Surah Al-BaqarahBegins here at 2:142
-
2:142
۞ سَيَقُولُ ٱلسُّفَهَآءُ مِنَ ٱلنَّاسِ مَا وَلَّىٰهُمْ عَن قِبْلَتِهِمُ ٱلَّتِى كَانُوا۟ عَلَيْهَا ۚ قُل لِّلَّهِ ٱلْمَشْرِقُ وَٱلْمَغْرِبُ ۚ يَهْدِى مَن يَشَآءُ إِلَىٰ صِرَٰطٍ مُّسْتَقِيمٍ
Sayaq̣oolus sufahaaaʹu minan naasi maa- wallaahum ʻañ Q̣iblatihimul latee kaanoo ʻalayhaa? Q̣ul lillaahil Mashriq̣u walmag̣hrib: yahdee mañy yashaaaʹu ʹilaa Ṣiraaṭim Mustaq̣eem.
(நபியே! ‘‘முஸ்லிம்கள்) முன்நோக்கி வந்த கிப்லாவிலிருந்து அவர்களைத் திருப்பி விட்டது எது?'' என மனிதர்களில் சில அறிவீனர்கள் கேட்க ஆரம்பிப்பார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘கிழக்குத் திசையும் மேற்குத் திசையும் அல்லாஹ்வுக்குரியதே! அவன் விரும்புகிறவர்களை நேரான வழியில் செலுத்துவான்.''
-
2:143
وَكَذَٰلِكَ جَعَلْنَـٰكُمْ أُمَّةً وَسَطًا لِّتَكُونُوا۟ شُهَدَآءَ عَلَى ٱلنَّاسِ وَيَكُونَ ٱلرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا ۗ وَمَا جَعَلْنَا ٱلْقِبْلَةَ ٱلَّتِى كُنتَ عَلَيْهَآ إِلَّا لِنَعْلَمَ مَن يَتَّبِعُ ٱلرَّسُولَ مِمَّن يَنقَلِبُ عَلَىٰ عَقِبَيْهِ ۚ وَإِن كَانَتْ لَكَبِيرَةً إِلَّا عَلَى ٱلَّذِينَ هَدَى ٱللَّهُ ۗ وَمَا كَانَ ٱللَّهُ لِيُضِيعَ إِيمَـٰنَكُمْ ۚ إِنَّ ٱللَّهَ بِٱلنَّاسِ لَرَءُوفٌ رَّحِيمٌ
Wa-kaẓaalika jaʻalnaakum ʹUmmatañw Waṣatal litakoonoo Shuhadaaʹa ʻalan naasi wa-yakoonar Rasoolu ʻalaykum Shaheedaa. Wa-maa jaʻalnal Q̣iblatal latee kuñta ʻalayhaaa ʹillaa linaʻlama mañy yattabiʻur Rasoola mimmañy yañq̣alibu ʻalaa ʻaq̣ibayh. Wa-ʹiñ kaanat lakabeeratan ʹillaa ʻalal laẓeena hadal laah. Wa-maa Kaanal laahu liyuḍeeʻa ʹeemaanakum. ʹInnal laaha binnaasi la-Raʹoofur Raḥeem.
(நம்பிக்கையாளர்களே!) அவ்வாறே (ஏற்றத்தாழ்வற்ற) நடுநிலையான வகுப்பினராகவும் நாம் உங்களை ஆக்கினோம். ஆகவே, நீங்கள் (மற்ற) மனிதர்களுக்கு (வழிகாட்டக்கூடிய) சாட்சிகளாக இருங்கள். (நம்) தூதர் உங்களுக்கு (வழி காட்டக் கூடிய) சாட்சியாக இருப்பார். (நபியே!) நீர் (இதுவரை முன்னோக்கித் தொழுதுகொண்டு) இருந்த (பைத்துல் முகத்தஸின்) திசையை (மாற்றாமல் நீர் அதையே நோக்கித் தொழுது வரும்படி இதுவரை) நாம் விட்டு வைத்திருந்ததெல்லாம் (அதை மாற்றிய பின் நம்) தூதரைப் பின்பற்றுபவர் யார்? பின்பற்றாமல் தன் குதிங்கால் புறமாகவே (புறமுதுகிட்டு) திரும்பி(ச் சென்று) விடுகிறவர் யார்? என்பதை நாம் அறி(வித்து விடு) வதற்காகத்தான். ஆனால், எவர்களை அல்லாஹ் நேர்வழியில் நடத்துகிறானோ அவர்களைத் தவிர மற்றவர்களுக்கு அ(வ்வாறு கிப்லாவை மாற்றுவ)து நிச்சயமாக மிகப்பளுவாக இருக்கும். (நம்பிக்கையாளர்களே! இதற்கு முன்னர் நீங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுது வந்த) உங்கள் நம்பிக்கையையும் அல்லாஹ் வீணாக்கிவிட மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக இரக்கமுள்ளவன், மிகக் கருணையாளன் ஆவான்.
-
2:144
قَدْ نَرَىٰ تَقَلُّبَ وَجْهِكَ فِى ٱلسَّمَآءِ ۖ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَىٰهَا ۚ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ ۚ وَحَيْثُ مَا كُنتُمْ فَوَلُّوا۟ وُجُوهَكُمْ شَطْرَهُۥ ۗ وَإِنَّ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ لَيَعْلَمُونَ أَنَّهُ ٱلْحَقُّ مِن رَّبِّهِمْ ۗ وَمَا ٱللَّهُ بِغَـٰفِلٍ عَمَّا يَعْمَلُونَ
Q̣ad naraa taq̣alluba wajhika fis samaaaʹie: falanuwalliyannaka Q̣iblatañ tarḍaahaa. Fawalli wajhaka shaṭral Masjidil Ḥaraam. Waḥays̤u maa- kuñtum fawalloo wujoohakum shaṭrah. Wa-ʹinnal laẓeena ʹootul Kitaaba layaʻlamoona ʹannahul ḥaq̣q̣u mir Rabbihim. Wa-mal laahu big̣aafilin ʻammaa yaʻmaloon.
(நபியே!) உமது முகம் (பிரார்த்தனை செய்து) அடிக்கடி வானத்தை நோக்குவதை நாம் காண்கிறோம். ஆதலால், நீர் விரும்பும் கிப்லா(வாகிய மக்கா)வின் பக்கமே நாம் உம்மை நிச்சயமாகத் திருப்புகிறோம். எனவே, நீர் (தொழும்போது மக்காவிலுள்ள) ‘மஸ்ஜிதுல் ஹராமின்' பக்கமே உமது முகத்தைத் திருப்புவீராக. (நம்பிக்கையாளர்களே!) நீங்களும் எங்கிருந்த போதிலும் (தொழுகையில்) அதன் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்புங்கள். வேதம் கொடுக்கப்பட்ட (யூதர்களும், கிறிஸ்தவர்களும் (நீங்கள் மக்காவின் திசையளவில் திரும்பிய) ‘‘இது தங்கள் இறைவனிடமிருந்(து வந்)த உண்மை(யான உத்தரவு)தான்'' என நிச்சயமாக அறிவார்கள். (ஏனென்றால், அவ்வான்ற அவர்களுடைய வேதத்தில் இருக்கிறது. எனவே, உண்மையை மறைக்கும்) அவர்கள் செயலைப்பற்றி அல்லாஹ் பராமுகமாயில்லை.
-
2:145
وَلَئِنْ أَتَيْتَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ بِكُلِّ ءَايَةٍ مَّا تَبِعُوا۟ قِبْلَتَكَ ۚ وَمَآ أَنتَ بِتَابِعٍ قِبْلَتَهُمْ ۚ وَمَا بَعْضُهُم بِتَابِعٍ قِبْلَةَ بَعْضٍ ۚ وَلَئِنِ ٱتَّبَعْتَ أَهْوَآءَهُم مِّنۢ بَعْدِ مَا جَآءَكَ مِنَ ٱلْعِلْمِ ۙ إِنَّكَ إِذًا لَّمِنَ ٱلظَّـٰلِمِينَ
Wa-laʹin ʹataytal laẓeena ʹootul Kitaaba bikulli ʹAayatim maa tabiʻoo Q̣iblatak; wa-maaaʹ añta bitaabiʻin Q̣iblatahum; wa-maa baʻḍuhum̃ bitaabiʻiñ Q̣iblata baʻḍ. Wa-laʹinit tabaʻta ʹahwaaaʹahum mim baʻdi maa- jaaaʹaka minal ʻilmi ʹinnaka ʹiḍal laminaz̤̣ z̤̣aalimeen.
ஆகவே, (நபியே!) வேதம் கொடுக்கப்பட்ட (அ)வர்களிடம் (அவர்களை திருப்திபடுத்தக்கூடிய) அத்தாட்சிகள் அனைத்தையும் நீர் கொண்டுவந்த போதிலும் அவர்கள் உமது கிப்லாவைப் பின்பற்றப் போவதில்லை. நீரும் அவர்களுடைய கிப்லாவைப் பின்பற்றப் போவதில்லை. (வேதம் கொடுக்கப்பட்ட) அவர்களிலும் ஒருவர் மற்றொருவரின் கிப்லாவைப் பின்பற்றப் போவதுமில்லை. (ஆதலால், மக்காவை நோக்கித் தொழும்படி) உமது வஹ்யி(ன் மூலம் உத்தரவு) வந்ததன் பின்னரும் அவர்களுடைய விருப்பங்களை நீர் பின்பற்றினால் நிச்சயமாக நீரும் அநியாயக்காரர்களில் உள்ளவர்தான் (என்று கருதப்படுவீர்).
-
2:146
ٱلَّذِينَ ءَاتَيْنَـٰهُمُ ٱلْكِتَـٰبَ يَعْرِفُونَهُۥ كَمَا يَعْرِفُونَ أَبْنَآءَهُمْ ۖ وَإِنَّ فَرِيقًا مِّنْهُمْ لَيَكْتُمُونَ ٱلْحَقَّ وَهُمْ يَعْلَمُونَ
ʹAllaẓeena ʹaataynaahumul kitaaba yaʻrifoonahoo kamaa yaʹrifoona ʹabnaaʹahum: wa-ʹinna fareeq̣am minhum layaktumoonal Ḥaq̣q̣a wa-hum yaʻlamoon.
எவர்களுக்கு நாம் வேதம் கொடுத்திருக்கிறோமோ அவர்கள் தங்கள் பிள்ளை களை(ச் சந்தேகமற) அறிவதைப் போல் அ(ந்த மக்காவின் திசையளவில் நீங்கள் திரும்பித் தொழுவீர்கள் என்ப)தை அறிவார்கள். ஆனால், நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவினர் நன்கறிந்து கொண்டே (இந்த) உண்மையை மறைக்கின்றனர்.
-
2:147
ٱلْحَقُّ مِن رَّبِّكَ ۖ فَلَا تَكُونَنَّ مِنَ ٱلْمُمْتَرِينَ
ʹAl-Ḥaq̣q̣u mir Rabbika falaa takoonanna minal mumtareen.
(நபியே! கிப்லாவைப் பற்றி) உமது இறைவனிடமிருந்து வந்த இதுதான் உண்மை(யான கட்டளை)யாகும். ஆதலால், நீர் சந்தேகிப்பவர்களில் ஒருவராக ஒரு சிறிதும் ஆகிவிட வேண்டாம்.
-
2:148
وَلِكُلٍّ وِجْهَةٌ هُوَ مُوَلِّيهَا ۖ فَٱسْتَبِقُوا۟ ٱلْخَيْرَٰتِ ۚ أَيْنَ مَا تَكُونُوا۟ يَأْتِ بِكُمُ ٱللَّهُ جَمِيعًا ۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ
Wa-likulliñw wijhatun huwa muwalleehaa fastabiq̣ul khayraat. ʹAyna maa- takoonoo yaʹti bikumul laahu Jameeʻaa. ʹInnal laaha ʻalaa kulli shayʹiñ Q̣adeer.
(நம்பிக்கையாளர்களே!) ஒவ்வொரு (கூட்டத்த)வருக்கும் ஒரு திசையுண்டு. அவ(ரவ)ர் அதன் பக்கம் முன்னோக்குவார். (திசை மட்டும் நோக்கமல்ல) நன்மையானவற்றை செய்வதில் நீங்கள் ஒருவரை ஒருவர் முந்திச் செல்லுங்கள். நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
-
2:149
وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ ۖ وَإِنَّهُۥ لَلْحَقُّ مِن رَّبِّكَ ۗ وَمَا ٱللَّهُ بِغَـٰفِلٍ عَمَّا تَعْمَلُونَ
Wa-min ḥays̤u kharajta fawalli wajhaka shaṭral Masjidil Ḥaraam; wa-ʹinnahoo lalḥaq̣q̣u mir rabbik. Wa-mal laahu big̣aafilin ʻammaa taʻmaloon.
ஆகவே, (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழும்போது மக்காவிலுள்ள) ‘மஸ்ஜிதுல் ஹராமின்' பக்கமே உமது முகத்தைத் திருப்புவீராக. நிச்சயமாக இதுதான் உமது இறைவனுடைய உண்மை(யான கட்டளை)யாகும். (ஆகவே, இதைப் பற்றி வீண் தர்க்கம் செய்பவர்களே!) நீங்கள் செய்வதைப்பற்றி அல்லாஹ் பராமுகமாயில்லை.
-
2:150
وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ ۚ وَحَيْثُ مَا كُنتُمْ فَوَلُّوا۟ وُجُوهَكُمْ شَطْرَهُۥ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَيْكُمْ حُجَّةٌ إِلَّا ٱلَّذِينَ ظَلَمُوا۟ مِنْهُمْ فَلَا تَخْشَوْهُمْ وَٱخْشَوْنِى وَلِأُتِمَّ نِعْمَتِى عَلَيْكُمْ وَلَعَلَّكُمْ تَهْتَدُونَ
Wa-min ḥays̤u kharajta fawalli wajhaka shaṭral Masjidil haraam; waḥays̤u maa- kuntum fawalloo Wujoohakum shaṭrahoo liʹallaa yakoona linnaasi ʻalaykum hujjatun ʹillal laẓeena z̤̣alamoo minhum; falaaa takhshawhum wakhshawnee; wa-liʹutimma niʻmatee ʻalaykum Wa-laʻallakum tahtadoon.
(நபியே!) நீர் எங்கு சென்றாலும் (தொழும்போது) ‘மஸ்ஜிதுல் ஹராமின்' பக்கமே உமது முகத்தைத் திருப்புவீராக. (நம்பிக்கையாளர்களே!) அவர்களில் வரம்பு மீறியவர்களைத் தவிர மற்ற மனிதர்கள் உங்களுடன் (வீண்) விவாதம் செய்ய எந்த ஆதாரமும் இருக்கக்கூடாது என்பதற்காக நீங்களும் எங்கிருந்தபோதிலும் ‘மஸ்ஜிதுல் ஹராமின்' பக்கமே உங்கள் முகங்களைத் திருப்புங்கள். ஆகவே, அவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம். எனக்கே நீங்கள் பயப்படுங்கள். (கிப்லாவைப் பற்றிய இக்கட்டளையின் மூலம்) என் அருட்கொடையை நான் உங்கள் மீது முழுமையாக்கி வைப்பேன். (அதனால்) நிச்சயமாக நீங்கள் நேரான வழியை அடைவீர்கள்.
-
2:151
كَمَآ أَرْسَلْنَا فِيكُمْ رَسُولًا مِّنكُمْ يَتْلُوا۟ عَلَيْكُمْ ءَايَـٰتِنَا وَيُزَكِّيكُمْ وَيُعَلِّمُكُمُ ٱلْكِتَـٰبَ وَٱلْحِكْمَةَ وَيُعَلِّمُكُم مَّا لَمْ تَكُونُوا۟ تَعْلَمُونَ
Kamaaa ʹarsalnaa feekum Rasoolam miñkum yatloo ʻalaykum ʹAayaatinaa wa-yuzakkikum wa-yuʻalli-mukumul Kitaaba wal-Ḥikmata wa-yuʻAllimukum maa lam takoonoo taʻlamoon.
அவ்வான்ற, உங்களுக்கு நம் வசனங்களை ஓதிக் காண்பித்து உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கவும், உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பித்து, நீங்கள் அறியாதவற்றையும் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கக்கூடிய ஒரு தூதரை உங்களிலிருந்தே நாம் அனுப்பிவைத்தோம்.
-
2:152
فَٱذْكُرُونِىٓ أَذْكُرْكُمْ وَٱشْكُرُوا۟ لِى وَلَا تَكْفُرُونِ
Faẓkurooneee ʹaẓkurkum washkuroo lee wa-laa takfuroon.
ஆகவே, நீங்கள் என்னை நினைத்துக் கொண்டேயிருங்கள். நானும் உங்களை நினைத்து (அருள் புரிந்து) வருவேன். நீங்கள் எனக்கு நன்றி செலுத்தி வாருங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள்.
-
2:153
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱسْتَعِينُوا۟ بِٱلصَّبْرِ وَٱلصَّلَوٰةِ ۚ إِنَّ ٱللَّهَ مَعَ ٱلصَّـٰبِرِينَ
Yaaaʹayyuhal laẓeena ʹaamanus taʻeenoo biṣ-Ṣabri was-Ṣalaah; ʹInnal laaha maʻaṣ ṣaabreeen.
நம்பிக்கையாளர்களே! (நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவதற்காக) பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.
-
2:154
وَلَا تَقُولُوا۟ لِمَن يُقْتَلُ فِى سَبِيلِ ٱللَّهِ أَمْوَٰتٌۢ ۚ بَلْ أَحْيَآءٌ وَلَـٰكِن لَّا تَشْعُرُونَ
Wa-laa taq̣ooloo limañy yuq̣talu fee Sabeelil laahi ʹamwaat. Bal ʹaḥyaaaʹuñw Wa laakil laa tashʻuroon
அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிந்து (எதிரிகளால்) வெட்டப்பட்டவர்களை இறந்தவர்கள் எனக் கூறாதீர்கள். மாறாக, (அவர்கள்) உயிரோடு இருக்கிறார்கள். ஆனால், (அதை) நீங்கள் உணர்ந்துகொள்ள மாட்டீர்கள்.
-
2:155
وَلَنَبْلُوَنَّكُم بِشَىْءٍ مِّنَ ٱلْخَوْفِ وَٱلْجُوعِ وَنَقْصٍ مِّنَ ٱلْأَمْوَٰلِ وَٱلْأَنفُسِ وَٱلثَّمَرَٰتِ ۗ وَبَشِّرِ ٱلصَّـٰبِرِينَ
Wa-lanablu-wannakum̃ bishayʹim minal khawfi waljooʻi wa-naq̣ṣim minal ʹamwaali wal-ʹañfusi was̤-s̤amaraat: wa-bashshiris̤ S̤aabireen,
(நம்பிக்கையாளர்களே!) பயம், பசி மேலும், பொருள்கள், உயிர்கள், கனிவர்க்கங்கள் ஆகியவற்றில் நஷ்டத்தைக் கொண்டு நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். (நபியே! இச்சோதனைகளால் ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக.
-
2:156
ٱلَّذِينَ إِذَآ أَصَـٰبَتْهُم مُّصِيبَةٌ قَالُوٓا۟ إِنَّا لِلَّهِ وَإِنَّآ إِلَيْهِ رَٰجِعُونَ
ʹAllaẓeena ʹiẓaaa ʹaṣaabathum muṣeebatuñ q̣alooo ʹinnaa lillaahi wa-ʹinnaaa ʹilayhi raajiʻoon.
(சோதனைக்குள்ளாகும்) அவர்கள் தங்களுக்கு எத்தகைய துன்பம் ஏற்பட்ட போதிலும் ‘‘நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கிறோம். நிச்சயமாக நாம் அவனிடமே மீளுவோம்'' எனக் கூறுவார்கள்.
-
2:157
أُو۟لَـٰٓئِكَ عَلَيْهِمْ صَلَوَٰتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ ۖ وَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْمُهْتَدُونَ
ʹUlaaaʻika ʻalayhim ṣalawaatum mir Rabbihim wa-raḥmah: wa-ʹulaaaʹika humul Muhtadoon.
அவர்கள் மீதுதான் அவர்களுடைய இறைவனிடமிருந்து (மன்னிப்பும்) புகழுரைகளும் கருணையும் ஏற்படுகின்றன. மேலும், அவர்கள்தான் நேரான வழியையும் அடைந்தவர்கள்.
-
2:158
۞ إِنَّ ٱلصَّفَا وَٱلْمَرْوَةَ مِن شَعَآئِرِ ٱللَّهِ ۖ فَمَنْ حَجَّ ٱلْبَيْتَ أَوِ ٱعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَن يَطَّوَّفَ بِهِمَا ۚ وَمَن تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ ٱللَّهَ شَاكِرٌ عَلِيمٌ
ʹInnaṣ S̤afaa wal-Marwata miñ Shaʻaaʹiril laah. Faman ḥajjal Bayta ʹawiʻ tamara falaa Junaaḥa ʻalayhi ʻany yaṭṭawwafa bihimaa. Wa-mañ taṭawwaʻa khayrañ faʹinnal laha Shaakirun ʻAleem.
நிச்சயமாக ‘ஸஃபா' (மலையும்) ‘மர்வா' (மலையும், வணக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்ட) அல்லாஹ்வின் அடையாளங்களில் உள்ளவையாக இருக்கின்றன. ஆகையால் எவர்கள் (‘கஅபா' என்னும்) அவ்வீட்டை ‘ஹஜ்ஜூ' அல்லது ‘உம்ரா' செய்தார்களோ அவர்கள், அவ்விரண்டையும் சுற்றி வருவது குற்றமில்லை. ஆகவே, எவரேனும் நன்மையை நாடி (அவ்வாறு) செய்தால் நிச்சயமாக அல்லாஹ் (அதற்கு) நன்றி பாராட்டுவான், அவருடைய (எண்ணங்களை) நன்கறிவான்.
