது இறைவன், வானத்திலிருந்து எங்களுக்காக ஓர் உணவு(ப் பொருள்கள் நிரம்பிய) தட்டை இறக்கி வைக்க முடியுமா?'' என்று கேட்டதற்கு (ஈஸா, அவர்களை நோக்கி) ‘‘மெய்யாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் (இத்தகைய கேள்வி கேட்பதைப் பற்றி) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்.
-
5:113
قَالُوا۟ نُرِيدُ أَن نَّأْكُلَ مِنْهَا وَتَطْمَئِنَّ قُلُوبُنَا وَنَعْلَمَ أَن قَدْ صَدَقْتَنَا وَنَكُونَ عَلَيْهَا مِنَ ٱلشَّـٰهِدِينَ
Q̣aaloo nureedu ʹan naʹkula minhaa wa-taṭmaʹinna q̣uloobunaa wa-naʻlama ʹañ q̣ad ṣadaq̣tanaa wa-nakoona ʻalayhaa minash shaahideen.
அதற்கவர்கள், ‘‘அதிலிருந்து நாங்கள் புசித்து, எங்கள் உள்ளங்கள் திருப்தியடையவும், நீர் (உமது தூதைப் பற்றி) மெய்யாகவே உண்மை கூறினீர் என்று நாங்கள் அறிந்து கொண்டு அதற்கு நாங்களும் சாட்சியாக இருக்கவுமே விரும்புகிறோம்'' என்று கூறினார்கள்.
-
5:114
قَالَ عِيسَى ٱبْنُ مَرْيَمَ ٱللَّهُمَّ رَبَّنَآ أَنزِلْ عَلَيْنَا مَآئِدَةً مِّنَ ٱلسَّمَآءِ تَكُونُ لَنَا عِيدًا لِّأَوَّلِنَا وَءَاخِرِنَا وَءَايَةً مِّنكَ ۖ وَٱرْزُقْنَا وَأَنتَ خَيْرُ ٱلرَّٰزِقِينَ
Q̣aala ʻEesab nu Maryamal laahumma Rabbanaa ʹañzil ʻalaynaa MaaaʹIdatam minas Samaaʹi takoonu lanaa ʻeedal liʹawwalinaa wa-ʹaakhirinaa wa-ʹAayatam miñka warzuq̣naa wa-ʹAñta Khayrur raaziq̣een.
அதற்கு மர்யமுடைய மகன் ஈஸா ‘‘எங்கள் இறைவனே! வானத்தில் இருந்து ஓர் உணவுத் தட்டை எங்களுக்கு நீ இறக்கிவைப்பாயாக! எங்களுக்கும், எங்கள் முன் இருப்பவர்களுக்கும், எங்களுக்குப் பின் வருபவர்களுக்கும் அது ஒரு பெருநாளாகவும், உன் (வல்லமைக்கு) ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும். ஆகவே, (அவ்வாறே) எங்களுக்கும் உணவை அளிப்பாயாக! நீயோ உணவளிப்பதில் மிகச் சிறந்தவன்'' என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
-
5:115
قَالَ ٱللَّهُ إِنِّى مُنَزِّلُهَا عَلَيْكُمْ ۖ فَمَن يَكْفُرْ بَعْدُ مِنكُمْ فَإِنِّىٓ أُعَذِّبُهُۥ عَذَابًا لَّآ أُعَذِّبُهُۥٓ أَحَدًا مِّنَ ٱلْعَـٰلَمِينَ
Q̣aalal laahu ʹinnee munazziluha ʻalaykum. Famañy yakfur baʻdu miñkum faʹinneee ʹuʻaẓẓibuhoo ʻaẓaabal laaa ʹuʻaẓẓibuhooo ʹaḥadam minal ʻaalameen.
அதற்கு அல்லாஹ் ‘‘நிச்சயமாக நான் (நீங்கள் கேட்டவாறு) அதை உங்களுக்கு இறக்கிவைப்பேன். (எனினும்) இதற்குப் பின்னர் உங்களில் எவரேனும் (என் கட்டளைக்கு) மாறு செய்தால், அவரை உலகத்தில் எவருக்கும் செய்திராத அவ்வளவு கொடியதொரு வேதனையைக் கொண்டு நிச்சயமாக நான் தண்டிப்பேன்'' என்று கூறினான்.
-
5:116
وَإِذْ قَالَ ٱللَّهُ يَـٰعِيسَى ٱبْنَ مَرْيَمَ ءَأَنتَ قُلْتَ لِلنَّاسِ ٱتَّخِذُونِى وَأُمِّىَ إِلَـٰهَيْنِ مِن دُونِ ٱللَّهِ ۖ قَالَ سُبْحَـٰنَكَ مَا يَكُونُ لِىٓ أَنْ أَقُولَ مَا لَيْسَ لِى بِحَقٍّ ۚ إِن كُنتُ قُلْتُهُۥ فَقَدْ عَلِمْتَهُۥ ۚ تَعْلَمُ مَا فِى نَفْسِى وَلَآ أَعْلَمُ مَا فِى نَفْسِكَ ۚ إِنَّكَ أَنتَ عَلَّـٰمُ ٱلْغُيُوبِ
Wa-ʹiẓ q̣aalal laahu yaa-ʻEesab na Maryama ʹaʹañta q̣ulta linnaasit takhiẓoonee wa-ʹummiya ʹilaahayni miñ doonil laah? Q̣aala Subḥaanaka maa yakoonu leee ʹan ʹaq̣oola maa- laysa lee biḥaq̣q̣. ʹIñ kuñtu q̣ultuhoo faq̣ad ʻalimtah. Taʻlamu maa- fee nafsee wa-laaa ʹaʻlamu maa- fee nafsik. ʹInnaka ʹAñta ʻAllaamul g̣uyoob.
அல்லாஹ் (மறுமை நாளில் ஈஸாவை நோக்கி), ‘‘மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வுடன் என்னையும், என் தாயையும் இரு கடவுள்களாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று மனிதர்களை நோக்கி நீர் கூறினீரா?'' என்று கேட்பான் என்பதையும் ஞாபகமூட்டுவீராக. அதற்கு அவர் கூறுவார்: ‘‘நீ மிகப் பரிசுத்தமானவன். எனக்கு ஒரு சிறிதும் தகாததை நான் ஒருபோதும் கூறமாட்டேன். அவ்வாறு நான் கூறியிருந்தால் நிச்சயமாக நீ அதை அறிந்திருப்பாயே! என் உள்ளத்திலுள்ளதை நீ நன்கறிவாய். உன் உள்ளத்திலுள்ளதை நான் அறியமாட்டேன். நிச்சயமாக நீதான் மறைவானவை அனைத்தையும் நன்கறிபவன்.
-
5:117
مَا قُلْتُ لَهُمْ إِلَّا مَآ أَمَرْتَنِى بِهِۦٓ أَنِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ رَبِّى وَرَبَّكُمْ ۚ وَكُنتُ عَلَيْهِمْ شَهِيدًا مَّا دُمْتُ فِيهِمْ ۖ فَلَمَّا تَوَفَّيْتَنِى كُنتَ أَنتَ ٱلرَّقِيبَ عَلَيْهِمْ ۚ وَأَنتَ عَلَىٰ كُلِّ شَىْءٍ شَهِيدٌ
Maa- q̣ultu lahum ʹillaa maaa ʹamartanee biheee ʹaniʻ budul laaha rabbee wa-Rabbakum; wa-kuntu ʻalayhim shaheedam maa dumtu feehim. Falammaa tawaffaytanee kuñta ʹAntar Raq̣eeba ʻalayhim: wa-ʹAñta ʻalaa kulli shayʹiñ Shaheed.
நீ எனக்கு ஏவியபடியே நான் (அவர்களை நோக்கி), ‘‘நீங்கள் எனக்கும் உங்களுக்கும் இறைவனாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்'' என்றுதான் கூறினேன். தவிர, வேறொன்றையும் (ஒருபோதும்) நான் கூறவில்லை. நான் அவர்களுடன் இருந்த வரை அவர்களின் செயலை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீதான் அவர்களைக் கவனித்தவனாக இருந்தாய். அனைத்திற்கும் நீயே சாட்சி.
-
5:118
إِن تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ ۖ وَإِن تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنتَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ
ʹIñ tuʻaẓẓibhum faʹinnahum ʻibaaduk; wa-ʹiñ tag̣fir lahum faʹinnaka ʹAñtal ʻAzeezul Ḥakeem.
அவர்களை நீ வேதனை செய்தால் நிச்சயமாக அவர்கள் உன் அடியார்களே! (உன் அடியார்களை உன் இஷ்டப்படிச் செய்ய உனக்கு உரிமையுண்டு.) அவர்களை நீ மன்னித்துவிட்டாலோ (அதைத் தடை செய்ய எவராலும் முடியாது. ஏனென்றால்,) நிச்சயமாக நீதான் (அனைவரையும்) மிகைத்தவன், மிக்க ஞானமுடையவன்'' (என்று கூறுவார்.)
-
5:119
قَالَ ٱللَّهُ هَـٰذَا يَوْمُ يَنفَعُ ٱلصَّـٰدِقِينَ صِدْقُهُمْ ۚ لَهُمْ جَنَّـٰتٌ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ خَـٰلِدِينَ فِيهَآ أَبَدًا ۚ رَّضِىَ ٱللَّهُ عَنْهُمْ وَرَضُوا۟ عَنْهُ ۚ ذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ
Q̣aalal laahu haaẓaa yawmu yañfaʻuṣ Ṣaadiq̣eena Ṣidq̣uhum; lahum jannaatuñ tajree miñ taḥ-tihal ʹanhaaru khaalideena feehaaa ʹabadaa: Raḍiyal laahu ʻanhum wa-raḍoo ʻanh: Ẓaalikal Fawzul ʻaz̤̣eem.
அதற்கு அல்லாஹ் “உண்மை சொல்லும் சத்தியவான்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கக்கூடிய நாள் இதுதான். தொடர்ந்து நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கும் சொர்க்கங்களும் அவர்களுக்கு உண்டு. அதில் அவர்கள் என்றென்றுமே தங்கிவிடுவார்கள்'' என்று கூறுவான். (அந்நாளில்) அவர்களைப் பற்றி அல்லாஹ்வும் மகிழ்ச்சியடைவான். அவர்களும் அவனைப் பற்றி மகிழ்ச்சியடைவார்கள். இது மிக்க மகத்தான பெரும் பாக்கியம் ஆகும்.
-
5:120
لِلَّهِ مُلْكُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا فِيهِنَّ ۚ وَهُوَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌۢ
Lillaahi mulkus samaawaati wal-ʹarḍi wa-maa feehinn: wa-Huwa ʻalaa kulli shayʹiñ Q̣adeer.
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும், இவற்றில் உள்ள அனைத்தின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே! அவன் (இவை) அனைத்தின் மீதும் மிக்க பேராற்றலுடையவன்.
Surah Al-An'amBegins here at 6:1
-
6:1
ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ وَجَعَلَ ٱلظُّلُمَـٰتِ وَٱلنُّورَ ۖ ثُمَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِرَبِّهِمْ يَعْدِلُونَ
ʹAl-Ḥamdu lillaahil laẓee khalaq̣as Samaawaati wal-ʹarḍa wa-jaʻalaz̤̣ z̤̣u-lu-maa-ti wan-Noor. S̤ummal laẓeena kafaroo bi-Rabbihim yaʻdiloon.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்குரியதே! அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான். மேலும், இருள்களையும், ஒளியையும் உண்டாக்கினான். இவ்வாறிருந்தும் நிராகரிப்பவர்கள் (அல்லாஹ்வாகிய) தங்கள் இறைவனுக்கு (பொய்யான தெய்வங்களை) சமமாக்குகின்றனர்.
-
6:2
هُوَ ٱلَّذِى خَلَقَكُم مِّن طِينٍ ثُمَّ قَضَىٰٓ أَجَلًا ۖ وَأَجَلٌ مُّسَمًّى عِندَهُۥ ۖ ثُمَّ أَنتُمْ تَمْتَرُونَ
Huwal laẓee khalaq̣akum miñ ṭeeniñ s̤umma q̣aḍaaa ʹajalaa. Wa-ʹajalum Musamman ʻiñdahoo s̤umma ʹañtum tamtaroon!
அவன்தான் உங்களைக் களிமண்ணால் படைத்து (உங்களுக்குரிய) வாழ்நாளைக் (குறிப்பிட்டு) நிர்ணயம் செய்தவன். அவனிடத்தில் (உங்கள் விசாரணைக்காகவும்) ஒரு குறிப்பிட்ட காலமுண்டு. இவ்வாறிருந்தும் நீங்கள் (அவனுடைய இறைத்தன்மையை) சந்தேகிக்கிறீர்கள்.
-
6:3
وَهُوَ ٱللَّهُ فِى ٱلسَّمَـٰوَٰتِ وَفِى ٱلْأَرْضِ ۖ يَعْلَمُ سِرَّكُمْ وَجَهْرَكُمْ وَيَعْلَمُ مَا تَكْسِبُونَ
Wa-Huwal laahu fis samaawaati wa-fil ʹarḍ? Yaʻlamu sirrakum wa-jahrakum wayaʻlamu maa- taksiboon.
வானங்களிலும், பூமியிலும் (வணக்கத்திற்குரிய) அல்லாஹ், அவன்தான். அவன் உங்கள் இரகசியத்தையும் வெளிப்படையானதையும் நன்கறிவான். (நன்மையோ, தீமையோ) நீங்கள் செய்யும் அனைத்தையும் நன்கறிவான்.
-
6:4
وَمَا تَأْتِيهِم مِّنْ ءَايَةٍ مِّنْ ءَايَـٰتِ رَبِّهِمْ إِلَّا كَانُوا۟ عَنْهَا مُعْرِضِينَ
Wa-maa taʹteehim min ʹAayaati Min ʹAayatim Rabbihim ʹillaa kaanoo ʻanhaa muʻriḍeen.
(இவ்வாறிருந்தும், நிராகரிப்பவர்களோ) தங்கள் இறைவனின் வசனங்களில் எது வந்தபோதிலும் அதை அவர்கள் புறக்கணிக்காமல் இருப்பதில்லை.
-
6:5
فَقَدْ كَذَّبُوا۟ بِٱلْحَقِّ لَمَّا جَآءَهُمْ ۖ فَسَوْفَ يَأْتِيهِمْ أَنۢبَـٰٓؤُا۟ مَا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ
Faq̣ad kaẓẓaboo bil-Ḥaq̣q̣i lammaa jaaaʹahum: fasawfa yaʹteehim ʹambaaaʹu maa- kaanoo bihee yas-tahziʹoon.
ஆகவே, அவர்களிடம் வந்திருக்கும் இந்த சத்திய (வேத)த்தையும் அவர்கள் பொய்யாக்குகின்றனர். ஆனால், எவ்விஷயங்கள் பற்றி (அவை பொய்யானவை என) அவர்கள் பரிகசித்து கொண்டிருக்கின்றனரோ அவை (உண்மையாகவே) அவர்களிடம் வந்தே தீரும்.
-
6:6
أَلَمْ يَرَوْا۟ كَمْ أَهْلَكْنَا مِن قَبْلِهِم مِّن قَرْنٍ مَّكَّنَّـٰهُمْ فِى ٱلْأَرْضِ مَا لَمْ نُمَكِّن لَّكُمْ وَأَرْسَلْنَا ٱلسَّمَآءَ عَلَيْهِم مِّدْرَارًا وَجَعَلْنَا ٱلْأَنْهَـٰرَ تَجْرِى مِن تَحْتِهِمْ فَأَهْلَكْنَـٰهُم بِذُنُوبِهِمْ وَأَنشَأْنَا مِنۢ بَعْدِهِمْ قَرْنًا ءَاخَرِينَ
ʹAlam yaraw kam ʹahlaknaa miñ q̣ablihim miñ q̣arnim makkannaahum fil ʹarḍi maa- lam numakkil lakum wa-ʹarsalnas samaaaʹa ʻalayhim midraaraa, wa-jaʻalnal ʹanhaara tajree miñ taḥ-tihim faʹahlaknaahum biẓunoobihim wa-ʹañshaʹnaa mim baʻdihim q̣arnan ʹaakhareen.
அவர்களுக்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தினரை நாம் அழித்திருக்கிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? பூமியில் உங்களுக்கு நாம் செய்து தராத வசதிகளையெல்லாம் அவர்களுக்கு நாம் செய்து தந்திருந்தோம். வானத்திலிருந்து தாரை தாரையாக மழை பெய்யும்படிச் செய்து, அவர்களின் (ஆதிக்கத்தின்) கீழ் நீரருவிகளும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும்படி செய்தோம். (எனினும் அவர்கள் பாவத்திலேயே ஆழ்ந்து விட்டனர்.) ஆகவே, அவர்களுடைய பாவங்களின் காரணமாக அவர்களை அழித்துவிட்டோம். அவர்களுக்குப் பின்னர் மற்றொரு கூட்டத்தாரை நாம் உற்பத்தி செய்தோம்.
-
6:7
وَلَوْ نَزَّلْنَا عَلَيْكَ كِتَـٰبًا فِى قِرْطَاسٍ فَلَمَسُوهُ بِأَيْدِيهِمْ لَقَالَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِنْ هَـٰذَآ إِلَّا سِحْرٌ مُّبِينٌ
Wa-law nazzalnaa ʻalayka Kitaabañ fee q̣irṭaasiñ falamasoohu biʹaydeehim laq̣aalal laẓeena kafarooo ʹin haaẓaaa ʹillaa siḥrum mubeen.
கடிதத்தில் எழுதப்பட்ட ஒரு வேதத்தையே நாம் உம்மீது இறக்கிவைத்து அதை அவர்கள் தங்கள் கைகளால் தொட்டுப் பார்த்தபோதிலும் ‘‘இது பகிரங்கமான சூனியத்தைத் தவிர வேறில்லை'' என்றே இந்நிராகரிப்பவர்கள் நிச்சயம் கூறுவார்கள்.
-
6:8
وَقَالُوا۟ لَوْلَآ أُنزِلَ عَلَيْهِ مَلَكٌ ۖ وَلَوْ أَنزَلْنَا مَلَكًا لَّقُضِىَ ٱلْأَمْرُ ثُمَّ لَا يُنظَرُونَ
Wa-q̣aaloo Laaa-law ʹuñzila ʻalayhi malak? Wa-law ʹañzalnaa malakal laq̣uḍiyal ʹamru s̤umma laa- yuñz̤̣aroon.
(‘‘இவர் உண்மையான தூதர்தான் என்று சாட்சி சொல்வதற்கு) அவருக்காக ஒரு வானவர் அனுப்பப்பட வேண்டாமா?'' என்று அவர்கள் கூறுகின்றனர். (அவர்கள் விரும்புகிறபடி) நாம் ஒரு வானவரை அனுப்பி வைத்திருந்தால், (அவர்களின்) காரியம் முடிவு பெற்றிருக்கும். பிறகு, (அதில்) அவர்களுக்கு அவகாசம் கிடைத்திருக்காது. (உடனே அவர்கள் அழிந்திருப்பார்கள்.)
-
6:9
وَلَوْ جَعَلْنَـٰهُ مَلَكًا لَّجَعَلْنَـٰهُ رَجُلًا وَلَلَبَسْنَا عَلَيْهِم مَّا يَلْبِسُونَ
Wa-law jaʻalnaahu malakal lajaʻalnaahu rajulañw wa-la-labasnaa ʻalayhim maa yalbisoon.
(அல்லது நம்) தூதரை ஒரு மலக்காகவே அனுப்புவதாயினும் (அவர்களுக்கு வானவர்களைக் காணும் சக்தி இல்லாததனால்) அவரையும் ஒரு மனிதனுடைய ரூபத்தில்தான் நாம் அனுப்புவோம். (அது சமயத்தில்) இப்போது இருக்கும் (அதே) சந்தேகத்தையே அவர்களுக்கு நாம் ஏற்படுத்தி விடுவோம்.
-
6:10
وَلَقَدِ ٱسْتُهْزِئَ بِرُسُلٍ مِّن قَبْلِكَ فَحَاقَ بِٱلَّذِينَ سَخِرُوا۟ مِنْهُم مَّا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ
Wa-laq̣adis tuhziʹa birusulim miñ q̣ablika faḥaaq̣a billaẓeena sakhiroo minhum maa kaanoo bihee yastahziʹoon.
(நபியே!) உமக்கு முன்னர் வந்த (நம் மற்ற) தூதர்களும் நிச்சயமாக (இவ்வாறே) பரிகசிக்கப்பட்டனர். முடிவில், அவர்களில் பரிகசித்தவர்களை அவர்கள் பரிகசித்துக் கொண்டிருந்தது (வேதனை) சூழ்ந்து கொண்டது.
-
6:11
قُلْ سِيرُوا۟ فِى ٱلْأَرْضِ ثُمَّ ٱنظُرُوا۟ كَيْفَ كَانَ عَـٰقِبَةُ ٱلْمُكَذِّبِينَ
Q̣ul seeroo fil ʹarḍi s̤ummañ z̤̣uroo kayfa kaana ʻaaq̣ibatul mukaẓẓibeen.
(நபியே! நீர் அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் பூமியில் சுற்றித்திரிந்து (உங்களைப் போல்) பொய்யாக்கிக் கொண்டிருந்தவர்களின் முடிவு எவ்வாறு ஆயிற்று? என்று நீங்கள் கவனித்துப் பாருங்கள்'' என்று கூறுவீராக.
-
6:12
قُل لِّمَن مَّا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ قُل لِّلَّهِ ۚ كَتَبَ عَلَىٰ نَفْسِهِ ٱلرَّحْمَةَ ۚ لَيَجْمَعَنَّكُمْ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَـٰمَةِ لَا رَيْبَ فِيهِ ۚ ٱلَّذِينَ خَسِرُوٓا۟ أَنفُسَهُمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ
Q̣ul limam maa fis samaawaati wal-ʹarḍ? Q̣ul lillaah. Kataba ʻalaa Nafsihir Raḥmah. Layajmaʻannakum ʹilaa Yawmil Q̣iyaamati laa- rayba feeh. ʹAllaẓeena khasirooo ʹañfusahum fahum laa- yuʹminoon.
‘‘வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் யாருக்குரியன?'' என நீர் (அவர்களைக்) கேட்பீராக. (இதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன? நீரே அவர்களை நோக்கி இவை அனைத்தும்) ‘‘அல்லாஹ்வுக்குரியனவே!'' என்று கூறுவீராக. அவன் கருணையைத் தன்மீது கடமையாக்கிக் கொண்டிருக்கிறான். (ஆகவேதான், உங்கள் குற்றத்திற்காக இதுவரை உங்களைத் தண்டிக்காதிருக்கிறான். எனினும்,) நிச்சயமாக உங்கள் அனைவரையும் மறுமை நாளில் ஒன்று சேர்ப்பான். அதில் சந்தேகமேயில்லை. எவர்கள் (உண்மையை நிராகரித்து) தங்களுக்குத் தாமே நஷ்டத்தை உண்டு பண்ணிக் கொண்டார்களோ அவர்கள் (இதை) நம்பவே மாட்டார்கள்.
-
6:13
۞ وَلَهُۥ مَا سَكَنَ فِى ٱلَّيْلِ وَٱلنَّهَارِ ۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ
Walahoo maa- sakana fil lay-li wan-nahaar. Wa-Huwas Sameeʻul ʻAleem.
(வானங்களிலோ, பூமியிலோ) இரவிலும், பகலிலும் வசித்திருப்பவை அனைத்தும் அவனுக்குரியனவே! அவன்தான் நன்கு செவியுறுபவனும், (அனைத்தையும்) நன்கறிந்தவனும் ஆவான்.
-
6:14
قُلْ أَغَيْرَ ٱللَّهِ أَتَّخِذُ وَلِيًّا فَاطِرِ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَهُوَ يُطْعِمُ وَلَا يُطْعَمُ ۗ قُلْ إِنِّىٓ أُمِرْتُ أَنْ أَكُونَ أَوَّلَ مَنْ أَسْلَمَ ۖ وَلَا تَكُونَنَّ مِنَ ٱلْمُشْرِكِينَ
Q̣ul ʹag̣ayral laahi ʹattakhiẓu waliyyañ Faaṭiris samaawaati wal-ʹarḍi wa-Huwa yuṭʻimu wa-laa yuṭʻam. Q̣ul ʹinneee ʹumirtu ʹan ʹakoona ʹawwala man ʹaslama wa-laa takoonanna minal mushrikeen.
(நபியே!) கூறுவீராக: ‘‘வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வைத் தவிர்த்து (மற்றெவரையும் என்) பாதுகாவலனாக நான் எடுத்துக் கொள்வேனா? அவன்தான் (நமக்கு) உணவளிக்கிறான்; அவனுக்கு யாரும் உணவளிப்பதில்லை. (நபியே! மேலும்,) கூறுவீராக: ‘‘(இறைவனுக்கு) இணைவைத்து வணங்குபவர்களுடன் சேராது முற்றிலும் அவனுக்கு பணிந்து வழிப்பட்டவர்களில் முதன்மையானவனாக நான் இருக்கும்படியே எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது.''
-
6:15
قُلْ إِنِّىٓ أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّى عَذَابَ يَوْمٍ عَظِيمٍ
Q̣ul ʹinneee ʹakhaafu ʹin ʻaṣaytu Rabbee ʻaẓaaba Yawmin ʻAz̤̣eem.
(நபியே! மேலும்,) கூறுவீராக: ‘‘என் இறைவனுக்கு நான் மாறுசெய்தால், மகத்தான நாளின் வேதனையை(யும் தண்டனையையும்) நிச்சயமாக நான் பயப்படுகிறேன்.''
-
6:16
مَّن يُصْرَفْ عَنْهُ يَوْمَئِذٍ فَقَدْ رَحِمَهُۥ ۚ وَذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْمُبِينُ
Mañy yuṣraf ʻanhu yawmaʹiẓin faq̣ad raḥimah; waẓaalikal fawzul mubeen.
அந்நாளில் எவரை விட்டும் வேதனை தடுக்கப்படுகிறதோ அவருக்கு நிச்சயமாக அல்லாஹ் அருள் புரிந்தே விட்டான். இதுதான் தெளிவான வெற்றியாகும்.
-
6:17
وَإِن يَمْسَسْكَ ٱللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُۥٓ إِلَّا هُوَ ۖ وَإِن يَمْسَسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ
Wa-ʹiñy yam-saskal laahu biḍurriñ falaa kaashifa lahooo ʹillaa Hoo: wa-ʹiñy yam-saska bikhayriñ fa-Huwa ʻalaa kulli shayʹiñ Q̣adeer.
(நபியே!) அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கிழைத்தால், அதை நீக்குபவர் அவனைத் தவிர வேறெவருமில்லை. உமக்கு ஒரு நன்மையை அவன் கொடுத்தாலும் (அதைத் தடுத்துவிடக் கூடியவன் எவனும் இல்லை.) அவன் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன்.
-
6:18
وَهُوَ ٱلْقَاهِرُ فَوْقَ عِبَادِهِۦ ۚ وَهُوَ ٱلْحَكِيمُ ٱلْخَبِيرُ
Wa-huwal Q̣aahiru fawq̣a ʻibaadih; wa-Huwal Ḥakeemul Khabeer.
அவனே தன் அடியார்களை அடக்கி ஆள்கிறான். அவன்தான் மிக்க ஞானமுடையவன், (அனைத்தையும்) நன்கறிந்தவன் ஆவான்.
-
6:19
قُلْ أَىُّ شَىْءٍ أَكْبَرُ شَهَـٰدَةً ۖ قُلِ ٱللَّهُ ۖ شَهِيدٌۢ بَيْنِى وَبَيْنَكُمْ ۚ وَأُوحِىَ إِلَىَّ هَـٰذَا ٱلْقُرْءَانُ لِأُنذِرَكُم بِهِۦ وَمَنۢ بَلَغَ ۚ أَئِنَّكُمْ لَتَشْهَدُونَ أَنَّ مَعَ ٱللَّهِ ءَالِهَةً أُخْرَىٰ ۚ قُل لَّآ أَشْهَدُ ۚ قُلْ إِنَّمَا هُوَ إِلَـٰهٌ وَٰحِدٌ وَإِنَّنِى بَرِىٓءٌ مِّمَّا تُشْرِكُونَ
Q̣ul ʹayyu shayʹin ʹakbaru shahaadah? Q̣ulil laahu shaheedum baynee wa-baynakum, wa-ʹooḥiya ʹilayya haaẓal Q̣urʹaanu liʹuñẓirakum̃ bihee wa-mam balag̣. ʹAʹinnakum latashhadoona ʹanna maʻal laahi ʹaalihatan ʹukhraa? Q̣ul laaa ʹashhad! Q̣ul ʹinnamaa Huwa ʹIlaahuñw Waaḥiduñw wa-ʹinnanee bareeeʹum mimmaa tushrikoon.
(நபியே!) ‘‘சாட்சிகளில் மிகப் பெரியது எது?'' என நீர் (அவர்களைக்) கேட்பீராக. (அவர் களால் என்ன கூறமுடியும்? நீரே அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்வே! (பெரியவன். அவனே) எனக்கும் உங்களுக்கும் இடையில் சாட்சியாக(வும்) இருக்கிறான். இந்தக் குர்ஆனைக் கொண்டு உங்களுக்கும், (அது) எட்டியவர்களுக்கும் நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவே இது எனக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறி, நிச்சயமாக வணக்கத்திற்குரிய மற்றெவரும் அல்லாஹ்வுடன் இருப்பதாக, (உண்மையாகவே) நீங்கள் சாட்சி கூறுவீர்களா?'' (என்றும் அவர்களை) நீர் கேட்பீராக. (இதற்கவர்கள் பதில் கூறுவதென்ன! ‘‘அவ்வாறு) நான் சாட்சி கூறமாட்டேன்!'' என்று நீர் கூறிவிட்டு, ‘‘நிச்சயமாக வணக்கத்திற்குரியவன் அவன் ஒருவன்தான்; (அவனுக்கு) நீங்கள் இணைவைப்பதை விட்டு மெய்யாகவே நான் வெறுத்து விலகுகின்றன்'' என்றும் கூறுவீராக.
-
6:20
ٱلَّذِينَ ءَاتَيْنَـٰهُمُ ٱلْكِتَـٰبَ يَعْرِفُونَهُۥ كَمَا يَعْرِفُونَ أَبْنَآءَهُمُ ۘ ٱلَّذِينَ خَسِرُوٓا۟ أَنفُسَهُمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ
Allaẓeena ʹaataynaahumul Kitaaba yaʻrifoonahoo kamaa yaʻrifoona ʹabnaaaʹahum. ʹAllaẓeena khasirooo ʹañfusahum fahum laa- yuʹminoon.
எவரும் தங்கள் குழந்தைகளை(ச் சந்தேகமற) அறிவதைப்போல, வேதம் கொடுக்கப் பட்டவர்கள் (நம் தூதராகிய) இவரை (இவர் இறைவனுடைய தூதர்தான் என்று) நன்கறிவார்கள். (எனினும், அவர்களில்) எவர்கள் (இதை மறைத்து) தங்களுக்குத் தாமே நஷ்டமிழைத்துக் கொண்டனரோ அவர்கள்தான் (நம் தூதராகிய இவரை இறைவனுடைய தூதரென்று) நம்பமாட்டார்கள்.
-
6:21
وَمَنْ أَظْلَمُ مِمَّنِ ٱفْتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَوْ كَذَّبَ بِـَٔايَـٰتِهِۦٓ ۗ إِنَّهُۥ لَا يُفْلِحُ ٱلظَّـٰلِمُونَ
Wa-man ʹaz̤̣lamu mim-manif taraa ʻalal laahi kaẓiban ʹaw kaẓẓaba biʹAayaatih? ʹInnahoo laa- yufliḥuz̤̣ z̤̣aalimoon.
அல்லாஹ்வைப் பற்றிக் கற்பனையாகப் பொய் கூறியவனை விடவோ, அவனுடைய வசனங்களைப் பொய்யாக்கியவனை விடவோ பெரும் அநியாயக்காரன் யார்? நிச்சயமாக (இந்த) அநியாயக்காரர்கள் வெற்றி அடைய மாட்டார்கள்.
-
6:22
وَيَوْمَ نَحْشُرُهُمْ جَمِيعًا ثُمَّ نَقُولُ لِلَّذِينَ أَشْرَكُوٓا۟ أَيْنَ شُرَكَآؤُكُمُ ٱلَّذِينَ كُنتُمْ تَزْعُمُونَ
Wa-yawma naḥ-shuruhum jameeʻañ s̤umma naq̣oolu lil-laẓeena ʹashrakooo ʹayna shurakaaaʹukumul laẓeena kuñtum tazʻumoon.
நாம் இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் நாளில் (இவர்களில்) இணைவைத்து வணங்கியவர்களை நோக்கி, ‘‘(அல்லாஹ்விற்கு) இணையானவை என நீங்கள் எவற்றை எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவை எங்கே?'' என்று நாம் கேட்போம்.
-
6:23
ثُمَّ لَمْ تَكُن فِتْنَتُهُمْ إِلَّآ أَن قَالُوا۟ وَٱللَّهِ رَبِّنَا مَا كُنَّا مُشْرِكِينَ
S̤umma lam takuñ fitnatuhum ʹillaaa ʹañ q̣aaloo wallaahi Rabbina maa- kunnaa mushrikeen.
(அது சமயம்) அவர்கள், ‘‘எங்கள் இறைவன் அல்லாஹ்தான். நாங்கள் (அவனுக்கு எதையும்) இணைவைக்க வில்லையே!'' என்று (பொய்) கூறுவதைத் தவிர அவர்களது குழப்பம் வேறொன்றும் இருக்காது.
-
6:24
ٱنظُرْ كَيْفَ كَذَبُوا۟ عَلَىٰٓ أَنفُسِهِمْ ۚ وَضَلَّ عَنْهُم مَّا كَانُوا۟ يَفْتَرُونَ
ʹUñz̤̣ur kayfa kaẓaboo ʻalaaa ʹañfusihim wa-ḍalla ʻanhum maa kaanoo yaftaroon.
தங்களைப் பற்றியே அவர்கள் எவ்வாறு பொய் கூறுகின்றனர் என்பதை (நபியே!) கவனிப்பீராக. (அல்லாஹ்விற்கு இணையானவை என்று) அவர்கள் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டிருந்தவை அனைத்தும் அவர்களை விட்டு மறைந்துவிடும்.
-
6:25
وَمِنْهُم مَّن يَسْتَمِعُ إِلَيْكَ ۖ وَجَعَلْنَا عَلَىٰ قُلُوبِهِمْ أَكِنَّةً أَن يَفْقَهُوهُ وَفِىٓ ءَاذَانِهِمْ وَقْرًا ۚ وَإِن يَرَوْا۟ كُلَّ ءَايَةٍ لَّا يُؤْمِنُوا۟ بِهَا ۚ حَتَّىٰٓ إِذَا جَآءُوكَ يُجَـٰدِلُونَكَ يَقُولُ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِنْ هَـٰذَآ إِلَّآ أَسَـٰطِيرُ ٱلْأَوَّلِينَ
Wa-minhum mañy yastamiʻu ʹilayk; wa-jaʻalnaa ʻalaa q̣uloobihim ʹakinnatan ʹañy yafq̣ahoohu wa-feee ʹaaẓaanihim waq̣raa; wa-ʹiñy yaraw kulla ʹAayatil laa yuʹminoo bihaa: ḥattaaa ʹiẓaa jaaaʹooka yujaadiloonaka yaq̣oolul laẓeena kafarooo ʹin haaẓaaa ʹillaaa ʹasaaṭeerul ʹawwaleen.