-
2:159
إِنَّ ٱلَّذِينَ يَكْتُمُونَ مَآ أَنزَلْنَا مِنَ ٱلْبَيِّنَـٰتِ وَٱلْهُدَىٰ مِنۢ بَعْدِ مَا بَيَّنَّـٰهُ لِلنَّاسِ فِى ٱلْكِتَـٰبِ ۙ أُو۟لَـٰٓئِكَ يَلْعَنُهُمُ ٱللَّهُ وَيَلْعَنُهُمُ ٱللَّـٰعِنُونَ
ʹInnal laẓeena yaktumoona maaa ʹañzalnaa minal bayyinaati walhudaa mim baʻdi maa- bayyannaahu linnaasi fil Kitaabi ʹulaaaʹika yalʻanuhumul laahu wa-yalʻanuhumul laa-ʻinoon,
நேர்வழியையும் தெளிவான அத்தாட்சிகளையும் நாம் இறக்கி, அவற்றை மனிதர்களுக்காக வேதத்தில் தெளிவுபடுத்தி(க் கூறி)ய பின்னர் எவர்கள் அவற்றை மறைக்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ்வும் சபிக்கிறான். (மற்றும்) சபிப்பவர்களும் அவர்களைச் சபிக்கின்றனர்.
-
2:160
إِلَّا ٱلَّذِينَ تَابُوا۟ وَأَصْلَحُوا۟ وَبَيَّنُوا۟ فَأُو۟لَـٰٓئِكَ أَتُوبُ عَلَيْهِمْ ۚ وَأَنَا ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ
ʹIllal laẓeena taaboo wa-ʹaṣlaḥoo wa-bayyanoo faʹulaaaʹika ʹatoobu ʻalayhim; wa-ʹAnat Tawwaabur Raḥeem.
ஆயினும், அவர்களில் எவர்கள் வருந்தி வேதனைப்பட்டு, (வேதங்களில் தாம் மறைத்தவற்றை) சீர்திருத்தி, அவற்றை (மனிதர்களுக்குத்) தெளிவாக எடுத்துரைக்கின்றனரோ அவர்களை நான் மன்னித்து விடுவேன். நானோ மிக்க மன்னிப்பாளன்; மிகக் கருணையாளன்.
-
2:161
إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَمَاتُوا۟ وَهُمْ كُفَّارٌ أُو۟لَـٰٓئِكَ عَلَيْهِمْ لَعْنَةُ ٱللَّهِ وَٱلْمَلَـٰٓئِكَةِ وَٱلنَّاسِ أَجْمَعِينَ
ʹInnal laẓeena kafaroo wa-maatoo wa-hum kuffaarun ʹulaaaʹika ʻalayhim laʻnatul laahi walmalaaaʹikati wannaasi ʹajmaʻeen,
எவர்கள் (தங்கள் வேதத்திலுள்ள உண்மைகளை மறைத்து) நிராகரித்து விட்டு (அதை சீர்திருத்தாமல்) நிராகரித்தவர்களாகவே இறந்து விடுகிறார்களோ அவர்கள்மீது அல்லாஹ், வானவர்கள், மனிதர்கள் ஆகிய அனைவரின் சாபமும் நிச்சயமாக உண்டாகட்டும்.
-
2:162
خَـٰلِدِينَ فِيهَا ۖ لَا يُخَفَّفُ عَنْهُمُ ٱلْعَذَابُ وَلَا هُمْ يُنظَرُونَ
Khaalideena feehaa: laa- yukhaffafu ʻanhumul ʻaẓaabu wa-laa hum yuñz̤̣aroon.
(மேலும், அவர்கள்) அ(ச்சாபத்)தில் என்றென்றும் தங்கிவிடுவார்கள். (மறுமையில்) அவர்களுடைய வேதனை இலேசாக்கப்படவும் மாட்டாது. அவர்கள் (ஓய்வு எடுப்பதற்கு) அவகாசம் கொடுக்கப்படவும் மாட்டார்கள்.
-
2:163
وَإِلَـٰهُكُمْ إِلَـٰهٌ وَٰحِدٌ ۖ لَّآ إِلَـٰهَ إِلَّا هُوَ ٱلرَّحْمَـٰنُ ٱلرَّحِيمُ
Wa-ʹIlaahukum Ilaahuñw Waaḥid: Laaa ʹilaaha ʹillaa Huwar Raḥmaanur Raḥeem.
(மனிதர்களே!) உங்கள் வணக்கத்திற்குத் தகுதியானவன் ஒரே ஓர் இறைவனே ஆவான். அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையவனுமாகிய அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவனுமில்லை.
-
2:164
إِنَّ فِى خَلْقِ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَٱخْتِلَـٰفِ ٱلَّيْلِ وَٱلنَّهَارِ وَٱلْفُلْكِ ٱلَّتِى تَجْرِى فِى ٱلْبَحْرِ بِمَا يَنفَعُ ٱلنَّاسَ وَمَآ أَنزَلَ ٱللَّهُ مِنَ ٱلسَّمَآءِ مِن مَّآءٍ فَأَحْيَا بِهِ ٱلْأَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِيهَا مِن كُلِّ دَآبَّةٍ وَتَصْرِيفِ ٱلرِّيَـٰحِ وَٱلسَّحَابِ ٱلْمُسَخَّرِ بَيْنَ ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ لَـَٔايَـٰتٍ لِّقَوْمٍ يَعْقِلُونَ
ʹInna fee khalq̣is samaawaati wal-ʹarḍi Wakhtilaafil layli wannahaari walfulkil latee tajree fil baḥri bimaa yañfaʻun naasa wa-maaa ʻañzalal aahu minas samaaaʹi mim maaaʹiñ faʹaḥyaa bihil ʹarẓa baʻda mawtihaa wa-bas̤s̤a feehaa miñ kulli daabbah: wa-taṣreefir riyaaḥi was-saḥaabil musakhkhari baynas samaaaʹi wal-ʹarḍi laʹAayaatil liq̣awmiñy yaʻq̣iloon.
(அவன்) வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு, பகல் மாறி மாறி வருவதிலும், மனிதர்களுக்குப் பயன் தருபவற்றை (ஏற்றி)க் கொண்டு கடலில் செல்கின்ற கப்பல்களிலும், வானத்திலிருந்து மழையை இறக்கி அதைக்கொண்டு (வறண்டு) இறந்துவிட்ட பூமியை அல்லாஹ் உயிர்ப்பி(த்துச் செழிப்பாக்கி வை)ப்பதிலும், கால்நடைகள் அனைத்தையும் பூமியில் பரவவிட்டிருப்பதிலும், காற்றை(ப் பல கோணங்களில் திருப்பி)த் திருப்பி விடுவதிலும், வானத்திற்கும் பூமிக்கும் இடையில் அமர்த்தப்பட்டிருக்கும் மேகத்திலும், (மனிதர்களுக்குள்ள பயன்களை ஆராய்ந்து) சிந்திக்கும் மக்களுக்கு (அவனுடைய அருளையும், அன்பையும் ஆற்றலையும் அறிவிக்கக்கூடிய) பல அத்தாட்சிகள் நிச்சயமாக இருக்கின்றன.
-
2:165
وَمِنَ ٱلنَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ ٱللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ ٱللَّهِ ۖ وَٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَشَدُّ حُبًّا لِّلَّهِ ۗ وَلَوْ يَرَى ٱلَّذِينَ ظَلَمُوٓا۟ إِذْ يَرَوْنَ ٱلْعَذَابَ أَنَّ ٱلْقُوَّةَ لِلَّهِ جَمِيعًا وَأَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلْعَذَابِ
Wa-minan naasi mañy yattakhiẓu miñ doonil laahi ʹañdaadañy yuḥibboonahum kaḥubbil laah. Wallaẓeena ʹaamanooo ʹashaddu ḥubbal lillaah. Wa-law yaral laẓeena z̤̣alamooo ʹiẓ yarawnal ʻaẓaaba ʹannal Q̣uwwata lillaahi jameeʻañw waʹannal laaha Shadeedul ʻaẓaab.
மேலும், அல்லாஹ் அல்லாதவற்றை அவனுக்கு இணைகளாக எடுத்துக் கொண்டு, அல்லாஹ்வை நேசிப்பது போல அவற்றை நேசிப்பவர்களும் மனிதர்களில் பலர் இருக்கின்றனர். எனினும், இறை நம்பிக்கையாளர்கள் (இவர்களைவிட) அதிகமாக அல்லாஹ்வை நேசிப்பார்கள். (தவிர) இந்த அநியாயக்காரர்கள் (சிறிது) சிந்திக்க வேண்டாமா? இவர்கள் வேதனையைத் (தங்கள் கண்ணால்) காணும்போது வேதனை செய்வதில் அல்லாஹ் மிகவும் கடுமையானவனாக இருப்பதுடன், எல்லா வல்லமையும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே இருக்கின்றன. (தாங்கள் நேசித்தவற்றுக்கு இல்லை என்று அறிந்து கொள்வார்கள்).
-
2:166
إِذْ تَبَرَّأَ ٱلَّذِينَ ٱتُّبِعُوا۟ مِنَ ٱلَّذِينَ ٱتَّبَعُوا۟ وَرَأَوُا۟ ٱلْعَذَابَ وَتَقَطَّعَتْ بِهِمُ ٱلْأَسْبَابُ
ʹIẓ tabarraʹal laẓeenat tubiʻoo minal laẓeenat tabaʻoo wa-raʹawul ʻaẓaaba wa-taq̣aṭṭaʻat bihimul ʹasbaab.
(இவர்களுக்குத் தவறான) இவ்வழியைக் காட்டியவர்களும் (மறுமையில்) வேதனையைக் (கண்ணால்) கண்டவுடன் (தங்களைப்) பின்பற்றிய இவர்களை (முற்றிலும் கைவிட்டு) விட்டு விலகிக் கொள்வார்கள். அவர்களுக்கு(ம், அவர்களைப் பின்பற்றிய இவர்களுக்கு)மிடையில் இருந்த தொடர்புகள் அனைத்தும் அறுபட்டுவிடும்.
-
2:167
وَقَالَ ٱلَّذِينَ ٱتَّبَعُوا۟ لَوْ أَنَّ لَنَا كَرَّةً فَنَتَبَرَّأَ مِنْهُمْ كَمَا تَبَرَّءُوا۟ مِنَّا ۗ كَذَٰلِكَ يُرِيهِمُ ٱللَّهُ أَعْمَـٰلَهُمْ حَسَرَٰتٍ عَلَيْهِمْ ۖ وَمَا هُم بِخَـٰرِجِينَ مِنَ ٱلنَّارِ
Wa-q̣aalal laẓeenat tabaʻoo law ʹanna lanaa karratañ fanatabarraʹa minhum kamaa tabarraʹoo minnaa. Kaẓaalika yureehimul laahu ʹaʻmaalahum ḥasaraatin ʻalayhim. Wa-maa hum̃ bikhaarijeena minan Naar.
தவிர, (அவர்களைப்) பின்பற்றிய இவர்கள் மற்றொரு முறை நாம் (உலகத்துக்கு) திரும்ப செல்லக் கூடுமாயின் (எங்களுக்கு வழி காட்டிய) அவர்கள், (இப்பொழுது முற்றிலும்) எங்களைக் கைவிட்டு விலகிக் கொண்டபடியே நாங்களும் அவர்களை விட்டு நிச்சயமாக விலகிக் கொள்வோம் என்று கூறுவார்கள். (அவர்களுடைய உடல்கள் நரகில் வேதனைப்படும்.) இவ்வாறே (அவர்களுடைய உள்ளங்களும் வேதனையடைவதற்காக) அவர்களுடைய (தீய) செயல்களை அல்லாஹ் அவர்களுக்கு கைசேதமாக எடுத்துக் காண்பிப்பான். மேலும், அவர்கள் (நரக) நெருப்பிலிருந்து மீளவே மாட்டார்கள்.
-
2:168
يَـٰٓأَيُّهَا ٱلنَّاسُ كُلُوا۟ مِمَّا فِى ٱلْأَرْضِ حَلَـٰلًا طَيِّبًا وَلَا تَتَّبِعُوا۟ خُطُوَٰتِ ٱلشَّيْطَـٰنِ ۚ إِنَّهُۥ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ
Yaaaʹayyuhan naasu kuloo mimmaa fil ʹarḍi Ḥalaalañ ṭayyibaa; wa-laa tattabiʻoo Khuṭuwaatish Shayṭaan. ʹInnahoo lakum ʻaduwwum mubeen.
மனிதர்களே! பூமியிலுள்ளவற்றில் (புசிக்க உங்களுக்கு) அனுமதிக்கப்பட்ட நல்லவற்றையே புசியுங்கள். (இதற்கு மாறுசெய்யும்படி உங்களைத் தூண்டும்) ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான்.
-
2:169
إِنَّمَا يَأْمُرُكُم بِٱلسُّوٓءِ وَٱلْفَحْشَآءِ وَأَن تَقُولُوا۟ عَلَى ٱللَّهِ مَا لَا تَعْلَمُونَ
ʹInnamaa yaʹmurukum̃ bis-soooʹi walfaḥshaaaʹi wa-ʹañ taq̣ooloo ʻalal laahi maa- laa- taʻlamoon.
தீமைகள் மற்றும் மானக்கேடானவற்றை நீங்கள் செய்வதற்கும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாக) கூறுவதற்கும் ஷைத்தான் உங்களைத் தூண்டுகிறான்.
-
2:170
وَإِذَا قِيلَ لَهُمُ ٱتَّبِعُوا۟ مَآ أَنزَلَ ٱللَّهُ قَالُوا۟ بَلْ نَتَّبِعُ مَآ أَلْفَيْنَا عَلَيْهِ ءَابَآءَنَآ ۗ أَوَلَوْ كَانَ ءَابَآؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْـًٔا وَلَا يَهْتَدُونَ
Wa-ʹiẓaa q̣eela lahumut tabiʻoo maaa ʹañzalal laahu q̣aaloo bal nattabiʻu maaa ʹalfaynaa ʻalayhi ʹaabaaaʹanaa. ʹAwa-law kaana ʹaabaaaʹuhum laa- yaʻq̣iloona shayʹañw walaa yahtadoon?
மேலும், அல்லாஹ் இறக்கிவைத்த (இவ்வேதத்)தைப் பின்பற்றுங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால் (அவர்கள்) “இல்லை, எவற்றின் மீது எங்கள் மூதாதைகள் (இருந்து, அவர்கள் எவற்றைச் செய்து கொண்டு) இருக்க நாங்கள் கண்டோமோ அவற்றையே நாங்கள் பின்பற்றுவோம்'' எனக் கூறுகின்றனர். அவர்களுடைய மூதாதைகள் ஒன்றையுமே அறியாதவர்களாகவும் நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவார்கள்!)
-
2:171
وَمَثَلُ ٱلَّذِينَ كَفَرُوا۟ كَمَثَلِ ٱلَّذِى يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَآءً وَنِدَآءً ۚ صُمٌّۢ بُكْمٌ عُمْىٌ فَهُمْ لَا يَعْقِلُونَ
Wa-mas̤alul laẓeena kafaroo kamas̤alil laẓee yanʻiq̣u bimaa laa- yasmaʻu ʹillaa duʻaaaʹañw wanidaaaʹaa. S̤ummum̃ bukmun ʻumyuñ fahum laa- yaʻq̣iloon.
(அறியாமையில் தங்கள் மூதாதைகளைப் பின்பற்றும்) அந்த நிராகரிப்பாளர்களின் உதாரணம், (அர்த்தத்தை உணராது) கூச்சலையும் ஓசையையும் மட்டும் கேட்கக்கூடியதின் (அதாவது கால்நடைகளின்) உதாரணத்தை ஒத்திருக்கிறது. (மேலும், அவர்கள்) செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர். ஆதலால், அவர்கள் (எதையும்) அறிந்து கொள்ளவே மாட்டார்கள்.
-
2:172
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ كُلُوا۟ مِن طَيِّبَـٰتِ مَا رَزَقْنَـٰكُمْ وَٱشْكُرُوا۟ لِلَّهِ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ
Yaaaʹayyuhal laẓeena ʹaamanoo kuloo miñ ṭayyibaati maa- razaq̣naakum washkuroo lillahi ʹiñ kuñtum ʹiyyaahu taʻbudoon.
நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு வழங்கிய நல்லவற்றில் இருந்தே புசியுங்கள். மேலும், நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருந்தால் அவனுக்கு நன்றியும் செலுத்திவாருங்கள்.
-
2:173
إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ ٱلْمَيْتَةَ وَٱلدَّمَ وَلَحْمَ ٱلْخِنزِيرِ وَمَآ أُهِلَّ بِهِۦ لِغَيْرِ ٱللَّهِ ۖ فَمَنِ ٱضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَلَآ إِثْمَ عَلَيْهِ ۚ إِنَّ ٱللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
ʹInnamaa ḥarrama ʻalaykumul maytata waddama wa-laḥmal khiñzeeri wa-maaa ʹuhilla bihee lig̣ayril laah. Famaniḍ ṭurra g̣ayra baag̣iñw walaa ʻaadiñ falaaa ʹis̤ma ʻalayh. ʹInnal laaha G̣afoorur Raḥeem.
(நம்பிக்கையாளர்களே!) தாமாக செத்தது, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாத (வேறு) பெயர் கூறப்பட்டவை ஆகியவற்றைத்தான் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ளான். ஆதலால், எவரேனும் வரம்பு மீறாமலும், பாவம் செய்யும் நோக்கமில்லாமலும் இருந்து (இவற்றைப் புசிக்க) நிர்ப்பந்திக்கப்பட்டு விட்டால் (அது) அவர் மீது குற்றமாகாது. நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கருணையுடையவன்.
-
2:174
إِنَّ ٱلَّذِينَ يَكْتُمُونَ مَآ أَنزَلَ ٱللَّهُ مِنَ ٱلْكِتَـٰبِ وَيَشْتَرُونَ بِهِۦ ثَمَنًا قَلِيلًا ۙ أُو۟لَـٰٓئِكَ مَا يَأْكُلُونَ فِى بُطُونِهِمْ إِلَّا ٱلنَّارَ وَلَا يُكَلِّمُهُمُ ٱللَّهُ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ
ʹInnal laẓeeena yaktumoona maaa ʹañzalal laahu minal Kitaabi wa-yashtaroona bihee s̤amanañ q̣aleelan ʹulaaaʹika maa- yaʹkuloona fee buṭoonihim illan Naara wa-laa yukallimuhumul laahu Yawmal Q̣iyaamati wa-laa yuzakkeehim wa-lahum ʻaẓaabun ʹaleem.
எவர்கள் வேதத்தில் அல்லாஹ் இறக்கியவற்றை மறைத்துவிட்டு அதற்கு விலையாகச் சொற்பத் தொகையைப் பெற்றுக்கொள்கின்றனரோ அவர்கள் நிச்சயமாகத் தங்கள் வயிற்றில் நெருப்பையே நிரப்பிக் கொள்கிறார்கள். மறுமையில் அல்லாஹ் அவர்களுடன் (விரும்பிப்) பேசவும் மாட்டான். அவர்களை (மன்னித்து)ப் பரிசுத்தமாக்கி வைக்கவும் மாட்டான். அவர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனைதான் உண்டு.
-
2:175
أُو۟لَـٰٓئِكَ ٱلَّذِينَ ٱشْتَرَوُا۟ ٱلضَّلَـٰلَةَ بِٱلْهُدَىٰ وَٱلْعَذَابَ بِٱلْمَغْفِرَةِ ۚ فَمَآ أَصْبَرَهُمْ عَلَى ٱلنَّارِ
ʹUlaaaʹikal lazeenash tarawuḍ ḍalaalata bilhudaa walʻaẓaaba bilmag̣firah. Famaaa ʹaṣbarahum ʻalan Naar!
இவர்கள்தான் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டையும், மன்னிப்புக்குப் பதிலாகத் தண்டனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்களாவர். (நரக) நெருப்பை (இவ்விதம்) அவர்கள் (சுவைத்து) சகிக்கும்படிச் செய்தது எதுவோ?
-
2:176
ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ نَزَّلَ ٱلْكِتَـٰبَ بِٱلْحَقِّ ۗ وَإِنَّ ٱلَّذِينَ ٱخْتَلَفُوا۟ فِى ٱلْكِتَـٰبِ لَفِى شِقَاقٍۭ بَعِيدٍ
Ẓaalika biʹannal laaha nazzalal Kitaba bil-Ḥaq̣q̣. Wa-ʹinnal laẓeenakh talafoo fil Kitaabi lafee shiq̣aaq̣im baʻeed.
இதன் காரணம்: நிச்சயமாக அல்லாஹ் (முற்றிலும்) உண்மையாகவே வேதத்தை இறக்கியிரு(க்க, சொற்பத் தொகையைப் பெறுவதற்காக அதன் வசனங்களை மறை)ப் பதுதான். மேலும், வேதத்தைப் புரட்டுகிறவர்கள் நிச்சயமாக (நேர்வழியை விட்டுப்) பிரிந்து வெகுதூரத்தில் இருக்கிறார்கள்.
-
2:177
۞ لَّيْسَ ٱلْبِرَّ أَن تُوَلُّوا۟ وُجُوهَكُمْ قِبَلَ ٱلْمَشْرِقِ وَٱلْمَغْرِبِ وَلَـٰكِنَّ ٱلْبِرَّ مَنْ ءَامَنَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ وَٱلْمَلَـٰٓئِكَةِ وَٱلْكِتَـٰبِ وَٱلنَّبِيِّـۧنَ وَءَاتَى ٱلْمَالَ عَلَىٰ حُبِّهِۦ ذَوِى ٱلْقُرْبَىٰ وَٱلْيَتَـٰمَىٰ وَٱلْمَسَـٰكِينَ وَٱبْنَ ٱلسَّبِيلِ وَٱلسَّآئِلِينَ وَفِى ٱلرِّقَابِ وَأَقَامَ ٱلصَّلَوٰةَ وَءَاتَى ٱلزَّكَوٰةَ وَٱلْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَـٰهَدُوا۟ ۖ وَٱلصَّـٰبِرِينَ فِى ٱلْبَأْسَآءِ وَٱلضَّرَّآءِ وَحِينَ ٱلْبَأْسِ ۗ أُو۟لَـٰٓئِكَ ٱلَّذِينَ صَدَقُوا۟ ۖ وَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْمُتَّقُونَ
Laysal birra ʹañ tuwalloo wujoohakum q̣ibalal Mashriq̣i wal-Mag̣ribi wa-laakinnal birra man ʹaamana billaahi wal-Yawmil ʹAakhiri wal-malaaaʹikati wal-Kitaabi wan-nabiyyeen: wa-ʹaatal maala ʻalaa ḥubbihee ẓawil q̣urbaa walyataamaa walmasaakeena wabnas sabeeli wassaaaʹileena wa-fir riq̣aab: wa-ʹaq̣aamaṣ Ṣalaata wa-ʹaataz Zakaah; walmoofoona biʻahdihim iẓaa ʻaahadoo; waṣ-Ṣaabireena fil baʹsaaaʹi waḍḍarraaaʹi waḥeenal baʹas. ʹUlaaaʹikal laẓeena ṣadaq̣oo: wa-ʹulaaaʹika humul Muttaq̣oon.
மேற்கிலோ கிழக்கிலோ உங்கள் முகங்களை நீங்கள் திருப்பி விடுவதனால் மட்டும் நன்மை செய்தவர்களாக ஆகிவிடமாட்டீர்கள். (உங்களில்) எவர் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் (மறுமை நாளையும்), வானவர்களையும், வேதங்களையும், நபிமார்களையும், நிச்சயமாக நம்பிக்கை கொண்டு தனக்கு விருப்பமுள்ள பொருளை அல்லாஹ்வுக்காக உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசகர்களுக்கும், விடுதலையை விரும்பிய (அடிமைகள், கடன்காரர்கள் ஆகிய)வர்களுக்கும் கொடுத்து (உதவி செய்து,) தொழுகையையும் கடைப்பிடித்து தொழுது, ஜகாத்தும் கொடுத்து வருகிறாரோ அவரும்; வாக்குறுதி செய்த சமயத்தில் தங்கள் வாக்குறுதியை(ச் சரிவர) நிறைவேற்றுபவர்களும்; கடினமான வறுமையிலும், நோய் நொடிகளிலும், கடுமையான போர் நேரத்திலும் பொறுமையைக் கைக்கொண்டவர்களும் ஆகிய (இவர்கள்தான் நல்லோர்கள்.) இவர்கள்தான் (அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதில்) உண்மையானவர்கள். இவர்கள்தான் இறையச்சமுடையவர்கள்!
-
2:178
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ كُتِبَ عَلَيْكُمُ ٱلْقِصَاصُ فِى ٱلْقَتْلَى ۖ ٱلْحُرُّ بِٱلْحُرِّ وَٱلْعَبْدُ بِٱلْعَبْدِ وَٱلْأُنثَىٰ بِٱلْأُنثَىٰ ۚ فَمَنْ عُفِىَ لَهُۥ مِنْ أَخِيهِ شَىْءٌ فَٱتِّبَاعٌۢ بِٱلْمَعْرُوفِ وَأَدَآءٌ إِلَيْهِ بِإِحْسَـٰنٍ ۗ ذَٰلِكَ تَخْفِيفٌ مِّن رَّبِّكُمْ وَرَحْمَةٌ ۗ فَمَنِ ٱعْتَدَىٰ بَعْدَ ذَٰلِكَ فَلَهُۥ عَذَابٌ أَلِيمٌ
Yaaaʹayyuhal laẓeena ʹaamanoo kutiba ʻalaykumul Q̣iṣaaṣu fil q̣atlaa: ʹalḥurru bilḥurri walʻabdu bilʻabdi wal-ʹuñs̤aa bil-ʹuñs̤aa. Faman ʻufiya lahoo min ʹakheehi shayʹuñ fattibaaʻum bilmaʻroofi wa-ʹadaaaʹun ʹilayhi biʹiḥsaan. Ẓaalika takhfeefum mir Rabbikum wa-raḥmah. Famaniʻ tadaa baʻda ẓaalika falahoo ʻaẓaabun ʹaleem.
நம்பிக்கையாளர்களே! கொலை செய்யப்பட்டவர்களுக்காக பழிவாங்குவது உங்கள்மீது கடமையாக்கப்பட்டுள்ளது. (ஆகவே, கொலைசெய்யப்பட்டவன்) சுதந்திரமானவனாயின் (அவனை கொலை செய்த) சுதந்திரமானவனையே, (கொலை செய்யப்பட்டவன்)அடிமையாயின் (அவனை கொலை செய்த அந்த) அடிமையையே, (கொலை செய்யப்பட்டவள்) பெண்ணாயின் (கொலை செய்த அந்தப்) பெண்ணையே நீங்கள் கொலை செய்துவிடுங்கள். (ஆயினும், பழிவாங்கும் விஷயத்தில்) ஒரு சிறிதேனும் அ(க்கொலையுண்ட)வனுடைய சகோதரரால் மன்னிக்கப்பட்டுவிட்டால், மிக்க கண்ணியமான முறையைப் பின்பற்றி (அவனைக் கொலை செய்யாது விட்டு) விடவேண்டும். (பழிவாங்குவதற்குப் பதிலாகக் கொலையாளி ஒரு தொகையைத் தருவதாக ஒப்புக் கொண்டிருந்தால், அந்த நஷ்டஈட்டைத்) தயக்கமின்றி நன்றியோடு அவன் செலுத்திவிட வேண்டும். இ(வ்வாறு நஷ்டஈட்டை அனுமதித்திருப்ப)து உங்கள் இறைவனுடைய சலுகையும், அருளுமாகும். இ(வ்வாறு நஷ்ட ஈட்டைப் பெற்றுக் கொண்ட)தற்குப் பின் எவரேனும் வரம்பு மீறி (நஷ்டஈடு கொடுத்த கொலையாளியைத் துன்புறுத்தி)னால் அவனுக்கு (மறுமையில்) மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு.
-
2:179
وَلَكُمْ فِى ٱلْقِصَاصِ حَيَوٰةٌ يَـٰٓأُو۟لِى ٱلْأَلْبَـٰبِ لَعَلَّكُمْ تَتَّقُونَ
Wa-lakum fil Q̣iṣaaṣi Ḥayaatuñy yaaaʹulil ʹalbaabi laʻallakum tattaq̣oon.
அறிவாளிகளே! (கொலைக்குப்) பழிவாங்குவதில் உங்களுக்கு வாழ்க்கை உண்டு. (ஏனென்றால், பழிவாங்கி விடுவார்கள் என்ற பயத்தால் கொலை செய்யக் கருதுபவனும், அவனால் கொலை செய்யக் கருதப்பட்டவனும் தப்பித்துக் கொள்ளலாம்.) நீங்கள் (அல்லாஹ் தடுத்தவற்றிலிருந்து விலகி அவனை) அஞ்சிக் கொள்ளுங்கள்.
-
2:180
كُتِبَ عَلَيْكُمْ إِذَا حَضَرَ أَحَدَكُمُ ٱلْمَوْتُ إِن تَرَكَ خَيْرًا ٱلْوَصِيَّةُ لِلْوَٰلِدَيْنِ وَٱلْأَقْرَبِينَ بِٱلْمَعْرُوفِ ۖ حَقًّا عَلَى ٱلْمُتَّقِينَ
Kutiba ʻalaykum ʹiẓaa ḥaḍara ʹaḥadakumul mawtu ʹiñ taraka khayranil waṣiyyatu lilwaalidayni wal-ʹaq̣rabeena bil-maʻroof; ḥaq̣q̣an ʻalal Muttaq̣een.
(நம்பிக்கையாளர்களே!) உங்களில் எவருக்கும் மரணம் சமீபித்து அவர் பொருளை விட்டுவிட்டு இறப்பவராகவும் இருந்தால், (அவர் தன்) தாய் தந்தைக்கும், உறவினர்களுக்கும், நியாயமான முறைப்படி (பொருள் சேர்வதற்காக) மரண சாசனம் (கூற) விதிக்கப்பட்டிருக்கிறது. (இது) இறையச்சமுடையவர்கள் மீது கடமையாகும்.
-
2:181
فَمَنۢ بَدَّلَهُۥ بَعْدَ مَا سَمِعَهُۥ فَإِنَّمَآ إِثْمُهُۥ عَلَى ٱلَّذِينَ يُبَدِّلُونَهُۥٓ ۚ إِنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٌ
Famam baddalahoo baʻdamaa samiʻahoo faʹinnamaaa ʹis̤muhoo ʻalal laẓeena yubaddiloonah. ʹInnal laaha Sameeʻun ʻAleem.
(மரண சாசனமாகிய) அதைக் கேட்டதற்குப் பின்னர், எவரேனும் அதை மாற்றி விட்டால் அதன் பாவமெல்லாம் மாற்றியவரின் மீதே (சாரும்). நிச்சயமாக அல்லாஹ் (மரணிப்பவர் கூறும் சாசனத்தை) நன்கு செவியுறுபவன், (அதை மாற்றும் பாவிகளின் செயலை) நன்கறிந்தவன்.
-
2:182
فَمَنْ خَافَ مِن مُّوصٍ جَنَفًا أَوْ إِثْمًا فَأَصْلَحَ بَيْنَهُمْ فَلَآ إِثْمَ عَلَيْهِ ۚ إِنَّ ٱللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
Faman khaafa mim mooṣiñ janafan ʹaw ʹis̤mañ faʹaṣlaḥa baynahum falaaa ʹis̤ma ʻalayh: ʹInnal laaha G̣afoorur Raḥeem.
ஆனால், மரணசாசனம் கூறியவரி(ன் சாசனத்தி)ல் அநீதம் அல்லது தவறு இருப்பதை எவரேனும் பார்த்து பயந்து, அ(ந்த சாசனப் பொருளை அடையக்கூடிய)வர்களுக்கிடையே சமாதானம் செய்து அதை மாற்றிவிட்டால் அவர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிக்க கருணையாளன் ஆவான்.
-
2:183
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ كُتِبَ عَلَيْكُمُ ٱلصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى ٱلَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
Yaaa-ʹayyuhal laẓeena ʹaamanoo kutiba ʻalaykumuṣ Ṣiyaamu kamaa kutiba ʻalal laẓeena miñ q̣ablikum laʻallakum tattaq̣oon.
நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆகலாம்.
-
2:184
أَيَّامًا مَّعْدُودَٰتٍ ۚ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ ۚ وَعَلَى ٱلَّذِينَ يُطِيقُونَهُۥ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ ۖ فَمَن تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَّهُۥ ۚ وَأَن تَصُومُوا۟ خَيْرٌ لَّكُمْ ۖ إِن كُنتُمْ تَعْلَمُونَ
ʹAyyaamam maʻdoodaat; famañ kaana miñkum mareeḍan ʹaw ʻalaa safariñ faʻiddatum min ʹayyaamin ʹukhar. Wa-ʻalal laẓeena yuṭeeq̣oonahoo fidyatuñ ṭaʻaamu miskeen. Famañ taṭawwaʻa khayrañ fahuwa khayrul lah. Wa-ʹañ taṣoomoo khayrul lakum ʹiñ Kuñtum taʻlamoon.
குறிப்பிட்ட நாள்களில்தான் (நோன்பு நோற்பது கடமையாகும்.) ஆயினும் (அந்நாள்களில்) உங்களில் யாராகிலும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (அவர் நோன்பு நோற்க வேண்டியதில்லை. அதை ரமழான் அல்லாத) மற்ற நாள்களில் கணக்கி(ட்டு நோற்று வி)டவும். தவிர, (ஏதாவது ஒரு காரணத்தினால்) நோன்பு நோற்க சிரமப்படுபவர்கள் அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும். எவரேனும் நன்மையை நாடி (பரிகாரத்திற்குரிய அளவைவிட அதிகமாகத்) தானம் செய்தால் அது அவருக்கே நன்மை. ஆயினும், (பரிகாரமாகத் தானம் கொடுப்பதை விட நோன்பின் நன்மையை) நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் நோன்பு நோற்பதே உங்களுக்கு சிறந்தது (என்பதை தெரிந்து கொள்வீர்கள்).
-
2:185
شَهْرُ رَمَضَانَ ٱلَّذِىٓ أُنزِلَ فِيهِ ٱلْقُرْءَانُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَـٰتٍ مِّنَ ٱلْهُدَىٰ وَٱلْفُرْقَانِ ۚ فَمَن شَهِدَ مِنكُمُ ٱلشَّهْرَ فَلْيَصُمْهُ ۖ وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ ۗ يُرِيدُ ٱللَّهُ بِكُمُ ٱلْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ ٱلْعُسْرَ وَلِتُكْمِلُوا۟ ٱلْعِدَّةَ وَلِتُكَبِّرُوا۟ ٱللَّهَ عَلَىٰ مَا هَدَىٰكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
Shahru Ramaḍaanal laẓeee ʹuñzila feehil Q̣urʹaanu hudal linnaasi wa-bayyinaatim minal hudaa wal-furq̣aan. Famañ shahida miñkumush Shahra fal-yaṣumh. Wa-mañ kaana mareeḍan ʹaw ʻalaa safariñ faʻiddatum min ʹayyaamin ʹukhar. Yureedul laahu bikumul yusra wa-laa yureedu bikumul ʻusr. Wa-litukmilul ʻiddata wa-litukabbirul laaha ʻalaa maa- hadaakum wa-laʻallakum tashkuroon.
ரமழான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)து என்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டும் திருகுர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும். ஆனால், (அக்காலத்தில் உங்களில்) யாராவது நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (ரமழான் அல்லாத) மற்ற நாள்களில் (விட்டுப்போன நாள்களின் நோன்பைக்) கணக்கிட்டு (நோற்று) விடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவா(ன கட்டளையைக் கொடு)க்க விரும்புகிறான்ன தவிர சிரமத்தை(க் கொடுக்க) விரும்பவில்லை. மேலும், (தவறிய நாள்களைக் கணக்கிடும்படி கட்டளையிட்டதெல்லாம், உங்கள்மீது கடமையாக உள்ள ஒரு மாத நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் முழுமை செய்வதற்காகவும்; (அவ்வான்ற) அல்லாஹ் உங்களை நேரான பாதையில் நடத்தியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும்; (நோய், பிரயாணம் போன்ற சந்தர்ப்பங்களில் நோன்பு நோற்காதிருக்க உங்களுக்கு அனுமதி வழங்கியதற்காக) நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதற்காகவுமே ஆகும்!
-
2:186
وَإِذَا سَأَلَكَ عِبَادِى عَنِّى فَإِنِّى قَرِيبٌ ۖ أُجِيبُ دَعْوَةَ ٱلدَّاعِ إِذَا دَعَانِ ۖ فَلْيَسْتَجِيبُوا۟ لِى وَلْيُؤْمِنُوا۟ بِى لَعَلَّهُمْ يَرْشُدُونَ
Wa-ʹiẓaa saʹalaka ʻibaadee ʻannee faʹinnee Q̣areeb: ʹujeebu daʻwatad daaʻi ʹiẓaa daʻaani falyastajeeboo lee wal-yuʹminoo bee laʻallahum yarshudoon.
(நபியே!) உம்மிடம் என் அடியார்கள் என்னைப் பற்றிக் கேட்டால் (அதற்கு நீர் கூறுவீராக:) ‘‘நிச்சயமாக நான் உங்களுக்கு சமீபமானவன். (எவரும்) என்னை அழைத்தால் அந்த அழைப்பாளரின் அழைப்புக்கு விடையளிப்பேன்.'' ஆதலால், அவர்கள் என்னிடமே பிரார்த்தனை செய்யவும்; என்னையே நம்பிக்கை கொள்ளவும். (அதனால்) அவர்கள் நேர்வழி அடைவார்கள்.
-
2:187
أُحِلَّ لَكُمْ لَيْلَةَ ٱلصِّيَامِ ٱلرَّفَثُ إِلَىٰ نِسَآئِكُمْ ۚ هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُنَّ ۗ عَلِمَ ٱللَّهُ أَنَّكُمْ كُنتُمْ تَخْتَانُونَ أَنفُسَكُمْ فَتَابَ عَلَيْكُمْ وَعَفَا عَنكُمْ ۖ فَٱلْـَٔـٰنَ بَـٰشِرُوهُنَّ وَٱبْتَغُوا۟ مَا كَتَبَ ٱللَّهُ لَكُمْ ۚ وَكُلُوا۟ وَٱشْرَبُوا۟ حَتَّىٰ يَتَبَيَّنَ لَكُمُ ٱلْخَيْطُ ٱلْأَبْيَضُ مِنَ ٱلْخَيْطِ ٱلْأَسْوَدِ مِنَ ٱلْفَجْرِ ۖ ثُمَّ أَتِمُّوا۟ ٱلصِّيَامَ إِلَى ٱلَّيْلِ ۚ وَلَا تُبَـٰشِرُوهُنَّ وَأَنتُمْ عَـٰكِفُونَ فِى ٱلْمَسَـٰجِدِ ۗ تِلْكَ حُدُودُ ٱللَّهِ فَلَا تَقْرَبُوهَا ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ ءَايَـٰتِهِۦ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَّقُونَ
ʹUḥilla lakum laylataṣ Ṣiyaamir rafas̤u ʹilaa nisaaaʹikum. Hunna libaasul lakum wa-ʹañtum libaasul lahunn. ʻAlimal laahu ʹannaakum kuñtum takhtaanoona ʹañfusakum fataaba ʻalaykum wa-ʻafaa ʻañkum; falʹaana baashiroohunna wabtag̣oo maa- katabal laahu lakum, wa-kuloo washraboo ḥattaa yatabayyana lakumul khayṭul ʹabyaḍu minal khayṭil ʹaswadi minal Fajr. S̤umma ʹatimmuṣ ṣiyaama ʹilal layl; wa-laa tubaashiroohunna wa-ʹañtum ʻaakifoona fil masaajid. Tilka ḥudoodul laahi falaa taq̣raboohaa. Kaẓaalika yubayyinul laahu ʹAayaatihee linnaasi laʻallaahum yattaq̣oon.
(நம்பிக்கையாளர்களே!) நோன்பு (நாள்களின்) இரவுகளில் நீங்கள் உங்கள் மனைவிகளுடன் வீடு கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கிறீர்கள். (நோன்புடைய காலத்தில் இஷாவுக்குப் பின்னர் உங்கள் மனைவிகளுடன் கூடாமலும், ஒரு பொருளை புசிக்காமலும் இருந்து) நிச்சயமாக நீங்கள் உங்களைத் துன்பத்திற்குள்ளாக்கிக் கொண்டீர்கள் என்பதை அல்லாஹ் அறிந்து உங்கள் மீது இரக்கமுற்று உங்கள் சிரமத்தை நீக்கிவிட்டான். ஆகவே, இனி இருள் நீங்கி விடியற்காலை (ஃபஜ்ர்) ஆகிவிட்டது என்று உங்ளுக்குத் தெளிவாகும்வரை (நோன்பின் இரவு காலங்களில் உங்கள்) மனைவிகளுடன் சேர்ந்து அல்லாஹ் உங்களுக்கு(ச் சந்ததியாக) விதித்திருப்பதைத் தேடிக் கொள்ளுங்கள். இன்னும் (அந்நேரங்களில்) புசியுங்கள், பருகுங்கள். (கிழக்கு வெளுத்த) பின்பு இரவு (ஆரம்பமாகும்) வரை (மேலே கூறியவற்றைத் தவிர்த்து) நோன்புகளை (நோற்று) முழுமையாக்குங்கள். ஆயினும், நீங்கள் (வணங்குவதற்காக) மஸ்ஜிதுகளில் தங்கி (இஃதிகாஃப்) இருக்கும்போது (உங்கள்) மனைவிகளுடன் கூடாதீர்கள். இவை அல்லாஹ்வுடைய திட்டமான சட்ட வரம்புகளாகும். ஆதலால், அவ்வரம்புகளை (மீற) நெருங்காதீர்கள். மனிதர்கள் இறையச்சமுடையவர்களாக ஆவதற்காக அல்லாஹ் தன் வசனங்களை அவர்களுக்கு இவ்வாறு தெளிவாக விவரிக்கிறான்.
-
2:188
وَلَا تَأْكُلُوٓا۟ أَمْوَٰلَكُم بَيْنَكُم بِٱلْبَـٰطِلِ وَتُدْلُوا۟ بِهَآ إِلَى ٱلْحُكَّامِ لِتَأْكُلُوا۟ فَرِيقًا مِّنْ أَمْوَٰلِ ٱلنَّاسِ بِٱلْإِثْمِ وَأَنتُمْ تَعْلَمُونَ
Wa-laa taʹkulooo ʹamwaalakum̃ baynakum̃ bilbaaṭili wa-tudloo bihaaa ʹilal ḥukkaami litaʹkuloo fareeq̣am min ʹamwaalin naasi bil-ʹis̤mi wa-ʹañtum taʻlamoon.
(மேலும்,) உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். (உங்கள் வாதம் பொய்யானதென) நீங்கள் அறிந்திருந்தும் (இதர) மனிதர்களின் பொருள்களில் எதையும் பாவமான வழியில் (அநியாயமாக லஞ்சம் கொடுத்து) அபகரித்துக்கொள்ள அதிகாரிகளிடம் செல்லாதீர்கள்.