(நபியே! உமக்கு கட்டுப்படுகிறவர்களைப் போல பாவனை செய்து நீர் கூறுவதைக் கேட்க) உமக்கு செவி சாய்ப்பவர்களும் அவர்களில் உண்டு. எனினும், அவர்கள் (தம் தீயச் செயல்களின் காரணமாக) அதை விளங்கிக் கொள்ளாதிருக்கும்படி அவர்களுடைய உள்ளங்களில் திரையையும் அவர்களுடைய காதுகளில் செவிட்டையும் நாம் ஏற்படுத்திவிட்டோம். ஆகவே, (இவர்கள் சத்தியத்திற்குரிய) அத்தாட்சிகள் அனைத்தையும் (தெளிவாகக்) கண்டபோதிலும் அவற்றை அவர்கள் (ஒரு சிறிதும்) நம்பவே மாட்டார்கள். (நபியே!) அவர்கள் உம்மிடம் வந்த போதிலும், உம்முடன் தர்க்கித்து, ‘‘இவை பழங்காலத்தில் உள்ளவர்களின் கட்டுக் கதைகளே தவிர வேறில்லை'' என்றே இந்நிராகரிப்பவர்கள் கூறுவார்கள்.
-
6:26
وَهُمْ يَنْهَوْنَ عَنْهُ وَيَنْـَٔوْنَ عَنْهُ ۖ وَإِن يُهْلِكُونَ إِلَّآ أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ
Wa-hum yan-hawna ʻanhu wa-yanʹawna ʻanh: wa-ʹiñy yuh-likoona ʹillaaa ʹañfusahum wa-maa yashʻuroon.
அவர்கள் (மற்றவர்களையும்) இ(தைக்கேட்ப)தில் இருந்து தடுத்துத் தாங்களும் இதைவிட்டு வெருண்டோடுவார்கள். (இதனால்) அவர்கள் தங்களையே நாசமாக்கிக் கொள்கிறார்கள். (இதை) அவர்கள் உணர்ந்து கொள்ளவே மாட்டார்கள்.
-
6:27
وَلَوْ تَرَىٰٓ إِذْ وُقِفُوا۟ عَلَى ٱلنَّارِ فَقَالُوا۟ يَـٰلَيْتَنَا نُرَدُّ وَلَا نُكَذِّبَ بِـَٔايَـٰتِ رَبِّنَا وَنَكُونَ مِنَ ٱلْمُؤْمِنِينَ
Wa-law taraaa ʹiẓ wuq̣ifoo ʻalan Naari faq̣aaloo yaa-laytanaa nuraddu wa-laa nukaẓẓiba biʹAayaati Rabbinaa wa-nakoona minal Muʹmineen!
(நரக) நெருப்பின் முன் அவர்கள் நிறுத்தப்படும் பொழுது, (நபியே!) நீர் (அவர்களைப்) பார்த்தால், ‘‘நாங்கள் (உலகத்திற்கு)த் திரும்ப அனுப்பப்பட வேண்டுமே! (அவ்வாறாயின்) எங்கள் இறைவனின் வசனங்களை நாங்கள் பொய்யாக்காமல், நம்பிக்கையாளர்களில் ஆகிவிடுவோம்'' என்று அவர்கள் புலம்புவார்கள்.
-
6:28
بَلْ بَدَا لَهُم مَّا كَانُوا۟ يُخْفُونَ مِن قَبْلُ ۖ وَلَوْ رُدُّوا۟ لَعَادُوا۟ لِمَا نُهُوا۟ عَنْهُ وَإِنَّهُمْ لَكَـٰذِبُونَ
Bal badaa lahum maa kaanoo yukhfoona miñ q̣abl. Wa-law ruddoo laʻaadoo limaa nuhoo ʻanhu wa-ʹinnahum lakaaẓiboon.
(இதுவும் அவர்கள் மனமாறக் கூறவில்லை) மாறாக! இதற்கு முன்னர் (அவர்கள் தங்களுக்குள்) மறைத்து வைத்திருந்ததுதான் அவர்களிடம் தென்பட்டது. (ஏனென்றால்,) அவர்கள் (இவ்வுலகத்திற்குத்) திரும்ப அனுப்பப்பட்டால், அவர்களுக்குத் தடை செய்திருந்தவற்றின் பக்கமே மீண்டும் செல்வார்கள். நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான்.
-
6:29
وَقَالُوٓا۟ إِنْ هِىَ إِلَّا حَيَاتُنَا ٱلدُّنْيَا وَمَا نَحْنُ بِمَبْعُوثِينَ
Wa-q̣aalooo ʹin hiya ʹillaa ḥayaatunad dunyaa wa-maa naḥnu bimabʻoos̤een.
மேலும், ‘‘இவ்வுலகத்தில் நாம் வாழ்வதைத் தவிர (நாம் இறந்த பின் நமக்கு வேறு வாழ்க்கை) இல்லை; ஆகவே, (இறந்தபின்) நாம் உயிர்ப்பிக்கப்பட மாட்டோம்'' என்று அவர்கள் கூறுகின்றனர்.
-
6:30
وَلَوْ تَرَىٰٓ إِذْ وُقِفُوا۟ عَلَىٰ رَبِّهِمْ ۚ قَالَ أَلَيْسَ هَـٰذَا بِٱلْحَقِّ ۚ قَالُوا۟ بَلَىٰ وَرَبِّنَا ۚ قَالَ فَذُوقُوا۟ ٱلْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْفُرُونَ
Wa-law taraaa ʹiẓ wuq̣ifoo ʻalaa Rabbihim! q̣aala ʹalaysa haaẓaa bilḥaq̣q̣? Q̣aaloo balaa wa-Rabbinaa! Q̣aala faẓooq̣ul ʻaẓaaba bimaa kuñtum takfuroon.
(இவ்வாறு கூறும்) அவர்கள் (உயிர்ப்பிக்கப்பட்டு) தங்கள் இறைவனுக்கு முன் நிறுத்தப்படும்பொழுது (நபியே! நீர் அவர்களைக்) காண்பீராயின்! (அது சமயம் இறைவன் அவர்களை நோக்கி, ‘‘விசாரணை நாளாகிய) இது உண்மையல்லவா?'' என்று கேட்பான். (அதற்கு) அவர்கள், ‘‘எங்கள் இறைவனே! உண்மைதான்'' எனக் கூறுவார்கள். (அதற்கு) அவன் ‘‘(இதை) நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக (நரகத்தின்) வேதனையை நீங்கள் சுவைத்துக் கொண்டிருங்கள்'' என்று கூறுவான்.
-
6:31
قَدْ خَسِرَ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِلِقَآءِ ٱللَّهِ ۖ حَتَّىٰٓ إِذَا جَآءَتْهُمُ ٱلسَّاعَةُ بَغْتَةً قَالُوا۟ يَـٰحَسْرَتَنَا عَلَىٰ مَا فَرَّطْنَا فِيهَا وَهُمْ يَحْمِلُونَ أَوْزَارَهُمْ عَلَىٰ ظُهُورِهِمْ ۚ أَلَا سَآءَ مَا يَزِرُونَ
Q̣ad khasiral laẓeena kaẓẓaboo bi-liq̣aaaʹil laah,― ḥattaaa ʹiẓaa jaaaʹathumus Saaʻatu bag̣tatañ q̣aaloo yaa-ḥasratanaa ʻalaa maa- farraṭnaa feehaa wa-hum yaḥ-miloona ʹawzaarahum ʻalaa z̤̣uhoorihim. ʹAlaa saaaʹa maa- yaziroon!
(ஆகவே,) எவர்கள் அல்லாஹ்வைச் சந்திக்க வேண்டும் என்பதைப் பொய்யாக்குகின்றனரோ அவர்கள் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்களாகி விட்டனர். (எதிர்பாராதவாறு) திடீரென அவர்களுக்கு (விசாரணைக்) காலம் (என்ற மறுமை) வந்துவிட்டால், அவர்கள் தங்கள் பாவச் சுமைகளைத் தங்கள் முதுகுகளின் மீது சுமந்தவர்களாக, இ(ந்த வேதத்)தை நாங்கள் நம்பாத (குற்றத்)தால் எங்களுக்கு ஏற்பட்ட துக்கமே!'' என்று புலம்புவார்கள். அவர்கள் சுமந்து கொண்டிருப்பவை மிகக் கெட்டவை அல்லவா?
-
6:32
وَمَا ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَآ إِلَّا لَعِبٌ وَلَهْوٌ ۖ وَلَلدَّارُ ٱلْـَٔاخِرَةُ خَيْرٌ لِّلَّذِينَ يَتَّقُونَ ۗ أَفَلَا تَعْقِلُونَ
Wa-mal ḥayaatud dunyaaa ʹillaa laʻibuñw walahw? Wa-lad-Daarul ʹAakhiratu khayrul lillaẓeena yattaq̣oon. ʹAfalaa taʻq̣iloon?
இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும் கேளிக்கையுமே தவிர வேறில்லை! எனினும் இறையச்சமுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமையின் வாழ்க்கையே மிக மேலானது. (இவ்வளவுகூட) நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
-
6:33
قَدْ نَعْلَمُ إِنَّهُۥ لَيَحْزُنُكَ ٱلَّذِى يَقُولُونَ ۖ فَإِنَّهُمْ لَا يُكَذِّبُونَكَ وَلَـٰكِنَّ ٱلظَّـٰلِمِينَ بِـَٔايَـٰتِ ٱللَّهِ يَجْحَدُونَ
Q̣ad naʻlamu innahoo layaḥzunukal laẓee yaq̣ooloona faʹinnahum laa- yukaẓẓiboonaka wa-laakinnaz̤̣ z̤̣aalimeena biʹAayaatil lahi yaj-ḥadoon.
(நபியே! உம்மைப் பொய்யரென) அவர்கள் கூறுவது, நிச்சயமாக உமக்குக் கவலையைத் தருகிறது என்பதை உறுதியாக நாம் அறிவோம். நிச்சயமாக அவர்கள் உம்மைப் பொய்யாக்கவில்லை. ஆனால், இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களைத்தான் (பொய்யாக்கி) நிராகரிக்கின்றனர்.
-
6:34
وَلَقَدْ كُذِّبَتْ رُسُلٌ مِّن قَبْلِكَ فَصَبَرُوا۟ عَلَىٰ مَا كُذِّبُوا۟ وَأُوذُوا۟ حَتَّىٰٓ أَتَىٰهُمْ نَصْرُنَا ۚ وَلَا مُبَدِّلَ لِكَلِمَـٰتِ ٱللَّهِ ۚ وَلَقَدْ جَآءَكَ مِن نَّبَإِى۟ ٱلْمُرْسَلِينَ
Wa-laq̣ad kuẓẓibat Rusulum miñ q̣ablika faṣabaroo ʻalaa maa- kuẓẓiboo wa-ʹooẓoo ḥattaaa ʹataahum naṣrunaa. Wa-laa mubaddila li-Kalimaatil laah. Wa-laq̣ad jaaʹaka min nabaʹil Mursaleen.
உங்களுக்கு முன்னிருந்த (நமது பல) தூதர்களும் (இவ்வாறு) பொய்யரெனவே கூறப்பட்டனர். அவர்களுக்கு நம் உதவி வரும் வரை அவர்கள் பொய்யரெனத் துன்புறுத்தப்பட்டதை அவர்கள் (உறுதியோடு) பொறுத்துக் கொண்டிருந்தனர். (ஆகவே, நபியே! நீரும் அவ்வாறே பொறுத்திருப்பீராக.) அல்லாஹ்வுடைய வாக்குகளை எவராலும் மாற்ற முடியாது. (உமக்கு முன்னிருந்த நம்) தூதர்களின் (இத்தகைய) செய்திகள் நிச்சயமாக உம்மிடம் வந்தே இருக்கின்றன.
-
6:35
وَإِن كَانَ كَبُرَ عَلَيْكَ إِعْرَاضُهُمْ فَإِنِ ٱسْتَطَعْتَ أَن تَبْتَغِىَ نَفَقًا فِى ٱلْأَرْضِ أَوْ سُلَّمًا فِى ٱلسَّمَآءِ فَتَأْتِيَهُم بِـَٔايَةٍ ۚ وَلَوْ شَآءَ ٱللَّهُ لَجَمَعَهُمْ عَلَى ٱلْهُدَىٰ ۚ فَلَا تَكُونَنَّ مِنَ ٱلْجَـٰهِلِينَ
Wa-ʹiñ kaana kabura ʻalayka ʹiʻraaḍuhum faʹinis taṭaʻta ʹañ tabtag̣iya nafaq̣añ fil ʹarḍi ʹaw sullamañ fis samaaaʹi fataʹtiyahum̃ biʹAayah. Wa-law shaaʹal laahu lajamaʻahum ʻalal hudaa falaa takoonanna minal jaahileen!
(நபியே!) அவர்கள் (உம்மைப்) புறக்கணிப்பது உமக்குப் பெரும் சிரமமாகத் தோன்றினால், உம்மால் முடியுமானால் பூமியில் சுரங்கமிட்டு(ச் சென்றோ) அல்லது வானத்தில் ஓர் ஏணி வைத்து (ஏறியோ அவர்கள் விருப்பப்படி) அத்தாட்சி ஒன்றை நீர் அவர்களுக்குக் கொண்டு வருவீராக. (அப்பொழுதும் அவர்கள் உம்மை நிராகரித்துக் கொண்டே இருப்பார்கள்.) எனினும், அல்லாஹ் நாடினால், அவர்கள் அனைவரையும் நேரான வழியில் ஒன்று சேர்த்து விடுவான். ஆகவே, ஒருபோதும் நீர் அறியாதவர்களுடன் சேர்ந்துவிட வேண்டாம்.
-
6:36
۞ إِنَّمَا يَسْتَجِيبُ ٱلَّذِينَ يَسْمَعُونَ ۘ وَٱلْمَوْتَىٰ يَبْعَثُهُمُ ٱللَّهُ ثُمَّ إِلَيْهِ يُرْجَعُونَ
ʹInnamaa yastajeebul laẓeena yasmaʻoon. Wal-mawtaa yabʻas̤uhumul laahu s̤umma ʹilayhi yurjaʻoon.
எவர்கள் (உமக்குச்) செவிசாய்க்கக்கூடிய (உயிருள்ள)வர்களாக இருக்கின்றனரோ அவர்கள்தான் (உம்மை) ஏற்றுக்கொள்வார்கள். (ஆனால், இந்த நிராகரிப்பாளர்களோ செவிமடுக்க முடியாத இறந்தவர்களைப் போலவே இருக்கின்றனர்.) ஆகவே, இறந்தவர்களை (மறுமையில் தான்) அல்லாஹ் உயிர்ப்பிப்பான். பின்னர் அவனிடமே கொண்டுவரப்படுவார்கள்.
-
6:37
وَقَالُوا۟ لَوْلَا نُزِّلَ عَلَيْهِ ءَايَةٌ مِّن رَّبِّهِۦ ۚ قُلْ إِنَّ ٱللَّهَ قَادِرٌ عَلَىٰٓ أَن يُنَزِّلَ ءَايَةً وَلَـٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ
Waq̣aaloo laa-law nuzzila ʻalayhi ʹaayatum mir rabbih? Q̣ul ʹinnal laaha Q̣aadirun ʻalaaa ʹañy yunazzila ʹAayatañw Walaakinna ʹaks̤arahum laa- yaʻlamoon.
(‘‘நம் விருப்பப்படி) ஓர் அத்தாட்சியை அவருடைய இறைவன் அவர்மீது இறக்கிவைக்க வேண்டாமா?'' என்று அவர்கள் கூறுகின்றனர். அதற்கு (நபியே!) நீர் கூறுவீராக: (அத்தகைய) ஓர் அத்தாட்சியை இறக்கிவைக்க நிச்சயமாக அல்லாஹ் சக்தியுடையவன்தான். (அவ்வாறு இறக்கியும் வைத்துள்ளான்.) எனினும் அவர்களில் பெரும்பாலோர் (அதை) அறிந்து கொள்வதில்லை.
-
6:38
وَمَا مِن دَآبَّةٍ فِى ٱلْأَرْضِ وَلَا طَـٰٓئِرٍ يَطِيرُ بِجَنَاحَيْهِ إِلَّآ أُمَمٌ أَمْثَالُكُم ۚ مَّا فَرَّطْنَا فِى ٱلْكِتَـٰبِ مِن شَىْءٍ ۚ ثُمَّ إِلَىٰ رَبِّهِمْ يُحْشَرُونَ
Wa-maa miñ daaabbatiñ fil ʹarḍi wa-laa ṭaaaʹiriny yaṭeeru bijanaaḥayhi ʹillaaa ʹumamun ʹams̤aalukum. Maa- farraṭnaa fil Kitaabi miñ shayʹiñ s̤umma ʹilaa Rabbihim yuḥ-sharoon.
பூமியில் ஊர்ந்து திரியக்கூடியவையும், தன் இரு இறக்கைகளால் (ஆகாயத்தில்) பறக்கக் கூடியவையும் உங்களைப் போன்ற (உயிருள்ள) படைப்புகளே (சமுதாயங்களே) தவிர வேறில்லை. (இவற்றில்) ஒன்றையுமே (நம் பதிவுப்) புத்தகத்தில் (லவ்ஹுல் மஹ்ஃபூளில்) குறிப்பிடாது நாம் விட்டுவிடவில்லை. பின்னர், (ஒரு நாளில்) இவையும் தங்கள் இறைவனிடம் கொண்டு வரப்படும்.