-
2:189
۞ يَسْـَٔلُونَكَ عَنِ ٱلْأَهِلَّةِ ۖ قُلْ هِىَ مَوَٰقِيتُ لِلنَّاسِ وَٱلْحَجِّ ۗ وَلَيْسَ ٱلْبِرُّ بِأَن تَأْتُوا۟ ٱلْبُيُوتَ مِن ظُهُورِهَا وَلَـٰكِنَّ ٱلْبِرَّ مَنِ ٱتَّقَىٰ ۗ وَأْتُوا۟ ٱلْبُيُوتَ مِنْ أَبْوَٰبِهَا ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
Yasʹaloonaka ʻanil ʹAhillah. Q̣ul hiya mawaaq̣eetu linnaasi wal-Ḥajj. Wa-laysal birru biʹañ taʹtul buyoota miñ z̤̣uhoorihaa wa-laakinnal birra manit taq̣aa. Waʹtul buyoota min ʹabwaabihaa wattaq̣ul laaha laʻallakum tufliḥoon.
(நபியே! மாதந்தோறும் பிறந்து, வளர்ந்து, தேயும்) பிறைகளைப்பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘அவை மனிதர்களுக்கு ஒவ்வொரு மாதத்தையும் ஹஜ்ஜூடைய காலங்களையும் அறிவிக்கக்கூடியவை.'' மேலும், (நம்பிக்கையாளர்களே! இஹ்ராம் கட்டிய) நீங்கள் (உங்கள்) வீடுகளுக்கு அவற்றின் பின்புறமாக வந்து விடுவதனால் நல்லவர்களாக ஆகிவிட மாட்டீர்கள். எனினும், எவர் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கிறாரோ அவரே நல்லவர். ஆதலால், நீங்கள் (உங்கள்) வீடுகளுக்கு அவற்றின் தலை வாசல்களின் வழியாக வாருங்கள். அல்லாஹ்வுக்குப் பயந்தும் நடந்துகொள்ளுங்கள். இதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.
-
2:190
وَقَـٰتِلُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ ٱلَّذِينَ يُقَـٰتِلُونَكُمْ وَلَا تَعْتَدُوٓا۟ ۚ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلْمُعْتَدِينَ
Wa-q̣aatiloo fee sabeelil laahil laẓeena yuq̣aatiloonakum wa-laa taʻtadoo; ʹinnal laaha laa- yuḥibbul muʻtadeen.
உங்களை எதிர்த்து போர் புரிய முற்பட்டோரை அல்லாஹ்வுடைய பாதையில் நீங்களும் எதிர்த்து போர் புரியுங்கள். ஆனால், நீங்கள் அத்துமீறாதீர்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் அத்துமீறுபவர்களை நேசிப்பதில்லை.
-
2:191
وَٱقْتُلُوهُمْ حَيْثُ ثَقِفْتُمُوهُمْ وَأَخْرِجُوهُم مِّنْ حَيْثُ أَخْرَجُوكُمْ ۚ وَٱلْفِتْنَةُ أَشَدُّ مِنَ ٱلْقَتْلِ ۚ وَلَا تُقَـٰتِلُوهُمْ عِندَ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ حَتَّىٰ يُقَـٰتِلُوكُمْ فِيهِ ۖ فَإِن قَـٰتَلُوكُمْ فَٱقْتُلُوهُمْ ۗ كَذَٰلِكَ جَزَآءُ ٱلْكَـٰفِرِينَ
Waq̣-tuloohum ḥays̤u s̤aq̣iftumoohum wa-ʹakhrijoohum min ḥays̤u ʹakhrajookum walfitnatu ʹashaddu minal q̣atl. Wa-laa tuq̣aatiloohum ʻiñdal Masjidil Ḥaraami ḥattaa yuq̣aatilookum feeh; faʹiñ q̣aatalookum faq̣-tuloohum. Kaẓaalika jazaaaʹul kaafireen.
ஆகவே, (உங்களை எதிர்த்து போர்புரிய முற்பட்ட) அவர்களை கண்டவிடமெல்லாம் வெட்டுங்கள். உங்களை (உங்கள் ஊரிலிருந்து) அவர்கள் வெளியேற்றியவாறே நீங்களும் அவர்களை வெளியேற்றி விடுங்கள். (அவர்கள் செய்யும்) கலகம் கொலையைவிட மிகக் கொடியது. ஆனால், (அவர்களில்) எவரேனும் அபயம் தேடி மஸ்ஜிதுல் ஹராமில் இருந்தால், அங்கு அவர்கள் உங்களை எதிர்த்து போர்புரிய முற்படும்வரை நீங்கள் அவர்களை வெட்டாதீர்கள். (அவ்விடத்திலும்) அவர்கள் உங்களை எதிர்த்து போர் புரிந்தால் நீங்களும் அவர்களை வெட்டுங்கள். (அந்த) நிராகரிப்பவர்களுக்கு (உரிய) கூலி இப்படித்தான்!
-
2:192
فَإِنِ ٱنتَهَوْا۟ فَإِنَّ ٱللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
Faʹiniñ tahaw faʹinnal laaha G̣afoorur Raḥeem.
(இதன்) பின்னர் அவர்கள் (உங்களை எதிர்த்து போர் புரியாது) விலகிக்கொண்டால் (நீங்கள் அவர்களை வெட்டாதீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிக்க கருணையுடையவன் ஆவான்.
-
2:193
وَقَـٰتِلُوهُمْ حَتَّىٰ لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ ٱلدِّينُ لِلَّهِ ۖ فَإِنِ ٱنتَهَوْا۟ فَلَا عُدْوَٰنَ إِلَّا عَلَى ٱلظَّـٰلِمِينَ
Wa-q̣aatiloohum ḥattaa laa- takoona fitnatuñw wayakoonad Deenu lillaah; faʹiniñ tahaw falaa ʻudwaana ʹillaa ʻalaz̤̣ z̤̣aalimeen.
(இஸ்லாமிற்கு எதிராக செய்யப்படும்) கலகம் (முற்றிலும்) நீங்கி, அல்லாஹ்வுடைய மார்க்கம் உறுதியாக நிலைபெறும் வரை அவர்களை எதிர்த்து போர் புரியுங்கள். ஆனால், அவர்கள் (கலகம் செய்யாது) விலகிக் கொண்டால் (அவர்களுக்கு மன்னிப்பு உண்டு). அநியாயம் செய்பவர்களைத் தவிர (மற்றவர்கள் மீது) அறவே அத்துமீறக்கூடாது.
-
2:194
ٱلشَّهْرُ ٱلْحَرَامُ بِٱلشَّهْرِ ٱلْحَرَامِ وَٱلْحُرُمَـٰتُ قِصَاصٌ ۚ فَمَنِ ٱعْتَدَىٰ عَلَيْكُمْ فَٱعْتَدُوا۟ عَلَيْهِ بِمِثْلِ مَا ٱعْتَدَىٰ عَلَيْكُمْ ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ مَعَ ٱلْمُتَّقِينَ
ʹAsh-Shahrul Ḥaraamu bish-Shahril Ḥaraami wal-ḥurumaatu q̣iṣaaṣ. Famaniʻ tadaa ʻalaykum faʻtadoo ʻalayhi bimis̤li maʻ tadaa ʻalaykum. Wattaq̣ul laaha waʻlamooo ʹannal laaha maʻal Muttaq̣een.
(போர் செய்வது தடுக்கப்பட்டுள்ள ரஜப், துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) சிறப்புற்ற மாதங்களுக்கு சிறப்புற்ற மாதங்களே ஈடாகும். ஆகவே, சிறப்புகளுக்கு(ச் சமமான) ஈடு உண்டு. ஆதலால், எவரேனும் உங்கள் மீது வரம்பு மீறி (அம்மாதங்களில் போருக்கு) வந்தால், அவர் வரம்பு மீறிய விதமே நீங்களும் அவர் மீது வரம்புமீறி (போருக்கு)ச் செல்லுங்கள். ஆனால், நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து (அம்மாதங்களில் போரை ஆரம்பம் செய்யாது இருந்து) கொள்ளுங்கள். அல்லாஹ் இறையச்சமுடையவர்களுடன் இருக்கிறான் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.
-
2:195
وَأَنفِقُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ وَلَا تُلْقُوا۟ بِأَيْدِيكُمْ إِلَى ٱلتَّهْلُكَةِ ۛ وَأَحْسِنُوٓا۟ ۛ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلْمُحْسِنِينَ
Wa-ʻañfiq̣oo fee sabeelil laahi wa-laa tulq̣oo biʹaydeekum ʹilat tahlukah. Wa-ʹaḥsinooo ʹinnal laaha yuḥibbul Muḥsineen.
நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் (தாராளமாகச்) செலவு செய்யுங்கள்; அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்யாது) உங்களை நீங்களே ஆபத்திற்குள்ளாக்கிக் கொள்ளாதீர்கள்; (பிறருக்கு உதவியும்) நன்மையும் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (பிறருக்கு) நன்மை செய்பவர்களை நேசிக்கிறான்.
-
2:196
وَأَتِمُّوا۟ ٱلْحَجَّ وَٱلْعُمْرَةَ لِلَّهِ ۚ فَإِنْ أُحْصِرْتُمْ فَمَا ٱسْتَيْسَرَ مِنَ ٱلْهَدْىِ ۖ وَلَا تَحْلِقُوا۟ رُءُوسَكُمْ حَتَّىٰ يَبْلُغَ ٱلْهَدْىُ مَحِلَّهُۥ ۚ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ بِهِۦٓ أَذًى مِّن رَّأْسِهِۦ فَفِدْيَةٌ مِّن صِيَامٍ أَوْ صَدَقَةٍ أَوْ نُسُكٍ ۚ فَإِذَآ أَمِنتُمْ فَمَن تَمَتَّعَ بِٱلْعُمْرَةِ إِلَى ٱلْحَجِّ فَمَا ٱسْتَيْسَرَ مِنَ ٱلْهَدْىِ ۚ فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلَـٰثَةِ أَيَّامٍ فِى ٱلْحَجِّ وَسَبْعَةٍ إِذَا رَجَعْتُمْ ۗ تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ ۗ ذَٰلِكَ لِمَن لَّمْ يَكُنْ أَهْلُهُۥ حَاضِرِى ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلْعِقَابِ
Wa-ʹatimmul Ḥajja wal-ʻumrata lillaah. Faʹin ʹuḥṣirtum famas taysara minal hadyi, wa-laa taḥliq̣oo ruʹoosakum ḥattan yablug̣al hadyu maḥillah. Famañ kaana miñkum mareeḍan ʹaw biheee ʹaẓam mir raʹsihee fafidyatum miñ ṣiyaamin ʹaw ṣadaq̣atin ʹaw nusuk. Faʹiẓaaa ʹamiñtum, famañ tamattaʻa bil-Umrati ʹilal Ḥajji famas taysara minal hadyi. Famal lam yajid faṣiyaamu s̤alaas̤ati ʹayyaamiñ fil Ḥajji wa-sabʻatin ʹiẓaa rajaʻtum. Tilka ʹasharatuñ kaamilah. Ẓaalika limal lam yakun ʹahluhoo ḥaaḍiril Masjidil Ḥaraam. Wattaq̣ul laaha waʻlamooo ʹannal laaha Shadeedul ʻiq̣aab.
அல்லாஹ்வுக்காக (ஆரம்பம் செய்த) ஹஜ்ஜையும் உம்ராவையும் நீங்கள் முழுமையாக்குங்கள். ஆனால், (மக்கா செல்ல முடியாதவாறு) நீங்கள் தடுக்கப்பட்டு (ஹஜ்ஜை முழுமையாக்க முடியா)விட்டால் ‘ஹத்யு' (என்னும் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவை)களில் (உங்களுக்குச்) சாத்தியமானவை பரிகாரமாகும். தவிர, அந்த ஹத்யுக்கள் தாம் செல்ல வேண்டிய (மக்காவிலுள்ள ஹரம் என்னும்) இடத்தை அடையும்வரை நீங்கள் உங்கள் தலைமுடியைச் சிரைத்துக் கொள்ளாதீர்கள். ஆயினும், (இஹ்ராம் கட்டிய) உங்களில் எவரேனும் நோயாளியாகவோ அல்லது தலையில் (பேன், புண், வலி ஆகியவற்றால்) இடையூறு உள்ளவராகவோ இருந்து (முடியிறக்கிக் கொண்டு) விட்டால், அதற்குப் பரிகாரமாக (அவர் மூன்று) நோன்புகள் நோற்கவும். அல்லது, (ஆறு ஏழைகளுக்கு உணவு) தானம் செய்யவும். அல்லது, (ஓர் ஆடு) குர்பானி கொடுக்கவும். மேலும், (இஹ்ராம் அணிந்த) நீங்கள் எவ்விதத் தடையுமில்லாது (ஹஜ்ஜூ செய்ய) வசதி பெற்றவர்களாக இருந்து (மக்கா சென்ற பின் உங்களில்) எவரேனும் உம்ராவை (மட்டும்) செய்துவிட்டு ஹஜ்ஜூக்கு முன்னதாகவே (ஹஜ்ஜூடைய காலத்தில் தடுக்கப்பட்டிருந்த) சுகத்தை அனுபவித்து விட்டால் (அதற்குப்) பரிகாரமாக ஹத்யுக்களில்* இயன்றதைக் கொடுக்கவும். ஆனால், (ஹத்யுக்களில் எதையுமே) பெற்றுக் கொள்ளாதவர், ஹஜ்ஜூடைய காலத்தில் மூன்றும் (தன் இருப்பிடம்) திரும்பியபின் ஏழும், ஆக முழுமையாகப் பத்து நாட்கள் நோன்பு நோற்கவும். (தடுக்கப்பட்ட சுகத்தை அனுபவிக்கும்) இ(வ்வுரிமையான)து எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமில் (மக்காவில்) குடியிருக்கவில்லையோ அவருக்குத்தான். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (குற்றவாளிகளை) வேதனை செய்வதில் மிகக் கடுமையானவன் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.
-
2:197
ٱلْحَجُّ أَشْهُرٌ مَّعْلُومَـٰتٌ ۚ فَمَن فَرَضَ فِيهِنَّ ٱلْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِى ٱلْحَجِّ ۗ وَمَا تَفْعَلُوا۟ مِنْ خَيْرٍ يَعْلَمْهُ ٱللَّهُ ۗ وَتَزَوَّدُوا۟ فَإِنَّ خَيْرَ ٱلزَّادِ ٱلتَّقْوَىٰ ۚ وَٱتَّقُونِ يَـٰٓأُو۟لِى ٱلْأَلْبَـٰبِ
ʹAl-Ḥajju ʹashhurum maʻ-loomaat. Famañ faraḍa feehinnal Ḥajja falaa rafas̤a wa-laa fusooq̣a wa-laa jidaala fil Ḥajj. Wa-maa tafʻaloo min khayriñy yaʻlamhul laah. Wa-tazawwadoo faʹinna khayraz zaadit taq̣waa. Wattaq̣ooni yaaaʹulil ʹalbaab.
ஹஜ்ஜூ (அதற்கெனக்) குறிப்பிட்ட (ஷவ்வால், துல்கஅதா, துல்ஹஜ்ஜூ ஆகிய) மாதங்களில்தான். ஆகவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தன்மீது கடமையாக்கிக் கொண்டால் ஹஜ்ஜூ (மாதத்தின் பத்தாம் தேதி) வரை வீடு கூடுதல், தீச்சொல் பேசுதல், சச்சரவு செய்தல் கூடாது. நீங்கள் என்ன நன்மை செய்தபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறி(ந்து அதற்குரிய கூலி தரு)வான். தவிர, (ஹஜ்ஜூடைய பயணத்திற்கு வேண்டிய) உணவுகளை (முன்னதாகவே) தயார்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால், நிச்சயமாக (நீங்கள்) தயார்படுத்திக்கொள்ள வேண்டியவற்றில் எல்லாம் மிக மேலானது இறையச்சம்தான். ஆதலால், அறிவாளிகளே! நீங்கள் (குறிப்பாக ஹஜ்ஜூடைய காலத்தில்) எனக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள்.
-
2:198
لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَبْتَغُوا۟ فَضْلًا مِّن رَّبِّكُمْ ۚ فَإِذَآ أَفَضْتُم مِّنْ عَرَفَـٰتٍ فَٱذْكُرُوا۟ ٱللَّهَ عِندَ ٱلْمَشْعَرِ ٱلْحَرَامِ ۖ وَٱذْكُرُوهُ كَمَا هَدَىٰكُمْ وَإِن كُنتُم مِّن قَبْلِهِۦ لَمِنَ ٱلضَّآلِّينَ
Laysa ʻalaykum junaaḥun ʹañ tabtag̣oo faḍ-lam mir Rabbikum. Faʹiẓaaa ʹafaḍtum min ʻArafaatiñ faẓkurul laaha ʻiñdal Mashʻaril Ḥaraam. Waẓ-kuroohu kamaa hadaakum. wa-ʹiñ kuñtum miñ q̣ablihee laminaḍ ḍaaalleeen.
(ஹஜ்ஜூ பயணத்தின்போது) நீங்கள் (தொழில் செய்து) உங்கள் இறைவனுடைய அருளை(க் கொண்டு கிடைக்கும் லாபத்தை)த் தேடிக் கொள்வது உங்கள் மீது குற்றமாகாது. (ஹஜ்ஜூக்குச் சென்ற) நீங்கள் அரஃபாவிலிருந்து திரும்பினால் ‘மஷ்அருல் ஹராம்' என்னும் இடத்தில் அல்லாஹ்வை நினைவு கூருங்கள். நீங்கள் இதற்கு முன் வழி தவறியவர்களாக இருந்தபொழுது உங்களுக்கு அவன் நேரான வழியை அறிவித்ததற்காக மேலும், அவனை ‘திக்ரு' செய்யுங்கள்.
-
2:199
ثُمَّ أَفِيضُوا۟ مِنْ حَيْثُ أَفَاضَ ٱلنَّاسُ وَٱسْتَغْفِرُوا۟ ٱللَّهَ ۚ إِنَّ ٱللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
S̤umma ʹafeeḍoo min ḥays̤u ʹafaaḍan naasu wastag̣firul laah. ʹInnal laaha G̣afoorur Raḥeem.
பின்னர் மனிதர்கள் திரும்புகின்ற (‘முஸ்தலிபா' என்னும்) இடத்திலிருந்து நீங்களும் (‘மினா'வுக்குத்) திரும்பி விடுங்கள். மேலும், அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மகா கருணையாளன் ஆவான்.
-
2:200
فَإِذَا قَضَيْتُم مَّنَـٰسِكَكُمْ فَٱذْكُرُوا۟ ٱللَّهَ كَذِكْرِكُمْ ءَابَآءَكُمْ أَوْ أَشَدَّ ذِكْرًا ۗ فَمِنَ ٱلنَّاسِ مَن يَقُولُ رَبَّنَآ ءَاتِنَا فِى ٱلدُّنْيَا وَمَا لَهُۥ فِى ٱلْـَٔاخِرَةِ مِنْ خَلَـٰقٍ
Faʹiẓaa q̣adaytum manaasikakum faẓkurul laaha kazikrikum, ʹaabaaaʹakum ʹaw ʹashadda ẓikraa. Faminan naasi mañy yaq̣oolu Rabbanaaa ʹaatinaa fid dunyaa wa-maa lahoo fil ʹAakhirati min khalaaq̣.
(ஹஜ்ஜூக்குச் சென்ற) நீங்கள் உங்கள் (ஹஜ்ஜின்) கடமைகளை நிறைவேற்றி விட்டால், நீங்கள் (இஸ்லாமிற்கு முன்) உங்கள் மூதாதை(களின் பெயர்)களை (சப்த மிட்டு பெருமையாக) நினைவு கூர்ந்து கூறிவந்ததைப்போல் அல்லது அதைவிட அதிகமாக அல்லாஹ்வை ‘திக்ரு' (செய்து உங்களுக்கு வேண்டியவற்றையும் அவனிடம் கேட்டுப் பிரார்த்தனை) செய்யுங்கள். (பிரார்த்தனையில்) ‘‘எங்கள் இறைவனே! எங்களுக்கு (வேண்டியவற்றை எல்லாம்) இம்மையிலேயே கொடுத்து விடுவாயாக!'' என்று கோருபவரும் மனிதர்களில் உண்டு. ஆனால், இவருக்கு மறுமையில் ஒரு பாக்கியமும் இல்லை.
-
2:201
وَمِنْهُم مَّن يَقُولُ رَبَّنَآ ءَاتِنَا فِى ٱلدُّنْيَا حَسَنَةً وَفِى ٱلْـَٔاخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ ٱلنَّارِ
Wa-minhum mañy yaq̣oolu Rabanaaa ʹaatinaa fid dunyaa ḥasanatañw wa-fil ʹAakhirati ḥasanatañw wa-q̣inaa ʻaẓaaban Naar.
மேலும், ‘‘எங்கள் இறைவனே! எங்களுக்கு நீ இம்மையிலும் நன்மை தருவாயாக! மறுமையிலும் நன்மை தருவாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை நீ பாதுகாப்பாயாக!'' எனக் கோருபவர்களும் மனிதர்களில் உண்டு.
-
2:202
أُو۟لَـٰٓئِكَ لَهُمْ نَصِيبٌ مِّمَّا كَسَبُوا۟ ۚ وَٱللَّهُ سَرِيعُ ٱلْحِسَابِ
ʹUlaaaʹika lahum naṣeebum mimmaa kasaboo: wal-laahu Sareeʻul ḥisaab.
தாங்கள் செய்த (நற்)செயல்களின் (பயனை இம்மையிலும் மறுமையிலும் அடையும்) பாக்கியம் இவர்களுக்குத்தான் உண்டு. தவிர, (சிரமமேற்படாத வண்ணம் இவர்களின் செயலைப் பற்றி மறுமையில்) அல்லாஹ் வெகு விரைவாகக் (கேள்வி) கணக்கெடுப்பான். (அவனுக்கு அது சிரமமல்ல).