-
6:39
وَٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَا صُمٌّ وَبُكْمٌ فِى ٱلظُّلُمَـٰتِ ۗ مَن يَشَإِ ٱللَّهُ يُضْلِلْهُ وَمَن يَشَأْ يَجْعَلْهُ عَلَىٰ صِرَٰطٍ مُّسْتَقِيمٍ
Wallaẓeena kaẓẓaboo biʹAayaatinaa ṣummuñw wabukmuñ fiz̤̣ z̤̣ulumaat: mañy yashaʹil laahu yuḍ-lilh: wa-mañy yashaʹ yajʻalhu ʻalaa Ṣiraaṭim Mustaq̣eem.
எவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ அவர்கள் இருள்களில் (தட்டழியும்) செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் இருக்கின்றனர். அல்லாஹ், தான் நாடியவர்களைத் தவறான வழியில் செல்ல விட்டுவிடுகிறான்; அவன் நாடியவர்களை நேரான வழியில் செலுத்துகிறான்.
-
6:40
قُلْ أَرَءَيْتَكُمْ إِنْ أَتَىٰكُمْ عَذَابُ ٱللَّهِ أَوْ أَتَتْكُمُ ٱلسَّاعَةُ أَغَيْرَ ٱللَّهِ تَدْعُونَ إِن كُنتُمْ صَـٰدِقِينَ
Q̣ul ʹaraʹaytakum ʹin ʹataakum ʻaẓabul laahi ʹaw ʹatatkumus Saaʻatu ʹa-g̣ayral laahi tadʻoon? ʹIñ kuñtum ṣaadiq̣een.
(நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: உங்களுக்கு அல்லாஹ்வுடைய வேதனை வந்துவிட்டால் அல்லது உங்களுக்கு விசாரணைக்காலம் வந்துவிட்டால் அல்லாஹ் அல்லாத (இ)வற்றையா நீங்கள் (உங்கள் உதவிக்கு) அழைப்பீர்கள்! என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்த்தீர்களா? (இந்த சிலைகளை உங்கள் தெய்வங்கள் என்று கூறுகின்ற) நீங்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால் (அவற்றையே உங்கள் உதவிக்கு அழையுங்கள்).
-
6:41
بَلْ إِيَّاهُ تَدْعُونَ فَيَكْشِفُ مَا تَدْعُونَ إِلَيْهِ إِن شَآءَ وَتَنسَوْنَ مَا تُشْرِكُونَ
Bal ʹiyyaahu tadʻoona fayakshifu maa- tadʻoona ʹilayhi ʹiñ shaaʹa watañsawna maa- tushrikoon!
அவ்வாறன்று! நீங்கள் இணைவைத்தவற்றை எல்லாம் மறந்துவிட்டு அவனையே அழைப்பீர்கள். நீங்கள் எ(வ்வேதனையை நீக்குவ)தற்காக அவனை அழைப்பீர்களோ அதை அவன் விரும்பினால் நீக்கியும் விடுவான்.
-
6:42
وَلَقَدْ أَرْسَلْنَآ إِلَىٰٓ أُمَمٍ مِّن قَبْلِكَ فَأَخَذْنَـٰهُم بِٱلْبَأْسَآءِ وَٱلضَّرَّآءِ لَعَلَّهُمْ يَتَضَرَّعُونَ
Wa-laq̣ad ʹarsalnaaa ilaaa ʹumamim miñ q̣ablika faʹakhaẓnaahum̃ bil-baʹsaaaʹi waḍ-ḍarraaaʹi laʻallahum yataḍarraʻoon.
(நபியே!) உமக்கு முன்னிருந்த பல வகுப்பினருக்கும் நாம் (நம் தூதர்களை) நிச்சயமாக அனுப்பி வைத்தோம். (எனினும் அத்தூதர்களை அவர்கள் நிராகரித்து விட்டனர். ஆகவே,) அவர்கள் பணிந்து வருவதற்காக நோயைக் கொண்டும், வறுமையைக் கொண்டும் நாம் அவர்களைப் பிடித்தோம்.
-
6:43
فَلَوْلَآ إِذْ جَآءَهُم بَأْسُنَا تَضَرَّعُوا۟ وَلَـٰكِن قَسَتْ قُلُوبُهُمْ وَزَيَّنَ لَهُمُ ٱلشَّيْطَـٰنُ مَا كَانُوا۟ يَعْمَلُونَ
Falawlaaa ʹiẓ jaaaʹahum̃ baʹsunaa taḍarraʻoo walaakiñ q̣asat q̣uloobuhum wa-zayyana lahumush Shayṭaanu maa- kaanoo yaʻmaloon.
நம் வேதனை அவர்களிடம் வருவதற்குள் அவர்கள் பணிந்துவிட வேண்டாமா? ஆனால், அவர்களுடைய உள்ளங்கள் இறுகிவிட்டன. அவர்கள் செய்து கொண்டிருந் ததையே (-பாவங்களையே) ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காண்பித்து விட்டான்.
-
6:44
فَلَمَّا نَسُوا۟ مَا ذُكِّرُوا۟ بِهِۦ فَتَحْنَا عَلَيْهِمْ أَبْوَٰبَ كُلِّ شَىْءٍ حَتَّىٰٓ إِذَا فَرِحُوا۟ بِمَآ أُوتُوٓا۟ أَخَذْنَـٰهُم بَغْتَةً فَإِذَا هُم مُّبْلِسُونَ
Falammaa nasoo maa- ẓukkiroo bihee fataḥnaa ʻalayhim ʹabwaaba kulli shayʹ; ḥattaaa ʹiẓaa fariḥoo bimaaa ʹootooo ʹakhaẓnaahum̃ bag̣tatañ faʹiẓaa hum mublisoon.
அவர்களுக்குச் செய்யப்பட்ட நல்லுபதேசத்தை அவர்கள் மறந்து விடவே (அவர்களைச் சோதிப்பதற்காக) ஒவ்வொரு பொரு(ள் செல்வங்க)ளின் வாயிலையும் நாம் அவர்களுக்குத் திறந்துவிட்டோம். (அவர்களுக்கு வேண்டியவை எல்லாம் தாராளமாக கிடைத்துக் கொண்டிருந்தன.) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டவற்றைக் கொண்டு அவர்கள் பெருமையுடன் மகிழ்ச்சி அடைந்து கொண்டிருந்த சமயத்தில் (நமது வேதனையைக் கொண்டு) நாம் அவர்களைத் திடீரென பிடித்துக் கொண்டோம் (தண்டித்தோம்). அந்நேரத்தில் அவர்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.
-
6:45
فَقُطِعَ دَابِرُ ٱلْقَوْمِ ٱلَّذِينَ ظَلَمُوا۟ ۚ وَٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَـٰلَمِينَ
Faq̣uṭiʻa daa-birul q̣awmil laẓeena z̤̣alamoo. Wal-Ḥamdu lillaahi Rabbil ʻAalameen.
ஆகவே, அநியாயம் செய்து கொண்டிருந்த (அந்த) மக்களின் வேர் அறுபட்டுவிட்டது. எல்லாப் புகழும் அகிலத்தாரின் இறைவன் அல்லாஹ்வுக்கே!
-
6:46
قُلْ أَرَءَيْتُمْ إِنْ أَخَذَ ٱللَّهُ سَمْعَكُمْ وَأَبْصَـٰرَكُمْ وَخَتَمَ عَلَىٰ قُلُوبِكُم مَّنْ إِلَـٰهٌ غَيْرُ ٱللَّهِ يَأْتِيكُم بِهِ ۗ ٱنظُرْ كَيْفَ نُصَرِّفُ ٱلْـَٔايَـٰتِ ثُمَّ هُمْ يَصْدِفُونَ
Q̣ul ʹaraʹaytum ʹin ʹakhaẓal laahu samʻakum wa-ʹabṣaarakum wa-khatama ʻalaa q̣uloobikum man ʹilaahun g̣ayrul laahi yaʹteekum̃ bih? ʹUñz̤̣ur kayfa nuṣarriful ʹaayaati s̤umma hum yaṣdifoon.
‘‘அல்லாஹ், உங்கள் கேள்விப்புலனையும் பார்வைகளையும் எடுத்து விட்டு உங்கள் உள்ளங்களின் மீது முத்திரை வைத்துவிட்டால், அல்லாஹ்வை அன்றி எந்த இறைவன் அவற்றை உங்களுக்குக் கொடுப்பான் என்பதை நீங்கள் சிந்தித்தீர்களா?'' என்று (நபியே!) (அவர்களைக்) கேட்பீராக. (நம் ஆற்றலுக்குரிய) அத்தாட்சிகளை எவ்வாறு (விதவிதமாக) விவரிக்கிறோம் என்பதை நீர் கவனிப்பீராக. (இவ்வாறிருந்தும்) பின்னும் அவர்கள் புறக்கணித்தே வருகின்றனர்.
-
6:47
قُلْ أَرَءَيْتَكُمْ إِنْ أَتَىٰكُمْ عَذَابُ ٱللَّهِ بَغْتَةً أَوْ جَهْرَةً هَلْ يُهْلَكُ إِلَّا ٱلْقَوْمُ ٱلظَّـٰلِمُونَ
Q̣ul ʹaraʹaytakum ʹin ʹataakum ʻaẓaabul laahi bag̣tatan ʻaw jahratan hal yuhlaku ʹillal q̣awmuz̤̣ z̤̣aalimoon!
(நபியே! அவர்களை நோக்கி) கேட்பீராக: ‘‘திடீரெனவோ அல்லது முன்னெச்சரிக் கையுடனோ அல்லாஹ்வுடைய வேதனை உங்களிடம் வந்து விட்டால் (என்னாகும் என்பதை) நீங்கள் சிந்தித்தீர்களா? (அந்நேரத்தில் இந்த) அநியாயக்கார மக்களைத் தவிர (மற்றெவரும்) அழிக்கப்படுவார்களா?''
-
6:48
وَمَا نُرْسِلُ ٱلْمُرْسَلِينَ إِلَّا مُبَشِّرِينَ وَمُنذِرِينَ ۖ فَمَنْ ءَامَنَ وَأَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
Wa-maa nursilul Mursaleena ʹillaa mubashshireena wa-muñẓireen. Faman ʹaamana wa-ʹaṣlaḥa falaa khawfun ʻalayhim wa-laa hum yaḥzanoon.
(நன்மையைக் கொண்டு) நற்செய்தி கூறுபவர்களாகவும், (தீமையைப் பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவுமே தவிர, (நம்) தூதர்களை நாம் அனுப்பவில்லை. ஆகவே, எவர்கள் (இந்நபியை) உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்கிறார்களோ, அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
-
6:49
وَٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَا يَمَسُّهُمُ ٱلْعَذَابُ بِمَا كَانُوا۟ يَفْسُقُونَ
Wallaẓeena kaẓẓaboo biʹAayaatinaa yamassuhumul ʻaẓaabu bimaa kaanoo yaf-suq̣oon.
ஆனால், (உங்களில்) எவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ அவர்களை, அவர்களுடைய (இப்)பாவத்தின் காரணமாக வேதனை பிடித்துக் கொள்ளும்.
-
6:50
قُل لَّآ أَقُولُ لَكُمْ عِندِى خَزَآئِنُ ٱللَّهِ وَلَآ أَعْلَمُ ٱلْغَيْبَ وَلَآ أَقُولُ لَكُمْ إِنِّى مَلَكٌ ۖ إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَىٰٓ إِلَىَّ ۚ قُلْ هَلْ يَسْتَوِى ٱلْأَعْمَىٰ وَٱلْبَصِيرُ ۚ أَفَلَا تَتَفَكَّرُونَ
Q̣ul laaa ʹaq̣oolu lakum ʻiñdee khazaaaʹinul laahi wa-laaa ʹaʻlamul g̣ayba wa-laaa ʹaq̣oolu lakum ʹinnee malak. ʹIn ʹattabiʻu ʹillaa maa- yooḥaaa ʹilayy. Q̣ul hal yastawil ʹaʻmaa wal-baṣeer? ʹAfalaa tatafakkaroon?
(நபியே! நீர் அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் என்னிடம் இருக்கிறதென்று நான் உங்களுக்குக் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியவும் மாட்டேன். உண்மையாகவே நான் ஒரு வானவர் என்று நான் உங்களிடம் கூறவில்லை. எனினும், எனக்கு வஹ்யின் மூலம் அறிவிக்கப்பட்டவற்றைத் தவிர (வேறொன்றையும்) நான் பின்பற்றுவது இல்லை'' என்று கூறி, ‘‘குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? (இவ்வளவு கூட) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?'' என்றும் கேட்பீராக.
-
6:51
وَأَنذِرْ بِهِ ٱلَّذِينَ يَخَافُونَ أَن يُحْشَرُوٓا۟ إِلَىٰ رَبِّهِمْ ۙ لَيْسَ لَهُم مِّن دُونِهِۦ وَلِىٌّ وَلَا شَفِيعٌ لَّعَلَّهُمْ يَتَّقُونَ
Wa-ʹañẓir bihil laẓeena yakhaafoona ʹañy yuḥ-sharooo ʹilaa Rabbihim laysa lahum miñ doonihee waliyyuñw walaa shafeeʻul laʻallahum yattaq̣oon.
(நபியே!) எவர்கள், ‘‘(மறுமையில்) தங்கள் இறைவனிடம் (விசாரணைக்காகக்) கொண்டு போகப்படுவோம், அங்கு அவனைத் தவிர தங்களுக்கு பாதுகாவலரோ பரிந்துரை செய்பவரோ இருக்கமாட்டார்'' என்று பயப்படுகிறார்களோ அவர்களை இதன் மூலம் நீர் எச்சரிப்பீராக. அவர்கள் (பாவத்திலிருந்து விலகி) இறைவனை அஞ்சிக்கொள்வார்கள்.
-
6:52
وَلَا تَطْرُدِ ٱلَّذِينَ يَدْعُونَ رَبَّهُم بِٱلْغَدَوٰةِ وَٱلْعَشِىِّ يُرِيدُونَ وَجْهَهُۥ ۖ مَا عَلَيْكَ مِنْ حِسَابِهِم مِّن شَىْءٍ وَمَا مِنْ حِسَابِكَ عَلَيْهِم مِّن شَىْءٍ فَتَطْرُدَهُمْ فَتَكُونَ مِنَ ٱلظَّـٰلِمِينَ
Wa-laa taṭrudil laẓeena yadʻoona Rabbahum̃ bil-g̣adaati wal-ʻashiyyi yureedoona Waj-hah. Maa- ʻalayka Min ḥisaabihim miñ shayʹiñw wamaa min ḥisaabika ʻalayhim miñ shayʹiñ fataṭrudahum fatakoona minaz̤̣ z̤̣aalimeen.
(நபியே!) தங்கள் இறைவனின் திருமுகத்தை விரும்பி காலையிலும் மாலையிலும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பவர்களை நீங்கள் விரட்டி விடாதீர்! அவர்களுடைய கணக்கிலிருந்து எதுவும் உமது பொறுப்பாகாது. உமது கணக்கிலிருந்து எதுவும் அவர்களுடைய பொறுப்பாகாது. ஆகவே, நீர் அவர்களை விரட்டினால் அநியாயக்காரர்களில் நீரும் ஒருவராகிவிடுவீர்!
-
6:53
وَكَذَٰلِكَ فَتَنَّا بَعْضَهُم بِبَعْضٍ لِّيَقُولُوٓا۟ أَهَـٰٓؤُلَآءِ مَنَّ ٱللَّهُ عَلَيْهِم مِّنۢ بَيْنِنَآ ۗ أَلَيْسَ ٱللَّهُ بِأَعْلَمَ بِٱلشَّـٰكِرِينَ
Wa-kaẓaalika fatannaa baʻḍahum̃ bibaʻḍil liyaq̣oolooo ʹahaaaʹulaaaʹi mannal laahu ʻalayhim min bay-ninaa? ʹAlaysal laahu biʹaʻlama bishshaakireen.
(நபியே!) இவ்வாறே அவர்களில் சிலரை சிலரைக் கொண்டு நாம் சோதித்ததில் ‘‘எங்களை விட்டு (ஏழைகளாகிய) இவர்கள் மீதா அல்லாஹ் அருள் புரிந்து விட்டான்?'' என்று (பணக்காரர்கள்) கூற முற்பட்டனர். நன்றி செலுத்துபவர்களை அல்லாஹ் மிக அறிந்தவனாக இல்லையா?
-
6:54
وَإِذَا جَآءَكَ ٱلَّذِينَ يُؤْمِنُونَ بِـَٔايَـٰتِنَا فَقُلْ سَلَـٰمٌ عَلَيْكُمْ ۖ كَتَبَ رَبُّكُمْ عَلَىٰ نَفْسِهِ ٱلرَّحْمَةَ ۖ أَنَّهُۥ مَنْ عَمِلَ مِنكُمْ سُوٓءًۢا بِجَهَـٰلَةٍ ثُمَّ تَابَ مِنۢ بَعْدِهِۦ وَأَصْلَحَ فَأَنَّهُۥ غَفُورٌ رَّحِيمٌ
Wa-ʹiẓaa jaaaʹakal laẓeena yuʹminoona biʹAayaatinaa faq̣ul Salaamun ʻalaykum kataba Rabbukum ʻalaa Nafsihir Raḥmata ʹannahoo man ʻamila miñkum soooʹam bijahaalatiñ s̤umma taaba mim baʻdihee wa-ʹaṣlaḥa faʹannahoo G̣afoorur Raḥeem.
(நபியே!) நம் வசனங்களை நம்பிக்கை கொண்டவர்கள் உம்மிடம் வந்தால் (நீர் அவர்களை நோக்கி, ‘‘ஸலாமுன் அலைக்கும்) உங்கள் மீது சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக! உங்கள் இறைவன் (உங்களுக்கு) அருள் புரிவதைத் தன்மீது கடமையாக்கிக் கொண்டான். நிச்சயமாக உங்களில் எவரேனும் அறியாமையின் காரணமாக (ஒரு) பாவத்தைச் செய்துவிட்டு, பின்னர் அதற்காக கைசேதப்பட்டு (அதில் இருந்து விலகி) நற்செயல்களைச் செய்தால் (அவருடைய குற்றங்களை இறைவன் மன்னித்து விடுவான். ஏனென்றால்) நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன்'' என்று கூறுவீராக.
-
6:55
وَكَذَٰلِكَ نُفَصِّلُ ٱلْـَٔايَـٰتِ وَلِتَسْتَبِينَ سَبِيلُ ٱلْمُجْرِمِينَ
Wa-kaẓaalika nufaṣṣilul ʹAayaati wa-litastabeena sabeelul mujrimeen.
குற்றவாளிகள் செல்லும் வழி (இன்னதென சந்தேகமறத்) தெளிவாகி விடுவதற்காக (நம்) வசனங்களை இவ்வாறு விவரித்திருக்கிறோம்.
-
6:56
قُلْ إِنِّى نُهِيتُ أَنْ أَعْبُدَ ٱلَّذِينَ تَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ ۚ قُل لَّآ أَتَّبِعُ أَهْوَآءَكُمْ ۙ قَدْ ضَلَلْتُ إِذًا وَمَآ أَنَا۠ مِنَ ٱلْمُهْتَدِينَ
Q̣ul ʹinnee nuheetu ʹan ʹaʻbudal laẓeena tadʻoona miñ doonil laah. Q̣ul Laaa ʹattabiʻu ʹahwaaaʹakum q̣ad ḍalaltu ʹiẓañw Wamaaa ʹana minal Muhtadeen.
(நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘அல்லாஹ்வையன்றி எவற்றை நீங்கள் (கடவுள்களென) அழைக்கிறீர்களோ அவற்றை வணங்கக்கூடாதென்று நிச்சயமாக நான் தடுக்கப்பட்டுள்ளேன். ஆகவே, உங்கள் மன விருப்பங்களை நான் பின்பற்ற மாட்டேன். அவ்வாறாயின், நிச்சயமாக நானும் வழி தவறிவிடுவேன்; நேரான வழியை அடைந்தவனாகமாட்டேன்.''
-
6:57
قُلْ إِنِّى عَلَىٰ بَيِّنَةٍ مِّن رَّبِّى وَكَذَّبْتُم بِهِۦ ۚ مَا عِندِى مَا تَسْتَعْجِلُونَ بِهِۦٓ ۚ إِنِ ٱلْحُكْمُ إِلَّا لِلَّهِ ۖ يَقُصُّ ٱلْحَقَّ ۖ وَهُوَ خَيْرُ ٱلْفَـٰصِلِينَ
ʹinnee Q̣ul ʻalaa bayyinatim mir Rabbi Wakaẓẓabtum̃ bih. Maa- ʻiñdee maa- tastaʻjiloona bih. ʹInil Ḥukmu ʹillaa lillaah: yaq̣uṣṣul Ḥaq̣q̣a wa-Huwa khayrul faaṣileen.
(நபியே! மேலும்,) கூறுவீராக: ‘‘நிச்சயமாக நான் என் இறைவனின் தெளிவான அத்தாட்சியின் மீதே இருக்கிறேன். எனினும், அதை நீங்கள் பொய்யாக்கினீர்கள். எதற்கு நீங்கள் அவசரப்படுகிறீர்களோ அ(ந்த வேதனையான)து என்னிடம் இல்லை. (அதன்) அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே தவிர (வேறு) எவருக்குமில்லை. அவன் உண்மையையே கூறுகிறான். அவன் தீர்ப்பளிப்பவர்களில் மிக மேலானவன்.
-
6:58
قُل لَّوْ أَنَّ عِندِى مَا تَسْتَعْجِلُونَ بِهِۦ لَقُضِىَ ٱلْأَمْرُ بَيْنِى وَبَيْنَكُمْ ۗ وَٱللَّهُ أَعْلَمُ بِٱلظَّـٰلِمِينَ
Q̣ul law ʹanna ʻiñdee maa- tastaʻjiloona bihee laq̣uḍiyal ʹamru baynee wa-baynakum. Wallaahu ʹaʻlamu biz̤̣z̤̣aalimeen.
‘‘நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இருந்திருந்தால், உங்களுக்கும் எனக்குமிடையிலுள்ள விவகாரம் (இதுவரை) தீர்க்கப்பட்டே இருக்கும். அல்லாஹ், அநியாயக்காரர்களை நன்கறிந்தே இருக்கிறான்'' என்றும் கூறுவீராக.
-
6:59
۞ وَعِندَهُۥ مَفَاتِحُ ٱلْغَيْبِ لَا يَعْلَمُهَآ إِلَّا هُوَ ۚ وَيَعْلَمُ مَا فِى ٱلْبَرِّ وَٱلْبَحْرِ ۚ وَمَا تَسْقُطُ مِن وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍ فِى ظُلُمَـٰتِ ٱلْأَرْضِ وَلَا رَطْبٍ وَلَا يَابِسٍ إِلَّا فِى كِتَـٰبٍ مُّبِينٍ
Wa-ʻiñdahoo mafaatiḥul G̣aybi laa- yaʻlamuhaaa ʹillaa Hoo. Wayaʻlamu maa- fil barri wal-baḥr. Wa-maa tasq̣uṭu miñw waraq̣atin ʹillaa yaʻlamuhaa wa-laa ḥabbatiñ fee z̤̣ulumaatil ʹarḍi wa-laa raṭbiñw wa-laa yaabisin ʹillaa fee Kitaabim Mubeen.
மறைவானவற்றின் சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவற்(றில் உள்ளவற்)றை அவனைத் தவிர வேறெவரும் அறியமாட்டார். நிலத்திலும், நீரிலும் உள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் அறியாமல் ஓர் இலையும் உதிருவதில்லை. பூமியின் (ஆழத்தில்) அடர்ந்த இருளில் (புதைந்து) கிடக்கும் (கடுகு போன்ற சிறிய) வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் அவனுடைய தெளிவான (பதிவுப்) புத்தகத்தில் இல்லாமலில்லை.
-
6:60
وَهُوَ ٱلَّذِى يَتَوَفَّىٰكُم بِٱلَّيْلِ وَيَعْلَمُ مَا جَرَحْتُم بِٱلنَّهَارِ ثُمَّ يَبْعَثُكُمْ فِيهِ لِيُقْضَىٰٓ أَجَلٌ مُّسَمًّى ۖ ثُمَّ إِلَيْهِ مَرْجِعُكُمْ ثُمَّ يُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
Wa-Huwal laẓee yatawaffaakum̃ billayli wayaʻlamu maa- jaraḥtum̃ bin-nahaari s̤umma yabʻas̤ukum feehi liyuq̣ḍaaa ʹajalum musammaa. S̤umma ʹilayhi marjiʻukum s̤umma yunabbiʹukum̃ bimaa kuñtum taʻmaloon.
(மனிதர்களே!) இரவில் (நீங்கள் நித்திரை செய்யும் பொழுது) அவன்தான் (உங்கள் உணர்ச்சியை நீக்கி) உங்களை இறந்தவர்களுக்குச் சமமாக்குகிறான். நீங்கள் பகலில் செய்பவற்றையும் அவன் நன்கறிகிறான். (உங்களுக்குக்) குறிப்பிட்ட காலம் பூர்த்தி ஆவதற்காக இதற்குப் பின்னர் (உணர்ச்சியை உண்டு பண்ணி) உங்களை எழுப்புகிறான். பின்னர், நீங்கள் அவனிடம்தான் திரும்பப்போவீர்கள். நீங்கள் (இங்கு) செய்து கொண்டிருந்தவற்றை (அங்கு) உங்களுக்கு அவன் அறிவிப்பான்.
-
6:61
وَهُوَ ٱلْقَاهِرُ فَوْقَ عِبَادِهِۦ ۖ وَيُرْسِلُ عَلَيْكُمْ حَفَظَةً حَتَّىٰٓ إِذَا جَآءَ أَحَدَكُمُ ٱلْمَوْتُ تَوَفَّتْهُ رُسُلُنَا وَهُمْ لَا يُفَرِّطُونَ
Wa-Huwal Q̣aahiru fawq̣a ʻibaadihee wa-yursilu ʻalaykum ḥafaz̤̣ah. Ḥattaaa ʹiẓaa jaaaʹa ʹaḥadakumul mawtu tawaffathu rusulunaa wahum laa- yufarriṭoon.
அவன் தன் அடியார்களை அடக்கி ஆளுகிறான்; மேலும், உங்களுக்குப் பாதுகாவலர்களையும் ஏற்படுத்துகிறான். (மரண நேரம் வரும்வரை அவர்கள் உங்களை பாதுகாக்கின்றனர்,) பின்னர், உங்களில் ஒருவருக்கு மரணம் வந்தால் நமது (வானவத்) தூதர்கள் அவரை உயிர் வாங்குகின்றனர். அவர்கள் (குறித்த காலத்திற்கு முன்னரோ, பின்னரோ உயிரைக் கைப்பற்றி) ஏதும் தவறிழைப்பதில்லை.
-
6:62
ثُمَّ رُدُّوٓا۟ إِلَى ٱللَّهِ مَوْلَىٰهُمُ ٱلْحَقِّ ۚ أَلَا لَهُ ٱلْحُكْمُ وَهُوَ أَسْرَعُ ٱلْحَـٰسِبِينَ
S̤umma ruddooo ʹilal laahi Mawlaahumul Ḥaq̣q̣. ʹAlaa lahul Ḥukmu wa-Huwa ʹAsraʻul ḥaasibeen.
(இதன்) பின்னர், அவர்கள் தங்களின் உண்மையான எஜமானாகிய அல்லாஹ்விடமே கொண்டு வரப்படுவார்கள். (அந்நேரத்தில்) தீர்ப்பு கூறும் அதிகாரம் அவனுக்கே உரியது என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும். மேலும், கணக்கைத் தீர்ப்பதிலும் அவன் மிகத் தீவிரமானவன்.
-
6:63
قُلْ مَن يُنَجِّيكُم مِّن ظُلُمَـٰتِ ٱلْبَرِّ وَٱلْبَحْرِ تَدْعُونَهُۥ تَضَرُّعًا وَخُفْيَةً لَّئِنْ أَنجَىٰنَا مِنْ هَـٰذِهِۦ لَنَكُونَنَّ مِنَ ٱلشَّـٰكِرِينَ
Q̣ul mañy yunajjeekum miñ z̤̣ulumaatil barri walbaḥri tadʻoonahoo taḍarruʻañw wakhufyah: laʹin ʹañjaanaa min haaẓihee lanakoonanna minash shaakireen.
நீங்கள் ‘‘தரையிலும், கடலிலும் இருள்களில் சிக்கி (மிக சிரமத்திற்குள்ளாகிவிட்ட சமயத்தில்) எங்களை இதிலிருந்து பாதுகாத்துக் கொண்டால் நிச்சயமாக நாங்கள் நன்றி செலுத்துபவர்களாகி விடுவோம் என்று மறைவாகவும், பணிவாகவும் நீங்கள் பிரார்த்திக்கும் சமயத்தில் உங்களைப் பாதுகாப்பவன் யார்?'' என்று (நபியே!) நீர் (அவர்களைக்) கேட்டு,
-
6:64
قُلِ ٱللَّهُ يُنَجِّيكُم مِّنْهَا وَمِن كُلِّ كَرْبٍ ثُمَّ أَنتُمْ تُشْرِكُونَ
Q̣ulil laahu yunajjeekum minhaa wa-miñ kulli karbiñ s̤umma ʹañtum tushrikoon!
‘‘இதிலிருந்தும் மற்ற எல்லா துன்பங்களிலிருந்தும் உங்களை பாதுகாப்பவன் அல்லாஹ் தான். (இவ்வாறிருந்தும்) பின்னும் நீங்கள் (அவனுக்கு) இணை வைக்கிறீர்களே!'' என்று நீர் கூறுவீராக.
-
6:65
قُلْ هُوَ ٱلْقَادِرُ عَلَىٰٓ أَن يَبْعَثَ عَلَيْكُمْ عَذَابًا مِّن فَوْقِكُمْ أَوْ مِن تَحْتِ أَرْجُلِكُمْ أَوْ يَلْبِسَكُمْ شِيَعًا وَيُذِيقَ بَعْضَكُم بَأْسَ بَعْضٍ ۗ ٱنظُرْ كَيْفَ نُصَرِّفُ ٱلْـَٔايَـٰتِ لَعَلَّهُمْ يَفْقَهُونَ
Q̣ul Huwal q̣aadiru ʻalaaa ʹañy yabʻas̤a ʻalaykum ʻaẓaabam miñ fawq̣ikum ʹaw miñ taḥti ʹarjulikum ʹaw yalbisakum shiyaʻañw wayuẓeeq̣a baʻḍakum̃ baʹsa baʻḍ. ʹUñz̤̣ur kayfa nuṣarriful ʹAayaati laʻallahum yafq̣ahoon.
(நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘உங்க(ள் தலைக)ளுக்கு மேலிருந்தோ அல்லது உங்கள் பாதங்களுக்குக் கீழிருந்தோ உங்களுக்கு வேதனை ஒன்றை உண்டுபண்ணவும் அல்லது உங்களைப் பல பிரிவுகளாக்கி, உங்களுக்குள் சிலர் சிலருடன் போர் புரியும்படிச் (செய்து அதனால் உண்டாகும் துன்பத்தை நீங்கள் அனுபவிக்கும்படிச்) செய்யவும் அவன் சக்தி உடையவனாகவே இருக்கிறான்.'' அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக நாம் (நம்) வசனங்களை, எவ்வாறு பல வகைகளில் (தெளிவுபடுத்திக்) கூறுகிறோம் என்று நீர் கவனிப்பீராக.
-
6:66
وَكَذَّبَ بِهِۦ قَوْمُكَ وَهُوَ ٱلْحَقُّ ۚ قُل لَّسْتُ عَلَيْكُم بِوَكِيلٍ
Wa-kaẓ-ẓaba bihee q̣awmuka wa-huwal Ḥaq̣q̣. Q̣ul lastu ʻalaykum̃ bi-Wakeel;
(நபியே! திரு குர்ஆனாகிய) இது முற்றிலும் உண்மையாயிருந்தும், உமது மக்கள் இதையும் பொய்யாக்குகின்றனர். ஆகவே, (அவர்களை நோக்கி) நீர் கூறுவீராக: ‘‘நான் உங்களுக்கு பொறுப்பாளராக இல்லை.''
-
6:67
لِّكُلِّ نَبَإٍ مُّسْتَقَرٌّ ۚ وَسَوْفَ تَعْلَمُونَ
Likulli nabaʹim mustaq̣arruñw wasawfa taʻlamoon.
ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு குறிப்பிட்ட காலமுண்டு. (நான் சொல்வதன் உண்மையை) பின்னர் (வேதனை வரும்போது) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
-
6:68
وَإِذَا رَأَيْتَ ٱلَّذِينَ يَخُوضُونَ فِىٓ ءَايَـٰتِنَا فَأَعْرِضْ عَنْهُمْ حَتَّىٰ يَخُوضُوا۟ فِى حَدِيثٍ غَيْرِهِۦ ۚ وَإِمَّا يُنسِيَنَّكَ ٱلشَّيْطَـٰنُ فَلَا تَقْعُدْ بَعْدَ ٱلذِّكْرَىٰ مَعَ ٱلْقَوْمِ ٱلظَّـٰلِمِينَ
Wa-ʹiẓaa raʹaytal laẓeena yakhooḍoona feee ʹAayaatinaa faʹaʻriḍ ʻanhum ḥattaa yakhooḍoo fee ḥadees̤in g̣ayrih. Wa-ʹimmaa yuñsiyannakash Shayṭaanu falaa taq̣ʻud baʻdaẓ ẓikraa maʻal q̣awmiz̤̣ z̤̣aalimeen.
(நபியே!) நம் வசனங்களைப் பற்றி (வீண்) விவாதங்களில் மூழ்குபவர்களை நீர் கண்டால், அவர்கள் அதைத் தவிர்த்து வேறு விஷயத்தில் பிரவேசிக்கும் வரை நீங்கள் அவர்களைப் புறக்கணித்து விடுவீராக. (இக்கட்டளையை) ஷைத்தான் உமக்கு மறக்கடித்து (அவர்களுடன் நீரும் இருந்து) விட்டால், அது நினைவுக்கு வந்ததன் பின்னர் அந்த அநியாயக்கார மக்களுடன் நீர் அமர்ந்திருக்க வேண்டாம்.
-
6:69
وَمَا عَلَى ٱلَّذِينَ يَتَّقُونَ مِنْ حِسَابِهِم مِّن شَىْءٍ وَلَـٰكِن ذِكْرَىٰ لَعَلَّهُمْ يَتَّقُونَ
Wa-maa ʻalal laẓeena yattaq̣oona min ḥisaabihim miñ shayʹiñw walaakiñ Ẓikraa laʻallahum yattaq̣oon.
(வீண் விவாதத்தில் மூழ்கிக் கிடக்கும்) அவர்களுடைய (செய்கையின்) கணக்கிலிருந்து எதுவும் இறையச்சமுடையவர்களின் பொறுப்பாகாது. எனினும், அவர்கள் (இதைத்) தவிர்த்துக் கொள்வதற்காக அவர்களுக்கு நல்லுபதேசம் செய்வது (இவர்கள் மீது) கடமையாகும்.