-
2:203
۞ وَٱذْكُرُوا۟ ٱللَّهَ فِىٓ أَيَّامٍ مَّعْدُودَٰتٍ ۚ فَمَن تَعَجَّلَ فِى يَوْمَيْنِ فَلَآ إِثْمَ عَلَيْهِ وَمَن تَأَخَّرَ فَلَآ إِثْمَ عَلَيْهِ ۚ لِمَنِ ٱتَّقَىٰ ۗ وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَٱعْلَمُوٓا۟ أَنَّكُمْ إِلَيْهِ تُحْشَرُونَ
Waẓkurul laaha feee ʹayyaamim maʻdoodaat. Famañ taʻajjala fee yawmayni falaaa ʹis̤ma ʻalayh. Wa-mañ taʹakhkhara falaaa ʹis̤ma ʻalayhi limanit taq̣aa. Wattaq̣ul laaha waʻlamooo ʹannakum ʹilayhi tuḥsharoon.
(நம்பிக்கையாளர்களே! துல்ஹஜ்ஜூ மாதத்தில்) குறிப்பிடப்பட்ட (மூன்று) நாள்கள்வரை (‘மினா' என்னும் இடத்தில் தாமதித்திருந்து) அல்லாஹ்வை ‘திக்ரு' செய்யுங்கள். ஆனால், எவரேனும் இரண்டாம் நாளில் அவசரப்பட்டு(ப் புறப்பட்டு) விட்டால் அவர் மீது குற்றமில்லை. எவரேனும் (மூன்று நாள்களுக்குப்) பிற்பட்(டுப் புறப்பட்)டால் அவர் மீதும் குற்றமில்லை. அவர் இறையச்சமுடையவராக (இருந்து ஹஜ்ஜூடைய காலத்தில் தடுக்கப்பட்டவற்றிலிருந்து விலகி) இருந்தால் (மட்டும்) போதுமானது. ஆகவே, (நம்பிக்கையாளர்களே!) நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்விடமே (நியாயத் தீர்ப்புக்கு எழுப்பிக்) கொண்டு வரப்படுவீர்கள் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள்!
-
2:204
وَمِنَ ٱلنَّاسِ مَن يُعْجِبُكَ قَوْلُهُۥ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَيُشْهِدُ ٱللَّهَ عَلَىٰ مَا فِى قَلْبِهِۦ وَهُوَ أَلَدُّ ٱلْخِصَامِ
Wa-minan naasi mañy yuʻjibuka q̣awluhoo fil ḥayaatid dunyaa wa-yushhidul laaha ʻalaa maa- fee q̣albihee wa-huwa ʹaladdul khis̤aam.
(நபியே! உம்மிடம்) இவ்வுலக வாழ்க்கையைப் பற்றி(ப் பேசும் பொழுது) தன் (சாதுரியமான) வார்த்தையைக் கொண்டு உம்மை ஆச்சரியத்திற்குள்ளாக்கக்கூடிய ஒருவன் அம்மனிதர்களில் உண்டு. அவன் (உம் மீது அன்பு கொண்டிருப்பதாகக் கூறி) தன் மனதில் உள்ளவற்றிற்கு (சத்தியம் செய்து) அல்லாஹ்வை சாட்சி ஆக்குவான். (உண்மையில்) அவன்தான் (உமக்குக்) கொடிய எதிரியாவான்.
-
2:205
وَإِذَا تَوَلَّىٰ سَعَىٰ فِى ٱلْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ ٱلْحَرْثَ وَٱلنَّسْلَ ۗ وَٱللَّهُ لَا يُحِبُّ ٱلْفَسَادَ
Wa-ʹiẓaa tawallaa saʻaa fil ʹarḍi liyufsida fihaa wa-yuhlikal ḥars̤a wannasl. Wal-laahu laa- yuḥibbul fasaad.
அவன் (உம்மிடமிருந்து) விலகினாலோ, பூமியில் விஷமம் செய்து (உங்கள்) விவசாயத்தையும் கால்நடைகளையும் அழித்துவிட முயற்சி செய்கிறான். விஷமத்தை அல்லாஹ் விரும்புவதில்லை.
-
2:206
وَإِذَا قِيلَ لَهُ ٱتَّقِ ٱللَّهَ أَخَذَتْهُ ٱلْعِزَّةُ بِٱلْإِثْمِ ۚ فَحَسْبُهُۥ جَهَنَّمُ ۚ وَلَبِئْسَ ٱلْمِهَادُ
Wa-ʹiẓaa q̣eela lahut taq̣il laaha ʹakhaẓathul ʻizzatu bil-ʹis̤mi faḥasbuhoo Jahannam; wa-labiʹsal mihaad!
தவிர, ‘‘நீ அல்லாஹ்வுக்குப் பயந்துகொள். (விஷமம் செய்யாதே)'' என அவனுக்குக் கூறப்பட்டால் (அவனுடைய) பெருமை அவனை (விஷமம் செய்து) பாவத்தைச் செய்யும்படியே (இழுத்துப்) பிடித்துக்கொள்கிறது. ஆகவே, அவனுக்கு நரகமே தகுதியாகும். நிச்சயமாக (அது) தங்குமிடங்களில் மிகக் கெட்டது.
-
2:207
وَمِنَ ٱلنَّاسِ مَن يَشْرِى نَفْسَهُ ٱبْتِغَآءَ مَرْضَاتِ ٱللَّهِ ۗ وَٱللَّهُ رَءُوفٌۢ بِٱلْعِبَادِ
Wa-minan naasi mañy yashree nafsahub tig̣aaaʹa Marḍaatil laah: wallaahu Raʹoofum bilʻibaad.
அல்லாஹ்வின் (திருப்)பொருத்தத்தைப் பெறுவதற்காகத் தன் உயிரையே தியாகம் செய்யக்கூடியவர்களும் மனிதர்களில் உண்டு. அல்லாஹ் (இத்தகைய) அடியார்கள்மீது மிகவும் இறக்கமுடையவன் .
-
2:208
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱدْخُلُوا۟ فِى ٱلسِّلْمِ كَآفَّةً وَلَا تَتَّبِعُوا۟ خُطُوَٰتِ ٱلشَّيْطَـٰنِ ۚ إِنَّهُۥ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ
Yaaaʹayyuhal laẓeena ʹaamanud khuloo fis Silmi kaaaffah; wa-laa tattabiʻoo khuṭuwaatish Shaytaan. ʹInnahoo lakum ʻaduwwum mubeen.
நம்பிக்கையாளர்களே! நீங்கள் (தயங்கிக் கொண்டிருக்க வேண்டாம்.) இஸ்லாமில் முற்றிலும் நுழைந்து விடுங்கள். (இதைத் தடை செய்யும்) ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான்.
-
2:209
فَإِن زَلَلْتُم مِّنۢ بَعْدِ مَا جَآءَتْكُمُ ٱلْبَيِّنَـٰتُ فَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٌ
Faʹiñ zalaltum mim baʻdi maa- jaaaʹatkumul Bayyinaatu faʻlamooo ʹannal laaha ʻAzeezun Ḥakeem.
(மனிதர்களே! சந்தேகத்திற்கிடமில்லாத) தெளிவான அத்தாட்சிகள் உங்களிடம் வந்த பின்னரும் நீங்கள் (இஸ்லாமில் உறுதியாக இல்லாமல்) நழுவி விடுவீர்களானால் (உங்களைத் தண்டிப்பதில்) நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனும் (உங்களை எவ்விதம் நடத்த வேண்டும் என்பதை நன்கறிந்த) நுண்ணறிவுடையவனும் ஆவான் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.
-
2:210
هَلْ يَنظُرُونَ إِلَّآ أَن يَأْتِيَهُمُ ٱللَّهُ فِى ظُلَلٍ مِّنَ ٱلْغَمَامِ وَٱلْمَلَـٰٓئِكَةُ وَقُضِىَ ٱلْأَمْرُ ۚ وَإِلَى ٱللَّهِ تُرْجَعُ ٱلْأُمُورُ
Hal yañz̤̣uroona ʹillaaa ʹañy yaʹtiyahumul laahu fee z̤̣ulalim minal g̣amaami walmalaaaʹikatu wa-q̣uḍiyal ʹamr? Wa-ʹilal laahi turjaʻul ʹumoor.
(நபியே! இவ்வளவு தெளிவான வசனங்களை நிராகரிக்கின்ற அவர்கள்) அல்லாஹ்வும் வானவர்களும் (வெண்) மேகத்தின் நிழலில் அவர்களிடம் வந்து (அவர்களை அழித்து) அவர்களின் வேலையை முடிப்பதைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரோ? (அவர்களுடைய) எல்லா விஷயங்களும் (மறுமையில்) அல்லாஹ்விடமே (விசாரணைக்குக்) கொண்டுவரப்படும்.
-
2:211
سَلْ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ كَمْ ءَاتَيْنَـٰهُم مِّنْ ءَايَةٍۭ بَيِّنَةٍ ۗ وَمَن يُبَدِّلْ نِعْمَةَ ٱللَّهِ مِنۢ بَعْدِ مَا جَآءَتْهُ فَإِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلْعِقَابِ
Sal Baneee ʹIsraaaʹeela kam ʹaataynaahum min ʹAayatim bayyinah. Wa-mañy yubaddil niʻmatal laa-hi mim baʻdi maa- jaaaʹathu faʹinnal laaha Shadeedul ʻiq̣aab.
(நபியே!) இஸ்ராயீலின் சந்ததிகளைக் கேட்பீராக: ‘‘எத்தனை தெளிவான அத்தாட்சிகளை நாம் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம்.'' (அவ்வாறிருக்க) எவரேனும் அவை தன்னிடம் வந்ததன் பின் அல்லாஹ்வின் (அத்தாட்சிகளான) அருட்கொடையை மாற்றிவிடுவாரானால் (அவரை) வேதனை செய்வதில் நிச்சயமாக அல்லாஹ் மிகக் கடுமையானவன் ஆவான்.
-
2:212
زُيِّنَ لِلَّذِينَ كَفَرُوا۟ ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا وَيَسْخَرُونَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ ۘ وَٱلَّذِينَ ٱتَّقَوْا۟ فَوْقَهُمْ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ ۗ وَٱللَّهُ يَرْزُقُ مَن يَشَآءُ بِغَيْرِ حِسَابٍ
Zuyyina lillaẓeena kafarul ḥayaatud dunyaa wa-yas-kharoona minal laẓeena ʹaamanoo. Wallaẓeenat taq̣aw fawq̣ahum Yawmal Q̣iyaamah. Wallaahu yarzuq̣u mañy yashaaaʹu big̣ayri ḥisaab.
நிராகரிப்பவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையே அலங்காரமாக(த் தோன்றும்படி) செய்யப்பட்டிருக்கிறது. ஆதலால், அவர்கள் (ஏழைகளாக இருக்கும்) நம்பிக்கையாளர்களைப் பரிகசிக்கிறார்கள். ஆனால், (நம்பிக்கையாளர்களான) இறையச்சம் உள்ளவர்களோ மறுமையில் அவர்களைவிட (எவ்வளவோ) மேலாக இருப்பார்கள். மேலும், அல்லாஹ் விரும்புகின்ற (இ)வர்களுக்குக் கணக்கின்றியே வழங்குவான்.
-
2:213
كَانَ ٱلنَّاسُ أُمَّةً وَٰحِدَةً فَبَعَثَ ٱللَّهُ ٱلنَّبِيِّـۧنَ مُبَشِّرِينَ وَمُنذِرِينَ وَأَنزَلَ مَعَهُمُ ٱلْكِتَـٰبَ بِٱلْحَقِّ لِيَحْكُمَ بَيْنَ ٱلنَّاسِ فِيمَا ٱخْتَلَفُوا۟ فِيهِ ۚ وَمَا ٱخْتَلَفَ فِيهِ إِلَّا ٱلَّذِينَ أُوتُوهُ مِنۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ ٱلْبَيِّنَـٰتُ بَغْيًۢا بَيْنَهُمْ ۖ فَهَدَى ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ لِمَا ٱخْتَلَفُوا۟ فِيهِ مِنَ ٱلْحَقِّ بِإِذْنِهِۦ ۗ وَٱللَّهُ يَهْدِى مَن يَشَآءُ إِلَىٰ صِرَٰطٍ مُّسْتَقِيمٍ
Kaanan naasu ʹummatañw waaḥidah; fabaʻas̤al laahun nabiyyeena Mubashshireena wa-Muñẓireen: wa-ʹañzala maʻahumul Kitaaba bilḥaq̣q̣i liyaḥkuma baynan naasi feemakh talafooo feeh. Wa-makh talafa feehi ʹillal laẓeena ʹootoohu mim baʻdi maa- jaaaʹathumul bayyinaatu bag̣yam baynahum. Fahadal lahul laẓeena ʹaamanoo limakh talafoo feehi minal Ḥaq̣q̣i biʹiẓnih. Wallaahu yahdee mañy yashaaaʹu ʹilaa Ṣiraaṭim Mustaq̣eem.
(ஆரம்பத்தில்) மனிதர்கள் (அனைவரும்) ஒரே இனத்தவராகவே இருந்தனர். (அவர்கள் நேரான வழியில் செல்வதற்காக நன்மை செய்பவர்களுக்கு) நற்செய்தி கூறும்படியும், (தீமை செய்பவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும்படியும் அல்லாஹ் நபிமார்களை அனுப்பிவைத்தான். மேலும், அம்மனிதர்களுக்குள் ஏற்படும் கருத்து வேற்றுமைகளைத் தீர்த்து வைப்பதற்காக (சத்திய) வேதத்தையும் அருளினான். இவ்வாறு தெளிவான அத்தாட்சிகள் (உள்ள வேதம்) வந்ததன் பின்னர் அதைப் பெற்றுக்கொண்ட அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட பொறாமையின் காரணமாகவே (அந்த சத்திய வேதத்திற்கு) மாறு (செய்ய முற்)பட்டனர். ஆயினும், அவர்கள் மாறுபட்டு(ப் புறக்கணித்து)விட்ட அந்த சத்தியத்தின் பக்கம் செல்லும்படி நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் தன் அருளைக்கொண்டு நேர்வழி காட்டினான். இன்னும் (இவ்வான்ற) தான் விரும்பியவர்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான்.
-
2:214
أَمْ حَسِبْتُمْ أَن تَدْخُلُوا۟ ٱلْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُم مَّثَلُ ٱلَّذِينَ خَلَوْا۟ مِن قَبْلِكُم ۖ مَّسَّتْهُمُ ٱلْبَأْسَآءُ وَٱلضَّرَّآءُ وَزُلْزِلُوا۟ حَتَّىٰ يَقُولَ ٱلرَّسُولُ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ مَعَهُۥ مَتَىٰ نَصْرُ ٱللَّهِ ۗ أَلَآ إِنَّ نَصْرَ ٱللَّهِ قَرِيبٌ
ʹAm ḥasibtum ʹañ tadkhulul Jannata wa-lammaa yaʹ-tikum mas̤alul laẓeena khalaw miñ q̣ablikum? Massathumul baʹsaaaʹu waḍḍarraaaʹu wa-zulziloo ḥattaa yaq̣oolar Rasoolu wallaẓeena ʹaamanoo maʻahoo mataa naṣrul laah? ʹAlaaa ʹinna naṣral laahi q̣areeb!
(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்டது போன்ற (கஷ்டமான) நிலைமை உங்களுக்கு வராமலே நீங்கள் சொர்க்கத்தில் நுழைந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டீர்களோ? (உங்களைப் போல) நம்பிக்கை கொண்ட அவர்களையும் அவர்களுடைய தூதரையும், வாட்டும் வறுமையிலும், நோயிலும் பீடித்து (அவர்கள் வருந்தித் தங்கள் கஷ்டங்களை நீக்கி வைக்க) ‘‘அல்லாஹ்வுடைய உதவி எப்பொழுது (வரும்? எப்பொழுது வரும்?)'' என்று கேட்டதற்கு ‘‘அல்லாஹ்வுடைய உதவி நிச்சயமாக (இதோ) சமீபத்திலிருக்கிறது'' என்று (நாம் ஆறுதல்) கூறும் வரை அவர்கள் ஆட்டிவைக்கப்பட்டார்கள்.
-
2:215
يَسْـَٔلُونَكَ مَاذَا يُنفِقُونَ ۖ قُلْ مَآ أَنفَقْتُم مِّنْ خَيْرٍ فَلِلْوَٰلِدَيْنِ وَٱلْأَقْرَبِينَ وَٱلْيَتَـٰمَىٰ وَٱلْمَسَـٰكِينِ وَٱبْنِ ٱلسَّبِيلِ ۗ وَمَا تَفْعَلُوا۟ مِنْ خَيْرٍ فَإِنَّ ٱللَّهَ بِهِۦ عَلِيمٌ
Yasʹaloonaka maa-ẓaa yuñfiq̣oon. Q̣ul maaa ʹañfaq̣tum min khayriñ falilwaalidayni wal-ʹaq̣rabeena walyataamaa wal-masaakeeni wabnis sabeel. Wa-maa tafʻaloo min khayriñ faʹinnal laaha bihee ʻAleem.
(நபியே! பொருள்களில்) ‘‘எதைச் செலவு செய்வது? (யாருக்குக் கொடுப்பது?)'' என்று உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக: (நன்மையைக் கருதி) ‘‘நீங்கள் எத்தகைய பொருளைச் செலவு செய்தபோதிலும் (அதைத்) தாய், தந்தை, சுற்றத்தார், அநாதைகள், ஏழைகள், வழிப்போக்கர்கள் ஆகியோருக்குக் கொடுங்கள். இன்னும், நீங்கள் (வேறு) என்ன நன்மையைச் செய்தபோதிலும் அதையும் நிச்சயமாக அல்லாஹ் அறி(ந்து அதற்குரிய கூலியும் தரு)வான்.
-
2:216
كُتِبَ عَلَيْكُمُ ٱلْقِتَالُ وَهُوَ كُرْهٌ لَّكُمْ ۖ وَعَسَىٰٓ أَن تَكْرَهُوا۟ شَيْـًٔا وَهُوَ خَيْرٌ لَّكُمْ ۖ وَعَسَىٰٓ أَن تُحِبُّوا۟ شَيْـًٔا وَهُوَ شَرٌّ لَّكُمْ ۗ وَٱللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ
Kutiba ʻalaykumul q̣itaalu wa-huwa kurhul lakum. Wa-ʻasaaa ʹañ takrahoo shayʹañw wahuwa khayrul lakum. Wa-ʻasaaa ʹañ tuḥibboo shayʹañw wahuwa sharrul lakum. Wallaahu yaʻlamu wa-ʹañtum laa- taʻlamoon.
(நம்பிக்கையாளர்களே!) போர் செய்வது உங்களுக்கு வெறுப்பாய் இருந்தும் (உங்களையும் உங்கள் மார்க்கத்தையும் காப்பதற்காக) அது உங்கள்மீது கடமையாக்கப்பட்டிருக்கிறது. ஒன்று உங்களுக்கு மிக நன்மையாக இருந்தும் அதை நீங்கள் வெறுக்கக்கூடும். ஒன்று உங்களுக்குத் தீங்காக இருந்தும் அதை நீங்கள் விரும்பக்கூடும். (அவை உங்களுக்கு நன்மை அளிக்குமா தீமையளிக்குமா என்பதை) அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.
-
2:217
يَسْـَٔلُونَكَ عَنِ ٱلشَّهْرِ ٱلْحَرَامِ قِتَالٍ فِيهِ ۖ قُلْ قِتَالٌ فِيهِ كَبِيرٌ ۖ وَصَدٌّ عَن سَبِيلِ ٱللَّهِ وَكُفْرٌۢ بِهِۦ وَٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ وَإِخْرَاجُ أَهْلِهِۦ مِنْهُ أَكْبَرُ عِندَ ٱللَّهِ ۚ وَٱلْفِتْنَةُ أَكْبَرُ مِنَ ٱلْقَتْلِ ۗ وَلَا يَزَالُونَ يُقَـٰتِلُونَكُمْ حَتَّىٰ يَرُدُّوكُمْ عَن دِينِكُمْ إِنِ ٱسْتَطَـٰعُوا۟ ۚ وَمَن يَرْتَدِدْ مِنكُمْ عَن دِينِهِۦ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُو۟لَـٰٓئِكَ حَبِطَتْ أَعْمَـٰلُهُمْ فِى ٱلدُّنْيَا وَٱلْـَٔاخِرَةِ ۖ وَأُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلنَّارِ ۖ هُمْ فِيهَا خَـٰلِدُونَ
Yasʹaloonaka ʻanish shahril Ḥaraami q̣itaaliñ feeh. Q̣ul q̣itaaluñ feehi kabeer. Wa-ṣaddun ʻañ sabeelil laahi wa-kufrum bihee wal-Masjidil Ḥaraami wa-ʹikhraaju ʹahlihee minhu ʹakbaru ʻiñdal laah. Wal-fitnatu ʹakbaru minal q̣atl. Wa-laa yazaaloona yuq̣aatiloonakum ḥattaa yaruddookum ʻañ Deenikum ʹinis taṭaaʻoo. Wa-mañy yartadid miñkum ʻañ Deenihee fayamut wa-huwa kaafiruñ faʹulaaaʹika ḥabiṭat ʹaʻmaaluhum fid dunyaa wal-ʹAakhirah. Wa-ʹulaaaʹika ʹAṣḥaabun Naari hum feehaa khaalidoon.