-
6:70
وَذَرِ ٱلَّذِينَ ٱتَّخَذُوا۟ دِينَهُمْ لَعِبًا وَلَهْوًا وَغَرَّتْهُمُ ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا ۚ وَذَكِّرْ بِهِۦٓ أَن تُبْسَلَ نَفْسٌۢ بِمَا كَسَبَتْ لَيْسَ لَهَا مِن دُونِ ٱللَّهِ وَلِىٌّ وَلَا شَفِيعٌ وَإِن تَعْدِلْ كُلَّ عَدْلٍ لَّا يُؤْخَذْ مِنْهَآ ۗ أُو۟لَـٰٓئِكَ ٱلَّذِينَ أُبْسِلُوا۟ بِمَا كَسَبُوا۟ ۖ لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِيمٍ وَعَذَابٌ أَلِيمٌۢ بِمَا كَانُوا۟ يَكْفُرُونَ
Wa-ẓaril laẓeenat takhaẓoo deenahum laʻibañw walahwañw wag̣arrathumul ḥayaatud dunyaa waẓakkir biheee ʹañ tubsala nafsum bimaa kasabat: laysa lahaa miñ doonil laahi waliyyuñw walaa shafeeʻ. Wa-ʹiñ taʻdil kulla ʻadlil laa yuʹkhaẓ minhaa. ʹUlaaaʹikal laẓeena ʹubsiloo bimaa kasaboo. Lahum sharaabum min ḥameemiñw waʻaẓaabun ʹaleemum bimaa kaanoo yakfuroon.
(நபியே!) எவர்கள் இவ்வுலக வாழ்க்கையால் மயக்கப்பட்டு, தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ அவர்களை (அவர்கள் போக்கில்) விட்டுவிடுவீராக. எனினும், ஒவ்வோர் ஆத்மாவும் தன் (தீய) செயல்களின் காரணமாக (மறுமை நாளில்) ஆபத்திற்குள்ளாகும் என்ற உண்மையை நீர் (அவர்களுக்கு) ஞாபகப்படுத்துவீராக. (அந்நாளில்) அதற்குப் பரிந்து பேசுபவர்களோ, உதவி செய்பவர்களோ அல்லாஹ்வையன்றி ஒருவரும் இருக்கமாட்டார். (சாத்தியமான) அனைத்தையும் (பாவிகள் தங்கள் வேதனைக்குப்) பிரதியாகக் கொடுத்தபோதிலும் அது அங்கீகரிக்கப்பட மாட்டாது. இவர்கள் தங்கள் (தீய) செயல்களின் காரணமாகவே ஆபத்திற்குள்ளானார்கள். இவர்களின் நிராகரிப்பின் காரணமாக மிக்க துன்புறுத்தும் வேதனையுடன் (குடிப்பதற்கு) கொதிக்கும் பானமே இவர்களுக்குக் கிடைக்கும்.
-
6:71
قُلْ أَنَدْعُوا۟ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَنفَعُنَا وَلَا يَضُرُّنَا وَنُرَدُّ عَلَىٰٓ أَعْقَابِنَا بَعْدَ إِذْ هَدَىٰنَا ٱللَّهُ كَٱلَّذِى ٱسْتَهْوَتْهُ ٱلشَّيَـٰطِينُ فِى ٱلْأَرْضِ حَيْرَانَ لَهُۥٓ أَصْحَـٰبٌ يَدْعُونَهُۥٓ إِلَى ٱلْهُدَى ٱئْتِنَا ۗ قُلْ إِنَّ هُدَى ٱللَّهِ هُوَ ٱلْهُدَىٰ ۖ وَأُمِرْنَا لِنُسْلِمَ لِرَبِّ ٱلْعَـٰلَمِينَ
Q̣ul ʹanadʻoo miñ doonil laahi maa laa- yañfaʻunaa wa-laa yaḍurrunaa wa-nurraddu ʻalaaa ʹaʻq̣aabinaa baʻda ʹiẓ hadaanal laahu kal-laẓis tahwathush shayaaṭeenu fil ʹarḍi ḥayraan. Lahooo ʹaṣḥaabuñy yadʻoonahooo ʹilal hudaʹ tinaa. Q̣ul ʹinna hudal laahi huwal hudaa. Wa-ʹumirnaa linuslima lirabbil ʻAalameen:―
(நபியே!) நீர் கேட்பீராக: ‘‘அல்லாஹ்வை விட்டு விட்டு நமக்கு ஒரு நன்மையும், தீமையும் செய்ய சக்தி அற்றவற்றையா நாம் அழைப்போம்? அல்லாஹ் நம்மை நேரான வழியில் செலுத்திய பின்னரும் (நாம்) நம் பின்புறமே திரும்பி விடுவோமா? (அவ்வாறாயின்,) ஒருவனுக்கு நேரான வழியில் அழைக்கக்கூடிய நண்பர்கள் இருந்து அவனை அவர்கள் ‘தம்மிடம் வா' என அழைத்துக் கொண்டிருக்க, அவன் (அவ்வழியில் செல்லாது) ஷைத்தானுடைய ஏமாற்றத்தில் சிக்கி, பூமியில் தட்டழிந்து திரிபவனாக ஆகிவிட்டானோ அவனுக்கு ஒப்பானவர்களாகி விடுவோம்.'' (மேலும்,) நீர் கூறுவீராக: ‘‘நிச்சயமாக அல்லாஹ்வின் வழிதான் நேரான வழி. உலகத்தார் அனைவரின் இறைவனாகிய அவனுக்கே முற்றிலும் தலைசாய்க்க வேண்டும் என நாங்கள் கட்டளையிடப்பட்டுள்ளோம்.''
-
6:72
وَأَنْ أَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَٱتَّقُوهُ ۚ وَهُوَ ٱلَّذِىٓ إِلَيْهِ تُحْشَرُونَ
Wa-ʹan ʹaq̣eemuṣ Ṣalaata wattaq̣ooh; wa-Huwal laẓeee ʹilayhi tuḥ-sharoon.
தொழுகையைக் கடைப்பிடிக்கும்படியும், அவனுக்கே பயப்படும்படியும் (ஏவப்பட் டுள்ளோம்). அவனிடம்தான் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்'' (என்றும் கூறுவீராக).
-
6:73
وَهُوَ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ بِٱلْحَقِّ ۖ وَيَوْمَ يَقُولُ كُن فَيَكُونُ ۚ قَوْلُهُ ٱلْحَقُّ ۚ وَلَهُ ٱلْمُلْكُ يَوْمَ يُنفَخُ فِى ٱلصُّورِ ۚ عَـٰلِمُ ٱلْغَيْبِ وَٱلشَّهَـٰدَةِ ۚ وَهُوَ ٱلْحَكِيمُ ٱلْخَبِيرُ
Wa-Huwal laẓee khalaq̣as samaawaati wal-ʹarḍa bilḥaq̣q̣: wa-yawma yaq̣oolu kuñ Fayakoon. Q̣awluhul Ḥaq̣q̣. Wa-lahul mulku Yawma yuñfakhu fiṣ Ṣoor. ʻAalimul g̣aybi washshahaadah. Wa-Huwal Ḥakeemul Khabeer.
வானங்களையும், பூமியையும் படைத்தவன் உண்மையாகவே அவன்தான். (அவன் எதையும் படைக்கக் கருதும்போது) ‘ஆகுக!' என அவன் கூறுவதுதான் (தாமதம்.) உடனே (அது) ஆகிவிடும்.அவனுடைய சொல்தான் உண்மை சூர் (எக்காளம்) ஊதப்படும் நாளில் அதிகாரம் அவன் ஒருவனுடையதாகவே இருக்கும். மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அவன் நன்கறிவான். அவன் ஞானமுடையவனாகவும் (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கிறான்.
-
6:74
۞ وَإِذْ قَالَ إِبْرَٰهِيمُ لِأَبِيهِ ءَازَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا ءَالِهَةً ۖ إِنِّىٓ أَرَىٰكَ وَقَوْمَكَ فِى ضَلَـٰلٍ مُّبِينٍ
Wa-ʹiẓ q̣aala ʹIbraaheemu liʹabeehi ʹAazara ʹatattakhiẓu ʹaṣnaaman ʹaalihah? ʹInneee ʹaraaka wa-q̣awmaka fee ḍalaalim mubeen.
இப்றாஹீம் தன் தந்தையாகிய ஆஜரை நோக்கி, ‘‘நீர் சிலைகளைத் தெய்வங்களாக எடுத்துக் கொண்டீரா?'' என்று கேட்டு, ‘‘நிச்சயமாக நீரும் உமது மக்களும் பகிரங்கமான வழிகேட்டில் இருப்பதை நான் காண்கின்றன்'' என்று கூறினார்.
-
6:75
وَكَذَٰلِكَ نُرِىٓ إِبْرَٰهِيمَ مَلَكُوتَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَلِيَكُونَ مِنَ ٱلْمُوقِنِينَ
Wa-kaẓaalika nureee ʹIbraaheema Malakootas samaawaati wal-ʹarḍi wa-liyakoona minal Mooq̣ineen.
இப்றாஹீம் உறுதியான நம்பிக்கையுடையவர்களில் ஆவதற்காக வானங்களிலும், பூமியிலுமுள்ள (நம்) ஆட்சிகளை நாம் அவருக்கு இவ்வாறு காண்பித்து வந்தோம்.
-
6:76
فَلَمَّا جَنَّ عَلَيْهِ ٱلَّيْلُ رَءَا كَوْكَبًا ۖ قَالَ هَـٰذَا رَبِّى ۖ فَلَمَّآ أَفَلَ قَالَ لَآ أُحِبُّ ٱلْـَٔافِلِينَ
Falammaa janna ʻalayhil laylu raʹaa kaw-kabaa. Q̣aala haaẓaa Rabbee. Falammaaa ʹafala q̣aala laaa ʹuḥibbul ʹaafileen.
(ஒரு நாள்) இருள் சூழ்ந்த இரவில் அவர் (மின்னிக் கொண்டிருந்த) ஒரு நட்சத்திரத்தைக் கண்டு, ‘‘இது என் இறைவன் (ஆகுமா?)'' என (தம் மக்களைக்) கேட்டு, அது மறையவே, ‘‘மறையக்கூடியவற்றை (இறைவனாக எடுத்துக் கொள்ள) நான் விரும்பமாட்டேன்'' எனக் கூறிவிட்டார்.
-
6:77
فَلَمَّا رَءَا ٱلْقَمَرَ بَازِغًا قَالَ هَـٰذَا رَبِّى ۖ فَلَمَّآ أَفَلَ قَالَ لَئِن لَّمْ يَهْدِنِى رَبِّى لَأَكُونَنَّ مِنَ ٱلْقَوْمِ ٱلضَّآلِّينَ
Falammaa raʹal q̣amara baazig̣añ q̣aala haaẓaa Rabbee. Falammaaa ʹafala q̣aala laʹil lam yahdinee Rabbee laʹakoonanna minal q̣awmiḍ ḍaaalleeen.
பின்னர், உதயமான சந்திரனைக் காணவே ‘‘இது என் இறைவன் (ஆகுமா?)'' எனக் கேட்டு, அதுவும் அஸ்தமித்து மறையவே (அதையும் நிராகரித்துவிட்டு), ‘‘எனது இறைவன் எனக்கு நேரான வழியை அறிவிக்காவிட்டால் வழி தவறிய மக்களில் நிச்சயமாக நானும் ஒருவனாகிவிடுவேன்'' என்று கூறினார்.
-
6:78
فَلَمَّا رَءَا ٱلشَّمْسَ بَازِغَةً قَالَ هَـٰذَا رَبِّى هَـٰذَآ أَكْبَرُ ۖ فَلَمَّآ أَفَلَتْ قَالَ يَـٰقَوْمِ إِنِّى بَرِىٓءٌ مِّمَّا تُشْرِكُونَ
Falammaa ra ʹash-shamsa baazig̣atañ q̣aala haaẓaa Rabbee haaẓaaa ʹakbar. Falammaaa ʹafalat q̣aala yaa-q̣awmi ʹinnee bareeʹum mimmaa tushrikoon.
பின்னர், உதயமான (பளிச்சென்று நன்கு ஒளிரும்) சூரியனைக் கண்டபொழுது ‘‘இது மிகப்பெரியதாயிருக்கிறது. இது என் இறைவன் (ஆகுமா?)'' எனக் கேட்டு, அதுவும் அஸ்தமித்து மறையவே, அவர் (தம் மக்களை நோக்கி), ‘‘என் மக்களே! நீங்கள் (இறைவனுக்கு) இணையாக்கும் (இவை) ஒவ்வொன்றிலிருந்தும் நிச்சயமாக நான் வெறுத்து விலகிக்கொண்டேன்'' என்று கூறிவிட்டு,
-
6:79
إِنِّى وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِى فَطَرَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ حَنِيفًا ۖ وَمَآ أَنَا۠ مِنَ ٱلْمُشْرِكِينَ
ʹInnee waj-jahtu wajhiya lillaẓee faṭaras samaawaati wal-arḍa ḥaneefañw wamaaa ʹana minal mushrikeen.
‘‘வானங்களையும் பூமியையும் எவன் படைத்தானோ அ(ந்த ஒரு)வனின் பக்கமே நிச்சயமாக நான் முற்றிலும் நோக்குகின்றன். நான் (அவனுக்கு எதையும்) இணைவைப்பவன் அல்ல'' (என்று கூறினார்.)
-
6:80
وَحَآجَّهُۥ قَوْمُهُۥ ۚ قَالَ أَتُحَـٰٓجُّوٓنِّى فِى ٱللَّهِ وَقَدْ هَدَىٰنِ ۚ وَلَآ أَخَافُ مَا تُشْرِكُونَ بِهِۦٓ إِلَّآ أَن يَشَآءَ رَبِّى شَيْـًٔا ۗ وَسِعَ رَبِّى كُلَّ شَىْءٍ عِلْمًا ۗ أَفَلَا تَتَذَكَّرُونَ
Wa-haaaj-jahoo q̣aw-muh. Q̣aala ʹa-tu-ḥaaaj-jooon-nee fil laahi wa-q̣ad hadaan? Wa-laaa ʹakhaafu maa- tushrikoona biheee ʹillaaa ʹañy yashaaaʹa Rabbee shayʹaa. Wasiʻa Rabbee kulla shayʹin ʻilmaa. ʹAfalaa tataẓakkaroon?
(இதைப் பற்றி) அவருடன் அவருடைய மக்கள் தர்க்கித்தார்கள். அதற்கு (அம்மக்களை நோக்கி) அவர் கூறினார்: ‘‘நீங்கள், (படைப்பவனாகிய) அல்லாஹ்வைப் பற்றியா என்னுடன் தர்க்கிக்கிறீர்கள்? நிச்சயமாக அவன் எனக்கு நேரான வழியை அறிவித்துவிட்டான். என் இறைவன் எதையும் விரும்பினாலன்றி நீங்கள் இணைவைத்து வணங்குபவை(கள் எனக்கு ஒரு தீங்கும் செய்துவிட முடியாது. ஆகவே, அவை)களுக்கு நான் பயப்படமாட்டேன். என் இறைவன் அனைவரையும்விட கல்வியில் மிக்க விசாலமானவன். (இவ்வளவுகூட) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
-
6:81
وَكَيْفَ أَخَافُ مَآ أَشْرَكْتُمْ وَلَا تَخَافُونَ أَنَّكُمْ أَشْرَكْتُم بِٱللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِۦ عَلَيْكُمْ سُلْطَـٰنًا ۚ فَأَىُّ ٱلْفَرِيقَيْنِ أَحَقُّ بِٱلْأَمْنِ ۖ إِن كُنتُمْ تَعْلَمُونَ
Wa-kayfa ʹakhaafu maaa ʹashraktum wa-laa takhaafoona ʹannakum ʹashraktum̃ billaahi maa- lam yunazzil bihee ʻalaykum sulṭaanaa? Faʹayyul fareeq̣ayni ʹaḥaq̣q̣u bil-amn? ʹIñ kuñtum taʻlamoon.
உங்களுக்கு அல்லாஹ் எதற்கு அத்தாட்சியை இறக்கவில்லையோ அதை நீங்கள் அல்லாஹ்வுக்கு இணையாக்கியதைப் பற்றி ஒரு சிறிதும் நீங்கள் பயப்படாதிருக்க, நீங்கள் இணைவைத்தவற்றை நான் எவ்வாறு பயப்படுவேன். அச்சமற்றிருக்க நம்மிரு பிரிவினரில் மிகத் தகுதியுடையவர்கள் யார்? என்பதை நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் (கூறுங்கள்).
-
6:82
ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَلَمْ يَلْبِسُوٓا۟ إِيمَـٰنَهُم بِظُلْمٍ أُو۟لَـٰٓئِكَ لَهُمُ ٱلْأَمْنُ وَهُم مُّهْتَدُونَ
ʹAllaẓeena ʹaamanoo wa-lam yal-bisooo ʹeemaanahum̃ biz̤̣ulmin ʹulaaaʹika lahumul ʹamnu wa-hum Muhtadoon.
எவர்கள் நம்பிக்கை கொண்டு, தங்கள் நம்பிக்கையுடன் (இணைவைத்தல் என்னும்) அநியாயத்தையும் கலந்து விடவில்லையோ அவர்களுக்கே நிச்சயமாக பாதுகாப்பு உண்டு. அவர்கள்தான் நேர்வழியாளர்கள் (என்று கூறினார்).
-
6:83
وَتِلْكَ حُجَّتُنَآ ءَاتَيْنَـٰهَآ إِبْرَٰهِيمَ عَلَىٰ قَوْمِهِۦ ۚ نَرْفَعُ دَرَجَـٰتٍ مَّن نَّشَآءُ ۗ إِنَّ رَبَّكَ حَكِيمٌ عَلِيمٌ
Wa-tilka ḥujjatunaaa ʹaataynaahaaa ʹibraaheema ʻalaa q̣awmih. Narfaʻu darajaatim man nashaaaʹ. Inna Rabbaka Ḥakeemun ʻAleem.
(மேற்கூறப்பட்ட) இவை நமது உறுதிமிக்க ஆதாரங்களாகும். இப்றாஹீம் தன் மக்களைத் (தர்க்கத்தில்) வெல்வதற்காக, நாம் இவற்றை அவருக்குக் (கற்றுக்) கொடுத்தோம். நாம் விரும்பியவர்களின் பதவிகளை நாம் எவ்வளவோ உயர்த்தி விடுகிறோம். (நபியே!) நிச்சயமாக உமது இறைவன் மிக ஞானமுடையவன், மிகுந்த அறிவுடையவன் ஆவான்.