(நபியே! துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய இச்)சிறப்புற்ற மாதங்களில் போர் செய்வதைப் பற்றி உங்களிடம் அ(ந்நிராகரிப்பவர்கள் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘அவற்றில் போர் புரிவது பெரும் பாவம்(தான்). ஆனால், அல்லாஹ்வுடைய மார்க்கத்(தில் சேருவ)தை விட்டு மக்களை (நீங்கள்) தடுப்பதும், அல்லாஹ்வை நீங்கள் நிராகரிப்பதும், (ஹஜ்ஜூக்கு வருபவர்களை) மஸ்ஜிதுல் ஹராமுக்கு வரவிடாது தடுப்பதும், அதில் வசிப்போ(ரில் நம்பிக்கை கொண்டோ)ரை அதிலிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடத்தில் (அதைவிட) மிகப் பெரும் பாவங்களாக இருக்கின்றன. தவிர, (நம்பிக்கையாளர்களுக்கு நீங்கள் செய்துவரும்) விஷமம் கொலையைவிட மிகக் கொடியது. மேலும், (நம்பிக்கையாளர்களே! நிராகரிப்பாளர்களாகிய) அவர்களுக்குச் சாத்தியப்பட்டால் உங்களை உங்கள் மார்க்கத்திலிருந்து திருப்பி விடும்வரை உங்களை எதிர்த்து ஓயாது போர் செய்து கொண்டே இருப்பார்கள். ஆகவே, உங்களில் எவரேனும் தன் மார்க்கத்தை (நிராகரித்து)விட்டு மாறி, (அதை அவ்வாறு) நிராகரித்(ததைப் பற்றி வருத்தப்பட்டு மீளா)தவராகவே இறந்துவிட்டால் அவருடைய (நற்)செயல்கள் எல்லாம் இம்மையிலும் மறுமையிலும் அழிந்துவிடும். இன்னும், அவர்கள் நரகவாசிகளாகி, என்றென்றுமே அதில் தங்கி விடுவார்கள்.
-
2:218
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَٱلَّذِينَ هَاجَرُوا۟ وَجَـٰهَدُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ أُو۟لَـٰٓئِكَ يَرْجُونَ رَحْمَتَ ٱللَّهِ ۚ وَٱللَّهُ غَفُورٌ رَّحِيمٌ
ʹInnal laẓeena ʹaamanoo wallaẓeena haajaroo wa-jaahadoo fee Sabeelil laahi ʹulaaaʹika yarjoona Raḥmatal laah: wallaahu G̣afoorur Raḥeem.
எவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டிருக்கிறார்களோ அவர்களும்; எவர்கள் (நிராகரிப்பாளர்களின் துன்பத்தால் ‘மக்கா'வாகிய) தம் ஊரைவிட்டும் வெளியேறினார்களோ அவர்களும்; எவர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிகிறார்களோ அவர்களும்தான் அல்லாஹ்வின் கருணையை நிச்சயமாக எதிர்பார்க்கின்றனர். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான்.
-
2:219
۞ يَسْـَٔلُونَكَ عَنِ ٱلْخَمْرِ وَٱلْمَيْسِرِ ۖ قُلْ فِيهِمَآ إِثْمٌ كَبِيرٌ وَمَنَـٰفِعُ لِلنَّاسِ وَإِثْمُهُمَآ أَكْبَرُ مِن نَّفْعِهِمَا ۗ وَيَسْـَٔلُونَكَ مَاذَا يُنفِقُونَ قُلِ ٱلْعَفْوَ ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمُ ٱلْـَٔايَـٰتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ
Yasʹaloonaka ʻanil khamri walmaysir. Q̣ul feehimaaa ʹis̤muñ kabeeruñw wamanaafiʻu linnaas: Wa-ʹis̤muhumaaa ʹakbaru min nafʻihimaa. Wa-Yasʹaloonaka maaẓaa yuñfiq̣oon. Q̣ulil ʻafw. Kaẓaalika yubayyinul laahu lakumul ʹaayaati laʻallakum tatafakkaroon
(நபியே!) மதுவைப் பற்றியும் சூதாட்டத்தைப் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக! ‘‘அவ்விரண்டிலும் பெரும் பாவங்களும் இருக்கின்றன; மனிதர்களுக்குச் சில பயன்களும் இருக்கின்றன. ஆனால், அவற்றில் உள்ள பாவம் அவற்றிலுள்ள பயனைவிட மிகப் பெரிது. மேலும், (நபியே! தர்மத்திற்காக) எவ்வளவு செலவு செய்வதென உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு ‘‘அவசியத்திற்கு வேண்டியது போக) மீதமுள்ளதை(ச் செலவு செய்யுங்கள்)'' எனக் கூறுவீராக. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் இம்மை, மறுமை(யின் நன்மை)களை கவனத்தில் வைத்துக் கொள்வதற்காக உங்களுக்கு அல்லாஹ் தன் வசனங்களை இவ்வாறு விவரிக்கிறான்.
-
2:220
فِى ٱلدُّنْيَا وَٱلْـَٔاخِرَةِ ۗ وَيَسْـَٔلُونَكَ عَنِ ٱلْيَتَـٰمَىٰ ۖ قُلْ إِصْلَاحٌ لَّهُمْ خَيْرٌ ۖ وَإِن تُخَالِطُوهُمْ فَإِخْوَٰنُكُمْ ۚ وَٱللَّهُ يَعْلَمُ ٱلْمُفْسِدَ مِنَ ٱلْمُصْلِحِ ۚ وَلَوْ شَآءَ ٱللَّهُ لَأَعْنَتَكُمْ ۚ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٌ
Fid dunyaa wal-ʹAakhirah. Wa-yasʹaloonaka ʻanil yataamaa. Q̣ul ʹiṣlaaḥul lahum khayr. Wa-ʹiñ tukhaaliṭoohum faʹikhwaanukum. Wallaahu yaʻlamul mufsida minal muṣliḥ. Wa-law shaaaʹal laahu laʹaʻnatakum: ʹInnal laaha ʻAzeezun Ḥakeem.
(நபியே!) அநாதைகளை (வளர்ப்பதை)ப் பற்றியும் உம்மிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: அவர்களைச் சீர்திருத்துவது மிகவும் நன்றே! மேலும், நீங்கள் அவர்களுடன் கலந்(து வசித்)திருக்க நேரிட்டால் (அவர்கள்) உங்கள் சகோதரர்களே! (ஆதலால், அவர்களுடைய சொத்தில் இருந்து அவசியமான அளவு உங்களுக்காகவும் செலவு செய்து கொள்ளலாம்.) ஆனால், ‘‘நன்மை செய்வோம்'' என்று (கூறிக் கொண்டு) தீமை செய்பவர்களை அல்லாஹ் நன்கறிவான். அல்லாஹ் நாடினால் உங்களை (மீள முடியாத) சிரமத்திற்குள்ளாக்கி விடுவான். நிச்சயமாக அல்லாஹ் (எவ்விதமும் செய்ய) வல்லவன், நுண்ணறிவுடையவன் ஆவான். (ஆகவே, அநாதைகள் விஷயத்தில் மோசம் செய்யாது மிக்க அனுதாபத்துடனும் நீதமாகவும் நடந்து கொள்ளுங்கள்.)
-
2:221
وَلَا تَنكِحُوا۟ ٱلْمُشْرِكَـٰتِ حَتَّىٰ يُؤْمِنَّ ۚ وَلَأَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّن مُّشْرِكَةٍ وَلَوْ أَعْجَبَتْكُمْ ۗ وَلَا تُنكِحُوا۟ ٱلْمُشْرِكِينَ حَتَّىٰ يُؤْمِنُوا۟ ۚ وَلَعَبْدٌ مُّؤْمِنٌ خَيْرٌ مِّن مُّشْرِكٍ وَلَوْ أَعْجَبَكُمْ ۗ أُو۟لَـٰٓئِكَ يَدْعُونَ إِلَى ٱلنَّارِ ۖ وَٱللَّهُ يَدْعُوٓا۟ إِلَى ٱلْجَنَّةِ وَٱلْمَغْفِرَةِ بِإِذْنِهِۦ ۖ وَيُبَيِّنُ ءَايَـٰتِهِۦ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
Wa-laa tañkiḥul mushrikaati ḥattaa yuʹminn: wa-laʹamatum muʹminatun khayrum mim mushrikatiñw walaw ʹaʻjabatkum. Wa-laa tuñkiḥul mushrikeena ḥattaa yuʹminoo: wa-laʻabdum muʹminun khayrum mim mushrikiñw wa law ʹaʻjabakum. ʹUlaaaʹika yadʻoona ʹilan Naar. Wallaahu yadʻoo ʹilal Jannati wal-mag̣firati biʹiẓnih, wa-yubayyinu ʹaayaatihee linnaasi laʻallahum yataẓakkaroon.
(நம்பிக்கையாளர்களே!) இணைவைத்து வணங்கும் பெண்களை அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை நீங்கள் மணந்து கொள்ளாதீர்கள். (ஏனென்றால்,) இணைவைத்து வணங்கும் ஒரு பெண் உங்களைக் கவரக்கூடியவளாக இருப்பினும், நம்பிக்கை கொண்ட ஓர் அடிமைப் பெண் அவளைவிட நிச்சயமாக மேலானவள். (அவ்வாறே) இணை வைத்து வணங்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும்வரை அவர்களுக்கு (நம்பிக்கையாளர்களான பெண்களை) நீங்கள் மணமுடித்துக் கொடுக்காதீர்கள். இணைவைத்து வணங்கும் ஓர் ஆண் உங்களைக் கவரக்கூடியவனாக இருப்பினும், நம்பிக்கை கொண்ட ஓர் அடிமை அவனைவிட நிச்சயமாக மேலானவன். (இணைவைக்கும்) இவர்கள் எல்லாம் நரகத்திற்கு அழைப்பார்கள். ஆனால், அல்லாஹ்வோ தன் அருளால் சொர்க்கத்திற்கும் (தன்) மன்னிப்புக்கும் (உங்களை) அழைக்கிறான். மனிதர்கள் கவனித்து உபதேசம் பெறுவதற்காக தன் வசனங்களை (மேலும்) விவரிக்கிறான்.
-
2:222
وَيَسْـَٔلُونَكَ عَنِ ٱلْمَحِيضِ ۖ قُلْ هُوَ أَذًى فَٱعْتَزِلُوا۟ ٱلنِّسَآءَ فِى ٱلْمَحِيضِ ۖ وَلَا تَقْرَبُوهُنَّ حَتَّىٰ يَطْهُرْنَ ۖ فَإِذَا تَطَهَّرْنَ فَأْتُوهُنَّ مِنْ حَيْثُ أَمَرَكُمُ ٱللَّهُ ۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلتَّوَّٰبِينَ وَيُحِبُّ ٱلْمُتَطَهِّرِينَ
Wa-yasʹaloonaka ʻanil maḥeeḍ. Q̣ul huwa ʹaẓañ faʻtazilun nisaaaʹa fil maḥeeḍi wa-laa taq̣raboohunna ḥattaa yaṭhurn. Faʹiẓaa taṭahharna faʹtoohunna min ḥays̤u ʹamarakumul laah. ʹInnal laaha yuḥibbut Tawwaabeena wa-yuḥibbul Mutaṭahhireen.
(நபியே!) மாதவிடாயைப் பற்றியும் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: ‘‘அது (அசுத்தமான) ஓர் இடையூறு. எனவே, மாதவிடாய்க் காலத்தில் பெண்களை விட்டு விலகி, அவர்கள் சுத்தமாகும் வரை அவர்களை அணுகாதீர்கள். (உறவு கொள்ளாதீர்கள்) அப்பெண்கள் சுத்தமாகிவிட்டால் அல்லாஹ் உங்களை ஏவிய முறைப்படி அவர்களிடம் செல்லுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (பாவத்தை விட்டு) வருத்தப்பட்டு மீளுகிறவர்களையும், தூய்மையானவர்களையும் விரும்புகிறான்.
-
2:223
نِسَآؤُكُمْ حَرْثٌ لَّكُمْ فَأْتُوا۟ حَرْثَكُمْ أَنَّىٰ شِئْتُمْ ۖ وَقَدِّمُوا۟ لِأَنفُسِكُمْ ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَٱعْلَمُوٓا۟ أَنَّكُم مُّلَـٰقُوهُ ۗ وَبَشِّرِ ٱلْمُؤْمِنِينَ
Nisaaaʹukum ḥars̤ul lakum: faʹtoo ḥars̤akum ʹannaa shiʹtum; wa-q̣addimoo liʹañfusikum; wattaq̣ul laaha waʻlamooo ʹannakum mulaaq̣ooh: Wa-bash-shiril Muʹmineen.
உங்கள் மனைவிகள் உங்கள் விளைநிலங்கள் ஆவர். ஆகவே, உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு சென்று உங்கள் பிற்காலத்திற்கு (வேண்டிய சந்ததிகளை)த் தேடிக் கொள்ளுங்கள். நிச்சயமாக, நீங்கள் அல்லாஹ்வைச் சந்திப்பீர்கள் என்பதையும் உறுதியாக அறிந்து அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். (நபியே! நேர்மையுள்ள) நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக.
-
2:224
وَلَا تَجْعَلُوا۟ ٱللَّهَ عُرْضَةً لِّأَيْمَـٰنِكُمْ أَن تَبَرُّوا۟ وَتَتَّقُوا۟ وَتُصْلِحُوا۟ بَيْنَ ٱلنَّاسِ ۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ
Wa-laa tajʻalul laaha ʻurḍatal liʹaymaanikum ʹañ tabarroo wa-tattaq̣oo wa-tuṣliḥoo baynan naas; Wallaahu Sameeʻun ʻAleem.
நீங்கள் நன்மை செய்வதற்கோ அல்லது இறைவனை அஞ்சிக் கொள்வதற்கோ அல்லது மனிதர்களுக்கிடையில் சமாதானம் செய்து வைப்பதற்கோ தடையாக ஏற்படக்கூடிய விதத்தில் நீங்கள் செய்யும் சத்தியங்களுக்கு அல்லாஹ்வை இலக்காக்காதீர்கள். அல்லாஹ் (சத்தியத்தை) நன்கு செவியுறுபவன், (மனதில் உள்ளதை) நன்கறிபவன் ஆவான்.
-
2:225
لَّا يُؤَاخِذُكُمُ ٱللَّهُ بِٱللَّغْوِ فِىٓ أَيْمَـٰنِكُمْ وَلَـٰكِن يُؤَاخِذُكُم بِمَا كَسَبَتْ قُلُوبُكُمْ ۗ وَٱللَّهُ غَفُورٌ حَلِيمٌ
Laa- yuʹaakhiẓukumul laahu billag̣wi fee ʹaymaanikum wa-laakiñy yuʹaakhiẓukum̃ bimaa kasabat q̣uloobukum; wallaahu G̣afoorun Ḥaleem.
(மனதில் நாட்டமின்றி, பொய் இல்லாமல் அடிக்கடி நீங்கள் செய்யும்) வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களை குற்றம் பிடிப்பதில்லை. ஆனால், உங்கள் உள்ளங்கள் (உறுதியுடன்) செய்யும் சத்தியங்களுக்காக, (அதை நீங்கள் நிறைவேற்றவில்லையாயின்) அவன் உங்களை குற்றம் பிடிப்பான். அல்லாஹ் (குற்றங்களை) மிக்க மன்னிப்பவன், அதிகம் பொறுமை உடையவன் ஆவான்.
-
2:226
لِّلَّذِينَ يُؤْلُونَ مِن نِّسَآئِهِمْ تَرَبُّصُ أَرْبَعَةِ أَشْهُرٍ ۖ فَإِن فَآءُو فَإِنَّ ٱللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
Lillaẓeena yuʹloona min nisaaaʹihim tarabbuṣu ʹarbaʻati ʹashhur! faʹiñ faaaʹoo faʹinnal laaha G̣afoorur Raḥeem.
தங்கள் மனைவிகளுடன் சேருவதில்லை என்று சத்தியம் செய்து கொண்டவர்களுக்கு நான்கு மாதங்கள் தாமதிக்க அனுமதியுண்டு. ஆகவே, (அதற்குள்) அவர்கள் மீண்டு(ம் சேர்ந்து) கொண்டால் (அல்லாஹ் அவர்களை மன்னித்திடுவான். ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கருணையுடையவன் ஆவான்.
-
2:227
وَإِنْ عَزَمُوا۟ ٱلطَّلَـٰقَ فَإِنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٌ
Wa-ʹin ʻazamuṭ ṭalaaq̣a faʹinnal laaha Sameeʻun ʻAleem.
ஆனால், அவர்கள் (தவணைக்குள் சேராமல்) திருமண முறிவை உறுதிப்படுத்திக் கொண்டால், (அத்தவணைக்குப் பின் ‘தலாக்' விவாகரத்து ஏற்பட்டுவிடும்.) நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய சத்தியத்தை) செவியுறுபவன், (அவர்கள் கருதிய ‘தலாக்'கை) நன்கறிபவன் ஆவான்.
-
2:228
وَٱلْمُطَلَّقَـٰتُ يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ ثَلَـٰثَةَ قُرُوٓءٍ ۚ وَلَا يَحِلُّ لَهُنَّ أَن يَكْتُمْنَ مَا خَلَقَ ٱللَّهُ فِىٓ أَرْحَامِهِنَّ إِن كُنَّ يُؤْمِنَّ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ ۚ وَبُعُولَتُهُنَّ أَحَقُّ بِرَدِّهِنَّ فِى ذَٰلِكَ إِنْ أَرَادُوٓا۟ إِصْلَـٰحًا ۚ وَلَهُنَّ مِثْلُ ٱلَّذِى عَلَيْهِنَّ بِٱلْمَعْرُوفِ ۚ وَلِلرِّجَالِ عَلَيْهِنَّ دَرَجَةٌ ۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٌ
Walmuṭallaq̣aatu yatarabbaṣna biʹañfusihinna s̤alaas̤ata q̣uroooʹ. Wa-laa yaḥillu lahunna ʹañy yaktumna maa- khalaq̣al laahu feee ʹarḥaamihinna ʹiñ kunna yuʹminna bil-laahi wal-Yawmil ʹAakhir. Wa-buʻoola-tuhunna ʹaḥaq̣q̣u biraddihinna fee ẓaalika ʹin ʹaraadooo ʹiṣlaaḥaa. Wa-lahunna mis̤lul laẓee ʻalayhinna bilmaʻroof: wa-lir-rijaali ʻalayhinna darajah. Wallaahu ʻAzeezun Ḥakeem.
‘தலாக்' கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் வரும் வரை எதிர்பார்த்திருக்கவும். அவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் அல்லாஹ் அவர்களுடைய கர்ப்பப்பையில் (சிசுவை) படைத்திருந்தால் அதை மறைப்பது அவர்களுக்கு ஆகுமானது அல்ல. தவிர (‘ரஜயி'யான தலாக்குக் கூறப்பட்ட) அப்பெண்களின் கணவர்கள் (சேர்ந்து வாழக் கருதி, தவணைக்குள்) சமாதானத்தை விரும்பினால் அவர்களை (மனைவிகளாக)த் திருப்பிக்கொள்ள (அக்கணவர்கள்) மிகவும் உரிமையுடையவர்கள். (ஆகவே, மறுவிவாகமின்றியே மனைவியாக்கிக் கொள்ளலாம். ஆண்களுக்கு) முறைப்படி பெண்களின் மீதுள்ள உரிமைகள் போன்றதே (ஆண்கள் மீது) பெண்களுக்கும் உண்டு. ஆயினும், ஆண்களுக்குப் பெண்கள் மீது (ஓர்) உயர் பதவி உண்டு. அல்லாஹ் மிகைத்தவன், நுண்ணறிவு உடையவன் ஆவான்.
-
2:229
ٱلطَّلَـٰقُ مَرَّتَانِ ۖ فَإِمْسَاكٌۢ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌۢ بِإِحْسَـٰنٍ ۗ وَلَا يَحِلُّ لَكُمْ أَن تَأْخُذُوا۟ مِمَّآ ءَاتَيْتُمُوهُنَّ شَيْـًٔا إِلَّآ أَن يَخَافَآ أَلَّا يُقِيمَا حُدُودَ ٱللَّهِ ۖ فَإِنْ خِفْتُمْ أَلَّا يُقِيمَا حُدُودَ ٱللَّهِ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيمَا ٱفْتَدَتْ بِهِۦ ۗ تِلْكَ حُدُودُ ٱللَّهِ فَلَا تَعْتَدُوهَا ۚ وَمَن يَتَعَدَّ حُدُودَ ٱللَّهِ فَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلظَّـٰلِمُونَ
ʹAṭṭalaaq̣u marrataan: faʹimsaakum bimaʻroofin ʹaw tasreeḥum biʹiḥsaan. Wa-laa yaḥillu lakum ʹañ taʹkhuẓoo mimmaaa ʹaataytumoohunna shayʹan ʹillaaa ʹañy yakhaafaaa ʹallaa yuq̣eemaa Ḥudoodal laah. Faʹin khiftum ʹallaa yuq̣eemaa Ḥudoodal laahi falaa junaaḥa ʻalayhimaa feemaf tadat bih. Tilka Ḥudoodul laahi falaa taʻtadoohaa. Wa-mañy yataʻadda Ḥudoodal laahi faʹulaaaʹika humuz̤̣ z̤̣aalimoon.
(ரஜயியாகிய) இந்தத் தலாக்(கை) இருமுறைதான் (கூறலாம்). ஆகவே, (தவணைக்குள்) முறைப்படி தடுத்து (மனைவிகளாக) வைத்துக் கொள்ளலாம். அல்லது (அவர்கள் மீது ஒரு குற்றமும் சுமத்தாமல்) நன்றியுடன் விட்டுவிடலாம். தவிர, நீங்கள் அவர்களுக்கு (வெகுமதியாகவோ, மஹராகவோ) கொடுத்தவற்றிலிருந்து எதையும் எடுத்துக் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல. (ஆனால், இருவரும் சேர்ந்து வாழ்க்கை நடத்த முற்பட்டபோதிலும்) அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புக்குள் நிலைத்திருக்க முடியாதென்று இருவருமே பயப்படும் சமயத்தில் (இதற்குப் பஞ்சாயத்தாக இருக்கும்) நீங்களும் அவ்வாறு மெய்யாக பயந்தால் அவள் (கணவனிடமிருந்து) பெற்றுக் கொண்டதில் எதையும் (விவாகரத்து நிகழ) பிரதியாகக் கொடுப்பதிலும் (அவன் அதைப் பெற்றுக் கொள்வதிலும்) அவ்விருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளாகும். ஆதலால், நீங்கள் இவற்றை மீறாதீர்கள். எவரேனும் அல்லாஹ்வுடைய வரம்புகளை மீறினால் நிச்சயமாக அவர்கள்தான் அநியாயக்காரர்கள்.
-
2:230
فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُۥ مِنۢ بَعْدُ حَتَّىٰ تَنكِحَ زَوْجًا غَيْرَهُۥ ۗ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَآ أَن يَتَرَاجَعَآ إِن ظَنَّآ أَن يُقِيمَا حُدُودَ ٱللَّهِ ۗ وَتِلْكَ حُدُودُ ٱللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ
Faʹiñ ṭallaq̣ahaa falaa taḥillu lahu mim baʻdu ḥattaa ṭañkiḥa zawjan g̣ayrah: faʹiñ ṭallaq̣ahaa falaa junaaha ʻalayhimaaa ʹañy yataraajaʻaaa ʹiñ z̤̣annaaa ʹañy yuq̣eemaa Ḥudoodal laah. Wa-tilka Ḥudoodul laahi yubayyinuhaa liq̣awmiñy yaʻlamoon.
(இரண்டு தலாக்குச் சொல்லிய) பின்னர் (மூன்றாவதாகவும்) அவளை அவன் தலாக்குச் சொல்லிவிட்டால் அவனல்லாத (வேறு) கணவனை அவள் மணந்து கொள்ளும் வரை அவள் அவனுக்கு ஆகுமானவளல்ல. (ஆனால், அவனல்லாத வேறொருவன் அவளை திருமணம் செய்து) அவனும் அவளைத் தலாக்குக் கூறிவிட்டால், அதன்பின் (அவளும் முதல் கணவனும் ஆகிய) இருவரும் (சேர்ந்து) அல்லாஹ் ஏற்படுத்திய வரம்பை நிலை நிறுத்திவிடலாம் என்று எண்ணினால் அவர்கள் இருவரும் (திரும்பவும் திருமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீண்டு கொள்வதில் அவர்கள் மீது குற்றமில்லை. இவை அல்லாஹ் ஏற்படுத்திய சட்ட வரம்புகளாகும். அறிந்துகொள்ளும் மக்களுக்காக இவற்றை அவன் விவரிக்கிறான்.
-
2:231
وَإِذَا طَلَّقْتُمُ ٱلنِّسَآءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ سَرِّحُوهُنَّ بِمَعْرُوفٍ ۚ وَلَا تُمْسِكُوهُنَّ ضِرَارًا لِّتَعْتَدُوا۟ ۚ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ فَقَدْ ظَلَمَ نَفْسَهُۥ ۚ وَلَا تَتَّخِذُوٓا۟ ءَايَـٰتِ ٱللَّهِ هُزُوًا ۚ وَٱذْكُرُوا۟ نِعْمَتَ ٱللَّهِ عَلَيْكُمْ وَمَآ أَنزَلَ عَلَيْكُم مِّنَ ٱلْكِتَـٰبِ وَٱلْحِكْمَةِ يَعِظُكُم بِهِۦ ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ
Wa-ʹiẓaa ṭallaq̣tumun nisaaaʹa fabalag̣na ʹajalahunna faʹamsikoohunna bimaʻroofin ʹaw sarriḥoohunna bimaʻroof. Wa-laa tumsikoohunna ḍiraaral litaʻtadoo. Wa-mañy yafʻal ẓaalika faq̣ad z̤̣alama naf-sah. Wa-laa tat-takhiẓooo ʹAayaatil laahi huzuwaa, waẓkuroo niʻmatal laahi ʻalaykum wa-maaa ʹañzala ʻalaykum minal Kitaabi wal-Ḥikmati yaʻi-Z̤̣ukum̃ bih Wattaq̣ul laaha waʻlamooo ʹannal laaha bikulli shayʹin ʻAleem.
(உங்கள்) மனைவிகளை நீங்கள் (ரஜயியான) தலாக்குக் கூறி, அவர்கள் தங்கள் (இத்தாவின்) தவணையிலிருந்தால் (அத்தவணை முடிவதற்குள்) அவர்களை முறைப்படி (மனைவிகளாகவே) நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள். அல்லது (இத்தாவின் தவணையை முடித்துக் கொண்டு) முறைப்படி விட்டுவிடுங்கள். ஆனால், நீங்கள் அநியாயமாகத் துன்புறுத்துவதற்காக அவர்களைத் தடுத்து வைத்துக் கொள்ளாதீர்கள். இவ்விதம் எவரேனும் செய்தால் நிச்சயமாக அவர் தனக்குத்தான்ன தீங்கிழைத்துக் கொண்டவராவார். ஆகவே, அல்லாஹ்வுடைய வசனங்(களில் கூறப்பட்டுள்ள விஷயங்)களைப் பரிகாசமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடையையும், உங்கள் மீது அவன் இறக்கிய வேதத்தையும், ஞானத்தையும் சிந்தித்து (ஆராய்ந்து) பாருங்கள். அவன் இதைக் கொண்டு உங்களுக்கு உபதேசிக்கிறான். அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிவான் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.
-
2:232
وَإِذَا طَلَّقْتُمُ ٱلنِّسَآءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا تَعْضُلُوهُنَّ أَن يَنكِحْنَ أَزْوَٰجَهُنَّ إِذَا تَرَٰضَوْا۟ بَيْنَهُم بِٱلْمَعْرُوفِ ۗ ذَٰلِكَ يُوعَظُ بِهِۦ مَن كَانَ مِنكُمْ يُؤْمِنُ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ ۗ ذَٰلِكُمْ أَزْكَىٰ لَكُمْ وَأَطْهَرُ ۗ وَٱللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ
Wa-ʹiẓaa ṭallaq̣tumun nisaaaʹa fabalag̣na ʹajalahunna falaa taʻḍuloohunna ʹañy yañkiḥna ʹazwaajahunna ʹiẓaa taraaḍaw baynahum̃ bilmaʻroof. Ẓaalika yooʻaz̤̣u bihee mañ kaana miñkum yuʹminu billaahi wal-Yawmil ʹAakhir. Ẓaalikum ʹazkaa lakum wa-ʹaṭ-har. Wallaahu yaʻlamu waʹañtum laa- taʻlamoon.
நீங்கள் ‘தலாக்' கூறிய பெண்கள், தங்கள் (இத்தாவின்) தவணையை முழுமைப்படுத்திவிட்ட பின்னர், அவர்கள் தங்கள் (முந்திய) கணவன்மார்களை (அல்லது தாங்கள் விரும்புகின்ற வேறு ஆண்களை) ஒழுங்கான முறையில் திருமணம் செய்வதை தடுக்காதீர்கள் (திருமணம் செய்து கொள்ள விரும்பும்) அவர்கள் தங்களுக்குள் ஒருவர் மற்றவரை திருப்தி கொண்டால். உங்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டிருக்கிறாரோ அவர் இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறார். இது உங்களை மிக தூய்மைப்படுத்துவதாகவும், மிக பரிசுத்தமாக்குவதாகவும் இருக்கிறது. (இதிலுள்ள நன்மைகளை) அல்லாஹ்வே அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.
-
2:233
۞ وَٱلْوَٰلِدَٰتُ يُرْضِعْنَ أَوْلَـٰدَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ ۖ لِمَنْ أَرَادَ أَن يُتِمَّ ٱلرَّضَاعَةَ ۚ وَعَلَى ٱلْمَوْلُودِ لَهُۥ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِٱلْمَعْرُوفِ ۚ لَا تُكَلَّفُ نَفْسٌ إِلَّا وُسْعَهَا ۚ لَا تُضَآرَّ وَٰلِدَةٌۢ بِوَلَدِهَا وَلَا مَوْلُودٌ لَّهُۥ بِوَلَدِهِۦ ۚ وَعَلَى ٱلْوَارِثِ مِثْلُ ذَٰلِكَ ۗ فَإِنْ أَرَادَا فِصَالًا عَن تَرَاضٍ مِّنْهُمَا وَتَشَاوُرٍ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا ۗ وَإِنْ أَرَدتُّمْ أَن تَسْتَرْضِعُوٓا۟ أَوْلَـٰدَكُمْ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ إِذَا سَلَّمْتُم مَّآ ءَاتَيْتُم بِٱلْمَعْرُوفِ ۗ وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
Walwaalidaatu yurḍiʻna ʹawlaadahunna ḥawlayni kaamilayni liman ʹaraada ʹañy yutimmar raḍaaʻah. Wa-ʻalal mawloodi lahoo rizq̣uhunna wa-kiswatuhunna bilmaʻroof. Laa- tukallafu nafsun ʹillaa wusʻahaa. Laa- tuḍaaarra waalidatum biwaladihaa wa-laa mawloodul lahoo biwaladihee wa-ʻalal waaris̤i mis̤lu ẓaalik. Faʹin ʹaraadaa fiṣaalan ʻañ taraaḍim minhumaa wa-tashaawuriñ falaa junaaḥa ʻalayhimaa. Wa-ʹin ʹarattum ʹañ tastarḍiʻooo ʹawlaadakum falaa junaaḥa ʻalaykum ʹiẓaa sallamtum maaa ʹaataytum̃ bilmaʻroof. Wattaq̣ul laaha waʻlamooo ʹannal laaha bimaa taʻmaloona Baṣeer.
எவரேனும் (‘தலாக்' கூறப்பட்ட மனைவிகளிடம் தங்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்குத் தலாக்குக் கூறப்பட்ட மனைவிகளைக் கொண்டே) பாலூட்டுவதை முழுமையாக்க விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு (அவை பிறந்ததிலிருந்து) இரண்டு ஆண்டுகள்வரை முழுமையாகப் பாலூட்டுவார்கள். தவிர (அத்தாய்மார்கள் பாலூட்டும் வரை) அவர்களுக்கு ஆடையும், உணவும் முறைப்படிக் கொடுத்து வருவது குழந்தையின் உரிமையாளரான தந்தை மீது கடமையாகும். ஓர் ஆத்மா அதன் சக்திக்கு மேல் (செய்யும்படியாக) நிர்பந்திக்கப்பட மாட்டாது. (ஆகவே,) குழந்தைக்காக (தனக்கு வேண்டிய உணவின்றியே பாலூட்டும்படி) அதன் தாயையோ அல்லது (சக்திக்கு அதிகமாகக் கொடுக்கும்படி) தந்தையையோ துன்புறுத்தப்பட மாட்டாது. தவிர, இவ்வாறே (குழந்தையின் தந்தை இறந்துவிட்டால் அதை பராமரிப்பது) வாரிசுகள் மீது கடமையாகும். (குழந்தையின் தாய், தந்தை) இருவரும் ஆலோசனை செய்து (குழந்தையின்) பால்குடியை (இரண்டு ஆண்டுகளுக்குள்) மறக்கடிக்க(வோ அல்லது தாயை விட்டுக் குழந்தையைப் பிரித்துவிடவோ) நாடினால் (அவ்வாறு செய்வது) அவர்கள் மீது குற்றமல்ல. மேலும், நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு செவிலித் தாயைக்கொண்டு பாலூட்டக் கருதி (அதுவரை பாலூட்டி வந்த பெற்றதாய்க்கு) நீங்கள் கொடுக்க வேண்டியதை முறைப்படிக் கொடுத்துவிட்டால் (அவ்வாறு செவிலித் தாயைக்கொண்டு பாலூட்டுவது) உங்கள் மீது குற்றமாகாது. (இவற்றில்) நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குகிறான் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.
-
2:234
وَٱلَّذِينَ يُتَوَفَّوْنَ مِنكُمْ وَيَذَرُونَ أَزْوَٰجًا يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا ۖ فَإِذَا بَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا فَعَلْنَ فِىٓ أَنفُسِهِنَّ بِٱلْمَعْرُوفِ ۗ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ
Wallaẓeena yutawaffawna miñkumwa yaẓaroona ʹazwaajañy yatarabbaṣna biʹañfusihinna ʹarbaʻata ʹashhuriñw Waʻashraa. Faʹiẓaa balag̣na ʹajalahunna falaa juñaḥa ʻalaykum feemaa faʻalna feee ʹañfusihinna bilmaʻroof. Wallaahu bimaa taʻmaloona Khabeer.
உங்களில் எவரேனும் மனைவிகளை விட்டு இறந்தால், (அம்)மனைவிகள் நான்கு மாதம் பத்து நாட்கள் (இத்தா முடிவதை) எதிர்பார்த்திருக்கவும். (இதற்கு ‘மரண இத்தா' என்று பெயர்.) ஆதலால், அவர்கள் தங்கள் (இத்தாவின்) தவணையை முடித்து விட்டால் (அவர்களில் மறுமணம் செய்ய விருப்பமுள்ளவர்கள்) தங்களை ஒழுங்கான முறையில் (அலங்காரம்) ஏதும் செய்து கொள்வதைப் பற்றி குற்றமில்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிவான்.
-
2:235
وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا عَرَّضْتُم بِهِۦ مِنْ خِطْبَةِ ٱلنِّسَآءِ أَوْ أَكْنَنتُمْ فِىٓ أَنفُسِكُمْ ۚ عَلِمَ ٱللَّهُ أَنَّكُمْ سَتَذْكُرُونَهُنَّ وَلَـٰكِن لَّا تُوَاعِدُوهُنَّ سِرًّا إِلَّآ أَن تَقُولُوا۟ قَوْلًا مَّعْرُوفًا ۚ وَلَا تَعْزِمُوا۟ عُقْدَةَ ٱلنِّكَاحِ حَتَّىٰ يَبْلُغَ ٱلْكِتَـٰبُ أَجَلَهُۥ ۚ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ يَعْلَمُ مَا فِىٓ أَنفُسِكُمْ فَٱحْذَرُوهُ ۚ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ غَفُورٌ حَلِيمٌ
Wa-laa junaaḥa ʻalaykum fimaa ʻarraḍtum̃ bihee min khiṭbatin nisaaaʹi ʹaw ʹaknañtum feee ʹañfusikum. ʻAlimal laahu ʹannakum sataẓkuroonahunna wa-laakil laa tuwaaʻidoohunna sirran ʹillaa ʹan taq̣uloo q̣awlam maʻroofaa. Wa-laa taʻzimoo ʻuq̣datan Nikaaḥi ḥattaa Yablug̣al Kitaabu ʹajalah. Waʻlamooo ʹannal laaha yaʻlamu maa- feee ʹañfusikum faḥ-ẓarooh; Waʻlamooo ʹannal laaha G̣afoorun Ḥaleem.
(இத்தா இருக்கும் ஒரு பெண்ணை நீங்கள் திருமணம் செய்யக் கருதினால் உங்கள்) திருமண விருப்பத்தை நீங்கள் ஜாடையாக அறிவிப்பதினாலோ அல்லது உங்கள் மனதில் மறைவாக வைத்துக் கொள்வதினாலோ உங்கள் மீது குற்றமில்லை. (ஏனெனில்) நீங்கள் (உங்கள் எண்ணத்தை இத்தா முடிந்த பின்) அவர்களிடம் நிச்சயமாகக் கூறுவீர்கள் என்பதை அல்லாஹ் நன்கறிவான். ஆதலால், நீங்கள் கண்ணியமான முறையில் (ஜாடையாகக்) கூறுவதைத் தவிர (இத்தாவுடைய காலத்தில், திருமணத்தைப் பற்றி) அவர்களுடன் இரகசியமாகவும் வாக்குறுதி செய்துகொள்ள வேண்டாம். மேலும், இத்தாவின் தவணை முடிவதற்குள் (அவர்களை) திருமணம் செய்து கொள்ளவும் நாடாதீர்கள். உங்கள் மனதிலுள்ளவற்றை நிச்சயமாக அல்லாஹ் அறிவான் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து அவனுக்குப் பயந்து கொள்ளுங்கள். (இத்தகைய எண்ணத்தைத் தவிர்த்துக் கொண்டால்) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், பொறுமையுடையவன் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
-
2:236
لَّا جُنَاحَ عَلَيْكُمْ إِن طَلَّقْتُمُ ٱلنِّسَآءَ مَا لَمْ تَمَسُّوهُنَّ أَوْ تَفْرِضُوا۟ لَهُنَّ فَرِيضَةً ۚ وَمَتِّعُوهُنَّ عَلَى ٱلْمُوسِعِ قَدَرُهُۥ وَعَلَى ٱلْمُقْتِرِ قَدَرُهُۥ مَتَـٰعًۢا بِٱلْمَعْرُوفِ ۖ حَقًّا عَلَى ٱلْمُحْسِنِينَ
Laa- junaaḥa ʻalaykum ʹiñ ṭallaq̣tumun nisaaaʹa maa- lam tamassoohunna ʹaw tafriḍoo lahunna fareeḍah. Wa-mattiʻoohunna, ʻalal moosiʻi q̣adaruhoo wa-ʻalal muq̣tiri q̣adaruh. Mataaʻam bil-maʻroofi: Ḥaq̣q̣an ʻalal Muḥsineen.
பெண்களின் மஹரைக் குறிப்பிடாமல் (திருமணம் செய்து) அவர்களுடன் நீங்கள் வீடு கூடாமல் தலாக்குக் கூறிவிட்டாலும் உங்கள் மீது குற்றமில்லை. ஆயினும் அவர்களுக்கு ஏதும் கொடுத்துப் பயனடையச் செய்யவும். பணக்காரன் தன் தகுதிக்கேற்பவும், ஏழை தன் சக்திக்கேற்பவும் கண்ணியத்தோடு (அவர்களுக்குக் கொடுத்து) பயனடையச் செய்யவேண்டியது நல்லோர் மீது கடமையாகும்.
-
2:237
وَإِن طَلَّقْتُمُوهُنَّ مِن قَبْلِ أَن تَمَسُّوهُنَّ وَقَدْ فَرَضْتُمْ لَهُنَّ فَرِيضَةً فَنِصْفُ مَا فَرَضْتُمْ إِلَّآ أَن يَعْفُونَ أَوْ يَعْفُوَا۟ ٱلَّذِى بِيَدِهِۦ عُقْدَةُ ٱلنِّكَاحِ ۚ وَأَن تَعْفُوٓا۟ أَقْرَبُ لِلتَّقْوَىٰ ۚ وَلَا تَنسَوُا۟ ٱلْفَضْلَ بَيْنَكُمْ ۚ إِنَّ ٱللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
Wa-ʹiñ ṭallaq̣tumoohunna miñ q̣abli ʹañ tamassoohunna wa-q̣ad faraḍtum lahunna fareeḍatañ faniṣfu maa- faraḍtum ʹillaaa ʹañy yaʻfoona ʹaw yaʻfuwal laẓee biyadihee ʻuq̣datun Nikaaḥ. Wa-ʹañ taʻfoo ʹaq̣rabu littaq̣waa. Wa-laa tañsawul faḍla baynakum. ʹInnal laaha bimaa taʻmaloona Baṣeer.
ஆனால், அவர்களுடைய மஹரை நீங்கள் குறிப்பிட்டிருந்து, அவர்களைத் தொடுவதற்கு முன்னதாகவே தலாக்குக் கூறிவிட்டால் நீங்கள் (மஹராகக்) குறிப்பிட்டிருந்ததில் பாதி அப்பெண்களுக்கு உண்டு. எனினும், யாருடைய கையில் திருமண தொடர்பு இருக்கிறதோ அவன் (கணவன்) அல்லது அவள் (மனைவி) விட்டுக் கொடுத்தாலே தவிர (அதாவது கணவன் முழு மஹரையும் கொடுத்திடலாம் அல்லது மனைவி பாதி மஹரையும் வாங்காமல் விட்டு விடலாம்.) ஆயினும், நீங்கள் (ஆண்கள்) விட்டுக் கொடுப்பது இறையச்சத்திற்கு மிக நெருக்கமானதாகும். ஆதலால், உங்களுக்குள் உபகாரம் செய்து கொள்வதை மறந்து விடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குகிறான்.
-
2:238
حَـٰفِظُوا۟ عَلَى ٱلصَّلَوَٰتِ وَٱلصَّلَوٰةِ ٱلْوُسْطَىٰ وَقُومُوا۟ لِلَّهِ قَـٰنِتِينَ
Ḥaafiz̤̣oo ʻalaṣ Ṣalawaati waṣ-Ṣalaatil wusṭaa; wa-q̣oomoo lillaahi q̣aaniteen.
(நம்பிக்கையாளர்களே!) அனைத்து தொழுகைகளையும் (குறிப்பாக நடுத் தொழுகையையும் (நேரம் தவறாமல்) பேணி(த் தொழுது) கொள்ளுங்கள். மேலும், (தொழுகையில்) அல்லாஹ்வுக்குப் பயந்து மிக்க உள்ளச்சத்தோடு நில்லுங்கள்.
-
2:239
فَإِنْ خِفْتُمْ فَرِجَالًا أَوْ رُكْبَانًا ۖ فَإِذَآ أَمِنتُمْ فَٱذْكُرُوا۟ ٱللَّهَ كَمَا عَلَّمَكُم مَّا لَمْ تَكُونُوا۟ تَعْلَمُونَ
Faʹin khiftum farijaalan ʹaw rukbaanaa. Faʹiẓaaa ʹamiñtum faẓkurul laaha kamaa ʻallamakum maa lam takoonoo taʻlamoon.