-
6:84
وَوَهَبْنَا لَهُۥٓ إِسْحَـٰقَ وَيَعْقُوبَ ۚ كُلًّا هَدَيْنَا ۚ وَنُوحًا هَدَيْنَا مِن قَبْلُ ۖ وَمِن ذُرِّيَّتِهِۦ دَاوُۥدَ وَسُلَيْمَـٰنَ وَأَيُّوبَ وَيُوسُفَ وَمُوسَىٰ وَهَـٰرُونَ ۚ وَكَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ
Wa-wahabnaa lahooo ʹIs-ḥaaq̣a wa-yaʻq̣oob: kullan hadaynaa: wa-Nooḥan hadaynaa miñ q̣ablu wa-miñ Ẓurriyyatihee Daawooda wa-Sulaymaana wa-ʹAyyooba wa-Yoosufa wa-Moosaa wa-Haaroon: wa-kaẓaalika najzil Muḥsineen:
நாம் (இப்ராஹீமாகிய) அவருக்கு இஸ்ஹாக்கையும் (அவருடைய மகன்) யஅகூபையும் (சந்ததிகளாகத்) தந்தருள் புரிந்தோம். இவர்கள் அனைவரையும் நாம் நேரான வழியில் செலுத்தினோம். இதற்கு முன்னர் நூஹையும், அவருடைய சந்ததிகளாகிய தாவூத், ஸுலைமான், ஐயூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நாம் நேரான வழியில் செலுத்தினோம். நன்மை செய்பவர்களுக்கு இவ்வாறே நாம் (நற்)கூலி அளிக்கிறோம்.
-
6:85
وَزَكَرِيَّا وَيَحْيَىٰ وَعِيسَىٰ وَإِلْيَاسَ ۖ كُلٌّ مِّنَ ٱلصَّـٰلِحِينَ
Wa-Zakariyyaa wa-Yaḥyaa wa-ʻEesaa wa-ʹIlyaas. Kullum minaṣ Ṣaaliḥeen.
ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் (ஆகியோரையும் நேரான வழியில் செலுத்தினோம்). இவர்கள் அனைவரும் நன்னடத்தை உடையவர்கள்.
-
6:86
وَإِسْمَـٰعِيلَ وَٱلْيَسَعَ وَيُونُسَ وَلُوطًا ۚ وَكُلًّا فَضَّلْنَا عَلَى ٱلْعَـٰلَمِينَ
Wa-ʹIsmaaʻeela wal-Yasaʻa wa-Yoonusa wa-Looṭaa: wa-kullañ faḍḍalnaa ʻalal ʻaalameen:
இஸ்மாயீல், அல்யஸஉ (எலிஸே,) யூனுஸ், லூத் (இவர்களையும் நேரான வழியில் செலுத்தினோம்.) இவர்கள் அனைவரையும் உலகத்திலுள்ள அனைவரின் மீதும் மேன்மையாக்கியும் வைத்தோம்.
-
6:87
وَمِنْ ءَابَآئِهِمْ وَذُرِّيَّـٰتِهِمْ وَإِخْوَٰنِهِمْ ۖ وَٱجْتَبَيْنَـٰهُمْ وَهَدَيْنَـٰهُمْ إِلَىٰ صِرَٰطٍ مُّسْتَقِيمٍ
Wa-min ʹaabaaaʹihim waẓurriyyaatihim wa-ʹikhwaa-nihim: waj-tabay-naahum wa-haday-naahum ʹilaa Ṣiraatim Mustaq̣eem.
இவர்களுடைய மூதாதைகளிலும், இவர்களுடைய சந்ததிகளிலும், இவர்களுடைய சகோதரர்களிலும் (பலரை) மேன்மையாக்கி வைத்ததுடன் இவர்கள் அனைவரையும் தேர்ந்தெடுத்து நேரான வழியிலும் செலுத்தினோம்.
-
6:88
ذَٰلِكَ هُدَى ٱللَّهِ يَهْدِى بِهِۦ مَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦ ۚ وَلَوْ أَشْرَكُوا۟ لَحَبِطَ عَنْهُم مَّا كَانُوا۟ يَعْمَلُونَ
Ẓaalika Hudal laahi yahdee bihee mañy yashaaaʹu min ʻibaadih. Wa-law ʹashrakoo laḥabiṭa ʻanhum maa kaanoo yaʻmaloon.
(இவர்கள் அனைவரும் சென்ற) இதுவே அல்லாஹ்வுடைய நேரான வழியாகும். தன் அடியார்களில் அவன் விரும்பியவர்களை அதில் செலுத்துகிறான். அவர்கள் (இதைத் தவிர்த்து அல்லாஹ்வுக்கு) இணைவைத்தாலோ அவர்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்கள் அனைத்தும் அழிந்துவிடும்.
-
6:89
أُو۟لَـٰٓئِكَ ٱلَّذِينَ ءَاتَيْنَـٰهُمُ ٱلْكِتَـٰبَ وَٱلْحُكْمَ وَٱلنُّبُوَّةَ ۚ فَإِن يَكْفُرْ بِهَا هَـٰٓؤُلَآءِ فَقَدْ وَكَّلْنَا بِهَا قَوْمًا لَّيْسُوا۟ بِهَا بِكَـٰفِرِينَ
ʹUlaaaʹikal laẓeena ʹaataynaahumul Kitaaba wal-Ḥukma wan-Nubuwwah. Faʹiñy yakfur bihaa haaaʹulaaaʹi faq̣ad wak-kalnaa bihaa q̣awmal laysoo bihaa bi-Kaafireen.
இவர்களுக்குத்தான் வேதத்தையும், அதிகாரத்தையும், நபித்துவத்தையும் நாம் கொடுத்திருந்தோம். ஆகவே, அவற்றை (மக்காவாசிகளாகிய) இவர்கள் நிராகரித்து விட்டால் (இவர்களுக்குப் பதிலாக) நிராகரிக்காத (உண்மை முஸ்லிம்களான) மக்களை நிச்சயமாக நாம் ஏற்படுத்தி விடுவோம்.
-
6:90
أُو۟لَـٰٓئِكَ ٱلَّذِينَ هَدَى ٱللَّهُ ۖ فَبِهُدَىٰهُمُ ٱقْتَدِهْ ۗ قُل لَّآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ أَجْرًا ۖ إِنْ هُوَ إِلَّا ذِكْرَىٰ لِلْعَـٰلَمِينَ
ʹUlaaaʹikal laẓeena hadal laahu fabihudaahumuq̣ tadih. Q̣ul laaa ʹasʹalukum ʻalayhi ʹajraa: ʹIn huwa illaa Ẓikraa lil-ʻaalameen.
(நபியே!) இவர்கள் அனைவரையும் அல்லாஹ் நேரான வழியில் செலுத்தினான். ஆகவே, அவர்களுடைய நேரான வழியை நீரும் பின்பற்றுவீராக. மேலும், ‘‘இ(ந்தக் குர்ஆனை உங்களுக்கு அறிவிப்ப)தற்காக நான் உங்களிடம் ஒரு கூலியையும் கேட்கவில்லை. உலகத்தார் அனைவருக்கும் இது ஒரு நல்லுபதேசமாகும்'' என்று கூறுவீராக.
-
6:91
وَمَا قَدَرُوا۟ ٱللَّهَ حَقَّ قَدْرِهِۦٓ إِذْ قَالُوا۟ مَآ أَنزَلَ ٱللَّهُ عَلَىٰ بَشَرٍ مِّن شَىْءٍ ۗ قُلْ مَنْ أَنزَلَ ٱلْكِتَـٰبَ ٱلَّذِى جَآءَ بِهِۦ مُوسَىٰ نُورًا وَهُدًى لِّلنَّاسِ ۖ تَجْعَلُونَهُۥ قَرَاطِيسَ تُبْدُونَهَا وَتُخْفُونَ كَثِيرًا ۖ وَعُلِّمْتُم مَّا لَمْ تَعْلَمُوٓا۟ أَنتُمْ وَلَآ ءَابَآؤُكُمْ ۖ قُلِ ٱللَّهُ ۖ ثُمَّ ذَرْهُمْ فِى خَوْضِهِمْ يَلْعَبُونَ
Wa-maa q̣adarul laaha ḥaq̣q̣a q̣adriheee ʹiẓ q̣aaloo maaa ʹañzalal laahu ʻalaa basharim miñ shayʹ. Q̣ul man ʹañzalal Kitaabal laẓee jaaʹa bihee Moosaa Noorañw Wa-Hudal lin-naasi tajʻaloonahoo q̣araaṭeesa tubdoonahaa wa-tukhfoona kas̤eeraa. Wa-ʻullimtum maa lam taʻlamooo ʹañtum wa-laaa ʹaabaaaʹukum. Q̣ulil laahu s̤umma ẓarhum fee khawḍihim yalʻaboon.
அல்லாஹ்வின் தகுதியை அறிய வேண்டியவாறு அவர்கள் அறியவில்லை. ஏனென்றால், ‘‘மனிதர்களில் எவருக்கும் (வேதத்தில்) எதையும் அல்லாஹ் அருளவே இல்லை'' என்று அவர்கள் கூறுகின்றனர். ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) நீர் கேட்பீராக: ‘‘மனிதர்களுக்கு ஒளியையும் நேர்வழியையும் தரக்கூடிய (‘‘தவ்றாத்' என்னும்) வேதத்தை நபி மூஸாவுக்கு அருளியது யார்? நீங்கள் அவ்வேதத்தைத் தனித்தனி ஏடுகளாகப் பிரித்து (அவற்றில்) சிலவற்றை வெளிப்படுத்துகிறீர்கள். (உங்கள் நோக்கத்திற்கு மாறான) பெரும்பாலானவற்றை நீங்கள் மறைத்து விடுகிறீர்கள். (அதன் மூலமாகவே) நீங்களும் உங்கள் மூதாதைகளும் அறியாமல் இருந்தவை உங்களுக்கு கற்பிக்கப்பட்டன. (இத்தகைய வேதத்தை உங்களுக்கு அருளியது யார்?'' இதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன! நீரே அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்தான் (இறக்கி வைத்தான்)'' என்று கூறி அவர்கள் (தங்கள்) வீண் தர்க்கத்திலேயே விளையாடிக் கொண்டிருக்கும்படியும் விட்டுவிடுவீராக.
-
6:92
وَهَـٰذَا كِتَـٰبٌ أَنزَلْنَـٰهُ مُبَارَكٌ مُّصَدِّقُ ٱلَّذِى بَيْنَ يَدَيْهِ وَلِتُنذِرَ أُمَّ ٱلْقُرَىٰ وَمَنْ حَوْلَهَا ۚ وَٱلَّذِينَ يُؤْمِنُونَ بِٱلْـَٔاخِرَةِ يُؤْمِنُونَ بِهِۦ ۖ وَهُمْ عَلَىٰ صَلَاتِهِمْ يُحَافِظُونَ
Wa-haaẓaa Kitaabun ʹañzalnaahu Mubaarakum Muṣaddiq̣ul laẓee bayna yadayhi wa-lituñẓira ʹUmmal Q̣uraa wa-man ḥawlahaa. Wallaaẓeena yuʹminoona bil-ʹaakhirati yuʹminoona bihee wa-hum ʻalaa Ṣalaatihim yuḥaafiz̤̣oon.
(நபியே!) இது நாம் உம் மீது இறக்கிய மிக்க பாக்கியமுடைய ஒரு வேதமாகும்.இது தனக்கு முன்னுள்ள (அவர்களுடைய வேதத்)தையும் உண்மைப் படுத்துகிறது. ஆகவே,நீர் (இதைக் கொண்டு தாய்நாட்டினராகிய) மக்காவாசிகளுக்கும், அதைச் சுற்றி உள்ளவர்களுக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக. எவர்கள் மறுமையை நம்புகிறார்களோ அவர்கள் இவ்வேதத்தையும் (அவசியம்) நம்புவார்கள். அவர்கள் தவறாது தொழுதும் வருவார்கள்.
-
6:93
وَمَنْ أَظْلَمُ مِمَّنِ ٱفْتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَوْ قَالَ أُوحِىَ إِلَىَّ وَلَمْ يُوحَ إِلَيْهِ شَىْءٌ وَمَن قَالَ سَأُنزِلُ مِثْلَ مَآ أَنزَلَ ٱللَّهُ ۗ وَلَوْ تَرَىٰٓ إِذِ ٱلظَّـٰلِمُونَ فِى غَمَرَٰتِ ٱلْمَوْتِ وَٱلْمَلَـٰٓئِكَةُ بَاسِطُوٓا۟ أَيْدِيهِمْ أَخْرِجُوٓا۟ أَنفُسَكُمُ ۖ ٱلْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ ٱلْهُونِ بِمَا كُنتُمْ تَقُولُونَ عَلَى ٱللَّهِ غَيْرَ ٱلْحَقِّ وَكُنتُمْ عَنْ ءَايَـٰتِهِۦ تَسْتَكْبِرُونَ
Wa-man ʹaz̤̣lamu mimmanif taraa ʻalal laahi kaẓiban ʹaw q̣aala ʹooḥiya ʹilayya wa-lam yooḥa ʹilayhi shayʹuñw wamañ q̣aala saʹuñzilu mis̤la maaa ʹañzalal laah? Wa-law taraaa ʹiẓiz̤̣ z̤̣aalimoona fee g̣amaraatil mawti walmalaaaʹikatu baasiṭooo ʹaydeehim: ʹakhrijoo ʹañfusakum. ʹAl-yawma tujzawna ʻaẓaabal hooni bimaa kuñtum taq̣ooloona ʻalal laahi g̣ayral ḥaq̣q̣i wa-kuñtum ʻan ʻAayaatihee tastakbiroon.
(நபியே!) கற்பனையாக அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவனைவிட அல்லது வஹ்யி மூலம் அவனுக்கு எதுவும் அறிவிக்கப்படாமலிருக்க ‘‘தனக்கும் வஹ்யி வந்தது'' என்று கூறுபவனைவிட அல்லது ‘‘அல்லாஹ் இறக்கிய இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்குவேன்'' என்று கூறுபவனைவிட மகா அநியாயக்காரன் யார்? இவ்வக்கிரமக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் சமயத்தில் நீர் அவர்களைப் பார்ப்பீராயின், வானவர்கள் தங்கள் கைகளை நீட்டி (அவர்களை நோக்கி) ‘‘உங்கள் உயிர்களைக் கொடுங்கள். இன்றைய தினம் இழிவு தரும் வேதனையே உங்களுக்குக் கூலியாகக் கொடுக்கப்படும். நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறி, நீங்கள் அவனுடைய வசனங்களை பெருமை கொண்டு புறக்கணித்ததுவே இதற்குக் காரணமாகும்'' (என்று கூறுவதை நீர் காண்பீர்).
-
6:94
وَلَقَدْ جِئْتُمُونَا فُرَٰدَىٰ كَمَا خَلَقْنَـٰكُمْ أَوَّلَ مَرَّةٍ وَتَرَكْتُم مَّا خَوَّلْنَـٰكُمْ وَرَآءَ ظُهُورِكُمْ ۖ وَمَا نَرَىٰ مَعَكُمْ شُفَعَآءَكُمُ ٱلَّذِينَ زَعَمْتُمْ أَنَّهُمْ فِيكُمْ شُرَكَـٰٓؤُا۟ ۚ لَقَد تَّقَطَّعَ بَيْنَكُمْ وَضَلَّ عَنكُم مَّا كُنتُمْ تَزْعُمُونَ
Wa-laq̣ad jiʹtumoonaa furaadaa kamaa khalaq̣naakum ʹawwala marratiñw wataraktum maa khawwal-naakum wa-raaaʹa z̤̣uhoorikum: wa-maa naraa maʻakum shufaʻaaaʹakumul laẓeena zaʻamtum ʹannahum feekum shurakaaaʹ. Laq̣at taq̣aṭṭaʻa baynakum wa-ḍalla ʻañkum maa kuñtum tazʻumoon!
(இறைவன் மறுமையில் அவர்களை நோக்கி) ‘‘முன்னர் நாம் உங்களைப் படைத்தவாறே (உங்களுடன் ஒன்றுமில்லாது) நிச்சயமாக நீங்கள் தனியாகவே நம்மிடம் வந்து சேர்ந்தீர்கள். நாம் உங்களுக்குக் கொடுத்திருந்தவற்றையும் உங்கள் முதுகுப்புறமாகவே விட்டுவிட்டீர்கள். (உங்களைப் படைப்பதிலும் வளர்ப்பதிலும் இறைவனுக்குத்) துணையானவர்களென நீங்கள் எவர்களை எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் உங்களுக்குப் பரிந்து பேச இவ்விடத்தில் இருக்கவில்லையே! (அவர்களுக்கும்) உங்களுக்கு(ம்) இடையில் இருந்த சம்பந்தங்கள் எல்லாம் நீங்கி, உங்கள் நம்பிக்கைகள் எல்லாம் தவறிவிட்டன'' (என்று கூறுவான்).
-
6:95
۞ إِنَّ ٱللَّهَ فَالِقُ ٱلْحَبِّ وَٱلنَّوَىٰ ۖ يُخْرِجُ ٱلْحَىَّ مِنَ ٱلْمَيِّتِ وَمُخْرِجُ ٱلْمَيِّتِ مِنَ ٱلْحَىِّ ۚ ذَٰلِكُمُ ٱللَّهُ ۖ فَأَنَّىٰ تُؤْفَكُونَ
ʹInnal laaha faaliq̣ul ḥabbi wannawaa. Yukhrijul ḥayya minal mayyiti wa-Mukhrijul mayyiti minal ḥayy. Ẓaalikumul laahu faʹannaa tuʹfakoon?