ஆனால், (தொழுகையின் நேரம் வந்து, எதிரி போன்ற ஏதேனும் ஒரு காரணத்தால் ஓரிடத்தில் நின்று தொழ) நீங்கள் பயந்தால், நடந்தவர்களாக அல்லது வாகனத்தின் மீது இருந்தவர்களாக (தொழுங்கள்). தவிர (உங்கள் பயம் நீங்கி) நீங்கள் அச்சமற்று விட்டால் நீங்கள் (தொழுகையை) அறியாமலிருந்த சமயத்தில் அல்லாஹ் உங்களுக்கு(த் தொழுகையை)க் கற்றுக் கொடுத்தபடி (தொழுது) அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்.
-
2:240
وَٱلَّذِينَ يُتَوَفَّوْنَ مِنكُمْ وَيَذَرُونَ أَزْوَٰجًا وَصِيَّةً لِّأَزْوَٰجِهِم مَّتَـٰعًا إِلَى ٱلْحَوْلِ غَيْرَ إِخْرَاجٍ ۚ فَإِنْ خَرَجْنَ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِى مَا فَعَلْنَ فِىٓ أَنفُسِهِنَّ مِن مَّعْرُوفٍ ۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٌ
Wallaẓeena yutawaffawna miñkum wa-yaẓaroona ʹazwaajañw waṣiyyatal liʹazwaajihim mataaʻan ʹilal ḥawli g̣ayra ʹikhraaj. Faʹin kharajna falaa junaaḥa ʻalaykum Fee maa- faʻalna feee ʹañfusihinna mim maʻroof. Wal-laahu ʻAzeezun Ḥakeem.
உங்களில் மனைவிகளை விட்டுவிட்டு இறப்பவர்கள் ‘தங்கள் மனைவிகளை (வீட்டைவிட்டு) அப்புறப்படுத்தி விடாது, ஓர் ஆண்டுவரை உணவு உடை போன்ற செலவுகளை வழங்குமாறு' (வாரிசுகளுக்கு) மரண சாசனம் கூறவும். ஆனால், அவர்கள் (தாமாகவே) வெளியில் சென்று தங்களுக்கு முறைப்படி (திருமணம்) ஏதும் செய்து கொண்டா(ல், அ)தனால் உங்கள் மீது குற்றமில்லை. அல்லாஹ் மிகைத்தவன், நுண்ணறிவுடையவன் ஆவான்.
-
2:241
وَلِلْمُطَلَّقَـٰتِ مَتَـٰعٌۢ بِٱلْمَعْرُوفِ ۖ حَقًّا عَلَى ٱلْمُتَّقِينَ
Wa-lilmuṭallaq̣aati mataaʻum bil-maʻroof. Ḥaq̣q̣an ʻalal Muttaq̣een.
இன்னும், தலாக்குக் கூறப்பட்ட பெண்களுக்கு, (அவர்களுடைய இத்தாவின் தவணை வரையிலும்) முறைப்படி (கணவனுடைய சொத்திலிருந்தே) பராமரிப்பு பெறத் தகுதியுண்டு. (அவ்வாறு அவர்களை பராமரிப்பது) இறையச்சமுடையவர்கள் மீது கடமையாகும்.
-
2:242
كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمْ ءَايَـٰتِهِۦ لَعَلَّكُمْ تَعْقِلُونَ
Kaẓalika yubayyinul laahu lakum ʹAayaatihee laʻallakum taʻq̣iloon.
நீங்கள் அறிந்து கொள்வதற்காக தன் வசனங்களை அல்லாஹ் உங்களுக்கு இவ்வாறு தெளிவாக விவரிக்கிறான்.
-
2:243
۞ أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِينَ خَرَجُوا۟ مِن دِيَـٰرِهِمْ وَهُمْ أُلُوفٌ حَذَرَ ٱلْمَوْتِ فَقَالَ لَهُمُ ٱللَّهُ مُوتُوا۟ ثُمَّ أَحْيَـٰهُمْ ۚ إِنَّ ٱللَّهَ لَذُو فَضْلٍ عَلَى ٱلنَّاسِ وَلَـٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَشْكُرُونَ
ʹAlam tara ʹilal laẓeena kharajoo miñ diyaarihim wa-hum ʹuloofun ḥaẓaral mawti faq̣aala lahumul laahu mootoo: s̤umma ʹaḥyaahum. ʹInnal laaha la-Ẓoo Faḍlin ʻalan naasi wa-lakinna ʹaks̤aran naasi laa- yashkuroon.
(நபியே!) மரணத்திற்குப் பயந்து தங்கள் வீடுகளை விட்டு ஆயிரக்கணக்கில் வெளியேறியவர்களை நீர் கவனித்தீரா? அல்லாஹ் அவர்களை இறக்கும்படிக் கூறி (இறக்கச் செய்து) பின்னர் அவர்களை உயிர்ப்பித்தான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள்மீது கருணையுள்ளவன் ஆவான். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் நன்றி செலுத்துவது இல்லை.
-
2:244
وَقَـٰتِلُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٌ
Waq̣aatiloo fee sabeelil laahi waʻlamoo ʹannal laaha Sameeʻun ʻAleem.
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் பிரார்த்தனையை) செவியுறுபவன், (உங்கள் கஷ்டத்தை) அறிபவன் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.
-
2:245
مَّن ذَا ٱلَّذِى يُقْرِضُ ٱللَّهَ قَرْضًا حَسَنًا فَيُضَـٰعِفَهُۥ لَهُۥٓ أَضْعَافًا كَثِيرَةً ۚ وَٱللَّهُ يَقْبِضُ وَيَبْصُۜطُ وَإِلَيْهِ تُرْجَعُونَ
Mañ ẓal laẓee yuq̣riḍul laaha Q̣arḍan Ḥasanañ fayuḍaaʻifahoo lahooo ʹaḍʻaafañ kas̤eerah? Wallaahu yaq̣biḍu wa-yabṣuṭ. Wa-ʹilayhi turjaʻoon.
(சிரமத்தில் இருப்பவர்களுக்கு தர்மம் கொடுப்பதன் மூலம்) அழகான முறையில் அல்லாஹ்விற்கு கடன் கொடுப்பவர் யார்? அதை அவன் அவர்களுக்கு பன்மடங்கு அதிகரிக்கும்படிச் செய்வான். அல்லாஹ் (பொருளை சிலருக்குச்) சுருக்கியும் கொடுப்பான். (சிலருக்குப்) பெருக்கியும் கொடுப்பான். இன்னும், அவனிடமே நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள்.
-
2:246
أَلَمْ تَرَ إِلَى ٱلْمَلَإِ مِنۢ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ مِنۢ بَعْدِ مُوسَىٰٓ إِذْ قَالُوا۟ لِنَبِىٍّ لَّهُمُ ٱبْعَثْ لَنَا مَلِكًا نُّقَـٰتِلْ فِى سَبِيلِ ٱللَّهِ ۖ قَالَ هَلْ عَسَيْتُمْ إِن كُتِبَ عَلَيْكُمُ ٱلْقِتَالُ أَلَّا تُقَـٰتِلُوا۟ ۖ قَالُوا۟ وَمَا لَنَآ أَلَّا نُقَـٰتِلَ فِى سَبِيلِ ٱللَّهِ وَقَدْ أُخْرِجْنَا مِن دِيَـٰرِنَا وَأَبْنَآئِنَا ۖ فَلَمَّا كُتِبَ عَلَيْهِمُ ٱلْقِتَالُ تَوَلَّوْا۟ إِلَّا قَلِيلًا مِّنْهُمْ ۗ وَٱللَّهُ عَلِيمٌۢ بِٱلظَّـٰلِمِينَ
ʹAlam tara ʹilal malaʹi mim Baneee ʹIsraaaʹeela mim baʻdi Moosa? ʹIẓ q̣aaloo linabiyyil lahumub ʻas̤ lanaa Malikan nuq̣aatil fee Sabeelil laah. Q̣aala hal ʻasaytum ʹiñ kutiba ʻalaykumul q̣itaalu ʹallaa tuq̣aatiloo? Q̣aaloo wa-maa lanaaa ʹallaa nuq̣aatila fee Sabeelil laahi wa-q̣ad ʹukhrijnaa miñ diyaarinna wa-ʹabnaaaʹinaa? Falammaa kutiba ʻalayhimul q̣itaalu tawallaw ʹillaa q̣aleelam minhum. Wallaahu ʻAleemum biz̤̣z̤̣aalimeen.
(நபியே!) இஸ்ராயீலின் சந்ததிகளில் மூஸாவுக்குப் பின் இருந்த தலைவர்களை நீர் கவனிக்கவில்லையா? (அவர்கள்) ‘‘அல்லாஹ்வுடைய பாதையில் நாங்கள் போர் புரிய எங்களுக்கு(த் தலைமை வகிக்கின்ற) ஓர் அரசனை அனுப்பிவைப்பீராக!'' என்று தங்கள் நபியிடம் கூறியபோது, (அவர்) ‘‘போர் செய்வது உங்கள் மீது விதிக்கப்பட்டால் நீங்கள் போர் செய்யாமல் (விலகி) இருந்து விடுவீர்களா?'' என்று கேட்டார். (அதற்கு) அவர்கள் ‘‘எங்கள் மக்களையும், எங்கள் வீடுகளையும் விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டிருக்க, (எங்களை வெளியேற்றிய) அவர்களிடம் அல்லாஹ்வுடைய பாதையில் நாங்கள் போர் செய்யாதிருக்க எங்களுக்கென்ன நேர்ந்தது?'' என்று கூறினார்கள். ஆனால், போர் செய்யும்படி கட்டளையிடப்பட்ட பொழுதோ அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள் போர் செய்யாது) பின் சென்றுவிட்டார்கள். (இத்தகைய) அநியாயக்காரர்களை அல்லாஹ் நன்கறிவான்.
-
2:247
وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ إِنَّ ٱللَّهَ قَدْ بَعَثَ لَكُمْ طَالُوتَ مَلِكًا ۚ قَالُوٓا۟ أَنَّىٰ يَكُونُ لَهُ ٱلْمُلْكُ عَلَيْنَا وَنَحْنُ أَحَقُّ بِٱلْمُلْكِ مِنْهُ وَلَمْ يُؤْتَ سَعَةً مِّنَ ٱلْمَالِ ۚ قَالَ إِنَّ ٱللَّهَ ٱصْطَفَىٰهُ عَلَيْكُمْ وَزَادَهُۥ بَسْطَةً فِى ٱلْعِلْمِ وَٱلْجِسْمِ ۖ وَٱللَّهُ يُؤْتِى مُلْكَهُۥ مَن يَشَآءُ ۚ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌ
Wa-q̣aala lahum Nabiyyuhum ʹinnal laaha q̣ad baʻas̤a lakum Ṭaaloota Malikaa. Q̣aalooo ʹannaa yakoonu lahul mulku ʻalaynaa wa-naḥnu ʹaḥaq̣q̣u bilmulki minhu wa-lam yuʹta saʻatam minal maal? Q̣aala ʹinnal laahaṣ ṭafaahu ʻalaykum wa-zaadahoo basṭatañ fil ʻilmi waljism. Wallaahu yuʹtee mulkahoo mañy yashaaaʹ. Wallaahu Waasiʻun ʻAleem.
மேலும், அவர்களுடைய நபி அவர்களை நோக்கி ‘‘நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசராக அனுப்பியிருக்கிறான்'' என்று கூறியதற்கு (அவர்கள்) ‘‘எங்கள் மீது அரசாலும் உரிமை அவருக்கு எவ்வாறு ஏற்படும். அவரை விட நாங்கள்தான் அரசாட்சி புரிய மிகத் தகுதியுடையவர்கள், (அரசாட்சி புரிவதற்கு அவசியமான) திரளான செல்வத்தையும் அவர் அடையவில்லை'' என்று கூறினார்கள். (அதற்கு அவர்களுடைய நபி) ‘‘நிச்சயமாக அல்லாஹ், உங்கள் மீது (ஆட்சி புரிய) அவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறான். அன்றி (போர்க்) கல்வியிலும், உட(ல் ஆற்ற)லிலிலிலும் உங்களைவிட அவரை அதிகப்படுத்தியும் இருக்கிறான். அல்லாஹ் தான் விரும்பியவர்களுக்கே தன் ஆட்சியை வழங்குவான். அல்லாஹ் (வழங்குவதில்) அதிக விசாலமானவன், (அரசாட்சி புரியத் தகுதியுடையவர்களை) நன்கறிந்தவன்'' என்று கூறினார்.
-
2:248
وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ إِنَّ ءَايَةَ مُلْكِهِۦٓ أَن يَأْتِيَكُمُ ٱلتَّابُوتُ فِيهِ سَكِينَةٌ مِّن رَّبِّكُمْ وَبَقِيَّةٌ مِّمَّا تَرَكَ ءَالُ مُوسَىٰ وَءَالُ هَـٰرُونَ تَحْمِلُهُ ٱلْمَلَـٰٓئِكَةُ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً لَّكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ
Wa-q̣aala lahum Nabiyyuhum ʹinna ʹaayata Mulkiheee ʹañy yaʹtiyakumut Taabootu feehi sakeenatum mir Rabbikum wa-baq̣iyyatum mimmaa taraka ʹAalu Moosaa wa-ʹAalu Haaroona taḥmiluhul malaaaʹikah. ʹInna fee ẓaalika laʹaayatal lakum ʹiñ kuñtum Muʹmineen.
இன்னும், அவர்களுடைய நபி அவர்களை நோக்கி ‘‘அவருடைய அரசுரிமைக்கு அறிகுறியாவது:- உங்கள் இறைவனிடமிருந்து வானவர்கள் சுமந்த வண்ணமாக ஒரு பேழை திண்ணமாக உங்களிடம் வரும். அதில் உங்களுக்கு ஆறுதல் அளிக்கக்கூடியதும், மூஸாவின் சந்ததிகள் மற்றும் ஹாரூனுடைய சந்ததிகள் விட்டுச் சென்றதில் மீதமுள்ளதும் இருக்கும். நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் நிச்சயமாக உங்களுக்கு அதில் ஓர் அத்தாட்சி உண்டு'' என்று கூறினார்.
-
2:249
فَلَمَّا فَصَلَ طَالُوتُ بِٱلْجُنُودِ قَالَ إِنَّ ٱللَّهَ مُبْتَلِيكُم بِنَهَرٍ فَمَن شَرِبَ مِنْهُ فَلَيْسَ مِنِّى وَمَن لَّمْ يَطْعَمْهُ فَإِنَّهُۥ مِنِّىٓ إِلَّا مَنِ ٱغْتَرَفَ غُرْفَةًۢ بِيَدِهِۦ ۚ فَشَرِبُوا۟ مِنْهُ إِلَّا قَلِيلًا مِّنْهُمْ ۚ فَلَمَّا جَاوَزَهُۥ هُوَ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ مَعَهُۥ قَالُوا۟ لَا طَاقَةَ لَنَا ٱلْيَوْمَ بِجَالُوتَ وَجُنُودِهِۦ ۚ قَالَ ٱلَّذِينَ يَظُنُّونَ أَنَّهُم مُّلَـٰقُوا۟ ٱللَّهِ كَم مِّن فِئَةٍ قَلِيلَةٍ غَلَبَتْ فِئَةً كَثِيرَةًۢ بِإِذْنِ ٱللَّهِ ۗ وَٱللَّهُ مَعَ ٱلصَّـٰبِرِينَ
Falammaa faṣala Ṭaalootu biljunoodi q̣aala ʹinnal laaha mub-taleekum̃ binahr. Famañ shariba minhu falaysa minnee: Wa-mal lam yaṭʻamhu faʹinnahoo minneee ʹillaa manig̣h tarafa g̣urfatam biyadih. Fashariboo minhu ʹillaa q̣aleelam minhum. Falammaa jaawazahoo huwa wallaẓeena ʹaamanoo maʻahoo q̣aaloo laa- ṭaaq̣ata lanal Yawma bi-Jaaloota wa-junoodih. Q̣aalal laẓeena ya-Z̤̣unnoona ʹannahum mulaaq̣ul laahi kam miñ fiʹatiñ q̣aleelatin g̣halabat fiʹatañ kas̤eeratam biʹiẓnil laah? Wallaahu maʻaṣ Ṣaabireen.
பின்னர், தாலூத் படைகளைத் திரட்டிக்கொண்டு புறப்பட்டபொழுது அவர் (தன் இராணுவத்தை நோக்கி) ‘‘நிச்சயமாக (நீங்கள் செல்லும் வழியில்) அல்லாஹ் ஓர் ஆற்றைக் கொண்டு உங்களைச் சோதிப்பான். (உங்களில்) எவர் அதிலிருந்து தனது கைக்கொண்டு ஒரு உள்ளங்கை அளவு நீரைவிட அதிகமாகக் குடிக்கவில்லையோ அவர்தான் என்னைச் சார்ந்தவர். எவர் அதிலிருந்து (அதற்கதிகமாகக்) குடிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்ல'' எனக் கூறினார். ஆனால், (ஆற்றைக் கடக்கவே) அவர்களில் சிலரைத் தவிர (பெரும்பாலோர்) அதிலிருந்து (அதிகமாகக்) குடித்து விட்டார்கள். பின்னர், அவர் (தம்முடன் இருந்த) நம்பிக்கையாளர்களுடன் அதைக் கடந்து சென்ற பொழுது, (அதிகமாகக் குடித்த அவர்கள்) ஜாலூத்துடனும் அவனுடைய இராணுவத்துடனும் ‘‘இன்று (போர் புரிய) எங்களுக்குச் சக்தியில்லை'' என்று கூறி (விலகி) விட்டார்கள். (ஆனால், அவர்களில்) எவர்கள் நிச்சயமாக அல்லாஹ்வைச் சந்திப்போம் என உறுதி கொண்டிருந்தார்களோ அவர்கள் மற்றவர்களை நோக்கி ‘‘(எவ்வளவோ) பெரும் கூட்டத்தினரை எத்தனையோ சிறு கூட்டத்தினர் அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு வெற்றி பெற்று இருக்கிறார்கள், அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்'' என்று கூறினார்கள்.
-
2:250
وَلَمَّا بَرَزُوا۟ لِجَالُوتَ وَجُنُودِهِۦ قَالُوا۟ رَبَّنَآ أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَٱنصُرْنَا عَلَى ٱلْقَوْمِ ٱلْكَـٰفِرِينَ
Wa-lammaa barazoo li-Jaaloota wa-junoodihee q̣aaloo Rabbanaaa ʹafrig̣h ʻalaynaa ṣabrañw was̤abbit ʹaq̣daamanaa wañs̤urnaa ʻalal Q̣awmil kaafireen.
மேலும், அவர்கள் ஜாலூத்தையும் அவனுடைய படைகளையும் (போர்க்களத்தில்) எதிர்த்தபொழுது ‘‘எங்கள் இறைவனே! நீ எங்கள் மீது பொறுமையைச் சொரிவாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்தி வைப்பாயாக! மேலும், நிராகரிக்கும் இந்த மக்கள் மீது (வெற்றி பெற) எங்களுக்கு நீ உதவி புரிவாயாக!'' என்றும் பிரார்த்தனை செய்தார்கள்.
-
2:251
فَهَزَمُوهُم بِإِذْنِ ٱللَّهِ وَقَتَلَ دَاوُۥدُ جَالُوتَ وَءَاتَىٰهُ ٱللَّهُ ٱلْمُلْكَ وَٱلْحِكْمَةَ وَعَلَّمَهُۥ مِمَّا يَشَآءُ ۗ وَلَوْلَا دَفْعُ ٱللَّهِ ٱلنَّاسَ بَعْضَهُم بِبَعْضٍ لَّفَسَدَتِ ٱلْأَرْضُ وَلَـٰكِنَّ ٱللَّهَ ذُو فَضْلٍ عَلَى ٱلْعَـٰلَمِينَ
Fahazamoohum̃ biʹiẓnil laahi wa-q̣atala Daawoodu Jaaloota wa-ʹaataahul laahul Mulka wal-Ḥikmata wa-ʻallamahoo mimmaa yashaaaʹ. Wa-law-laa dafʻul laahin naasa baʻḍahum̃ bibaʻḍil lafasadatil ʹarḍu wa-laakinnal laaha Ẓoo Faḍlin ʻalal ʻaalameen.
ஆதலால், அவர்கள் அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு அவர்களை முறியடித்து விட்டார்கள். இதில் (எதிரிகளின் அரசனாகிய) ஜாலூத்தை (தாலூத்துடைய படையிலிருந்த) தாவூத் வெட்டினார். பின்னர், அவருக்கு அல்லாஹ் ஞானத்தையும், அரசாங்கத்தையும் அளித்து (போர்க்கவசம் செய்வது போன்ற) தான் விரும்பியவற்றை எல்லாம் அவருக்குக் கற்பித்துக் கொடுத்தான். (இவ்வாறு) மனிதர்களில் (தீங்கு செய்யும்) சிலரை மனிதர்களில் (நல்லவர்கள்) சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காவிட்டால் இப்பூமி அழிந்தேயிருக்கும். ஆயினும் நிச்சயமாக அல்லாஹ் உலகத்தார் மீது கருணையுடையவன் ஆவான்.
-
2:252
تِلْكَ ءَايَـٰتُ ٱللَّهِ نَتْلُوهَا عَلَيْكَ بِٱلْحَقِّ ۚ وَإِنَّكَ لَمِنَ ٱلْمُرْسَلِينَ
Tilka ʹAayaatul laahi natloohaa ʻalayka bilḥaq̣q̣; wa-ʹinnaka laminal Mursaleen.
(நபியே!) இவை அல்லாஹ்வுடைய வசனங்களாகும். நாம் அவற்றை உமக்கு உண்மையில் ஓதிக்காண்பிக்கிறோம். தவிர, நிச்சயமாக நீர் (நம்மால்) அனுப்பப்பட்ட தூதர்களில் ஒருவர்தான்.