வித்துக்களையும், கொட்டைகளையும் நிச்சயமாக அல்லாஹ்தான் வெடி(த்து முளை)க்கச்செய்கிறான். இறந்தவற்றில் இருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் அவனே வெளியாக்குகிறான். (இவ்வாறு செய்கின்ற) அவன்தான் உங்கள் அல்லாஹ். ஆகவே, நீங்கள் (அவனை விட்டு) எங்கு வெருண்டோடுகிறீர்கள்?
-
6:96
فَالِقُ ٱلْإِصْبَاحِ وَجَعَلَ ٱلَّيْلَ سَكَنًا وَٱلشَّمْسَ وَٱلْقَمَرَ حُسْبَانًا ۚ ذَٰلِكَ تَقْدِيرُ ٱلْعَزِيزِ ٱلْعَلِيمِ
Faaliq̣ul ʹiṣbaaḥ: wa-jaʻalal layla sakanañw washshamsa walq̣amara ḥusbaanaa, ẓaalika taq̣deerul ʻAzeezil ʻAleem.
அவனே (பொழுதை) விடியச் செய்பவன். அவனே (நித்திரை செய்து நீங்கள்) சுகமடைவதற்காக இரவை ஆக்கினான். (நீங்கள் காலத்தின்) கணக்கை அறிவதற்காக சந்திரனையும் சூரியனையும் ஆக்கினான். இவை அனைத்தும் மிகைத்தவன், மிக்க அறிந்தவன் (ஆகிய அல்லாஹ்) உடைய ஏற்பாடாகும்.
-
6:97
وَهُوَ ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلنُّجُومَ لِتَهْتَدُوا۟ بِهَا فِى ظُلُمَـٰتِ ٱلْبَرِّ وَٱلْبَحْرِ ۗ قَدْ فَصَّلْنَا ٱلْـَٔايَـٰتِ لِقَوْمٍ يَعْلَمُونَ
Wa-Huwal laẓee jaʻala lakumun nujooma litahtadoo bihaa fee z̤̣ulumaatil barri walbahr: q̣ad faṣṣalnal ʹAayaati liq̣awmiñy yaʻlamoon.
உங்களுக்காக நட்சத்திரங்களை அமைத்தவனும் அவனே. தரையிலும் கடலிலும் உள்ள இருள்களில் அவற்றைக் கொண்டு நீங்கள் வழியறிந்து செல்கிறீர்கள். (உண்மையை) அறியக்கூடிய மக்களுக்கு (நம்) வசனங்களை நிச்சயமாக (இவ்வாறு) விவரிக்கிறோம்.
-
6:98
وَهُوَ ٱلَّذِىٓ أَنشَأَكُم مِّن نَّفْسٍ وَٰحِدَةٍ فَمُسْتَقَرٌّ وَمُسْتَوْدَعٌ ۗ قَدْ فَصَّلْنَا ٱلْـَٔايَـٰتِ لِقَوْمٍ يَفْقَهُونَ
Wa-Huwal laẓeee ʹañshaʹakum min nafsiñw waaḥidatiñ famustaq̣arruñw wa-mustawdaʻ: q̣ad faṣṣalnal ʹAayaati liq̣aw miñyyafq̣ahoon.
(மனிதர்களே!) உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆத்மாவில் இருந்து உற்பத்தி செய்து பின்னர் (உங்கள் தந்தையிடம்) தரித்திருக்கச் செய்து (உங்கள் தாயின் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே! சிந்தித்து உணரக்கூடிய மக்களுக்கு (நம்) வசனங்களை நிச்சயமாக விவரித்தோம்.
-
6:99
وَهُوَ ٱلَّذِىٓ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءً فَأَخْرَجْنَا بِهِۦ نَبَاتَ كُلِّ شَىْءٍ فَأَخْرَجْنَا مِنْهُ خَضِرًا نُّخْرِجُ مِنْهُ حَبًّا مُّتَرَاكِبًا وَمِنَ ٱلنَّخْلِ مِن طَلْعِهَا قِنْوَانٌ دَانِيَةٌ وَجَنَّـٰتٍ مِّنْ أَعْنَابٍ وَٱلزَّيْتُونَ وَٱلرُّمَّانَ مُشْتَبِهًا وَغَيْرَ مُتَشَـٰبِهٍ ۗ ٱنظُرُوٓا۟ إِلَىٰ ثَمَرِهِۦٓ إِذَآ أَثْمَرَ وَيَنْعِهِۦٓ ۚ إِنَّ فِى ذَٰلِكُمْ لَـَٔايَـٰتٍ لِّقَوْمٍ يُؤْمِنُونَ
Wa-Huwal laẓeee ʹañzala minas samaaaʹi maaaʹaa: faʹakhrajnaa bihee nabaata kulli shayʹiñ faʹakhrajnaa minhu khaḍiran nukhriju minhu ḥabbam mutaraakibaa; wa-minan nakhli miñ ṭalʻihaa q̣in-waanuñ daaniyatuñw wa-jannaatim min ʹaʻnaabiñw wazzaytoona warrummaana mushtabihañw wa-g̣ayra mutashaabih. ʹUñz̤̣urooo ʹilaa s̤amariheee ʹiẓaaa ʹas̤mara wa-yanʻih. ʹInna fee ẓaalikum laʹAayaatil liq̣awmiñy yuʹminoon.
அவன்தான் மேகத்திலிருந்து மழையை இறக்கிவைக்கிறான். அதைக் கொண்டே சகல வகைப் புற்பூண்டுகளையும் நாம் முளைக்க வைத்து, அதில் இருந்து பசுமையான தழைகளையும் நாம் வெளியாக்குகிறோம். அதிலிருந்தே அடர்ந்த வித்துக்களை(யுடைய கதிர்களை)யும் நாம் வெளியாக்குகிறோம். பேரீச்ச மரத்தின் பாளைகளில் வளைந்து தொங்கும் பழக்குலைகளும் இருக்கின்றன. (அவற்றையும் நாமே வெளியாக்குகிறோம்.) திராட்சைத் தோட்டங்களையும், (பார்வைக்கு) ஒன்றுபோலும் (ரசனையில்) வெவ்வேறாகவும் உள்ள மாதுளை, ஜெய்த்தூன் (ஒலிவம்) ஆகியவற்றையும் (நாமே வெளியாக்குகிறோம்). அவை (பூத்துக்) காய்ப்பதையும், பின்னர் கனிந்து பழமாகும் விதத்தையும் (மக்களே!) உற்று நோக்குங்கள். நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
-
6:100
وَجَعَلُوا۟ لِلَّهِ شُرَكَآءَ ٱلْجِنَّ وَخَلَقَهُمْ ۖ وَخَرَقُوا۟ لَهُۥ بَنِينَ وَبَنَـٰتٍۭ بِغَيْرِ عِلْمٍ ۚ سُبْحَـٰنَهُۥ وَتَعَـٰلَىٰ عَمَّا يَصِفُونَ
Wa-jaʻaloo lillaahi shurakaaaʹal jinna wa-khalaq̣a-hum wa-kharaq̣oo lahoo baneena wa-banaatim big̣ayri ʻilm. Subḥaanahoo wa-taʻaalaa ʻammaa yaṣifoon.
(இவ்வாறெல்லாமிருந்தும்) அவர்கள் ஜின்களில் பலரை அல்லாஹ்வுக்கு இணையாக்குகின்றனர். எனினும், அந்த ஜின்களையும் அவனே படைத்திருக்கிறான். இவர்கள் (தங்கள்) அறிவீனத்தால் அல்லாஹ்வுக்கு ஆண், பெண் சந்ததிகளையும் கற்பிக்கின்றனர். அவனோ, இவர்கள் (இவ்வாறு) வர்ணிப்பவற்றில் இருந்து மிக்க பரிசுத்தமானவனாகவும் உயர்ந்தவனாகவும் இருக்கிறான்.
-
6:101
بَدِيعُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ أَنَّىٰ يَكُونُ لَهُۥ وَلَدٌ وَلَمْ تَكُن لَّهُۥ صَـٰحِبَةٌ ۖ وَخَلَقَ كُلَّ شَىْءٍ ۖ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ
Badeeʻus samaawaati wal-ʹarḍ: Annaa yakoonu lahoo waladuñw wa-lam takul lahoo ṣaaḥibah? Wa-khalaq̣a kulla shayʹ, wa-Huwa bikulli shayʹin ʻAleem.
முன்மாதிரியின்றியே வானங்களையும் பூமியையும் அவன் படைத்தான் அவனுக்கு எவ்வாறு சந்ததியேற்படும்? அவனுக்கு மனைவி கிடையாதே! அனைத்தையும் அவனே படைத்திருக்கிறான். மேலும், அவன் அனைத்தையும் நன்கறிந்தவன்.
-
6:102
ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمْ ۖ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ ۖ خَـٰلِقُ كُلِّ شَىْءٍ فَٱعْبُدُوهُ ۚ وَهُوَ عَلَىٰ كُلِّ شَىْءٍ وَكِيلٌ
Ẓaalikumul laahu Rabbukum! Laaa ʹilaaha ʹillaa Hoo. khaaliq̣u kulli shayʹiñ faʻbudooh; wa-Huwa ʻalaa kulli shayʹiñw Wakeel.
இத்தகைய அல்லாஹ்தான் உங்களைப் படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்தும் இறைவன். வணக்கத்திற்குரியவன் அவனைத் தவிர வேறு ஒருவருமில்லை. அவனே அனைத்தின் படைப்பாளன். ஆகவே, அ(வன் ஒருவ)னையே நீங்கள் (அனைவரும்) வணங்குங்கள். எல்லா காரியங்களையும் கண்காணிப்பவனும் அவனே.
-
6:103
لَّا تُدْرِكُهُ ٱلْأَبْصَـٰرُ وَهُوَ يُدْرِكُ ٱلْأَبْصَـٰرَ ۖ وَهُوَ ٱللَّطِيفُ ٱلْخَبِيرُ
Laa tudrikuhul ʹabṣaaru. wa-Huwa yudrikul ʹabṣaar: wa-Huwal Laṭeeful Khabeer.
பார்வைகள் அவனை அடையமுடியாது. அவனோ பார்வைகள் அனைத்தையும் அறிந்து கொள்கிறான். அவன் (எவரின் பார்வைக்கும் அகப்படாத) மிக நுட்பமானவன்; மிக்க அறிந்தவன்.
-
6:104
قَدْ جَآءَكُم بَصَآئِرُ مِن رَّبِّكُمْ ۖ فَمَنْ أَبْصَرَ فَلِنَفْسِهِۦ ۖ وَمَنْ عَمِىَ فَعَلَيْهَا ۚ وَمَآ أَنَا۠ عَلَيْكُم بِحَفِيظٍ
Q̣ad jaaaʹakum̃ baṣaaaʹiru mir rabbikum: faman ʹabṣara falinafsih: wa-man ʻamiya faʻalayhaa: wa-maaa ʹana ʻalaykum̃ biḥafeez̤̣.
உங்கள் இறைவனிடமிருந்து (சத்தியத்திற்குரிய பல) ஆதாரங்கள் உங்களிடம் வந்திருக்கின்றன. எவன் (அவற்றைக் கவனித்து) பார்க்கிறானோ (அது) அவனுக்கே நன்று. எவன் (அவற்றைப் பார்க்காது) கண்ணை மூடிக்கொள்கிறானோ (அது) அவனுக்கே கேடாகும். (நபியே! நீர் அவர்களை நோக்கி) ‘‘நான் உங்களைக் காப்பவன் அல்ல'' (என்று கூறிவிடுவீராக).
-
6:105
وَكَذَٰلِكَ نُصَرِّفُ ٱلْـَٔايَـٰتِ وَلِيَقُولُوا۟ دَرَسْتَ وَلِنُبَيِّنَهُۥ لِقَوْمٍ يَعْلَمُونَ
Wa-kaẓaalika nuṣarriful ʹAayaati wa-liyaq̣ooloo darasta wa-li-nubayyi-nahoo. liq̣awmiñy yaʻlamoon.
(இதை) நீர் (எங்களுக்கு) நன்கு ஓதிக் காண்பித்(து அறிவித்)தீர் என்று அவர்கள் சொல்வதற்காகவும், அறியக்கூடிய மக்களுக்கு நாம் இதைத் தெளிவாக்குவதற்காகவும், (நம்) வசனங்களை இவ்வாறு பலவாறாக (அடிக்கடி) விவரிக்கிறோம்.
-
6:106
ٱتَّبِعْ مَآ أُوحِىَ إِلَيْكَ مِن رَّبِّكَ ۖ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ ۖ وَأَعْرِضْ عَنِ ٱلْمُشْرِكِينَ
ʹIttabiʻ maaa ʹooḥiya ʹilayka mir Rabbik: Laaa ʹilaaha ʹillaa Hoo: wa-ʹaʻriḍ ʻanil mushrikeen.
(நபியே!) உமது இறைவனால் உமக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டவற்றையே நீர் பின்பற்றுவீராக. அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறுயாரும் இல்லவே இல்லை. ஆகவே, (அவனுக்கு) இணைவைப்பவர்களை நீர் புறக்கணித்து விடுவீராக.
-
6:107
وَلَوْ شَآءَ ٱللَّهُ مَآ أَشْرَكُوا۟ ۗ وَمَا جَعَلْنَـٰكَ عَلَيْهِمْ حَفِيظًا ۖ وَمَآ أَنتَ عَلَيْهِم بِوَكِيلٍ
Wa-law shaaaʹal laahu maaa ʹashrakoo: wa-maa jaʻalnaaka ʻalayhim ḥafeez̤̣aa, wa-maaa ʹañta ʻalayhim̃ biwakeel.
அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இணைவைத்திருக்கவே மாட்டார்கள். அவர்கள் மீது காப்பாளராக நாம் உம்மை ஏற்படுத்தவில்லை. நீர் அவர்களைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்புடையவருமல்ல.
-
6:108
وَلَا تَسُبُّوا۟ ٱلَّذِينَ يَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ فَيَسُبُّوا۟ ٱللَّهَ عَدْوًۢا بِغَيْرِ عِلْمٍ ۗ كَذَٰلِكَ زَيَّنَّا لِكُلِّ أُمَّةٍ عَمَلَهُمْ ثُمَّ إِلَىٰ رَبِّهِم مَّرْجِعُهُمْ فَيُنَبِّئُهُم بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ
Wa-laa tasubbul laẓeena yadʻoona miñ doonil laahi fayasubbul laaha ʻadwam big̣ayri ʻilm. Kaẓaalika zayyannaa likulli ʹummatin ʻamalahum. S̤umma ʹilaa Rabbihim marjiʻuhum fayunabbiʹuhum̃ bimaa kaanoo yaʻmaloon.
(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் அல்லாத எவற்றை அவர்கள் (தெய்வம் என) அழைக்கிறார்களோ அவற்றை நீங்கள் திட்டாதீர்கள். அதனால், அவர்கள் அறியாமையின் காரணமாக வரம்பு மீறி அல்லாஹ்வை திட்டுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு வகுப்பினருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக்கி வைத்திருக்கிறோம். பின்னர், அவர்கள் தங்கள் இறைவனிடமே செல்வார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்த செயலைப்பற்றி (அவற்றில் நன்மை எவை, தீமை எவை என்பதை) அவன் அவர்களுக்கு அறிவித்துவிடுவான்.
-
6:109
وَأَقْسَمُوا۟ بِٱللَّهِ جَهْدَ أَيْمَـٰنِهِمْ لَئِن جَآءَتْهُمْ ءَايَةٌ لَّيُؤْمِنُنَّ بِهَا ۚ قُلْ إِنَّمَا ٱلْـَٔايَـٰتُ عِندَ ٱللَّهِ ۖ وَمَا يُشْعِرُكُمْ أَنَّهَآ إِذَا جَآءَتْ لَا يُؤْمِنُونَ
Wa-ʹaq̣samoo billaahi jahda ʹaymaanihim laʹiñ jaaaʹathum ʹAayatul layuʹminunna bihaa. Q̣ul ʹinnamal ʹAayaatu ʻindal laahi wa-maa yushʻirukum ʹannahaaa ʹiẓaa jaaaʹat laa yuʹminoon?
(அவர்கள் விருப்பப்படி) ஓர் அத்தாட்சி எங்களுக்காக வரும் சமயத்தில், ‘‘நிச்சயமாக நாங்கள் அதை நம்புவோம்'' என அவர்கள் அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கூறுகின்றனர். (அதற்கு நபியே! நீர் அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக அத்தாட்சிகள் அனைத்தும் அல்லாஹ்விடமே இருக்கின்றன. (அவற்றை அவன் விரும்பியவாறே வெளியாக்குவான். நீங்கள் விரும்புவது போன்றல்ல) என்று கூறுவீராக. (அவ்வாறு) அவர்களிடம் (அவர்கள் விரும்பியவாறே) அத்தாட்சி வந்தாலும் அதை அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள் என்பதை (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அறிவீர்களா?
-
6:110
وَنُقَلِّبُ أَفْـِٔدَتَهُمْ وَأَبْصَـٰرَهُمْ كَمَا لَمْ يُؤْمِنُوا۟ بِهِۦٓ أَوَّلَ مَرَّةٍ وَنَذَرُهُمْ فِى طُغْيَـٰنِهِمْ يَعْمَهُونَ
Wa-nuq̣allibu ʹafʹidatahum wa-ʹabṣaarahum kamaa lam yuʹminoo biheee ʹawwala marratiñ wa-naẓaruhum fee ṭug̣yaanihim yaʻmahoon.
முன்னர் அவர்கள் இ(வ்வேதத்)தை நம்பிக்கை கொள்ளாமல் இருந்தபடியே (இப்பொழுதும் நம்பிக்கை கொள்ளாது இருப்பதற்காக) நாம் அவர்களுடைய உள்ளங்களையும் பார்வைகளையும் புரட்டி அவர்களுடைய வழிகேட்டிலேயே அவர்களை தட்டழிந்து திரியும்படி விட்டிருக்கிறோம்.